நீ போராளியல்ல!

-சுகன் உன் இன்னுயிரை ஈந்தது போதும் லோகிதாசா எழுந்திரு! செய்திகளைச் செவிமடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி எனக்கூறி விடைபெறுகிறார் அறிவிப்பாளர் லோகிதாசா எழுந்திரு! நாடகம் முடிந்தபின் உன்னை வழமைபோல் கூட்டிப்போக அப்பா வந்திருக்கிறார் லோகிதாசா எழுந்திரு! கண்டியரசனில் உன் மாமா உன்னை உரலில் போட்டு இடிக்க அம்மா பார்த்திருந்து அழுகிறாள் அரிச்சந்திர நாடகத்திலோ நீ பாம்புதீண்டி இறக்கிறாய் எழுந்திருக்கமாட்டாமல் நீள்துயில் கொள்கிறாய் இப்போது இடையில் திரைமூடி அடுத்த காட்சி தொடங்கலாம் நாடகத்தில்! லோகிதாசா எழுந்திரு! நீ போராளியல்ல […]

Continue Reading

ஈழத்தின் அவலமும் தமிழகத்தின் குரல்களும்

– ஷோபாசக்தி (ஈழப் பிரச்சினையின் இன்றைய நிலை குறித்து, இம்மாத இறுதியில் தமிழகத்தில் வெளிவரவிருக்கும் தொகுப்பு நூலுக்காக எழுதப்பட்ட கட்டுரை.) சிறிலங்காப் பேரினவாத அரசால் இன்று தமிழ்மக்கள் மீது உச்சக்கட்டத்தில் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இராணுவத் தாக்குதல்களிற்கு எதிராகவும், சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக இரத்தமும் கண்ணீரும் சிந்திக்கொண்டிருக்கும் தமிழ் மக்களிற்கு பரிவும், ஆதரவும் காட்டும் முகமாகவும் கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எழுச்சிகளையும் நிகழ்வுகளையும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். மறுபுறத்தில் மகிந்த ராஜபக்ச அரசின் அப்பட்டமான இனவாத அணுகுமுறையையும், மனிதவுரிமை […]

Continue Reading