இயங்கியல், அமைப்பியல் மற்றும் தேசம்

ராஜன் குறை பேராசிரியர் தமிழவன் தீராநதி ஜனவரி 2010 இதழில் எனது “மொழியுணர்வும், தேசியமும்: அண்ணா, தமிழவன், ஆண்டர்சன்” என்ற நவம்பர் 2009 தீராநதி இதழ் கட்டுரை குறித்து பொறுமையாகவும், பெருந்தன்மையாகவும் சில கருத்துக்களை கூறியுள்ளார். அதையொட்டி, இந்த உரையாடலைக் கவனித்து வரும் வாசகர்களின் பொருட்டு என்னுடைய சில சிந்தனைகளை மீண்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன். முதலில் சுருக்கமாக எனக்கும் தமிழவனுக்கும் இருக்கும் கருத்து மாறுபாடுகளை விளக்கக்கூடிய சில தத்துவப் பின்னனிகளைக் காண வேண்டும். அமைப்பியல் என்பது […]

Continue Reading

மொழியுணர்வும் தேசியமும்: அண்ணா, தமிழவன், ஆண்டர்சன்

-ராஜன் குறை தமிழ் மொழியிலிருந்தே தன் அணியலங்கார அல்லது சொல்லணி (rhetoric) நடையின் மூலம், தமிழ் என்ற வித்தியாசமான குறியை உருவாக்கி மொழியுணர்வை ஆரோக்கியமான ஜனநாயக அரசியலுக்கு அடிப்படையாக அண்ணா பயன்படுத்தினார் என்பது தமிழக வரலாற்றின் முக்கியமான திருப்பு முனை. உண்மையில் தமிழர்கள் உணர்வளவில் தேசமாகிவிட்டார்கள், தேசிய அரசைத்தான் தோற்றுவிக்கவில்லை என்று சொல்லலாம். மத்திய அமைச்சரவையில் பங்குபெறும் நிலையில் தமிழகத்தில் அது இனி பிரச்சினையில்லை. ஆனால், இலங்கையில் தமிழர்கள் வரலாற்றின் முரண்களில் சிக்கி பெரும் அழிவை சந்தித்துள்ளனர். […]

Continue Reading

அரசு, இறையாண்மை, ஆயுதப் போராட்டங்கள்

அ. மார்க்ஸ் ஈழப் போராட்டப் பின்னணியில் இறையாண்மை (sovereignty) குறித்த பேச்சுக்கள் இன்று தமிழ்ச் சூழலில் தலைகாட்டியுள்ளன. 1970களில், வங்கப் பிரச்சினையில் (முன்னாள் கிழக்கு பாகிஸ்தான்) இந்தியா தலையிட்டு ‘வங்கதேசம்’ உருவாவதற்கு வழி வகுத்ததுபோல புலிகளுக்கு எதிரான ராஜபக்சே அரசின் வெறித்தனமான தாக்குதலில் தலையிட்டு (புலிகளின் தலைமையில்) தனி ஈழம் பெற்றுத் தரவேண்டும் என்கிற கோரிக்கையை இங்கேயுள்ள புலி ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்தபோது அரசு தரப்பில் இறையாண்மை குறித்த கதையாடல் முன் வைக்கப்பட்டது. மற்றொரு நாட்டின் இறையாண்மையில் […]

Continue Reading

ஈழப் போராட்டமும் தமிழக ஆதரவாளர்களும்

– அ.மார்க்ஸ் தமிழ் அறிவுஜீவிகள் மத்தியில் ஒரு மரண அமைதி நிலவுவதாக சில நாட்களுக்கு முன் எழுத்தாள நண்பர் ஒருவர் கவலையோடு குறிப்பிட்டார். ஒரு சிலர் மத்தியில் ஒருவகை கையறு நிலையும் வேதனையும் நிலவுவது உண்மைதான். மே 18லிருந்து கிட்டத்தட்ட அடுத்த ஒரு வாரம் முழுவதும், வழக்கமாக என்னிடம் பேசுகிற பழக்கமில்லாத சில எழுத்தாள நண்பர்களும் கூட என்னைத் தொடர்பு கொண்டு “கேள்விப்படுவது உண்மைதானா?” என விசாரித்த வண்ணம் இருந்தனர். தொலைக் காட்சியில் காட்டப்படும் உடல் அவருடையது […]

Continue Reading

குழந்தைப் போராளி: ஆண்களுக்கான கண்ணாடி

-மீனாமயில் அதிகாரமற்ற ஓர் உலகை கற்பனை செய்து பாருங்கள். கடலும் மலைகளும் வனமும் சூழ்ந்து, கோடி கோடி மனிதர்கள் வாழும் இவ்வுலகில் அதிகாரம் எனும் வேட்டை நடைபெறாத இடம் எதுவெனத் தேடுங்கள்! அதிகாரமற்ற உலகு எப்படிப்பட்டதாக இருக்குமென நினைத்துப் பார்ப்பது, நமக்கு முடியாத செயலாகப் போகலாம். காரணம், அப்படிப்பட்டதொரு வாழ்சூழலுக்குப் பழக்கமற்றவர்கள் நாம். நீங்கள் ஒரு தாழ்த்தப்பட்டவராகவோ, பெண்ணாகவோ இருப்பீர்களானால், இந்தக் கருத்தின் வலிமை புரியக் கூடும். உயர எழும்பி நின்று கையில் கோலை ஏந்தி, ‘நானே […]

Continue Reading