திசநாயகத்தை விடுதலை செய்!

இலங்கை அரசே! தமிழர்கள் வாழ்வுரிமைக்காக பாடுபட்ட பத்திரிகையாளர் ஜே.எஸ். திசநாயகத்தை விடுதலை செய்! பத்திரிகை சுதந்திர பாதுகாப்புக் கூட்டம் நாள்: செப்டம்பர் 8, 2009, செவ்வாய் காலை 10 மணி இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், அரசினர் ஓமந்தூரார் தோட்டம், சென்னை – 2 பங்கேற்பு : திரு. இரா.ஜவஹர், மூத்த பத்திரிகையாளர் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர், தமுஎகச திரு. பாரதி தமிழன், சென்னை பத்திரிகையாளர் மன்றம் திரு. ஆர். மோகன், சென்னை பத்திரிகையாளர் சங்கம் […]

Continue Reading

நான் எப்போது அடிமையாயிருந்தேன்!

நேர்காணல்: புஷ்பராணி ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் தோழியர் புஷ்பராணி. தலைமறைவுப் போராளிகளுக்குச் சோறிட்டு வீட்டுக்குள் தூங்கவைத்துவிட்டு, பட்டினியுடன் வீட்டு வாசலில் காவலிருந்த ஒரு போராளிக் குடும்பத்தின் மூத்த பெண்பிள்ளை. ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ தந்த மறைந்த தோழர் சி.புஸ்பராஜாவின் மூத்த சகோதரி. அறுபது வயதை நெருங்கும் பராயத்திலும் அரசியல் கூட்டங்கள், இலக்கியச் சந்திப்புகள், பெண்கள் சந்திப்புகள், தலித் மாநாடுகள் என உற்சாகமாகத் தனது பங்களிப்பைச் செலுத்திக்கொண்டிருப்பவர். தனக்குச் சரியெனப்பட்டதை எந்தச் சபையிலும் சந்தர்ப்பத்திலும் எதற்கும் […]

Continue Reading

பிறழ் சாட்சியம்

மறுபடியும் ஒருமுறை வெறுப்புடன் அந்த வாசகத்தை உச்சரிக்க வேண்டியிருக்கிறது: “கொடியவர்கள் இழைக்கும் கொடுமைகளிலும் பார்க்க அவற்றை நீதியான மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மவுனமாய் சகித்துக்கொண்டிருப்பது குறித்தே நாம் இந்தந் தலைமுறையில் வருத்தமுற வேண்டும்” என்றார் மாட்டின் லூதர் கிங். நம்காலத்தில் மவுனத்தைக் கலைத்துக் கொடுமைகளை நியாயப்படுத்தும், திரிக்கும் நீதிமான்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சில நாட்களிற்கு முன்பு பிரித்தானிய தொலைக்காட்சியான ‘சனல் 4’ல் ஒளிபரப்பப்பட்ட அந்தக் கொடூரக் காட்சியில் மனிதர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு இராணுவச் சீருடை அணிந்தவர்களால் பன்றிகளைப்போல […]

Continue Reading

ஈழப் போராட்டமும் தமிழக ஆதரவாளர்களும்

– அ.மார்க்ஸ் தமிழ் அறிவுஜீவிகள் மத்தியில் ஒரு மரண அமைதி நிலவுவதாக சில நாட்களுக்கு முன் எழுத்தாள நண்பர் ஒருவர் கவலையோடு குறிப்பிட்டார். ஒரு சிலர் மத்தியில் ஒருவகை கையறு நிலையும் வேதனையும் நிலவுவது உண்மைதான். மே 18லிருந்து கிட்டத்தட்ட அடுத்த ஒரு வாரம் முழுவதும், வழக்கமாக என்னிடம் பேசுகிற பழக்கமில்லாத சில எழுத்தாள நண்பர்களும் கூட என்னைத் தொடர்பு கொண்டு “கேள்விப்படுவது உண்மைதானா?” என விசாரித்த வண்ணம் இருந்தனர். தொலைக் காட்சியில் காட்டப்படும் உடல் அவருடையது […]

Continue Reading

ஈழப்போரின் இறுதி நாட்கள்

இம்மாத ‘காலச்சுவடு’ இதழில் ‘ஈழப்போரின் இறுதி நாட்கள்’ என்ற மனம் பதைக்க வைக்கும் நீள்கட்டுரை வெளியாகியிருக்கிறது. புலி ஆதரவாளர்கள், அரச ஆதரவாளர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் முன்முடிவுகளையும் சாய்வுகளையும் சற்றே தள்ளிவைத்து விட்டு நிதானமாகப் படிக்க வேண்டிய கட்டுரையிது. இந்தக் கட்டுரை ராஜபக்ஷவின் கைக்கூலிகளால் எழுதப்பட்டது என்றோ, ஒட்டுக்குழுக்களின் சித்துவேலை என்றோ பழிக்கப்படலாம் அல்லது இதைக் கண்டுகொள்ளாமலே விடும் தந்திரமும் நடக்கலாம். ஒருவர் உண்மையை எதிர்கொள்ள மறுப்பதால் உண்மைக்கு இழப்பு ஏதுமில்லை என்பதைத்தான் இப்போதைக்குச் சொல்லிவைக்க முடிகிறது. […]

Continue Reading

கருத்தரங்கம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் நடத்தும் இலங்கைத் தமிழர் வாழ்வுரிமை சிறப்புக் கருத்தரங்கம் 17.8.2009, திங்கள்கிழமை மாலை 6 மணி ராஜா அண்ணாமலை மன்றம் பாரிமுனை, சென்னை – 1. இலங்கையில் LTTE உடனான போர் முடிந்துவிட்டது என ராஜபக்ஷே அரசு கூறினாலும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டம் தொடர்கிறது. வாழ்நாள் முழுவதும் பதுங்கு குழிகளில் ஒடுங்கி வாழ்ந்த அப்பாவித் தமிழர்கள் இன்றும் மரணத்தின் விளிம்பில் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான ‘வதை’ முகாம்களில்தான்…. சர்வதேச செஞ்சிலுவைசங்கம் […]

Continue Reading

போர் இன்னமும் ஓயவில்லை

– ரீ.சிவக்குமார் ‘நான் ஒரு தேச மறுப்பாளன்’ எனப் பிரகடனப்படுத்திக்கொள்கிற ஷோபாசக்தி ஈழத் தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். கொரில்லா,தேசத் துரோகி, ம், எம்.ஜி.ஆர் கொலை வழக்கு என்று பல படைப்புகளை எழுதியுள்ள ஷோபாசக்தியின் எழுத்துகள் எப்போதும் அதிகாரத்தை கிண்டல் செய்து கேள்வி கேட்பவை. 1983 முதல் 1986 வரை விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் போராளியாக இருந்து பின் இயக்கத்தில் முரண்பட்டு வெளியேறி, இப்போது பிரான்சில் வசித்துவரும் ஷோபாசக்தி, 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் அங்கு குடியுரிமை வாங்கவில்லை. […]

Continue Reading