அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல

கட்டுரைகள்

மூகத்தில் பல்வேறு அரசியல் கருத்துகளைக் கொண்ட போக்குகள், குழுக்கள் நிலவும்போது எதிர்க் கருத்துகள் அல்லது மாற்றுக் கருத்துகள் கொண்ட ஒருதரப்பைக் கருத்துப் பலமற்ற மற்றொரு தரப்பு அவதூறுகளால், ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளால் எதிர்கொள்வது எப்போதும் நடக்கும் ஒன்றுதான்.

இன்னொருபுறம் பரபரப்புச் செய்திகளை வெளியிடும் தாகத்தோடு அவதூறுகளைப் பிரசுரித்து மகிழும் போக்கும் சில ஊடகங்களில் காணப்படுகிறது. நமது சூழலில் ‘நிதர்சனம்.கொம்’, ‘தீப்பொறி.கொம்’ போன்ற ஆயுத அரசியல் சார்ந்த சில ஊடகங்களும், வெறும் பச்சை வியாபார ஊடகங்களுமே இந்த அவதூறுக் கலாச்சாரத்தின் பிரநிதிகளாக இருந்திருக்கிறார்கள்.

ஆனால் புலம் பெயர் சூழலில் ‘மாற்றுக் கருத்தாளர்கள்’ எனத் தம்மைப் பிரகடனப்படுத்தி வரும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒருசிலர் இணையத்தளங்கள் ஊடாகக் கருத்து சுதந்திரம் என்ற பதாகையின் கீழ் அப்பட்டமான புனைவுகளையும் பொய்க்கதைகளையும் தனிமனித சேறடிப்புகளையும் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றனர். இந்த இணையத்தளங்களும் இவ்வாறான செயலுக்கு ஊக்கமும் ஆதரவும் வழங்கித் தமது இணையத்தளத்தைப் பரபரப்பாக வைத்துக் கொள்ளும் மலினமான உத்திகளைச் செய்து வருகின்றன. இவர்களுக்கு இலங்கை பிரச்சனை பற்றிய அக்கறையை விடச் செயலூக்கம் கொண்டியங்கும் தனி நபர்கள் மீதும், அமைப்புகள் மீதும் அவதூறு மேற்கொள்வதே தலையாய கடமையாகி வருகிறது.

வளர்ந்து வரும் இந்த ஜனநாயக விரோத போக்கு, பரபரப்புச் செய்திகளை வெளியிடும் தாகம், அவதூறுகளைப் பிரசுரித்து மகிழும் போக்கு, அவதூறான பின்னூட்டங்களை விட்டு மாற்றுக்கருத்தாளர்கள் மத்தியில் போட்டிகள் பூசல்களை உருவாக்கும் எத்தனம், தனிமனிதத் தாக்குதல்களை ஊக்குவித்தலில் அற்ப மகிழ்ச்சி, செயலூக்கம் கொண்ட மாற்றுக்கருத்தாளர்களின் மேல் அவதூறுகளை வீசி அவர்களின் பெயரைக்கெடுத்தல் போன்ற கேடுகெட்ட பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

‘வெளிப்படைத் தன்மை’, ‘ஜனநாயகம்’ என்ற போர்வையில் தமது கருத்துக்களுக்கு உடன்படாத தனிமனிதர்கள், மீதும் அமைப்புகள் மீதும் அவதூறுகளைச் செய்வதையே இவர்கள் தொடர்கின்றனர். ஆதாரமற்ற அவதூறுகளைப் பிரசுரித்து விட்டுப் பொய்க் குற்றம் சாட்டப்பட்ட தனி நபரோ, அமைப்போ அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்பது தான் இவர்களது வாதம்.

