TRAITOR

By ஷோபாசக்தி
By Shobasakthi Translated By Anushiya Ramaswamy 'As I live my days locked up in a wretched prison in this frozen country, I start to write the story of my beloved child, Nirami. The story begins with the birth of God.’

TRAITOR By SHOBASAKTHI

பா.செயப்பிரகாசத்துக்கு மறுப்பு

By ஷோபாசக்தி
1980களில் ஈழப்போராளிகள் தமிழகத்தை ‘பின்தளம்’ என்றே குறிப்பிடுவார்கள். ஈழப்போராட்டத்தில் தமிழக மக்களுடைய வகிபாகம் அளப்பெரிது. தமிழகத்துக் கட்சித் தலைவர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள்,

பா.செயப்பிரகாசத்துக்கு மறுப்பு

பரபாஸ்

நீங்கள் சந்தியாப்புலத்திற்குப் போயிருக்கமாட்டீர்கள்! இப்போது சந்தியாப்புலத்தில் கடற்படையினர் மட்டுமேயிருக்கிறார்கள். உருக்கெட்டுக் கிடக்கும் சந்தியோகுமையர் தேவாலய மண்டபத்தில்தான் படையினரின் தலைமையகம் இயங்குகின்றது.

பரபாஸ்

பரபாஸ்

நீங்கள் சந்தியாப்புலத்திற்குப் போயிருக்கமாட்டீர்கள்! இப்போது சந்தியாப்புலத்தில் கடற்படையினர் மட்டுமேயிருக்கிறார்கள். உருக்கெட்டுக் கிடக்கும் சந்தியோகுமையர் தேவாலய மண்டபத்தில்தான் படையினரின் தலைமையகம் இயங்குகின்றது.

பரபாஸ்

பரபாஸ்

By ஷோபாசக்தி
“பொந்தியோ பிலாத்து அவர்களை நோக்கி; எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாஸையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ என்று கேட்டான்”

Action
May 20th, 2017 | : கட்டுரைகள் | Comments

Culture Shock – ANITA PRATAP

Presents only a slice of the Lankan Tamil reality, but it is an authentic voice. Matter-of-fact, unsentimental, evocative but sparse. GORILLA BY SHOBASAKTHI (TR. BY SIVANARAYANAN) RANDOM HOUSE  It is a tribute to human ingenuity that even amidst continuous cruelty, torture and degradation, the inquiring, creative spirit cannot be extinguished. Shobasakthi, a former LTTE guerrilla […]

April 30th, 2017 | : கட்டுரைகள் | Comments (2)

கிளிட்டோரிஸ் : ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா வரை

– ஸர்மிளா ஸெய்யித் பிறப்புறுப்புச் சிதைக்கப்பட்டு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் 200 மில்லியன் சிறுமிகள் மற்றும் பெண்களில் ஒருத்தி, பண்பாட்டுப் பழக்கம்  இன்னும் புழக்கத்தில் இருக்கின்ற சமூகமொன்றினது உறுப்பினள் போன்ற இன்னும் என்னவாறான தகைமைகள் இதைப்பற்றிப் பேசுவதற்குத்தேவைப்படலாம்! பெண் பிறப்பு உறுப்பு சிதைப்பு (Female Genital Mutilation – FGM), பெண் விருத்தசேதனம் (Female Circumcision) ஆகிய சொல்லாடல்கள் சில ஆண்கள்,மதவாதிகள், சமூக கலாசாரக் காவலர்களுக்கு அலர்ஜியாக இருக்கலாம். இனஒடுக்குதல்களாலும், வறுமையினாலும் உழன்று கொண்டிருக்கும் ஆப்பிரிக்கமக்களுக்கு மட்டுமே […]

August 31st, 2016 | : கட்டுரைகள் | Comments (1)

