
ஒக்ரோபர் 21 எழுச்சியின் நாற்பதாவது வருட நினைவுகளும் பாடங்களும்
-ஷோபாசக்தி
ஊர்களில் திரிகின்ற நாய்களும் தடையின்றி
உள்வந்து போகுதையே - கோவிலின்
உள்வந்து போகுதையே - நாங்கள்
உங்களைப் போலுள்ள மனிதர்களாச்சே
உள்வந்தால் என்சொல்லையே - கோவிலின்
உள்வந்தால் என்சொல்லையே
-சுவாமி செம்மலை அண்ணலார்
1. அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தாறாம் வருடம்! ஒக்ரோபர் இருபத்தோராம் நாள்! பத்து நூற்றாண்டுகளாக எல்லா வகையான கீழைத்தேய மேலைத்தேய விடுதலைத் தத்துவங்களையும் தன் முன்னே மண்டியிட வைத்துத் தின்று செரித்துக் கழித்த கொடூர யாழ்ப்பாணத்துச் சாதியச் சமூகத்தை அசைப்பதற்காகச் சுன்னாகம் சந்தை மைதானத்தில் ஆயிரக்கணக்கான சாதியொழிப்புப் போராளிகள் அணிவகுத்து நின்றார்கள். அவர்கள் ‘சாதி அமைப்புத் தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்!’ ‘குறள் கண்ட தமிழனுக்குக் கறள் கொண்ட பேணி!’ ‘ஆலயங்களைத் திறந்து விடு!’ ‘இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சி நீடூழி வாழ்க!’ என்ற முழக்கங்களை எழுப்பியவாறே ஊர்வலமாக யாழ் நகரத்தை நோக்கி நகர்ந்தார்கள். போராட்டத்தை இலங்கைப் பொதுவுடமைக் கட்சி(சீனச் சார்பு) வடிவமைத்திருந்தது. இரண்டாயிரம் பேர்கள் வரையான தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் பொதுவுடமைக் கட்சியின் வாலிபர் இயக்கமும் போராட்டத்தில் இணைந்திருந்தது. கே.டானியல், கே.ஏ.சுப்பிரமணியம், வீ.ஏ.கந்தசாமி, சு.வே.சீனிவாசகம், டி.டி.பெரேரா, சி.கா. செந்திவேல், சூடாமணி போன்ற பொதுவுடமைக் கட்சியின் தீவிர செயற்பாட்டாளர்கள் ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கி முன்னணியிற் சென்றார்கள்.
2. அப்போதைய டட்லி சேனநாயக்கவின் அய்க்கிய தேசியக் கட்சி அரசில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், அ.அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழரசுக் கட்சியும் இணைந்திருந்தது. தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மு.திருச்செல்வம் இலங்கை அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார். ஊர்வலத்திற்கு முறைப்படி காவற்துறையிடம் அனுமதி பெற்றிருந்த போதும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் அழுத்தத்திற்குப் பணிந்து இறுதி நேரத்தில் காவற்துறை ஊர்வலத்திற்குத் தடை விதித்தது. எனினும் அரச அடக்குமுறைகளுக்குப் பணியாத ஊர்வலத்தினர் தடையை மீறி யாழ்நகரத்தை நோக்கி முன்னேறியபோது காவற்துறை தனது காட்டுமிராண்டித்தனத்தை ஊர்வலத்தில் கட்டவிழ்த்துவிட்டது. முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோதும் பொலிசாரின் தடியடிப் பிரயோகத்தால் வீதியிற் குருதியோடியபோதும் சாதியொழிப்புப் போராளிகள் கலைந்தோடவில்லை. அவர்கள் கட்டுப்பாட்டோடும் போர்க்குணத்துடனும் காவற்துறையின் ஆயுத அரண்களைத் தகர்த்துக்கொண்டு தொடர்ந்து யாழ் நகரின் முற்றவெளியை நோக்கி முன்னேறினார்கள்.
3. அன்றைய எழுச்சியைத் தொடர்ந்து பற்றிய தீயிற் தலித் மக்கள் அரசியற் களத்திற் புத்தெழுச்சிகளைப் பெற்றார்கள். திறக்கப்படாத ஆலயங்களின் முன்னாலும் தேனீர்க் கடைகளின் முன்னாலும் பட்டினிப் போராட்டங்களும் மறியல்களும் ஒருபுறம் நிகழத் தொடர்ச்சியாகத் தலித் போராளிகள் அடித்த அடியில் வீசிய எறிகுண்டுகளில் மெல்ல மெல்ல யாழ்ப்பாண வெள்ளாளர்களின் கோயிற் கதவுகளும் தேனீர்க் கடைக் கதவுகளும் பாடசாலைப் படலைகளும் திறக்கத் தொடங்கின. சங்கானைப் பகுதிகளில் ஆயுதங்களைத் தாங்கித் தலித் இளைஞர்கள் சாதி வெறியர்களிற்கெதிராகக் கிளர்ந்தெழுந்தபோது யாழ்ப்பாணத்து ஆதிக்க சாதிகளின் அரசியற் பிரதிநிதிகளான தமிழரசுக் கட்சியும் தமிழ்க் கொங்கிரசும் ‘சங்கானை ஷங்காயாக மாறிவிட்டது அங்கே கொம்யூனிஸ்டுகள் மக்களைக் கிளர்ச்சிக்குத் தூண்டிவிடுகிறார்களென’ ஓலமிட்டனர். ஆற்றாத கட்டத்தில் தந்திரத்துடன் குழைந்தவாறே தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்துடன் பேச்சுவார்த்தைகளுக்கு இறங்கி வந்தார்கள். இறுகிய சாதிக் கோட்டையை அசைத்துக் குறிப்பிடத் தகுந்த சில உரிமைகளைத் தலித் மக்கள் வெற்றிகொள்வதற்குத் துவக்கமாய் அமைந்த ஒக்ரோபர் எழுச்சியின் நாற்பதாவது நினைவு வருடமிது.
4. ஒக்ரோபர் எழுச்சியை ஒட்டி உருவான சாதியத்திற்கு எதிரான போராட்டங்களை வழி நடத்திய சிந்தனையாளர்களில் முக்கியமானவரான தங்கவடிவேல் மாஸ்ரர் 2003ம் வருடம் ஈழத்திலிருந்து பிரான்ஸிற்கு வந்திருந்தபோது அவரை மய்யப்படுத்தித் தோழர்களால் ஒரு சிறிய கருத்தரங்கு பாரிஸில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கருத்தரங்கில் உரையாற்றிய அவர் ஈழத்துச் சாதியப் படிமுறைகள், வழமைகள், ஒடுக்குமுறைகள், சாதியத்தை எதிர்த்துத் தோன்றிய அமைப்புகள், போராட்டங்களென்று விரிந்த தளத்தில் காத்திரமானதோர் உரையை நிகழ்த்தினார். எனினும் அவரின் உரை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகள் வரையான வரலாற்றுடனேயே நின்று விட்டது. பின் தொடர்ந்த கலந்துரையாடலின்போது தங்கவடிவேல் மாஸ்ரரிடம் ஒரு தோழர் “நீங்கள் எழுபதுகளுக்குப் பிந்திய தலித் மக்களின் போராட்டங்கள் குறித்தோ சாதிய ஒடுக்குமுறைகள் குறித்தோ ஏன் பேசவில்லை? முப்பது வருடங்களாகத் தொடரும் தேசிய விடுதலைப் போராட்டத்திற்குப் பின்பாக ஈழத்தில் சாதியம் எப்படியிருக்கிறது?” என்ற கேள்விகளை எழுப்பினார். அந்த இரு முக்கியமான கேள்விகளுக்கும் சேர்த்துத் தங்கவடிவேல் மாஸ்ரரும் ஒரு அதிமுக்கியமான பதிலை இவ்வாறு சொன்னார்: “எனக்கு இப்போது எழுபத்தியிரண்டு வயதாகிறது, என்றாலும் கூட எனக்கு இன்னமும் உயிர் மேல் ஆசையிருக்கிறது, நான் இந்தக் கருத்தரங்கத்தை முடித்துக்கொண்டு மீண்டும் யாழ்ப்பாணத்திற்குத்தான் செல்லவேண்டியிருக்கிறது.”
5. தங்கவடிவேல் மாஸ்ரரின் பதிலை விளங்கிக்கொள்வதில் அறிவு நாணயம் உள்ளவர்களுக்குச் சிரமமேதும் இருக்காது. இன்றைக்கு ஈழத்தில் குறிப்பாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தலித் அரசியலைப் பற்றி மட்டுமல்ல வேறெந்த அரசியலைப் பற்றியும் யாரும் எதுவும் பேசிவிட முடியாது. மக்களின் கருத்துச் சுதந்திரமும் அரசியற் சுதந்திரமும் புலிகளால் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளன. முசுலீம்களுக்கான அரசியல் இயக்கம், தலித்துக்களுக்கான அரசியல் இயக்கம், தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள் என்று ஒடுக்கப்பட்டவர்களின் அரசியலைப் பேசும் எவருக்கும் ஈழத்துப் பரப்பில் கடந்த இருபது வருடங்களாகவே இடமில்லை. முசுலீம்கள் வடக்கிலிருந்து முற்றாகத் துரத்தப்பட்டுக் கிழக்கில் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டார்கள். அனைத்துத் தொழிற்சங்கங்களும் புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டுத் தொழிற்சங்கத் தலைவர்களான எஸ்.விஜயானந்தனும் வி.அண்ணாமலையும் படுகொலை செய்யப்பட்டார்கள். மனித உரிமைகளுக்கான வெகுசன இயக்கத்தின் தலைவர் ரி. இராஜசுந்தரமும் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். பொதுவுடமைக் கட்சியின்(மா.லெ) முன்னணிச் செயற்பாட்டாளரான சி.துரைசிங்கம் சங்கானையில் வெட்டிக் கொல்லப்பட்டார். ஒக்ரோபர் எழுச்சியின் தலைவர்களில் ஒருவரும் மூத்த இடதுசாரியுமான கே.ஏ. சுப்பிரமணியம் மீதும் கொலை முயற்சி நிகழ்த்தப்பட்டது. எல்லாவித சமூக ஒடுக்குமுறைகளையும் தமிழ்த் தேசியத்தின் பேரால் சகித்துக்கொள்ளுமாறும் பொறுத்துப் போகுமாறும் தமிழ்த் தேசியவாதம் ஒடுக்கப்பட்ட மக்களிற்கு ஆயுதமுனைகளில் எச்சரிக்கை செய்கிறது.
6. ஈழத் தமிழ்ச் சமுகத்தின் மூன்றிலொரு பங்கினரான தலித் மக்களைத் தமிழ்த் தேசியத்தை நோக்கி இழுப்பதற்காக எண்பதுகளின் முற்கூறுகளில் தமிழ்த் தேசிய இயக்கங்கள் ‘சாதியொழிப்பு தமிழ்த் தேசிய விடுதலையிலேயே சாத்தியமாகும்’ என்ற பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தன. தலித் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இயக்கிக்கொண்டிருந்த திருவள்ளுவர் மகாசபை போன்ற ஓரிரு சிறு தலித் அமைப்புகளும் இயக்கங்களால் மௌனமாக்கப்பட்டன. எண்பதுகளில் அடித்த தேசியவாத அலையும் இயக்கங்களின் கைகளிலிருந்த ஆயுதங்களும் இவற்றைச் சாதித்தன. புதிய நிலமைகளை மதிப்பீடு செய்த கே. டானியல் “குறைந்தபட்சம் முதலில் வட பிரதேசத்தில் மட்டும் தனி இராச்சியம் அமைப்பதெனினும் தனியாக யாழ்ப்பாணப் பிரதேசத்தில் உள்ள 7,92,246 தமிழர்களில் மூன்று இலட்சம் அளவுள்ள ஒடுக்கப்பட்டவர்களின் ஒப்புதலைக்கூடப் பெற்றுவிட முடியாது” என்றார் (டானியல் கடிதங்கள் பக்: 107). ஆனால் டானியலின் மதிப்பீடு அப்போதைக்குப் பொய்த்துப்போனது. தலித் அரசியல் என்ற தனித்துவமான அரசியல் நிலைப்பாடு ஏதும் ஈழத்தில் அறியப்பட்டிருக்காத அந்தக் காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டோர்களின் அமைப்பான சிறுபான்மைத் தமிழர் மகாசபை செயலற்றுப் போயிருந்ததாலும் தலித் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியிருந்த இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சி ( ருஷ்ய சார்பு), லங்கா சமசமாஜக் கட்சி ஆகியவற்றின் சிங்கள இனவாதப் போக்குகளாலும் எழுபதுகளில் சீனச்சார்புக் கொம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கமும் உள் முரண்பாடுகளால் சிதறிப்போயிருந்ததாலும் கொதிப்பும் சலிப்புமடைந்திருந்த அரசியல் உணர்மை பெற்றிருந்த ஆயிரக்கணக்கான தலித் இளைஞர்கள் தம்மை விடுதலை இயக்கங்களில் இணைத்துக்கொண்டார்கள். ஆண்டாண்டு காலச் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு சோசலிஸத்தையும் சமூக சமத்துவத்தையும் உச்சரித்துக்கொண்டிருந்த இந்த விடுதலை இயக்கங்கள் தீர்வு காணுமென அவர்கள் அப்பாவித்தனமாக நம்பினார்கள்.
7. ஆனால் எந்த விடுதலை இயக்கத்திடமும் சாதியம் குறித்த, சாதிய ஒடுக்குமுறைமைகள் குறித்த, சாதிய விடுதலை குறித்த எளிமையான வேலைத்திட்டங்கள் கூடவிருக்கவில்லை. ஓரளவு சாதிய ஒடுக்குமுறைகள் குறித்துக் கவனம் செலுத்திய ‘ஈ.பி.ஆர்.எல்.எவ்’, ‘ஈரோஸ்’ போன்ற இயக்கங்கள் கூட கே. டானியல் சொல்வது போல் “எசமானையும் அடிமைகளையும் இனப்பிரச்சினை சுலோகத்தின் கீழ் ஒன்றிணைத்து இறுதியில் தமிழருக்கென மட்டுமே ஒரு தமிழ்ச் சோசலிஸ ஈழத்தை உருவாக்கி விடலாமென்றே முடிவு கட்டினர்கள்”. தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் காலகட்டத்தோடு நின்று போய்விட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டங்களைத் தொடர்ந்தும் உறுதியோடு முன்னெடுத்துச் செல்வதில் தமிழ்த் தேசிய இயக்கங்கள் எதுவித அக்கறைகளையும் காட்டவில்லை. உண்மையில் அவர்கள் சாதியத்திற்கு எதிரான போரை முன்னெடுத்தால் ஈழத்தின் பெரும்பான்மையரான ஆதிக்க சாதிகளிடமிருந்து தாங்கள் அந்நியப்பட்டுவிடலாம் என அஞ்சிச் சந்தர்ப்பவாதங்களில் வீழ்ந்தார்கள். ஏலவே சாதியத்திற்கு எதிரான குறிப்பான போராட்டங்களை முன்னெடுத்திருந்த பொதுவுடமைக் கட்சி ஆதிக்க சாதியினரால் முழுவதுமாக நிராகரிக்கப்பட்டிருந்த வரலாற்றையும் இந்தச் சந்தர்ப்பவாதிகள் அறிந்திருந்தார்கள்.
8. தொண்ணூறுகளிற்குப் பின்பு ஈழத்தில் தமது தனி ஆதிக்கத்தை நிறுவிய விடுதலைப் புலிகள் இயக்கம் சாதியத்தை எவ்வாறு எதிர்கொள்கின்றது என்பதையும் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம். தங்களின் தொடக்க காலத்தில் புலிகளும் சாதி, வர்க்க ஒடுக்குமுறையற்ற சோஸலிசத் தமிழீழம் என்றுதான் வாயடித்தார்கள். புலிகள் பேசிய சோசலிஸத்தின் பின்னாலிருந்த சூட்சுமத்தை அடேல் பாலசிங்கம் யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்பைக் குறித்து எழுதும்போது இவ்வாறு விளக்குகிறார்: “உயர்சாதி வேளாளர் என அழைக்கப்படும் நடுத்தர வர்க்கமே அங்கு மேலோங்கி நிற்கின்றது. மேலும் யாழ்ப்பாணத் தமிழரைப் பொறுத்தவரையில் அவர்களுக்கென்று நம்பிக்கை முறைகளும் அரசியல் உள்ளுணர்வுகளுமுண்டு. எவ்வளவுதான் தத்துவப் பகுப்பாய்வுகளை முன்வைத்தாலும் அல்லது வலியுறுத்திக் கூறினாலும் அவர்களடைய சிந்தனைப் போக்கை அவை இலகுவில் மாற்றப்போவதில்லை. ஆயுதப் போராட்டமானது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டம் என்பதை நியாயப்படுத்துவதற்காகவே விடுதலைப் புலிகள் தங்களது ஆரம்பகால வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் மார்க்ஸிய – லெனினியத் தத்துவங்களைப் பயன்படுத்தினார்கள்” (சுதந்திர வேட்கை, பக்: 58). இதன் சுருக்கம் புலிகள் யாழ்பாணச் சமூகக் கட்டமைப்பைப் புரட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணச் சமூகத்தின் நாடி பிடித்து ஓடினார்கள் என்பதாகும். யாழப்பாணச் சமூகத்தின் நம்பிக்கை முறைகளுக்கு ஊறுசெய்யாமல் ஒதுங்கிக்கொண்டார்கள் என்பதாகும். இங்கு யாழ்ப்பாணச் சமூகத்தின் நம்பிக்கைகள் என்று அடேல் குறிப்பிடுவது சாதிய நம்பிக்கைளைத் தவிர வேறெதுவாகயிருக்க முடியும்? சாதியத்தைத் தவிர்த்து யாழ்ப்பாணச் சமூகத்திற்கு வேறெதும் தனித்துவமான நம்பிக்கைகளோ அரசியல் உணர்வுகளோ கிடையவே கிடையாது. விடுதலைப் புலிகள் தாங்கள் யாழ்ப்பாண மரபுகளைப் பேணுவதாகச் சொல்லிக் கொள்வதில் பெருமையடைபவர்கள். புலிகளின் தலைவரே வைதீக முறையிற்தான் திருப்போரூர் கோயிலில் தனது துணைவியாருக்குத் தாலியைக் கட்டினார். புலிகள் உலகத்தின் பல பாகங்களிலும் சனாதன இந்துக் கோயில்களை நிறுவி நடத்தி வருகிறார்கள். விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத் திட்டங்களிலும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்த எந்தக் கவனமும் காணப்படுவதில்லை. அவர்களின் மாவீரர் நினைவுதின உரைகளிலோ அரசியல் அறிக்கைகளிலோ தீர்வுத் திட்டங்களிலோ கலை இலக்கிய வெளிப்பாடுகளிலோ அவர்கள் சாதியக் கொடுமைகளைக் குறித்து எதுவும் பேசுவதில்லை. மறுதலையாக அவர்கள் அங்கெல்லாம் பண்டைய காலத் தமிழர்களின் வீரங்களையும் பெருமைகளையும் கொண்டாடி மீட்புவாதம் பேசுகிறார்கள். பண்டையத் தமிழர்களின் வாழ்வு என்பது தாழ்த்தப்பட்ட சாதிகளை மிதித்தெழுந்த வரலாறுதான், பண்டைய தமிழர் மாண்பென்பது சாதிய மாண்புதான், தமிழரின் வரலாறு என்பதே சாதியத்தின் கறைபடிந்த வரலாறுதான் என்பது போன்ற உண்மைகள் புலிகளுக்கு உறைப்பதேயில்லை.
9. விடுதலைப் புலிகள் அறிவித்துக்கொண்ட அதி வலதுசாரிகள், அறியப்பட்ட பாஸிஸ்டுகள். சாதிய, வர்க்க, பால், பிரதேச முரண்களை அவர்கள் சுத்த வலதுசாரிக் கண்ணோட்டத்திலும் யாழ் மரபுகளின்படியும் தேசவழமைச் சட்டங்களாலுமே அணுகுகிறார்கள். இந்தச் சமூக ஒடுக்குமுறைகளிற்கான நியாயமான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் அவர்களின் அரசியல் நிகழ்வு நிரலில் என்றுமே இடமிருந்ததில்லை. இவை குறித்த கேள்விகள் எழும்போதெல்லாம் ‘தமிழீழ விடுதலையோடு இவையெல்லாம் சாத்தியமாகுமென’ மூஞ்சியை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு மந்திரத்தால் மாங்காயடிக்கும் உபாயத்தை அவர்கள் பிதற்றுகிறார்கள். முதலில் ஆதிக்கசாதித் தமிழனிடமிருந்து தாழ்த்தப்பட்ட தமிழனுக்கு விடுதலையைப் பெறவேண்டுமென எவராவது மறுத்துக் கதைத்தால் அந்த மறுத்தோடி கண நேரத்தில் தேசத்துரோகியாகி விடுகிறார். முதலில் அந்த மறுத்தோடி துரோகியென ‘நிதர்சனத்தில்’ செய்திவரும். பின்பு எல்லாளன் படையிலிருந்து ஓலைவரும், தொடர்ந்து உந்துருளியில் சாவும் வரும். தமது இயக்கத்திற்கான அரசியற் பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்வதைத் தவிர்த்து விடுதலைப் புலிகளிடம் தமிழ் மக்கள் நலன்கள் சார்ந்த வேறெந்த வேலைத்திட்டமும் கிடையாது. கடந்த இருபது வருட காலங்களாகத் தொடரும் புலிகளின் உச்சமான பாஸிஸச் செயற்பாடுகளால் ஒரு மக்கள் விடுதலை இயக்கத்துக்குரிய, சமூகப் புரட்சி அமைப்புக்குரிய, சனநாயக அமைப்புக்குரிய எல்லாவித அறங்களையும் தகுதிகளையும் இழந்திருக்கும் புலிகள் சாதிய ஒடுக்குமுறைகளிற்கான தீர்வைத் தருவார்கள் எனச் சொல்வது பிராந்திய வல்லரசான இந்தியா ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டிவிடும் எனச் சொல்லும் அறியாமைக்கு அல்லது அயோக்கியத்தனத்திற்கு ஒப்பானது. அண்மைக் காலங்களில் ஈழத்தில் நிகழ்ந்த எடுத்துக்காட்டான ஓரிரு சாதியப் பிரச்சனைப்பாடுகளில் புலிகள் எவ்வாறான எவருக்குச் சார்பான நிலைப்பாடுகளை எடுத்தார்களென்பதைக் கீழே தொகுத்துக்கொள்வோம்.
10. யாழ் பொதுநூலகத் திறப்பு விழாவும் சாதி வெறியர்களும்:
அய்க்கிய தேசியக் கட்சியின் அப்போதைய அமைச்சர்களான காமினி திஸநாயக்க, சிறில் மத்தேயு, பெஸ்டஸ் பெரேரா ஆகியோரின் ஆணையின்பேரில் 1981ல் யாழ்பொது நூலகம் முற்றாக எரியூட்டப்பட்டது. 1994ல் சமாதானத்தின் பெயரால் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய சந்திரிகா பண்டாரநாயக்க ‘சமாதானத்திற்கான யுத்தத்தை’ நடாத்தி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினார். சமாதானத்திற்குப் பதிலாக அடக்குமுறைச் சட்டங்கள், சிறைகள், செம்மணிப் புதைகுழிகளெனத் தமிழ் மக்களுக்கு வழங்கிய சந்திரிகா யாழ் மக்களுக்கு அரிசி, பருப்பு, மின்சாரமெனச் சில கவர்ச்சிகரமான திட்டங்களையும் வழங்கினார். அவற்றில் முக்கியமானது யாழ் பொதுநூலகப் புனரமைப்புத் திட்டம். சனாதிபதியின் சிறப்பு நிதி ஒதுக்கீடும் புனர்வாழ்வு அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீடுமாக மொத்தம் 120 மில்லியன் ரூபாய் யாழ் பொது நூலகத்தைப் புனரமைக்க ஒதுக்கப்பட்டது.
11. 1944ல் உரும்பிராயில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்த செல்லன் கந்தையன் தனது பதினாறாவது வயதில் யாழ் நகரசபையில் ஓர் அடிமட்டத் தொழிலாளியாக வேலையிற் சேர்ந்தார். அவர் அங்கே முப்பத்தெட்டு வருடங்கள் வேலை செய்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட செல்லன் கந்தையன் 1997ல் தேர்தலில் வெற்றிபெற்று மாநகரசபை உறுப்பினராகி 2001ல் யாழ் மாநகர சபையின் துணை மேயரானார். பின்பு 16 ஜனவரி 2002ல் அவர் யாழ் நகரபிதாவாகப் பதவியேற்றார். யாழ்ப்பாணத்தின் மேயர்கள் விடுதலைப் புலிகளின் முக்கிய கொலை இலக்காகவே எப்போதுமிருக்கின்றார்கள். அல்பிரட் துரையப்பா, சிவபாலன், சரோஜினி யோகேஸ்வரன் ஆகிய மேயர்கள் புலிகளால் கொல்லப்பட்டிருந்த உயிர்ப் பாதுகாப்பற்ற கொலைச் சூழலிற் தான் செல்லன் கந்தையன் மேயர் பொறுப்பை ஏற்றிருந்தார்.
12. பெப்ரவரி 2003ல் செல்லன் கந்தையன் தலைமையில் இயங்கிய மாநகர சபை ஒதுக்கப்பட்ட 120 மில்லியன் ரூபாய்களிற்குமான நூலகப் புனரமைப்பு வேலைகளை நிறைவேற்றியது. தொண்ணூற்றொன்பது சதவீதமான வேலைகள் நிறைவு பெற்றுவிட்டன எனத் தலைமைக் கட்டட நிர்மாணப் பொறியியலாளர் மாநகர சபையில் அறிக்கை சமர்ப்பித்தார். திட்டமிடப்பட்டிருந்த பணிகளில் நூலகக் கட்டடத்திற்கு மின்தூக்கி பொருத்துவது, சிற்றுண்டிச்சாலை அமைப்பது, குளிரூட்டிச் சாதனம் பொருத்துவது போன்ற வேலைகளே எஞ்சியிருந்தன. எனினும் ஒதுக்கிய நிதி முடிந்திருந்தது. எது எப்படியிருப்பினும் இந்த மின்தூக்கி, குளிரூட்டி வசதிகளின்மை நூலக வாசிப்பைக் குறிப்பாகப் பாதித்திருக்கப் போவதில்லை. ஏற்கனவே இயங்கிக்கொண்டிருந்த சின்னஞ்சிறிய தற்காலிக நூலகத்திற்குள் இருபத்தியிரண்டு வருடங்களாக அல்லலுற்றுக்கொண்டிருந்த மாணவர்களிற்கும் அறிவுத் துறையினருக்கும் பொதுமக்களிற்கும் யாழ் பொது நூலகம் மீண்டும் இயங்கத் தொடங்குவது உற்சாகமான செய்தியாகவேயிருந்தது.
13. ஒன்பது தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களையும் ஆறு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களையும் ஆறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழக உறுப்பினர்களையும் இரண்டு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உறுப்பினர்களையும் கொண்ட மாநகரசபை புனரமைக்கப்பட்ட நூலகத்தை 14.02.2003ல் திறப்பதெனவும் திறப்புவிழா நிகழ்விற்கு மேயர் செல்லன் கந்தையன் தலைமை வகிப்பதெனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி நூலகத்தைத் திறந்து வைப்பதெனவும் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.
14. அவ்வளவுதான்! யாழ்ப்பாணத்தின் ஆதிக்க சக்திகள் ஒன்றுகூடி ‘லிப்ட் இல்லை, கன்டீன் இல்லை, ஏ.சி இல்லை எப்படி நூலகத்தைத் திறக்க முடியும், அங்கே எப்படிப் படிக்க முடியும்?’ எனக் கண்டனங்களைத் தெரிவித்தனர். பலபத்துக் கண்டனத் துண்டறிக்கைகளையும் நகரம் முழுவதும் விநியோகித்தனர். சாவகச்சேரி கைத்தொழில் வணிக மன்றம், யாழ் ஆசிரியர்கள் சங்கம், சர்வதேச மாணவர் பேரவை போன்ற பல அமைப்புகள் நூலகத்தைத் திறக்கக் கூடாது என்று அறிக்கைகளை வெளியிட்டன. உச்சக்கட்டமாக வெகுஜன ஒன்றியத்தினர் யாழ் பொது நூலகத்தைத் திறப்பதைக் கண்டித்து திறப்புவிழா நாளன்று யாழ்ப்பாணம் முழுவதும் பூரண கடையடைப்பும் கரிநாளும் நடாத்துவோமெனக் கொக்கரித்தனர். புலிகள் தொடர்ச்சியாக யாழ் மேயர் செல்லன் கந்தையனை மிரட்ட ஆரம்பித்தார்கள். சதிமேற் சதி பின்னப்பட்டது. சூழ்ச்சி வியூகங்கள் வகுக்கப்பட்டன. நூலகத்தைத் திறக்க விடாமற் செய்வதற்கு அத்தனை ஆதிக்க சக்திகளும் கரம் கோர்த்துக் களத்துக்கு வந்தன. தேசிய நாளிதளான ‘தினக்குரல்’ தனது 16.02.2003 பதிப்பில் செல்லன் கந்தையனைச் சாதி அடையாளங்களுடன் வரைந்த சாதிவெறிக் கேலிச் சித்திரம் ஒன்றையும் வெளியிட்டது. மிகக் கவனமாக இந்தக் கேலிச் சித்திரம் தினக்குரலின் யாழ் பதிப்பில் மட்டுமே வெளியாகியது.
15. செல்லன் கந்தையனுக்கு எதிராகக் கமுக்கமாகப் விரிக்கப்பட்ட சாதிவெறி வலையின் முக்கிய கண்ணிகளைச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்:
05.02.2003: பதினான்காம் திகதி திறந்து வைக்கப்படவிருக்கும் நூலகத்தைத் திறந்து வைப்பதில் அவசரம் காட்ட வேண்டாமென யாழ் மாவட்டப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி கூட்டமைப்பினரிடம் பேசினார்.
10.02.2003: யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட இரு இளைஞர்கள் மாலை 6.30 மணியளவில் செல்லன் கந்தையனை அவர் அலுவலகத்திற் சந்தித்துப் பதினான்காம் தேதி திட்டமிட்டபடி நூலகம் திறக்கப்பட்டால் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் நிகழ்ந்தது போன்றதொரு இரத்தக்களரியைச் சந்திக்க நேரிடுமென்று மேயரை மிரட்டினர்.
12.02.2003: வன்னியிலிருந்து வந்திருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் சொலமன், இன்னொரு புலி உறுப்பினர் சிறில் மற்றும் இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புலிகளின் முன்னணி அமைப்பான சர்வதேச மாணவர் பேரவையின் அன்றைய தலைவருமான கஜேந்திரன் ஆகியோர் மாநகர சபை அலுவலகத்திற்குள் நுழைந்து நூலகத்தைத் திறக்கக் கூடாதென செல்லன் கந்தையனை எச்சரித்தனர். அன்றிரவு பதினொரு மணியளவில் புலிகள் யாழ் பொதுநூலக வளாகக் காவலாளியைத் துப்பாக்கி முனைகளில் அச்சுறுத்தி அவரிடமிருந்து பிரதான வாயிற் சாவி, நூலக மற்றும் அலுவலகச் சாவிகளை அபகரித்துச் சென்றனர்.
13.02.2003: காலையில் புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி மாநகரசபை அலுவலகம் சென்று, மேயர் செல்லன் கந்தையனிடமும் சபை உறுப்பினர் முகுந்தனிடமும் பூட்டிய அறையினுள் விவாதித்தார். பின் இளம்பரிதி செய்தியாளர்களிடம் பேசுகையில் “திறப்புவிழா நடைபெறுவதை மக்கள் விரும்பவில்லை. எனவே திறப்புவிழாவை ஒத்திவைக்க வேண்டும். இன்றைய சமாதானச் சூழ்நிலையில் ஏன் ஓர் இரத்தக்களரியை உருவாக்க வேண்டும்? எனவே நூலகத் திறப்புவிழாவை நிறுத்தி வைக்குமாறு மேயரைக் கேட்டுள்ளேன்” என்றார். பின் மேயர் செல்லன் கந்தையன் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் “திறப்புவிழாவை நிறுத்துமாறு இளம்பரிதி கேட்டார். நான் மற்றைய சபை உறுப்பினர்களிடம் பேசி முடிவெடுப்பதாக அவருக்குச் சொல்லியுள்ளேன்” என்றார். “நானும் குடும்பஸ்தன்” என்று செய்தியாளர்களிடையே தெரிவிக்கவும் செல்லன் கந்தையன் தவறவில்லை. அன்று மாலையே செல்லன் கந்தையன் தனது மேயர் பதவியை இராஜினாமாச் செய்தார்.
16. நூலகத் திறப்புவிழா புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதைக் குறித்து வீ.ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு சொன்னார்: “யாழ்ப்பாணச் சமூக அமைப்பில் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த மாநகர சபையின் ஆயுட்காலம் முடியும் வேளையில் உலகமே மதிக்கத்தக்க ஒரு செயலைப் பூர்த்தி செய்து, அதன் பெருமையைப் பெறும் சந்தர்ப்பத்தைப் பறிப்பது மனச்சாட்சி உள்ள எந்தவொரு மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். யாழ் மாநகர சபையின் வளர்ச்சிக்கு செல்லன் கந்தையன் செய்த சேவைகளை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. இந்தப் பெருமையைப் பெறவிடாது செல்லன் கந்தையன் அவர்களைத் தடுக்கும் வரலாற்றுத் தவறை என்றாவது ஒருநாள் இவர்கள் உணர்ந்துதான் ஆகவேண்டும்”.
17. யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் செல்லன் கந்தையன் 01.03.2003ல் ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலிருந்து ஒரு பகுதி: “இந்த நூலகம் திறக்கப்படுவதால் புலிகளுக்கு எதுவித பிரச்சினையுமில்லை. அவர்கள் நூலகம் திறப்பதைத் தடுத்ததிற்குப் பின்னால் வேறோரு காரணமுள்ளது என்றே நான் கருதுகிறேன். நான் இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகத்துள் ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவன். யாழ் பொதுநூலகத் திறப்புவிழாக் கல்வெட்டில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவனின் பெயர் பொறிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆம் புலிகள் முற்று முழுதாகச் சாதிய அடிப்படையிலேயே இப் பிரச்சினைகளை அணுகினார்கள் என்றே நான் நினைக்கிறேன்”.
18. வீ. ஆனந்தசங்கரியின் அறிக்கை குறித்தோ செல்லன் கந்தையனின் செவ்வி குறித்தோ இன்றுவரைக்கும் புலிகளோ அவர்களது ஆதரவாளர்களோ எதுவும் பேசாமல் கள்ள மௌனம் காத்துக்கொண்டிருக்கிறார்கள். செல்லன் கந்தையன் பதவி விலகிய சில மாதங்களிலேயே யாழ் பொதுநூலகம் எதுவித பிரச்சினையுமில்லாமல் திறந்து வைக்கப்பட்டதும் இங்கே கவனிக்கத்தக்கது. செல்லன் கந்தையன் சாதியத்தின் பெயரால் வஞ்சிக்கப்பட்டது இதுவல்ல முதற்தடவை. அவர் துணை மேயராகப் பதவி வகித்தபோது அப்போதைய மேயரும் பிற்காலத்தில் புலிகளின் மும்மொழிப் பிரச்சாரப் பீரங்கியுமாகத் திகழ்ந்த என். ரவிராஜால் பூட்டிய அறைக்குள் வைத்துச் சாதி சொல்லித் தாக்கப்பட்டிருந்தார்.
19. சாதியும் சதியும்:
விமல் குழந்தைவேல் எழுதிய ‘வெள்ளாவி’ நாவல் கிழக்கிலுள்ள தீவுக்காலை என்ற கிராமத்திலுள்ள தாழ்த்தப்பட்ட சலவைத் தொழிலாளர்கள் சமூகத்தைப் பற்றிப் பேசும் நாவல். அந்த நாவல் தமது சமூகத்தைக் கேவலப்படுத்துவதாக விமர்சனங்களை வைத்த தீவுக்காலை தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அந்த நாவலைத் தடை செய்யும்வரை ஆதிக்க சாதியினரின் கல்யாணம், இழவு போன்ற சடங்கு வீடுகளுக்குச் சென்று தொண்டூழியம் செய்யமாட்டோம் எனச் சொல்லிவிட்டார்கள். இத் தொண்டூழிய மறுப்பால் தீவக்காலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இறந்த ஆதிக்க சாதியினர்களின் பிரேதங்கள் நாட்கணக்கில் கிடந்து நாறத் தொடங்கின. ‘நாறினாலும் பரவாயில்லை, வண்ணார் வந்து சாதிக் கடமைகளை ஆற்றாமல் சவங்களை எடுக்கமாட்டோம்’ என்றனர் ஆதிக்க சாதியினர். இந்தக் கட்டத்திற்தான் பிரச்சினையில் அப் பகுதியின் புலிகளின் பொறுப்பாளர் குயிலின்பன் தலையிட்டார். உடனடியாக ‘வெள்ளாவி’ நாவல் புலிகளால் தடைசெய்யப்பட்டது. நாறின பிணங்களும் சாதியச் சடங்குகள் ஆற்றப்பட்டுத் தூக்கப்பட்டன. இங்கு புலிகளின் கவலையெல்லாம் சாதியச் சடங்குகளிலும் முறைமைகளிலும் எதுவித ஊறும் நேர்ந்திடக்கூடாது என்பதிலேயே இருக்கிறது என்றுதான் நம்மால் கருத முடிகிறது. ஏனெனில் பிணம் நாறினால் நாறட்டும் என்று புலிகள் சும்மாயிருந்திருக்க வேண்டும். அது சுற்றுச் சூழலுக்குக் கேடாகலாம் என்ற கோணத்தில் அவர்கள் யோசித்திருந்தால் வீடுகளில் பிணங்களை வைத்திருந்தவர்களுக்கு ‘நாலு அடியைப் போட்டு’ப் பிணங்களை அகற்றச் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து ‘வெள்ளாவி’ நாவலைத் தடைசெய்து மறுபடியும் சாதியத் தொண்டூழியங்களையாற்ற ஆதிக்க சாதியினரிடம் தாழ்த்தப்பட்டவர்களை அனுப்பிவைத்த புலிகளின் சமூக அக்கறையை என்னவென்று சொல்ல? வடக்கை விடக் கிழக்கில் வரலாற்றுரீதியாகவே சாதிய ஓடுக்குமுறைகள் ஒப்பீடளவில் சற்றுக் குறைவெனினும் இன்றுவரையிலும் அங்கு சேவினை என்ற பெயரில் தலித்துகள் ஆதிக்க சாதியனருக்குத் தொண்டூழியம் செய்ய நிர்ப்பந்திக்கபட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். கோயில்களிலும் இழவு வீடுகளிலும் பறை அடிப்பதிலிருந்து தம்மை விடுவிக்குமாறு தலித்துகள் ஆதிக்க சாதியினருக்கும் கோயில் தர்மகர்த்தாக்களுக்கும் ‘உருக்கமான வேண்டுகோள்கள்’ என்ற தலைப்புகளில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துக்கொண்டேயிருக்கிறார்கள். இரண்டொரு வருடங்களிற்கு முன்பு களுதாவளை நான்காம் குறிச்சியில், தலித்துக்கள் கோயிலிலும் மரணவீடுகளிலும் பறையடிக்க மறுப்புத் தெரிவித்தபோது கோயில் தர்மகர்த்தாக்களையும் முந்தியடித்துக்கொண்டு அறிவுத்துறையினரான ‘முன்றாவது கண்’ இதழின் ஆசிரியர் குழுவினர் தலித்துகளின் மறுப்புக்கே மறுப்புத் தெரிவித்த கேவலத்தை ‘மற்றது’ இதழ் -01ல் தோழர்கள் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள்;
20. இந்தவிடத்தில் ‘வெள்ளாவி’ நாவலைப் பற்றியும் சொல்ல வேண்டும். நானும் எழுதுகிறேன் தலித் இலக்கியம் என்று புறப்பட்ட கும்பலில் ஒருவர்தான் விமல் குழந்தைவேல். இதில் நாவலின் முன்னுரையில் “அதை எழுத அதாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது” என்ற புளிப்பு வேறு. மட்டக்களப்பு வட்டார மொழி கையாளப்பட்டிருக்கிறது என்பதற்கு அப்பால் அந்த நாவலில் சிறப்புகள் ஏதுமில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதாரமான பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளாமல், சாதியச் சமூகத்தின் கட்டமைப்புகளைப் புரிந்துகொள்ளாமல் போடியார், பாலியல் பலாத்காரம், பழிவாங்கல் என்று மோசமான தமிழ்ச் சினிமாப் பாணியில் எழுதப்பட்ட படுமோசமான நாவலது. ‘பூனைக்கு விளையாட்டு எலிக்குச் சீவன் போகுது’ என்பார்கள். விமல் குழந்தைவேலின் இலக்கியச் சல்லாபங்களிற்குத் தீவுக்காலைத் தலித் மக்களா சம்பல்? அதே வேளையில் வெள்ளாவி நாவலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதற்காகப் புலிகள் நாவலை தடைசெய்யவில்லை. அவர்கள் சாதிய வழமைகளுக்கு ஊறுகளேதும் நிகழந்துவிடக் கூடாது என்பதற்காகவே நாவலைத் தடை செய்திருக்கிறார்கள் என்று மேலே சொல்லியிருக்கிறேன். இதை மீறியும் இல்லை, சாதியை ஒழிப்பதற்காகத்தான் புலிகள் வெள்ளாவியைத் தடை செய்திருக்கிறார்கள் என்று யாராவது மட்டையடி நியாயம் பேசினால் அவர்கள் ஒன்றை யோசித்துப் பார்க்க வேண்டும். வெள்ளாவி நாவல் அதிகபட்சம் இருநூறு பிரதிகள் ஈழத்தில் விற்பனையாகியிருக்கும். அதையே சாதியொழிப்புக் காரணமாகத் தடை செய்யும் புலிகள் வாரத்திற்கு இலட்சணக்கான பிரதிகள் விற்பனையாகும் வீரகேசரி, தினக்குரல், உதயன் போன்ற பத்திரிகைகளில் வெளியாகும் அப்பட்டமான சாதிவெறித் திருமண விளம்பரங்களை ஆகக் குறைந்தது தங்களது கட்டுப்பாட்டு பிரதேசங்களிலாவது ஏன் தடைசெய்யவில்லை? இந்தக் கேள்விகளைப் பல தடவைகள் கேட்டாகிவிட்டது. பல ‘பெட்டிசங்களும்’ போட்டாகிவிட்டது. கையெழுத்து இயக்கமும் நடாத்தியாகிவிட்டது. யாரிடமிருந்தும் எதுவித பதிலுமில்லை. புலிகளுக்கும் அவர்களின் ஆதரவுப் படைகளுக்கும் கள்ள மௌனம் சாதிக்கச் சொல்லியா தரவேண்டும்!
21. அதிபர் கணபதி இராசதுரை கொலை:
கணபதி இராசதுரை மந்துவில் எனும் தலித் கிராமத்தில் 1947ல் பிறந்தவர். மந்துவில் கிராமத்து மக்கள் சாதியொழிப்புப் போராட்டத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்டவர்கள். தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் முன்னெடுத்த சாதியொழிப்புப் போராட்டங்களின் முன்னணியில் நின்று போரிட்டவர்கள் மந்துவில் மக்கள். அப்போராட்டங்களில் இக்கிராம மக்களிற் சிலர் உயிரிழக்கவும் நேரிட்டது. இளம் இராசதுரை இந்தப் போராட்டச் சூழலுக்குள் உருவானவர். அவர் தனது மரணம் வரையில் தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்தவர். இராசதுரை தனது ஆசிரியப் பணியின் தொடக்க காலத்தில், தாழ்த்தப்பட்ட மக்களின் கிராமங்களிலும் குறிச்சிகளிலும் எம்.சி.சுப்பிரமணியம் போன்ற தலித் தலைவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்ட பாடசாலைகளில் கடுமையான உழைப்பைச் செலுத்தித் தலித் மாணவர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். தலித் மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட சாதியச் சூழலிலிருந்து தனது உறுதியாலும் போராட்டத்தாலும் கல்விமானாக உருவெடுத்தவர் இராசதுரை. தலித் மக்களைச் சூழப் பின்னப்பட்டிருந்த இரும்பு வலைகளைக் கண்ணி கண்ணியாக அறுத்தெறிந்துகொண்டே அவர் முன்னே வந்தார். அவர் வடமாகாண பாடசாலை அதிபர்கள் சங்கத்தின் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேரவையின் உறுப்பினர், இலங்கை கல்வி அமைச்சின் நிர்வாக ஆலோசனைக்குழு உறுப்பினர், அரிமா சங்கத்தின் யாழ் வலயத் தலைவரெனப் பல பொறுப்பான பதவிகளை வகித்தார். இந்தக் காலம் முழுவதும் சாதி ஒரு பிசாசைப் போல, ஒரு தேர்ந்த உளவாளியைப் போல அவரைப் பின் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
22. இராசதுரை 1996ல் யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான கல்லூரியான மத்திய கல்லூரியின் அதிபரானார். அவர் அந்தப் புகழ் வாய்ந்த கல்லூரியின் முதலாவது தலித் அதிபராவார். துப்பாக்கியின் நிழலில் நீறுபூத்த நெருப்பாய்க் கிடப்பதாகச் சொல்லப்பட்ட சாதியம் அன்று இன்னொருமுறை கனலத் தொடங்கியது. யாழ் மத்திய கல்லூரியின் அதிபர் பொறுப்பிலிருந்து இராசதுரையை நீக்குவதற்கு ஆதிக்க சாதி வெறியர்கள் பல வழிகளிலும் முழு வீச்சோடு கிரியைகளைத் தொடங்கினர். பதவியிலிருந்து விலகுமாறு அதிபருக்குத் தொலைபேசியில் மிரட்டல்கள் வந்தவாறேயிருந்தன.ஆதிக்க சாதியினருக்கே உரித்தான சாதியத் தந்திரங்களோடு சாதி வெறியர்களால் போடப்பட்ட அழுத்தங்களை தனது உறுதியாலும் தலித் சமூகத்தின் ஆதரவாலும் இராசதுரை எதிர்கொண்டார். யாழ்ப்பாணச் சாதியத்தின் கொடூர முகத்தோடு அவர் நேருக்கு நேராகப் பொருதினார். இராசதுரை மத்திய கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்ட போது கல்லூரியின் முழுக் கட்டடத் தொகுதிகளும் யுத்த அனர்த்தங்களால் முற்று முழுதாகச் சேதமுற்றிருந்தன. குண்டு வீச்சுக்களால் உருவாக்கப்பட்டிருந்த கற்குவியல்களின் மத்தியிலிருந்து அதிபர் தனது பயணத்தை ஆரம்பிக்க வேண்டியிருந்தது. அப்போது கல்லூரியின் விளையாட்டு மைதானம் சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இராசதுரை அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒரே மாதத்தில் சிறிலங்காப் படையினர் கல்லூரி மைதானத்திலிருந்து அகற்றப்பட்டனர்.
23. அதிபரின் கடினமான உழைப்பாலும் சீரிய நிர்வாகத் திறனாலும் கல்லூரி குறுகிய காலத்தில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது. யாழ் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு காலக் கதவுகள் தலித் மாணவர்களிற்காக அகலத் திறந்து வைக்கப்பட்டன. முன்னைய காலங்களை விடப் பன்மடங்குகள் தொகையில் தலித் மாணவர்களிற்குக் கல்லூரியில் அனுமதி வழங்கப்பட்டது. சாதிய மதிப்பீடுகள் அதிபரால் கல்லூரிக்கு வெளியே துரத்தியடிக்கப்பட்டன. அதிபர் இராசதுரையின் காலத்தில் அங்கு கல்விகற்ற ஒரு மாணவனின் பதிவைக் கவனியுங்கள்: “உயர் தரத்தில் எனது பாடத்தேர்வு சார்ந்த காரணங்களால் யாழ்.மத்திய கல்லூரிக்கு மாறவேண்டி வந்தது. ஏகப்பட்ட பஞ்சமர்கள் கற்கும் (வெள்ளாளப் பாஷையில் ‘காவாலிப் பள்ளிக்கூடம்’), ஒரு பஞ்சமரே அதிபராய் இருக்கும் பாடசாலை என்பதில் அம்மாவுக்கு படு எரிச்சல் இருந்தது. அம்மாவுக்கு எனது பாடங்களை வழங்கக் கூடிய யாழ் இந்துக் கல்லூரி விருப்பமான ஒன்றாக இருந்த போதும் அதன் ‘டொனேஷன்’ தொகை அப்பக்கமும் தலை வைக்க விடவில்லை. நான் சேர்ந்த வருடத்தில் அதிபராய் இருந்து பின்னர் கொலையுண்ட அதிபர் இராசதுரை ஒரு பஞ்சமர். பல முற்போக்கான நடவடிக்கைகள் அவரால் பாடசாலையினுள் செய்யப் பட்டிருந்தன. முஸ்லிம் மாணவர்கள் மிகக்குறைந்த அளவிலேயே படித்த போதும் காலைப் பிரார்த்தனையில் அவர்களது பிரார்த்தனையும் இடம்பெறும். இஸ்லாமியப் பிரார்த்தனை, ஒளிவிழா, நவராத்திரி என சகல மதங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது” (muranveliemag.blogspot.com). 2005ம் வருடத்தின் முற்பகுதியில் வன்னியிலிருந்து அதிபருக்கு ஓலை வந்தது. அதைத் தொடர்ந்து எல்லாளன் படை அதிபருக்கு விடுத்த கொலை மிரட்டலைப் புலிகளின் கூலி இணையத்தளமான நிதர்சனம் வெளியிட்டது. இறுதியில் 12.10.2005 அன்று கலாசார நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக யாழ் வீரசிங்கம் மண்டபத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது அதிபர் கணபதி இராசதுரை புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
24. தங்கள் அதிபர் கொலையுண்ட செய்தியை அறிந்ததுதான் தாமதம் யாழ் மத்திய கல்லூரி மாணவர்கள் வீதிகளில் இறங்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களோடு வேறு சில கல்லூரிகளின் மாணவ மாணவியரும் இணைந்து கொண்டனர். யாழ் நகரத்தின் வீதிகள் வெறிச்சோடின. வீதித் தடைகளை ஏற்படுத்தியும் வீதிகளில் டயர்களை எரித்தும் அதிபரின் கொலைக்கு மாணவர்கள் நியாயம் கேட்டு நின்றனர். ஓக்ரோபர் பத்தாம் திகதிவரை மாணவர்கள் வகுப்புக்களுக்குச் செல்ல மறுத்துப் போராடினார்கள். மாணவர்களின் போராட்டங்களைத் தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகள் பல்வேறு வழிகளில் முயன்றனர். மாணவர்களின் எதிர்ப்பைக் கைவிட வலியுறுத்திப் புலிகளின் பாதாளப் படைகளான எல்லாளன்படை, சங்கிலியன்படை, வன்னியன்படை என இன்னோரன்ன படைகளின் பெயரால் துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால் புலிகளின் உத்தியோகபூர்வ ஊடகங்கள் இராசதுரையின் கொலையைக் குறித்துப் பெரும் மௌனத்தில் ஆழ்ந்தன. அதிபர் கொல்லப்பட்ட செய்தியைக் கூட அவை சொல்லாமல் எழுதாமல் இருட்டடிப்புச் செய்தன. பல்வேறு சனநாயக சக்திகளும் அதிபரின் கொலைக்குப் புலிகள்தான் காரணமென்று பகிரங்கமாகக் குற்றஞ் சாட்டியபோதும் புலிகள் வாயையும் திறக்கவில்லை, மறுப்பும் சொல்லவில்லை. அந்த வஞ்சக மௌனம் இன்றுவரை நீடித்துக் கொண்டுதானிருக்கிறது.
25. அதிபர் இராசதுரை செய்த குற்றம்தான் என்ன? புலிகளின் கூலி ஊடகமான நிதர்சனம் அவர்மீது சுமத்திய ‘தேசத்துரோகி’ குற்றச்சாட்டு இன்னமும் எவராலும் நிரூபிக்கப்படாமலேயே இருக்கிறது. ஒரு தலித் சமூகப் போராளியையும் கல்விமானையும் கொன்றுவிட்டுப் புலிகள் சாதிக்கும் மௌனத்திற்கு அர்த்தம்தான் என்ன? ஈழத்தில் கருத்துச் சுதந்திரமும் எழுத்துச் சுதந்திரமும் கொடிகட்டிப் பறக்கிறது என்று சொல்பவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? மறுபுறத்தில் ஆதிக்கசாதி சனநாயகவாதிகளுக்கு வேண்டுமானால் இதுவும் புலிகளின் பாஸிசச் செயற்பாடுகளில் ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் இராசதுரைக்கு பாஸிச எதிர்ப்பாளர், தலித் விடுதலைச் செயற்பாட்டாளர் என்று இரட்டைத் தன்னிலைகள் இருப்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். ஈழப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே விடுதலை இயக்கங்கள் தலித் சமூகத்தின் சிந்தனையாளர்களையும் தலித் தொழிற்சங்கத் தலைவர்களையும் விளிம்புநிலை வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டிருந்த தலித் இளைஞர்களையும் தேடித் தேடிக் கொன்றொழித்ததை ஒட்டுமொத்த தலித் சமூகத்திற்கும் எதிரான படுகொலைகளாகத்தான் தலித் சமூகம் கருதுகிறது. சங்கானை தெங்கு பனம்பொருள் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் நடேசு, ஊறாத்துறை சங்கத் தலைவர் மத்தியாஸ், யாழ்ப்பாணச் சங்கத்தைச் சேர்ந்த அப்பையா போன்ற தலைவர்கள் கொல்லப்பட்டதையும் சமூகவிரோதிகள் என்ற பேரில் மின்கம்பங்களில் அறையப்பட்டு, நூலன், அரசன், பீப்பாராசன், போயா, லீலாவதி போன்ற நூற்றுக்கணக்கான தலித் இளைஞர்களும் பெண்களும் கொல்லப்பட்டதையும் தலித் சமூகம் குறித்துத்தான் வைத்திருக்கிறது.
26. சாதியமும் புலிகளும் என்று பேசும்போது இங்கே நாம் காய்தல் உவத்தலின்றி இன்னொரு முக்கியமான விடயத்தையும் பேசவேண்டும். ஈழத்தமிழர்களுடைய வரலாற்றில் தோன்றிய அனைத்து மைய அரசியற் கட்சிகளிற்கும் இயக்கங்களிற்கும் இதுவரை ஈழத்தின் முதன்மை ஆதிக்கசாதியினரான வெள்ளாளர்களே தலைமை தாங்கியிருக்கிறார்கள். வரலாற்றிலேயே முதற் தடவையாக விடுதலைப் புலிகள் இந்த விதியை உடைத்தெறிந்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் தலைமை வெள்ளாள நீக்கம் செய்யப்பட்டது. இடைநிலைச் சாதிகளால் பெருமளவு நிரப்பப்பட்டிருக்கும் புலிகளின் தலைமையில் ஒன்றிரண்டு தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுமுள்ளார்கள். என்றாலும் கூடப் புலிகள் சாதியொழிப்பில் அக்கறையற்றிருப்பதையும் சாதிய முரண்கள் முன்னுக்கு வரும்போதெல்லாம் புலிகள் ஆதிக்கசாதியினரின் பக்கமே நிலை எடுப்பதையும் நாம் எவ்வாறு புரிந்து கொள்வது? இதைத் தலித் அரசியல் அறிக்கை (விடியல் பதிப்பகம் 1995) இவ்வாறு விளக்குகின்றது: “சாதியத்தின் ஒரு தனித்துவமான பண்பு ஒவ்வொருவனையும் ஒரு சாதியானாக உணர வைப்பதுதான். சாதியாக உணர்வதென்பது ஒரு சாதிக்குக் கீழாக உணர்வது மட்டுமல்ல இன்னொரு சாதிக்கு மேலாக உணருவதும்தான்”.
27. ஈழத்தின் ஊர்களிலே மட்டுமல்ல, கேவலம் ஈழத்தின் அகதி முகாம்களிலே கூட இன்னமும் தீண்டாமை தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களிற்குத் திறக்கப்படாத தேனீர்க் கடைகளும் முடிதிருத்தும் கடைகளும் இன்னமும் கிராமங்களிலே நீடிக்கின்றன. நூற்றுக்கணக்கான ஆலயங்கள் இன்னமும் தலித்துகளுக்கும் அனைத்துக் கோயில் கருவறைகளும் பார்ப்பனரல்லாதவர்களிற்கும் மூடித்தான் கிடக்கின்றன. வட்டுக்கோட்டை, சுழிபுரம், கொடிகாமம் என்று தாழ்த்தப்பட்டவர்கள்மீது ஆதிக்கசாதியினர் தாக்குதல்களை நடத்திக்கொண்டுதானிருக்கிறார்கள். சென்ற வருடம் வரணிப் பகுதியில் ஒரு கொலைகூட விழுந்தது. இன்னமும் ஈழத்தின் உற்பத்தி உறவுகள் சாதிய அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகின்றன. ‘கள்ளிறக்கும் சாதி’தான் கள்ளிறக்குகிறது. ‘பறையடிக்கும் சாதி’தான் பறையடிக்கிறது. இத்தனை வருட யுத்தத்திற்குப் பின்பும் முப்பத்தேழு தேசிய விடுதலை இயக்கங்களின் நாட்டாமைகளுக்குப் பின்பும் ஏதிலிகளாக நாடுநாடாக ஓடிய போதும் அகமண முறையென்ற சாதிய இரும்புக் கோட்டையில் ஒரு பொத்தல்கூட விழவில்லையே! ஈழத்தில் சாதி ஒழிந்துவிட்டதென ‘ஜோக்’ அடிப்பவர்களால் ஈழத்தில், துணி வெளுக்கும், கள்ளிறக்கும் ஓர் வெள்ளாளனையோ அர்சகராயிருக்கும் ஒரு தலித்தையோ நமக்குக் காட்டித்தர முடியுமா? சரி வேண்டாம் விடுங்கள் புலம் பெயர் தேசங்களில் ஈழத்து வெள்ளாளர்களால் நிறுவப்பட்டிருக்கும் கோயில்களிலாவது பார்ப்பனரல்லாத ஓர் அர்ச்சகரை உங்களால் காட்டித்தர முடியுமா? புலம் பெயர்ந்த தமிழர்களிடையே அகமண முறைமை ஒரு சதவீதந் தன்னும் மீறப்படவில்லை என்பது உண்மையில்லையா?
28. இன்று புலம்பெயர்ந்த தமிழர்களிடையே சாதிய உளவியல் எப்படியிருக்கிறதெனப் பேராசிரியர் சி. சிவசேகரம் கூறுவதைக் கவனியுங்கள்: “நிலவுடைமைச் சமுதாயத்திலும் அரை நிலவுடைமைப் பண்புள்ள சமுதாயத்திலும் சாதியம் சுரண்டல் முறைக்கு அவசியமான ஓர் அம்சமாக இருந்தது. அகமணமுறை சமுதாய ஏற்றத்தாழ்வைப் பேண அவசியமாயிருந்தது. தீண்டாமை சமூக ஒடுக்குமுறையின் இன்னொரு அம்சமாக இருந்தது. அந்தச் சமூகச் சூழலிலிருந்து அந்தச் சாதி அடையாளங்களுக்கு எதுவிதமான பெறுமதியும் அற்ற ஒரு நகரத்துக்குப் பெயர்ந்த பின்பும் சாதி ஓர் அடையாளமாகத் தொடர்கிறது என்றால், அப்பெயர்வு நாட்டுக்கு வெளியே புலப்பெயர்ச்சியாகி அகதியாகப் புலம்பெயர்ந்தாலும் தொடரமாட்டாது என்று எதிர்பார்க்க நியாயமில்லை. இலங்கை மண்ணில், கொழும்பிலாயினும் யாழ்ப்பாணத்துக் கிராமத்திலாயினும் அகதி முகாமுக்குள் சாதியமும் தீண்டாமையும் பேணுகிற ஒரு மனிதநிலை அதுவே அகதி வாழ்வு ஆறாயிரம் மைலுக்கு அப்பால் நிகழும்போது செயற்படாமல் இருக்குமா? இன்றைவரைக்கும் தமிழ்த் தேசியவாதத்தால் முழுமையாக முகம்கொடுக்க இயலாத பிரச்சினையாகச் சாதியம் இருப்பதற்குக் காரணம், தமிழ்ச் சமூகத்துக்கு உள்ளே இருக்கிற ஒடுக்குமுறைகளை மழுப்பியே இதுவரை தமிழ்த் தேசியம் தன்னை நிலைநிறுத்தி வந்துள்ளதே என்பேன். புலம்பெயர் சூழலில் சாதிக்கு அர்த்தமில்லை என்ற வாதம் தருக்கரீதியாக ஏற்கக்கூடியது. அப்படியானால் நாட்டைவிட்டு நிரந்தரமாகவே புலம்பெயர்ந்தோரிடையே தொடரும் தேசிய உணர்வும் அர்த்தமற்றதாகாதா? அடையாளம் பேணல் என்று வரும்போது நமது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் பேணுகிற அடையாளம் எத்தன்மையானது? இன்று சாதி எல்லைகளைக் கடந்து, உண்மையில் நம்முடையதல்லாத, எத்தனை பண்பாட்டு அடையாளங்கள் பேணப்படுகின்றன? இன்று நடக்கின்ற அரங்கேற்றங்கள் முதலாகத் திருமணச் சடங்குகள் வரை எந்தப் பண்பாட்டு அடையாளத்தை வலியுறுத்துகின்றன? (கே.டானியல் நினைவுமலர் பக்: 5)
29. புகலிடத்தில் சாதியம் குறித்து எழுதும் சி.புஸ்பராஜா “வீடு சென்று முடி வழித்தல், மரண வீடுகளில் தொழிலாகப் பாடும் வழக்கம் பிராமணர்களை வைத்துச் சடங்குகள் செய்யும் வழக்கம், மாலை, மணவறை, நட்டுவ மேளம், நாதஸ்வரம் எனச் சாதியின் அனைத்து வடிவங்களும் புகலிடங்களில் வந்துவிட்டன. இவைகள் எல்லாவற்றையும்விட ஆபத்தானவை இங்கு பெருகிவரும் இந்துக் கோயில்கள். இக்கோயில்கள் சாதி அமைப்பு மேலும் இங்கு கட்டமைக்கப்படப் பெரும் உதவியாய் இருக்கப்போகின்றன என்பதே உண்மை” என்பார் (கறுப்பு தொகுப்பு நூல் பக்: 52). புகலிடச் சாதியம் குறித்து எழுதும்போது “இந்த மண்ணின் பரம்பரைப் புத்தி இங்கு மட்டுமல்ல, கடல் கடந்து தேசம் கடந்து போய் வேரோடியுள்ள புலம்பெயர்ந்தவர்களிடையே கூடத் தனது நச்சு வேர்களைப் பரப்பி வருகின்றது என்பதுதான் இன்றைய சர்வதேசச் சோகம்! சர்வதேசக் கொடுமை! சர்வதேச அக்கிரமம்! கீழ் பிளாட்டில் இருப்பவர்கள் ஊரில் என்ன சாதியென மேல் பிளாட்டில் உள்ளவர்கள் தூண்டித் தூண்டி விசாரிப்பார்களாம். பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்குத் தங்கள் ஒரிஜினல் சாதி தெரிந்தவிடக் கூடாது என நினைத்துப் பயந்து பயந்து ஒடுங்குவார்கள். ‘அவர்கள் அந்தப் பகுதி நாங்கள் போக்குவரத்தெல்லாம் அவர்களுடன் வைத்துக் கொள்வதில்லை’ எனப் பெருமைப்பட ஜம்பமாகத் தமது உயர் குலத்துத் தூய்மையைப் பிரகடனப்படுத்துவார்களாம் இன்னொருசாரார். ஊரில் ‘அவர்களின் வீடுகளிற்கெல்லாம் போய் நாம் செம்புத்தண்ணி தூக்குவதில்லை’ - இது வேறோர் குழு. புலம் பெயர்ந்து அதனால் தமது இருப்பை இலக்கியத்தின் மூலம் வெளிப்படுத்த நினைக்கும் எழுத்தாளர்களையும் இந்த உயர்குல வருணாச்சிரமத் தர்மப் பிரச்சினை விட்டு வைக்கவில்லை. பிரம்ம குலத்தைச் சேர்ந்த ஒருவர் லண்டனுக்குப் போயும் அகதிகளில் ஒருவராகத் தன்னைப் பதிந்து கொண்டிருந்த போதிலும் கூட ‘ஐயர்’ என்ற வாலை ஒட்டியபடியே பவனி வந்துகொண்டிருக்கிறார் என ஒரு இலக்கிய நண்பர் சமீபத்தில் எனக்குச் சொல்லி வருத்தப்பட்டார். புலம்பெயர்ந்து அகதிநிலை ஏற்பட்டபோதிலும் கூடப் பிரம்ம, சத்திரிய, வைசிய, சூத்ர, பஞ்சம என்ற வர்ணாச்சிரமப் படிநிலை அய்ரோப்பாவில் இன்று நம்மவர்களால் கைக்கொள்ளப்படுகின்றது” என்பார் டொமினிக் ஜீவா,(எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் பக்: 112).
30. படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோவென்று போகும்! மாற்றுக் கருத்து, சனநாயகம், மனிதவுரிமைகள் என்றெல்லாம் வாயடிக்கும் புகலிட எழுத்தாளர்கள் கூட இந்த ஆதிக்கசாதி உளவியல்களிலிருந்து விடுபட்டார்களில்லை. கனடாவில் வாழ்பவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்தவரும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் கல்வி நிர்வாக சேவையின் முன்னாள் அதிபருமான கதிர் பாலசுந்தரம் ‘மறைவில் ஐந்து முகங்கள்’ என்றொரு நாவலை எழுதியிருக்கிறார். சாதிவெறியை அப்பட்டமாகக் கக்குவதில் ஆறுமுக நாவலரெல்லாம் அதிபரிடம் பிச்சை வாங்கவேண்டும். அய்ந்து தமிழ்த் தேசியவாத இயக்கங்களை மய்யப்படுத்தி எழுதப்பட்ட இந்த நாவலில் பாலசுந்தரம் இயக்கங்களின் கொடுமைகளுக்கெல்லாம் இயக்கங்களில் செயற்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்களே காரணம் என்ற அரிய கருத்தைக் கண்டடைகிறார். அது மட்டுமா? தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களான தர்மலிங்கத்தையும் ஆலாலசுந்தரத்தையும் இராசலிங்கத்தையும் துரைரத்தினத்தையும் ஒரே இரவில் கடத்திச் சென்ற ‘ரெலோ’ இயக்கத்தினர் முன்னவர்கள் இருவரையும் கொன்றுவிட்டுப் பின்னவர்கள் இருவரையும் உயிரோடு விடுவித்ததற்குக் காரணம் பின்னவர்கள் இருவரும் வெள்ளாரல்லாதவர்களாய் இருந்ததுதான் என்கிறார் பாலசுந்தரம். எச்சரிக்கை! செய்வதையெல்லாம் செய்துவிட்டு, வீழ்ச்சியின் விளிம்பில் நிற்கும் தமிழ்த் தேசியத்தின் அத்தனை தோல்விகளுக்கும் அதன் பாஸிசப் பண்புகளுக்கும் இயக்கங்களிலிருந்த தாழ்த்தப்பட்ட / வெள்ளாளர்களல்லாத இளைஞர்களே காரணம் என வெள்ளாளர்கள் வெளிப்படையாகக் குற்றம் சுமத்தப் போவதற்கான முன்னறிவித்தலே கதிர் பாலசுந்தரத்தின் நாவல். பாலசுந்தரம் ஒன்றும் லப்பா - சிப்பா எழுத்தாளர் கிடையாது. இவர்தான் ‘அமிர்தலிங்கம் சகாப்தம்’ என்ற நூலையும் எழுதியவர். இந்நூலை இலண்டனில் இயங்கும் ‘அ.அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை’ வெளியிட்டிருந்தது. அந்நூலில் ‘அமிர்தலிங்கம் வெள்ளாள சாதியில் பிறந்தவர், அதுவும் முதலாம் செம்பு வெள்ளாளராகப் பிறந்தவர்’ என்றெல்லாம் அமிர்தலிங்கத்தின் சாதியப் பின்புலத்தைக் கொஞ்சங்கூடக் குற்றவுணர்வின்றி எழுதி இந்த அயோக்கிய சிகாமணி சாதிப்பாசம் கொண்டாடியிருந்தார். பாலசுந்தரத்தின் இத்தகைய மதிப்பீடுகள் குறித்துப் புலிடத்தில் சலனங்கள் ஏதுமில்லை. இதன் அர்த்தம், புகலிடத்தில் அறுதிப் பெரும்பான்மையாயிருக்கும், ஊடகங்களைத் தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆதிக்கசாதியினர் பாலசுந்தரத்தின் ஆதிக்கசாதி மதிப்பீடுகளை மௌனமாக அங்கீகரிக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்ன? வெள்ளாள நீக்கம் செய்யப்பட்ட புலிகளின் இன்றைய தலைமை வீழ்த்தப்படும் காலத்தில் (கவனிக்க: புலிகளல்ல, புலிகளின் தலைமை) இத்தகைய சாதிய மதிப்பீடுகள் முன்னிலைக்கு வரும். ஒருவிதத்தில் சவால் செய்யப்பட முடியாமலிருக்கும் புலிகளின் தலைமையை வீழ்த்துவதே இந்த மதிப்பீடுகளாகவுமிருக்கும். இதைச் செய்வதற்குப் புலிகளுக்கு வெளியிலிருந்துதான் ஆள் வரவேண்டும் என்றில்லை. புலிகளுக்குள்ளேயிருந்து கூட ஆள் வரலாம். ஏனெனில் நமது சாதியச் சமூகத்தில் விடுதலைத் தத்துவங்களையும் தேசியவாதத்தையும் ஆயுதங்களையும் விசுவாசத்தையும் விடப் பன்மடங்கு பலம் பொருந்தியது சாதியம்.
31. ‘தேனீ இணையத்தளம்’ விடுதலைப் புலிகளிளைக் குறித்துக் கற்பனையான நேர்காணல் ஒன்றை எழுதும்போது சுப.தமிழ்ச்செல்வனின் சாதியப் பின்னணியை ஞாபகப்படுத்தி அயோக்கியத்தனமான ஒரு கிண்டலைச் செய்தது. அதே தேனீ இணையத்தளம் அண்மையில் ‘உண்மையில் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது?’ என்ற கட்டுரையில் “புலிப்பொடியள் யாழ் குடாநாட்டுக்குள் வந்தவுடன் அங்கே வேலைவெட்டியில்லாமல் இருந்த கொஞ்சப்பேர், பள்ளிக்கூடப் பொடியள், ஒதுக்கப்பட்ட மக்கள், காடைகள், வறுமை வாழ்க்கைக்குக் கீழ் வாழ்ந்துகொண்டிருந்தவர்கள், வியாபாரிகள் இப்படி எல்லாவகையினரிலும் கொஞ்சப்பேர் சேர்ந்து புலிகளின் முகவர்களாகிவிட்டார்கள். முக்கிய குறிப்பு: நல்ல குடும்பத்தினரோ நல்ல வசதியுள்ளவர்களோ நல்ல படித்தவர்களோ தங்களையோ தங்களுடைய பிள்ளைகளையோ இவர்களுடன் இணைத்துக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை” என்றெழுதியது. தேனீ இணையத்தளத்தின் நம்பகத்தன்மையை ஒருவர் முழுவதுமாக ஏற்றுக்கொண்டாரெனில் அவர் இந்தச் செய்தியின் அடிப்படையில் உடனடியாக விடுதலைப் புலிகளை நிபந்தனையில்லாமல் ஆதரிப்பதே யோக்கியமான செயலாகும். ஏனெனில் ஒதுக்கப்பட்ட மக்கள், மாணவர்கள், வறுமைப்பட்டோர்களின் நலன்கள் புலிகளிளோடு இணைவதில்தான் தங்கியிருக்கிறது என்றால் நாம் புலிகளை ஆதரிக்கத்தானே வேண்டும். அதுவும் முக்கியமாக இந்தப்படை வசதியுள்ளவர்களுக்கும் ‘நல்ல’ குடும்பத்தினருக்கும் எதிரானதென்றால் நாம் இந்தப் படையை ஆதரிப்பதில் என்ன தவறிருக்க முடியும்? ஆனால் நல்லவேளையாக நமக்குத் தேனியின் ஊடக தர்மத்தில் துண்டற நம்பிக்கையில்லை. உண்மையில் தேனி குறிப்பிடும் இந்த விளிம்பு நிலையினரல்ல புலிகளின் ஆதரவுத்தளம். ஈழத்தில் கா.சிவத்தம்பி, சிதம்பரநாதன் போன்ற மய்ய அறிவுத்துறையினரும் வீரகேசரி, தினக்குரல் போன்ற தேசிய ஊடகங்களும் பெரும் தமிழ் முதலாளிகளும்தான் விடுதலைப் புலிகளின் அடிப்படையான ஆதரவுத்தளம். இவர்களின் வர்க்க நலன்களும் புலிகளின் வர்க்க நலன்களும்தான் ஒன்றானவையே தவிர, விளிம்புகளின் நலன்களுக்கும் புலிகளின் நலன்களுக்கும் எதுவிதத் தொடர்புகளுமில்லை. தேனீ குறிப்பிடும் ‘காடை’களைத்தான் எல்லாளன்படை அடித்தே கொல்கின்றது. தேனி குறிப்பிடும் வறிய பெண்களைத்தான் ‘விபச்சாரிகள்’ என்று குற்றம் சுமத்திப் புலிகள் துரத்தித் துரத்திச் சுடுகின்றார்கள். இவற்றையெல்லாம் தேனீயினர் அறியாதவர்களல்ல. ஆனால் அறிந்தும் என்ன செய்ய? விடுதலைப் புலிகள் நல்ல குடும்பத்தினருக்கும் வசதி படைத்தவர்களுக்கும் எதிரிகள் என்ற தலைகீழ் பிரச்சரத்தின் மூலம்தானே அவர்கள் தங்களைச் சூழவரவுள்ள புலி எதிர்ப்பாளர்களான ‘நல்ல’ குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் கோயில் காசில் வளமாக வாழ்பவர்களையும் திருப்தி செய்ய முடியும், அவர்களின் சாதிவெறி மனங்களைச் சாந்தி செய்ய முடியும்! அய்ரோப்பாவில் இருந்துகொண்டும் மானிட விழுமியங்களைப் பற்றிப் பேசிக்கொண்டும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் ‘நல்ல குடும்பம்’ என்று ஏற்றிப் பேசுவதற்கும் ‘ஒதுக்கப்பட்ட மக்கள்’ என்று இழித்துப் பேசுவதற்கும் இந்தப் பன்னாடைகளுக்கு என்ன திமிரிருக்க வேண்டும்! இது குறித்தெல்லாம் தேனீக்குக் கண்டனங்களைத் தெரிவித்தபோதெல்லாம் தேனீ மறுப்பு, மன்னிப்பு எதுவும் தெரிவிக்காமல் தன்னை நியாயப்படுத்தியே வருகிறது. அவ்வளவுக்கு அவர்களுக்குத் தோல் தடித்திருக்கிறது. இதில் தேனீயை விமர்சிப்பது புலிகளைப் பலப்படுத்துவதாக அமைந்துவிடுவதால் அவர்களை விமர்சிக்கக்கூடாது என்று இலவச அறிவுரைகள் வேறு. சாதிய வக்கிரத்துடன் எழுதக்கூடாது என்று இவர்கள் முதலில் தேனீக்கு அறிவுரை சொல்லட்டும். ‘புலிகளுக்
B74, பப்பு மஸ்தான் தர்கா,
லாயிட்ஸ் சாலை
சென்னை - 600 005
பேச:00 91 94442 72500
மின்னஞ்சல்: karppu2004@rediffmail.com































அதுக்குள்ள என்ன அவசரம்?
இன்னம் தமிழரசன் முடிந்தபாடில்லை.
சத்தியக்கடதாசியை ஒரு இணையப்பத்திரிகையாக அணுகுகிறோம்.
அதனால் பலனுண்டு.
இயைப்பத்திரிகைக்கு நாம் விரும்பியோ விரும்பாமலோ ஒரு பண்பு வந்துசோ;கிறது அது ஆரோக்கியமாகவும் இருக்கிறது.
அதைக் கெடுக்கவேண்டாம். அதி நீ………ளக்கட்டுரைகள். அதைவிடச் சலிப்பு அதி நீளக்கொமன்ற்ஸ்.
வேணுமெண்டால் நுhலாக்குங்கள். இணையத்தில் வேண்டாம்.
புலம்பெயா; சூழலுக்கு ஏற்றதொரு தளம் இணையம்.
வளா;த்தெடுக்க முயல்வோம்.
சிந்திக்க வைக்கும் ஆய்வு. ஈழத்து தமிழ் கொம்யூனிஸ்ட் தலைவர்களுக்கும் தமிழ்த்தேசியம் குறித்த மயக்கம் இருந்துள்ளமை அவர்களின் அந்திம காலத்து நிலைப்பாடுகள் மூலம் புரிகிறது. ஒருவேளை இனவாத அரசியலை தமது பாராளுமன்ற கதிரைகளுக்கான போட்டிக்கு சாதுரியமாக தமிழரசுக் கட்சியினர் பாவிக்கத் தொடங்கும்போதே விழிப்புணர்வை ஏற்படுத்தாத தவறு ஒட்டு மொத்த அன்றைய கம்யூனிஸ்ட்டுக்களையே சாருகிறது. 70க்களின் இனவாத எழுச்சிகளுக்கு முன் கம்யூனிஸட்டுக்களுக்குள் ஏற்பட்ட பிளவும் புரட்சிக்கான தளத்தை தெரிவுசெய்வதில் விட்ட தவறும் அவர்களை மெளனிக்க வைத்துவிட்டது. யாழ் சமூக அமைப்பின் ஒடுக்குமுறையிலிருந்து விடுபட தலித் அரசியலின் தேவை தவிர்க்க முடியாதது. வன்முறைகளற்ற வழிகளில் முயற்சிக்க வேண்டும். மீண்டுமொருதடவை அழிவுப்பாதையாக புரட்சி அடையாளப்படுத்தப்படக் கூடாது.
எனக்கு நல்ல நண்பி!
எல்லோருக்கும் இது தெரியும்.
பிள்ளைகளின் பிறந்த நாளுக்கு வருவா
இருந்துட்டு வீட்டை வந்து நியாயம் கொட்டுவா
இப்படித்தான் அவ…
எனக்கு கசுகமில்லாமல்
நான் கொஸ்பிரலில் இருந்தனான்
எனக்கு யாரும் சாப்பாடு கொண்டுவரவில்லை.
ஏன்?… பாரக்ககூட வரவில்லை..
அவ எனக்கு நல்ல நண்பிதானே..
ஒரு நாள் வந்தா
கொஸ்பிரல் சாப்பாடு எனக்கு பிடிக்காது
எண்டு சமைச்சுக்கொண்டு வந்தா
தன்னுடைய பிள்ளைகளின் கதையை சொல்லிக்கொண்டே
சாப்பாட்டையும் தந்தா.
இரண்டு வாய் திண்டிருப்பன்…
எங்கடை பிள்ளை நினைச்சு நாங்கள்
கற்பனை பண்ணி இருக்க கூடாது..
நாங்கள் வளர்த்து விட அதுகள் எந்த
பானா… நானா சாதியை கட்டுதுகளோ..
திறந்த வாய் மூடவில்லை!..
எனக்கு சுகமில்லைத்தானே
அதுதான் எனக்கு சத்தி வந்தது எண்டு
நினைச்சு அவ அதற்கு பிறகு
எனக்கு சாப்பாடு கொண்டுவாறதில்லை.
நல்ல நண்பிதானே….
பாவம் நல்ல நண்பியின் பிள்ளைகள்..
எனது நல்ல நண்பிக்கு
அவவின் பிள்ளைகள் குறித்த கற்பனை
ஒரு போதும் உடையக்கூடாது…
உறவு
நட்பு
இந்த சமூகம்
ஒண்டுமே உடையக்கூடாது.
எல்லாம் அப்படி இருக்க வேணும்!
ஏன் தெரியுமோ ?….
நான் இந்த சமூகத்திற்கு விரோதமானவன்
நல்ல குடும்பத்து பிள்ளைகள்
புலிகளுக்கு ஆதரவாக இல்லை..
சாதி ரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள்
புலிகளுக்கு ஆதரவு…
வாழ்க
சனநாயகம்
சாதிநாயகம்
தேனீநாயகம்
//..யாழ்ப்பாணத்து ஆதிக்க சாதிகளின் அரசியற் பிரதிநிதிகளான தமிழரசுக் கட்சியும் தமிழ்க் கொங்கிரசும் …..///
//…. சமாதானத்திற்குப் பதிலாக அடக்குமுறைச் சட்டங்கள், சிறைகள், செம்மணிப் புதைகுழிகளெனத் தமிழ் மக்களுக்கு வழங்கிய சந்திரிகா யாழ் மக்களுக்கு அரிசி, பருப்பு, மின்சாரமெனச் சில கவர்ச்சிகரமான திட்டங்களையும் வழங்கினார். அவற்றில் முக்கியமானது யாழ் பொதுநூலகப் புனரமைப்புத் திட்டம்….///
///…..தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி நூலகத்தைத் திறந்து வைப்பதெனவும் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது..
…///
//…வீ. ஆனந்தசங்கரியின் அறிக்கை குறித்தோ செல்லன் கந்தையனின் செவ்வி குறித்தோ இன்றுவரைக்கும் புலிகளோ அவர்களது ஆதரவாளர்களோ எதுவும் பேசாமல் கள்ள மௌனம் காத்துக்கொண்டிருக்கிறார்கள்…///
யாழ்ப்பாண சாதிக்காற தமிழரசுக்கட்சி/கூட்டணி திடீரெனெ ஆனந்த சங்கரியாரின் அறிக்கையுடன் திருந்தி விட்டது. நூலகபுனரமைப்பு தேவையில்லாத ஒன்றுமட்டுமல்ல சந்திரிகாவின் பம்மாத்துகளில் ஒன்று என்று சொல்லிவிட்டு திறப்பு நடக்காததற்கு புலி விளக்கம் சொல்லவேண்டும் எனவும் கேள்வி எழுப்ப உங்களால் தான் முடியும்.
ரகு நீங்கள் சீண்டவேண்டுமென்பதற்காகவே இப்படி எழுதுகிறீர்களோ? அல்லது உண்மையிலே விளக்கம் இல்லாமலே
புலிவாலைப்பிடித்து தொங்குகீறீர்களோ தெரியவில்லை.
தமிழரசுக்கட்சி/கூட்டணி ; மற்றம் கொங்கிரசின் சாதித்தமிர்; ஏன் ஆனந்தசங்கரியனதும் கூடத்தான் - சந்திரிக்காவின் செம்மணி முதல் நூலகம் வரையான பம்மாத்து இவையெல்லாம் யதார்த்தம்.
ஆனால் சந்திரிகா முதல் மகிந்தவரை அரிசிக்கம் பருப்புக்கம கைநீட்டி பட்டினிச்சாவைத் தவிர்க்கப்போராடுற நாங்கள் ஏன் நூலகவிடயத்தில மட்டும் அடம்பிடிச்சனாங்கள். இதில கள்ளமவுனங்கள் பற்றி கேள்வி எழுப்பினால் உங்களுக்கு ஏன் பொத்துக்கொண்டு வருகுது?
ராஜன்,
நான் முன்னொரு பின்னூட்டத்தில் சொல்லியது போல ‘நடுநிலமை’ எனும் பம்மாத்து ஒன்றுக்கும் உதவாது. ‘நோபல்’ பரிசு வேண்டுமென்றால் கிடைக்கலாம். ஆனந்தசங்கரியிடம் பி.பி.சி (ஏகாதிபத்திய வானொலி !!!!) அவருக்குக் கிடைத்த யுனெஸ்கோ ‘விருது’ பற்றிக்கேட்ட போது தான் எந்த அகிம்சைப் போராட்டத்திலும் ஈடுபடவிலை ஏனென்றால் தனக்கு ‘ஆதரவு’ இல்லை என்றார். இத்தனைக்கும் அவ்விருது வன்முறைஅற்ற சேவைகளுக்கு கொடுத்ததாக அவர்களே கூறியது!!!!
எனது கேள்வி எல்லாம் சந்திரிகாவின் பம்மாத்துகளை (கட்டுரையாளரே கூறியது) ஏன் ஆனந்தசங்கரியை விட்டு நியயப்படுத்துகிறார். அதுமட்டுமல்ல இந்த நூலகம் (யாழ் பொது நூலகம்) மாநகரசபையின் கீழ் வருவது. இதை ஏன் சங்கரி திறக்க வேண்டும். நகரபிதா திரு.செல்லன் கந்தையனே திறக்க சங்கரி ஏன் அனுமதிக்கவில்லை? இவ்வளவு நியாயம் பேசும் சங்கரி அதை செய்திருக்கலாமே?????
பம்மாத்து எல்லாம் யதார்த்தம்???? அப்படிஎன்றால் ஏன் இந்த நீநீநீநீநீ……ண்ண்ண்ண்ண்ண்…டடடடட் பதிவு. எல்லாவற்றையும் யதார்த்தத்தின் பின்னால் விடலாமே???
சாதியம், யாழ்மேலாதிக்கம், புலிவால், ………. ஏன் இரவிரவாக இருந்து பதிவும் பின்னூட்டமும்.
புலியின் ‘கள்ளமவுனம்’ பற்றி அண்மையில் ‘தேனீ’ கூட்டமும் கேட்டிருந்தது. ஏன் சதாம் குசேன் தூக்கிலிடப்பட்டது பற்றி ‘கள்ளமவுனம்’ என்று!!!!
சரியான ஜோக் தான்!!!!
பெளத்த நேசத்துடன் ரகு அவர்கட்கு!
// யாழ்ப்பாண சாதிக்காற தமிழரசுக்கட்சி/கூட்டணி திடீரெனெ ஆனந்த சங்கரியாரின் அறிக்கையுடன் திருந்தி விட்டது. நூலகபுனரமைப்பு தேவையில்லாத ஒன்றுமட்டுமல்ல சந்திரிகாவின் பம்மாத்துகளில் ஒன்று என்று சொல்லிவிட்டு திறப்பு நடக்காததற்கு புலி விளக்கம் சொல்லவேண்டும் எனவும் கேள்வி எழுப்ப உங்களால் தான் முடியும்//
என்ற உங்கள் புரிதல்வெளிப்படுதல் குறித்து கவனத்தைக் குவிக்கலாம்! யாழ் வேளாள சாதிக்காற தமிழரசுக்கட்சி/ கூட்டணி /
இவைமட்டுமல்ல, புலிகள் ஏனைய இயக்கங்கள் எல்லாமே யாழ் வேளாள நலன் பேணுபவைதான். இக்கட்டுரையில் இயக்கத்தலைமைகள் எல்லாமே மேற்சாதித்தலைமைகள் என்ற கருத்தில் உங்கள் கவனத்தைக் குவிக்குமாறு தயவாகக் கேட் கிறேன்.தமிழ் அரசியலில் மாற்றத்தைக் கோரும் ஜனநாயகத்தைக் கோரும் புகலிட அரசியல் ஆர்வலர்களை எடுத்துக்கொள்ளுங்கள்
ஜெயதேவன்… இவர்களின் பின்னணி யாழ் வேள்ளாளப்பின்னனியே! தலித்துகளைப் பெருமளவில் உள்ளடக்கிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலவர்களை எடுத்துக்கொள்ளுங்கள். தோழர் பத்மநாபா, அவரிற்குப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவரிற்குப்பின் றொபேட்(சுபத்திரன்)
அவரிற்குப்பின் சிறீதரன்(சுகு)இப்படியாக ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவர்கள் எல்லோரும் யாழ் உயர் வேளாளப்பின்னணியிலிருந்தே தேர்ந்து வருவதன் அரசியல் என்ன?
இதை அவியக்கத் தோழர் ஒருவரிடம் கேட்டேன் ! அவர் சொன்னார்! “”வேறுயாருக்கு அரசியல் உணர்வு இருக்கமுடியும் ?””
மாற்று இயக்கங்களை புலிகள் அழித்தபோது “பள்ளர், பறையர் கட்சி என கொக்கோகோலா கொடுத்து புலிகளின் அழிப்பை ஆதரித்த வெள்ள்ளாளர்கள் த.ம.வி.கழகத்தின் வெள்ளாள அணிச் சேர்க்கைமீது கவனமாகவிருந்தார்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எவ்.வை அழித்ததுபோல் புளொட்டை புலிகள் அழிக்கவில்லை, புளொட்டின் அப்போதய பொறுப்பாளர் சின்ன மென்டிஸை கிட்டு கைதுசெய்து இயக்கத்தைக் கலைப்பதாக அறிக்கைவிடுமாறு செய்கிறான், சின்னமெண்டிஸும் உடனே அறிக்கை விடுகிறார், புளொட்டின் அங்கத்தவர் எல்லோரும் வெளிநாடுகள் செல்லுமாறு பரிந்துரை செய்யப்படுகிறார்கள். குறிப்பிட்ட கால அவகாசம் புளொட்டிற்கு வழங்கப்படுகிறது.
திலீபனின் வெள்ளாளப் பின்னணியை இவ்விடத்தில் நினைவிற் கொணர்க. (திலீபனின் பெயரைப் பார்க்குந்தோறும் தன்னைச் சாதி சொல்லி எப்போதுமே அடித்துக் கொண்டிருக்கும் ராசையா மாஸ்ரர் தான் நினைவில் வருவதாக நமது தோழர் சொல்லுவார்)
யாழ் நூல் நிலையப் புனரமைப்பு தேவையில்லாத ஒன்று என்று நாம் எப்போதும் குறிப்பிடுவது, குறிப்பிட்டது கிடையாது! மாறாக வெள்ளாளர்கள் எல்லாம் வெளிநாடுகளிற்குவந்து பட்டமேற்படிப்பு உயர்கலாநிதி, கல்வி உலகத்தில் இருக்கும்போது வெளியேற வாய்ப்புகளற்ற தலித்துகளும் ஒடுக்கப்பட்டோருக்குமான கல்வி வளங்களை மறுப்பது எந்தச் சாதியின் அரசியல்?
இவ் விடயத்தைக் கையாண்ட புலிகளின் பொறுப்பாளரின் சாதிப் பின்னணியையும் இங்கு இணைத்து நோக்குதல் பொருந்தும்.
மேயர் செல்லன் கந்தையனின் கேள்விக்குப் புலிகள் எப்போதுமே பதில் சொல்லமாட்டார்கள். அநதக் கேள்விக்கான பதில் புலிகளின் அரசியலுடன் தொடர்புடைத்து. வெள்ளாளர்கள் அவ்வளவிற்கு மடையர்களூமல்லை கேணையர்களுமல்ல.
சாதிய விடுதலை சாத்தியமில்லாமல் நமது சமூகத்திற்கு வேறெந்த விடுதலையும் சாத்தியப்படாது. இது இனவிடுதலை அரசியலுக்கு நேராகத் தலித் அரசியலை நிறுத்த வேண்டிய காலம்!
தலித் தலைமையையும் தலித்துகள் அதிகாரத்தைக் கைப்பற்றுதலையும் தலித் அரசியலும் வரலாறும் வேண்டி நிற்கின்றன.
போதிசத்துவனின் தாழ் பணிந்து
-சுகன்
சுகன்!
அன்று ஒரு நாள்
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர்
சோவியத் வெளிவிவகார அமைச்சர்
இருவரும் சந்தித்துக்கொண்டனர்.
நீ முதலாளி வரக்கத்தில் இருந்து வந்தவன்
உனக்கு தொழிலாளர்கள் குறித்து பேச
அருகதை இல்லை!…
என்றார் சோவியத் வெளிவிகவார அமைச்சரை பார்த்து
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர்.
உண்மையும் அதுதான்!
நான் சாதாரண தொழிலாளர் வர்க்கத்தில் இருந்து வந்தவன்
எனக்கு மட்டும்தான் தொழிலாளர்களை பற்றி பேச உரிமை உண்டு
என்று தொடர்ந்து சொன்னார் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர்
அதற்கு சோவியத் வெளி விவகார அமைச்சர்
சொன்ன பதில் என்ன தெரியுமா?…
உண்மைதான்
ஆனால் இருவரும்
வந்த பாதையை மறந்து விட்டோம்
என்றார்.
சுகன் இதை புரிந்து கொள்ளவும்!
ஒரு இராசலிங்கம் எம்பியை
ஏற்றக்கொள்ள விரும்பாத
சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள்
இன்றும் பொன் கந்தையாவை
ஏற்றுக்கொள்கின்றார்கள்!
யார் எங்கிருந்து வந்தாலும்
அவரவர் வர்க்க சமூகப்பார்வைதான்
மக்களுக்கு தேவையானது!
சமூகப்பார்வை குறித்த விடயத்தை தவிரத்து விட்டு
தனியே தலித் என்ற அடையாளத்துடன் நின்று
சுழல்வது ஏற்புடையது அல்ல!
இது ஒரு ஆபத்தான போக்கு….
சிங்கள முற்போக்கு சக்திகளோடு இணைந்து போகா தேசிய விடுதலைப்போராட்டம் வெற்றியடையவில்லை.
அது பின்நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.
அதே போல்
எந்த சாதிய அமைப்பில் இருந்து வந்தாலும்
அவர்கள் முற்போக்கானவர்களாக இருக்கும் பட்சத்தில்
அவர்களோடு இணைந்து கொள்ளாத
சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியும்
வெற்றியடையப்போவதில்லை!
எல்லோரையும் தலித் என்று
ஒரு புறம் ஒதுக்கி விட்டு
எதையும் சாதிப்பது சுலபமல்ல>
சமூக விடுதலைக்காக தங்களை
அரப்பணித்திருந்த பலரையும்
உங்கள் கருத்தியில்
கொச்சைப்படுத்துகின்றது.
சிந்தியுங்கள்!
பெளத்த நேசத்துடன் எழுதும் சுகன். மிகவும் நன்றி.
“பெளத்த நேசம் ” என்பதும் எனக்கு நினைவில் வருவது 1983 இனக்கலவரம் நேரம் திரு.தொண்டமானை இலங்கையின் பெளத்த ‘பாரம்பரியம்’ பற்றி கேட்டபோது கூறியதுதான் - “ஸுன்டய் ஸில்ல் Mஒன்டய் கில்ல்” !!!!!
எவ்வாறாயினும் உங்கள் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கவில்லை நான்.
//.. புலிகள் ஏனைய இயக்கங்கள் எல்லாமே யாழ் வேளாள நலன் பேணுபவைதான். இக்கட்டுரையில் இயக்கத்தலைமைகள் எல்லாமே மேற்சாதித்தலைமைகள் என்ற கருத்தில் உங்கள் கவனத்தைக் குவிக்குமாறு தயவாகக் கேட் கிறேன்.///
அவ்வவறு அமைந்தது திட்டமிட்ட நிகழ்வு எனக்கூறுகிறீர்கள். இதை இதய சுத்தியுடன் ஆய்வுசெய்பவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே. அதில் நீங்கள் ஒருவர் என்றாலும் உங்களின் முன்னைய கருத்தான ஜேர்மனிய நாஸிகள் யாழ் சாதிய சக்திகளின் கால் தூசுக்கும் வரமாட்டார்கள் என் ‘சொல்லிச்செல்கிறார்’ என ஹரிஹரசர்மாவை ‘மாட்டிவிட்டதில்’ அடிபட்டுப்போகிறது!!!!
அதற்கு ஹரிஹரசர்மாவும் எதிர்வினை எழுதியதாக ஞாபகம்!
//..தமிழ் அரசியலில் மாற்றத்தைக் கோரும் ஜனநாயகத்தைக் கோரும் புகலிட அரசியல் ஆர்வலர்களை எடுத்துக்கொள்ளுங்கள் ஜெயதேவன்… இவர்களின் பின்னணி யாழ் வேள்ளாளப்பின்னனியே! ..//
புகலிட அரசியலில் யாழ் அல்லலத, வேளாளரல்லாத புகலிட ஆய்வவளர்கள் இல்லையா? அல்லது இந்த ‘ஆர்வலர்/ஆய்வவளர்கள்’ தலித்துக்களை சேர்த்துக்கொள்வதில்லையா?
//.. தலித்துகளைப் பெருமளவில் உள்ளடக்கிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலவர்களை எடுத்துக்கொள்ளுங்கள். தோழர் பத்மநாபா, அவரிற்குப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவரிற்குப்பின் றொபேட்(சுபத்திரன்)
அவரிற்குப்பின் சிறீதரன்(சுகு)இப்படியாக ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவர்கள் எல்லோரும் யாழ் உயர் வேளாளப்பின்னணியிலிருந்தே தேர்ந்து வருவதன் அரசியல் என்ன?…///
இதற்கு உள்காரணங்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. தயவுசெய்து தெரிந்தால் விளக்கமாக ஆதாரத்துடன் சொல்லுங்களேன் ! பத்மநாபாவை தமிழ்நாட்டு ஐயங்கார்கள் தங்களில் ஒருவர் என நினைத்து பழகியதாகவும் அவரும் அதை மறுக்காமல் எல்லாம் ஈழ விடுதலைக்காகத்தானே என உதவிகளைப்பெற்றதாகவும் ‘தோழர்கள்’ சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சுபத்திரன் ஒரு மனிதநேயம் மிக்கவர் சாதி/மதத்துக்கு அப்பாற்பட்டவரெனவும் யூ.ரி.எச்.ஆர்(ஜே) யின் அறிக்கையில் படித்து அவ்வாறான நல்லமனிதனை புலிகள் கொன்றுவிட்டனரே என கவலையுற்றிருந்தேன். இல்லை அவரும் மற்றவர்கள் போலவே என எனக்கு தெரிவித்து எனது நீண்ட நாள் மனவேதனையை அகற்றியதற்கு மிக்க நன்றி!
//..இதை அவியக்கத் தோழர் ஒருவரிடம் கேட்டேன் ! அவர் சொன்னார்! “”வேறுயாருக்கு அரசியல் உணர்வு இருக்கமுடியும் ?””…///
இது ‘தோழரின்’ கருத்து. அவ்வாறு சொன்னபின்னரும் அவரைத் ‘தோழர்’ என்று விழிக்கும் உங்கள் பெளத்த நேசம் மெச்சத்தக்கதுதான்!! என்னால் அவ்வாறு முடியாது சுகன்!
//..மாற்று இயக்கங்களை புலிகள் அழித்தபோது “பள்ளர், பறையர் கட்சி என கொக்கோகோலா கொடுத்து புலிகளின் அழிப்பை ஆதரித்த வெள்ள்ளாளர்கள் த.ம.வி.கழகத்தின் வெள்ளாள அணிச் சேர்க்கைமீது கவனமாகவிருந்தார்கள்…///
ம்….சுவாரஸ்யமான் நோக்கு!!!!!!!!!!!
//…ஈ.பி.ஆர்.எல்.எவ்.வை அழித்ததுபோல் புளொட்டை புலிகள் அழிக்கவில்லை, புளொட்டின் அப்போதய பொறுப்பாளர் சின்ன மென்டிஸை கிட்டு கைதுசெய்து இயக்கத்தைக் கலைப்பதாக அறிக்கைவிடுமாறு செய்கிறான், சின்னமெண்டிஸும் உடனே அறிக்கை விடுகிறார், புளொட்டின் அங்கத்தவர் எல்லோரும் வெளிநாடுகள் செல்லுமாறு பரிந்துரை செய்யப்படுகிறார்கள். குறிப்பிட்ட கால அவகாசம் புளொட்டிற்கு வழங்கப்படுகிறது…..//
நான் பேசியவர்கள் (ஈ.பி.ஆர்.எல்.எஃப் இனர், ரெலோ) தமக்கும் அவ்வாறு அவகாசமும் வெளிநாடுகள் செல்ல பரிந்துரையும் செய்யப்பட்டதாக கூறினர். !!!!!
//..திலீபனின் வெள்ளாளப் பின்னணியை இவ்விடத்தில் நினைவிற் கொணர்க. (திலீபனின் பெயரைப் பார்க்குந்தோறும் தன்னைச் சாதி சொல்லி எப்போதுமே அடித்துக் கொண்டிருக்கும் ராசையா மாஸ்ரர் தான் நினைவில் வருவதாக நமது தோழர் சொல்லுவார்)..//
இது எவ்வாறிருக்கின்றதென்றால் ஒவ்வொரு ஜேர்மனியனை பார்க்கும் போதெல்லாம் கிட்லரையோ நாஸிகளையோ நினைவில் வருகிறதென சொல்லி பாலஸ்தீனர்களின் காணிகளையும் ஒலிவ் தோட்டங்களையும் அபகரிக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு/குடியேற்றவாசிகள் நியாயப்படுத்தலை சரி எனக்கூறுவது போல். சுகன் உங்கள் போன்றவர்களிடமிருந்து இதை விடவும் ஆழமானதும் அர்த்தம் மிக்கதுமான விவாதங்களை எதிர்பார்க்கும் எனது நம்பிக்கைகளை தர்க்காதீர்கள்.
//..யாழ் நூல் நிலையப் புனரமைப்பு தேவையில்லாத ஒன்று என்று நாம் எப்போதும் குறிப்பிடுவது, குறிப்பிட்டது கிடையாது! …//
தேவையில்லை எனச்சொல்லவில்லைத்தான் ஆனால் செம்மணிக்குப் பொறுப்பான சந்திரிக்கா வழங்கிய பருப்பு மின்சார கவர்ச்சிகளுடன் இதையும் சேர்த்திருந்தீர்கள். அதனால் தான் தவறான விளக்கம் கொள்ள நேர்ந்தது. இதே போல் வெள்ளாளர் செய்திருந்தால் ” நூலகத்தை எரித்துவிட்டு கவர்ச்சித்திட்டங்களால் தமது சாதிக்கறைக்கு வெள்ளையடிக்கிறார்கள்” என எழுத மாட்டீர்கள் என அறிந்ததில் மகிழ்ச்சிதான்!
//..இவ் விடயத்தைக் கையாண்ட புலிகளின் பொறுப்பாளரின் சாதிப் பின்னணியையும் இங்கு இணைத்து நோக்குதல் பொருந்தும்….//
எப்போதும் எல்லாவிடையங்களுக்கும் உள்நோக்கங்களும் சதித்திட்ட கோட்பாடுகளும் கற்பிக்கலாம். அது மிக இலகுவானது சுகன்!
//..மேயர் செல்லன் கந்தையனின் கேள்விக்குப் புலிகள் எப்போதுமே பதில் சொல்லமாட்டார்கள். அநதக் கேள்விக்கான பதில் புலிகளின் அரசியலுடன் தொடர்புடைத்து. வெள்ளாளர்கள் அவ்வளவிற்கு மடையர்களூமல்லை கேணையர்களுமல்ல….//
ம்…நூலகத்திறப்பு விழாவை திரு.செல்லன் கந்தையனிடம் இருந்து ‘பறித்தெடுத்த’ தனால் புளுகாங்கிதமடைந்த வெள்ளாளர் புலிகளுக்கு முன்னெப்போதுமில்லாமல் ‘அள்ளி’ கொடுத்தார்கள் என்று நிறுவ முனையுங்கள். இதில் சுனாமி நிதியாக சென்றடைந்த பெரிய தொகைய சாட்சிக்கு அழையுங்கள். மிக நன்றாக இருக்கிறது!
//..சாதிய விடுதலை சாத்தியமில்லாமல் நமது சமூகத்திற்கு வேறெந்த விடுதலையும் சாத்தியப்படாது. இது இனவிடுதலை அரசியலுக்கு நேராகத் தலித் அரசியலை நிறுத்த வேண்டிய காலம்!..//
இது உங்களின் கருத்து. தயவு செய்து முன்னெடுங்கள். எவ்வாறாயினும் எமது மக்களுக்கு விடுதலை கிடைத்தல் வேண்டும். இன்னும் இருபது வருடம் கழித்து இன்னுமொரு சுகன் இவ்வாறு எழுதுவது தவிர்க்கப்பட வேண்டும்!
//.தலித் தலைமையையும் தலித்துகள் அதிகாரத்தைக் கைப்பற்றுதலையும் தலித் அரசியலும் வரலாறும் வேண்டி நிற்கின்றன…//
உண்மை!
//…போதிசத்துவனின் தாழ் பணிந்து..//
போதிசத்துவன் தனிமனித ‘பரிநிர்வாண’ நிலை அடைவதைப் போதிக்கிறார் அன்றி அதிகாரத்தையோ ,வரலாற்றின் திசைமாற்றலையோ இல்லை என்று தான் 4ம் வகுப்பிலிருந்து கற்ற நினைவு.
பிழையாகவும் இருக்கலாம் ஏனெனில் எனது ஆரம்பக்கல்வியை ஐயர்ப்பளிக்கூடத்திலும் தொடர்ந்து யாழ் இந்துவிலும் கற்றவன். உங்கள் நிலைப்பாட்டில் அவை வெள்ளாள பள்ளிக்கூடங்கள்!
நன்றி சுகன்.
“ஸுன்டய் ஸில்ல் Mஒன்டய் கில்ல்”
மேலேயுள்ள வசனத்தை “ஸன்டே ஸில் மன்டே கில்” (ஞாயிறு பிரார்த்தனை திங்கள் கொலை)
என வாசிக்கவும். எழுத்துரு குழப்படி செய்துவிட்டது.
வெள்ளாள கணனியின் சதியோ தெரியவில்லை!!!!!!
சும்மா ஜோக் சுகன்!!!!
யதார்த்தம் எல்லாம் சரியானவை என்று நான் விவாதிக்கவில்லையே! யதார்த்தத்தை புரிந்துகொள்வது மிக அவசியம். அப்போதுதான் கருத்துநிலையிலும் சரியான இடத்திற்கு ஒருவா; சென்றடையமுடியும்
சுகன்,
சேரனின் கவிதையில் சாதியநோக்கு பற்றி ஒரு பதிவு செய்திருந்தீர்கள். அந்தக்கவிதையை முழுதும் தரமுடியுமா?
//..யதார்த்தத்தை புரிந்துகொள்வது மிக அவசியம். அப்போதுதான் கருத்துநிலையிலும் சரியான இடத்திற்கு ஒருவா; சென்றடையமுடியும்…//
அதுவே பலரது (மிகச்சிலரான - முனாவில் மானா புடுங்குபவர்கள் தவிர) கருத்துமாகும். தெளிவுபடுத்தியதற்கு நன்றி.
சிங்கள முற்போக்கு சக்திகளுடன் இணையாததனால் ஈழப்போர் பின்னோக்கிப்போகிறதென்று கதறுவோர் சாதீயப்போரில் மற்றைய முற்போக்கு சக்திகளை ‘கொச்சை’ படுத்துவதை குறித்ததற்கு நன்றி பரன் !
என்னுடைய குடும்பம் வெள்ளாளாளக் குடும்பம்.எட்டு பெண்களும் இரண்டு ஆண்களுமாய் பெரிய குடும்பம்.தொழில் விவசாயம்.சொந்தமாய் குடியிருக்கும் நிலத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.எம்மை சுற்றி இருப்பவர்களும் அதே சாதியினர்.ஆனால் தமது வீட்டு விசேடங்களுக்கு எம்மை அழைக்கமாட்டார்கள்.இவையிட்ட என்ன இருக்கு?இவை என்னெண்டு வாழப்போகினம் என ஒரே நக்கலும் நையாண்டியும் செய்வார்கள். அவர்களுடைய கொண்டாட்டங்களை வீட்டு வேலிக்குள்ளால் தான் நாங்கள் பார்ப்போம்.கோயில் திருவிழாவிற்கு நாங்களும் போவோம். ஆனால் எங்களுடைய ஆடை அணிகலன்களைப் பார்த்து எம் மோடு படிக்கும் பிள்ளைகள் முகத்தை திருப்பிக் கொண்டு போவார்கள்.பேசாட்டார்கள்.மறுநாள் பள்ளிப்பாடத்தில் சந்தேகம் என்றால் எம்மிடம் வருவார்கள்.இப்போது எங்கள் குடும்பத்தில் பெரும்பகுதி வெளிநாட்டில் இருக்கிறோம்.எங்களுடைய பொருளாதார பலம் எங்களை ஓதுகித்தள்ளியவர்களால் இப்போது நினைத்துப் பார்க்க முடியாத உயரத்தில்.இப்போது எங்கள் வீட்டு விசேடங்களுக்கு வருபவர்களை வீடியோவில் பார்க்கும்போது மயக்கமே வருகிறது.ஏன்? பணமும் அது தரும் வசதிகளும் மாற்றங்களும் எல்லாவற்றையும் தலைகீழாக்குகின்றது.உடனடியாக இல்லை எனினும் எதிர்காலத்தில் சாதியும் இவ்வாறே ஆகும்.
//..உடனடியாக ‘வெள்ளாவி’ நாவல் புலிகளால் தடைசெய்யப்பட்டது. நாறின பிணங்களும் சாதியச் சடங்குகள் ஆற்றப்பட்டுத் தூக்கப்பட்டன. இங்கு புலிகளின் கவலையெல்லாம் சாதியச் சடங்குகளிலும் முறைமைகளிலும் எதுவித ஊறும் நேர்ந்திடக்கூடாது என்பதிலேயே இருக்கிறது என்றுதான் நம்மால் கருத முடிகிறது…..//
பேசாமலிருந்தால் ‘கள்ள மெளனம்’ என்பீர்கள். பேசினால் ‘கள்ள மூளை’ என்பீர்கள் என்பதற்கு இது நல்ல உதாரணம். இதால போனால் அதால வாறது, அதால போனால் ஏன் இதால வரேல்ல எண்டு கேக்கிறது!!!
எவரையும் நம்பமுடியாதிருக்கிறது….
இன்று முக்கிய பிரச்சினைகளாக கருதப்படும் இரண்டு முரண்பாடுகள் உண்டு.
ஒன்று சாதி ரீதியான முரண்பாடு
அடுத்தது பிரதேசரீதியான முரண்பாடு
தலித் மக்கள் மீது இன்னமும் மேலண்மை செலுத்தப்படுகின்றது>
கிழக்கு மக்கள் மீது வடக்கு மேலாண்மை செலுத்தப்படுகின்றது.
கிழக்கில் இருந்து கருணா அம்மான் வடக்கு மேலாதிக்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்தது போல்
லலித் மக்கள் பிரச்சினைக்காக பெரிய அளவில் யாரும் கிளர்ந்தெழவில்லை.
ஐரோப்பா கனடா போன்ற புலம்பெயர்ந்த நாடுகளில் தலித்தியம் பேசிக்கொண்டிருப்பவர்கள் தங்களது அரசியல் உள்நோக்கங்களுக்காக பேசுவதாகவே உணரவேண்டியுள்ளது. எல்லொரையும் அப்படி கருத முடியாது. சோபாசக்தி போன்றவர்கள் அல்லது சுகன் போன்றவர்கள் உண்மையானவர்களாக இருக்கலாம் என்று கருகின்றேன். சாதியை சொல்லி அரசியல் லாபம் தேடிய பழைய சரித்திரங்கள் மீண்டும் திரும்பியுள்ளது.
அதே போல் கிழக்கு மக்களுக்காக குரல் கொடுப்பவர்களையும் நாம் நம்பத்தயாரில்லை. இழக்கு மக்களின் பிரச்சினைகளை சரியாக உணர்ந்து கொண்டு கருத்து தெரிவிப்பவர்கள் குறைவு.