ஜனநாயகச் சூழலைப் பலப்படுத்துவதும் அதிகாரத்தை விமர்சிப்பதுமான காத்திரமான நிலையை ஒரு ஊடகம் முன்னெடுக்கும்போது அதன் ஆசிரியர்கள் மிகவும் பொறுப்புணர்வுடனும் அரசியல் அறத்துடனும் வெளிப்படையாகவும் இயங்குவது முன்நிபந்தனையாகிறது. ஆனால் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் எவ்வித ஆதாரங்களுமற்ற குற்றச்சாட்டுகளையும் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட வெறும் கிசுகிசுக்களையும் யாரும் எழுதலாம் அதனைக் கருத்துச் சுதந்திரம் என்ற பேரில் இந்த ஊடகங்களும் பிரசுரிப்பார்கள் என்பது அறமற்ற நிலைப்பாடாகும். மறுபுறத்தில் ஆரோக்கியமான கருத்துருவாக்கத்துக்கும் நேர்மையான கருத்துப் பரிமாற்றத்துக்கும் இந்தப் போக்குத் தடையாகவுமுள்ளது. எனவே இந்தப் பொறுப்பற்ற இணையத்தளங்களின் போக்கை ‘வெறுமனே பரபரப்பை ஏற்படுத்துவதற்காகச் செய்யப்படும் மலிவான ஊடக உத்தி’, என்று போகிற போக்கில் நாம் சாடிவிட்டு மட்டும் போய்விட முடியாது.

இலக்கியச் சந்திப்புப் போன்ற நிகழ்வுகளும் புலம்பெயர் சிறுபத்திரிகைக் கலாச்சாரமும் ஆயுதக் கலாச்சார எதிர்ப்பையும், மனித உரிமை மீறல்களுக்கெதிரான குரலையும், அதிகார அரசியலைக் கேள்விக்குள்ளாக்கும் மாற்றுக் கலாச்சார மறுத்தோடி அரசியலையும், ஜனநாயக விழுமியங்களையும் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாகப் புலம் பெயர் நாடுகளில் கட்டமைத்துப் பேணி வந்துள்ளன. தலித்தியம் பெண்ணியம் புலம்பெயர் இலக்கியம் போன்ற பல்வேறு சிந்தனை போக்குகளும் செயல்பாடுகளும் இம்மாற்றுக் கருத்து அரசியலின் பன்முகத்தன்மையின், சகிப்புத் தன்மையின் பெறுபேறுகள்.

புகலிட அரசியல் பரப்பில் பல ஆண்டுகளாக அரசியல் செயல்பாட்டாளர்களால் அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்குமிடையில் தொடர்ந்து செயலூக்கத்துடன் கட்டிக்காத்து வளர்க்கப்பட்ட மாற்றுக்கருத்து அரசியலின் பெறுபேறுகளைக் கொச்சைப்படுத்தும் நோக்கே அவதூறுகளைப் பிரசுரிக்கும் இத்தகைய இணையத் தளங்களின் உள்நோக்கம் என நாம் கருதுகிறோம். திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டு வெளியாகும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் அவதூறுகளும் பல தனிமனிதர்களையும், அமைப்புகளையும், சக ஊடகங்களையும் சூழலிலிருந்து தனிமைப்படுத்தி ஒதுக்கும் நோக்கத்துடனும் உள்முரண்களைப் பகைமுரண்களாக்கும் தந்திரத்துடனும் மாற்றுக் கருத்தாளர்கள் இரத்தம் சிந்தி உருவாக்கிய சனநாயக் குரல்களின் தொகுப்பைச் சிதைக்கும் எத்தனத்துடனுமே எழுதப்படுகின்றன என்று நாம் கருதுகிறோம்.

இன்று ஆதிக்கத்திலிருக்கும் ஆயுத வன்முறைக் கலாச்சாரத்தின் கூறுகளே இந்த அவதூறுப் பிரச்சாரங்களின் கலாச்சார அடிப்படையாகும். சனநாயக வேடமிட்டு வன்முறைக் கலாச்சாரத்தை இத்தகைய ஊடகங்கள் ஊக்குவிக்கின்றன. பொய்கள் – புனைவுகளின் அடிப்படையில் தனிமனித தாக்குதல்களையும் ஆதாரமற்ற கட்டுக்கதைகளையும் அரசியல் செயல்பாட்டாளர்கள் குறித்துப் பிரசுரித்து அவர்களின் பெயர்களுக்கு ஊறு விளைவித்து அவர்களின் சமூக அரசியல் செயல்பாட்டை தடைசெய்யும் நடைமுறை, ஆயுதக் கலாச்சார அரசியலில் மாற்றுக் கருத்தாளர்கள் தடைசெய்யப்பட்டதற்கும் ஆதாரமின்றிக் குற்றம் சாட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டதற்கும் ஒப்பானதே.

இத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட ஊடகங்கள் ஈடுபட்டிருந்தாலும் அண்மைக் காலங்களில் இத்தகைய போக்கினை முன்னெடுப்பதில் மிகுந்த தீவிரம் காட்டும் ‘தேசம்’ இணையத்தளத்தில் இதுவரை வெளியான நூற்றுக்கணக்கான அவதூறுப் பக்கங்களிலிருந்து ஒரு சில துளிகளை மட்டும் இங்கே எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறோம்:

* இலண்டன் தலித் மாநாட்டைக் குறித்து ஏராளமான அவதூறுகள் தேசம் நெற்றில் கட்டுரையாகவும் பின்னூட்டங்களாகவும் வெளியாயின. தலித் சமூக மேம்பாட்டு முன்னணி என்.ஜீ.ஓக்களின் வாலாகச் செயற்படுகிறது எனப் பொய்க் குற்றச்சாட்டுகள் எழுதப்பட்டன.

* கலைச்செல்வனின் மூன்றாமாண்டு நினைவுகூரலில் நடந்த கருத்து விவாதங்கள் கொச்சையாகத் திரிக்கப்பட்டு தேசத்தில் வெளியாகின. அந்த விவாதம் குறித்து முற்றிலும் பொய்யான செய்திகளே எழுதப்பட்டன.

*1983 ஜூலைப் படுகொலைகள் நினைவாகப் பிரான்ஸில் நடத்தப்பட்ட ‘நெடுங்குருதி’ நிகழ்வு குறித்துப் பொய்யான தகவல்கள் பிரசுரிக்கப்பட்டன.

* அண்மையில் நடந்த பெண்கள் சந்திப்புக் குறித்து விமர்சித்து எழுதப்பட்ட கேவலம் பிடித்த கட்டுரைகள் தேசத்தால் தேடிப் பிடித்து மறுபிரசுரம் செய்யப்பட்டன. பெண்கள் சந்திப்பில் உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டிருந்ததின் அரசியல் குறியீடு அர்த்தப்பாட்டையே கொச்சைப்படுத்தி அங்கே தொங்கவிடப்பட்டிருந்தவை உபயோகிக்கப்பட்டவையா எனக் கேட்டிருந்த வக்கிரமான பின்னூட்டமும் தேசத்தில் வெளியாகியது.

* TBC வானொலி நிலையத்தில் களவாடியவர்கள் SLDF உறுப்பினர்களே என்றொரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு தேசத்தில் பிரசுரமாகியது.

தேசம் தனக்குக் கிடைக்கும் தகவல்களை அடிப்படை ஊடகவியலாளரின் விதிமுறைகளுக்கமைய சரி பிழை பார்ப்பது கிடையாது. எழுந்தமானமாகக் குற்றச்சாட்டுகளைத் தேசம் அள்ளியெறியலாம். குற்றம் சாட்டப்பட்டவர்களே பதிலளித்து தங்கள் நற்பெயரை நிறுவ வேண்டும் என்பது தேசத்தின் கருத்து. தேசம் இதுவரை வெளியிட்ட சரமாரியான குற்றச்சாட்டுகளுக்கும் பழிப்புகளுக்கும் இதுவரை எதுவித ஆதாரங்களையும் சமர்ப்பித்ததில்லை.

அரசியல் – கலை இலக்கியத் தளங்களில் தனியாகவும் அமைப்பாகவும் இயங்கும் நாம் கீழ்க்கண்டவற்றை வலியுறுத்தி இந்தக் கூட்டு அறிக்கையை வெளியிடுகிறோம்:

1. கடந்த காலங்களில் தேசம் இணையத்தளத்தில் ஆதாரங்களில்லாமல் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களைத் தேசம் ஆசிரியர் குழுவினர் வெளியிட வேண்டும். ஆதாரங்களை வெளியிட முடியாத பட்சத்தில் தேசம் இணையத்தளம் ஊடக நெறிகளின்படி வருத்தம் தெரிவித்தாக வேண்டும்.

2. செய்திகள், கட்டுரைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல் (அவை தனிநபர்களையோ அமைப்புகளையோ நேரடியாகவோ மறைமுகமாகவோ அவதூறு செய்யும் நோக்கில் எழுதப்பட்டிருப்பின்) பிரசுரிப்பதை நிறுத்த வேண்டும்.

-11 செப்ரம்பர் 2008
தொடர்புகளுக்கு: [email protected]

1. கற்சுறா – மற்றது – கனடா
2. பௌஸர் – மூன்றாவது மனிதன் – இங்கிலாந்து
3. ரஞ்சி – ஊடறு- சுவிஸ்
4. செழியன் – கருமையம்- கனடா
5. நிர்மலா ராஜசிங்கம் – SLDF- இங்கிலாந்து
6. அ. தேவதாசன் – தலித் சமூக மேம்பாட்டு முன்னணி – பிரான்ஸ்
7. அருந்ததி – தலித் சமூக மேம்பாட்டு முன்னணி – பிரான்ஸ்
8. அசுரா – தலித் சமூக மேம்பாட்டு முன்னணி – பிரான்ஸ்
9. யோகரட்ணம் – தலித் சமூக மேம்பாட்டு முன்னணி – பிரான்ஸ்
10. சுந்தரலிங்கம் -தலித் சமூக மேம்பாட்டு முன்னணி – பிரான்ஸ்
11. ஷோபாசக்தி – சத்தியக்கடதாசி -பிரான்ஸ்
12. சுகன் – சத்தியக்கடதாசி – பிரான்ஸ்
13 தியோ ரூபன் – சத்தியக்கடதாசி – பிரான்ஸ்
14. விஜி – பிரான்ஸ்
15. எம். ஆர். ஸ்டாலின் – ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணி – பிரான்ஸ்
16. ராகவன் – SLDF- இங்கிலாந்து
17. எஸ் பஷீர் – SLMIC- இங்கிலாந்து
18. சந்துஷ் – SLDF – இங்கிலாந்து
19. நமோ பொன்னம்பலம் – SLDF- கனடா
20. அகிலன் கதிர்காமர் – SLDF- அமெரிக்கா
21. டாக்டர் நீதிராஜா – BUDS – இங்கிலாந்து
22. ரவி பொன்னுத்துரை – வைகறை – கனடா
23. சாந்தன் – விம்பம் – இங்கிலாந்து
24. ஜெபா – மற்றது- கனடா
25. ரவி – மனிதம் -சுவிஸ்
26. ரகு கதிரவேலு – ‘ஈழநாசம்’ இணையத்தளம் – கனடா
27. நஜா மொகமட் SLIF – இங்கிலாந்து
28. கே. கிருஷ்ணராஜா விம்பம் – இங்கிலாந்து
29. DR. ரயீஸ் முஸ்தபா SLIF – இங்கிலாந்து
30. எஸ்.எம்.மார்சூக் இஸ்லாம்- ISAM- இங்கிலாந்து
31. வில்பிரெட் வில்சன் -வைகறை – கனடா
32. ஏ.குமாரதுரை – விழிப்பு இணையத்தளம் – டென்மார்க்
33. கீரன் – இங்கிலாந்து
34. செல்வராஜா ஆதவன் – கனடா
35. வாசுகி பரமசாமி – கனடா
36. விஜயகுமாரி முருகையா – கனடா
37. தர்சனா தர்மலிங்கம் – இங்கிலாந்து
38. எஸ். சுந்திரகுமார் – இங்கிலாந்து
39. எஸ். தவராஜா – இங்கிலாந்து
40. ஷாரிகா திராணகம – நெதர்லாந்து
41. DR. நிக்கலஸ்பிள்ளை – இங்கிலாந்து
42. ரஜிதா. S. வேலு- இங்கிலாந்து
43. உமா – ஜெர்மனி
44. மல்லிகா – ஜெர்மனி
45. எஸ்.பாலன் – இங்கிலாந்து
46. எஸ். வேலு – இங்கிலாந்து
47. மு. நித்தியானந்தன் – இங்கிலாந்து
48. அபி இராசரட்ணம் – இங்கிலாந்து
49. காண்டீபன் – இங்கிலாந்து
50. த.ஜெயகுமார் – இங்கிலாந்து
51. போல் பெர்னான்டோ – இங்கிலாந்து
52. அகிலன் வர்ணகுலசிங்கம் – இங்கிலாந்து
53. சிவசாமி சிவராஜன் – ஜெர்மனி
54. மங்கை சிவராஜன் – ஜெர்மனி
55. தர்மினி – பிரான்ஸ்
56. தேவா – சுவிஸ்
57. சங்கீதா ஜெயகுமார் – இங்கிலாந்து
58 சுமதி ரூபன் – கனடா
59. இன்பா – ஜெர்மனி
60. ந. சுசீந்திரன் – ஜெர்மனி
61. மனோரஞ்சன் – கனடா
62. ஏ. எம். ரஷ்மி – இங்கிலாந்து
63. போல்(நரேஷ்) – இங்கிலாந்து
64. ஜெமினி – ஜெர்மனி
65. நந்தன் – ஜெர்மனி
66. நிமோ – ஜெர்மனி
67. சங்கர் – ஜெர்மனி
68. நா.சபேசன் – இங்கிலாந்து
69. நா. சிறி கெங்காதரன் – இங்கிலாந்து
70. ஈசன் சோமசுந்தரம் – இங்கிலாந்து
71. எம்.வை.எம் சித்தீக் – இங்கிலாந்து
72. பாலசூரியன் – நெதர்லாந்து
73. ‘சரிநிகர்’ சிவகுமார் – இங்கிலாந்து.
74. சோலையூரான் – பிரான்ஸ்

இந்தக் கூட்டறிக்கையைப் பிரசுரம் செய்யுமாறு கோரி கீழ்வரும் இணையத்தளங்களிற்கு இந்த அறிக்கையை அனுப்பியுள்ளோம்:

1. தேனீ, 2. ஊடறு, 3. தூ, 4. உயிர்நிழல், 5. சத்தியக்கடதாசி, 6. இனியொரு, 7. பதிவுகள், 8. கரித்துண்டு, 9. விழிப்பு, 10. தாயகம், 11. ஈழநாசம், 12. கீற்று, 13.தேசம் 14. நெருப்பு, 15. அதிரடி, 16. உதயம்-நெற் 17. ஈரஅனல்.

13 thoughts on “அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல

  1. அடுத்ததுஇ நானும் பின்னோட்டங்கள் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் ஆதாரமில்லாமல் செய்திகளை வெளியிடுவது தவறு என்று சுட்டிக்காட்டினேன். ஆனால் பலன் கிட்டவில்லை. அதனால் நான் பின்னோட்டம் விடுவதைக் குறைத்துக் கொண்டேன். நாய் வாலை நிமிர்த்தேலாது அது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அதனாலைஇஅறிக்கையை விட்டவர்கள் தேசத்தை விட்டிட்டு புலியைத் திருத்தப்பாருங்கோ பிரியோசனமாகவிருக்கும். -sam

  2. அரசியலாளர்களை விட விமர்சகர்கள் மாற்றுக்கருத்தாளர்கள் ஆழ்ந்த புலமையும் பொறுப்புமிக்கவ்ரகளாக இருக்கவேண்டும். தமிழ்ச்சமூகத்தில் இதுவும் தலைகீழ் என்பதற்கு இந்த அறிக்கை சான்று. ஒரு நல்ல வியடத்தைகூட சரியாக செய்யத்தெரியாது ஓட்டை ஒடிசல்களோடு அறிக்கைவிட்டு திக்குமுக்காடுகிறது மாற்றுக்கருத்து.

  3. 74 பேருடைய கையெழுத்து என்பது இந்த இடத்தில் முக்கியமானதே. ஏனெனில் அதில் ஒருவரும் எங்களைப்போல ஒளிந்திருந்து கருத்துச்சொல்லும் சனநாயகமேதைகளல்ல.
    அந்த 74பேரும் அல்லது 71பேரும் அவதூறுகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே முக்கியசெய்தி. இந்த இடத்தில் தேசம் நெற்றின் வழித்தடமும் சரியானதே. சரியானவற்றை சரியானவர்கள் எடுத்துகொள்வார்கள். பன்னாடைகளப்பற்றி கவலைப்படுவானேன். இந்த அறிக்கையும் ஒரு தெளிவை ஏற்படுத்தியிருக்கிறது என்றவகையில் திருப்திப்பட்டுக்கொள்ளலாம்.

