சுகனின் கவிதைகள்

கட்டுரைகள்

வேண்டப்படாதவன்

 

 

எண்ணைக் கப்பல்
உடைந்து
தன் உடல் முழுதும்
மசகெண்ணையைப்
பூசியபடி கரையொதுங்கும்
ஒரு கடற்பறவையைக்
கழுவி
உயிர் பிழைக்க வைக்கிறார் ஒருவர்.
***

பல்கேரியாவின்
எல்லைவழியே
டேன்யூப் ஆற்றைக் கடந்தவர்கள்
கருங்கடலில் மூழ்கிக்
கலந்து போனார்கள்.
***

நாட்சம்பளத்திற்குக்
கோப்பை கழுவப்போகும்
விசாவற்ற பிரபாகரன்
இன்றும் இனியும் உனக்கு
வேலையில்லையெனச்
சொன்ன
முதலாளி மொழி கேட்டு
ரெஸ்ரோரண்ட் வாசலில்
திகைத்துப்போய் நிற்கிறான்.

அத்துடன் அவன்
காணாமற் போகிறான்.

இனம்

 

 

ஒருமுறை காட்டில் வேட்டைக்குப் போன
குடியானவர்களின் கண்ணில்
புலியின் இருப்பிடம் தென்பட்டதாம்.

புலியயும் இவர்களைக் கண்டுவிடவே
இருவரும் அவதானமாக ஒருவரை நெருங்கிவந்து
இனம் கண்டுகொண்டனராம்
நான் புலி, நீ மனிதன் என.

புலிகள் கொஞ்சம் தோட்டாக்களை எடுத்து
குடியானவர்களிடம் கொடுத்து
தங்களுக்கும் சேர்த்து
வேட்டையாடிவரச் சொன்னார்களாம்.

குடியானவர்களோ
“நீங்களும் வந்தால் எங்களுக்கும் பாதுகாப்பு,
நல்ல வேட்டையும் கிடைக்கும்” என
அப்பாவித்தனமாகச் சொல்ல அதற்குப்
புலிகள் சொன்ன பதிலைக் கேட்டு
குடியானவர்கள் விறைத்துப் போனார்களாம்.
“மனிசர் எண்டா நேரா நிப்பினம்
இலகுவாகச் சுடலாம்.
மிருகங்களெண்டா ஓடும்,
சுடுறது கஸ்டம்.” 

21 thoughts on “சுகனின் கவிதைகள்

  1. டி.சே.சோபாசக்தியின் இந்தப் பட்டியல் போடலில் எனக்கு உடன்பாடுகிடையாது.முன்பொருமுறை இலக்கியச் சந்திப்பில் வைத்துச் சோபா சக்தி “சுகனின் கதைகளை மட்டுமே கதைகள் என்பேன்”என்று கூறியவர்.எனவே அந்தப்பட்டியலில் இன்னும் மூவர் கூடியிருப்பது நல்லதே.அவரது அநுபவத்துக்குட்பட்ட வாழ்வில் ,அவர் கொண்டிருக்கும் கேள்வி-கல்விக்கேற்றபடி ஒரு படைப்பாளியை நிராகரிப்பதும்-ஏற்பதும் காலவர்த்தமானத்துக்குச் சரியாக இருக்கமுடியாது.மனித சமூகம் வர்க்கங்களாகவும்,சாதிகளாகவும்,பால் வேறுபாடாகவும் பிளவுபட்டுக்கிடக்கும்போது நண்பன் சோபா சக்தியின் இந்த நாலுபேர்கள் நிச்சியமாக அவரது கண்ணோட்டத்தை நிறைவு செய்பவர்களாக இருப்பவர்களே.அப்படிப்பார்த்தால்:

    சுகன்,
    கலாமோகன்,
    சேனன்,
    ஸ்ரீதர்,

    போன்றோர் ஓரளவு அவரைத் திருப்திப்படுத்திட முடியும்!

    என்னைப் பொறுத்தவரை இந்தப் பட்டியலிடும் நிலையில் நானில்லை.

    படைப்பென்பது வளர்ச்சியில் இருப்பது.

    அதை ஒருவர் திருப்தியாகவும்,செம்மையாகவும் தனது வாழ்வு சார்ந்து வெளிப்படுத்துவதற்கு எத்தனையோ காலமெடுக்கும்.ஒருவர் படைப்பை எழுதும்போது சமூகத்துக்கென எழுதத் தொடங்க முடியுமா?

    ஏதோ தான் கிறுக்குவதை நாலுபேர்கள் படித்துச் சொல்லும் கருத்துக்களைத் தனது கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டு அடுத்த கதைக்குக் கருத்தேடி அலைவது இயல்பாக இருப்பது.

    இதை இன்னொரு வகையில் சொன்னால்:

    “குடையாத ஓடமாய் தண்டுகள் வலித்தது எறும்பு.பாதி உடம்பு அமிழ்ந்து மீதி விளிம்பால் வெளியே தெரிய,ஒரு திசையில் என்று இல்லாமல்,ஒரு பாதி கோளநீர்த்துளியில் தன் வயிற்றை மையமாக்கிச் சுழன்றது.அதன் சுழற்சிக்கு,அதற்கு குறித்த திசையில் வெளிப்படுதற்குத் தேவையான ஒருங்கிய சிந்தனை இல்லாதது காரணமா,இல்லை,தன் வெப்ப நிலையை இழந்து கொண்டிருக்கும் தேனீர்க் கோப்பையிலிருந்து சூடாகிக் கொட்டிய நீரின் மேற்பரப்பிழவிசையா காரணமென்று தேவையில்லாமல் எண்ணிக் கொண்டிருக்க மூளைக்கு ஓய்வாக இருந்தது.உற்சாகமாயும் மகிழ்ச்சியாகவும் இருந்ததா இல்லையா என்று எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை.ஆனால்,வழக்கத்தில் யாரும் திட்டவட்டமாய் எனது முடிவு இதுவா அல்லது அதுவாக(இது கீர்கே கோர்ட்டுக்கு ஏற்பட்ட காய்சல்போல இரமணியும்…)இருப்பதற்கு என்னென்ன ஆதாரக்க காரணங்கள் என்று கேட்காத விடயங்களில் எனக்கு ஒரு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் பிறப்பது உண்டென்று அறிவேன்”-சித்தார்த்த’சே’குவாரா.

  2. சொல்ல மறந்தது

    இந்த கருத்தைச் சொன்னவர்
    சிறிரங்கன்

    சொல்ல வந்தது
    “சுகனின் கதைகளை மட்டுமே கதைகள் என்பேன்”

  3. காலம் இப்ப மாறிப்போச்சு
    சாத்தான் வேதம்
    ஓதும் காலம்…..
    மனித இரத்தம் குடித்தவவன்
    மனித உரிமை பேசுகிறான்

  4. இரண்டு வயதில் பிரான்சுக்கு வந்த என்னுடைய மகனுக்கு இப்பொழுது பதினைந்து வயது. உயர்கல்விக்கான பாடசாலையில் படித்துக்கொண்டிருக்கிறான்.அந்தப் பாடசாலையை என்று அழைப்பார்கள். எமது கிராமத்தில் பத்துப் பதினைந்த தமிழ்க் குடும்பங்கள் உள்ளன. ஆனால் ஒன்பதாம் வகுப்புவரை அவனுடன் தமிழ்ப் பிள்ளைகள் எவரும்படித்ததில்லை.தற்பொழுதுதான் தமிழ்ப் பிள்ளைகள் அவனுடன் படிக்கிறார்கள். முதல் நாள் வந்து சொன்னான் என்ரை வகுப்பில என்னோடு சேர்த்து மூன்று தமிழ் ஆக்கள் படிக்கிறம். அவையளுக்கும் தமிழ் நன்றாகக் கதைக்கத் தெரியும் என்று. எங்களுக்கும் சந்தோசம்.
    ஒவ்வொரு நாளும் பாடசாலையில் நிகழ்ந்த சம்பவங்களை-எனக்குச் சொல்லக் கூடிய விடயங்களை மாத்திரம் என்னுடன் பகிர்ந்து கொள்வான். ஒரு நாள் ஒரு சொல்லைச் சொல்லி என்ன கருத்து என்று கேட்டான். முதலில் அவன் கேட்ட சொல் எனக்கு விளங்கவில்லை. என்னுடைய மகன் சில தமிழ் எழுத்துக்களை பிரெஞச் உச்சரிப்பில் தான் உச்சரிப்பான். திருப்பிச் சொன்னபோதுதான்
    எனக்குப் புரிந்தது. ஓகோ! இதுவா விடயம். பிரெஞ்சு மொழியில் இருப்பது போல தமிழிலும் கெட்ட வார்த்தைகள் இருக்கின்றன. அதுபோவத்தான் இந்தச் சொல்லும் என்று அவனுக்குப் புரியவைத்தேன். பதினைந்து வயதில் ஒரு புதுச் சொல்லை அறிந்திருக்கிறான் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.
    இன்னோரு நாள் அம்மா… அம்மா… என்று கூப்பிட்டுக் கொண்டு சமையலறைக்குள் வந்தான். வந்ததும் வராததுமாக கேட்டான் நீங்கள் என்ன சாதி என்று. எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. இதென்னடா புதுப் பிரச்சனை என்று நினைத்துக் கொண்டு ஏன் என்ன விடயம் என்று கேட்டேன். இண்டைக்கு வேற வகுப்புப் படிக்கிற தமிழ்ப் பொடியன் என்னட்ட நீ என்ன சாதி என்டு கேட்டவன். நான் எனக்குத் தெரியாது என்டு சொன்னனான். நீ போய் உங்கட அம்மாட்ட கேள் அவா சொல்லுவா என்டு சொன்னவன் அதுதான் கேட்டனான் என்று அப்பாவித் தனமாகச் சொன்னான்.
    ‘நச்சுக்கனி கொடுக்கும் மரத்தினை வளர்ப்பதோடல்லாமல் அதன் விதைகளையும் தூவுகின்றார் பிஞ்சு மனங்களில்..’ என்னும் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வந்தது.

    குயிலி – பிரான்ஸ்

  5. அதைவிட மனிதர்களை கொல்வதற்கு சுலபமான முக்கிய காரணம் ஒன்று இருப்பது அந்த புலிக்கு தெரியாமல் போயிட்டுது. மிருகத்தை கொல்ல முயற்சிக்கும்போது அதன் இனத்தை சேர்ந்த வேறொரு மிருகம் சும்மா பார்த்துக் கொண்டிராது. தன் இனத்தை சேர்ந்த ஒன்று கொல்லப்படுவதை தடுக்க கொலையாளிக்கு எதிராக தனது அனைத்து முயற்சியையும் அது இயல்பாகவே எடுக்கும். ஆனால் மனித இனம் அப்பிடியில்லை. தான் தப்பித்துக் கொள்வதற்காக கண்டும்காணாததுபோல் அல்லது கொலைக்கு உடந்தையாய் இருந்து கொலையாளியை எப்படி திருப்திப்படுத்தலாம் என்றே வழிதேடும். சில மனித பிறவிகள் கொஞ்சம் வித்தியாசம். கொலையாளி தன்னை கிட்டவும் நெருங்க முடியாது என்று 100 வீதம் உறுத்திப்படுத்தினால் எங்கயாவது ஒரு தொலைதூர நாடொன்றில் இருந்து ஒரு சின்ன சலசலப்பை காட்டும். ஆகவே மனிதர்களை கொல்வது மிகமிக எளிது. ஒரு சின்ன வேண்டுகோள்: இதை புலிகளுக்கு தெரியப்படுத்தி விடாதீர்கள். பாவம் மனுசன்கள்.

