12 thoughts on “Napoleon

  1. ‘கறுப்பு’ தொகுப்பில் இக்கவிதைப் பிரதியின் தமிழ் மொழிபெயர்ப்பை வாசித்த ஞாபகம். அதிகாரத்தின் வடிவமாற்றம் பற்றிய மிக நுணுக்கமான புரிதலுடன் சுகன் மொழிபெயர்த்திருக்கிறார் என்பது இந்த ஆங்கில வடிவத்தை வாசித்த பிறகு உணர முடிகிறது. அந்தப் பிரதியையும் இங்கு பிரசுரிக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

  2. இபோதுதான் காலப் பொருத்தம் வந்து சேர்ந்திருக்கிறது – முன்னெப்போதிருந்ததையும் விட. 😉

  3. பிரபாகரன்

    பிள்ளைகாள் வேலுப்பிள்ளை பிரபாகரன் எப்போது பிறந்தான்
    என்று கேட்கிறார் ஆசிரியர்
    ஆயிரம் ஆண்டுகள் முன்பு என்றனர் பிள்ளைகள்
    நூறு ஆண்டுகள் முன்பு என்றனர் பிள்ளைகள்
    சென்ற ஆண்டு என்றனர் பிள்ளைகள்
    எவருமே அறியார்

    பிள்ளைகாள்
    வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ன செய்தான்
    என்று கேட்கிறார் ஆசிரியர்
    ஒரு போரை வென்றான் என்றனர் பிள்ளைகள்
    ஒரு போரைத் தோற்றான் என்றனர் பிள்ளைகள்
    எவருமே அறியார்

    எங்கள் கசாப்புக் கடைக்காரனிடம்
    பிரபாகரன் என்றொரு நாய் இருந்தது
    கசாப்புக் கடைக்காரர் அதை அடிப்பார்
    ஒரு ஆண்டு முன்னர் அது பட்டினியாற் செத்தது
    என்றான் சதீஷ்

    இப்போது எல்லாப் பிள்ளைகளும் பிரபாகரனுக்காக வருந்துகின்றனர்.

    -மிரோஸ்லாவ் ஹொலுப்
    மூன்றாங்கையாகத் தமிழில் தழுவல்: சுகன்
    (கறுப்பு:2002)

  4. இது நல்லமில்ல.
    புலியள் தோற்கிறதில கவலயில்ல. ஆனா சந்தோசங்கொண்டாடுறது
    நல்லமில்ல. ஆத்திரமூட்டுற வேலை

  5. கறுப்பில் படித்த போதே தோன்றிய விடயம்; இப்படி ‘மூன்றாம் கையாக தமிழில்’ தழுவுவது அருமயான யோசனை சுகன். எங்களுடைய காலம், சூழலுக்கு வேறொரு காலத்தினதும், சூழலினதும் பிரதியைக் கொணர முடிகிறது இல்லையா? அலெக்ஸாண்டர் ப்ளொக்-இன் கவிதையை (செங்காவலர் தலைவர்) ஏ.ஜே இப்படியாய் தழுவியிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்?

  6. hari !
    ஏ.ஜே. இன் செங்காவலர் தலைவர் கவிதை இருந்தால் அனுப்பி உதவவும்.

  7. சுகன், அக்கவிதையைத் தமிழில் படித்த ஞாபகம் இல்லை. அதைப் பற்றி ஏ.ஜே கட்டுரை மட்டுமே எழுதியிருக்கிறார். இது `மித்ர` வெளியீடாக வந்த `செங்காவலர் தலைவர்` எனும் நூலின் முதலாவது கட்டுரை. அக்கட்டுரையில் ப்ளோக்கின் கவிதையை ஏ.ஜே வியாக்கியானப்படுத்தியிருந்த விதம் அருமையானது. இப்புரட்சியின் ஆன்மீக வறுமை எங்கு கொண்டு போய் விடப் போகிறது என்பதான பயம் ப்ளோக்-இடம் இருந்ததாய் நிறுவியிருப்பார். அது உண்மைதான்.

  8. ஒக்டோபர் புரட்சி எதிர்கொண்ட முதலாம் கவித்துவ எதிர்வினை அது. 1918-இல எழுதியிருக்கார். கவிதைட பகைப்புலம் பனி பொழிகிறதும் காற்று சுழன்றடிப்பதுமான பெட்ரோகிராட் நகர வீதி. பன்னிரண்டு போல்ஷெவிக்குகள் அணிநடை செய்கிறார்கள். கும்மிருட்டு, பசியால் அலைகிற வீதியோர மக்கள் அவர்களுக்கிடையில் `கருமமே கண்ணாய்` செல்கிற இவர்கள். இடையில் இவர்களில் ஒருவன் ஒரு பெண்ணைச் சுட்டுக் கொல்கிறான். அது அவன் காதலி என்பது பிற்அகு வாசகருக்கு சொல்லப் படுகிறது. இப்படியாய், புரட்சி உருவாக்கித் தரும் ஈரமற்ற வரட்சி, ரஷ்யாவின் அன்றைய பொழுதுகள் என அழகாய் சொல்லப்பட்டு பின்னர் இறுதியில் இப்படி முடிகிறது கவிதை:
    ahead of them goes Jesus Christ.

    – உங்களுக்கெல்லாம் முன்னால் சென்று கொண்டிருப்பவர் யேசு நாதரே. அவருடைய ஆன்மீகம் நிறைந்த புரட்சியே முதன்மையானதும் மகத்தானதுமாகும் – என்கிற மாதிரியாக வாசிக்கலாம். இது அன்ரி-கொம்யூனிஸ்ட் வாசிப்பு என்றால் இருக்கவே இருக்கிறது புரட்சி யேசுநாதரால் ஆசீர்வதிக்கப் பட்டு அவராலேயே வழிநடத்தப் படுகிறது; அவர் முன் செல்ல, பின் தொடர்கிறார்கள் போல்ஷெவிக்குகள் என்னும் வாசிப்பு. உங்கள் இஷ்டம் 😉

  9. இதில முக்கியமான விஷயம் ப்ளோக் ரஷ்யாவின் சிதைந்து கொண்டிருந்த feudal / lords வர்க்கத்தை சார்ந்தவர். நல்ல கவிஞர், புரட்சிக்கு தாராளமாகவே ஆதரவு தெரிவிச்சவர், தனது சமூகத்தை எதிர்த்தவர் என்றெல்லாம் இருந்தாலும் சிலதை விடுறது கஷ்டமில்லையா? (ஹரிஹரஷர்மாவாக என் அனுபவம் பேசுவதைக் கேளுங்கள் 😛 ) அதேபோல தமிழில் வியாக்கியானப்படுத்திய ஏ.ஜேவும் aristocrat/கத்தோலிக்க குடும்பப் பின்னணியில இருந்து வந்தவர். செத்துப் போன கடவுளுக்கான ஏக்கம் எண்டது சும்மா விஷயமில்லை. அது கிடக்க, நான் சொல்ல வந்த விஷயம், எங்கட புரட்சி பற்றி, அதனுடைய ஆன்மீக/மானுட வெறுமையுடன் ப்ளோக்கை தொடர்புறுத்தியிருந்தால் எங்கட சனங்களுக்கு அப்பவே புத்தி வந்திருக்கும். மிராஸ்லாவ் ஹொலூப்பின் கவிதையில் வந்து நிற்கவும் வேண்டியிருந்திருக்காது.

  10. எனக்கென்னவோ மிராஸ்லாவ் இனது கவிதை நிகழ் காலம் பற்றியது போன்றே தெரிகிறது.நெப்போலியன் போன்ற கதானாயகர்களின் பழைய ஊசிப்போன வரலாறு அவர்களது பிறப்பு வெற்றி என்பவை எம்மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதைப்பற்றி அறியநாம் பெரும் பிரயத்தனம் எடுப்பதும் இல்லை. ஆனால் ஒரு வருடத்திற்குமுன் எமக்கு முன்னால்நிற்கும் கசாப்புக்கடைக்காரனின்நாயின் அவலமும் இறப்பும் எமக்குள் ஒரு உடனடித்தாக்கதை ஏற்படுத்துகிறது. அதுநிகழ் காலம்.

  11. ப்ளோக் கின் கவிதைக்குமேலே அற்புதமாக எடுத்துரைத்ததை என்னென்பேன்! BRAVO! இனி கவிதையை வாசித்தால் சிலவேளை சப்பென்று ஆகிவிடும்.

  12. //எனக்கென்னவோ மிராஸ்லாவ் இனது கவிதை நிகழ் காலம் பற்றியது போன்றே தெரிகிறது.// ragavan
    இதிலென்ன சந்தேகம். அது அப்படியே தான்.
    சுகன், நன்றிகள். 🙂

Comments are closed.