  4. படிப்பறிவல்ல பகுத்தறிவுள்ள ஒரு சமூகத்தில் ஆரோக்கியமான விமர்சனம் சாத்தியம். ஆனால் தமிழ் சமூகத்தில் அதெல்லாம் சாத்தியப்பாடாதுங்கோ. முன்னொரு காலத்தில் முற்போக்கு பேசியவர்கள் இன்று தமிழ் தேசிய காவடிகையத் தூக்கி புலிப்பாட்டுப் பாடினால் எப்படி ஐயா ஆளவிட்டுட்டு அரசியல் போக்கிரித்தனத்தை விமர்க்க முடியும். உதாரணமாக சேரன விட்டுட்டு அவருடைய அரசியல விமர்சிக்கலாம் என்றியள்? மேலும் இதில் கையெழத்திட்டவர்களில் சிலர் தாமும் பிரமுகர்கள் என்பதை வெளிப்படுத்த நல்லதொரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டுள்ளார்கள். வாழ்க வாழ்க
    – சுதா.

  5. சிலர் தாமும் பிரமுகர்கள் என்பதை வெளிப்படுத்த நல்லதொரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டுள்ளார்கள்.

    அய்யா அவர்கள் பிரமுகர்கள்தான். ஏனென்றால் சொந்தப்பெயர்.

  6. தேசத்தில் சாமின் பின்னோட்டத்திலிருந்து says:

    ஒரு விடயத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கையொப்பமிட்டவர்களை கருத்துச் சுதந்திரம் என்றபோர்வையில் விமர்சிப்பது நாடாள மன்றத்தேர்தலில் வாக்களித்த மக்களைப்பார்த்து விமர்சிப்பதுக்கு ஒப்பாகும்.

    இதில் கையெழுத்திட்ட சிலரின் நடவடிக்கையில் எனக்கு உடன்பாடில்லை .அவர்களில் ஒரு சிலர் தேசத்தில் விட்ட அறிக்கைகளே தெளிவுபடுத்தியுள்ளது.எனினும் ஒரு சிலரின் நடத்தையால் ஒரு கட்சியையோஇ அமைப்பையோ அல்லது அதில் அங்கம் வகிக்கும் ஒட்டுமொத்த உறுப்பினரையோ தாக்குவது தர்மம் அல்ல. அத்துடன் விஸ்வனிசுதாஇரவி என்பவர்களின் விமர்சனத்தில்/கருத்தில் பலவற்றை நாம் ஒத்துக் கொள்ளவேண்டும். மற்றைய நூற்றுக்கு மேற்பட்ட கருத்துக்களுமி விமர்சனங்களும் வேலையற்றவர்களின் வெட்டிப்பேச்சுப்போலுள்ளது.

    ஒரு பேப்பரி நிதர்சனமி தீப்பொறி இதமிழ் அவ்வெயர் போன்ற ஊடகங்களை விட்டு விட்டு தேசத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று சிலர் கேட்டார்கள்.தேசத்துடன் நாங்கள் தொடர்புபட்டிருந்தோம் என்ற தோரணையில் தவறுகளைச் சுட்டிக்காட்ட தொடங்கியிருக்கலாம் அல்லவா.அல்லது ஜனநாயகச் சூழலைப் பலப்படுத்துவதும் அதிகாரத்தை விமர்சிப்பதுமான காத்திரமான நிலையை ஒரு ஊடகம் முன்னெடுக்கும்போது அதன் ஆசிரியர்கள் மிகவும் பொறுப்புணர்வுடனும் அரசியல் அறத்துடனும் வெளிப்படையாகவும் இயங்கவில்லை என்ற ஆதங்கம் தான் என்று ஏன் எண்ணத்தோன்றவில்லை உங்களுக்கு. ஒருவரின் தவறை திருத்தச்சொல்லி சொல்லும் உரிமை நண்பனுக்குஇஉறவினனுக்கு அல்லது அவரின் நலனில் அக்கறை கொள்ளுவோருக்குத்தான் இருக்கும் என நான் நினைக்கின்றேன்.
    வீதியால் போகும் வினாயகமூர்த்தியைப்பார்து திருந்தடா என்று சொன்னால் நமக்குப் பைத்தியம் என்றுதான் சொல்லுவார்கள்.

    யார்தான் புனிதர்கள் ?பொதுத்தேர்தலில் வாக்களித்த மக்களைப்பார்த்து நீ கடனாளீநீ கொலையாளீநீ மனனோயாளீநீ போராளி………………………

    அவன் துரோகி எனது கட்சியின் கபடங்களை காற்றில்விட்டவன்.இவன் பச்சோந்தி போனதடவை போக்கிரிக்கு போஸ்டர் ஒட்டினவன்.உவன் குடிகாரன் குட்டயைக் கிழப்பினவன்……… எப்படி உங்களால் வாக்களிக்க முடியும் என்று கேட்பது போலுள்ளது பல்லியின் பிரச்சாரம். எல்லோரும் பூலோகத்தில் அரிச்சந்திர ராஜனாக முடியாது.

    தேசம் இன்னும் திருந்தவில்லை என்பது பல்லி போன்றவர்களின் பின்னோட்டத்தைப் பிரசுரிப்பதிலிருந்து புரிகின்றது.

    பல்லியின் பின்னோட்டத்திற்க்கும் அறிக்கைக்கும் ஏதாவது சம்பந்தம் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.ஒரு ஊடகத்தை மூடுவதற்க்கான முடிவு எடுத்துள்ளார்கள் என்று வேறை எழுதி உள்ளார். அறிக்கையில் அப்பிடி ஏதாவது எழுதியுள்ளதாக என் கண்களுக்குப் புலப்படவில்லை.ஆதாரம் கேட்ட அறிக்கைக்கே திரும்பவும் ஆதாரமில்லாமல் அவதூறுகளா. தேசம் இன்னும் திருந்தவில்லை என்பது பல்லி போன்றவர்களின் பின்னோட்டத்தைப் பிரசுரிப்பதிலிருந்து புரிகின்றது.

    “கெடுகின்றேன் பந்தயம் பிடி” என்பது போலுள்ளது தேசத்தின் போக்கு.

    சில குற்றவாளிகளை தப்பித்துப் போகவிடலாம் ஆனால் ஒரு நிரபராதியை தண்டிக்கக்கூடாது என்பது எனது கருத்து.

    தேசத்தில் சாமின் பின்னோட்டத்திலிருந்து

  7. ஒரு இணையத்தின் தரம் அதன் பின்னூட்டத்தில் தங்கியுள்ளது.

  8. தேசத்தில் சாமின் பின்னோட்டத்திலிருந்து says:

    இங்கு கீரனின் மின்னஞ்சலை மொட்டைக்கடிதம் என்று குற்றம் சாட்டுபவர்கள்,குறிப்பாக தேசம் இணையத்தளத்தின் ஆசிரியர்களில்? ஒருவரான கொன்ஸ்ரன்ரைன் அல்லது நாவலன் எனக்கு விளக்கம் அளிப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

    நான் விடும் பின்னோட்டங்கள் பலவற்றை தேசம் பிரசுரிக்காத காரணத்தினால் இன்றிலிருந்து எனது பின்னோட்டங்களின் பிரதியை சத்தியக்கடதாசி,போன்ற இணையத்தளத்திற்கும் அனுப்புவதாக உத்தேசித்துள்ளேன். கருத்துச் சுதந்திரம் என்று சொல்லிவிட்டு குறிப்பிட்ட ஒரு சிலரைத் தாக்கியோ அல்லது அவர்களைப்பற்றி ஆதாரமில்லாத அவதூறுகளை மட்டுமே தேர்ந்தெடுத்து பிரசுரிக்கும் தேசத்தின் மீது மீண்டும் சந்தேகம் வந்துள்ளது. கடைசியாக ஜெயபாலனையும்,அசோக்கையும் பற்றி நான் விமர்சித்தையும் தணிக்கை செய்துள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சாம்.

    சத்தியக்கடதாசி ஆசிரியர்களுக்கு,
    “தேசத்தில் பிரசுரிக்க மறுத்த பின்னோட்டங்கள்” என ஒருபகுதியை சத்தியக்கடதாசி,போன்ற இணையத்தளங்கள் உருவாக்கினால் என் போன்ற வாசகர்களுக்கு வசதியாக இருக்கும்.அத்துடன் தேசத்தைவிட மற்றவர்களின் “கருத்துச் சுதந்திரத்திற்கு” மதிப்பளிப்பளித்து தேசத்தின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்துவீர்கள்

  9. தேசத்தில் சாமின் பின்னோட்டத்திலிருந்து says:

    இதுபற்றி நான் ஜெயபாலன் அவர்களை தொடர்புகொண்டு விசாரித்த பொழுது, ”கீரன் அனுப்பிக் கொண்டிருக்கும் இந்த மெயிலை பற்றி சில பத்திரிகையாளர்கள் தேசம்நெற்றுடன் தொடர்பு கொண்டு இந்த மெயிலின் நம்பகத்தன்மை பற்றி விசாரித்தனர்.” என்று சொன்ன அவர் ”ஒவ்வொரு செய்தியை வெளியிடும் பொழுதும் ஊடகவியளாளர் தம்மைப் பற்றிய தனிப்பட்ட விபரங்களை அறிவித்துக் கொண்டிருப்பது நடைமுறைச் சாத்தியமல்ல. அப்படி உலகின் எந்த ஊடகவியலாளர்கள் செய்வதாகவும் எனக்கு தெரியாது.” என்று கூறினார் ஜெயபாலன்.//

    இதைத்தானே எஸ்.எல்.எவ்.டி யினரும் மற்றைய அமைப்பினரும் “ஆதாரமற்ற அவதூறுகளைப் பிரசுரித்து விட்டுப் பொய்க் குற்றம் சாட்டப்பட்ட தனி நபரோ அமைப்போ அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்பது தான் இவர்களது வாதம்.”
    என்று தமது அறிக்கையிலும் தெரிவித்துள்ளார்கள்.

    தன்னக்குத் தனக்கு என்றால் நெஞ்சு படக்குப் படக்கு என்கிறதோ?

    //பொது மகனில் இருந்து பிரதமர் வரை சந்தித்து தொடர்புகளை வைத்து எல்லாற்ற வண்டவாளங்களையும் தேசம்நெற் என்ற தண்டவாளத்தில் ஏற்றுவதே என் தொழில்” என்றார்.//ஜெயபாலன்

    உங்களின் வண்டவாளங்களையும் தேசம்நெற் என்ற தண்டவாளத்தில் ஏற்ற மறுத்ததன் காரணம்தான் என்னவோ?ஜெயபாலன்

  10. சத்தியக்கடதாசிக்கு பொறுப்பு அதிகமாகிறது. எச்சரிக்கையாயிருங்கள்.
    அஞ்சுபேர் ஐம்பது பேரில முதுகு சொறியிறதால ஒண்டும் ஆகிவிடப்போறதில்ல
    இது அவைக்கும் தெரியும். ஆனால் அவையும் என்ன செய்யிறது. இருந்தால் தானே தரமுடியும்.
    தேசத்தில் உள்ளாடை அரசியல் பற்றி சேனனின் நல்லதொரு கட்டுரை வந்திருக்கிறது. அதை எடுத்து மறுபிரசரம் செய்து கருத்துப்பரிமாற்றத்தை நடத்துங்கள்.
    மெல்லென பாயும் தண்ணிபோல சத்தியக்டதாசி நகரட்டும்.
    வாழ்த்துக்கள்

  11. சத்தியக்கடதாசி நத்தை போலவே நகர்கின்றது.இதற்கு சோம்பறித்தனமா? கருத்துக்களின் வரட்சியா? எழுத்தாளர் பஞ்சமா?அல்லது எல்லாமே காரணங்களா?

  12. இதில் கையொப்பமிட்ட பலர் முன்பு தேசமுடன் இருந்துகொண்டு
    ஆரோக்கியமானா பலரது கருத்துக்கு கூட ஆப்பு வைத்தார்கள்
    என்பதே உண் மை என்ற கருத்துநிலவுது அதுக்கு என்ன பதில் அண்ணா

  13. most of these peoples from 74 left many bad and sexy comments and these all can be proved by thesamnet group – can’t you think in this way – if these comments published – the sam keeran – ragavan and their real story will come out

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *