ஒரு தோழமையான வேண்டுகோள்

அறிவித்தல்கள் கட்டுரைகள்

எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் ஷர்மிளா செய்யித்தின் உரையை இடம்பெறச் செய்யுமாறு மலையக இலக்கியச் சந்திப்புக்கு விடுக்கப்பட்டிருந்த கூட்டு வேண்டுகோள்

47-வது இலக்கியச் சந்திப்பு (மலையகம்) ஏற்பாட்டுக் குழுத் தோழர்களிற்கு, இலக்கியச் சந்திப்புகளில் பங்களித்துவரும் எங்களது தோழமையான வேண்டுகோள் பின்வருமாறு:

தற்போது, 47-வது இலக்கியச் சந்திப்புக் குறித்து நடந்துவரும் விவாதங்களை நாங்கள் கவனித்தவரை, இந்த இலக்கியச் சந்திப்பில் இலங்கையில் சிறுமிகளிற்கு ‘கிளிட்டோரிஸை’ சிதைத்துவிடும் ‘கத்னா’ வதைச் சடங்கு குறித்து உரையாற்றவிருந்த ஷர்மிளா செய்யித் அவர்களின் உரை சிலரின் எதிர்ப்பால் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாமல் கைவிடப்பட்டதாகத் தெரிகிறது. ஷர்மிளா செய்யித்தும் தனது முகப்புத்தகப் பதிவுகள் வழியே இதை உறுதி செய்திருக்கிறார். இது வருத்தத்துக்கும் கண்டனுத்துக்குரியதெனவும் நாங்கள் கருதுகிறோம்.

இலக்கியச் சந்திப்புத் தொடர் எப்போதுமே விளிம்புநிலையினரின் குரலுக்கும், பொதுவெளியில் அதிகம் பேசப்படாத விடயங்களிற்குமே முன்னுரிமை கொடுத்துவந்துள்ளது. அந்த வகையில், ஒருபகுதி முஸ்லீம் சிறுமிகளிற்கு நடக்கும் ‘கத்னா’ கொடுமை குறித்து நடக்கயிருந்த ஓர் உரையாடலை நீங்கள் மறுத்திருப்பது இலக்கியச் சந்திப்பின் முற்போக்கு மரபை முறித்துப்போடுவதாகும்.

‘கத்னா’ குறித்து 20 நிமிட உரை போதாது என்றொரு வாதம் சொல்லப்படுகிறது. எந்த இன, மத,வர்க்க, பால் முரண்களை மட்டுமல்ல இலக்கியச் சங்கதிகளைப் பேசவும் 20 நிமிடங்கள் முழுமையாகப் போதுமானவையல்ல. இந்தச் சந்திப்பின் நிகழ்வு நிரலில் இடம்பெற்றுள்ள எந்த விடயத்தையுமே இந்தச் சந்திப்பிலேயே முழுமையாகப் பேசிவிட முடியாது. எல்லா உரையாடல்களுமே தொடக்க உரையாடல்கள் அல்லது தொடர் உரையாடல்களின் ஒரு பகுதியே. அவ்வாறிருக்க கத்னா உரையை மட்டும் மறுப்பது நியாயமற்றது.

இலக்கியச் சந்திப்புத் தொடர் இதுவரை எத்தனையோ அச்சுறுத்தல்களையும் நேரடி மிரட்டல்களையும் எதிர்கொண்டிருக்கிறது. எனினும் எந்த இனவாதத்திற்கோ மதவாதத்திற்கோ பயங்கரவாதத்திற்கோ இலக்கியச் சந்திப்பு அடிபணியாமல் பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட குரல்களிற்குக் களம் அமைத்துக்கொடுத்திருக்கிறது. நிறுவப்பட்ட புனிதங்களைக் கேள்விக்குட்படுத்துவதில் இலக்கியச் சந்திப்பு பெரும் முன்னெடுப்பைச் செய்திருக்கிறது. அந்த அதிகார எதிர்ப்பு – கலக மரபு காப்பாற்றப்பட வேண்டும்.

எனவே இந்த இலக்கியச் சந்திப்பில் கத்னா குறித்த ஷர்மிளா செய்யித் அவர்களது உரையை நீங்கள் இடம்பெறச் செய்யவேண்டும். இந்த வேண்டுகோளை உங்கள் மீதான நிர்ப்பந்தமாக இல்லாமல் நியாயம் கோரிய கூட்டுக் குரல்களாக நீங்கள் ஏற்றுத் தோழமையுடன் பரிசீலித்து ஆவன செய்ய வேண்டுகின்றோம் .

இவ்வண்ணம்

1. Pratheep Kunaradnam
2. Lunugala Sri
3. Rishvin Ismath
4. Annogen Balakrishnan
5. எம்.எல்.எம். அன்ஸார்
6. Sathiyathevan Sargunam
7. Mohana Dharshiny
8. Abu Noor
9. Hemachandra Pathirana
10. Jeyaruban Mike Philip
11. Sureka Param An
12. Brinthan Kanesalingam
13. Bulbul Isabella
14. Thanges Paramsothy
15. Ravi Ponnudurai
16. Rengan Devarajan
17. Amm Rafiyoos
18. Shoba Sakthi
19. Mathuran Raveendran
20. Nirmala Rajasingam
21. M R Stalin Gnanam
22. Keeran
23. Jeeva Giridharan
24. Thilipkumaar Ganeshan
25. Chinniah Rajeshkumar
26. Kapil Stanislas
27. Karuppu Neelakandan
28. Kandeepan Shan
29. Jeba Bourassa
30. Pathmanathan Nalliah
31. Vigy Nalliyah
32. Annam Sinthu Jeevamuraly
33. Bavachelladurai Bava
34. கறையான்
35. Ns Jana
36. ச. சாதனா
37. Nadesan S Balenthran
38. Thava Sajitharan
39. Tharmini
40. Gajan Gambler
41. Hari Rajaledchumy
42. Reshzan Thayaparan
43. Subesh Navam
44. Shan Vasudevan
45. வ.க.செ மீராபாரதி
46. Prasanna Ramaswamy
47. Dharshi Vara
48. Tanuja Thurairajah
49. Pushparani Sithampari
50. Nanthan Kovai
51. யாழினி சந்திரசேகரம்
52. தணிகைச்செல்வன்.ப
53. Arunasalam Letchumanan
54. Darshana Srinath
55. Dina York
56. Rahman Bind Laden
57. Thirugnanasampanthan Lalithakopan
58. Jestin Janu
59. Dhayani Vijayakumar
60. Karthik Raaja
61. Alagarathnam Kalyansaran
62. Latheepan Sivagnanasundram
63. Puveendran Masilamany
64. Sivanesan Singarasa
65. Daniskaran Kandasamy
66. Manithan Mugam
67. Jagapriyan Somasundaram
68. Kanthasamy Jegatheeswaran
69. Katsura Bourassa
70. Roshini Rameash
71. Alages Thambirajah
72. Cumanan Panchatcharam
73. DevaSena YogaNathan Deva
74. Ganesh Prasanna
75. Anjana Raji Sivaharon
76. Shaseevan Ganeshananthan
77. Anna Ponnampalam
78. Leena Manimekalai
79. Arun Ambalavanar
80. தர்மு பிரசாத்

 

1 thought on “ஒரு தோழமையான வேண்டுகோள்

  1. மிகவும் அவசியமானதும், இஸ்லாமிய சமூகத்தின் அபத்தமானதும் அர்த்தமற்றதுமான பிற்போக்கான ஒரு சடங்கைப்பற்றி அச்சமூகத்திலிருந்துவரும் சகோதரி ஒருவரை 47-வது இலக்கியச்சந்திப்பில் பேசவிடாது தடுக்கப்பட்டிருப்பது ஜனநாயகவிரோதமானதும், சமூகத்தின் ஒரு பிரச்சனையை உதாசீனம் செய்து நகரும் பொறுப்பற்ற போக்குமாகும், அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *