எனது நூல்களைப் பெற
B74, பப்பு மஸ்தான் தர்கா,
லாயிட்ஸ் சாலை
சென்னை - 600 005
பேச:00 91 94442 72500
மின்னஞ்சல்: karppu2004@rediffmail.com
குறிப்பு இத்தளத்தில் பதிவேறும் எனது பனுவல்களை அனுமதியின்றியே எவரும் பயன்படுத்தலாம், மறுபிரசுரம் செய்யலாம்.
|
January 11th, 2012 | : நேர்காணல்கள் |
Warscapes: Do give us some political and personal context with regards to your novel Traitor.
Shobasakthi: On July 25, 1983, the Sri Lankan government planned and killed thirty-five Tamil political prisoners at Welikade Prison, with eighteen other Tamil prisoners slaughtered a couple of days later. The prison authorities were thoroughly complicit in the massacre even though Sinhala [...]
January 6th, 2012 | : அறிவித்தல்கள் |
http://www.vallinam.com.my/issue37/vallinambooks.html
December 31st, 2011 | : கட்டுரைகள் |
‘வல்லினம்’ இணைய இதழில் விமல் குழந்தைவேலின் ‘கசகறணம்’ நாவல் குறித்துக் கேட்கப்பட்டிருந்த ஒரு கேள்விக்கு நான் அளித்த பதில் பல தோழர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியிருக்கின்றது. தோழர்களின் பல்வேறு எதிர்வினைகள் Face bookல் பதிவு செய்யப்பட்ட தருணத்தில் நான் இந்தியாவில் இருந்ததால் என்னால் அந்த விவாதத்தில் பங்கெடுத்து எனது தரப்பை முன்வைக்க முடியாமல் போயிற்று. இப்போது பிரான்ஸ் திரும்பிவிட்டேன். தோழர்களின் எதிர்வினைகள் குறித்து இப்போது பேசிவிடலாம்.
தோழர்களின் பல்வேறு எதிர்வினைகள் வெவ்வேறு முகப் புத்தகங்களின் திரிகளிலே காணக் கிடைக்கின்றன. எனினும் [...]
December 6th, 2011 | : கதைகள் |
மனுவேல் பொன்ராசாசாவிற்கு ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூற்றோராம் வருடம் ஜனவரி மாதம் ‘கப்டன்’ பட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டது. அந்தச் சம்பவம் பின்வருமாறு நிகழலாயிற்று:
ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூறாம் வருடம் ஜுன் மாதம் யாழ்ப்பாணக் கோட்டை விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது. கோட்டைக்குள் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர்கள் சிக்கியிருந்தார்கள். கோட்டைக்கான அனைத்து வழங்கல்களும் புலிகளால் துண்டிக்கப்பட்டன. சிறியரகக் ‘கிரேன்’களின் உதவியுடன் புலிகள் கோட்டை மதில்களில் ஏற முயன்றுகொண்டேயிருந்தார்கள். கடலிலிருந்து கோட்டைக்குள் படகில் செல்வதற்கான இரகசிய வழியொன்றுமிருந்தது. புலிகள் அந்த வழியால் சிறிய [...]
December 4th, 2011 | : கட்டுரைகள் |
யுத்தகாலத்தின் ஈழத்துக் கவிதைகள் உணர்ச்சி மயமானவை, அர்சியல் தத்துவார்த்த ஆழமற்றவை என்கிற விமர்சனம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
யுத்தகால ஈழக் கவிதைகளின் தோற்றுவாய்க் காலமாக 1980களின் ஆரம்பத்தை நாம் குறித்துக்கொள்ளலாம். 1981ல் எம்.ஏ. நுஃமான் - முருகையன் மொழிபெயர்ப்பில் ‘பாலஸ்தீனக் கவிதைகள்‘ நூல் வெளியாகி பெருத்த அதிர்வுகளை உருவாக்குகிறது. இந்தக் காலத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான ஈழத்துக் கவிதைகள் பாலஸ்தீனக் கவிதைகளை அடியொற்றியும், அந்த மொழிபெயர்ப்பு மொழிநடையை உள்வாங்கியும் உருவாகின்றன. ‘பீனிக்ஸ்‘ பறவையைப் படிமமாக வைத்துமட்டும் நூறு [...]
December 2nd, 2011 | : வல்லினம் பதில்கள் |
ஷோபா, உங்களின் முந்தைய பேட்டியில் நீங்கள் சொல்லியிருந்தீர்கள் ‘ஈழம் கிடைத்தால் மட்டுமே கடவுசீட்டு எடுப்பேன்’ என்று (ஈழ நாட்டு கடவுசீட்டு). உங்கள் மீது எமக்கு மிக பெரிய மரியாதை உருவானது. இன்று உங்களது பேட்டி - எழுத்து நமது தமிழர்களை காட்டி கொடுப்பது போன்றே உள்ளது, உங்களின் கீழ்தரமான விளம்பரத்திற்கு நம்மை நாமே காட்டிகொடுப்பது நல்லதா…. என்று திருத்துவீர்கள் உமது இந்த கையாலாகததனத்தை..?
நீங்கள் ஒரு தீவிர சினிமா ரசிகராயிருக்கிறீர்களே… [...]
November 3rd, 2011 | : கட்டுரைகள் |
நான் - ராஜன் குறை - அ.மார்க்ஸ் எனத் தொடரும் இந்த உரையாடலுக்குக்கு வித்திட்ட எனது முகப்புத்தக நிலைத்தகவல் ராஜனை பாதித்திருப்பது / ஏன் பாதித்தது என்றவாறான ஒரு குறிப்பை இன்று அவர் எழுதியிருப்பது கீழ்வரும் குறிப்புகளை எழுத என்னைத் தூண்டியிருக்கிறது.
விவாதத்தின் தொடக்கப் புள்ளியான எனது நிலைத் தகவலில், பேஸ்புக் - ட்விட்டர் கருத்துப் போராளிகள் இந்தத் தருணத்தில் புலிகளின் மரணதண்டனைகள் குறித்தும் சிந்திக்க வேண்டுமென்றேன். அப்போதுதான் மரணதண்டனை எதிர்ப்பு என்பதற்கு சரியான அர்த்தமிருக்கும் என்றேன். “புலிகளின் [...]
November 1st, 2011 | : வல்லினம் பதில்கள் |
எல்.டி.டி.ஈ தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நினைக்கிறீர்களா?
இம்மாதக் காலச்சுவடு இதழில் செங்கடல் படம் பற்றி (ஷுட்டிங்) கண்ணன் எழுதிய விமர்சனம் குறித்து உங்கள் கருத்து?
நண்பரே,
//அவதூறுகளை நியாயப்படுத்த வினவு இணையத்தளத்திற்கு ‘வர்க்கப் போராட்ட‘ முழக்கம்// இவ்வாறு ஒரு கட்டுரையில் எழுதியுள்ள நீங்கள் வினவு தளத்தின் வேறு எந்தக் கட்டுரையையும் படிப்பதில்லையா? ஏதோ வினவு உங்களை விமர்சிக்க மட்டும் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று என்பதை போல பேசுவது நியாயமா? ஈழப் போராட்டம்இ பார்ப்பன [...]
October 30th, 2011 | : அ.மார்க்ஸ், கட்டுரைகள் |
ராஜன் குறையின் ‘சமயோசித’ அணுகல் முறையும் ஷோபா சக்தியின் ‘மூர்க்கமான’பேச்சுக்களும்
அ.மார்க்ஸ்
மரண தண்டனை ஒழிப்பு குறித்து ஷோபா சக்தி எழுதிய கட்டுரைகள் இரண்டையும் (‘விருமாண்டியிசம்’), ராஜன் குறை எழுதிய இரு கட்டுரைகளையும் அவரவர் முகநூல் பக்கங்களில் படித்தேன். ராஜனின் இரண்டாவது கட்டுரை ஷோபாவின் இரு கட்டுரைகளுக்கும் பதிலாக எழுதப்பட்டது. பின்னூட்டங்களில் நண்பர்கள் சொல்லியிருப்பதுபோல ராஜனுக்கே உரித்தான பதமையோடும், பண்போடும், ஆழத்தொடும், நிரம்ப சுய எள்ளலோடும் எழுதப்பட்டுள்ளது அக்கட்டுரை. [...]
October 3rd, 2011 | : கட்டுரைகள் |
கனடாவில் நடந்த கூட்டமொன்றில் “எழுத்தாளனும் ஒரு போராளிதான்” என்ற வகையில் ஒரு கருத்தை சொல்லியிருந்தீர்கள். ஒரு நல்ல எழுத்தாளனுக்கு இந்த விதி பொருந்தும். ஆனால் செயலில் ஒன்றும் எழுத்தில் இன்னொன்றுமாக செயல்படும் போலி எழுத்தாளர்களுக்கு இந்த விதி பொருந்தாதே. பல்கிப் பெருகும் இந்தப் போலிகளில் பலர் உங்கள் நண்பர்களாக இருக்கிறார்களே?
இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் மார்க்ஸிச அறிவு ஏற்படுவது எதிர்காலத்தில் ஆரோக்கியமானதா?
ஷோபா, உங்கள் வாதங்களெல்லாம் சரி. என்னுடைய கேள்வி ஒன்றுதான். தமிழர்களுக்கென ஒரு நாடு உருவாக [...]
March 17th, 2011 | : கட்டுரைகள் |
சென்ற வருடம் கீற்று இணையத்தளம் அதனது ஆறாம் ஆண்டு விழாவில் ஏற்பாடு செய்திருந்த ‘இஸ்லாமியர்கள் மீதான சமூக - அரசியல் ஒடுக்குமுறைகள்’ அமர்வு குறித்து ‘லும்பினி’ இணையத்தளத்தில் பிலால் முகமது - லக்கிலுக் இருவரும் இணைந்து ஒரு விமர்சனக் கட்டுரையை எழுதியிருந்தார்கள். கீற்று ரமேஷ் அந்தக் கட்டுரை குறித்த தனது எதிர்வினையை ‘கீற்றை முடக்கச் சதி’ என்ற தனது கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறார்:
“கூட்டத்தில் நடந்த சிறு சலசலப்பைப் பெரிதாக்கி, கீற்று இணையதளம் முஸ்லிம்களுக்கு எதிரான தளம் என்று [...]
March 20th, 2011 | : கட்டுரைகள் |
பிரியா தம்பி என்ற மினர்வாவால் முதலில் முகப்புத்தகத்தில் எழுதப்பட்டு பின்பு அதன் அரசியல் முக்கியத்துவம் கருதி கீற்று இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டதுதான் “ஷோபாசக்தி, சுசீந்திரன் உள்ளிட்ட ஆதிக்க சாதியினரின் ‘புலி’த் தீண்டாமை” என்ற கட்டுரை. அந்தக் கட்டுரையை முன்வைத்து ‘கீற்று’ ரமேஷ் “கிழிந்தது புலி எதிர்பாளர்களின் முகமூடி, அறுந்தது அரசு ஆதரவாளர்களின் ஆட்டுத்தாடி” என்று ஆர்ப்பரித்து நின்றார். அது அறியாமையின் ஆணவம்! மினர்வாவின் கட்டுரையில் கையாளப்பட்ட ‘ஆய்வு’ முறையை மிகச் சுருக்கமாகக் குறிப்பிடுவதெனில் ‘மாதனமுத்தா’ ஆய்வுமுறை என்றே குறிப்பிடலாம்.
[...]
March 24th, 2011 | : கட்டுரைகள் |
அவதூறுக் கலாசாரம் குறித்துச் சொல்லும்போது “A dirty slipper is nothing to fear, but an unclean razor is very dangerous” என்பார் ட்ரொட்ஸ்கி. அவதூறுக் கலாசாரத்தை உற்சாகத்தோடு முன்னெடுக்கும் ‘கீற்று’ இணையத்தளத்தை, நமது தோழர்கள் குறைத்து மதிப்பிட்டு ‘அழுக்கடைந்த செருப்பென்று’ அலட்சியப்படுத்துவதாகவே தெரிகிறது. மாறாக, கீற்று இணையத்தளம் ‘தூய்மையற்ற சவர அலகு’ என்றே நான் கருதுகிறேன். மாற்றுக் கருத்துகளைக் கொண்டவர்கள் மீதும், தனது அரசியல் எதிராளிகளாக அது அடையாளப்படுத்துபவர்கள் மீதும் கொட்டிவந்த அவதூறு [...]
April 19th, 2011 | : கட்டுரைகள் |
அய்.நா வல்லுனர் குழுவின் அறிக்கை புலிகள்மீது வைத்திருக்கும் ஆறு குற்றச்சாட்டுகள் இவை:
1. பொது மக்களை மனித கவசங்களாக பயன்படுத்தியது.
2. தமது பிடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற பொதுமக்களைக் கொன்றது.
3. பொதுமக்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து படைக்கருவிகளை இயக்கியது.
4. சிறுவர்களைக் கட்டாயமாக படைகளில் சேர்த்தது.
5. பொதுமக்களிடம் கட்டாயமாக வேலைவாங்கியது.
6. போர் நடைபெறாத பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்களின் மூலம் பொதுமக்களைக் கொன்றது.
இதைத் தானே நாங்கள் இரண்டு வருடங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இதைச் சொன்னதற்காகத்தானே இத்தனை ஏச்சுப் பேச்சுகளும், நிராகரிப்புகளும், வசைகளும், துரோகிப் [...]
May 3rd, 2011 | : கட்டுரைகள் |
நோம் சோம்ஸ்கியின் HEGEMONY OR SURVIVAL நூலைக் கையில் வைத்திருந்தவாறே “அய்.நா.அவை சீரழிந்துவிட்டது, இந்த அவை தனது சுயாதீனத்தை இழந்து வல்லாதிக்க நாடுகளின் கைப்பொம்மையாகிவிட்டது, இது செயலற்ற பொழுதுபோக்கு அவையாகிவிட்டது, ‘வீட்ரோ’ அதிகாரம் சனநாயகத்திற்கு புறம்பான அதிகாரம், அய்.நா. சீர்திருத்தப்பட வேண்டும், முக்கியமாக அதன் அமைவிடம் அமெரிக்காவிலிருந்து தெற்கு நாடொன்றுக்கு மாற்றப்படவேண்டும்” என வெனிசூலாவின் மக்கள் தலைவர் ஹியூகோ சாவேஸ் செப்டம்பர் 2006-ல் அய்.நா.அவையில் ஆற்றிய கொதிப்பேறிய உரையைத் [...]
May 6th, 2011 | : கதைகள் |
இவன் வீட்டின் வாசற்படியை அடைந்த போது வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக உட்கார்ந்துகொண்டு தலையைச் சாய்த்துத் தொலைக்காட்சியைப் பார்த்தான். “உங்களைக் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ வைப்பது என்னுடைய பொறுப்பு, நான் இந்த நாட்டு மக்கள் அனைவரதும் தலைவன் ” என ராஜபக்ச தமிழில் பேசிக் கொண்டிருந்தார். அந்த அகலமான தொலைக்காட்சித் திரை முழுவதையும் ராஜபக்சவின் முகம் நிறைத்திருந்தது. அவ்வளவு பெரிய தொலைக்காட்சியை இவன் [...]
June 2nd, 2011 | : வல்லினம் பதில்கள் |
மலேசியாவிலிருந்து வெளியாகும் ‘வல்லினம்’ இணைய இதழில் இந்த மாதத்திலிருந்து சில மாதங்களிற்கு வாசகர்களின் கேள்விகளிற்குப் பதிலளிக்கிறேன். யூன் மாத கேள்வி பதிலைப் படிக்க இங்கே அழுத்தவும்.
June 29th, 2011 | : கட்டுரைகள் |
( யூன் 19ம் நாள் ‘ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி‘ ( EPRLF) பிரான்ஸில் நடத்திய தியாகிகள் தினத்தில் நிகழ்த்திய உரையின் அடிப்படையில் எழுதப்பட்டது )
நிகழ்வுக்குத் தலைமையேற்றிருக்கும் தோழர் அருந்ததி அவர்களே, நிகழ்வைச் சிறப்புற வடிவமைத்து நடத்திக்கொண்டிருக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்களே, நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் சக இயக்கத் தோழர்களே, நண்பர்களே பணிவுடன் வணங்குகிறேன்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நிறுவனரும் செயலாளர் நாயகமுமான தோழர் கந்தசாமி பத்மநாபாவும் பன்னிரு தோழர்களும் பாஸிசப் புலித் [...]
July 23rd, 2011 | : கட்டுரைகள் |
(03.07.2011 அன்று லா சப்பலில் (Paris) நடந்த ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்’ நூல் வெளியீட்டரங்கில் நிகழ்த்திய உரையின் அடிப்படையில் எழுதப்பட்டது)
இந்த நூல் வெளியீட்டு அரங்கிற்குத் தலைமையேற்றிருக்கும் இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின்
தலைவர் தேவதாசன் அவர்களே, நூலாசிரியர் யோகரட்ணம் அவர்களே, அரங்கின் சிறப்பு அழைப்பாளர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களே, நூல் குறித்து மதிப்புமிக்க திறனாய்வுகளை இங்கே நிகழ்த்திய தோழர் எம்.ஆர்.ஸ்ராலின் அவர்களே, ராகவன் அண்ணன் அவர்களே, தோழர் பஷீர் அவர்களே, தோழியர் பிரபா [...]
August 2nd, 2011 | : வல்லினம் பதில்கள் |
அரசியல் செயல்பாடுகள் மட்டும்தான் உங்கள் இலக்கியமெனில் எப்படி உங்களால் அசோகமித்திரன் பற்றியும் சுஜாதா பற்றியும் பேசமுடியும்?உங்களுக்குத் தார்மீகமாக அதற்கு உரிமை இருக்கிறதாக கருதுகிறீர்களா?
கார்த்திகேயன்
தோழர், என்னுடைய இலக்கியம் மட்டுமல்ல ஒவ்வொருவரது இலக்கியப் பிரதிகளிற்குள்ளும் அரசியல் உள்ளது. அதை நுட்பமாகக் கட்டவிழ்த்துப் பார்ப்பதுதான் பின்நவீனத்துவ அறிதல்முறை நமக்கு வழங்கியிருக்கும் கொடை. இவ்வகையான விமர்சனமுறையினை நீங்கள் அறிமுகம் செய்துகொள்வதற்காக சுஜாதாவின் ‘மஞ்சள் இரத்தம்’ கதை குறித்து ரவிக்குமாரும் சுராவின் ‘புளியமரத்தின் [...]
August 2nd, 2011 | : வல்லினம் பதில்கள் |
அன்பான முத்துகிருஷ்ணன், விடுதலைப் புலிகளின் குற்றத்தின் நிழல் நமது சமூகத்திலிருந்து முற்றாக விலகும்வரை அதைப் பேசித்தான் ஆகவேண்டியிருக்கிறது. முன்பு புலிகளை விமர்சித்தபோது போராட்ட காலத்தில் விமர்சிக்கக் கூடாது என்றார்கள். இப்போது விமர்சித்தால் புலிகள் இல்லாத போது பழைய கதைகள் பேசலாமா என்கிறீர்கள். அப்போது எப்போதுதான் புலிகளைப் பற்றிப் பேச அனுமதிப்பீர்கள்? புலிகள் என்பது பிரபாகரனோ அல்லது ஓர் இராணுவ அணியோ அல்ல. அது சனநாயக மறுப்பையும் ஆயுதக் கலாசாரத்தையும் [...]
August 11th, 2011 | : கட்டுரைகள் |
‘கீற்று‘ இணையத்தளம் தொடர்ச்சியாக நடத்திவரும் அவதூறுப் பரப்புரைகளுக்கு எதிரான விமர்சனத் தொகுப்பு நூல். ஒன்பது விரிவான கட்டுரைகளுடனும் கொற்றவையின் ‘மார்க்சிய முத்திரையும், இணைய அவதூறுகளும், பெண்ணியச் சிந்தனையும்‘ கட்டுரை உள்ளிட்டு நான்கு பின்னிணைப்புகளுடனும், ஆதவன் தீட்சண்யாவின் பின்னட்டைக் கவிதையுடனும் வெளியாகியிருக்கிறது. பக்கங்கள்: 160. விலை: இந்தியா - ரூ 80. அய்ரோப்பா - 10 Euros. இலங்கை - இலவசம்.
நூலிலிருந்து:
‘வாய்ச்சொல் தலைச்சுமை‘ என்று கிராமத்து எளிய மனிதர்கள் சொல்வதை நாம் கேட்டிருப்போம். ஒருவர் தனது [...]
August 23rd, 2011 | : கட்டுரைகள் |
சில வருடங்களிற்கு முன்பு கமல்ஹாஸனின் ‘விருமாண்டி‘ திரைப்படம் வெளியானபோது அந்தத் திரைப்படம் மரணதண்டனை ஒழிப்பைக் குறித்துப் பேசும் மகத்தான திரைப்படம் என ஊடகங்கள் அடித்த அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்தன. அப்போது ‘விருமாண்டி‘ திரைப்படம் குறித்து பிரேம் எழுதிய கருத்துகள் விருமாண்டியின் யோக்கியதையைத் துல்லியமாக வெளிப்படுத்தின. பிரேம் அதை எந்தப் பத்திரிகையில் எழுதியிருந்தார் என்பதும் அவர் எடுத்தாண்ட சொற்களும் எனது ஞாகத்தில் இப்போது தெளிவாக இல்லையாயினும் பிரேமின் மையக் கருத்து என் மனிதில் அழியாமல் தங்கியுள்ளது. அதை [...]
September 12th, 2011 | : வல்லினம் பதில்கள் |
நீங்கள் விடுதலைப் புலியா?
ஷோபா எல்லா ஊர்கள் குறித்தும் கூறினீர்கள். எல்லா நாடுகளையும் சுற்றியுள்ளதாகச் சொன்னீர்கள். உங்கள் தாயகத்துக்கு செல்லும் ஐடியா இல்லையா? அதை நீங்கள் நேசிக்கவில்லையா? மீண்டும் அங்குச் செல்லும் எண்ணம் இல்லையா? அதை நீங்கள் இழப்பாகக் கருதவில்லையா?
மீண்டும் மலேசியா வரும் எண்ணம் உண்டா? மலேசியாவில் உங்களை கவர்ந்த அம்சம் என்ன? முதலில் நீங்கள் இருமுறை வந்ததாகச் சொன்னீர்கள்… ஏன்?
அண்ணா, ஒரு பதிலில் தங்களுக்கு அசோகமித்திரன் கவரவில்லை என்றீர்கள். சென்ற முறை ஜெயமோகனின் இலக்கிய கட்டுரைகள் முக்கியமானவை [...]
|
|