January 20th, 2009 | Tags:
sugan | :
ஆற்றுகை |
மற்றுமொரு நாளில்
வடகிழக்கில் தென்கிழக்கில் மேற்கில்
மூன்றுமுறை பல்லிசொல்ல
உறவினர்கள் மரணம் எனவுரைக்கும்
வருட பஞ்சாங்கம் வந்துபோனது
தொடுவானம் தெரியாத அடைத்த இருளில்
திசையும் தெரியவில்லை
துக்க வரவுரைக்கும் காகமும் இங்கில்லை
மயில் வெள்ளையாடை தாமரைப்பூ
நீரோற்பலம்
கனவினிற்காண
புதிய பஞ்சாங்கம் வாங்கியாயிற்று
கனவுவர மறுக்கிறது
(தாயகம்)
1:உங்களுக்கு சுவிஸோ பரிஸோ பிடிச்சிருக்கு!:
அது சொர்க்கமெல்லோ!
2:நீ கனோன் ரியாட்சியை நம்பாதே!அவள் உனக்கு விசா எடுத்துத் தரமாட்டாள்!அவள் உப்பிடி நிறைய சிறீலங்கனைச் சுத்தியிருக்கிறாள்!
December 22nd, 2008 | Tags:
ஈழம்,
கவிதைகள்,
சுகன் | :
கவிதைகள் |
-சுகன்
உன் இன்னுயிரை ஈந்தது போதும்
லோகிதாசா எழுந்திரு!
செய்திகளைச் செவிமடுத்த உங்கள் அனைவருக்கும்
நன்றி எனக்கூறி விடைபெறுகிறார் அறிவிப்பாளர்
லோகிதாசா எழுந்திரு!
நாடகம் முடிந்தபின்
உன்னை வழமைபோல்
கூட்டிப்போக அப்பா வந்திருக்கிறார்
லோகிதாசா எழுந்திரு!
கண்டியரசனில் உன் மாமா
உன்னை உரலில் போட்டு இடிக்க
அம்மா பார்த்திருந்து அழுகிறாள்
அரிச்சந்திர நாடகத்திலோ
நீ பாம்புதீண்டி இறக்கிறாய்
எழுந்திருக்கமாட்டாமல் நீள்துயில் கொள்கிறாய்
இப்போது
இடையில் திரைமூடி அடுத்த காட்சி தொடங்கலாம்
நாடகத்தில்!
லோகிதாசா எழுந்திரு!
நீ போராளியல்ல குழந்தைப் பாத்திரம்*
December 18th, 2008 | :
ஆற்றுகை |
குமரன்: வட்டுக்கோட்டை, கன்னியாகுமரி, சூரிச், கொழும்பு, வட்டுக்கோட்டை, கொழும்பு, பரிஸ்.
தற்காலிக முகவரி: கார்ஜ் லெ கொனேஸ்
“நீ விசா இல்லாமை ஜேர்மனில இருக்கிறாயெண்டெல்லோ கேள்விப்பட்டன்”
“இல்லை மாமா நான் உள்ளுக்கை இருந்தனான்”
“கேஸ் ஆர் எழுதினது?”
“கேஸ் நல்ல கேஸ், நான் தான் சொதப்பிவிட்டன், ‘உதயன்’ பேப்பரிலை வேலை செய்தனானெண்டு குடுத்தது, அவன் உதயன் பேப்பரின்ரை சின்னம் என்னண்டு கேட்டான்,எனக்குத் தெரியயில்லை!
“நீ புலனாய்வுப் பிரிவிலையெல்லோ வேலை செய்தனி”
“அது தம்பி மாமா!”
“இடையுக்கை உனக்கு காட் கிடைச்சது என்டெல்லோ கேள்விப்பட்டனான்”
“கிடச்சு வேலையும் செய்தனான், கனடாவுக்கும் [...]
December 14th, 2008 | Tags:
கவிதைகள்,
சுகன்,
தோழர் பரா | :
கவிதைகள் |
அதியற்புதமான ஓவியமொன்றை என்னை முன்னிலைப்படுத்தி
எதிரி வரைகின்றான்
வேகமாய் ஓடி இளைத்து மூச்சுவாங்கி நின்று நிதானித்து
நடந்து களைத்து ஊர்ந்து முடியாது இயக்கமிழந்து
வீழ்ந்து கிடக்கையில் எதிரி வந்து ஆதரவோடு பற்றுகிறான்
எனது தஞ்சக்கேட்டை அவன் எப்போதுமே சுட்டிக்காட்டியவனல்ல
என்னோடு அவன் எப்போதும் பேசியதுமில்லை
நாம் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்ததுமில்லை
நாம் ஒருவருக்கொருவர் கண்ணிற்குத் தெரியாத எதிரிகளுமல்லர்
ஒரு துரும்பாகக்கூட மதிக்காத அவன் கைகளைத் தட்டிவிடுகிறேன்
இம்மியளவும் பிசகாது இவ்விடத்திற்தான் நான் வீழ்ந்துகிடப்பேன்
இவ்விடத்திற்குத்தான் நான் வந்துசேர்வேன்
இந்தக்கோலத்திற்தான் நான் வந்துசேர்வேனென
எதிரி எனது தஞ்சக்கேட்டை இப்போதும் சுட்டிக்காட்டவில்லை
ஆனால் நான் அவன் அப்படிச்சொல்லவேண்டுமென எதிர்பார்த்தேன்
அவனைக் [...]
November 26th, 2008 | Tags:
சுகன் | :
சுகன் |
அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களினதும் தினம் :50 ஆண்டுகள்
-சுகன்
நிறவெறியிலும் கொடுமையான தேசவழமைச் சட்டங்கள் நிலவிய காலமது!பொதுவீதியால் போகக்கூடாது, படிக்கக்கூடாது, (மேற்)சட்டை போடக்கூடாது,கோவில்கள் உணவகங்கள் இவற்றிற்குப் போகக்கூடாது…. என கொடூரமான வன்கொடுமையும் சாதி அடக்குமுறையும் நிலவிய யாழ்ப்பாண சமூகத்திலே இக்கொடுமைக்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் தத்தமக்குரிய வழி வகைகளில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.அப்போதிருந்த வெகுசன அமைப்புகள் 1958 டிசம்பர் 13 அன்று இவ் அடக்குமுறைக்கெதிராக பரந்த அளவில் எதிர்ப்பும் சத்தியாக்கிரகப் போராட்டமும் நடாத்துவதென்று முடிவெடுத்து போராட்டக்களத்தில் இறங்கின.
அனைத்து மக்களினதும் ஊடகங்களினதும் கவனத்தை [...]