விகடன் விருதுகளை திரும்ப ஒப்படைக்கிறேன்

மூன்று தடவைகள் ‘விகடன்’ விருதுகளைப் பெற்றிருக்கிறேன் (வேலைக்காரிகளின் புத்தகம், எம்.ஜி.ஆர் கொலை வழக்கு, BOX). இந்த விருதுகளுக்காக என்னைத் தேர்வு செய்தவர்கள் விகடன் குழுமத்திலிருந்த எழுத்தாளத் தோழர்கள். அது மட்டுமல்லாமல் விகடன் பல முறை என்னிடம் கட்டுரைகளையும் நேர்காணல்களையும் கேட்டுப் பெற்று வெளியிட்டதற்குக் காரணமும் இந்த எழுத்தாளத் தோழர்களே. இன்று எழுத்தாளத் தோழர்களும் மற்றும் பணியாளர்களும் விகடன் குழுமத்திலிருந்து பெருந்தொகையில் வெளியேற்றப்படுவதைக் கண்டித்தும் அந்த வெளியேற்றத்திற்கு எதிராகப் போராடும் தோழமைகளுக்கான ஒரு சிறிய துணைச் செயற்பாடாகவும், மூன்று […]

Continue Reading

Film unscheduled and censored at the Jaffna International Cinema Festival

Dear Sir/Madam, TO WHOM IT MAY CONCERN: Allegedly owing to pressure from a group known only as the ‘Community’ in Jaffna, the festival organizers of the Jaffna International Cinema Festival have decided to remove the film DEMONS IN PARADISE directed by me from its scheduled program. Thus far I have not been given a proper […]

Continue Reading

48வது இலக்கியச் சந்திப்பு – ரகறொன்ரோ – TKARONTO

காலம்: ஜூன் 2, 3ம் நாட்களில் இடம்: 440 McLevin Avenue, Scarborough, ON M1B 5J5 சனிக்கிழமை, 2018 ஜூன் 2: நிகழ்ச்சி நிரல் காலை 10:00: நிகழ்ச்சி ஆரம்பம் வரவேற்பும் சிற்றுண்டியும் ஓவியக் கண்காட்சி நூலக நிறுவனத்தின் கண்காட்சி புத்தகக் கண்காட்சி ஆரம்பம் காலை 11:00: ஆரம்ப நிகழ்வு வரவேற்பும் மௌன வணக்கமும் பூர்வீக மக்களின் நில உரிமை பற்றிய அறிவிப்பு இலக்கியச் சந்திப்பின் வரலாறு – அதீதா காலை 11:20 – பி.ப […]

Continue Reading

இலங்கையில் முஸ்லீம்கள் மீதான வன்முறை: கூட்டறிக்கை

  நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் வடக்கு கிழக்கில் பணியாற்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் சிலவற்றின் கூட்டறிக்கை: -06 மார்ச் 2018 இவ்வாரம் கண்டியிலும் சென்ற வாரம் அம்பாறையிலும் முஸ்லீம் மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். கண்டியிலும் அம்பாறையில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள பூர்வாங்க அறிக்கைகள், நடவடிக்கை எடுக்காத தவறால் பொலிஸாரும் இந்த வன்முறையில் கூட்டுப் பொறுப்பாளிகள் என்பதை உணர்த்தி நிற்கின்றன. வடக்கு […]

Continue Reading

இது எம்மீதான இன்னொரு இனப்படுகொலை

கூட்டறிக்கை: இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் (தமிழ்நாடு),   25.02 .2018 அன்று  தங்களுடைய நிகழ்வில், ‘ஜெப்னா பேக்கரி’ எனும் நூலை எழுதிய வாசு முருகவேலிற்கு  விருது வழங்கி மதிப்புச் செய்ததை நாங்கள் மிகுந்த வருத்தத்துடன் கண்டனம் செய்கிறோம். வாசு முருகவேலால் எழுதப்பட்ட ‘ஜெப்னா பேக்கரி’ நடந்த வரலாற்று உண்மைகளை முற்றாகத் திரித்து  முஸ்லீம்களை உளவாளிகளாகவும் காட்டிக்கொடுப்பவர்களாகவும் சித்தரிக்கிறது.  அதன் வழியே, இரண்டு மணிநேர அவகாசத்தில் முஸ்லீம்கள் புலிகளால் ஆயுதமுனையில் கொள்ளையிடப்பட்டு, நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை […]

Continue Reading

ஒரு தோழமையான வேண்டுகோள்

எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் ஷர்மிளா செய்யித்தின் உரையை இடம்பெறச் செய்யுமாறு மலையக இலக்கியச் சந்திப்புக்கு விடுக்கப்பட்டிருந்த கூட்டு வேண்டுகோள் 47-வது இலக்கியச் சந்திப்பு (மலையகம்) ஏற்பாட்டுக் குழுத் தோழர்களிற்கு, இலக்கியச் சந்திப்புகளில் பங்களித்துவரும் எங்களது தோழமையான வேண்டுகோள் பின்வருமாறு: தற்போது, 47-வது இலக்கியச் சந்திப்புக் குறித்து நடந்துவரும் விவாதங்களை நாங்கள் கவனித்தவரை, இந்த இலக்கியச் சந்திப்பில் இலங்கையில் சிறுமிகளிற்கு ‘கிளிட்டோரிஸை’ சிதைத்துவிடும் ‘கத்னா’ வதைச் சடங்கு குறித்து உரையாற்றவிருந்த ஷர்மிளா செய்யித் அவர்களின் உரை சிலரின் […]

Continue Reading

வாசகசாலை: மனதிற்கான வைத்தியசாலை

வாசிப்பு பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். மனதுக்குப் பிடித்த புத்தக வாசிப்பானது, நோயாளிகளை விரைவில் குணப்படுத்த ஏதுவாகும். அவர்களது மனதை சாந்தப்படுத்தும். வெளிநாடுகளில் நோயாளிகளை விரைவில் குணமடையச் செய்ய இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். அந்த நடைமுறை, இலங்கையிலுள்ள அநேகமான வைத்தியசாலைகளில் பின்பற்றப்படுவதில்லை. காரணங்கள் பலவற்றைச் சொல்லலாம். இலங்கையிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும், அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளை, ‘நாம் நோயாளிகள்’, ‘நாம் பலவீனமானவர்கள்’ என உணரச் செய்துகொண்டேயிருக்கின்றன. இதே நிலைப்பாடுதான் நோயாளிகளுடன், அவர்களுக்கு உதவுவதற்காக, கூடத் தங்க நேர்பவர்களுக்கும். அந்த மந்த […]

Continue Reading