மன்னிக்கனும், நம்பிக்கையூட்டும் கருத்து ஒன்றையேனும் என்னால் சொல்ல முடியவில்லை..
“வீ வாண்ட் தமிழீழம், அவர் லீடர் பிரபாகரன்’ என்ற கோஷத்தைத் தவிர அப்பால் செல்லமுடியாத அரசியல் வங்குரோத்து நிலையில்தான் மக்கள் இருக்காங்க. அது மிகவும் பச்சாதாப உணர்வைத்தான் வெளிப்படுத்துதே தவிர வலுவான அரசியல் சக்தியாக உருவெடுக்கக்கூடிய, அவர்களை வழிநடத்தக்கூடிய தலைமையாக புலிகள் இல்லை”
நடராசா சுசீந்திரன் அவர்கள் இலங்கையின் வடக்கே நெடுந்தீவில் பிறந்தவர். 1980களிலிருந்து ஜெர்மனியில் வசிக்கும் இவர் அரசு அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர். அரசியல், இலக்கியம், மனிதகுல வரலாறு [...]






























