கடந்தவை

எனது நூல்களைப் பெற

B74, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை சென்னை - 600 005 பேச:00 91 94442 72500 மின்னஞ்சல்: karppu2004@rediffmail.com

மின்நூல்கள்

குறிப்பு

இத்தளத்தில் பதிவேறும் எனது பனுவல்களை அனுமதியின்றியே எவரும் பயன்படுத்தலாம், மறுபிரசுரம் செய்யலாம்.


TRAITOR

By ஷோபாசக்தி
By Shobasakthi Translated By Anushiya Ramaswamy 'As I live my days locked up in a wretched prison in this frozen country, I start to write the story of my beloved child, Nirami. The story begins with the birth of God.’

TRAITOR By SHOBASAKTHI

பா.செயப்பிரகாசத்துக்கு மறுப்பு

By ஷோபாசக்தி
1980களில் ஈழப்போராளிகள் தமிழகத்தை ‘பின்தளம்’ என்றே குறிப்பிடுவார்கள். ஈழப்போராட்டத்தில் தமிழக மக்களுடைய வகிபாகம் அளப்பெரிது. தமிழகத்துக் கட்சித் தலைவர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள்,

பா.செயப்பிரகாசத்துக்கு மறுப்பு

பரபாஸ்

நீங்கள் சந்தியாப்புலத்திற்குப் போயிருக்கமாட்டீர்கள்! இப்போது சந்தியாப்புலத்தில் கடற்படையினர் மட்டுமேயிருக்கிறார்கள். உருக்கெட்டுக் கிடக்கும் சந்தியோகுமையர் தேவாலய மண்டபத்தில்தான் படையினரின் தலைமையகம் இயங்குகின்றது.

பரபாஸ்

பரபாஸ்

By ஷோபாசக்தி
“பொந்தியோ பிலாத்து அவர்களை நோக்கி; எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாஸையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ என்று கேட்டான்”

Action
March 9th, 2010 | Tags: , , | : கட்டுரைகள் |

அன்புள்ள ஹெலன் டெமூத்

அன்னையே!
நான் உங்களைப் பற்றி எழுதிய ஒரு குறிப்பால் கடந்த சில நாட்களாக ‘தேசம்’ இணையத்தளத்திலும் நேற்றுமுதல் ‘தமிழ் அரங்கம்’ இணையத்தளத்திலும் நீங்கள் சந்திக்கும் அவமதிப்புகளையிட்டு மனம் பதைபதைத்து  இந்தக் கடித்தை உங்களுக்கு  எழுதுகிறேன்.
நான் பத்து வருடங்களிற்கு முன்புதான் முதன்முதலாக உங்களது பெயரை ஷீலா ரௌபாத்தம் எழுதிய ‘அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்’ என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து அறிந்துகொண்டேன். அந்த நூலின் 70வது பக்கத்தில் ஷீலா ரௌபாத்தம் இவ்வாறு உங்களைக் குறித்து எழுதியிருந்தார்:
“1845ல்  மார்க்ஸும் திருமதி மார்க்ஸும் புலம் [...]

December 24th, 2008 | Tags: , | : கட்டுரைகள் |

சீமானும் செல்வியும்

-ஷோபாசக்தி
இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, பெ. மணியரசன் உள்ளிட்டவர்கள் அண்மையில் தமிழக அரசால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவர்களின் கைதுகளைக் கண்டித்தும் தமிழக அரசின் கருத்துச் சுதந்திர மறுப்பு எதோச்சதிகாரத்தைக் கடுமையாகச் சாடியும் வலைப்பதிவுகளில் தோழர்கள் எழுதிக் குவித்துள்ள கட்டுரைகளைப் படிக்கையில், கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தி நீண்ட நாட்களாகவே பேசியும் எழுதியும் வருபவன் என்ற முறையில் உள்ளபடியே எனது கண்கள் பனிக்கின்றன. இந்த வலைப் பதிவாளர்களல்லவா எனது தோழர்கள் எனத் திரும்பத் திரும்ப எனது உதடுகள் முணுமுணுக்கின்றன.

“நீ [...]

November 27th, 2008 | Tags: , | : கட்டுரைகள் |

ஈழத்தின் அவலமும் தமிழகத்தின் குரல்களும்

- ஷோபாசக்தி
(ஈழப் பிரச்சினையின் இன்றைய நிலை குறித்து, இம்மாத இறுதியில் தமிழகத்தில் வெளிவரவிருக்கும் தொகுப்பு நூலுக்காக எழுதப்பட்ட கட்டுரை.)
சிறிலங்காப் பேரினவாத அரசால் இன்று தமிழ்மக்கள் மீது உச்சக்கட்டத்தில் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இராணுவத் தாக்குதல்களிற்கு எதிராகவும், சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக இரத்தமும் கண்ணீரும் சிந்திக்கொண்டிருக்கும் தமிழ் மக்களிற்கு பரிவும், ஆதரவும் காட்டும் முகமாகவும் கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எழுச்சிகளையும் நிகழ்வுகளையும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். மறுபுறத்தில் மகிந்த ராஜபக்ச அரசின் அப்பட்டமான இனவாத அணுகுமுறையையும், மனிதவுரிமை மீறல்களிற்குச் சர்வதேச [...]

June 22nd, 2008 | Tags: , , | : கதைகள் |

CROSS FIRE

சிறுகதை : ஷோபாசக்தி
*01.01.2008ல் பிராங்போர்ட் நகரில் ‘இனங்களின் அய்க்கியத்திற்கான இலங்கையர் ஒன்றியம்’ நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு ‘இலங்கையில் மனித உரிமை மீறல்களும் அதன் பரிமாணங்களும்’ என்ற தலைப்பில் இலங்கை ஊடகச் சுதந்திரப் பாதுகாப்பு அமைப்பின் செயலாளரும் பத்திரிகையாளருமான உபுல் கீர்த்தி (39) ஆற்றிய உரை:

தோழர்களே!
இன்றைக்கு ஒரு கொலையோடு புத்தாண்டு நமக்கு விடிந்திருக்கிறது. முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரும் தற்போதைய கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினருமான தியாகராசா மகேஸ்வரன் இன்று காலையில் கொல்லப்பட்டுள்ளார். அமரர் மகேஸ்வரனை ஊடகவியலாளன் என்ற முறையில் [...]

Enter your email address:

Delivered by FeedBurner