வல்லினம் பதில்கள் – 6

வல்லினம் பதில்கள்
  • எல்.டி.டி.ஈ தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நினைக்கிறீர்களா?
  • இம்மாதக் காலச்சுவடு இதழில் செங்கடல் படம் பற்றி (ஷுட்டிங்) கண்ணன் எழுதிய விமர்சனம் குறித்து உங்கள் கருத்து?
  • நண்பரே,
    //அவதூறுகளை நியாயப்படுத்த வினவு இணையத்தளத்திற்கு ‘வர்க்கப் போராட்ட‘ முழக்கம்// இவ்வாறு ஒரு கட்டுரையில் எழுதியுள்ள நீங்கள் வினவு தளத்தின் வேறு எந்தக் கட்டுரையையும் படிப்பதில்லையா? ஏதோ வினவு உங்களை விமர்சிக்க மட்டும் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று என்பதை போல பேசுவது நியாயமா? ஈழப் போராட்டம்இ பார்ப்பன எதிர்ப்புஇ உலகமய எதிர்ப்பு மற்றும் பல்வேறு சமூகப்பிரச்சினைகளில் போர்க்குணத்துடன் போராடும் ஒரு செயல்பாட்டை இப்படி சிறுமைப்படுத்துவதில் என்ன சுகம் காண்கிறீர்கள்? அந்தத் தோழர்கள் உங்களைப் போன்று எழுத்து ஒன்றே தவம் என்று கிடக்கும் ஒற்றை காரிய செயல்பாட்டாளர்கள் இல்லையே? தோழர் கணேசனை தெரியுமா? ஒரு கல்லூரி வாசலில் மாணவர்களை ஈழப்போராட்டத்துக்காக அறைகூவி அழைத்த போதுஇ போலீஸ் அவரை கடத்தி சென்றுஇ வயிற்றை லத்திக் கம்பால் குத்தி கூழாக்கியது. ஒரு சிறு குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் உங்களைப் போன்ற ஒற்றைக் காரிய செயல்பாட்டாளர்களால் எப்படி எளிதாக கடந்து போக முடிகிறது? கொஞ்சம் அசல் மார்க்சியர்களையும் திறந்த மனதோடு பாருங்கள்.
  • ஷோபா சக்தி, நான் பெரியாரைத் தொடர்ந்து செல்ல நீங்கள் ஒரு முக்கியக் காரணி. உங்கள் வாசிப்பில் நீங்கள் பெரியார் கருத்தோடு ஒருமுறைகூட முரண்பட்டதில்லையா? அதே போல அ.மார்க்ஸ் வெளியிடும் பல்வேறு கருத்துகளோடு நீங்கள் உடன்படுகிறீர்களா?
  • ஷோபா சக்தி, இது நான் உங்கள் மேல் வீசும் குற்றச்சாட்டு இல்லை. தோழமையுடன்தான் சொல்கிறேன் அல்லது கேட்கிறேன். பல சமயம் நீங்கள் இந்து மதத்தைச் சாடுகிறீர்கள். ஆனால், நீங்கள் ஒரு கிருஸ்துவர். உங்கள் குருவும் ஒரு கிருஸ்துவர். பெரியார் இந்து மதத்தில் இருந்துகொண்டுதான் அதில் உள்ள பிற்போக்கை எதிர்த்தார். முதலில் உங்கள் மதத்தில் உள்ள பிற்போக்கை எதிர்க்காமல் இந்துமதத்தில் உங்களுக்கு என்ன வேலை? அதே போல இஸ்லாம் மதத்தைத் தூக்கிப் பேசுகிறீர்கள். இஸ்லாம் மதத்தை ஒரு வன்முறை மதம் என்பது உங்களுக்குப் புரியவில்லையா? ஷோபா மற்றவர்களிடம் சொல்வதுபோல கிண்டல் செய்து என் கேள்வியில் தப்பிக்காதீர்கள். என் இரண்டு கேள்விக்கும் நேர்மையான பதில் தேவை.
  • தம்பி உங்களுக்குப் பிடித்தத் திரைப்படங்கள் எவை?
  • கனடாவுக்குச் சென்றபோது அ. முத்துலிங்கத்தைப் பார்த்ததாக அறிகிறேன். அந்த இனிய அனுபவம் பற்றி விளக்கமாகச் சொல்லுங்களேன். ஆசையாக இருக்கிறது.
  • கனடாவுக்குச் சென்றபோது அ. முத்துலிங்கத்தைப் பார்த்ததாக அறிகிறேன். அந்த இனிய அனுபவம் பற்றி விளக்கமாகச் சொல்லுங்களேன். ஆசையாக இருக்கிறது.
  • சோபா, வல்லினத்தில் உங்கள் பதில்களை இப்போதுதான் மொத்தமாகப் படித்து முடித்தேன். உங்களுக்கு வாழ்த்து கூறி தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம் எழுதலாம் என்றிருந்தபோது ஒரு பதில் மனதை பாதித்தது. அந்த பதிலின் வழி நீங்கள் இலங்கை இலக்கியத்தை மதிக்கவில்லை என்றுதான் தோன்றியது. இலங்கை இலக்கியம் உங்கள் போற்றுதலுக்குறியதாக இல்லையா? செங்கை ஆழியான், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட எண்ணற்ற இலங்கை நாவலாசிரியர்களை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
  • கவிதை எழுதிய அனுபவம் உண்டா சோபா உங்களுக்கு? அல்லது கவிதை வாசிப்பனுபவம். உங்களுக்குப் பிடித்த கவிஞர்?

ஷோபாசக்தி கேள்வி பதில்கள் அடுத்த இதழில் (டிசம்பர் 2011) நிறைவுபெறுகின்றது. எனவே, வாசகர்கள் இம்மாதம் 15-ம் தேதிக்குள் கேள்விகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

‘வல்லினம்’ இதழில் வெளியான நவம்பர் மாத கேள்வி – பதில்களை முழுமையாகப் படிக்க இங்கேஅழுத்தவும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *