நீ போராளியல்ல!

கட்டுரைகள்

-சுகன்

உன் இன்னுயிரை ஈந்தது போதும்
லோகிதாசா எழுந்திரு!

செய்திகளைச் செவிமடுத்த உங்கள் அனைவருக்கும்
நன்றி எனக்கூறி விடைபெறுகிறார் அறிவிப்பாளர்
லோகிதாசா எழுந்திரு!

நாடகம் முடிந்தபின்
உன்னை வழமைபோல்
கூட்டிப்போக அப்பா வந்திருக்கிறார்
லோகிதாசா எழுந்திரு!

கண்டியரசனில் உன் மாமா
உன்னை உரலில் போட்டு இடிக்க
அம்மா பார்த்திருந்து அழுகிறாள்

அரிச்சந்திர நாடகத்திலோ
நீ பாம்புதீண்டி இறக்கிறாய்

எழுந்திருக்கமாட்டாமல் நீள்துயில் கொள்கிறாய்
இப்போது
இடையில் திரைமூடி அடுத்த காட்சி தொடங்கலாம்
நாடகத்தில்!

லோகிதாசா எழுந்திரு!
நீ போராளியல்ல குழந்தைப் பாத்திரம்*

5 thoughts on “நீ போராளியல்ல!

  1. ‘யுத்தம்’ கிராமம் கிராமாக வீதிகளுக்குள் வந்து ஒவ்வொரு வீடுகளின் கதவைத்தட்டி சாமானிய மக்களின் வாழ்வை சிதிலமாக்கிய போதும் புல்லரித்து நின்று புறநானூறு பாட நூறு கவிஞர்கள் இன்னும்……. தூரத்தில் மங்கலாய் தெரியும் ‘சமாதானம்’ இன்னும் கிட்டவர முயங்கும் இந்தக்கவிதை ஒரு புதிய திருப்பள்ளி எழுச்சி.

    ‘மரணத்துள் வாழ்வோம்’ என்ற உறுதிமொழி தந்த பல கவிஞர்களின் எழுத்துகள் மையீரம் காயுமுன் ‘மரண பயம்’ அவர்கள் வாழ்வாகிப்போனது.

    ‘வரலாறு வெற்றிடங்களை விடுவதில்லை’ எனும் முழங்கும் கந்தகக்கவிகளுக்கு, ‘வெற்றிடங்களில் வரலாறு எழுதப்படுவதில்லை’ என்பதை ‘சுகன்’ சுனைக்கச் சொல்லியுள்ளார்.

  2. அன்பு சுகன்,
    சிவனேசன் எம்.பி யின் பெறா மகனுக்குத் தெரிந்த ஒரே ஒரு தமிழ் எழுத்தாளன் சுகன் மட்டுமே. முன்பெல்லாம் கடைசி ரூபாய் முடியும் மட்டும் தண்ணி டித்துவிட்டு வீட்டுக்கு வந்து youtube இல் ‘வடிவேல்’ என்று தேடி 4 காட்சிகளைப் பார்த்துவிட்டு தூங்குவோம். அனால், அவன் இப்போது சுகனது ஆர்டிகள் ஒன்று வாசிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறான். அண்மைக்காலமாக சுகனது ஆர்டிகள் ஒன்றைப் படித்த பின்பே அவனால் தூங்கவே முடிகின்றது.

    பேரன்பின் சுகன்,
    கற்சுறா சொன்னது போல நீங்கள் எழுதி ஒழித்து வைத்திருக்கும் கவிதைகள் அனைத்தையும் வெளியிட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். தூக்கத்தின் ‘சுகன், சுகன்’ என நாம் பிதற்றுவதாக தம்பி சொல்கின்றான். தண்ணியில் வழமையாகப் பிதற்றுவதை விட இது வேறுபட்டது என்பது அவனது எண்ணம்.

  3. இதை நல்ல கவிதை என்றால் மரதன் ஓடிவரப்போறார்
    முதுகு சொறிய.
    என்ன செய்யிறது மரதன் நல்லாத்தான் இருக்கு

  4. தமிழ்ச்சிறுவர்களும் சிங்களச் சிறுவர்களும் அடிபட்டு விளையாடுகிறார்களாக்கும் விட்டுவிடுங்கள். சிங்களச் சிறுவர்களும் களத்தில் இறங்கி நிற்கிறார்கள் போலுள்ளதே அதைப்பற்றியும்; ஒரு கவிதை எழுதவேண்டியதுதானே நண்பரே. முடிந்ததால் அவர்களின்படங்களையும் போடுங்கள்.
    சிறுவர்களை இராணுவத்தில் இணைப்பது எத்தனை கொடுமையானது.
    அவர்கள் சிங்களவர்களானாலென்ன தமிழர்களானாலென்ன.

    இரண்டும் கண்டிக்கப்பட வேண்டியவையே.

  5. ஈழப்போராட்டம் அதிகமாய் உலகுக்கு கொடுத்தது கவிஞர்களை மட்டும்தான். இவ்வளவு அழிவகளுக்குப்பின்னரும் ஆளையாள் குற்றம் சாட்டி கவிதை மழை பொழிந்து கொண்ரெுந்தால் நாளை கவிஞர்களின் வாசலிலும் வெள்ளை வானில் ஏ.கே 47 காவும் சிறுவனும் நிற்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *