ஆளில்லாத ஊரில் நரி நாட்டாமை

கட்டுரைகள்

– ஷோபாசக்தி

லீனா மணிமேகலை மீது ம.க.இ.கவினரின் வினவு இணையத்தளத்தில் எழுதப்பட்ட ஆபாச வசைகளையும் ஆணாதிக்க வக்கிரங்களையும் தொகுத்து நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகமே உருவாக்கலாம். அந்தப் புத்தகம் சாருநிவேதிதாவின் ‘ராசலீலா’ நாவலைவிட நிச்சயமாகக் கேவலமாயிருக்கும். அந்தக் கேடுகெட்ட வசைகளைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் வினவுவின் இணையத்தளத்தில் அவற்றைப் படித்தறிந்துகொள்ளுங்கள்.

வினவுவைப் போன்று நேரடியாக இல்லாமல் புனைவு என்ற போர்வைக்குள் மறைந்திருந்து நர்சிம் என்ற வலைப்பதிவாளர் சக பதிவரான சந்தனமுல்லையை அவதூறு செய்து மிகக் கேவலமான பிரதியொன்றை ‘பூக்காரி’ என்னும் தலைப்பில் எழுதியிருக்கிறார். ஆணாதிக்கமும் மேட்டிமைச் சாதித்திமிரும் அருவருப்பாக மிதந்துவரும் பிரதியது. டென்ஷனில் எழுதிவிட்டேன், பாதிக்கப்பட்டதால் ஆத்திரமுற்றுவிட்டேன், எழுதிய பதிவை நீக்கிவிட்டேன்,அவர் மட்டும் என்ன யோக்கியமா போன்ற எந்தச் சாட்டுகளாலும் நர்சிமின் ஆணாதிக்கத் தடித்தனத்தை நியாயப்படுத்த முடியாது. அவர் சந்தனமுல்லையிடம் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும்.

வினவு கூட நர்சிமைக் கண்டித்துக் காரசாரமான கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார், அத்துடன் நர்சிமை தண்டிப்பதற்கு வழிகளும் சொல்லியிருக்கிறார். இதைத் தான் ஆளில்லாத ஊரில் நரி நாட்டாமையாம் எனச் சொல்வது. நர்சிமை காப்பாற்றும் செயல்கள் எவ்வளவு அயோக்கியத்தனமானவையோ அவ்வளவுக்கு அயோக்கியத்தனமானது வினவுவின் இரட்டைவேடப் புரட்சிகரத்தையும் நரித்தனமான நாட்டாமைத்தனத்தையும் கண்டும் காணாமலும் சகித்துக்கொண்டிருப்பது.

இன்று நர்சிம் செய்ததைத்தானே அன்று ம.க.இ.கவினர் லீனா மணிமேகலைக்குச் செய்தார்கள். எத்தனையெத்தனை வசைகளை லீனா மணிமேகலை மீது கொட்டினார்கள். கூட்டத்திலேயே “நீ பார்த்த ஆண்குறிகளின் வகைமாதிரியைச் சொல்” என்று இழிவு செய்தார்கள். கூட்டத்தில் “தேவடியா தொடையை விரித்து வைத்திரு தேவடியா” என லீனாவைப் பார்த்துக் கூச்சலிட்டார்கள். அ.மார்க்ஸையும் கோ. சுகுமாரனையும் பார்த்து “போய் லீனாவோட படுங்கடா” என்றார்கள். நர்சிம் செய்தால் பார்ப்பனியம், வினவு செய்தால் புரட்சிகரமா?

பின்னூட்டங்களுக்கு எங்களைப் பொறுப்பாக்காதீர்கள் என வினவு சொல்லத் துணியலாம். அவர்களிள் தளத்திலேயே ‘ஒத்துவராத மறுமொழிகள்’ என ஒரு பகுதியை வைத்துள்ளார்கள். அதாவது ஆபாச மறுமொழிகளைப் பொதுப் பின்னூட்டப் பகுதியில் அனுமதிக்கமாட்டார்களாம். ‘ஒத்துவராத மறுமொழிகள்’ பகுதியில் இதுவரை 252 மறுமொழிகள் உள்ளன. நான் மேலே தொகுத்துத் தந்திருக்கும் மறுமொழிகளை அந்த ஒத்துராத பகுதிக்குள் வினவு அனுப்பவில்லை. அவை பொதுப் பின்னூட்டப் பகுதியிலேயே உள்ளன. இதனுடைய பொருள் அந்தப் பின்னூட்டங்கள் வினவுவைப் பொறுத்தவரை ஒத்துவரும் மற்றும் பிரசுரிக்கத் தகுதியான மறுமொழிகள் என்பதைத் தவிர வேறென்ன. நான் தொகுத்துத் தந்திருக்கும் பின்னூட்டங்கள் வினவுவை ஆதரித்து எழுதப்பட்டவை என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. தவிரவும் இவற்றில் பெரும்பாலான பின்னூட்டங்களை எழுதுபவர்கள் ம.க.இ.கவினர்தான் என்பதும் ஒன்றும் இரகசியமில்லையே.

இவ்வளவு ஆணாதிக்க வசைகளையும் அவதூறுகளையும் லீனா மணிமேகலை மீது கொட்டிவிட்டு இன்று நர்சிம் மீது எந்தவிதக் கூச்சமோ குற்றவுணர்வோ இல்லாமல் ம.க.இ.கவினர் நாட்டாமை செய்யப் புறப்பட்டிருப்பதை என்னவென்பது. நித்தியானாந்தா மீது சங்கரச்சாரி தீர்ப்புச் சொல்லும் விநோதத்தை ஒத்தது இது.

லீனா அவ்வாறு கவிதை எழுதியதால்தான் நாங்கள் இவ்வாறு வக்கிரத்தைக் கேள்விகளாகக் கொட்டினோம் என்று வினவு கொக்கரிப்பதற்கும், மனது காயப்பட்டதால் எழுதிவிட்டேன் என்று நர்சிம் பம்முவதற்குமிடையில் ஒரு வேறுபாடுமில்லை. நர்சிமுக்குத் தனது ஆணாதிக்க வக்கிரத்தை வாந்தியெடுப்பதற்கு புனைவு முகமூடியென்றால் வினவுக்குத் தனது ஆணாதிக்க வக்கிரத்தை வாந்தியெடுப்பற்குப் புரட்சிகர முகமூடி. இதையே வினவுவின் மொழியில் சொன்னால், நர்சிம் செய்தது Rape. ம.க.இ.கவினர் செய்ததோ Gang Rape. குற்றங்கள் ஒன்றாயிருக்கும்போது ‘தண்டனை’களும் ஒன்றாயிருக்க வேண்டியதுதான் நியாயம். மறுக்கப்பட்ட நீதியைக் காட்டிலும் தாமதமான நீதி ஒன்றும் மோசமானதல்ல. பதிவுலகத் தோழர்கள் இதுகுறித்துச் சிந்திக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *