இலக்கியத்தில் தமிழ் – பிரெஞ்சு மொழியாக்கச் சாத்தியங்களும் சவால்களும்

லெற்றிஷியா இபானெஸ் (Léticia Ibanez) தமிழ் – பிரெஞ்சு இலக்கிய மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர் மற்றும் ஆசிரியர். மெளனியின் சிறுகதைகளை ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். பெருமாள் முருகன், இமையம் மற்றும் என்னுடைய நாவல்களைத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு மொழியாக்கியவர். 12.07.2026 அன்று பிரான்ஸில் நிகழ்ந்த வெள்ளிவீதி இலக்கியக் கூடுகை அமர்வில், நான் லெற்றிஷியா இபானெஸ் அவர்களுடன் ‘இலக்கியத்தில் தமிழ் – பிரெஞ்சு மொழியாக்கச் சாத்தியங்களும் சவால்களும்’ என்ற தலைப்பில் ஓர் உரையாடலை நிகழ்த்தினேன். அந்த உரையாடலின் எழுத்து வடிவம் […]

Continue Reading

மூன்று குழந்தைகள்

பாக்கு நீரிணையைப் படகில் கடந்து சென்றபோது, இலங்கைக் கடற்படை சுட்டதில், திலகனின் இடது முழங்கையைப் பொத்துக்கொண்டு துப்பாக்கிச் சன்னம் வெளியேறியிருந்தது. இப்போது திலகன் அதே நீரிணையை விமானத்தில் கடந்து இலங்கைக்குள் இறங்கிக்கொண்டிருக்கிறான். இருபத்து மூன்று வயதில் சென்றவன், அய்ம்பத்தெட்டு வயதில் திரும்புகிறான். அவன் அய்ரோப்பாவில் வாழும் இந்த முப்பத்தைந்து வருட காலத்திலும் இலங்கைக்குத் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு ஒருபோதுமே தோன்றியதில்லை. இலங்கையில் நெருங்கிய சொந்த பந்தங்கள் என யாருமே அவனுக்குக் கிடையாது. எல்லோருமே அகதிகளாக […]

Continue Reading

பொன்ஜூர் ரூஸோ!

இருநூற்று முப்பது வருடங்கள் பழைமையான சாம்பல்நிறச் சமாதிமீது நீட்டி நிமிர்ந்து படுத்துக்கிடந்த மனிதரைப் பார்த்தபோது, அபினா அச்சமடைந்தார் என்பதைக் காட்டிலும் அவர் வியப்பில் உறைந்துபோனார் என்பதே உண்மை. அவரது வயோதிப மூளை தடுமாறியது. சமாதியின்மீது படுத்துக்கிடப்பது தத்துவவாதி ஜோன் ஜக் ரூஸோ என்றுதான் அபினா நினைத்தார். ‘கருணையைக் காட்டிலும் உயரிய ஞானம் எதுவுமில்லை’ எனச் சொன்ன ரூஸோ இறந்தபோது, அவரது உடல் பெப்லியர் தீவில் புதைக்கப்பட்டது. பதினாறு வருடங்கள் கழித்து, பிரெஞ்சு அரசாங்கத்தால் ரூஸோவின் உடல் தோண்டி […]

Continue Reading

நூல் விமர்சனத்தின் வழியாக ஓர் அரசியல் பார்வை!

மகாகவி பாரதியின் ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’ என்ற கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்டு, மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் பல வருடங்களுக்கு முன்பு தனது ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டார். அந்த கவிதையின் அடுத்த வரி ‘எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்’. இந்த வரிக்குப் பொருத்தமாக அவர் எழுதி அண்மையில் வெளிவந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பே ‘தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்’. இலங்கையிலுள்ள ‘மார்க்ஸியக் கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையத்தின்’ வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலில் 8 கட்டுரைகள் […]

Continue Reading

ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.கவும்!

இந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்த தெற்கு நோக்கிய புலப்பெயர்வே இலங்கைத் தீவின் தமிழ் – சிங்களம் பேசும் மக்களின் நிலைத்த குடிசன வரலாறு. இனம், மதம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நிலங்களுக்கும் இடையே பெரும் ஒற்றுமையுண்டு. நிலையான தேசங்கள் தோன்றாத பண்டைய காலத்திலும் பின்னர் காலனியக் காலத்திலும் இலங்கைத் தீவின் வரலாறு எப்போதும் இந்தியப் பெருநிலத்துடன் இணைத்தே எழுதப்பட்டிருக்கிறது. கண்டி அரசின் கடைசி நான்கு மன்னர்களும் மதுரை நாயக்கர்கள் என்பதும், […]

Continue Reading

மாற்று விசாரணைக்‌ கமிஷன்‌ – கருணாகரன்‌

ஷோபாசக்தியின்‌ கதைகளைக்‌ குறித்த அவதானிப்பு 1. சிதைக்கவே முடியாது என்னையும்‌ என்னுடைய ஆன்மாவையும்‌. அழிக்கும்தோறும்‌ உயிர்ப்பேன்‌. உயிர்ப்பே எனது விதி. நான்‌ என்பது, நான்‌ மட்டுமல்ல, என்னுடைய சனங்களின்‌ துயரம்‌. என்னுடைய சனங்கள்‌ சிந்திய கண்ணீர்த்‌ துளியினதும்‌ ரத்தத்தினதும்‌ ஆறாச்‌ சூடு. நானென்பது, இழைக்கப்பட்ட அநீதியின்‌ சாட்சி. நானென்பது, தேசாந்திரியாக அலையும்‌ கதியற்ற அகதியின்‌ முகம்‌. நானென்பது சிலுவையேற்றம்‌. நானென்பது உயிர்த்தெழுதல்‌. நானென்பது அணையாத ஒளி. நானென்பது பெருமுழக்கம்‌. ஷோபாசக்தியின்‌ கதைகளைப்‌ படிக்கும்போது எழுகின்ற உணர்வே இது. […]

Continue Reading

பொப்பி என்பது புனைபெயர்

பூமியில் ஆதி காலம் முதலே இந்தக் கதை இருக்கிறது. எனினும், பிரெஞ்சு இளைஞனான பேர்னா பப்டிஸ்ட் ஆந்ரே இந்தக் கதைக்குள் பத்து வருடங்களுக்கு முன்புதான் வந்தான். அப்போது, அவனுக்கு இருபத்தாறு வயது. ‘கலே’ நகரத்துக் கடற்கரை வீதியிலுள்ள சின்னஞ் சிறிய ‘வெஸ்டர்ன் யூனியன்’ கிளையின் கூண்டுக்குள் தனியாளாக உட்கார்ந்தவாறே அலுப்பூட்டும் பணியைச் செய்துகொண்டும், நாள் முழுவதும் தனிமையில் உழன்றுகொண்டுமிருந்தான். இந்தக் கதையில் இன்னொரு முதன்மைப் பாத்திரமாக இருக்கும் இளம் பெண்ணுடைய பெயர் பொப்பி. அந்தப் பெண்ணின் உண்மையான […]

Continue Reading