பத்மநாபம் 15

‘ஐயர்’ என்பது சாதிப்பட்டமில்லை அதுவொரு பெயரே எனச் சொல்பவர்களுடன் வாதிடுவது வெட்கக்கேடானது. சூடு சுரணையே இல்லாத சாதிய மனங்களவை. எனவே ‘ஐயர்’ என்பது சாதிப்பட்டமே என ஒப்புக்கொண்டு, ஆனாலும் ‘சாதிப்பட்டத்தை வைத்துக்கொள்ளவும் ஒரு காரணம் இருக்கிறதுதானே’ எனக் காரணங்களைக் கண்டுபிடிப்பவர்களிற்காக ஒரு குறிப்பு: ஏன் இப்போது திடீரென பத்மநாப ‘ஐயர்’ பிரச்சினை கிளம்புகிறது? இதுவரை ஏன் யாரும் பேசவில்லை? எனக் கேட்கிறார்கள். உண்மையில் இது திடீர் எதிர்ப்பல்ல. இந்த எதிர்ப்புக்கு பதினைந்து வருடத் தொடர்ச்சியான வரலாறும் பதிவுமுள்ளன. […]

August 7th, 2016 | : கட்டுரைகள் | Comments (12)

அன்புள்ள ஜெயமோகன் : சில கேள்விகள்

அன்புள்ள ஜெயமோகன், ‘தடம்’ இதழ் நேர்காணலில் நீங்கள்,  ‘இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை’ என்று கூறியதன் பின்பாக,  அக்கருத்தை மேலும் நியாயப்படுத்துவதற்காக உங்களுடைய வலைப்பதிவில் நீங்கள் எழுதிய இலங்கை ‘இனப்படுகொலை’ பற்றி… என்ற கட்டுரை தொடர்பாகவே இந்த மின்னஞ்சலை உங்களிற்கு அனுப்புகின்றேன். ‘இலங்கையில் இனப் படுகொலை நிகழவில்லை’ என்று கூறியதற்காக உங்களை இந்திய அரசின் கைக்கூலி என்றோ தமிழின விரோதி என்றோ நான் ஒருபோதும் கூறப்போவதில்லை. அதேபோன்று ‘இலங்கையில் நிகழ்ந்தது இனப் படுகொலையே’ என்று ஆணித்தரமாகக் கூறுபவர்கள் எல்லோரையுமே ‘சுத்தமான […]

July 11th, 2016 | : கட்டுரைகள் | Comments (4)

விருது ஏற்புரை

வாசகத் தோழர்களிற்கும் என் உடன் எழுத்தாள நண்பர்களிற்கும் இந்த அவைக்கும் எனது பணிவான வணக்கங்கள். இந் நிகழ்வில் நேரில் கலந்துகொள்ள முடியாததையிட்டுச் சற்று வருத்தமே. டொரொன்ரோ இலக்கியத் தோழர்களோடு இந்த வெயில் காலத்தில் சற்று மதுவருந்தி, கதையும் பாட்டுமாக தருணங்களைக் கழிக்க நினைத்தது கைகூடவில்லை. என்னுடைய கவிதையொன்று 1985-ல், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘ஈழமுரசு’ பத்திரிகையில் வெளியாகியதிலிருந்து -அதாவது சரியாக முப்பது வருடங்களிற்கு முன்னரிருந்து – நான் எழுதிக்கொண்டிருந்தாலும் ஈழத்தவர்களின் அல்லது புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பொன்றிடமிருந்து நான் முதன் […]

March 14th, 2016 | : அறிவித்தல்கள், கட்டுரைகள் | Comments

நியோகா: ஏப்ரல் 2-ம் தேதி

 நியோகா என்பது பண்டைய இந்துச் சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஓர் உறவுமுறை. இந்து தர்மமான மனுஸ்மிருதியில் இம்முறை குறித்துச் சட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. குழந்தை பெற முடியாத கணவனைக் கொண்ட அல்லது கணவனை இழந்த பெண்ணொருத்தி வேறொரு ஆடவனோடு கூடிக் குழந்தையைப் பெற்றுக்கொள்ளலே இம்முறை. மகாபாரதத்திலே திருதிராட்டினன், பாண்டு, கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் எல்லோருமே இம்முறையிலேயே பிறக்கிறார்கள். இந்த நியோகா முறையின் முக்கிய நிபந்தனைகள் எதுவெனில் பெண் மூன்று தடவைகள் மட்டுமே அந்த ஆடவனோடு கூட முடியும். நான்காவது முறை உறவுகொள்வது […]

January 21st, 2016 | : கட்டுரைகள் | Comments (4)

வெளியே தமிழ்த்துவம் உள்ளே இந்துத்துவம்

2009 ஜனவரி ‘த சண்டே இந்தியன்’ இதழில் ‘தைப்பொங்கல் அனைத்துத் தமிழர்களின் விழா கிடையாது, அதுவொரு இந்து மதப் பண்டிகையே’ என நான் ஒரு கட்டுரை எழுதியபோது பெரியளவில் எதிர்வினைகள் ஏதும் எழவில்லை. இம்முறை பொங்கலையொட்டி அதே கருத்தை நான் சமூக வலைத்தளங்களில் சொன்னபோது கன்னா பின்னாவென்று எதிர்வினைகள் கிளம்பலாயின. வழமைபோலவே ‘இது தமிழர்களைக் கூறுபோடும் முயற்சி’ என்றும் பல எதிர்வினையாளர்கள் சொல்லத் தயங்கவில்லை. அண்மைக்காலங்களில் ஆங்காங்கே கிளம்பும் ‘முப்பாட்டன் முருகன்’ போன்ற தமிழ்த்துவ எழுச்சிகள் இந்த […]

January 22nd, 2015 | : கட்டுரைகள் | Comments (2)

அப்பையா

(பாரிஸில் , 04 சனவரி 2015-ல் இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி நடத்திய ‘எஸ்.பொ. நிழலில் சிந்திக்கும் தினத்தில்‘ நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம்.) இந்த நிகழ்வைச் சிறப்புற வடிவமைத்து நடத்திக்கொண்டிருக்கும் தோழர்களே, நினைவுரைகளையும் ஆய்வுரைகளையும் நிகழ்த்திய தோழர்களே, நண்பர்களே உங்கள் அனைவரையும் பணிவுடன் வணங்குகின்றேன். ஆறுமுகம் சண்முகம் பொன்னுத்துரை என்ற எஸ்.பொ. அவர்கள் ஈழ இலக்கியத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நவீன தமிழ் இலக்கியப் பரப்பிலும் மிக முதன்மையான எழுத்தாளுமை என்பதில் யாருக்கும் அய்யப்பாடு இருக்க […]

November 9th, 2014 | : கட்டுரைகள் | Comments (2)

பறவையின் நுட்பம்

( ‘எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்’ நேர்காணல் தொகுப்பு நூலின் முகச் சொற்கள்) எனது முதலாவது நேர்காணலை புத்தாயிரத்தின் முதல் வருடத்தில் ‘எக்ஸில்’ இதழுக்காக பாரிஸ் நகரத்தின் கஃபே ஒன்றிற்குள் வைத்து தோழர் அ. மார்க்ஸுடன் நிகழ்த்தினேன். அடுத்த நேர்காணல் எஸ்.பொவுடன். அதுவும் பாரிஸ் நகரத்தின் ஒரு கஃபேயில்தான் நிகழ்த்தப்பட்டது. இதுவரை தமிழின் முக்கியமான இருபது ஆளுமைகளை நேர்காணல் செய்திருக்கிறேன். தோழர். கே.ஏ. குணசேகரனை பிரான்ஸ் ‘ஏ.பி.ஸி. தமிழ் வானொலி’க்காக நேர்கண்டதைத் தவிர்த்து, மற்றைய நேர்காணல்கள் […]

November 4th, 2014 | : கட்டுரைகள் | Comments (2)

கேட்கப்படாத கேள்விகளும் சொல்லப்படாத பதில்களும் – நிலாந்தன்

( தமிழ்க்கவி, ஸர்மிளா ஸெய்யித், பழ.ரிச்சர்ட், கருணாகரன் நேர்காணல்கள் அடங்கிய ‘எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்’ தொகுப்பு நூலுக்கு நிலாந்தன் வழங்கியிருக்கும் முன்னீடு ) பி.பி.ஸி. தமிழோசையில் ஆனந்தி வேலை செய்த காலத்தில் கொழும்பிலுள்ள தமிழ் இயக்கங்களின் தலைவர்களைப் பேட்டி காண்பதுண்டு. இப்பேட்டிகளின்போது அவர் ஓர் அனைத்துலகப் பேரூடகத்தின் விதிகளுக்கு அமைவாகக் கேள்விகளை கேட்பவர் போல் தோன்றுவார். ஆனால் அவர் அக்கேள்விகளுக்குள் இனச்சாய்வுடைய நுட்பமான கொழுக்கிகளை மறைத்து வைத்திருப்பார். அக்கொழுக்கிகளின் மூலம் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கும் […]

Enter your email address:

Delivered by FeedBurner