மூன்று குழந்தைகள்

பாக்கு நீரிணையைப் படகில் கடந்து சென்றபோது, இலங்கைக் கடற்படை சுட்டதில், திலகனின் இடது முழங்கையைப் பொத்துக்கொண்டு துப்பாக்கிச் சன்னம் வெளியேறியிருந்தது. இப்போது திலகன் அதே நீரிணையை விமானத்தில் கடந்து இலங்கைக்குள் இறங்கிக்கொண்டிருக்கிறான். இருபத்து மூன்று வயதில் சென்றவன், அய்ம்பத்தெட்டு வயதில் திரும்புகிறான். அவன் அய்ரோப்பாவில் வாழும் இந்த முப்பத்தைந்து வருட காலத்திலும் இலங்கைக்குத் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு ஒருபோதுமே தோன்றியதில்லை. இலங்கையில் நெருங்கிய சொந்த பந்தங்கள் என யாருமே அவனுக்குக் கிடையாது. எல்லோருமே அகதிகளாக […]

Continue Reading

பொன்ஜூர் ரூஸோ!

இருநூற்று முப்பது வருடங்கள் பழைமையான சாம்பல்நிறச் சமாதிமீது நீட்டி நிமிர்ந்து படுத்துக்கிடந்த மனிதரைப் பார்த்தபோது, அபினா அச்சமடைந்தார் என்பதைக் காட்டிலும் அவர் வியப்பில் உறைந்துபோனார் என்பதே உண்மை. அவரது வயோதிப மூளை தடுமாறியது. சமாதியின்மீது படுத்துக்கிடப்பது தத்துவவாதி ஜோன் ஜக் ரூஸோ என்றுதான் அபினா நினைத்தார். ‘கருணையைக் காட்டிலும் உயரிய ஞானம் எதுவுமில்லை’ எனச் சொன்ன ரூஸோ இறந்தபோது, அவரது உடல் பெப்லியர் தீவில் புதைக்கப்பட்டது. பதினாறு வருடங்கள் கழித்து, பிரெஞ்சு அரசாங்கத்தால் ரூஸோவின் உடல் தோண்டி […]

Continue Reading

பொப்பி என்பது புனைபெயர்

பூமியில் ஆதி காலம் முதலே இந்தக் கதை இருக்கிறது. எனினும், பிரெஞ்சு இளைஞனான பேர்னா பப்டிஸ்ட் ஆந்ரே இந்தக் கதைக்குள் பத்து வருடங்களுக்கு முன்புதான் வந்தான். அப்போது, அவனுக்கு இருபத்தாறு வயது. ‘கலே’ நகரத்துக் கடற்கரை வீதியிலுள்ள சின்னஞ் சிறிய ‘வெஸ்டர்ன் யூனியன்’ கிளையின் கூண்டுக்குள் தனியாளாக உட்கார்ந்தவாறே அலுப்பூட்டும் பணியைச் செய்துகொண்டும், நாள் முழுவதும் தனிமையில் உழன்றுகொண்டுமிருந்தான். இந்தக் கதையில் இன்னொரு முதன்மைப் பாத்திரமாக இருக்கும் இளம் பெண்ணுடைய பெயர் பொப்பி. அந்தப் பெண்ணின் உண்மையான […]

Continue Reading

சுவர் முகம்

பாரிஸ் நகரக் காவல்துறைத் தலைமையகத்தில் அந்தச் சுவர் இருக்கிறது. சுவரோடு சேர்த்து அய்ந்து மனிதர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். ஒவ்வொருவருடைய மேலங்கியிலும் வட்டமாக இலக்கத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. மூன்றாவது இலக்கத்தின் பெயரை ‘டேவிட்’ என வைத்துக்கொள்வோம். வயது 46. கருப்பு நிறம். உயரம் 5 அடி 8 அங்குலம். தலைமுடி படிய வாரப்பட்டுள்ளது. நரையேறிய தாடி. ஒல்லியான உடல்வாகு. இலங்கையைச் சேர்ந்தவர். 2009-இல் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். டேவிட் இதற்கு முன்னரும் சிலதடவை இவ்வாறு சுவரோடு நிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் […]

Continue Reading

எலி வேட்டை

தேவன் கடையைச் சுத்தம் செய்து மஞ்சள் தண்ணீர் தெளித்தான். பின்பு, முதலாளியின் அழுக்குத் துணிகளைத் துவைத்துப் போட்டான். சாயங்காலமும் விடியற்காலமும் ஆகி முதலாம் நாள் ஆயிற்று. பின்பு, தேவன் முதலாளிக்கு ஒடியல் கூழ் குடிக்க ஆர்வம் உண்டான காரணத்தால் சந்தைக்குச் சென்று கலவாய் மீன் வாங்கிக் கூழ் காய்ச்சினான். சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாளாயிற்று. பின்பு, தேவன் மலையாகக் கிடந்த புகையிலைக் குவியலுக்குள் புகுந்து அடசல், சச்சு, தரவளி பிரித்தான். சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாளாயிற்று. பின்பு,தேவன் […]

Continue Reading

தேசத்துரோகி

அரசாங்கத்தாலும், அவனது பெறாமகனாலும், காசு சேர்க்க அறைக்கு வந்துபோகும் இயக்கக்காரராலும் பல தருணங்களில் ‘தேசத்துரோகி’ என விளிக்கப்பட்ட ஸ்டான்லி இராஜேந்திரா, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அய்க்கிய தேசியக் கட்சி அரசுக்கும் ‘பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம்’ கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து, பத்து வருடங்களுக்குப் பிறகு பிரச்சார வேலைகளுக்காகப் புலிகளின் அணியொன்று இளம்பரிதியின் தலைமையில் அவனின் கிராமத்திற்குள் உள்ளிட்டதைக் குறித்த அந்தப் பத்திரிகைச் செய்தியைத் திரும்பத் திரும்ப விசர்கொண்டு வாசித்தான். இவன், இவனது சீவிய காலத்திலேயே இப்போதுதான் முதன்முதலாகத் தனது அநாதைக் […]

Continue Reading

மரச் சிற்பம்

பாரிஸ் நகரத்தில் இந்த வருடம் நிகழவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளைக் குறித்துத் தினப் பத்திரிகையிலிருந்த தலைப்புச் செய்தியை மீறியும் எடுத்த எடுப்பிலேயே இன்னொரு செய்தி எனது கண்களை இழுத்தது. கண்கள் அந்தச் செய்தியை வாசிக்கும்போது, எனக்குக் கிட்டத்தட்டச் சித்தம் கலங்கிவிட்டது என்றே சொல்லலாம். நான் அந்தச் செய்தியை நம்ப முடியாமல் மூன்று தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்தேன். பிரான்ஸில் இப்போது படு வேகமாக முன்னணிக்கு வந்துகொண்டிருக்கும் தேசியவாதக் கட்சியொன்றின் தலைவர்களில் ஒருவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “எமது தந்தையர் நாடு […]

Continue Reading