December 22nd, 2008 | Tags:
ஈழம்,
கவிதைகள்,
சுகன் | :
கவிதைகள் |
-சுகன்
உன் இன்னுயிரை ஈந்தது போதும்
லோகிதாசா எழுந்திரு!
செய்திகளைச் செவிமடுத்த உங்கள் அனைவருக்கும்
நன்றி எனக்கூறி விடைபெறுகிறார் அறிவிப்பாளர்
லோகிதாசா எழுந்திரு!
நாடகம் முடிந்தபின்
உன்னை வழமைபோல்
கூட்டிப்போக அப்பா வந்திருக்கிறார்
லோகிதாசா எழுந்திரு!
கண்டியரசனில் உன் மாமா
உன்னை உரலில் போட்டு இடிக்க
அம்மா பார்த்திருந்து அழுகிறாள்
அரிச்சந்திர நாடகத்திலோ
நீ பாம்புதீண்டி இறக்கிறாய்
எழுந்திருக்கமாட்டாமல் நீள்துயில் கொள்கிறாய்
இப்போது
இடையில் திரைமூடி அடுத்த காட்சி தொடங்கலாம்
நாடகத்தில்!
லோகிதாசா எழுந்திரு!
நீ போராளியல்ல குழந்தைப் பாத்திரம்*
December 14th, 2008 | Tags:
கவிதைகள்,
சுகன்,
தோழர் பரா | :
கவிதைகள் |
அதியற்புதமான ஓவியமொன்றை என்னை முன்னிலைப்படுத்தி
எதிரி வரைகின்றான்
வேகமாய் ஓடி இளைத்து மூச்சுவாங்கி நின்று நிதானித்து
நடந்து களைத்து ஊர்ந்து முடியாது இயக்கமிழந்து
வீழ்ந்து கிடக்கையில் எதிரி வந்து ஆதரவோடு பற்றுகிறான்
எனது தஞ்சக்கேட்டை அவன் எப்போதுமே சுட்டிக்காட்டியவனல்ல
என்னோடு அவன் எப்போதும் பேசியதுமில்லை
நாம் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்ததுமில்லை
நாம் ஒருவருக்கொருவர் கண்ணிற்குத் தெரியாத எதிரிகளுமல்லர்
ஒரு துரும்பாகக்கூட மதிக்காத அவன் கைகளைத் தட்டிவிடுகிறேன்
இம்மியளவும் பிசகாது இவ்விடத்திற்தான் நான் வீழ்ந்துகிடப்பேன்
இவ்விடத்திற்குத்தான் நான் வந்துசேர்வேன்
இந்தக்கோலத்திற்தான் நான் வந்துசேர்வேனென
எதிரி எனது தஞ்சக்கேட்டை இப்போதும் சுட்டிக்காட்டவில்லை
ஆனால் நான் அவன் அப்படிச்சொல்லவேண்டுமென எதிர்பார்த்தேன்
அவனைக் [...]
May 24th, 2007 | :
கவிதைகள் |
எண்ணைக் கப்பல்
உடைந்து
தன் உடல் முழுதும்
மசகெண்ணையைப்
பூசியபடி கரையொதுங்கும்
ஒரு கடற்பறவையைக்
கழுவி
உயிர் பிழைக்க வைக்கிறார் ஒருவர்.
***
பல்கேரியாவின்
எல்லைவழியே
டேன்யூப் ஆற்றைக் கடந்தவர்கள்
கருங்கடலில் மூழ்கிக்
கலந்து போனார்கள்.
***
நாட்சம்பளத்திற்குக்
கோப்பை கழுவப்போகும்
விசாவற்ற பிரபாகரன்
இன்றும் இனியும் உனக்கு
வேலையில்லையெனச்
சொன்ன
முதலாளி மொழி கேட்டு
ரெஸ்ரோரண்ட் வாசலில்
திகைத்துப்போய் நிற்கிறான்.
அத்துடன் அவன்
காணாமற் போகிறான்.
ஒருமுறை காட்டில் வேட்டைக்குப் போன
குடியானவர்களின் கண்ணில்
புலியின் இருப்பிடம் தென்பட்டதாம்.
புலியயும் இவர்களைக் கண்டுவிடவே
இருவரும் அவதானமாக ஒருவரை நெருங்கிவந்து
இனம் கண்டுகொண்டனராம்
நான் புலி, நீ மனிதன் என.
புலிகள் கொஞ்சம் தோட்டாக்களை எடுத்து
குடியானவர்களிடம் கொடுத்து
தங்களுக்கும் சேர்த்து
வேட்டையாடிவரச் சொன்னார்களாம்.
குடியானவர்களோ
“நீங்களும் வந்தால் எங்களுக்கும் பாதுகாப்பு,
நல்ல வேட்டையும் கிடைக்கும்” என
அப்பாவித்தனமாகச் சொல்ல அதற்குப்
புலிகள் சொன்ன பதிலைக் [...]