இச்சா: ஈழத்தமிழரின் வலியும் வேதனையும் ததும்பிடும் துன்பியல் கதை

-ந. முருகேசபாண்டியன் ‘இலங்கைத் தீவே செத்துக் கடலில் வெள்ளைப் பிரேதமாக மிதந்து வருவதான ஒரு படிமம் இப்போது என் மனதில் தோன்றி என் இருதயத்தை முறித்துப் போட்டது.’- ‘இச்சா’ நாவலின் கதைசொல்லி. கொலைகளும், தற்கொலைகளும் நிரம்பிய சிறிய தீவான இலங்கையைச் சாபமும், இருளும் காலந்தோறும் துரத்துகின்றன. பௌத்தம் X சிறுபான்மையினரின் மதங்கள், தமிழ் X சிங்களம் என இரு அடிப்படை வேறுபாடுகளின் பின்புலத்தில் வன்மும், குரோதமும், வெறுப்பும் நாடெங்கும் பரவலானதற்குக் காரணம், வெறுமனே மதவெறி மட்டும்தானா? புத்தர் […]

Continue Reading

இது ஆவண தர்மமல்ல!

-மு.நித்தியானந்தன் சோமிதரனும் சயந்தனும் இணைந்து தயாரித்து வெளியிட்ட, 3.07 நிமிட காணொளி எழுப்பும் கேள்விகள் பல. இது எப்போது பதிவு செய்யப்பட்டது? இதில் திரு. செல்லன் கந்தையா அவர்களுடன் பேட்டி காண்பவர் யார்? இது எங்கே பதிவு செய்யப்பட்டது? ஒரு நம்பகமான ஒளிப்பட ஆவணம் தர வேண்டிய அடிப்படை விவரங்கள் இவை. சும்மா எடுத்தமேனிக்கு ஒரு காணொளியை வெளியில் உலவவிடுவீர்களா? சோமிதரனும் சயந்தனும் யாழ்ப்பாணத்தில் ஒரு ஒளிப்படக்காரரை அமர்த்தி, கேள்விகளை அவருக்கு அனுப்பி இந்தப் பேட்டியை எடுத்தார்களா? […]

Continue Reading

இச்சா – ஆலா பறவையின் குறிப்பு

– இரா.சிவ சித்து “உயிர் தப்பிப் பிழைத்திருக்கும் என்னைப் போன்றவர்கள் உண்மையின் சாட்சியங்கள் அல்ல, நாங்கள் ஊமைகளாகவே மீண்டோம். மண்ணில் ஆழப் புதைக்கப்பட்டவர்களே முழுமையான சாட்சியங்கள்” ~ நாவலில் இருந்து ஈழத்தில் இறுதிகட்டப் போர் நடந்து கொண்டிருக்கும்போது எனது வயது பதினேழு. முதிராத வயதில், இணையம் எனக்குக் கைவராத காலத்தில், தென்தமிழகத்தின் ஒரு மூலையில் பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருக்கும் என் வட்டத்திற்கு போர் பற்றிய சித்திரத்தை தந்துகொண்டிருந்தது என்னவோ தொலைக்காட்சிகளில் வந்த துணுக்குச் செய்திகள் மட்டும்தான். அதுவும் சோற்றுத்தட்டுடன் […]

Continue Reading

தடைசெய்யப்பட்ட அதி அற்புதப் பெண்

-Élie Castiel தமிழில்: சதா பிரணவன் இலங்கையில் பிறந்து கனடாவில் வாழும் லெனின் எம் சிவத்தின், முந்தைய இரண்டு தமிழ் -கனடிய திரைப் படங்கள் 1999(2009) மற்றும் A gun and a ring (2013) . இப்படங்கள் ஆங்கில subtitles-களுடன் உருவாக்கப்பட்டவை. கனடாவில் பல்வேறு சமூகங்களின் ஒன்றிணைவு உண்மையில் வரவேற்கத்தக்கது. முதல் இரண்டு படங்களும் ‘action’ வகை சார்ந்தவை.ஆனால் லெனின் எம் சிவத்தின் புதிய படமான ‘ROOBHA’ முற்றிலும் வேறுபட்ட கருப்பொருளைக் கொண்டுள்ளது . இத் […]

Continue Reading

இனவாதமற்ற ஓர் எதிர்காலத்தினை நோக்கி…

–மகேந்திரன் திருவரங்கன் கொழும்பு ரெலிகிராஃபில் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி வெளியாகிய Towards a Non-Racist Future என்ற கட்டுரையின் தமிழாக்கம். எட்டாங்கட்டை வாசியான எம் ஜாஃபர் நம்பிக்கையிழந்து போயிருந்தார். “பிரதான சந்தி தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் தமது கைகளைக் கட்டிய படி பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்” என அவர் முறைப்பட்டார். “கடைகள் எல்லாம் தீப்பற்றி எரிந்து கிட்டத்தட்ட 20 நிமிடங்களின் பின்னர் தாக்குதலினை மேற்கொண்டவர்களை நோக்கி சில முஸ்லிம் பையன்கள் கற்களை […]

Continue Reading

மரண தண்டனை ஒழிப்பு

ராஜன் குறையின் ‘சமயோசித’ அணுகல் முறையும் ஷோபா சக்தியின் ‘மூர்க்கமான’பேச்சுக்களும் அ.மார்க்ஸ் மரண தண்டனை ஒழிப்பு குறித்து ஷோபா சக்தி எழுதிய கட்டுரைகள் இரண்டையும் (‘விருமாண்டியிசம்’), ராஜன் குறை எழுதிய இரு கட்டுரைகளையும் அவரவர் முகநூல் பக்கங்களில் படித்தேன். ராஜனின் இரண்டாவது கட்டுரை ஷோபாவின் இரு கட்டுரைகளுக்கும் பதிலாக எழுதப்பட்டது. பின்னூட்டங்களில் நண்பர்கள் சொல்லியிருப்பதுபோல ராஜனுக்கே உரித்தான பதமையோடும், பண்போடும், ஆழத்தொடும், நிரம்ப சுய எள்ளலோடும்  எழுதப்பட்டுள்ளது அக்கட்டுரை. அந்தச் சுய எள்ளல்களில் ஒன்றில்தான் தன்னுடையதை “சமயோசித […]

Continue Reading

தமிழ் நவீனத்துவ இலக்கியம், “தேசிய நீரோட்டம்”, திராவிட இயக்கம்

ராஜன் குறை உயிர் எழுத்து ஆகஸ்ட்இதழில் வெளியான கண்ணனின் “உலக மொழிகளில் தமிழ்ப் படைப்புகள்” என்ற கட்டுரையை முன்னிட்டு சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். அவரது ஆதங்கங்களும், அக்கறைகளும் எனக்கு உடன்பாடானவையே. தமிழ் படைப்பிலக்கிய சாதனைகள் உலகில் அறியப்படவேண்டும் என்பதில் எனக்கும் ஆர்வமும், அதற்காக என்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உண்டு. மேலும் கண்ணன் படைப்பின் தரம், மொழிபெயர்ப்பின் தரம், பதிப்பின் தரம் என்ற அளவில் அல்லாமல் சமூக வரலாற்று பின்னணியில் ஏன் […]

Continue Reading