பின்நவீனத்துவ நாடோடிகள் II

கட்டுரைகள்


குமரன்: வட்டுக்கோட்டை, கன்னியாகுமரி, சூரிச், கொழும்பு, வட்டுக்கோட்டை, கொழும்பு, பரிஸ்.

தற்காலிக முகவரி: கார்ஜ் லெ கொனேஸ்

“நீ விசா இல்லாமை ஜேர்மனில இருக்கிறாயெண்டெல்லோ கேள்விப்பட்டன்”

“இல்லை மாமா நான் உள்ளுக்கை இருந்தனான்”

“கேஸ் ஆர் எழுதினது?”

“கேஸ் நல்ல கேஸ், நான் தான் சொதப்பிவிட்டன், ‘உதயன்’ பேப்பரிலை வேலை செய்தனானெண்டு குடுத்தது, அவன் உதயன் பேப்பரின்ரை சின்னம் என்னண்டு கேட்டான்,எனக்குத் தெரியயில்லை!

“நீ புலனாய்வுப் பிரிவிலையெல்லோ வேலை செய்தனி”

“அது தம்பி மாமா!”

“இடையுக்கை உனக்கு காட் கிடைச்சது என்டெல்லோ கேள்விப்பட்டனான்”

“கிடச்சு வேலையும் செய்தனான், கனடாவுக்கும் றை பண்ணினனான்… பதின்நாலு கேட்டவங்கள்”

“பிறகு?”

“இஞ்ச நசனாலிட்டி செய்து தாறதெண்டு அஞ்சாயிரம் கேட்டவங்கள்”

“நசனாலிட்டி செய்யுறதோ?”

“எல்லாம் உண்மையா ஒறிஜினலா, எடுத்திருக்கிறாங்கள்! மேரியிலை போய் நசனாலிட்டிக் காட் எடுக்கிறது மட்டும்தான் நாங்கள்! என்னவும் செய்யலாம், இடிஎவ் செய்யலாமோ  அவங்கள் ஒறீஜினலா என்ர பேருக்குச் செய்தவங்கள், மேரியிலை காட் எடுக்க வரச்சொல்லி போன்னான், ஒருசனியன் பிரெஞ்சுக்காறி அவளுக்குச் சந்தேகம்வந்துவிட்டுது”

“பிறகு?”

“பிறகென்ன பொலிஸ் வந்ததுதான்”

***

“அந்தத் தரவெஸ்தி என்னாச்சு மாமா”

“அப்பிடியே மெத்திரோவால இறங்கி நான் அவளையே பாத்துக்கொண்டிருக்கிறன்,அவள் தான் ட்ரான்ஸ்செக்சுவல், தரவெஸ்தி, உனக்கு விளங்குதா எண்டு கேட்டுக்கொண்டேயிருக்கிறாள், அவள் சொல்லுறதை மூளை கிரகிச்சு புரிஞ்சுகொள்ளுது, மனசு உள்ளுக்கை அவள் என்ன சொல்லுறாள் எண்டு எடுக்க விரும்பயில்லை!

“நீங்கள் அவளோடை போன்னீங்களோ இல்லையோ?”

“எழுத்தோட்டத்தோடை படத்தை முடிக்காதை!”

****

அவள் தான் தரவெஸ்த்தி என்டு எனக்குச் சொல்லாம விட்டிருக்கலாம். ஒருமாதிரி தேவதைக்கும் பெண்ணுக்கும் இடையில இருக்கிற சின்ன வித்தியாசத்த அவள் எனக்கு வலியுறுத்திச் சொல்லிக்கொண்டேயிருந்தாள். அப்பிடியே மெத்ரோ கதிரையிலை இருந்தன்.

“உங்களுக்கு என்ன பேர் என்டு நான் அறியலாமா?”

“சீதா”
“ஓ…”

“உன்ரை ரெலிபோன் நம்பரைத் தா?”

“எனக்கு ரெலிபோன் இல்லை”

“என்ரை வீட்டுக்கு வாறியா?”




அவளின்ரை உடலின் பாதியைப்போல நான் அவளோடை போறன்!
அறைக் கதவத்திறந்து அவள் உள்ளுக்கை போக நான் கதவு வாசலிலையே நிண்டன். அவள் செற்றியில் இருந்தபடி வாசலில் நிற்கிற என்னையே பாத்தபடி இருக்கிறாள்.

“நீ வீட்டுக்குள்ளை வரலாம்,வராம போகலாம்!”

எண்டு சொல்லி தன்ரை கான்ட்பாக்கிலை இருந்த படத்தை எனக்குக் காட்டினாள்.

“இந்தக் கோயிலுக்கு நான் போன கிழமை போயிருக்கிறனே! முவசியிலை இருக்கு!”

“நானும் போன கிழமைதான் போனனான்! எனக்கு ஒரு நல்ல கணவனைக் குடு எண்டு வெள்ளைச்சீலை உடுத்து விளக்கு ஏத்தி,புத்த பகவானிட்டை வேண்டுதல் செய்த படம் இது. நிறையப் பெண்கள் வெள்ளைக் கலையுடுத்து விளக்கேத்திக் கொண்டிருந்தார்களே”

“எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லாமல் தெரியுது,புத்த பகவான் பரிசளித்த எனக்கான கணவன் நீதான்!”

2 thoughts on “பின்நவீனத்துவ நாடோடிகள் II

  1. சுகன் ஈழத்தமிழர்களின் அவல வாழ்வை அருமையாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள். தேசிய எல்லைகள் கடக்கப்படும் நாட்களில் தமிழர்கள் எவ்வாறு அதை நாசுக்காகச் சாத்தியப்படுத்துகின்றார்கள் என்பதை இதை விட அருமையாக வேறு எவரும் சொல்ல முடியாது. புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழனின் விளிம்பு நிலையை காட்சிப் படிமங்களூடு நகர்த்திச் சென்றிருக்கிறீர்கள். அருமை சுகன். அருமை.

    (அய்.. நான் முதுகு சொறிந்துவிட்டேன்.)

    என்னங்க நான் சரியா முதுகு சொறியுறனா? சொல்லுங்களேன்.

  2. மரதன் சொல்வது போல தேசிய எல்லைகள் கடக்கப்படும் நாட்களில் தமிழர்களின் வெட்டுமுகத்தை ஆழமாகக் காட்டுகிறார சுகன். விளிம்புநிலைப் படிமங்களும் போட்ப்பட்ட படங்களினூடு னஇன்னம் அழுத்தம் பெறுகிறது.

Comments are closed.