  6. இதுக்கு பெயர் ‘கவிதை’????
    எங்கே போய் தலையை முட்டுறது!!!!

  7. ராம் அவர்களே!

    நன்றாக…
    நன்றாக குனியுங்கள்..
    குனிந்து
    உங்கள் ஆண்குறியில்
    முட்டுங்கள்
    முடியாது விட்டால் பரவாயில்லை
    திரும்ப திருமப முயற்சியுங்கள்..

  8. நன்றி காலன் அவர்களே!
    உங்கள் ஐடியாவை முயற்சித்து தோற்றுவிட்டேன்.
    ஆனாலும் பல உண்மைகள் புரிந்தன!
    ஒன்று வசனத்தை முறித்து பல வரிகளில் போட்டால் கவிதை,
    அதை வாசித்து விளங்க்க ஆண்குறியில் முட்ட வேண்டும் என எனது ஈபிஆர் எல எப் தோழர் ஏன் சொல்லவில்லை என்பது இரண்டாவது. இவாறு பலது…
    (மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்…நீ சொன்னால் காவியம்…)

  9. வீதி வந்த
    சின்னக் கரிக்குருவியொன்று
    கூடு கட்டி குஞ்கள் பொரிக்கக் காத்திருந்தது
    நாளை வெடிக்கத் தயாராகும்
    பீரங்கிக்குழாய் வாசலில். . !

    எமக்கெல்லாம் விடியலும் விடுதலையும்
    வந்துவிடும் என்று காத்திருக்கும்
    இலங்கை தமிழ்பேசும் மக்களைப் போன்று. . !

    ரூபன்
    மேல வரிபிரித்துப்போட்டிருக்கிறார் நண்பரொருவா;. கவிதையா இல்லயைh என்பதை பார்த்துச்சொல்லும்.

  10. குயிலி,பாலன்
    நமது எதிர்காலம் சுபீட்சமுறட்டும்!
    குயிலியின் குடும்பமும் மகனும் எதிர்கொள்வதுபோற்தான் இங்கு ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட குடும்பமும் எதிர்கொள்கிறது.
    இதே மாதிரியே தோழர் புஸ்பராஜா அவர்களின் மகனும் தன்னிடம் கேட்டதாகவும் தான் அதை விளக்கமாகவே அவனுக்கு விளங்கப்படுத்தியதாகவும் பின்பு அவன் கஸ்ரப்படக்கூடாதெனவும்
    தோழர். புஸ்பராஜா என்னிடம் கூறினார்.
    நீங்கள் உங்கள் மகனிற்கு சாதியென்பது ஏதுமில்லை , மனிதர்களில் உயர்ந்தவர்,தாழ்ந்தவர் என்று இல்லை,
    மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் ,
    குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம், என்று முதலில் கூறுங்கள்.
    பின்பு வெள்ளை கறுப்பு நிறவெறியுடன் ஒப்பிட்டு கூறலாம்.
    வெள்ளாளர் அல்லாத அனைவரும் புகலிடத்தில் சாதீயத்தின் அவமானத்தை எதிர்கொள்கிறார்கள்.
    கொண்டாட்டங்களில் அமிக்கும் பமிக்கும் உள்ள வேறுபாட்டை எவ்வளவு முயன்றாலும் மறைக்க முடிவதில்லை.
    வெள்ளாளர்கள் குடும்பத்தில் “சாதி என்றால் என்னம்மா? ”
    என்ற கேள்விக்கு மிக உற்சாகத்துடன் பதில் கூறுவார்கள் .
    ஏனைய சாதிகளுடன் ஒப்பிட்டு அயலில் உள்ளவர்களை உதாரணப்படுத்தி அவர்களின் சாதி , ஊரில் அவர்களின் பின்னனி
    இப்படியாக குலப்பெருமை பேசுதல் நிகழும்.
    அரசியல் அதிகாரத்தைத் தாழ்த்தப்பட்டவர்கள் கைப்பற்றாதவரை,
    வெள்ளாளர்களை அனைத்துத் தளங்களிலும் இருந்து அரசியல் பண்பாடு இலக்கியம் இவற்றீலிருந்து அகற்றாதவரை இதற்கு விடிவில்லை.
    இன்னொரு சுலபமான வழி தலித்துகளுக்கு இருக்கிறது.
    ஆனால் யாரும் பேசுவதில்லை .
    சிங்கள பெளத்தராகிவிடுவதே அது.

