காலச்சுவடு ஆசிரியரிடம் சில கேள்விகள்
‘எதுவரை’ இணையத்தளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு ‘காலச்சுவடு’ ஆசிரியர் கண்ணன் பதிலளிப்பார் என அறிவித்தல் வெளியாகியுள்ளது. எனவே கீழ்க்கண்ட கேள்விகளை ‘எதுவரை’ இணையத்தளத்திற்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்துள்ளேன். பதிலளிக்கவிருக்கும் ‘காலச்சுவடு’ ஆசிரியருக்கும் பதில்களை வெளியிடவிருக்கும் ‘எதுவரை’ இணையத்தளத்திற்கும் முன்கூட்டியே நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 1. கடந்த மார்ச் மாதம் லண்டனில் நீங்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், உங்களது ‘சுவடி’ நிறுவனம் ‘பிராமின் டுடே’ பத்திரிகையை தயாரித்துக் கொடுப்பது குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டபோது ‘பிராமின் டுடே’ க்கும் உங்களது நிறுவனத்திற்கும் இடையே உள்ளது […]
Continue Reading