மாற்று தமிழ் கட்சிகள் கிழக்கு மக்களுக்காக குரல் கொடுப்பது போல் வேசம் போடும் நடவடிக்கை தொடர்கின்றது. இணையத்தளங்களும் தமது சுயசலத்திற்காகவே செயற்படுகின்றன. நெருப்பு இணையத்தளம் கிழக்கு மக்களுக்காக குறிப்பாக கருணா அம்மானின் தளம் போல் தன்னை காட்டிக்கொள்கின்றது. ஆனால் அது நடத்தப்படுவது கனடாவில் இருக்கும் யாழ் செல்வம் என்ற புளொட் பொறுப்பாளரால் நடத்தப்படுகின்றது. அது போல் அதிரடி இணையத்தளம் சுவிஸில் இருக்கும் புளொட் பொறுப்பாளரால் நடத்தப்படுகின்றது. இவர்கள் கருணா அம்மானை பயன்படுத்த நினைக்கின்றார்கள். அது போல் இலக்கு இணையத்தளம் சுவிஸில் இருக்கும் ஈ.பி.டி.பி யால் நடத்தப்பட்டு வந்தது. இப்போது அது கைமாறி விட்டது என்று ஒரு கதை உண்டு. இவர்களும் கருணா அம்மானின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருந்தனர். மொத்தமாக சொல்லப்போனால் கருணா அம்மானையும் கிழக்கு மக்களையும் வைத்து பிழைப்பு நடத்தத்தான் இந்த இணையத்தளங்கள் இருக்கின்றன. தேனி வெளிப்படையாக சாதி மேலாண்மை பக்கம் என்று தங்களை காட்டிவிட்டனர். அது பரவாயில்லை. ஆகவே தலித் என்றும் கிழக்கு என்றும் கருத்து கூறும் இந்த பேர்வழிகளோ அல்லது இதிலிருந்து அப்பாற்பட்ட போலிகளோ நம்பிக்கைக்குரியவர்களல்ல.
எமது பிரச்சினையை நாமே கையிலெடுப்போம்.
கிழக்கு மக்கள் நிச்சயமாக தலித் மக்களுடன் இணைந்து செயற்படுவோம்.
கள்ளமூளை யை கள்ளமூளையென்றும் கள்ளமவுனத்தை கள்ளமவுனம் என்றும் சொல்லுறதில்லை தப்பேதும் இல்லையே ரகு.
//..33. அம்பேத்கர் கூறுவதைக் கவனியுங்கள்: “சாதி என்ற கண்ணோட்டத்தை இந்துகளின் மனதில் ஆழமாகப் பதிய வைத்திருக்கிற இந்து மதமே தவறானது என்று நான் கருதுகிறேன். நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி சாதியைக் கடைப்பிடிக்கும் மக்களல்ல. ……….சாதியை ஒழிப்பதில் நீங்கள் எவ்விதம் வெற்றிபெற முடியும்?” அம்பேத்கரின் இந்தக் கேள்வி ஈழத்து இடதுசாரிகளின் காதுகளிலும் சீர்திருத்தவாதிகளின் காதுகளிலும் அறிவுத்துறையினரின் காதுகளிலும் இன்னமும்தான் உறைக்கவில்லை…..//
மிக்க நல்லது!
அதை செய்யுங்கோ, அதை விட்டுட்டு ‘காலை எழுந்தவுடன் புலிப்பாட்டு’ எண்டு ஏன் நேரத்தையும் அம்பேத்காரின் அறிவுரையையும் வீணாக்கிறியள்.
தர்மச்சக்கரம் சுழல்கின்றது!
பிரபஞ்சம் தழுவிய பெருங்கருனை நம்மைத் தழுவட்டும்!
//ஒரேயொரு இராசலிங்கம் எம். பி யை ஏற்றுக்கொள்ளவிரும்பாத
சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் பொன். கந்தையாவை ஏற்றுக்கொள்கிறார்கள்.// என்ற மேற்சாதிப் பரப்புரையை இன்றும்
சனநாயகத்தின் பேரில் கேட்டுக்கொள்வதைத் தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை தோழரே! நாம் தற்போது நீண்ட தூரம் வந்துவிட்டோம், இரட்டை வாக்கு, விசேட பிரதிநிதித்துவம் , தனிவாக்காளர் தொகுதி..இப்படி!
தமிழ் அரசியலின்பேரில் அமிர்தலிங்கங்களும் இடதுசாரி அரசியலின்
பேரில் பொன். கந்தையாக்களும் பிரதிநிதிகளாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்போது இராசலிங்கங்கள் பனையேறவும் பறைஅடிக்கவும் சிரைக்கவும் விதிக்கப்பட்டிருக்கின்றது.
தலைகீழ்மாற்றம் வரலாம்!
எங்கே போகும் காலம் , அது எம்மையும் வாழவைக்கும்!
மேலும்,
ஜி.ஜி.பொன்னம்பலத்திலிருந்து கஜேந்திரகுமார்வரை,
செல்வநாயகத்திலிருந்து மாவைசேனாதிராசாவரை,
அப்பாலும் _ அமிர்தலிங்கத்திலிருந்து ஆனந்தசங்கரிவரை,
ரவிராஜும் இப்பால் சுரேஸ்,பாலகுமார்
ஈழ வெள்ளாள அரசியலின் தொடர்ஜோதியை அணையாமற் காப்போம்.
பாசிசத்திற்கெதிரான போரிற் தம்மை ஈந்த தோழர்கள் பத்மநாபா, ரொபேர்ட்(சுபத்திரன்) மற்றும் அனைவரின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் நாம் போற்றுவது மரியாதை செலுத்துவது ,
தொடரவேண்டும், புலிகளின் பாசிசத்திற்கெதிராக போரில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது அங்கத்தவர்கள் அனைவரையுமே ஏறத்தாள இழந்திருக்கிறது.
ஆனால் இந்தக் கேள்வியிலிருந்து ஈ.பி. ஆர். எல். எவ்.விற்கு விலக்களிக்க முடியாது. தமிழ் அரசியற் தலைமையில் ஏன் ஒரு முஸ்லிம் இருக்கமுடியவில்லை?
அஸ்ரப் ஏன் தலைமைக்கு வரமுடியவில்லை ?
இக்பாலும் அதாவுல்லாவும் எப்படித் தவிர்க்கப்படுகிறார்கள் ?
விடை மயில் இறகு போல் இலகுவானது.
சத்தியக்கடதாசிக்கு மெருகூட்டுபவர் நண்பர் ரகுதான்.
தனி ஆளாக நின்ற ஜமாய்த்துக்ட்டுகிறார்.
ஆனால் புலிமீது அவருக்கு ஏன் இவ்வளவு கோபம்?. ரகுவின் விவாதமுறை ஒவ்வொன்றும புலிக்கு எதிர்வினையாகவே அமைந்துவிடுகிறது.
//…ஆனால் புலிமீது அவருக்கு ஏன் இவ்வளவு கோபம்?. ரகுவின் விவாதமுறை ஒவ்வொன்றும புலிக்கு எதிர்வினையாகவே அமைந்துவிடுகிறது…..//
வரதன் அண்ணை, இந்தமாதிரி ஐஸ் விளையாட்டுகள் எனக்கு மூன்றாம் வகுப்பில இருந்து பழக்கம். உது வாத்திமார் தங்கட கோவணம் கிழியேக்க்க விடுற பம்மாத்துக்கதை!
உங்களெளக்கு ‘புலி’ யில அக்கற எண்டால் வந்து காப்பாத்துறது தானே?? நாங்களுந்தான் ‘தேனீ’ ரி.பி.சி, குளவி,நெருப்பு, தண்ணி எண்டு வரிசையா வாசிக்கிறம். எல்லாரும் எழுதேக்க தான் அவைஅவையின்ர பொட்டுக்கேடுகள் தெரியுது. கிட்டடியில யூ.ரி.எச்.ஆர்(ஜே) யின்ட பம்மாத்து வெளியில வந்தது. அப்பிடியே டி.பி.எஸ்.ஜெயராஜின்ர ஒப்பாரியும் பாத்தனாங்கள்.
நன்றி!
நாங்களும் தமிழீழத் தாயகப் பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பலகாலம் வாழ்ந்தவர்கள்.. பல சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள்.. புலிகளின் தலையீடுகளையும் மீறி சாதியத்தைக் கட்டிக் காக்க புதுப்புது வியாக்கியானங்களைப் புலிகளுக்குச் சொன்னதை நேரில் பார்த்தவர்கள்.. நிறைய எழுதமுடியும்.. ஆனால் தேவையில்லை என்று நினைக்கின்றேன்.. ஒன்றை மட்டும் சொல்கின்றேன்.. இன்றும் (2007 இலும்) நான் வாழ்ந்த ஊரில் உள்ள கோவிலுக்குள் நுழைவதற்கு எல்லோருக்கும் அனுமதியில்லை (புலிகள் இருந்தபோது ஐயர்களையும், சில தெரிந்தெடுக்கப்பட்ட பணியாளர்களையும் தவிர எல்லோரும் வெளியில் நின்றுதான் கும்பிடவேண்டும் என்று சொல்லி சாதியம் காப்பாற்றப்பட்டது. 96 இல் புலிகள் வெளியேறிய பின்னர், பழைய நடைமுறை வந்துவிட்டது)
//.. புலிகளின் தலையீடுகளையும் மீறி சாதியத்தைக் கட்டிக் காக்க புதுப்புது வியாக்கியானங்களைப் புலிகளுக்குச் சொன்னதை நேரில் பார்த்தவர்கள்..//
அப்போ புலிகள் சாதீயத்தை கட்டிக்காக்கவில்லை என்கிறீர்கள்! நல்லது !
//.. இன்றும் (2007 இலும்) நான் வாழ்ந்த ஊரில் உள்ள கோவிலுக்குள் நுழைவதற்கு எல்லோருக்கும் அனுமதியில்லை …//
எந்த ஊர் எந்தக்கோவில் என்று ஏன் வெளிப்படையாக கூற மறுக்கிறீர்கள்? எவ்வாறனவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் எவருக்கு அனுமதி இல்லை? இதை வெளிப்படையாக கூறினால் எமக்கும் தெரியவருப் பல வேளைகளில் இம்முறை மாறுவதற்கு சந்தர்ப்பம் வாய்க்கலாம்!
//..(புலிகள் இருந்தபோது ஐயர்களையும், சில தெரிந்தெடுக்கப்பட்ட பணியாளர்களையும் தவிர எல்லோரும் வெளியில் நின்றுதான் கும்பிடவேண்டும் என்று சொல்லி சாதியம் காப்பாற்றப்பட்டது. ..//
முன்னர் சொன்னீர்கள் புலிகளின் தலையீடுகளையும் மீறி என்று. எனக்கு இது முன்பின் முரணானதாக தெரிகிறது!
//..96 இல் புலிகள் வெளியேறிய பின்னர், பழைய நடைமுறை வந்துவிட்டது) ..//
பழைய நடைமுறை என்றால் எது? எல்லோரும் உள்ளே அனுமதிக்கப்பட்டார்களா அல்லது ஒரு சிலரே கொண்ட (இம்முறை) வேறொரு கூட்டமா??
ரகு! நீங்க புலிக்கு வக்காளத்து வாங்குறீங்க எண்டு தான் படுது. உண்மையாகிலும் உங்களுக்கு புலியோட(பவர் உள்ளவயோட) தொடர்பிருந்தா அநியாயமா ஆட்களை(குறிப்பா தமிழரை) கொல்லாம அரஸ்ட் பண்ணி வைக்கச் சொல்லுங்கோ. சத்தியமா இங்க நேற்று வவுனியாவில மாகாறம்பகுளத்துக்கு பக்கத்தில 2 இளம் வயதுகாரரை புலியள் சுட்டுப் போட்டுள்ளார்கள். ஐயோ….. அவங்கள் கூலிக்கு விறகு வெட்டுறதும் வவுனியாவில நாட்டாமை வேலை செய்யிறதையும் நானே கண்டிருக்கிறேன். பாவம். அவங்கள் புலியை காட்டிக் கொடுக்க எந்த ஞாயமும் இல்லை. அவங்கட குடும்ப சூழலை கொஞ்சம் போய் பாத்தா உங்களுக்கும் விளங்கும். அவங்கட உழைப்பு இல்லாம அந்த குடும்பம் ஒரு நேர சோத்துக்கு கூட இனி பிச்சைதான் எடுக்கவேணும். இல்லாட்டி வேசையாட தான் வேணும். இப்பிடி சொல்ல உண்மையா நடுங்குது. ஆனா இது தான் உண்மை. உங்களைபோல அகதி தஞ்சம் கேட்டு ஐரோபாவுக்கு வர அந்த சனங்கள் கற்பனை கூட பண்ணமுடியாது. வயித்துக்கு போராடுற அந்த சனங்களின் வேதனையும் போராட்டமும் புலிகளுக்கு விளங்க எந்த ஞாயமுமில்லை. தேவையுமில்லை. சனத்தை பயத்தோட வைச்சிருக்க அப்பாவி உயிரை குடிக்கிறத எந்த தருமம் போதிக்குது. இந்த போராட்டம் தேவைதானா? உன்ர சனம் உன்னை வேண்டாம் எண்டா விட்டடிட்டு நீ வாழ வழியை தேடன். என்ன மசிர் விடுதலை வேண்டிக்கிடக்கு? விடுதலை எண்டா என்ன? யாருக்கு யாரிடமிருந்து விடுதலை? உசிரோட இருக்கிற உரிமையை கூட தர முடியாதவங்க எதை தர போறாங்க? முடிஞ்சா மனச்சாட்சி இருந்தா உசிரின் மதிப்பை விளங்கினா (உங்களுக்கு விளங்கும். இல்லாட்டி உசிரோடயும் காசோடயும் வாழ விரும்பி தானே வெளிநாட்டுக்கு அகதி வேசம் போட்ட போனியள்) தொடர்புள்ள புலிகளுக்கு சொல்லுங்க “இனியாவது மரண தண்டணை குடுக்க வேண்டாம் எண்டு. அப்பிடி குடுக்குறதெண்டா புலித் தலைமைக்கு குறைஞ்சது 1000 க்கு மேற்பட்ட தடைவை அதை குடுத்திருக்க வேணும்.
அவன் ஏன் சித்திரவதைக்குள்ளானான். என்ன பிழை விட்டவனாம்” சங்கர் இப்போது அமைதியாகவே கேட்டான்.
“கழகத்தில் அவன் நடத்தை சந்தேகத்திற்குரியதாம். எங்கள் செயலதிபருக்கு அவன் குதர்க்கமான கேள்விகளைக் கேட்டு கடிதம் எழுதியிருந்தானாம். ஆனால் உண்மையில் அவன் அப்படி ஏதும் எழுதவில்லை. எங்கள் இராணுவம் சோசலிச இராணுவமா அல்லது முதலாளித்துவ இராணுவமா என்று மட்டும்தான் கேட்டு எழுதினவனாம்”
“அப்படி எழுதியதில் என்ன பிழை? சந்தேகத்தை யார் வேண்டுமானாலும் எழுப்பலாம்தானே. அதற்கு சித்திரவதைதான் பதிலா”
புலியை மட்டும் தாக்காதீர்கள்
எல்லோரும் பேர் போனவர்கள்
அந்தோனி அற்புதமான,நன்கு ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரை. பாராட்டுக்கள்.
சுகன்,
ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர்கள் எல்லோரும் வெள்ளாளர்களாக இருந்தார்கள் என்று நீங்கள் கூறுவது தவறு. பத்மநாபா, பிரேமச்சந்திரனுக்கு பிறகு அதன் தலைவராக வந்தது யாழ்ப்பாண சாதியமைப்பில் ஒடுக்கப்பட்டவர்களான பஞ்சமர்களையும் (தலித்) விட அதிகமாக ஒடுக்கப்பட்ட யாழ் தலித்துகளுக்கே தலித்தான ” தோட்டக்காட்டான்” அல்லது “வடக்கத்தையான்” என இழிவாக அழைக்கப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழரான அண்ணாமலை வரதராஜப் பெருமாள். இதனை ஏன் தவிர்த்தீர்கள் சுகன். தலித்துக்களின் தலித் சாதியைச்சேர்ந்த பெருமாள் வடக்கு கிழக்கின் முதல் முதலமைச்சராக வந்ததையிட்டும் முற்போக்கு தமிழர்கள் அனைவரும் பெருமைப்படலாம். பிரேமச்சந்திரன் ஈ.பி.ஆர்.எல் எப்பின் வளங்களைச் சுருட்டிக்கொண்டு புலிகளிடம் போனபின்னர் ரொபேட், சுகு முதலியோரால் வழி நடத்தப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் ‘ வரதர் அணி’ என்றே அழைக்கப்பட்டது. இன்றைக்கும் ஈ.பி.ஆர்.எல் எப் இன் de facto தலைவர் பெருமாள் தான். அவர் ஈழத்தில் இல்லாத படியினால் தான் சுகுவினால் வழிநடத்தப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் தலித்துக்களையும் விட ” கீழே” இருப்பது மலையகத்தமிழரான ” வடக்கத்தையான்” சாதி என்பதை நான் இங்கே நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. எனினும்ஸஸஸ..
உதாரணம் ஒன்று
இன்றைக்கு ” உயர்” சாதி ஒருவரின் வீட்டில்
குடிமைச்சேவகம் செய்கிற ஒரு பஞ்சமர் சிறுமியை ” உயர்” சாதி ஆண் ஒருவன் ஒன்றும் நடவாதது போல பாலியல் பலாத்காரம் செய்யமுடியாது. தலித்துக்கள் கிளர்ந்தெழும்பி குறித்த பாலியல் பலாத்காரம் செய்த சாதிமானை அடித்தே கொன்று விடுவார்கள். ஆனால் இன்றைக்கும், யாழ்ப்பாணத்திலும் இலங்கயின் ஏனைய பகுதிகளிலுமுள்ள தமிழ் வீடுகளிலும் வேலைக்காரிகளாக இருக்கிற மலையக சிறுமிகள் வெள்ளாள ஆண்களால் குறித்த சாதிமானின் குடும்பத்திலுள்ள ஆண்களுக்காக கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வல்லுறவுக்குள்ளாக்கப்படுகிறார்கள். புலிமானும் சாதிமானுமான யாழ் விரிவுரையாளர் கணேசலிங்கம் தன்வீட்டு வேலைக்காரியான மலையக சிறுமியை 40 தடவைக்கு மேல் வல்லுறவுக்கு உள்ளாக்கியது ரகு போன்றவர்களுக்கு உறைக்கப்போவதில்லை. ஆனால் வெளியில் வராமல் இன்றைக்கும் பாலியல் தொழிலாளியாக சாதிமான் வீடுகளில் சித்திரவதைப்படும் மலையக சிறுமிகள் அதிகம். நான் அறிந்த வரையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் இப்போது அமரரான பிரசித்தி பெற்ற பேராசிரியர் ஒருவரே தன் மனைவி தாய்
வீட்டுக்கு (அல்லது தாய் நாட்டுக்கு) பிள்ளை பெறச்சென்ற சமயம் வேலைக்காரியான மலையகச் சிறுமியையும் பிள்ளைத்தாய்ச்சியாக்கின பெருமைக்குரியவர். (யாழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் மெற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்டு வருகிற பாலியல் குற்றங்களைப் பற்றி ஒரு தனி நூலே எழுதமுடியும்)
தாரீக் அலி தன்னுடைய Clash of civilizations என்கிற நூலில் இந்தியாவில் தலித்துக்களையும் விட கீழே இருக்கிற சாதியாக முஸ்லீம்களைக் குறிப்பிடுகிறார். அதே போல யாழ்ப்பாணத்தில் பஞ்சமரையும்விட கீழே இருக்கிற சாதி மலையகத்தமிழர்.
உதாரணம் இரண்டு
மஹாகவி, எஸ்.பொ முதலியோரின் படைப்புக்களை இருட்டடிப்பு செய்து டானியல், டொமினிக் ஜீவா முதலியோரின் பிரச்சாரப் படைப்புக்களை கைலாசபதி, சிவத்தம்பி முதலியோர் முன்னிலைப்படுத்தியதை சாதிய அரசியலுக்கூடாகவும் விளக்கலாம். கைலாசபதி சிவத்தம்பியிடம் Manipulative, Egocentric முதலிய நோய்க் கூறுகள் இருந்தன. தங்களை அதீதமாக மதிக்கவேண்டும் என்றும் தங்களுடைய விசுவாசிகளான சீடர்களாகவும் இருக்கவேண்டும் என்றும் எதிர்பார்த்தனர். இன்னொரு வகையில் சொன்னால் டானியல், டொமினிக் ஜீவா முதலியோரை வசியம் (Seduction) செய்து வைத்திருந்தனர். வசியக் கலையின் (Art of Seduction) விதிகளில் ஒன்று தன்னப்பிக்கையும் திறமையும் சந்தோசமும் இல்லாதவர்களையே வசியம் செய்யமுடியும் என்பதாகும். சாதிய ஒடுக்குமுறைகளால் மேற்கூறிய மூன்றையும் இழந்திருந்த ஜீவா டானியல் முதலியோரை இந்த அடிப்படையில் வசியம் செய்யக்கூடியவர்களாக பேராசிரியர்கள் கண்டனர். உயர்சாதி ஒருவரிடம்
சீடராக இருப்பதை தங்கள் சாதியரான எஸ். போ விடம் சீடராக இருப்பதைவிட உயர்வானதாக டானியல் ஜீவா முதலியோரும் கண்டனர். (பேராசிரியர்கள் தங்களின் வசிய ஆட்டங்களுக்கு தலித்துக்களின் தாழ்வு மனப்பான்மையை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதை அறிய வாசிக்க தளைய சிங்கத்தின் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி)
“இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மைகள் செய்தன தாம் விளையாட”
பேராசிரியர்களின் பொம்மைகள் ஜீவா முதலியோர் என்றால் இப்போது ஜீவாவுக்கு விளையாட ஒரு
பொம்மை தேவைப்பட்டது. இங்கே தான் “வடக்கதையரான” நீர்கொழும்பு லெ. முருகபூபதி வருகிறார். டொமினிக் ஜீவாவைவிட திறமையும் தன்னம்பிக்கயும் குறைந்தவர் முருகபூபதி. சாதிய அதிகாரப் படிமுறையில் ஜீவா பூபதியை தனக்கு கீழே இருப்பவராகவும் பூபதி ஜீவாவை தனக்கு மேலே இருப்பவராகவும் கண்டனர். ஜீவா பூபதியை வசியம் செய்ய காவியச்சாயல் கொண்ட பூபதி ஜீவா உறவு மலர்ந்தது.
மாத்தளை சோமு, அந்தனி ஜீவா ஆகியோரும் முருகபூபதியைப் போலவே இந்திய வம்சாவழிச் சமூகத்திலிருந்துவந்த ஈழத்து எழுத்தாளர்கள். ஆனால் முன்னவர்கள் இருவரும் மலையகத் தமிழ் உச்சரிப்பிலேயே (Accent) தமிழ் பேசுவார்கள். ஆனால் முருகபூபதியோ தனது உச்சரிப்பையே வலிந்து மாற்றி யாழ்ப்பாணத்தமிழ் உச்சரிப்பிலேயே பேசிவருகிறார். அவரது தாழ்வு மனப்பான்மைக்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்.
இலங்கையின் இந்திய வம்சாவழித் தமிழர்கள் ஈழத்துத் தமிழ் தலித்துக்களின் கீழே சாதிய அடக்குமுறை அதிகாரப் படினிலையில் இருந்தார்கள் என்று நிறுவியது முற்றிற்று.
சீலன்.
வவுனியா மகாறம்பக்குளத்தில
இருந்து பின்னூட்டமிடும் நண்பருக்கு,
(நான் ஐரோப்பாவிலிருக்கும் அகதி என கூறும் நீங்கள் எனது அனுமானம் பற்றி குறைகாண மாட்டீர்களென நினைக்கிறேன்),,,,
1. நான் ‘சத்தியக்கடதாசி’ படிப்பது அதன் கருதாடல்கள் விவாதங்கள் செழுமையானவை மட்டுமல்ல சிந்திக்க தூண்டுபவையும் என்பதாலும் ஆகும்.
2. சத்தியக்கடததசியில் நான் பின்னூட்டம் எழுதுவதற்கு உள்ள முக்கிய காரணம் பின்னூட்டம் இடுபவர்கள் 99% பேர் கட்டுரைத் தலைப்பு, விவாதக்கருப்பொருள் சார்ந்த பின்னூட்டங்களையே எழுதுகிறார்கள். மாறாக பெரும்பாலான மற்றைய விவாத களங்களில் தலைப்பு சாராத பின்னூட்டங்களையும் கருத்துக்களுக்கு எவ்வித தொடர்புமற்ற “எதிர்கருத்துகளை”யும் (! ?) வேண்டுமென்றே இட்டு விவாதத்தை திசை திருப்புவதனைக்காணலாம்.
3.உங்களின் கருத்தில் நான் அதையே காண்கிறேன். தேவையெனின் ஆரம்பத்திலில் இருந்து மீழ்பபர்வை செய்யவும். சிவப்பு நிற மாவோ, அம்பேத்கார் (?) மஞ்சள் நிற எழுத்தில் உள்ள கவிதை, கட்டுரையின் கருப்பொருள் எல்லாமே சமதர்ம, சாதீய கருத்துகள் அவை சார்ந்த புலியின் (புலிப்பபசிசம் ! ?) பார்வை எனவே விவாதிக்கிறது. பின்னூட்டங்களும் அவ்வாறானவையே.
4. இவாறான ஒழுங்குமுறையில் இருந்து விலகவோ அன்றி மற்றவர்களை விலத்தி அழைத்துச்செல்லவோ எனக்கு உடன்பாடில்லை.
5. தேவை எனின் சத்தியக்கடதாசியில் “புலிப்பாசிசம்” பற்றிய வேறொரு பதிவை இட்டு பின்னூட்டங்களைக் கோருங்கள்.
எனினும்…இம்முறை…….
//… உண்மையாகிலும் உங்களுக்கு புலியோட(பவர் உள்ளவயோட) தொடர்பிருந்தா …//
புலியேடயோ இல்லை பவர் உள்ளவையோடையோ எனக்கு உண்மையாக தொடர்பில்லை!
ஆனால் உண்மையாக புலியின் இருப்பை பாவிச்சு ஸ்ரீலங்காகாறனிட்டை பொருள், பணம், வாகன வசதி எடுத்து ‘பவர்’ காட்டிறவை, ஸ்ரீதர் தியேட்டரில படம் காட்டிறவை, ஆமிக்காம்பில இருந்து கொண்டு ‘பெயர் குறிப்பிடாத இடத்தில பயிற்சி முகாம்’ நடத்திறவை (அவரின் பயிற்சி முகாம் பின்னணியில ஸ்ரீலங்கா கொடி பறக்கிறத மறைக்க மறந்திட்டார்) கப்பலில வாற உருளைக்கிழங்கு வெங்ககயத்தை தொட்டு கோயில் ஐயர் மாதிரி ஆசீர்வாதம் பண்ணுறவை, இந்தியன் ஆமியோட ஜீப்பில வலம்வந்து ‘சாட்சியம்’ புத்தகம் எழுதி சாகேக்க மட்டும் ஊரிலபோய் வடலிக்க கள்ளுக்குடிக்கோணும் எண்டு குமுதத்தில பேட்டி குடுத்தவை எல்லோருடனும் திரிஞ்ச அனுபவம் இருக்கு. வேணுமெண்டால் அவங்களிட்ட கேட்டுப்பாப்பம்.
//அநியாயமா ஆட்களை(குறிப்பா தமிழரை) கொல்லாம அரஸ்ட் பண்ணி வைக்கச் சொல்லுங்கோ…//
அப்பிடித்தான் எனக்கு ‘பவர்’ இருக்குதெண்டு வச்சாலும் “குறிப்பா தமிழரை” காப்பாத்தின எண்டு முஸ்லிமின்ர எதிரி, ஏகாதிபத்திய கைக்கூலி, குறுந்தேசியவாதி எண்டு முத்திரை குத்த கன சனம் பாத்துக்கொணிருக்குது கண்டியளே? உந்த விளளயாட்டுக்கு நான் வரேல்லை!!!!
//..சத்தியமா இங்க நேற்று வவுனியாவில மாகாறம்பகுளத்துக்கு பக்கத்தில 2 இளம் வயதுகாரரை புலியள் சுட்டுப் போட்டுள்ளார்கள். ஐயோ…..//
ஏன் சத்தியம் பண்ணிறியள், நம்ப மாட்டடங்கள் எண்டு தீர்மமனிச்சிட்டியள் போல கிடக்கு.
//….உங்களைபோல அகதி தஞ்சம் கேட்டு ஐரோபாவுக்கு வர அந்த சனங்கள் கற்பனை கூட பண்ணமுடியாது…//
உண்மை தான், அனால் ஐரோப்பாவில அகதி தஞ்சம் கேட்டவர்கள் ஈழப்பிரச்சினையில வாயை முடிக்கொண்டிருக்கோணும் எண்டுபோட்டு பாலஸ்தீனம் தொடங்கி, கொரியா, கியூபா, சதாம் குசேன் வரை கருத்துச்சொல்லி சப்போட்பண்ணி கிழிக்கும் ‘தோழர்கள்’ மாதிரி விவாதம் சரிஎனப்படவில்லை.
//.. சனத்தை பயத்தோட வைச்சிருக்க அப்பாவி உயிரை குடிக்கிறத எந்த தருமம் போதிக்குது. இந்த போராட்டம் தேவைதானா? …//
எந்த ‘தருமம்’ எண்டு எனக்குத்தெரியாது. ஆனால் ஸ்ரீலங்காவில “புத்த” தருமம் எண்டுதான் எல்லலரும் சொல்லுறாங்கள்.
//.. என்ன மசிர் விடுதலை வேண்டிக்கிடக்கு? விடுதலை எண்டா என்ன? யாருக்கு யாரிடமிருந்து விடுதலை? உசிரோட இருக்கிற உரிமையை கூட தர முடியாதவங்க எதை தர போறாங்க?…..//
இது வெறும் கேள்விகேட்கிறதால மட்டும் நடக்காது. உந்தமாதிரி பயிற்சிப்பாசறை நடத்தி விடை தேடினவயள் ஐ.பி.கே.எஃ , இந்தியன் ஆமி நேரத்தில என்ன செய்தவை எண்டு நினச்சுப்பாக்கிறன்!!!
//..இனியாவது மரண தண்டணை குடுக்க வேண்டாம் எண்டு. …//
இப்பிடித்தான் உந்த புளொட் காறரும் தங்கட செயலதிபருக்கு மரணதண்டனை தீரேக்க நோட்டீஸ் அடிச்சவை. அதுமட்டுமில்ல வவுனியா ஸ்ரேசன் ரோட் புளொட் காம்பில இருந்த ஒருதரும் சொன்னவர்.
ஆனா செயலதிபரையும் இன்னும் எக்கச்சக்கமான பேரையும் ‘போட்டுத்தள்ளினது’ அவேன்ர ஆக்கள் தானெண்டுறாங்கள், உண்மையே?
//..அப்பிடி குடுக்குறதெண்டா புலித் தலைமைக்கு குறைஞ்சது 1000 க்கு மேற்பட்ட தடைவை அதை குடுத்திருக்க வேணும். ..//
ஆயிரத்தோட நிப்பாட்டியிட்டியள், மனிதாபிமானமோ இல்லை மன்னிக்கிற குணமோ? எனக்கெண்டால் லச்சத்துக்கு மேலால தாண்டும் போலதான் கிடக்கு!
தோழர் கண்ணனுக்கு வணக்கம்.
மிக சாதுரியமாக நீங்கள் மற்றவர்கள் மீது முத்திரை குத்தப் பார்க்கிறீர்கள். எல்லா முத்திரைகளுக்கும் பக்குவப்பட்டதால்தான் என் போன்றவர்களால் இந்தக் கணம் வரை தளத்தில் நிற்க முடியுது. அதை புரிஞ்சுகொள்ள உங்களுக்கு அரசியல் சொல்லித் தர வேண்டியதில்லை தானே? சுவிஸ் பிராங்கும் டக்கிளசின் டெலிபோனும் கழகத்தாரின் அவ்வப்போதைய அனுசரணைகளும் உங்களுக்கு போதுமானதா இருக்கலாம். வரதருக்கும் சுரேசுக்கும் வித்தியாசம் கொஞ்சம் தான். அவை அடைக்கலம் புகுந்த இடங்கள் தான் வித்தியாசம். இல்லையோ….சத்தியதா டெலோவை மறந்து கன காலம். மனுசனா வாழ்ந்து முடிக்கிறது இந்த சூழலில் கஸ்டம் தான். எண்டாலும் முடிஞ்சவரை முயற்சிப்போம். உங்களைபோல உசிர் எண்ட மசிருக்கு பயந்திருந்தா இப்ப கனடா சிட்டிசன் ஆகி 15 வருசம் ஆகியிருக்கும்… இத வீராப்பில சொல்லுறதா நினைக்காதீங்க. களத்தினூடு வாழ்வை நேசிக்க வேணும் என்ட நப்பாசை தான். பாவம் உங்களை போல பாதுகாப்பு தேடி பரதேசத்தில நிண்டு தத்துவம் சொல்ல சிலருக்கு மனமில்லை… பாப்பம் வாழ்வு எது எண்டு……
//…ஆட்களை(குறிப்பா தமிழரை) கொல்லாம அரஸ்ட் பண்ணி வைக்கச் சொல்லுங்கோ…///
மன்னிச்சுக்கொள்ளுங்கோ, இப்பதான் ஸ்ரீலங்காவின்ர பொலிஸ்மாஅதிபரோ என்னவோ ஒருத்தர் சொல்லியிருக்கிறார் தங்கட ஆக்கள் தானாம் பெருவரியா தமிழாக்களை கடத்திறது, கப்பம் வாங்கிறது கொல்லுறதெண்டு! உண்மையில ஆச்சரியமாத்தான் கிடக்கு. கடத்தல் கொலை பற்றி இல்லை, ஒத்துக் கொண்டதுக்கு! கொஞ்ச நாளில ஸ்ரீதரில படங்காட்டுற குறூப்பையும் புது குறூப்ப்பையும் மாட்டிவிட்டு ஸ்ரீலங்கா கழண்டுவிடும் எண்டு சொல்லுறாங்கள். அதுதானாம் ரகசியத் திட்டம். ஏனண்டால் ஸ்ரீதர் உரிமமயாளரிட்ட ஒரு எம்.பி தானே?
அதுமட்டுமில்ல புளொட் சித்தாத்தன் ‘தேனீ’ யில சொல்லுறார் தாங்கள் கருணாவோட கலந்துரையாடல் நடத்தினவையெண்டு. கிழக்கில ‘அதிகாரப்பகிர்வு’ விசயம் பேசினவையாம்.
மற்றது உங்க வவுனியாவில ‘பவர்’ தரப்புகளுக்குள்ள பிசகுபட்டினமாம். ஒருதற்ற காம்ப ஆமி வளைச்சு அரஸ்ட் பண்ணினதாம் ஆனால் அவையள் மற்ற தோழர் பக்கம் கைகாட்டி அவையின்ர இணணயத்தளத்தில போட்டிருக்கினம். எது உண்மை எண்டு தெரியுமே? நீங்கள் தானே மகாறம்பக்குளம் நியூசுகள் சத்தியம் பண்ணி சொல்லுற அளவுக்கு கனக்சன் வைச்சிருக்கிறியள். கேட்டுச் சொல்லுங்கோவன்!
//..உன்ர சனம் உன்னை வேண்டாம் எண்டா விட்டடிட்டு நீ வாழ வழியை தேடன்….//
சரியாச் சொன்னியள்!!!!!
ஒரு சீற் வெண்டு ஒரு மினிஸ்ரியும் காரும் டிரைவர், பெற்றோல் சாப்பாடுக்காக இன்னும் ஏன் எங்களை கஸ்ரப்படுத்திறியள். இதுதான் வாழ வழியை தேடுறதெண்டு ஏன் சொல்லுறியள்.
விவாதத்தை வேறுதிசை நோக்கி செலுத்துவதற்கு “சத்தியக்கடதாசி” அட்மினிஸ்ரேற்றர்/எடிட்டர் மன்னித்துக்கொள்ளவும்.
பூச்சவாக்களின் அனுசரணையை நம்பி ஒருகாலத்தில் இருந்தோம்.இப்ப அது தேவையில்லை. டக்ளஸ்… சித்தாத்தன்… கருணா… சுரேஸ்…. எல்லோரும் பூர்சுலாக்கள்தான். அது கூடாது என்றுதான் சவுக்கம் தோப்பிற்குள் பட்ட அனுபவத்தோடு வெளியேறி பல காலம். புலி பிழைதான். ஒரு பிழையை மட்டும் கூறிக்கொண்டிருநற்தால் மறு புறத்தில் அதை விட மோசமான பேர்வழிகள் நல்வர்களாகி விடுவார்கள்.
//…புலிமானும் சாதிமானுமான யாழ் விரிவுரையாளர் கணேசலிங்கம் தன்வீட்டு வேலைக்காரியான மலையக சிறுமியை 40 தடவைக்கு மேல் வல்லுறவுக்கு உள்ளாக்கியது ரகு போன்றவர்களுக்கு உறைக்கப்போவதில்லை. ..//
எனக்கு உறைக்கப்போவதில்லை என நீங்களாகவே தீர்மானித்துவிட்டீர்கள். மிக நல்லது. கேள்வியும் நானே பதிலும் நானே கட்சியோ? இது ‘புலிப்பாசிசத்துக்கு’ ஒன்றும் குறைந்ததல்ல!
//…நான் அறிந்த வரையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் இப்போது அமரரான பிரசித்தி பெற்ற பேராசிரியர் ஒருவரே தன் மனைவி தாய்
வீட்டுக்கு (அல்லது தாய் நாட்டுக்கு) பிள்ளை பெறச்சென்ற சமயம் வேலைக்காரியான மலையகச் சிறுமியையும் பிள்ளைத்தாய்ச்சியாக்கின பெருமைக்குரியவர். (யாழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் மெற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்டு வருகிற பாலியல் குற்றங்களைப் பற்றி ஒரு தனி நூலே எழுதமுடியும்) ….////
தனி நூலைக் கட்டாயம் எழுதுங்கள். ஆனால் புலிமான் கணேசலிங்கத்தின் பெயரை சொன்ன நீங்கள் ஏன் பிரசித்திபெற்ற பேராசிரியரை மறைக்கிறீர்கள். எங்களுக்கு சொன்னால் தானே நாமும் அறிந்து இவ்வாறானவர்கள் மீது ‘காறித்துப்ப’ முடியும். தயவு சொல்லுங்கள் சீலன். கேட்க மிக ஆவலாய் உள்ளேன்!
//..தாரீக் அலி தன்னுடைய Cலஷ் ஒf சிவிலிழடிஒன்ச் என்கிற நூலில் இந்தியாவில் தலித்துக்களையும் விட கீழே இருக்கிற சாதியாக முஸ்லீம்களைக் குறிப்பிடுகிறார். ..//
அவரின் கருத்துகள் மிகுந்த விவாதத்துக்குரியதாய் மாறி இருப்பதை அண்மையில் இணையத்தள விவாத அரங்குகளில் கண்ணுற்றேன். இந்தியாவில் தலித்துக்களிடையே கூட பிரிவினையும் சாதீய சிந்தனைகளும் உள்ளன. ஆனால் சாதீயத்துக்கு அப்பாற்பட்டதே ஸ்லலமும் முஸ்லிம்களும் என அறிந்த எனக்கு முஸ்லிம்களின் சமூக நிலைக்கு சாதீயமே காரணமென கூறுவது ஒரு
மிகைப்படுத்தல் என நினைக்க வைக்கிறது. அது மட்டுமல்ல முஸ்லிம்களின் வறுமை என்பது இந்தியா என்கின்ற ஒரு நாட்டுக்கு அப்பாற்பட்டது என்ற ஒரு கருத்தும், சான்றுகளும் மிகுந்தே உள்ளன. இதில் எமக்கு தெரியும் எண்ணைவள அரபு நாடுகள்கூட அடக்கம். உதாரணமாக சவூதி அரேபியாவில் வாழும் 35% இளைஞர்கள் வேலைஇல்லாதிண்டாட்டத்தை எதிர் கொள்கிறர் என அறிந்தேன்.
எனவே முஸ்லிம் சமூகநிலையை மலையக மற்றும் பஞ்சமர் சமூகநிலையில் இருந்து வேறாகவே அணுகவேண்டுமென நினைக்கிறேன். இதை சொல்வதற்காக என்னை புலி, எகாதிபத்திய கூலி, ஏழை மலையக மக்களளயும் முஸ்லிம்களையும் மக்களை பிரித்தாளும் தந்திரவாதி என விழிக்கவேண்டாம் என இறைஞ்சுகிறேன்!
//….உங்களைபோல உசிர் எண்ட மசிருக்கு பயந்திருந்தா இப்ப ………//
தனது உசிரை மசிராகவும் மற்றையவர்களின் உயிரை மானிடத்தோட்டத்தில் வளரும் பயிராகவும் நினைத்து போற்றும் தகஷன் போற்றுதலுக்குரியவரே!
“உசிரை மசிரெண்டு சொன்னவன்ர சவப்பெட்டிய மழைக்குள்ள நோர்வே எம்பசிக்கு முன்னால வச்சு ஒப்பாரி வக்கிறாங்கள்” என்று இங்கு ஒரு முன்னை நாள் கழகத்தோழர் (ஈழம், இந்தியா ஒரத்தநாடு முதல் மாலைதீவு வரை களம் கண்டவர்) சொன்னார்!
சத்தியக்கடதாசி இணையத்தை கருத்துச் சொல்ல பாவிக்கலாம் எண்ட எண்ணத்தில் தான் எனக்கு தெரிச்ச உண்மைகளை சொல்ல விரும்பினேன். மன்னிக்கவும் இணைய நிர்வாகிகள். நண்பர்களே! இப்போதைக்கு ‘நான் எனது மக்களுடன் தான் வாழ்கிறேன். இங்கு வாழ்வுக்கு விடப்படும் அனைத்து அச்சுறுத்தல்களும் எந்த வகையிலும் நான் விதிவிலக்கல்ல’ என்பதை மட்டும் தெரியப்படுத்த விரும்புகிறேன். மற்றும்படி எந்த கனெக்சனும் எனக்கு (மகாறம்பைகுளம்) இல்லை. கண்ணனுக்கு தனிப்பட்ட தொடர்பு முகவரி தெரியாதால்தான் சத்தியகடதாசி ஊடாக கருத்தச் சொன்னேன். நண்பர்களே! சத்தியக்கடதாசிபோன்ற ஒரு இணையத்தளம் எங்கள் கருத்து பறிமாறல்களால் வெறுப்படைந்து விடக்கூடாது. சத்தியங்கள் காலத்தால் அழியாதது என்பார்கள். ஆனால் சத்தியங்கள் சமகாலத்திலேயே உணரப்படவேண்டும். காலங்கள் வெறும் ஏடுகளில் மட்டுமே பதியப்படுகின்றன. அது ஒரு படிப்பினையை தருமேயொழிய வாழ்வை மீட்டுத் தராது என்ற சுயநல சிந்தனை எனக்குள் இருக்கிறது. வாழ்வு என்பது அந்தக் கணத்திலேயே பெறுமதியை தரவேண்டும். சந்ததி சொல்ல வாழ்வை அழிப்பதில் அர்த்தம் இல்லை. சந்ததிகளுக்கு அவ்வப்போதைய தேவைகளும் பிரச்சனைளும் அதற்கான தீர்வுகளுமே அவர்களை வாழ்விக்கும். நான் தெரிவித்தவை யாருக்கும் ஊறு விளைவிக்க கூடாது என்று உளமாறவே விரும்புகிறேன். நன்றி.
நல்ல காலம். கருத்துக்களோட மனம்விட்டுபேச இணையம் உதவுது. கண்ணன்> ரகு> சீலன் போன்ற வரலாற்றை கொஞ்சமெண்டாலும் மறக்காமல் தன்னிலை கருத்துக்களை சொல்லக்கூடியவர்களை இணையத்தில் சந்திப்பதில் அளவிலா மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை தந்துள்ள சத்தியக்கடதாசி இணையத்திற்கு நன்றி. நண்பர்களே கருத்துக்களால் மோதுவோம். உண்மைகளை கண்டறிய இன்னும் வேகமெடுப்போம். தெளிவுபெறுவோம்.(சிலவேளை நீங்கள் சொல்லலாம் நாங்க எப்பவோ தெளிஞ்சிட்டம் எண்டு. பரவாயில்லை). இன்னும் குழம்பி குழம்பி தெளிவோம். குரங்குக்கும் ரெயினிங் குடுத்தா அதுவும் ரிகரை அழுத்தி இலக்கு பாத்துச் சுடும். ஆனா சிந்திச்சு சுட வைக்க முயற்சிப்பம். கல்லில நார் உரிக்கிற வேலை தான். விளங்குது. முடிஞ்சா ரெயினிங்கிலயே தோட்டாவை முடிக்க வைக்க வைக்க பார்ப்பம். பிரக்டிகலுக்கு மிருகத்தை நம்ப வேண்டாம். மனுசன்களும் சில வேளை மிருகம்போல் நடக்கிறான்கள். அவங்களுக்கு உறைக்கிற மாதிரி சொல்லுங்க. மனுசனெண்டா திருந்துவான்கள். இல்லாட்டிலும் ஓயவேண்டாம். திரும்ப திரும்ப சொல்லுங்க. களைச்சு போக கூடாது. (அரைப்போத்தல் விஸ்கியும் அஞ்சாறு பியர் போத்திலும் அப்ப மட்டும் தான் நிம்மதியை தரும்.)விடாதயுங்கோ தொடர்ந்து முகத்தில் அறைவோம். எங்கிருந்தாலும் இடிச்சுக் கொண்டு இருப்பம். உண்மையில் வெவ்வேறு கோணங்களிலாயினும் எங்கேயோ ஒரு புள்ளியில் சந்திக்கிறோம் எண்ட நம்பிக்கை வலுக்குது. வாழ்க்கை வாழ்வதற்கே. அது மற்றவைக்கும் பிரயோசனமா இருந்திட்டு போகட்டுமே.
யாழ் இந்து வேளாளர் (புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட) 80ம் ஆண்டு பூசம்இ கடகராசி. 4’ 9” உயரம். விருச்சிகலக்கினம். Diploma Teacher ஆக தொழில் புரியும் மணமகளுக்கு இலண்டனில் படித்த நற்பண்புகளுடைய மணமகனை பெற்றோர் தேடுகின்றனர் (தீவுப்பகுதி விரும்பத்தக்கது)
தொடர்புளுக்கு. இலங்கை- 0094777064659- 0094112594504
UK 00442085932592
//..சத்தியங்கள் காலத்தால் அழியாதது என்பார்கள். ஆனால் சத்தியங்கள் சமகாலத்திலேயே உணரப்படவேண்டும். காலங்கள் வெறும் ஏடுகளில் மட்டுமே பதியப்படுகின்றன. அது ஒரு படிப்பினையை தருமேயொழிய வாழ்வை மீட்டுத் தராது என்ற சுயநல சிந்தனை …///
மிக நல்ல கருத்து தக்க்ஷன்!
இவ்வாறான் சுயநலன் சார் கருத்து/சிந்தனைகளே மானிடசமூகத்தை வழிநடத்துகிறது. இன்றைய மேற்குலக முன்னேற்றம் இதற்கு நல்ல உதாரணம்!
ஷோபா சக்தியின் கருத்துக்களுடனான எனது ஒத்தோடல்களும் மறுப்புகளும் பற்றி விரிவாக எழுத நினைத்திருந்தேன். இரண்டு சிக்கல்கள், முதலாவது என் உதடுகளை மீறி தோல் வளர்கிறது. :-)இரண்டாவது எனக்குப் பரீட்சை கிட்டுகிறது.
அதனால், நான் மேற்கோளிடப்படுகிற கணபதி இராசதுரை பற்றிய பகுதியை மாத்திரம் மறுமொழிக்காய் எடுத்துக் கொள்கிறேன்:
சாதியத்தின் ஒடுக்குமுறைக்குள்ளும் இந்த நிலையை இராசதுரை அடைந்தது ஒரு சிறப்பான விடயம் தான். நான் இல்லையென்று சொல்ல வரவில்லை. ஆனால், பிற சிலவற்றை அவர் எவ்வாறு எட்டினார் என்பது அங்கு படிக்கிற ஒவ்வொருத்தருக்கும் தெரியும். அது மேல் சாதிப் பரப்புரையல்ல. அதில் பாதி உண்மை இருந்ததென்றே நான் கருதுகிறேன். ஆனால் அவர் மீது குற்றஞ்சாட்டுகிற பிற அதிபர்கள் ஒன்றும் சுத்தமானவர்கள் இல்லை என்பதும் தெரியும்.
ஷோபா சக்தி சொல்லுகிற பாடசாலை அபிவிருத்திப் பணிகள் அனைத்துமே உண்மைதான். ஆனால், அவற்றின் பின்னிருக்கிற தொடர்புகள் பற்றியும் கதைத்திருக்க வேண்டும். யு.என்.பி நட்பு கோவில்களும் தர்மகர்த்தாக்களும் மகேஸ்வரன் எம்.பியாய் இருந்த காலத்தில் ஓட்டோக்களை, காசு பணங்களைப் பெற்றது போலத் தானே இதுவும். //சாதிய மதிப்பீடுகள் அதிபரால் கல்லூரிக்கு வெளியே துரத்தியடிக்கப்பட்டன.// என்பது உண்மையில்லை. ராசதுரையே சாதிய மதிப்பீடுகளில் பெருமளவுக்கு ஊறிக் கிடந்தவர் தான். இல்லையெனின் வகுப்பில் அனைவருக்கும் சப்பல் அடி விழுகிற போது (பிழை செய்தவனை இன்னாரென அடையாளம் காண்வியலாத சந்தர்ப்பங்களில்) என்னை மாத்திரம் விடுகிறது ஏன்? அடிக்கடி என்னைக் காட்டி மற்றவர்களுக்கு அவர் சொல்வதுண்டு ‘குலத்தில் பிறந்தது வாய்ச்சொல் காட்டும். நிலத்தில் பிறந்தது வால் காட்டும்’ (சரியாக அந்த மொழிதல் எனக்கு ஞாபக்மில்லை.) ஓரளவுக்க்கு நான் அச்சாப்பிள்ளைதான் என்றாலும் அனைவருக்கும் தண்டனை என்று வருகையில் அடி வாங்குபவர்களில் என்னைவிட நல்ல பிள்ளைகள் இருந்தார்கள். எல்ல்லாரும் ‘அக்கா’ என கேலியாக அழைத்து பகிடி செய்கிற ஒரு மாணவன் கூட தண்டிக்கப்பட்டானே.. பாக்கிற எவனுக்கும் தெரியும் அவன் ‘சோலி சுரட்டுக்குப் போகாத பெடியன்’ என்று.. ஆனா இரண்டு விஷயங்கள் காரணமாக தண்டனை விலக்கு அழிக்கப்படவில்லை என்பது என் எண்ணம்; முதலாவது அவனுக்கு என்னைப்போல ‘சர்மா’ பின்னொட்டோ ஆங்கிலம் கலந்த பேச்சோ இல்லை. அடுத்தது அவன் பார்ப்பதற்கே அவலட்சணமாகவும் கறுப்பாகவும் இருந்தான்.
இராசதுரை என்னிடம் கூட 5000/= வாங்கத்தான் செய்தார். யாழ் இந்துவில் 15000/= வாங்குகிறார்கள். குறித்த பாட்சாலைக்கு இருக்கிற மதிப்பு பொறுத்து இந்தப் பறிதொகை வேறுபடுமாகையால், இதுலும் கூட இராசதுரை உத்தமரல்ல.
அவர் சகல மதங்களுக்கும் அங்கீகாரம் வழங்கினார் தான். ஆனால், இந்துமாமன்றம் கொடிகட்டிப் பறந்ததை என்ன சொல்ல.. மஜோரிட்டி பெடியங்கள் அந்த மதம் எண்டதால இல்லை. திருக்கேதீஸ்வரப் பூசைக்காசு, நவராத்திரிக் காசு இதுகளைச் சேர்க்கிறதில முன்னுக்கு நிற்க வேண்டிய தேவை அவருக்கு இல்லையே. அப்படியே வலியுறுத்தினாலும் வகுப்பு வகுப்பா வந்து காசு குடுக்காதவன் வெளிய வா என்கிற அளவுக்கு அவருக்கு இந்து மதத்தில என்ன அக்கறை. இராசதுரை சிறுவர்களிடம் திருநீறு பூசி வரவேணும், ஒவ்வொரு பீரியட் முடிவிலையும் சரஸ்வதி கும்பிடோணும் எண்டெல்லாம் சட்டம் போட்ட ஒருத்தர் தான். இதுகளை மீறினால் என்ன விதமான வன்முறைகளை அவர் கையாள்வார் என்பதை யாராவது ஒரு சென்றல் மாணவனைப் பிடித்து தெரிந்து கொள்ளவும்.
அவர் கொலையுண்ட காலப்பகுதியில் நான் மருத்துவ விடுதியில் இருந்த படியால் எனக்கு நேரடி அனுபவங்கள் இல்லை. ஆனால், மாணவர்கள் கிளர்ந்தெழுந்தார்கள் என்பது பொய். அவர்கள் கிளர்த்தப் பட்டார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். அவர் கொலையுண்ட போது ஏ.எல் காரரான என் சக மாணவர்கள் பாடசாலை போவதையே நிறுத்தி பயந்து கொண்டிருந்தார்கள். யார்யாரோவெல்லாம் மாணவர்களாகியும் இருந்தார்கள். இது ஊகிக்கக் கூடிய ஒன்றுதான் எனினும் ஷோபா சக்தி இதைச் செய்யாமல் விட்டிருப்பதை நான் மேல்சாதி எதிர்ப்புக்குள் மறைந்ந்து போய்விடும் ஆய்வுமனம் என்பதாகவே காண் விரும்புகிறேன்.
எனது அனுபவங்களில் இருந்து நான் சொல்லக் கூடியதெல்லாம் ஒன்றுதான்; அவர் ஒரு தலித் சமூக செயற்பாட்டாளர் அல்ல. மேல் சாதி மதிப்பீடுகளை தலித்துக்கள் மீது திணிப்பவராக இருந்தது மாத்திரமன்றி தலித்துகளின் நிலையை விளங்கிக் கொள்ளாத ஒருத்தராகவும் இருந்தார். அரை நேரக் கஞ்சிக்கு வழியில்லாத திட்டி பகுதியைச் சேர்ந்த தலித்துக்கு நிதியுதவி பெற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டு சப்பாத்துப் போட்டுக் கொண்டுவரவில்லை என விளாசுபவர் குறித்து, அவமானப்பட்ட அவன் சற்று முறைத்தால் குடும்பச் சூழல் சரியில்லாட்டா இப்பிடித்தான் எண்டு பேரன்ற்சைக் கூட்டிக்கொண்டராம வகுப்புக்கு வராத என்று சொல்பவர் குறித்து தலித் சமூக செயற்பாட்டாளர் என எழுதுவது அபத்தம்.
அடுத்த பகிடி அவர் பாஸிஸ எதிர்ப்பாளர் என்பது. யார் பாஸிஸ எதிர்ப்பாளர்? கண்பதி ராசதுரையா? சென்ரல் காரங்கள் இந்த ஆகப்பெரிய இலக்கியவாதியின் கருத்தைப் பார்த்து சிரிக்கவெல்லோ போறாங்கள். சென்ரலில் (அனேகமாக என்னைத் தவிர) அவரிடம் அடிவாங்காத ஆக்களே இல்லை என நினைக்கிறேன். பிரம்பு கை கால் எல்லாம் ஆயுதம். சுவரோடு சேர்த்து மண்டையை அடிக்கக் கூட செய்வார். பிள்ளை தரப்பு நியாயம் கேட்கப் படுவதில்லை என்பதற்கும் மேலாக அவர் கேள்வி கேக்கிற விதத்திலேயே பிள்ளைக்கு கண்ணீர், மலம், சலம் எல்லாம் போகும். யாழ்ப்பாணத்தில் இருக்கிற சிறுவர் நலக் காப்பு நிறுவனங்களையும் DCPCயையும் யாராவது தொடர்பு கொண்டு விவரம் கேட்கலாம். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தெய்வ மேன்மை கெடக்கூடாதெண்டு செயற்பாட்டாளர்களை உள்ள விடேல்ல. இவர் தன் மேன்மை கெட்டிடக் கூடாது என்டதுக்காக யாரையும் உள்ள விடேல்ல.
இராசதுரையை அவரது பிரச்சனைக்குரிய பக்கங்கள் பற்றிய பிரக்ஞையின்றி ஷோபா சக்தி தூக்குவது எனக்கு சனதரும போதினி சமர்ப்பிக்கப் பட்ட விதத்தையே ஞாபகப் படுத்தியது. குறித்த ஒன்றை எதிர்ப்பதற்காக விடயங்களில் காணப்படுகிற பன்முகத்தன்மையை காணத்தவறுகிறவர்களாய் இருக்கிறார்கள் சுகனும் ஷோபா சக்தியும்.
இலங்கையில் முதலாவது பிரச்சனை சாதியம் என இவர்கள் அழுத்துவதில் எனக்கு வேறுபட்ட கருத்துக்கள் உண்டு. நாங்கள் கொடுமைப்படுத்தப்ப் படுகிற போது சிங்களச் சிப்பாய் தமிழன் எண்டுதானே பாக்கிறான்? நீ பிராமணனா எண்டு ஒரு கேள்வி கேட்டு என்னை விட்டிடுவானா? அவனுக்கு எல்லாம் ஒண்டுதான்..
ஆனா. காசி ஆனந்தனின் சிறை வாழ்வு - அங்க அவருக்கு இருந்த சலுகையள் பற்றி தமிழரசன் எழுதுறதை வாசித்த போது கொஞ்சம் யோசிக்க வேண்டியிருந்தது.. பிரச்சனை தொடங்கி இது வரைக்கும் என்னை ஒரு ஆமிக்காரனும் மறிச்சு தொல்லை தரேல்ல எண்டது ஞாபகம் வந்து உறைச்சுது.. ஆனால் இதுக்கெல்லாம் காரணம் சாதியா? ஆங்கிலம் இருந்த படியா காசியருக்கு அடி குறைவு; என்ர முகம் பிரச்சனையில்லாம/முறால்தனம் இல்லாம பொன்ஸ் தனமா இருக்கிறதால (பிராமணி?) என்னை மறிக்கேல்ல.. அப்பிடியா? அப்ப அது சாதிப் பிரச்சனையில்லைத் தானே. மனிசற்ற இயல்புகளை/ திறமைகளைப் பற்றினது தானே…
இல்லாட்டி இயல்புகளையும் திறமைகளையும் சாதிதான் தீர்மானிக்குது போல. ஆங்கிலம் எண்ட சொத்து பங்கீடு செய்யப்படுறது மேல்சாதிக்குள்ள தானே.. முகத்தில softness & childness இத்தினை வயசிலையும் இருக்கோணுமெண்டா கஷ்டப்படாம இருக்கிற உயர்சாதிக்காரருக்குத் தானே சாத்தியம்? ஷோபா சக்தி சொல்லிறதெல்லாம் ஒரு வேளை சரியோ… படு குழப்பமாக் கிடக்கு.. யோசித்து விட்டு பிறிதொரு சமயம் எழுதுறன்.
ஹரிஹரசர்மா,
திரு.இராசதுரை பற்றிய பின்னூட்டத்துக்கு நன்றி. உங்களின் யாழ் இந்துக்கல்லூரி பற்றிய விமர்சனம் கொஞ்சம் வேதனை தருகிறது. அது உண்மை எனும் பட்சத்தில் அதை சரி செய்ய எம்போன்ற பழைய மாணவர்கள் முயற்சி எடுக்க இருக்கிறோம். ஆனால் எங்கு தொடங்குவதென்று தெரியவில்லை. உங்களைத்தனி மடலில் தொடர்புகொள்ளலாம் என இருகிறேன். ஆனால் அக்கட்டுரையின் பின்னூட்டங்களில் குறிப்பிட்ட 100ம் ஆண்டு மலர் கட்டுரைகள், திரு.மரியதாஸ் மாஸ்ரர் மற்றும் பல, சாதீயக்கொடுமைகளை தாக்குவதாக நினைத்து யாழ் இந்துவை தாக்கி எழுதப்பட்டவையே என்பது எனது கருத்து. 1973-1981 இல் நான் அங்கு கற்றிருக்கிறேன். நீங்களோ அன்றி பின்னூட்டம் எழுதியவர்களோ கூறியது போல் நான் அங்கு காணவில்லை. மாறாக யாழ் இந்துக்கல்லூரியே ஏழை மாணவர்களைக்கூட பண்புடன் நடாத்திய கல்லூரி எனலாம். உண்மையில் எனக்கு அங்கு எம்முடன் கற்றவர்களில் ஓரிருவரைத்தவிர (அவர் எனது ஊரார் என்பதனால் ) மற்றையோர் என்ன சாதி எனத்தெரியாது! காரணங்கள் பல இருக்கலாம் ஒன்று யாரும் அதைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை மற்றையது எம்மில் பலர் ஈழப்போரில் பங்கெடுக்க முனைப்புடன் இருந்தனர். அதனால் சாதீய அணுகுமுறைக்கு இடமே இருக்கவில்லை. சாதி பேசுபவர்கள் கல்வியிலோ அன்றி ஈழப்போரரட்டத்திலோ அன்றி விளையாட்டுத்துறையிலோ முன்னணி வகிக்க முடியயதவர்கள் என்ற கருத்தே இருந்தது.
நீங்கள் யாழ் இந்து/சாதீயம் பற்றி எழுதி அது பலரால் எவ்வாறு தமது கருத்துக்களை நியாயப்படுத்த துணைபோய் அதற்கு பின்னூட்டம் எழுத வேண்டிய நிலை வந்தது என்று பார்க்கிறேன்.
இது இன்று நேற்று நடப்பதல்ல. வரலாற்றைப் புரட்டிப்பாருங்கள். இதில் ரஷ்யப்புரட்சி பற்றியும் லெனின் ஸ்ராலின் , சார் மன்னன் பற்றியும் நாம் 1980 களில் அறிந்தவை இன்று மாறிவிட்டதல்லவா. ரஷ்யப்புரட்சியை எவ்வாறு போற்றியும் எதிரிகளைத்தூற்றியும் நாம் அறிந்திருக்கிறோம். இன்று எல்லாமே தலைகீழ். அதே போலத்தான் உங்களது யாழ் இந்து பதிவும் ‘ஹைஜாக்’ செய்யப்பட்டிருப்பது மட்டுமல்லாது திரு.இராசதுரை தூக்கிவைத்து ஆடப்படுகிறார்.
இராசதுரை மரணத்தை எதிர்த்து நடந்த மாணவர்களின் ‘எழுச்சி’ப் போராட்டம் இன்னுமொரு ஜோக்!
இதை பதிவிட்டதற்கு நன்றி! இதுக்கு எழுதியவர்களைப்பற்றி குறை சொல்ல முடியாது. பாவம் பூபாலசிங்கம் புத்தகசாலையில் மொத்தமான ரஷ்ய புத்தகங்கள் வாங்கிப்படித்ததனால் வந்த ‘ரோமாண்டிக்’ சிந்தனை! அது மட்டுமல்ல சீனாவின் பிரச்சார ஏடுகள் 25 சதம் விற்றபோது அதை வாங்கி கொப்பிக்கு கவர் போடுவோர் இந்தச் சிந்தனையில் மூழ்கியிருந்தனர். ஆனால் அதுவும் 80களில் அடிபட ஆரம்பித்துவிட்டது. நேற்றைய ஃபோப்ஸ் (Fஒர்பெச்) இதழில் ரஷ்ய, சீன டொலர் பில்லியன காரர்களின் பெயர்கள் இருக்கிறது பார்த்தால் மயங்கித்தான் விழுவீர்கள். இதை நம்பியா திரிந்தோமென!
யாழ் இந்துக்கல்லூரியின் நிலைப்பாடு பற்றி என்னால் இன்னும் பல எழுதமுடியும் ஆயினும் விவாத தலைப்பு, கருப்பொருள் சாராமல் விலகிச்செல்ல விருப்பமில்லாததனால் நிறுத்துகிறேன்.
ஹரி, தடியைக் கொடுத்து விட்டீர்கள். அதை வைத்தே தமக்கு வேண்டியவர்களை அடிக்கிறார்கள். வாங்கிக்கட்டத்தான் வேண்டும்!!!!!!
இதை மாற்றுக்கருத்தாளர்களும், டக்ளசும், பேராசிரியர் கூல், டி.பி.எஸ்.ஜெயராஜ், ஆனந்தசங்கரி மற்றும் பலரும் வேதனையுடன் புரிந்து கொண்டுள்ளனர். உங்களைப்போல் மறுதலிக்க வெட்கப்பட்டு “அங்காலையுமில்லை இங்காலையுமில்லை ” நிலையிலுள்ளனர்.
உங்கள் பிரத்தியேக மின்மடல் விலாசத்தை எவ்வாறு பெறலாம்? உடன்பாடு இருந்தால் தெரியப்படுத்தவும்
நன்றி.
ரகு,
யாழ் இந்து பற்றிய பதிவை எழுதியது வாசிகன்.
அந்த கருத்துக்களுடன் எனக்கு முழுதுமான உடன்பாடு இப்பவும் உண்டு. அதில வெளிப்பட்டதை விட யாழ்ப்பாண பாடசாலைகளின்ரநிலவரம் கொடூரம். இது பற்றி ஏ.எல் முடிய எழுதிறம்.நீங்கள் சொல்றது போல நான்+மற்றவர்கள் எழுதுவதெல்லாம் ஆளாளுக்கு தகுந்த மாதிரி வியாக்கியானம் பண்ணிக் கொள்ளினம் தான். ஆனா அவையிட கருத்துக்களை நான் மறுக்கேலா,நான் ஒருநியாயம் சொல்லுமாப் போல அவையும் சொல்லுவினம் தானே, என்னால் விரிவாக பேச முடியாதிருக்கிறது. சாதியம் பற்றிநான் சொல்றது உண்மை. யாழ்ப்பாணத்தில ஒரு பஞ்சமரா வாழ்ன்ட்ந்து பாத்தா தான் அந்த்த வலி விளங்கும். வேற சில காரணங்களால எனக்கும் அதில கொஞ்சம் விளங்குது.
நீங்கள் முரண்வெளி முகவரிக்கே தொடர்பு கொள்ளலாம்.நான் அல்லது இன்னுமிருவர் தான் அதைப் பார்வையிடுவோம். ஒன்றும் சிக்கலில்லை. அந்த முகவரிக்கே தொடர்பு கொள்ளுங்கள்.
மூன்று நான்ஙு கிழமைகளுக்கு ஒருக்காதான் மெயில் செக் பண்ணுவது என்பதால பதில டக்கெண்டு எதிர்பார்க்க கூடாது.
muranveli@yahoomail.co.in
ஐயா நல்லதொரு ஆராய்ச்சிக் கட்டுரை
உணர்வுகள் என்ற களத்தில் ஆருரன் என்பவர் ஈழத்தில் சாதிப் பிரச்ச்னைகள் இல்லையென்றும் வெள்ளாளர்கள் தான் தாழ்த்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு விடுதலை கொடுத்தார்கள் என்று உளறித் திரிகின்றான்.
அங்கே இவருக்கு எதிராக எழுதிய ஒருவரை தடை செய்து வைத்திருக்கின்றான். அன்த நபர் நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்ட போல் போன்றவர்களினால் தான் ஈழத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுதன்திரம் கிடைத்தது என்ற பதிலுக்கு ஜீஜீ பொன்னம்பலமும் அமிர்தலிங்கமூம் அவர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்த வீரர்கள் என புழுகுகின்றார்.
நேரம் கிடைத்தால் அன்த களத்துக்கு சென்றுபாருங்கள்
ஜூட் நிக்சன்