தோழமையுடன் இலண்டன் இலக்கியச் சந்திப்புக் குழுவினருக்கு..

அறிவித்தல்கள் கட்டுரைகள்

வணக்கம். 40வது இலக்கியச் சந்திப்புக் குறித்து நமக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை முடித்துக்கொண்டு நாமொரு பொது உடன்பாட்டை எட்டுவதற்காக இந்த வேண்டுகோளைப் பொதுவில் வைக்க விரும்புகின்றோம். 40வது இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்துவதற்கு நாம் விரும்புவதையும், இலங்கைக்கு சந்திப்புத் தொடர் எடுத்துச் செல்லப்பட வேண்டியதன் அரசியல் முக்கியத்துவத்தையும் நாங்கள் பாரிஸ் – 38வது இலக்கியச் சந்திப்பிலேயே வெளிப்படுத்தியிருந்தோம் என்பது அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட நீங்கள்அறிந்ததே. எனினும் அது குறித்த முடிவை கனடா – 39வது சந்திப்பில் எடுப்பதாகத் […]

காமினி பாஸ் தவறு செய்துவிட்டார்

கட்டுரைகள்

சரிநிகர் இதழில் என். சரவணன் எழுதிய பிரேமாவதி மன்னம்பேரி குறித்த கட்டுரையொன்றை பல வருடங்களுக்கு முன்பு நான் படித்திருக்கின்றேன். அந்தக் கட்டுரையின் விபரங்கள் இப்போது எனக்குத் தெளிவாக ஞாபகமில்லை என்றாலும் மன்னம்பேரி மரணிப்பதற்கு முன்பு சொன்ன அவருடைய இறுதிச் சொற்கள் மட்டும் என் நெஞ்சில் இப்போதும் அழியாமலுள்ளன. கதிர்காமத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண்ணான மன்னம்பேரி, ஜே.வி.பியினர் நடந்திய 1971 ஏப்ரல் கிளர்ச்சியில் பங்கெடுத்தவர். கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்டதன் பின்பாக அரசபடையினரால் கைது செய்யப்பட்டு, வதைக்கப்பட்டு, வல்லாங்கு […]

நடுவு நிலைமை என்பது எந்தப் பக்கமும் சாராது இருத்தலல்ல

நேர்காணல்கள்

இலங்கையிலிருந்து வெளியாகும் ‘ஞானம்’ சஞ்சிகையின் 150வது இதழில் (நவம்பர் 2012) வெளியாகிய எனது நேர்காணல். மின்னஞ்சல் வழியே நேர்காணலை நிகழ்த்தியவர்: லெ.முருகபூபதி. 1. தங்களது படைப்புகளின் ஊடாகவே தங்களது சிந்தனைகளை வாசகர்கள் தெரிந்துகொள்கின்றனர். புலம்பெயர்ந்து வாழும் பல படைப்பாளிகளுக்கு மத்தியில் தாங்கள் மிகவும் துணிச்சலுடன் கருத்தாடலில் ஈடுபடுபவர். தங்களுடன் கருத்தியல் ரீதியாக முரண்படுபவர்கள் கூட தங்களின் படைப்புகளை விரும்பிப் படிப்பதாக அறிகின்றோம். ஈழத்து வாசகர்களுக்கு தங்களது எழுத்துலகப்பிரவேசம் பற்றிய தகவல்களை சொல்லுங்கள்? மிகச் சிறிய வயதிலேயே எனக்குத் […]

சின்மயி விவகாரம்: வல்லாரைக் கீரை சாப்பிடுங்க

கட்டுரைகள்

பார்ப்பனிய நிறுவனங்களுடன் கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு இருக்கும் தொடர்புகளைச் சுட்டி நான் சொன்ன ஒரு கருத்தை மனுஷ்யபுத்திரன் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். கடந்த காலங்களிலும், இப்போதும் வெவ்வேறு பார்ப்பனிய நிறுவனங்களின் நிழலில் மனுஷ்யபுத்திரன் நின்றிருப்பதை நான் சுட்டிக்காட்டுவது அவர்மீது குற்றப்பட்டியலொன்றைத் தயாரிக்கும் எத்தனமல்ல. அது விவாதத்தைத் திசை திருப்பும் முயற்சியும் கிடையாது. ‘சின்மயி பிற்போக்கான கருத்தைச் சொன்னதற்கான எதிர்வினையே அவர்மீதான பாலியல் வசவுகள், எனவே சின்மயி முதலில் தமிழர்களிடமும் தலித்துகளிடமும் மன்னிப்புக் கேட்கட்டும் அப்போது நான் சின்மயிக்காகப் […]

காலக் கொடுமை

கட்டுரைகள்

ஜெயமோகனின் வலைத்தளத்தில் வெளியாகியிருக்கும் ‘கற்பழித்ததா இந்திய இராணுவம்’ என்ற கட்டுரையைப் படிக்கையில் மனம் பதறிப்போகிறது. இந்திய அமைதிப் படையில் பணியாற்றிய மூத்த இராணுவ அதிகாரிகள் “இலங்கையில் இந்திய அமைதிப் படையினர் பாலியல் வன்புணர்வுக் கொடுமைகளில் ஈடுபடவே இல்லை” என அந்தக் கட்டுரையில் சாதிக்கிறார்கள். அவர்களின் கருத்துகளை வழிமொழியும் ஜெயமோகன் ‘அமைதிப் படையினர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாமே புலிகளாலும் அவர்களது தமிழக ஆதரவாளர்களாலும் முன்னெடுக்கப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களே’ என்ற முடிவுக்கு வருகிறார். நமது கண்முன்னேயே, இந்திய அமைதிப் […]

காலச்சுவடு ஆசிரியரிடம் சில கேள்விகள்

கட்டுரைகள்

‘எதுவரை’ இணையத்தளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு ‘காலச்சுவடு’ ஆசிரியர் கண்ணன் பதிலளிப்பார் என அறிவித்தல் வெளியாகியுள்ளது. எனவே கீழ்க்கண்ட கேள்விகளை ‘எதுவரை’ இணையத்தளத்திற்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்துள்ளேன். பதிலளிக்கவிருக்கும் ‘காலச்சுவடு’ ஆசிரியருக்கும் பதில்களை வெளியிடவிருக்கும் ‘எதுவரை’ இணையத்தளத்திற்கும் முன்கூட்டியே நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 1. கடந்த மார்ச் மாதம் லண்டனில் நீங்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், உங்களது ‘சுவடி’ நிறுவனம் ‘பிராமின் டுடே’ பத்திரிகையை தயாரித்துக் கொடுப்பது குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டபோது ‘பிராமின் டுடே’ க்கும் உங்களது நிறுவனத்திற்கும் இடையே உள்ளது […]