வெள்ளாளர்க்கு நாத்திகமும் தலித்துகளிற்கு ?

-சுகன் கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது அவ்வையார் வாக்கு. அது அனேகமாக வெள்ளாளர்களுக்குத்தான் சொல்லப்பட்டிருக்க வேண்டும். யாழ்ப்பாண சமூக அமைப்பில் மட்டுமல்ல,தமிழ்ச்சமூக அமைப்பிலும் அதிகார அமைப்பிலும் கோவில்களின் இடம் திட்டவட்டமாகவே அசைக்கமுடியாதவாறு வெள்ளாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது எனச்சொன்னால் அதை இறந்த காலமாகக் கருதி உலாந்தாக்காறர்களின் தோம்புப் பதிவுகளைத்தேடி நாம் ஆய்விற்குப் போகவேண்டியதில்லை.தீண்டத்தகாதவர்கள் உட்பிரவேசிக்கக்கூடாது என்பது ஆறுமுக நாவலர் வகுத்த சமய நெறி,சைவநெறி,வாழ்க்கை முறை. நிர்மலா அக்கா தேசிய உருவாக்கத்தில் கிரேக்க தொன்மக் கடவுளை உதாரணப்படுத்தி அக்கடவுளிற்கு […]

Continue Reading

நீ போராளியல்ல!

-சுகன் உன் இன்னுயிரை ஈந்தது போதும் லோகிதாசா எழுந்திரு! செய்திகளைச் செவிமடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி எனக்கூறி விடைபெறுகிறார் அறிவிப்பாளர் லோகிதாசா எழுந்திரு! நாடகம் முடிந்தபின் உன்னை வழமைபோல் கூட்டிப்போக அப்பா வந்திருக்கிறார் லோகிதாசா எழுந்திரு! கண்டியரசனில் உன் மாமா உன்னை உரலில் போட்டு இடிக்க அம்மா பார்த்திருந்து அழுகிறாள் அரிச்சந்திர நாடகத்திலோ நீ பாம்புதீண்டி இறக்கிறாய் எழுந்திருக்கமாட்டாமல் நீள்துயில் கொள்கிறாய் இப்போது இடையில் திரைமூடி அடுத்த காட்சி தொடங்கலாம் நாடகத்தில்! லோகிதாசா எழுந்திரு! நீ போராளியல்ல […]

Continue Reading

கவிதை: சுகன்

அதியற்புதமான ஓவியமொன்றை என்னை முன்னிலைப்படுத்தி எதிரி வரைகின்றான் வேகமாய் ஓடி இளைத்து மூச்சுவாங்கி நின்று நிதானித்து நடந்து களைத்து ஊர்ந்து முடியாது இயக்கமிழந்து வீழ்ந்து கிடக்கையில் எதிரி வந்து ஆதரவோடு பற்றுகிறான் எனது தஞ்சக்கேட்டை அவன் எப்போதுமே சுட்டிக்காட்டியவனல்ல என்னோடு அவன் எப்போதும் பேசியதுமில்லை நாம் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்ததுமில்லை நாம் ஒருவருக்கொருவர் கண்ணிற்குத் தெரியாத எதிரிகளுமல்லர் ஒரு துரும்பாகக்கூட மதிக்காத அவன் கைகளைத் தட்டிவிடுகிறேன் இம்மியளவும் பிசகாது இவ்விடத்திற்தான் நான் வீழ்ந்துகிடப்பேன் இவ்விடத்திற்குத்தான் நான் […]

Continue Reading

1958 டிசம்பர் 13

அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களினதும் தினம் :50 ஆண்டுகள் -சுகன் நிறவெறியிலும் கொடுமையான தேசவழமைச் சட்டங்கள் நிலவிய காலமது!பொதுவீதியால் போகக்கூடாது, படிக்கக்கூடாது, (மேற்)சட்டை போடக்கூடாது,கோவில்கள் உணவகங்கள் இவற்றிற்குப் போகக்கூடாது…. என கொடூரமான வன்கொடுமையும் சாதி அடக்குமுறையும் நிலவிய யாழ்ப்பாண சமூகத்திலே இக்கொடுமைக்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் தத்தமக்குரிய வழி வகைகளில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.அப்போதிருந்த வெகுசன அமைப்புகள் 1958 டிசம்பர் 13 அன்று இவ் அடக்குமுறைக்கெதிராக பரந்த அளவில் எதிர்ப்பும் சத்தியாக்கிரகப் போராட்டமும் நடாத்துவதென்று முடிவெடுத்து போராட்டக்களத்தில் இறங்கின. அனைத்து […]

Continue Reading

‘ஜேர்னலிஸ்டு’ லட்சுமிகாந்தன் கவனத்திற்கு!

-சுகன் முப்பதாண்டு காலத்திற்கு மேலாகவே ஈழ ,புகலிட அரசியல் -இலக்கிய ஊடகத்தளங்களில், கருத்து, பேச்சு, எழுத்து, சனநாயகத்திற்கான போராட்டம், மாற்றுக் கருத்து இவற்றின் தளத்தில் இயங்குபவர்களில் பலர் மிகவும் பொறுப்போடு கையெழுத்திட்டு அறிவுறுத்திய “அவதூறுகளிற்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல” என்ற கூட்டறிக்கையை எவ்வித கவனத்திற்கும் எடுக்காது அவர்களை எள்ளி நகையாடி ,நான் நினைத்ததைத்தான் செய்வேன் என திமிர்த்தனத்தோடு ‘தேசம் நெற்’றும் ஜெயபாலனும் நின்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும். முதலில் நீங்கள் ஒன்றை விளங்கிக்கொள்ளவேண்டும், முந்தநாள் […]

Continue Reading

எண்பத்தெட்டும் எழுபத்தாறும் எண்பதும்

-சுகன் கடந்த ஞாயிறு சபாலிங்கம் மண்டபத்தில் நிகழ்ந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் தோழர் எம்.சி. ரவூப் ஆற்றிய உரை புகலிட அரசியல் இலக்கிய நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானது.சொற்ப நேரத்திலேயே கனகச்சிதமாக தமிழ் அரசியலின் இரண்டக நிலையையையும் அது கட்டமைத்த வரலாற்றுப் புனைவையும் கட்டுடைத்த தோழர் ரவூப் இனவாரித் தரப்படுத்தலின் தோற்றுவாய் யாழ்ப்பாண வெள்ளாளப் பின்னணியே என காட்சிப்படுத்தினார். 88 புள்ளிகள் எடுத்த முஸ்லிம் மாணவனுக்கு யாழ்ப்பாண இந்துக்கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டு 76 புள்ளிகள் எடுத்த இந்து மாணவன் […]

Continue Reading