  11. காலன்,

    பின்னூட்டம் இட்டது முதல் எழுதிய ‘கவிதை’க்கு அன்றி உலகில் உள்ள கவிதைகளுக்கல்ல. அல்லது வரிபிரித்துப்போடும் உத்தி சரியாக வருமா என்ப்தல்ல!!!
    எனினும் பின்னரான கவிதையில் ‘பீரங்கிக்குழல் வாசலில்’ , ‘தமிழ் பேசும் மக்களைப்போன்று’ என்று கடசி வரியில் போட்டதால் சுவாரசியமாக இருப்பது போல் அதை முன்னர் போட்டால் சரி வருமா என பார்க்கவும்.
    இப்பதிவில் வரும் முதல் ‘கவிதை’யை பாருங்கள் இதை உண்மையாகவே ஒருவர் எண்ணைக் கறை கழுவும் படத்துக்குகீழே போடப்படும் வசனம் போல தான் உள்ளது. மட்டுமல்ல அவாறான வசனங்களை பலமுறை எண்ணெய்கப்பல் உடைகிறபோது பார்த்திருக்கிறேன்!!!!
    இதையே எண்ணெய் வியாபாரிகள், ஜோர்ஜ் புஷ், ரோனி பிளேயர், மற்றும் நேட்டோ நாடுகள், ரஷ்யா போன்ற நாடுகளையும் எண்ணெய்க்கறை துடைக்கும் ஐரோப்பியனையும் வைத்து மத்திய கிழக்கு ஏழை பார்வையில் ‘வரிபிரித்து’ கடசி வரியில் ஆச்சர்ய வேற்றுமையை வெளிக்காட்டி போட்டுப்பாருங்கள்!!!!!
    அதை விடுத்து என்னை கவிதைப்போட்டிக்க்க இழுக்கவேண்டாம்.
    தேவை எனில் ‘பிரபாகரன்’ ‘புலி’ என உள்க்குத்து வைத்து ‘வயித்தெரிச்சலை’யும் காட்டலாம், தேனீ.கொம் போல!!!!

  12. சுகன் நீங்க இன்னும் கேள்விப்படேலையே? கொஞ்ச நாளைக்கு முதல்> தமிழர் ஒருவர் பெளத்த துறவியாக மாறியவர்>திருகோணமலை மாவட்டத்தில் இனந்தெரியாதோரால் சுடப்பட்டு கொல்லப்பட்டுவிட்டார்.

  13. பிரெஞசு கிரிஸ்தவராக மாறினால் செகொலென் ரொயாலுக்கா அல்லது சாகோசிக்கா வாக்களிப்பது என்ற விவாதத்திலிருந்து தப்பும் சுலபமான வழி வெளிநாட்டு வாசிகளுக்கும் அகதி வாழ்வுவாழுவோருக்கும் இருக்கிறது என சொல்லாமல் விட்டீர்களே. அது வரை தப்பித்தார்கள்!!!!!

  14. தக்சன்,

    அதுமட்டுமல்ல அந்த பெளத்த துறவி ‘பாசிசப்புலி’ நடத்திய பொங்குதமிழ் கூட்டத்தில் கலந்துகொண்டது மட்டுமல்ல புலித்தலைவனும் சுகனின் கவிதை நாயகனுமான விசாவற்ற கோப்பைகழுவப்போகும் ‘பிரபாகரன்’ பெயர் கொண்டவனின் பெரிய படத்துக்கு முன்னால் ‘விசிறி’யுடன் இருந்து போஸும் கொடுத்தவர்…..

  15. அரசியல் அதிகாரத்தைத் தாழ்த்தப்பட்டவர்கள் கைப்பற்றாதவரைஇ
    வெள்ளாளர்களை அனைத்துத் தளங்களிலும் இருந்து அரசியல் பண்பாடு இலக்கியம் இவற்றீலிருந்து அகற்றாதவரை இதற்கு விடிவில்லை.
    கைப்பற்றுதல் அகற்றுதல் புலிகள் இராணுவ முகாம்களை கைப்பற்றி புலிக்கொடி பறக்கவிட்டு மார்தட்டும் நல்ல குணாம்சம் சுகன்.ஆக கைப்பற்றி அகற்றி மேலை கீழை போய் கீழை மேலை வரப்போகுது.கீழை வரும் மேலான் மேலைவரும் கீழாலை அடக்கப்படபோகுது. நல்ல சமத்துவமையா.
    சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் கோவணம் இல்லாட்டாலும் செகோலன் றோயலிட்டை போய் கேளுங்கோ சுகன் சாpயான விளக்கம் தருவர்.
    கடைசியாய் சொன்னியளே புத்த மதத்துக்கு மாறிறது அதுகதை.
    நன்றி வணக்கம்

  16. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கப்பால் படைப்புக்களையும் ,படைப்பாளிகளையும் நோக்குவதே நியாயமானது.
    சுகனில் பல கிறுக்குத்தனங்களும்; ஏன் பம்மாத்துத்தனங்களும் கூட இருக்கலாம்.
    ஆனூல் சுகனினுடையவை கவிதைகள் தான் என்பதில் என்னிடம் மறுகருத்துக்கிடையாது. 19பிரதிகள் மட்டும் அச்சிட்டு வெளâடப்பட்ட சுகனின் நுகத்தடிநாட்கள் கவிதைத்தொகுதியை முடிந்தால் எடுத்துப்பாருங்கள்..
    காலம் கடந்தும் புலம்பெயா; தமிழ் இலக்கிய உலகில் பேசப்படப்போகிறவா;கள் சுகன்> சோபாசக்தி போன்றவா;கள் மட்டுமே.

  17. இப்பதிவிலுள்ள சுகனின் ‘கவிதை’கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குட்பட்டு எழுதப்பட்டதனால் தான் அவை ‘கவிதை’கள் என் வலிந்து நிறுவ வேண்டி உள்ளது!
    கிறுக்குத்தனங்களும் பம்மாத்துகளும் உள்ளவர்கள் பலர் வரலாற்றில் பேசப்படுவது ஒன்றும் புதுமை இல்லையே..
    அதுமட்டுமல்ல இப் பம்மாத்துக்காரர்களும் கிறுக்குத்தனக்காரரும் பேசப்படுவது (போற்றிப்பேசப்படுவது) முதலாளித்துவ உலகுக்கு உரியதென எள்ளி நகையாடுவோர் (உ.ம்: சுப்பிரமணியசுவாமி யின் பம்மாத்துகளையும் கிறுக்குத்தனங்களையும் ஏதோ பெரிய சாதனை எனவும் மண்டைக்குள் அதிகம் உள்ளவன் அவன் எனவும் போற்றுவது இந்திய மேல்தட்டு வர்க்கம்) சுகனை விட்டுவைப்பார்கள் என நினைக்கவில்லை. அவ்வாறு நடப்பது மிக முரண்நகையாக இருக்கக்கூடும்!!!!

  18. சுகனின் கவிதையிலுள்ள உச்சமே பிரபாகரன் என்னும் பெயர்ப்பிரயோகம்தான்
    த்ன்னுடையகோபங்களை ஆத்திரங்களை என்னமாய் வெளிப்படுத்துகிறார் சுகன்
    பிரபாகன் ஒரு தனிமனிதனல்ல
    பிரபாகரன் ஒரு குறியீடு

Comments are closed.