இந்திய ஆக்கிரமிப்பிற்கு ENDLF அழைப்பு

கட்டுரைகள்

ENDLF ராமராஜனின் காட்டிக் கொடுப்பை எதிர்த்து இன்றுவரை TBCயின் எந்த ஜனநாயகவாதியும் கண்டனமோ மறுப்போ தெரிவிக்கவில்லை. TBCயிலே ராமராஜன் தான் எல்லாக் கொலைகளையும் எதிர்ப்பதாக அடிக்கடி கூறியிருக்கிறார். அதிலே இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் கொலைகளும் அடங்குமோ தெரியாது

இந்திய ஆக்கிரமிப்பிற்கு ENDLF அழைப்பு

வ. அழகலிங்கம் : தமிழரசன்

இந்திய ஆக்கிரமிப்பிற்கு ENDLF அழைப்புந்திய அரசு தனது இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி அங்கு அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்று ENDLF விடுத்த அறிக்கையொன்று ஊடகங்களில் வெளிவந்துள்ளது. TBCயால் புகலிடத் தமிழ் மக்களின் செவிகளில் பலவந்தமாய்த் திணிக்கப்பட்ட ஞானசேகரன் என்ற அரசியல் ஞானவானின் பேரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ENDLF தமிழ் நாட்டில் நாற்பதுக்கு மேற்பட்ட பத்திரிகையாளர்களைக் கூட்டி மகாநாடு ஒன்றை நடாத்தியதாகவும் அதில் TBC இயக்குனர் ராமராஜன் உட்பட ENDLFபின் சர்வதேசப் பிரதிநிதிகள் கலந்துகொண்டதாயும் இச்செய்திகள் விளம்புகின்றன.

ENDLF உதிரிகள் PLOTE அமைப்பின் உடைவுகள் சிதறல்களிலிருந்து இந்திய உளவுப்பிரிவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கூலி இயக்கமாகும். புளொட் இயக்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான பரந்தன் ராஜன் என்ற ஞானசேகரன் இந்தக் கூலிக்குழுவின் தலைவராவார். சந்ததியார் போன்ற நேர்மையான மனிதர்களைப் புளொட் கொன்றபோது இவரும் கொலைக்களத்தின் மூலைகளில் நின்று பங்கெடுத்த பெரும் பழியைச் சுமப்பவராகும். இந்திய இராணுவ காலத்தில் பரந்தன், கிளிநொச்சி, மாங்குளம் உட்பட வன்னிப் பகுதிகளில் ஆயுதப் பயங்கரவாதம் புரிந்த மக்கள் விரோத அமைப்பாக ENDLF இருந்தது. கொலைகள் கொள்ளைகள் உட்பட இன்னும்பல கட்டுக்கடங்காத மக்கள் சேவை புரிந்தமைக்கான ஆவணங்கள் இன்னமும் சரியாகத்திரட்டப்படாமல் மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிவாகி ஜனநாயகச் சூழல்வரும்வரை காத்திருக்கின்றன.

பரந்தன் ராஜனைப் பிரபாகரனை ஒத்த காப்பியத் தலைவராக ஆக்கும் முயற்சியுடன் அவர் பாதுகாப்புக் காரணங்களுக்காக கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்ற தகவலும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. தேசியத் ‘தலைவர்’ வன்னியின் பாம்புப் புற்றுக்களை ஒத்த மறைவிடங்களில் மழை வெய்யில் காணாமல் பதுங்கிக் கிடக்கையில் ஞானசேகரனும் இந்தியப் பாதுகாப்புடன் தமிழ் நாட்டில் பதுங்கிடம் தேடிக் கொண்டவராகும். பாசிசப் புலிகள் அழிந்து ஜனநாயகம் வந்தாற்கூட இவரால் தனது சொந்தக் கிராமமான பரந்தனுக்கோ வன்னிப் பக்கமோ தலைகாட்ட முடியாது. இவரும் இவரது குழுவினரும் சனங்களுக்குச் செய்த கொடுமைகளுக்காகச் சனங்கள் மாறுகால் மாறுகை வாங்கி விடுவார்கள்.

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு எது எனத் தெரியாத, சர்வதேச அரசியல் போக்குகளின் மப்பு மந்தாரங்களை விளங்காத இவர்கள் தமிழ் சிங்கள இனவாதப் பகையை மூட்டவல்ல தமிழின வெறியர்களாக மட்டுமே மிஞ்சியுள்ளனர். ENDLF மகாநாட்டில் அதன் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொண்டதாக அறிக்கை கூறுகிறது. ENDLF என்ன சர்வதேசக் கட்சியா? இலங்கையின் உள்ளுரிலேயே அனாமதேயமாக இருக்கும் ENDLF இலங்கையில் அது மாபெரும் தமிழ் மக்கள் வெள்ளத்தைத் தனக்குப் பின்னே அணிகுவித்திருப்பதாயும் கொந்தளிக்கும் கடலை ஒத்த உறுப்பினர்களால் நிரம்பி வழிவதாயும் தோரணை காட்டுகிறது.

தமிழ் நாட்டில் ENDLF தலைவர் ஞானசேகரன் இந்திராகாந்தியின் பேரிலுள்ள தனது சிறுபள்ளிக்கூடத்தைக் கூட ஒழுங்காக நடாத்தத் தகுதி போதாதவர் என்றிருக்க இந்தப் பொல்லாக் குணங்கொண்டவர் எப்படி மக்கள் இயக்கம் நடத்த முடியும்?
இந்திய உளவுத்துறை ஞானசேகரன்களை மட்டுமல்ல ஆனந்தசங்கரிகளையும் ஏனைய தமிழ் இயக்கங்களையும் படைத்து இயக்குவதுடன் நிதியும் வழங்குகின்றது. ஆனால் ENDLF பின்வருமாறு மொழிகிறது. “ஈழத்தமிழர்களின் இயக்கங்கள் ஒன்றில் இலங்கை அரசுக்குச் சார்பாக உள்ளன. அன்றேல் புலிகட்குச் சார்பாக உள்ளன. ஆனால் ENDLF மட்டுமே சுதந்திர அமைப்பாக உள்ளது.” இது இவர்களின் வாய்முறைப்பாடு. இதன்படி சுத்த சுதந்திரமான அமைப்பு. இலங்கை அரசையும் சாரவில்லை. புலியையும் சாரவில்லை. மேலும் இதிலிருந்து பெறப்படுவது யாதெனில் இந்திய சார்பு மேற்கத்தைய சார்பு தமிழ் இயக்கங்கள் கிடையாது என்ற பேருண்மையும் ஆகும்.

இந்தியா தனது சொந்தத் தேசிய இனங்களுக்குச் செய்த கொடுமையானது, இலங்கை அரசு, தமிழ் மக்களுக்குச் செய்த கொடுமையிலும் பார்க்க பல நூறுமடங்கு பெரியதாகும். அழிக்கப்பட்ட சமூகப் புரட்சியாளர்களின் தொகை பல பத்தாயிரம் பேர்களாகும். ஏன் ENDLF இந்திய சமூக விடுதலை இயக்கங்களுடனும் ஜனநாயக அமைப்புகளுடனும் தொடர்பு வைத்துக் கொண்டதில்லை? ஏனெனில் இவர்கள் இந்திய உளவுத்துறையின் உற்பத்திகளாகும். பாசிசப் புலிகள் உட்பட அத்தனை தமிழ் இயக்கங்களும் இந்திய உளவுத்துறையின் மடியில் பிறந்து மார்பிற் தவழ்ந்து வளர்ந்தவையே. இவர்கள் மக்களைச் சாராத இராணுவவாத நபர்களாவர். இவர்கள் மக்களை நம்புவதோ அவர்களைச் சார்ந்து நிற்பதோயில்லை. மக்கள் ஒரு அரசியற் சக்தியென்ற வரலாற்றுணர்வு இத்தகைய கூலிப்படைகளுக்கு ஏற்படுவதுமில்லை. அதனாற்தான் சொந்தத் தமிழ் மக்களை நம்பாமல் அக்கம் பக்கமாகவுள்ள சிங்கள மூஸ்லீம் மக்களை நம்பாமல் ஒட்டுமொத்த இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தை நம்பாமல் இந்திய இராணுவத்தை வா! வா!! என்று மறுபடியும் மறுபடியும் வருந்தி அழைக்கிறார்கள். ஒரே தேசத்தின் சகோதர மக்களான தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களின் ஐக்கியத்தைக் கோராதவர்கள், அதற்கான அரசியலுக்குப் போராடதவர்கள் தமிழ் சிங்கள மக்களின் உறவுகளை குற்றமாகக் கருதும் மனோநிலையை வந்தடைகிறார்கள். அன்னிய தேசமான இந்திய இராணுவத்தை அனுப்பக் கேட்கின்றனர். எல்லாளன் துட்டகைமுனு காலத்தை ஞாபகமூட்டி அது தமிழர் சிங்களவர் பகைமையின் அடையாளமென்று ENDLFகூறுகிறது.

துட்டகைமுனு எல்லாளன் கதையை இன்று சிஹல உருமய கட்சிகூடப் பேசுவதில்லை. இலங்கைத் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் யுத்தத்தால் அழிந்துபட்டு சமாதானகாலத்திற்காக ஏங்கி நிற்கும் சமயத்தில் ENDLF எல்லாளன் துட்டகைமுனுவின் கதைபேசுகிறது. மக்களை மீண்டும் ஒரு இரத்தக் குளியலுக்குத் தூண்ட முனைகிறது. இனவாத வரலாறுகள்தான் துட்டகைமுனு எல்லாளன் யுத்தத்தை, தமிழ் சிங்கள முரண்பாடாக இட்டுக் கட்டின. இவர்களுக்குள்ளே நடைபெற்ற யுத்தம் இனத்தன்மை கொண்டதல்ல. எல்லாளன் படையில் தமிழர்களும் சிங்களவர்களும் இருந்தனர். அதேபோல் துட்டகைமுனுவின் படையில் தமிழர்களும் சிங்களவர்களும் இருந்தனர். துட்டகைமுனுவின் படையில் கிழக்கைச் சேர்ந்த தமிழர்களும் சேர்ந்து போரிட்டனர் என்ற வரலாற்று ஆதாரம் இருக்க ENDLF என்ற தமிழ் இனவாத கும்பல் மீண்டும் இனவாதத்துள் புற்றெடுக்க முயல்கின்றது.

உளவுத்துறைச் சதியாளர்கள் எப்பொழுதும் மக்களின் முரண்பாட்டையே தேர்ந்தெடுப்பார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் வாழும் தமிழ் சிங்கள மக்கள் வரலாற்றில் முரண்பட்ட காலத்தைவிட உடன்பட்டு வாழ்ந்த காலமே நீண்டு நெடியதாகும். இருமக்கள் பிரிவும் ஒஸ்ரலோயிட் என்ற இலங்கையின் புராதன ஆதிக் குடிகளின் வழிவந்தவர்களாகவும், அவர்களில் கலந்தவர்களாகவுமே இருந்தனர். அவர்களின் மொழியையும் பண்பாட்டு அம்சங்களையும் தமதாக்கியவர்கள். ஆரியர் திராவிடர் என்ற கருத்தியல்கள் இக்காலத்திற்கு மிகவும் பிற்பட்டவையாகும். எல்லாளன் துட்டகைமுனு காலம் தமிழ் சிங்கள இனவாத உணர்வுகள் தோற்றம் பெற்றிராத இனக்குழுத் தன்மை வாய்ந்த சிறிய அரசியல் வடிவங்கள் நிலவிய காலமாகும். சிங்கள மக்கள் மத்தியில் பாளி மொழியும் தமிழர்கள் மத்தியில் வடமொழியுமே செல்வாக்குப் படைத்திருந்தன. இன்றைய அரசியலுக்குப் பண்டைய வரலாறுகளில், இனவாதிகள் எப்போதும் ஆதாரங்களைத் தேடுகிறார்கள்.
துரும்பளவு தடயங்களைக் கண்டெடுத்துத் தூண் என்று வாதிடுகிறார்கள்.

இத்தனை வருடகாலத் தமிழ் சிங்கள முஸ்லீம் அழிவுகளின் பின்பு இந்தியாவிலும் புகலிட நாடுகளிலும் பாதுகாப்பாய் பதுங்கியுள்ள ENDLF நபர்கள் திடீரெனத் தோன்றி தமிழ் இனவாத நஞ்சைக் கக்குகிறார்கள். இவர்கள் சிஹல உருமயவைவிட ஆபத்தானவர்கள், புலிப் பாசிசமளவுக்கு நாசம் விளைவிக்கக் கூடியவர்கள் என்பதைத் தமிழ் மக்கள் தீவிரமான கவனத்தில் எடுக்க வேண்டும்.

TBCயும் ராமராஜனும்:

TBC புலிகளை விமர்சிக்கும் ஜனநாயகத் தன்மை வாய்ந்த வானொலியாகத் தொடங்கவில்லை. அது தொடங்கியபோது கொல்லும் புலிக்கும் கொல்லப்படும் மக்களுக்குமிடையே தன்னை ஒருபக்கமும் சாராத நடுநிலைவாதி என்று அறிவித்துக்கொண்டது. பணிப்பாளர் ராமராஜன் புலிகளின் வன்னித் தலைமையகத்திற்குச் சென்று விசேட அரசியல் ஆசியும் பெற்றுத் திரும்பினார். ஆரம்பத்தில் புலிகளின் வன்னித் தலைமையுடன் நேரடித் தொடர்புகள் TBC க்கு இருந்தது. வன்னியிலிருந்து நேரடியாகச் செய்திகளைப் பெற்று ஒலிபரப்பினார்கள்.

மாவீரர்தின விழாக்கள் நேரடியாக மற்றைய புலி ஊடகங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு அஞ்சல் செய்யப்பட்டது. தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு ரிபீசியின் பணிப்பாளர் ராமராஜன் வாழ்த்துக் கூறுமளவு மெத்தப் பெரிய நல்ல மனிதராகச் சுத்த ஜனநாயகவாதியாகத் திகழ்ந்தார்.
லண்டனிலுள்ள புலி நபர்களுடன் ராமராஜனுக்குக் கொழுவல் இருந்ததே தவிர அவர்களுடன் ஊடகரீதியான போட்டி நிலவியதே தவிர புலித்தலைமையோடு அவருக்கு முரண்பாடுகள் ஏதுமிருக்கவில்லை. இக்காலத்தில் புலித் தலைமை தனது சொந்த ஊடகங்களுக்குச் சார்பாக செயற்படும்பொழுதே TBC க்கும் புலிக்கும் முரண்பாடு வரத்தொடங்கியது. அச்சமயமும் TBC யினர் வன்னித் திசைநோக்கித் தெண்டனிட்டு நீதி கேட்டதுடன் லண்டன் புலி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கவும் முனைந்தனர். அகிம்சை முறையில் தம்மை வருத்தி புலிப் பாசிஸ்டுகளின் இதயத்திலிருந்து கருணையையும் ஜனநாயகத்தையும் வரவழைக்க முயன்றனர்.

லண்டனில் புலிசார்பு நபரான தயா இடைக்காடர் ராமராஜனின் ஆத்ம நண்பராவார். தயா இடைக்காடரின் தேர்தற் காலத்தில் ராமராஜன் அவருக்காகப் பாடுபட்டார். 2006ம் ஆண்டு யூலை மாதம் TBC வானொலியைத் தாக்கிய சேது, ராஜன் போன்ற புலி நபர்கள் ராமராஜனின் ஆரம்பகாலக் கூட்டாளிகளேயாவர். ராமராஜன் புலி எதிர்ப்புக்குச் சென்றமைக்குக் காரணம் புலிகளின் புறக்கணிப்பு மட்டுமல்ல கருணாவின் பிளவு ஏற்படுத்திய அரசியற் சூழல் மற்றும் ENDLF பின் இந்திய சார்பு அரசியலுமாகும். TBC வானொலி எத்தகைய ஒரு அரசியற் சூழலில் புகலிடத் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் பேசும் வாய்புப் பெற்றது என்ற கவனம் எதுவும் ராமராஜனிடம் இருக்கவில்லை. புலிகட்கு எதிரான ஜனநாயகத் தளம் எத்தகைய அரசியலைக் கொண்டதாக இருக்க வேண்டுமென்ற மதிப்பீடுகட்கும் அவர் பொருத்தமற்றவராக இருந்தார்.

ராமராஜனின் வலதுசாரி அரசியற் தெரிவும் சகிப்பற்ற மூர்க்கமான கடந்தகாலப் புளொட் இயக்கக் குணங்களும் TBC யைப் பூரண ஜனநாயகப் பாதைக்கு வரவிடவில்லை. புலிகட்கு மாற்றான குரல்கள் முழுமையாக ஜனநாயகமயப் படுவதற்கு இவர்கள் தடையாகவே இருந்தார்கள்.
மேற்குலக மற்றும் இந்தியசார்பு நிலைகளும் சோஷலிசம் போலத் தென்படும் அரசியற் சீர்திருத்தவாதக் கருத்துக்களும் TBCயிலிருந்த பலரிடம் உறைந்திருந்தன. புலிகட்கு மாற்றான அற்புதமான அரசியற் தருணத்தின் பெறுமதியை உணராமல் TBC தமிழ்த் தேசியத்தைச் சுற்றி வேலி கட்டிக்கொண்டிருந்தது. ஒருபுறம் இலங்கை முஸ்லீங்களுக்கு ஆதரவு எனச் சொல்லிக்கொண்டே மறுபுறத்தில் உலக முஸ்லீம் அமைப்புகளுக்குப் பயங்கரவாதப் பட்டத்தையும் அது வழங்கி வந்தது. சோஷலிச எதிர்ப்பென்பது பலவகை ஜனநாயகவாதிகளின் சங்கமம் என்னும் பேரில் உள்ளே கனன்றுகொண்டிருந்தது.

TBCயின் புலிகட்கு எதிரான பிரச்சார வெற்றியானது ராமராஜனின் திறமையாலோ புலிச் சிறையில் இருந்து மீண்ட ஜெயதேவனின் தியாகத்தாலோ நிகழ்ந்துவிடவில்லை. 2002 சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து புலி தமிழர்களைத் தொடர்ந்து கொன்றுகொண்டிருந்ததோடு ஒப்பந்த மீறல்களையும் செய்து தொடர்ந்து யுத்தவெறியில் செயற்பட்டது. யுத்தத்தால் அளவுக்கு மீறிக் களைத்துப் போன இலங்கையிலுள்ள தமிழர்களது அவலவாழ்வு புகலிடத்தில் புலி எதிர்ப்பாகப் பிரதிபலித்தது. யுத்தத்தை ஒட்டவெறுத்த புகலிடத் தமிழ் மக்களின் பகீரதப் பிரயத்தனங்களினாலும் நிதி வழங்கல்களாலும் TBC புலி எதிர்ப்பு அரசியல் ஊடகமாகப் பரிணாமம் அடைந்தது. அதனோடு கூடவே புலிகட்கு எதிரான அரசியலுக்கான பிரமாண்டமான களமும் வெறுமையாக இருந்தது. புலிமீது விமர்சனமுடைய அரசியல் இலக்கியப் போக்குகள் முழுமையாகச் சக்தியிழந்து கிடந்தன.

புலியை எதிர்க்காத கோலத்துடன் தொடங்கிய TBC முதலில் நடுநிலை வேடங்கொண்டலைந்தது. இலங்கை அரசின் வானொலிச் சேவையுடன் இணைந்து விஷேட சேவைகளை TBC நடாத்திய காலத்தில் இலங்கை அரசுசார்புக் கருத்துக்களை அது வெளியிட்டது. இன்று அதனிலிருந்து மாறி தீவீர இந்திய ஆதரவு நிலைக்கு நகர்ந்துள்ளது.
TBC ஆரம்பத்திலிருந்தே இலங்கையில் இல்லாத ENDLF அறிக்கைகளைத் தொடர்ச்சியாக வாசித்து வந்தது. இந்திய இராணுவகாலத்தில் மட்டும் நிலவிய ENDLF என்ற அமைப்பு இப்பொழுதும் நிலவுவதான மாயைகளை உருவாக்கியது.

TBC பணிப்பாளர் ராமராஜன் தான் ENDLFபின் சர்வதேச அமைப்பாளரென்று வானொலி நிகழ்ச்சிகளில் கொஞ்சமும் குற்றவுணர்வோ கூச்சமோயின்றி வாயடித்து வந்தார். ENDLF இந்திய உளவுத்துறையினரால் நிர்வகிக்கப் படுகிறதென்பதை தமிழ் மக்கள் அனைவரும் அறிந்திருந்தேயிருந்தனர்.
TBC நோர்வேயின் இலங்கைத் தலையீட்டை எதிர்க்கவில்லை. பதிலாக நோர்வேக்கு இலங்கையில் போதிய அதிகாரம் இல்லையென்றும் இராணுவ மோதல்களைத் தடுத்து நிறுத்தும் இராணுவ வல்லமைபெறாமை அதன் பிரதான குறைபாடென்றும் கருத்துத் தெரிவித்து வந்தது. நோர்வே புலிகளுக்கு ஆயுதம் நிதி தொலைத்தொடர்பு உபகரணங்கள் இராணுவப் பயிற்சி அரசியல் அந்தஸ்த்து இவைகளை வழங்கிய போதும் அதை விமர்சனரீதியிற் கூட ஆராய TBC க்குப் அரசியல் தகைமை இருக்கவில்லை. மாறாக சர்வதேச சமூகத்தின் தயாளகுணம் படைத்த ஜனநாயக நாடாக நோர்வேயை TBC உருவகித்து வந்தது. நோர்வேதான் ஈராக் ஆக்கிரமிப்பை ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் அடுத்ததாக ஆதரித்த நாடாகும்.

TBC யின் அரசியல் ஆய்வாளர்கள் எனப்படுவோர் மிலோசோவிச்சைப் போல பிரபாகரனையும் டென்காக் சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டுவரவேண்டும் என்றார்கள். சதாமைப் போல பிரபாகரன் மீதும் விசாரணைகள் வேண்டுமென்றனர். அவர்கள் மிலோசோவிச், சதாம் உசேன் போன்றவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பண்புகளைக் காணாததுடன் ஏகாதிபத்தியத்தின் டென்காக் சர்வதேச நிதிமன்றத்தையும் அதன் அரசியல் செயற்பாடுகளையும் ஆதரித்தனர். ஏகாதிபத்திய ஊடகங்களை வெறுமனேயே பிரதி எடுக்கும் சுயஆளுமை பெறமுடியாத ஊடகமாக TBC இருந்தது. ஏகாதிபத்தியத்தின் பாசிசக் கூலியான பிரபாகரனை ஏகாதிபத்தியங்கள் தண்டிக்கும் என முட்டாள்தனமாக அவர்கள் நம்பினார்கள். அப்படி அதிசயங்கள் நிகழப் போவதான அரசியல் மதிமயக்கங்களை விவரித்தனர். இலங்கை மக்களின் புரட்சிகர நீதிமன்றம் முன்பு பிரபாகரனைப் பகிரங்கமாக விசாரிக்க வேண்டுமென்று கூற இந்த ஆய்வாளர்கள் ஒருவராலும் முடியவில்லை. அந்தளவுக்கு இவர்கள் மேற்குலக மயப்பட்டிருந்தனர்

ராமராஜன் TBCயின் நிர்வாகப் பணிப்பாளர் என்றும் ENDLF சர்வதேச அமைப்பாளர் என்றும் இரட்டைப் பாத்திரங்களைத் தாங்கினார். இவர் நீண்டகாலம் ENDLF நபராக இருந்திருப்பின் எப்படிப் புலிகளுடன் இடைக்காலத்தில் வாஞ்சைபூண்டு; வன்னிக்குச் சென்றிருந்தார் என்ற கேள்வியும் எழுகின்றது. ENDLF இந்திய உளவுத்துறையின் படைப்பு என்றால் ராமராஜனின் பாத்திரம் எத்தகையது என்ற கேள்வியை எழுப்பத் தமிழ் மக்கள் தவறக் கூடாது. ரீ.பீ.சீயும் ராமராஜனும் புலிகளை எதிர்த்துத் தமிழ் ஜனநாயகப் போக்குகளைப் பிரதிநிதித்துவப் படுத்தியதென்பது ஒருபக்க உண்மை மட்டுமே. இலங்கையிற் புலி இராணுவரீதியிலும் அரசியல்ரீதியிலும் தகர்த்தெறியப்பட்டு வருவதால் TBC யின் பிரச்சாரரீதியான தேவை சுருங்கி வருகிறது. புலி எதிர்ப்புக்கப்பால் முன்பின்னான அரசியல் இல்லாத TBCக்கள் ராமராஜன்கள் இல்லாதொழிவது அரசியற் கட்டாயமாகும். TBC இப்போது தேய்பிறைக் காலத்துள் நுழைந்துள்ளது.

இந்திய இராணுவக் கொடுமைகளை அரசியற் துரோகங்களை மறக்கும்படி ரீபீசீ தமிழ் மக்களைக் கட்டாயப்படுத்தி வந்தது. இந்திய இராணுவப் பயங்கரவாதம் மீதான தமிழ் மக்களின் ஞாபகசக்திமீது இவர்கள் எரிச்சலுற்றனர். முழுத்தமிழ் மக்களுக்கும் தாமே அரசியற் பொறுப்பெடுத்துள்ளதாய் ரீபீசீ நம்பத் தொடங்கியது. ENDLFபைப் போலவே ராமராஜன் போன்றவர்களும் ஒருபோதும் தமிழ் மக்களிடம் புலிக்கு மாற்றான சக்தியென்ற நம்பிக்யைப் பெறமுடியாது. தற்போது; ENDLFபோடு சேர்ந்து ராமராஜன் விட்டிருக்கும் அறிக்கை இவர் எவ்வாறு குறுக்காலே தெறித்துள்ளார் என்பதற்கு அடையாளம். தற்போது ENDLF கும்பல் இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பும்படி கேட்டுள்ளதுடன், இலங்கைக்கு பாகிஸ்தான் அரசு 200 மில்லியன் டொலர் மதிப்புள்ள டாங்கி, விமானம் கனரக ஆயுதங்களை வழங்கியுள்ளது பற்றியும் மனவருத்தப்படுகிறார்கள். ஏன் இந்தியா இரணடு யுத்தக் கப்பல்களை இலங்கைக்கு வழங்கியதுபற்றி, இந்தியக் கடற்படைக் கப்பல்கள் இலங்கை அரசுக்கு ஆதரவாகக் கடற் கங்காணிப்பில் ஈடுபடுவது பற்றி, இந்திய இராணுவச் செய்திகளுடாக புலிகளின் கடல் நடமாட்டச் செய்திகள் இராணுவ நகர்வுகள் பற்றி, இலங்கை அரசுடன் தகவல்கள் பரிமாறுவது பற்றி ENDLF எதுவும் கூறவில்லை? பாகிஸ்தான் இலங்கையிற் தலையிடுவது கண்டிக்கத் தக்கதெனில் இந்தியா தலையிடுவதும் இறைமை மீறல், உள்நாட்டுப் பிரச்சனையில் தலையிடுவதாகாதா? இந்தியா வழங்கும் ஆயுதங்கள் தமிழர்களைச் சுடாதா? இந்தியா என்ன காந்தியநெறி ஒழுகும் தேசமா? சத்திய சோதனையும் ராட்டையுமா அவர்கள் இலங்கைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சர்வதேச சமூகம் என்று ராமராஜன் கட்டியழும் ஏகாதிபத்தியங்கள் இலங்கையிற் தலையிடலாம், நோர்வே இலங்கை முழுவதும் உலாவித் திரியலாம் என்பதெல்லாம் தவறல்ல. ஆனால் முஸ்லீம் நாடான பாகிஸ்தான் இராணுவ உதவி தந்தால் அது அடாத காரியம். இது மேற்குலக முஸ்லீம் விரோத அரசியலைப் பின்பற்றிச் சொல்வதுதான். இந்தியாவைத் தமது தாய்நாடாகத் தமிழர்கள் கருதி வருகிறார்களாம் இடையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மறந்துவிட்டார்கள் என ENDLF அறிக்கை கூறுகின்றது. இந்திய முதலாளித்துவக் கூலிகளும் உதைத்த காலைக் கொஞ்சும் விடுதேங்காய்களும் இப்படிக் கூறக் கூடும். இந்திய முதலாளித்துவத்திடம் தமது அறியாமையாலும் அரசியல் அனுபவமின்மையாலும் அடைக்கலம் என்று போன தமிழர்களை இந்திய இராணுவம் கொன்று குவித்த வரலாற்றைக் காலாகாலமும் மறக்கவிடமல் பசுமரத்தாணிபோல் நமது பரம்பரைகளின் மனதில் பதிய வைப்பதுதான் எதிர்காலத் தமிழர்களின் அரசியலாக அமையும்.

இந்தியா தமிழர்களுக்குத் தாய்நாடென்றால் சிங்கள மக்களுக்கு இந்தியா தாய்நாடு இல்லையா? புத்தரென்ன கண்டித் தலாதா மாளிகைத்தாழ்வாரத்திலா பிறந்தார்? தமிழ் மக்களுக்குள்ள அதே பண்பாட்டுத் தொடர்பும் மொழிசார்ந்த உறவுகளும் சிங்கள மக்களுக்கும் இந்தியாவுடன் உண்டு. இந்தியாவில் பிறந்தாலும் அங்கே செல்வாக்கிழந்துவிட்ட பவுத்த மதத்தையும் பாளிமொழியையும் சிங்கள மக்கள்தான் பாதுகாத்தார்கள். சிங்கள – தமிழ் மொழிகளிடையேயுள்ள பொதுவான பல ஆயிரக் கணக்கான சொற்கள் பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலிருந்து இரணடு மொழிகளினுள்ளும் புகுந்தன. பாளியும் பவுத்தமும் தமிழை ஒப்புவமை இல்லாத மட்டத்திற்கு வளர்த்தது போன்று பாளியும் பவுத்தமும் சிங்களத்தையும் வளர்த்தது.

இந்தியாவுடன் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களையும் தமிழ் மக்கள் மறந்துவிட்டதாய் ENDLF கூறிகிறது. எதை மறப்பது? ஐயாயிரம் தமிழ் மக்களின் புதை குழிகளையா? பத்தாயிரத்திற்கு மேல் கைகால்கள் இழந்து உடல் ஊனமாய் உத்தரித்துக் கொண்டிருக்கும் மனிதப் பிறவிகளையா? பல நூற்றுக்னகணக்கில் பாலியல் வதைக்கு உள்ளாகி இன்றும் மனப்பாதிப்படைந்து சமூக அவமானத்துடனும் வாழ்ந்துவரும் பெண்களையா? இதை நாம் மன்னிக்கலாமென்றால் இலங்கை அரசபடைகளின் பயங்கரவாதத்தைத் தமிழ் மக்கள் மன்னிக்கலாம். புலி பாசிஸ்டுகளின் மனித அழிப்புகளை மன்னிக்கலாம். இன்றும் நிலவும் புலிகளின் வதை முகாங்களை நாம் மறந்து மன்னிக்க என்ன தடை? இலங்கை இந்திய முதலாளித்துவ இராணுவங்களும் புலிப் பாசிஸ்டுகளும் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களுக்கு இழைத்த பயங்கரவாதத்தை நாம் மன்னிக்கக் கூடாதென்று நாம் இலங்கை மக்களுக்குக் கூறுவோம். காரணகாரிய சங்கிலித்தொடர் என்ற இயங்கியல் வகையினத்தீனூடான ஆய்வுமுறையில் பழக்கமுடையவர்களுக்குத் தெரியும் கடந்த முப்பது வருட இலங்கைத் தமிழ் மக்களது இன அழிப்புக்கான மூலகாரணம் இந்திய முதலாளித்துவமாகும்.

இந்திய முதலாளித்துவம் போராடப் புறப்பட்ட இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தது இந்த இயக்கங்களை ஒரு தக்க தருணத்தில் அழித்தொழிப்பதற்காகும். இதைப் பலதடவைகள் மார்க்ஸியவாதிகள் இந்த இளைஞர்களுக்கு எச்சரித்த போதும் அவர்களது அனுபவக் குறைவாலும் அவர்களது குட்டி முதலாளித்துவ வர்க்கக் குணாம்சத்தாலும் அதை அவர்கள் அப்பொழுது நம்பவில்லை. இந்திய நெட்டூரம் பற்றியும் அதன் வஞ்சகச் செயல்பற்றியும் அறிவதற்கு இந்தக் கசப்பான அனுபவம் தேவையாக இருந்தது. பயங்கரவாத இயக்கங்களும் பயங்கரவாத நடவடிக்கைகளும் எப்பொழுதுமே பிற்போக்கையே வலுப்படுத்தியுள்ளன. பாசிசப் புலியின் தோற்றமும் இலங்கை அரசாங்கத்தின் தொடர்ந்த அவசரகாலச் சட்டத்தின் கீழான ஆட்சியும் வீதித்தடை, சட்டவிரோதக் கொலைகள், இரகசியக் கொலைகள் என்பன எமது கண்ணுக்குமுன்னால் தெரியும் புதிய உதாரண ங்களாகும். இலங்கையின் ரெயில்வே, மின்சக்தி, வைத்தியசாலை, தொலைதொடர்பு, போக்குவரத்து, நகரசுத்தித் தொழிலாளர்கள் சில பத்தாயிரம்பேர் தொடர்ந்து சிலகிழமைகள் வேலை நிறுத்தம் செய்வதால் ஏற்படும் தாக்கத்தை தமிழ் மக்கள் அத்தனைபேரும் கனரக ஆயுதம் ஏந்தி வருடக்கணக்காகப் போராடினாலும் ஏற்படுத்த முடியாதென்பதே உண்மையாகும். இந்த ஒரே காரணத்தால் மாத்திரம்தான் புலிகள் வேறு எந்தவித அற்ப காரணங்கூட இல்லாமல் தொழிலாளர் தலைவர்களான அண்ணாமலையையும் விஜயானந்தனையும் கொன்றார்கள். புலி ஒரு தசாப்தமாகக் கொன்ற அரசபடைகளுக்கான புதிய படையினரை மீண்டும் சேர்ப்பதற்கு ஆளும் முதலாளித்துவ அரசாங்கத்திற்குப் பெரிய சிரமம் ஏதும் ஏற்படவில்லை. கொல்லப்பட்ட கதிர்காமர் போன்ற அமைச்சர்களையோ மற்றும் அரசியல்வாதிகளின் இடங்களையோ அது மறுநாளே நிரப்பியிருக்கிறது. ஏதோ ஆயுதம் தான் அரசியல் அதிகாரத்தை தரவல்லது என்ற கோமாளிகளின் கற்றுக்குட்டித்தனத்தால் பெருவாரி வெகுசனங்கள் கலாச்சாரமடைந்து உணர்மையடைந்து தங்களது ஒட்டுமொத்த சக்தியினால் வராலாற்றுரீதியாக நிர்மாணிக்க வேண்டிய சமூகவேலைகளை அற்ப சொற்பு எண்ணிக்கையுள்ள இரட்சகர்களாலோ தியாகிகளாலே சாதித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள்.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக ஆதாரங்களையும் ENDLF வரிசைப்படுத்துகிறது. “பொஸ்னியாவில் சர்வதேச சமூகம் தலையிட்டதுபோல் இலங்கைப் பிரச்சனையிலும் இந்தியா சர்வதேசச் சட்டங்களின் கீழ் தமது பாதுகாப்புக்குக் குந்தகம் என்று தலையிடமுடியும்” என்று ENDLF நீதிமான்கள் கூறுகிறார்கள். ENDLF தமிழ் தேசியவாதிகளின் வியத்தகு மூளைச் செயற்பாடுகளுக்கேற்ப இது புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ஞானசேகரனுக்கோ ராமராஜனுக்கோ யூகோஸ்லாவியாவினதோ பால்கன் பல்லினத் தேசங்களினதோ அடிநுனி தெரியாது.

முதலாவதாக யூகோஸ்லாவியா என்ற பல்லின தேசத்தில் மக்கள் சேர்ந்து நாசிகளுக்கு எதிராகப் போராடி இரணடாம் உலகயுத்தத்தின் முடிவில் சோஷலிசப் புரட்சி மூலம் நிர்மாணித்த அந்த சோஷலிச நாட்டை சர்வதே சமூகமும் நேட்டோ யுத்தப் பயங்கரவாதிகளும் ஐ.நா தீர்மானம் இல்லாமலேயே ஆக்கிரமித்தார்கள். ஐ.நாவின் அங்கத்துவ நாட்டை அத்துமீறி ஆக்கிரமித்ததன் மூலம் ஐ.நாவின் கபடத்தனமும் அம்பலமானது. யூகோஸ்லாவிய சிறுபான்மை இனங்களுக்கு ஆயுதங்களை வழங்கிக் கைக்கூலிகளைப் படைத்து செயற்கையாக இனவாத உள்நாட்டுக் கலவரங்களை ஏகாதிபத்தியங்கள் மூட்டி விட்டன. இதையே ஏகாதிபத்தியங்கள் இலங்கையிலும் பிற மூன்றாமுலக நாடுகளிலும் செய்துவருகின்றன. இப்போதைய உலகமயமாகிய பொருளாதார நிகழ்வில் ஆசிய நாடுகளின் பொருளாதாரத் தொழிற்பாடுகள் வலிமையாக வளர்ந்து வருகின்றன. தற்போது நேரடியான இராணுவ ஆக்கிரமிப்பு இல்லாமலே பொருளாதார தொழில் நுட்ப வலிமையூடாக சிறுநாடுகளை இலகுவாகக் கட்டுப்படுத்த முடியும். ஐரோப்பிய கூட்டமைப்பு மாதிரியில் ஒரு ஆசியக் கூட்டமைப்பு உருவாகிக் கொண்டிருக்கிறது. சர்வதேசமயமாகிவிட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கும் நாகரீக முன்னேற்றத்திற்கும் தேசிய எல்லைகள் மாபெரும் தடைக்கற்களாக மாறிவிட்டன. இந்த யதார்த்திற்குக் குறுக்கே நிற்கும் அத்தனை தடைகளையும் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி வேகம் ஏற்படுத்திய சமூகவிதிகள் ஈவிரக்கமின்றிப் பலாத்காரமாகத் துடைத்தெறிகிறது.

உள்நாட்டு யுத்தங்களும் பிரிவினைவாதங்களும் இல்லாத ஒரு முதலாளித்துவ வழியிலான ஒன்றிணைப்பு முயற்சிகள் நடக்கின்றன. பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவப் புரட்சிகள் மூலம் தேசிய அரசுகளை ஏற்படுத்திய அரசுகள் எல்லாம் தமது தேச எல்லைகளை உலக வரைபடத்திலிருந்து அழித்துவிட்டன. தேசப்பற்றோ தேசிய பொருளாதாரப் பாதுகாப்புவாதமோ யதார்த்திற்கு ஒவ்வாத செயலாகவே கருதப்படுகிறது. இந்த வரலாற்று வளர்ச்சிப் பாய்சலின் மத்தியில் இந்தியா – பாகிஸ்தானின் ஐம்பது வருடகால பழைய பகைமைக்கு இடமில்லை. பாகிஸ்தான் அமெரிக்காவை விரோதிக்கத் துணிந்த காலமிது. அமெரிக்காவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் போராடுபவர்கட்கு பாகிஸ்தான் தளமாக ஆகிவிட்டது. ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவாகப் புலிகள் இலங்கை முஸ்லீங்களைத் தாக்கும் போது பாகிஸ்தான் அதைப் பிரதிபலிக்காமல் இராது. ஆசியப் பொருளாதார இராணுவ அவசியங்கள் புலிகளைக் கட்டுக்குள் கொண்டுவரும். ENDLFக்குப் புதிய உலக நிலமைகள் விளங்காத அளவுக்கு தமிழ்த் தேசியவாதத்தால் உச்சி தெறித்துள்ள நிலையில் இந்தியப் படையை மூன்றாவது முறையாகவும் இலங்கையை ஆக்கிரமிக்க அழைப்பு விடுகிறது. இப்படி ஆக்கிரமிப்புக்கு அழைப்பு விடுபவர்கள் இந்தியக் கைக்கூலிகள் என்று நாம் தமிழ் மக்களுக்கு உரத்துக் கூறவேண்டும். ENDLF தனது சொந்த ஊடகத்தில் இந்த ஆக்கிரமிப்பு அழைப்பை விட்டிருந்தால் தமிழ் மக்களின் முன்னேறிய பகுதியினரின் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்திருப்பார்கள். இன்றுவரை தமக்கென்று ஒரு சொந்த இணயத்தளங்கூட இல்லாத, தமக்கென்று சொந்தப் பத்திரிகை கூட இல்லாத, ஒருகாலமும் தனது பேரில் எந்த அரசியற் போராட்டத்தையும் நடாத்தியிராத ENDLF கூலிக் குண்டர்கள் தமிழ்மக்களின் பெயரில் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளை வருந்தி அழைக்கும் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.

1971ல் இந்தியப் படைகள் முதலில் ஜேவிபியை ஒழிக்கவென்று இலங்கையுள் புகுந்தார்கள். கூர்க்கா படைகளே சர்வதேச விமானப் படைத்தளத்தைத் பாதுகாத்தார்கள். ஜேவிபி உறுப்பினர்கள் பதுங்கியிருந்த மலையை உலங்கு வானுர்தியிலிருந்து பெற்றோலை ஊற்றிக் கொழுத்தி உயிரோடு நெருப்பு வைத்தார்கள். 1987ல் இலட்சம் படையினரோடு அமைதிப் படையாக இலங்கையுள் புகுந்த இந்திய இராணுவம் பிரபாகரனைப் பிடிக்காமலும் புலிகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட யுத்தத்தைச் செய்துகொண்டும் தமிழ் மக்களை வகைதொகையில்லாமற் கொன்று புலிகளைத் தனிப் பெரும் பாசிசமாக வளர விட்டார்கள். இந்திய இராணுவம் இலங்கையிலிருந்த காலத்தில் கிழக்கு மாகாண முஸ்லீம் மக்களை பாகிஸ்தானுக்குப் போகும்படி கூறினார்கள். யாழ் ஆஸ்பத்திரியில் நோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவத்தாதிகள் என்று வித்தியாசம் இல்லாமல் சுட்டுக் கொன்றார்கள். ‘இந்திராகாந்தியை மதிக்கிறோம்’ என்பவரையும் சுடவேண்டாமென்று இந்திய இராணுவத்தைக் கைகூப்பித் தொழுதவர்களையும் சுட்டுக் கொன்றார்கள். யாழ் ஆஸ்பத்திரியில் இந்திய இராணுவத்தாற் சுடப்பட்டு உயிர்போகாமற் கிடந்து தம்முயிர்களைக் காப்பாற்றும்படி கேட்டுச் சத்தமிட்டவர்களையும் முனகிக் கொண்டிருந்தவர்களையும் சுட்டுக் கொன்றார்கள். இந்த மனித அவலங்களை ஆவணப் படுத்திய ராஜினி திரணகமவைப் பாசிசப் புலிகள் சுட்டுக் கொன்றார்கள். புலிகள் அழிபட்டு கொஞ்ச நஞ்ச ஜனநாயகமாவது மீண்டிருந்தால் தமிழ் மக்கள் சாவகச்சேரிச் சந்தையிலும் யாழ் ஆஸ்பத்திரியிலும் இந்திய இராணுவத்தால் சவமாக்கப்பட்டவர்களுக்கு நினைவுச் சின்னமாவது எழுப்பியிருப்பர்ர்கள்.

இந்திய இராணுவக் கொடுமைகள் பற்றி மட்டுமல்ல பாசிசப் புலிக் கொடுமைகளோடு ENDLF உட்பட சகல தமிழ் குட்டி முதலாளித்துவ ஆயுதம் தூக்கிகள் பற்றியும் தமிழ்மக்கள் நன்றாகக் கற்றறிந்து வைத்திருக்கிறார்கள். நாளைய, மக்கள் சோஸலிச நீதிமன்றங்களின் முன் அவர்கள் சாட்சிகளாக மாறுவர். சிங்களக் குடியேற்றம் வடக்குக் கிழக்கைப் பிரித்துவிட்டார்கள் என்றெல்லாம் ENDLF தனது அறிக்கையில் முறையிடுகிறது. இது புலிகளின் அரசியலிலிருந்து திருடப்பட்டதாகும்.

நிலமில்லாத சிங்கள மக்கள் என்ன செய்வது? இந்து சமுத்திரத்திலா பாய்வது? அவர்களும் வாழ வேண்டாமா? விவசாயம் செய்யக் குடியிருக்த் தம் சொந்த நாட்டில் அவர்களக்கு உரிமையில்லையா? தமிழ் மக்களுக்குச் சிங்களப் பகுதியில் குடியேறவுள்ள அதே உரிமை வடக்குக் கிழக்குப் பகுதிகளில் சிங்கள மக்களுக்கும் வேண்டாமா? உலகமயமாகும் நிகழ்வுப் போக்கில் இன்னும் எத்தனை நாளைக்குத் தேசிய இனங்களின் பாரம்பரியப் பிரதேசம் என்று பேசிக் கொண்டிருப்பது. கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் மக்களே பெரும்பான்மை. கிழக்கில் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களின் பல்லினக் கலாசாரத்தைத் தகர்த்துத் தனித்தமிழ் மாகாணமாகக் கிழக்கை ஆக்க வேண்டுமாம். வடக்குக் கிழக்கை இணைப்பதால் இந்த இரண்டு மாகாணங்களும் இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விடுபட்டு விடுமா? வடக்கையும் கிழக்கையும் இணை என்ற தமிழ் தேசியவாதப் பிடிவாதம் கிழக்குமாகாணத்தில் வாழும் பல இனத்தன்மைகொண்ட மக்களின் உணர்வுகளை மறுக்கிறது. ENDLF சிங்கள மக்களை அநாகரிகமான மக்கள் கூட்டமாகக் கருதுகிறதா? யாழ் குடாநாட்டுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை தம் தெருவில் குடியிருப்புகளில் குடியேற விடாமல் தடுத்துநின்ற யாழ் வேளாளத் தீண்டாமை மரபு இங்கு சிங்கள, முஸ்லீம் மக்களோடு சேர்ந்து வாழ்வதைத் தடுக்கிறதா? இந்திய இராணுவத்தின் காலத்தில் இலங்கை இராணுவத்துடனும் கூடியிருந்த ENDLFக்குத் திடீரென என்ன நடந்தது? இப்போது திடீரென என்ன இலங்கை அரசுக்கு எதிரான போர்க் கோலம்? ENDLFபின் சர்வதேசப் பிரதிநிதிகள் தாம் வாழும் புகலிட நாடுகளில் பல்தேசிய இன மக்களுடன் வாழ்வதற்குப் பாக்கியம் பெற்றவர்கள். ஆனால் இலங்கையில் மாத்திரம் தமிழர்களையும் சிங்களவர்களையும் பிரித்துவை! நாட்டைக் குறுக்கறுத்து வெட்டு! என அறிக்கை தருகிறார்கள். இவர்களின் சிரசிலுள்ள மூளைக் கலங்களில் பச்சைத் தமிழ் தேசியவாதமும் இந்தியக் கூலிக் குணாம்சமும் ஒன்றுசேர உறைந்துள்ளன.

பொருளாதார வாழ்வின் மேன்மை வேண்டி இனம், நாடு, மதம் துறந்து ஐரோப்பிய நாடுகளுக்குக் குடி பெயர்ந்தவர்கள் தமிழர் தேசியம் பாரம்பரிய நிலம் என்று ஆர்ப்பரிப்பது அதிசயம்தான். சகோதர இனங்களிடையே இனவாதப் பிணக்குகளைத் தீர்ப்பதற்குப் பதில் இடைவிடாது பகையை மூட்டும் இந்த அரசியற் கோள்மூட்டிகள் ஆபத்தானவர்கள். இவர்களைப் பாசிசப் புலிகளோடு சேர்த்துத் தமிழ் மக்கள் தலைமுழுக வேண்டும். சிங்களவர்கள் கொல்கிறார்கள், நிலம் பிடிக்கிறார்கள் என்பவர்கள் தமிழர்களைத் தமிழர்களே கொன்று, வீடுகாணி நிலம் பறித்துக் குடியெழுப்பிய கதை அறியாரோ! தமிழ் ஆயுதந் தூக்கிகளோடு வாழமுடியாதென்று அஞ்சித் தென்னிலங்கைக்கும் கொழும்புக்கும் சிங்களமக்களோடு வாழப் போன லட்சக் கணக்கான தமிழ் மக்களையிட்டு ENDLF என்ன சொல்லும்? தமிழர்களின் ஆயுதங்கள் தமிழர்களைச் சுட்டதில்லையா? கடந்தகால இனக் கலவரங்களில் சிங்கள இனவெறியர்களால் கொல்லப்பட்ட தமிழர்களை விட அதிகளவு அப்பாவிச் சிங்கள மக்களைப் பாசிசப் புலிகள் கொன்றுள்ளனர். 1989 ஜே.விபி எழுச்சியின் போது பாசிசப் புலிகள் பிரேமதாஸாவின் கூலிப் படையாக மாறி இலங்கை இராணுவத்துடன் சேர்ர்ந்து ஜேவிபி இளைஞர்களைக் கொல்லவில்லையா? இலங்கை அரச அடையாள அட்டைகளுடன் இலங்கை இராணுவ முகாங்களில் தங்கி ஏனைய தமிழ் இயக்கங்களைக் கொழும்பில் கொன்றொழிக்கவில்லையா?

1971ல் ஜேவிபி கலகஞ் செய்த காலத்தில் இலங்கை இராணுவம் தமிழ் இளைஞர்கள் என்றால் உடனே போக விட்டுவிடுவார்கள். சிங்கள இளைஞர்கள் அடி உதையோடு உடன் கைது செய்யப் படுவார்கள். சிங்கள இராணுவமே சிங்கள இளைஞர்களைப் பிடித்து உயிரோடு கழுத்தில் டயர்களைப் போட்டுக் காலை முதல் மாலைவரை இழுத்துத் திரிந்து தெருவில் நாய்களைப்போல சுட்டுக் கொன்றது. 1989ல் தனது சொந்த இனத்தைச் சேர்ந்த இலட்சம் இளைஞர்களை இலங்கை இராணுவம் கொன்ற கதையில்லையா? 1971ல் திருகோணமலை மாவட்டத்தில் ஜேவிபி இளைஞர்களைக் கைதுசெய்த பொலீஸ் இரவிரவாக அடித்தே அவர்களைக் கொலை செய்தார்கள். பலர் அரை உயிர் கால் உயிராய் உயிரோடு புதைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. கதிர்காமம் ‘அழகுராணி’ மனம்பெரியை இராணுவம் பாலியல் வதைசெய்து நிர்வாணமாகத் தெருவில் நடாத்திச் சென்று வெட்டிய புதைகுழியில் படுக்கச் சொல்லிச் சுட்டுக் கொல்லவில்லையா? மனம்பெரி சாகும் தறுவாயில் புதைகுழியில் இருந்தபடி தன்காதில் இருந்த தோடுகளைக் கழற்றித் தன் தாயிடம் கொடுக்கும்படி கூறிச் செத்தாளே. அதையறிந்து தமிழ் சிங்கள முஸ்லீம் என்ற பேதம் இல்லாமல் எல்லா மனிதர்களும் கண்ணீர் விட்டு அழுதார்கள். இது எதைக்காட்டுகிறது? சிங்கள அரசு தமிழனைமட்டும் கொல்லும் என்பதையா? ஓடுக்கும் முதலாளித்துவ அரசுகளுக்கு மதமும் இல்லை, இனமும் இல்லை. அது தனது அரச கட்டமைப்பை எதிர்த்துக் கலகஞ் செய்பவர்களைக் கொல்லும். இதைத்தான் இந்திய அரசும் பலமுறை செய்துள்ளது.

புலி என்ன சிங்கள இராணுவத்தை மட்டுமா கொல்கிறது? சொந்தத் தமிழ் மக்களை வடக்குக் கிழக்கில் தினசரி கொல்கிறது. கைவேறு கால்வேறாக்குகிறது, கழுத்தறுக்கிறது. புலி தலைவெட்டி இயக்கமாக பரிணாமம் அடைந்துள்ளது. தமிழர்கள் சாகிறார்கள் அழிகிறார்கள் என்பவர்கள் இது புலிகள் மூலம் நிகழ்த்தப்படுகிறது என்பதைத் தமது அரசியலாகச் சொல்வதில்லை. “பரந்தன் இரசயனத் தொழிற்சாலை காங்கேசன்துறை சீமந்துத் தொழிற்சாலை வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை ஆகிய மூன்று தொழிற்சாலைகளைத் தவிர்த்து சிங்களப் பகுதிகளிலேயே தொழிற்சாலைகளை நிறுவினார்கள், தமிழ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தொழிற்சாலைகளிலிருந்தும் தமிழ்ப் பகுதிகளின் வளங்களைச் சிங்களவர் அள்ளிச் சென்றனர்” என்று ENDLFபின் பொருளாதர அறிவு கூறுகிறது. இவர்கள் கந்தளாய் சீனித் தொழிற்சாலையை விட்டுவிட்டபோதும் இந்தத் தொழிற்சாலைகள் அனைத்தையும் இயந்திரங்களையும் பாகம் பாகமாக புலிகளே கழற்றிச் சூறையாடி இயங்காமற் செய்தார்கள் என்பதை ENDLF குறிக்கவில்லை.

சிங்களப் பகுதிகளில் தொழிற்சாலைகள் ஊருக்குப் பத்தாகவா இருக்கின்றன? தென்னிலங்கை நகரங்களில் எத்தனை தொழிற்சாலைகள் இருக்கின்றன? இலங்கையின் பிரச்சனையே இலங்கை முதலாளிகளால் சர்வதேசச் சந்தைகளில் போட்டிபோட்டு வர்த்தகம் செய்யக்கூடிய நவீன தொழிற்சாலைகளை நிறுவ முடியாமையேயாகும். இலங்கையில் நிலப்பிரபுத்துவ பழைய குப்பை கூழங்களை அகற்ற வேண்டிய ஜனநாயகப் புரட்சி நடைபெறவேண்டும். முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியைச் செய்ய லாயக்கில்லாத முதலாளிவர்க்கம், தொழிலாளி வர்க்கம் அப்புரட்சியைச் செய்ய முனையும் பொழுதெல்லாம் இனவாத நஞ்சை ஊட்டித் தடுத்துவிடுகிறது. ஏனெனில் ஜனநாயகப் புரட்சிக்குத் தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கினால் அது ஜனநாயகப் புரட்சியைச் செய்து முதலாளி வர்க்கத்திடம் தொழிலாளிகளைச் சுரண்டி ஒடுக்கி ஆளும்படி விட்டுவிடாது. தொழிலாளி வர்க்கம் புரட்சியைச் செய்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் அது அரசுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளைத்தான் அமைக்கும். அங்கே அரச முதலாளித்துவம் அல்லது சோஷலிசம்தான் வளரும். அது தனிச் சொத்துடமைக்குச் சவாலாகி விடும். இலங்கையிலே இதுதான் பிரச்சனை. தொழிலாள வர்க்கம் ஆட்சியைக்கைப்பற்றுகிற அளவுக்கு வலுப் பொறமலும், முதலாளி வர்க்கமும் தொழிலாளி வர்க்கத்தைப் பரிபூரணமாகத் தோற்கடிக்காமலும் மீண்டும் கழிந்துவிடுகிறது. எந்தத் தீய செயல்களும் சில நல்ல செயல்களுக்கு வழி திறந்து விடுகின்றன. முப்பது வருட உள்நாட்டு யுத்தம் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய போதும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கியபடவேண்டிய அவசியத்தை நன்றாகவே விளக்கிச் சென்றதோடு அதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தியும் விட்டுள்ளது.

தமிழ் மக்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள். தங்களது பாரம்பரிய இனவாதக் கட்சிகளையும் சேர்த்தே இழந்துவிட்டார்கள். அதன் கடைசி வெளிப்பாடுதான் ENDLF இன்று இனவாதம் பேசுவதற்கான காரணம். மறுபக்கத்தில் சிங்களமக்களின் இழப்புகளும் உதாசீனம் செய்ய முடியாதவை. இன்று ஐந்து இலட்சம் சிங்களத் தொழிலாளர்கள் மத்திய கிழக்கில் அடிமை ஊழியம் செய்கிறார்கள். இவர்களில் 80 வீதமானவர்கள் பெண்கள். இவர்களில் 35000 பேர் சவூதி அரேபியாவில் மட்டும் வேலை செய்கிறார்கள். அண்மையில் இவர்களில் ஐந்து பேருக்குச் பகிரங்க இடத்தில் வைத்து சிரச்சேதங்கள் செய்யப்படன.

புலி விழும் தறுவாயில் கிழக்கிலே ‘தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்’ அமைப்புப் போல், வன்னியில் புலி விழும்பொழுது வடக்கில் ஓர் ஆளுமையுள்ள அரசியல் அமைப்பைத் தோற்றுவிக்க முடியவில்லை. ஏனெனில் இந்த ஆயுதம் ஏந்திய இயக்கங்களையும் மற்றும் கட்சிகளையும் தமிழ் மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத மட்டத்திற்குத் துரோகத்தையும் காட்டிக் கொடுப்பையும் செய்துவிட்டார்கள். கிழக்கில் அப்படி நிலமை இருக்கவில்லை. ENDLFன் ஆக்கிரப்பு அறைகூவலுக்கு முன்னதாகவே இலங்கை அரசாங்கம் ஆனந்தசங்கரி தலைமையில் EPRLF, PLOTE, EPDP, TMVP, மற்றும் ENDLFபை இணைத்து ஒரு அமைப்பாக்கி அவர்களோடு ஒரு சாட்டுக்கு சம்பிரதாயப் பேச்சுவார்த்தை நடாத்தி வடமாகாணத்திற்கும் கிழக்குமாகாணத்திற்கும் இரண்டு ‘இந்திய பாணி’ மகாண சுயாட்சி முறையைக் கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது. இதுதான் ENDLF கூறும் அரைகுறைத் தீர்வைத் திணிப்பதென்பது. பிரச்சனை என்னவென்றால் வன்னியிலே புலி இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்பு தமிழ் மக்கள் ஒருபோதும் ஒரு தமிழ்க் கட்சியை உருவாக்க விடப் போவதில்லை. முழு இலங்கை தழுவிய தேசியக் கட்சியே உருவாகும். தமிழ் மக்கள் இனவாத யூஎன்பியையோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியையோ மன்னிக்கப் போவதில்லை. இனவாதத்தை நிராகரித்த ஒரு கட்சி தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுவது தவிர்க்கமுடியாதது. இதன் பின்னணியிற்தான் ENDLF இந்திய இராணுவத்தை இலங்கைக்கு வரும்படி அழைக்கிறது.

சிங்கள மக்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்து சுவிற்சலாந்து நாட்டை ஒத்த வாழ்க்கைத்தரமா நிலவுகிறது? இலங்கையில் ஒரு முதலாளித்துவ ஜனநாயக அபிவிருத்தியாவது சரியாக நடைபெற்று இருக்குமானால் தொழிற்சாலைகள் பரவலாகப் பிறந்திருக்கும், உற்பத்தி பெருகி மக்களுக்கு வேலையும் வாங்கும் சக்தியும் உயர்ந்திருக்கும். இனப்பிரச்சனைகள் எழுந்திராது. ஆனால் இலங்கையில் தொழிற்சாலைகளை உருவாக்க ஏகாதிபத்தியங்கள் விடவில்லை. அவர்கள் தமது உலக வங்கியாலும் சர்வதேச நாணய நிதியத்தாலும் இலங்கையின் கழுத்தைத் திருகினார்கள். இலங்கையைப் பொருளாதாரரீதியாக உருப்படவிடவில்லை. இந்தக் குறைவளர்ச்சிப் பொருளாதார நிலமைக்குள் எழுந்த மக்கள் போராட்டத்தைத் திசை திருப்பவதற்காகத்தான் இனவாதமும் எழுந்தது.

1970களில் இடதுசாரி அரசுகால முயற்சிகளும் சிறுகைதொழில் சார்ந்த வளர்ச்சியாகவே இருந்தது. இலங்கையின் சீமெந்துத் தொழிற்சாலையை 1948ல் பிரிட்டன் அமைத்தது இரண்டாம் உலமகாயுத்தத்தில் அழிந்த பிரிட்டனையும் அதன் கொலனிகளையும் திருப்பிப் புனரமைக்க சீமெந்து தேவைப்பட்டதாலாகும். இல்லாவிட்டால் ஒருபோதும் சீமெந்துத் தொழிற்சாலை இலங்கைக்கு வந்திராது. அது பண்டாரநாயக்கா காலத்து அரசுடமையாக்கலின் போதுதான் இங்கைக்குச் சொந்தமாகியது. வாழைச்சேனையிற் பேருக்குப் நிறுவப்பட்ட காகிதத் தொழிற்சாலை பண்டாரநாயக்கா ஆட்சி வந்த பின்புதான் சோவியத் யூனியனின் உதவியுடன் பெரும் தொழிற்சாலையாக இயங்கத் தொடங்கியது. இந்தத் தொழிற்சாலைகளையெல்லாம் கலைத்துவிட்டு ENDLF தமிழ் மக்களை புலிபோல் ‘கிரடிட் காட்’ மோசடி செய்தா வாழச் சொல்கிறது? வங்கிக் கொள்ளை அடித்து ஒட்டுண்ணியாகவா வாழச் சொல்கிறது? உலகத்தில் உள்ள அரசியற் பிரச்சனைகள் எல்லாம் உழைத்து வாழ்பவர்களுக்கும் ஊரை ஏய்த்து வாழ்பவர்களுக்குமுள்ள போராட்டமாகும். தொழிற்சாலைகள் கண்ட நின்ற இடத்தில் அமைக்கப் படுவதில்லை. மூலப் பொருள் சந்தை வசதி போக்குவரத்து வசதி நீர்வளங்கள் உபரித்தொழிலாளர்கள், தொழிலாளர்களது இயங்திரங்களை இயக்கவல்ல கலாச்சார வளர்ச்சி போன்ற வசதிகள் உள்ள இடத்தில்தான் அமைக்கப்படும். அப்படி அமைத்தாலும் அது ஈட்டும் நிகரலாபம் அதன் உற்பத்தித்திறன் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட்டே அது நீடிக்கும். டயர் தொழிற்சாலையை ரப்பர் உற்பத்தி இல்லாத யாழ்பாணத்தில்தில் நிறுவ முடியாது. பால்மா தொழிற்சாலையைக் கொழும்பில் நிறுவ முடியாது .புல்வளமும் மாடுவளர்ப்பும் உள்ள கண்டிப் பகுதியிற்தான் அது நிறுவப்பட்டது. ஒட்டிசுட்டானிலுள்ள ஓட்டுத் தொழிற்சாலையை களிமண் இல்லாத யாழ்பாணத்தில் நிறுவமுடியாது. இரும்புத்தாது இல்லாத வவுனியாவில் எம்பிலிப்பிட்டியாவிலுள்ள இரும்புத்தொழிற் சாலையைப் நிறுவ முடியாது. பனம்பொருள் உற்பத்தி நிலையத்தை கண்டியில் நிறுவ முடியுமா? அதை யாழ்ப்பாணத்தில் தான் நிறுவலாம். காங்கேசன்துறைத் சீமெந்துத் தொழிற்சாலைக்கான மூலப் பொருட்களின் ஒருபகுதி புத்தளம் மற்றும் காலிபோன்ற இடங்களில் இருந்து வந்ததினால் சீமெந்தின் உற்பத்திச் செலவு அதிகமாக இருந்தது.

ENDLF பேய்தத்தனமாக தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு தமிழ் மக்களின் வளங்களைச் சிங்களவன் அள்ளிச் செல்கிறான் என்ற பாங்கில் பேசுகிறது. சிங்களவனுக்கு என்ன இனாமாகவா வழங்கப்பட்டது? நவீன தொழிற்துறையில் சந்தையை வெல்வது எவ்வளவு கடினம் என்ற அற்ப அறிவுகூட இல்லாத ஞானசேகரன், ராமராஜன் போன்றவர்கள் அரசியல் பேசத் தொடங்கி விட்டார்கள். சந்தை நிலமைகளே அரசியலை நிர்ணயிப்பனவே ஒழிய தமிழ்தேசிய வாதிகளின் பகற் கனவுகளல்ல. பிரபாகரன் கூட்டிய ஒரேயொரு ஊடகவியலாளர் மகாநாட்டில் புலியின் கொள்கை சுதந்திர வர்த்தகம் என்று பிரபாகரனது வாயாலே மிரட்டிச் சொல்ல வைக்கப்பட்டது. பிரபாகரனுக்குச் சுதந்திர வர்த்தகத்தின் அடி நுனி தெரியுமோ தெரியாது.

தமிழ் மக்களின் வடக்குக் கிழக்குப் பகுதிகளை விட தென்னிலங்கைச் சிங்களப் பகுதிகளின் பிரதேசங்கள் இயற்கை வளமும் விவசாய உற்பத்தியும் பலபத்துமடங்கு அதிகமானவை. வாசனைத் திரவியங்கள் உட்பட மாணிக்கக் கல், இரும்புத்தாது, எப்பாவெலை பொஸ்பேற், தெங்குப் பொருட்கள், தேயிலை, ரப்பர், கொக்கோ என்னும் பொருந்தொகை ஏற்றுமதிப் பொருட்கள் அங்கே விளைகின்றன. யாழ் குடாநாடு ஆறுகளோ குளங்களோ இல்லாத வரண்ட வடலி, நாயுண்ணி, காண்டை, நாகாதாளி, தாழை, கள்ளி, காரை தப்பிப்பிழைக்கும் காடுகளாகும். கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு குடாநாடு பாலைவனம் ஆகும் அபாயம்பற்றி பொறியிலாளர்களும் நிலவியல் அறிஞர்களும் எச்சரிக்கை விட்டது நிதான புத்தியுள்ளவர்களுக்கு விளங்கும். அதன் பின் குடாநாட்டுள் பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. மழைக்கால ஆறுகளைக் கடலுக்குச் செல்லாது நிலத்தில் தேக்குதல், தொண்டமனாறு ஆனாயிறவுப் பகுதிகளில் உப்புநீரை வெளியேற்றி மழைநீர் சேகரிக்ப்படும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. தொண்டமனாற்றில் பிரமாண்டமான காற்றாட்டிப் பொறிமுறை உருவாக்கப்பட்டு உப்புநீர் வெளியேற்றப்பட்டு நன்நீர் சேகரிக்கப்பட்டது. அதை அடுத்து அச்சுவேலி, கல்லுவம் போன்ற உவர் நிலப் பகுதிகளில் கறிமிளகாய், பீற்றூட், உருளைக் கிழங்கு போன்றன பயிராகத் தொடங்கின.

ஆயுத அநாகரிகர்கள் காலத்தில் ஆற்றின் அணைக்கட்டு உடைக்கப்பட்டு மீண்டும் ஆற்றில் உவர்நீர் வரப்பண்ணப்பட்டது. தொண்டமனாறு, வல்வெட்டித்துறை, அச்சுவேலி மக்கள் ஆயுதக்குண்டர்களிடம் இதை ஆட்சேபித்த பொழுது ஆற்றிலே இறால் வளர்ச்சி குன்றி விட்டது. அதனால் அது உடைக்கப் பட்டதாகக் குண்டர்கள் கூறினர்.வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தென்னிலங்கையோடு இணைந்திருந்தால் மட்டுமே தமிழ் மக்கள் தமக்கு வேண்டிய வாழ்வாதாரங்களை பெறுவது மலிவாகவும் இலகுவாகும் இருக்கும். தென்னிலங்கையின் வளங்கள் இல்லாமல் தனித்த வடக்குக் கிழக்கை ஒருபோதும் அபிவிருத்தி செய்துவிட முடியாது என்பது பொருளாதார சமூகவியல் புலப்பாடு இல்லாத ENDLF மக்குகளுக்கு விளங்கியிராது. தமிழ் நாட்டுக் காவிரியாறுப் பிரச்சனை விளங்கியவர்கள் மாத்திரம்தான் அப்படியொரு மாவலியாற்றுப் பிரச்சனை உருவாகாமற் தடுப்பர்.

இலங்கை அரசு இராணுவப் பலத்தால் புலிகளைத் தோற்கடித்து இலங்கைத் தமிழ் மக்ள் மீது அரைகுறை அரசியற் தீர்வைத் திணித்துவிடும், தமிழர்களைப் போர்மூலம் அழித்துவிடும், அவர்களின் தனித்துவத்தைப் பறித்துவிடும் என்று ENDLF நபர்கள் குறையிரக்கிறார்கள். புலிகள் இலங்கையிற் தோற்கடிக்கப்படுவதென்பது ஆசிய பொருளாதார வளர்ச்சியின் தவிர்க்க முடியாத கட்டளையாகும். இலங்கையின் வீறார்ந்த சோஸலிச இயக்கமானது இந்த இனவாத் யுத்தத்தில் அமிலப்பாரிசோதனை செய்யப்பட்ட அனுபவச் செழுமையோடு புலிஅழிவின் சாம்பலில் இருந்து உதிக்கும். இலங்கைத் தமிழர்களின் தீர்வு சிங்கள முஸ்லீம் மக்களை தவிர்த்து ஒருபோதும் சாத்தியப் படாது என்பது கடந்த முப்பது வருட அனுபவத்தால் நிறுவிக் காட்டப் பட்டுள்ளது. சோஸலிச சமுதாயம் வரும்வரை தமிழர் பிரச்சனையும் இஸ்லாமிய மக்கள் மீதான ஒடுக்கு முறையும் இலங்கை தழுவிய முழு மக்களின் வாழ்வதற்கான போராட்டங்களும் தீராது இழுபறிப்பட்டுக் கொண்டேயிருக்கும். சோஸலிசம் மட்டுமே இலங்கை மக்களின் இனவாதக் காயங்களை ஆற்றிச் சமூகப் பொருளாதார வாழ்வின் தேவைகளை நிறைவேற்றி இனக்கலப்பென்ற ஒரே ஒருவழிப்பாதையால் ஒட்டுமொத்த இலங்கை நாகரீகத்தை முன்னேற்றும். சோஸலிசம் மாத்திரம்தான் முதலாளித்துவ ஆயுதப் படைகளை நிராயுதபாணியாக்கும். அப்பொழுதுதான் பாதுகாப்பு வலையங்களிலிருந்து இராணுவம் அகற்றப்படும்.

இந்திய இராணவத்தை அழைக்கும் உரிமையைத் தமிழ் மக்களின் பெயரால் ENDLFக்கு யார் கொடுத்தார்கள்? ENDLFன் தமிழ்மக்கள் மீதான தீடீர் கரிசனை, ஒருநாளும் இல்லாத புதினமாக அரசியல் பேசப் புறப்படுவது இந்த யுகத்தின் பேரதிசயமாகும். ENDLF மட்டுமல்ல ஆனந்தசங்கரி உட்பட இந்தியாவால் விலைக்கு வாங்கப்பட்ட சக்திகள் புலி அழியும்போது அந்த இடத்தை நிரப்பத் தயாரிக்கப்படுகிறார்கள். இவர்களின் முடிசூடும் கனவுகள் கட்டாயம் கலையும். புலிப் பாசிசத்தின் வீழ்ச்சியின் பின்பு தமிழ் மக்கள் சிங்கள முஸ்லிம் மக்களோடு ஒன்று சேர்ந்து இலங்கை தழுவிய அரசியலுக்குச் செல்வார்கள். எவரெவர் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களின் ஐக்கியத்திற்காக கடந்த முப்பது வருட இடர்காலத்தில் எந்தவித ஊசலாட்டமும் இல்லாமல் போராடினார்களோ அவர்களையே வரலாறு தேடும்.

தமிழ் மக்கள் ஓருபோதும் காலாவாதியாகிப்போன தமிழ் தேசியவாதத்தின் பக்கம் தலைவைத்தும் படுக்க மாட்டார்கள். அந்தளவுக்குப் போதும்; போதும் என்ற மட்டத்திற்கு வரலாறு பாடம் படிப்பித்திருக்கிறது. கடந்த முப்பது வருடமாக தமிழ் குட்டிமுதலாளித்துவ இயக்கங்களும் புலிப்பாசிசமும் செய்த தமிழர் இன அழிப்பை மறந்துவிட்டு 2000 வருடத்திற்கு முன்பு நடந்த எல்லாளன், துட்டகைமுனு யுத்தத்தை மறக்க வேண்டாம் என்கின்றனர். 1956ல் வந்த தனிச் சிங்களச் சட்டம், 1958ல் வந்த கலவரம், 1970ல் வந்த மாணவர் கலகம்; 1977, 1983 இனக் கலவரங்களைத் தமிழர்கள் நினைவு கூர வேண்டும். ஆனால் 1986ல் நடந்த TELO போராளிகள் அழிப்புத் தொடக்கம் அதன் பின் புலிப் பாசிசத்தாலும் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளாலும் அதன் முண்டுகளாலும் செய்யப்பட்ட தமிழின அழிப்பை மன்னித்துவிடவா வேண்டும்?

கடந்த 30 வருட இலங்கை இராணுவத்தின் கொலை, இந்திய ஆக்கிரமிப்புப் படைகளினதும் அவர்களது இலங்கைத்தமிழ் ஏஜண்டுகளதும் கொலை, புலிப்பாசிசத்தின் தமிழின அழிப்பு என்பவைகளே இலங்கை அரசியலில் ஒருகாலமும் மறக்கமுடியாது வரலாற்று நிகழ்வுகளாகும். ‘யூலியன் வாலாபாக்’ படுகொலையை இந்தியர்கள் ஏன் மறவாமற் காப்பாற்றுகிறர்களோ அதேபோல் நாம் கடந்த முப்பது வருடமாகத் தமிழர்களைக் கொன்ற ஒவ்வொரு பிற்போக்குவாதிகளையும் மறக்கவிடாமல் தமிழர் மனங்களில் இருத்துவதற்குப் போராட வேண்டும். இவ்வளவு அழிவுகளைச் சந்தித்தும் இவ்வளவு தியாகங்களைச் செய்தும் தமிழ் மக்களது உரிமையில் எள்ளவையும் எடுத்துவிட முடியவில்லை காரணம் என்ன? சோஷலிசம் வராத காரணத்தால் மத்த்திரம்தான் விடுதலை வரவில்லை.

80000 தமிழர்களையும் ஏறத்தாள அதேயளவு சிங்களவர்களையும் பலிகொடுத்தே இலங்கை முதலாளித்துவம் தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. இந்தக் கொலைகள் இந்திய – இலங்கை முதலாளித்துவ ஆட்சியாளர்கள் இணைந்தே செய்த கொலைகளாகும். 1983ல் வலதுசாரிப் பிற்போக்குவாத யூஎன்பி அரசாங்கத்திற்கு எதிராக வெடித்த தமிழர் கிளர்ச்சியானது கட்டாயம் இடதுசாரிப்பாதையில் மாத்திரம் சென்றிருக்கும். இதை இந்திய முதலாளித்துவமும், அதன் உளவுப் படையும் நன்றே அறியும். இந்தியா இந்த இயக்கங்களை அழிக்கும் என்ற எச்சரிக்கை ரெலோ இயக்கத்திற்கும் ஏன் புலி இயக்கத்திற்கும் அப்பொழுது பல தடவைகள் சொல்லி எச்சரிக்கப்பட்டது. அவர்கள் தாங்கள் ஏமாறாது தாம் இந்தியாவைப் உபயோகிக்கலாம் என்றே எண்ணினார்கள். கவனமாகவும் இருந்தார்கள். முக்திபாகினிக்கு என்ன நடந்ததென்று அவர்களுக்கு நன்றே தெரிந்தே இருந்தது. ஏகாதிபத்திய எஜமானர்கள் ஒருபொழுதும் விடுதலையை வென்று தரமாட்டர்கள் என்ற எச்சரிக்கை எண்ணற்ற முறை எடுத்துச் சொல்லப்பட்டது. ஏனெனில் தேசிய இன ஒடுக்குமுறை முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் உருவாகும் பிரச்சனையாகும். அதை அவர்கள் தீர்க்கவும் விரும்புவதில்லை. அதனூடு அவர்கள் பல்தேசிய இனத்தொழிலாளர்களிடையே ஐக்கியம் ஏற்படாமல் தடுத்து விடுகிறார்கள். என்னமாதிரி அங்கோலாவில் உள்நாட்டு யுத்தத்தை மூட்டி அந்தமக்கள் தங்களுக்குள் கொலையுண்டு பிச்சை எடுக்கும் நிலை வந்தவுடன் அமெரிக்கக் கப்பல்கள் இப்பொழுது அவர்களது எண்ணை வளங்களைச் சூறையாடுகிறதோ அதேமாதிரி இலங்கையிலும் மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணை வளங்கள் இதே பாணியில் சுரண்டப்படும் சதியின் ஒரு பாகமே இந்த ENDLF இந்தியப் படையை வரைவழைக்கும் அழைப்பிதழாகும்.

TBCயிலே ராமராஜன் தான் எல்லாக் கொலைகளையும் எதிர்ப்பதாக அடிக்கடி கூறியிருக்கிறார். அதிலே இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் கொலைகளும் அடங்குமோ தெரியாது. இலங்கைக்கு வரும் இந்திய இராணுவம் செஞ்சிலுவைச் சங்கம் போல மருந்தும் கூடாரமும் அரிசியும் பருப்புமா கொடுக்கப்போகிறது? சுனாமி வந்தவுடன் இந்தியக் கடற்படைக் கப்பல் இந்தியாவுக்குச் சொந்தமான அந்தமான் நிக்கோபார் தீவுக்கு நிவாரண உதவி செய்யப் போக முன்னரே இலங்கைக்கு நிவாரணம் வழங்க என்ற பேரில் வந்தது ஏதும் அரசியல் நோக்கம் இல்லாமல் இருந்திருக்க முடியாது. 1979ல் இயற்கை அழிவை அடுத்தே ஈரானிய மக்கள் சர்வாதிகாரி ஷாவைத் தூக்கியெறிந்தார்கள். அந்த எச்சரிக்கையாலேதான் இந்திய முதலாளித்துவம் இலங்கைக்கு வந்தது என்ற அரசியற் கோணத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் தமிழ் மக்கள் இன்றைய அவல நிலைக்கு எப்படி வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? என்பதைச் சொல்லவேண்டும். ஏன் இவ்வளவு தியாகங்கள் செய்தபின்பும் தமிழ் மக்களுக்குத் துன்ப துயரம்தான் வந்தது? ஏன் விமோசனம் வரவில்லை?

கடந்த முப்பது வருட சம்பவங்களும் தமிழ் இளைஞர்களின் தொடர்ச்சியான சாகசச் சம்பவங்களின் எண்ணிக்கையோ, சில விண்ணர்கள் முன் கூட்டியே கண்டுபிடித்துச் செய்த செயற்பாடுகளோ அல்ல. அவை சில சமூக விதிகளுக்கு அடிபணிந்தே சென்றன. அந்த விதிகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கற்கவும் கற்பிக்கவும் வேண்டும். ஒரு விடுதலைப் புரட்சியின் சந்தேகத்திற்கிடமற்ற தோற்றமென்பது ஒடுக்குமுறைக்கு உள்ளான, பாதிக்கப்பட்ட பெருவாரியான வெகுசனங்கள் விடுதலைப் புரட்சியென்ற அந்த வரலாற்றுச் சம்பவத்திலே துடிப்பாகப் பங்குபற்றுதலிலே தங்கியிருக்கிறது. அந்தப் பங்குகொள்ளலுக்கான தடை ஏற்பட்டால் இங்கே ஒரு காலமும் விடுதலைப் புரட்சி எற்படாது. எதிர்ப் புரட்சிதான் ஏற்படும்.

அமைதியான காலங்களிலே சில பாராளுமன்ற அங்கத்தவர்களோ அல்லது சில எண்ணிக்கையில் உள்ள அரசியல்வாதிகளோ தங்களைத் தேசத்திற்கு மேலாக உயர்த்தி வைத்திருப்பார்கள். ஊடகங்களும் செய்திகளும் அவர்களைச் சூழவே வட்டமிடும். அமைதிச் சூழல் குலைந்து வெகுசனங்கள் பழைய நிலமைகளை மேலும் ஏற்காத நிலமை வரும்போது அவர்கள் பழைய கருத்தியற் தடைகளையும் மரபுத் தளைகளையும் தகர்த்தெறிவார்கள். முதலிலே பழைய சம்பிரதாயத் தலைவர்களைத் துடைத்தெறிவார்கள். தங்களது சொந்த நலனைப் பேணும் சக்திகளை அணிவகுப்பார்கள.; விடுதலைப் புரட்சியென்பது பெருவாரி வெகுசனங்கள் தங்களின் நலனைப் பேணப் பலாத்காரமாக உட்புகுந்து தங்கள் தலைவிதியைத் தாமே நிர்ணயிப்பதாகும். ஒரு விடுதலைப் புரட்சிக்கும் யாரோ ஒரு இரட்சகரை வழிபடுதலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. 1879ன் பின் உலகில் ஜனநாயகப் புரட்சிகள் நடக்கவில்லை. அதன் பிறகு எந்தத் தேசமும் சமூகவிஞ்ஞான அர்த்தத்தில் விடுதலை அடையவில்லை. அதன்பிறகு விடுதலை அடைந்த தேசங்கள் சோஷலிசப் பாதையில் மாத்திரம்தான் விடுதலை அடைந்தன. மற்றய அரசுகள் எல்லாம் ஏதோ தாம் விடுதலை அடைந்து விட்டதாகக் கூறிக்கொண்டு ஏகாதிபத்திய மகிடிக்கு ஆடி உள்ளுரில் உள்ள ஏகாதிபத்திய ஏஜண்டுகளின் துணையோடு மண்கொள்ளையடிக்கும் ஓர் ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவரப்பட்டன.

முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாக மாறி அது இன்று பூகோளமயமானதாகிவிட்டது. தேசிய அரசின் சட்டங்களோ தேசங்களின் நலன்களோ அதன் வளர்சி விஸ்வரூபத்தைக் கட்டுப்படுத்த முடியாது. தேசிய அரசென்ற குழந்தைச் சப்பாத்தை அது எப்போதே தூக்கி யெறிந்துவிட்டது. ‘தமிழீழம்’ என்று சொல்லுவதே மாபெரும் நாகரீக முன்னேற்றத்தைத் தடுக்கும் கொடுமையாகும். சர்வதேச உழைப்புப் பிரிவினைகள் எண்ணிலடங்கா மட்டத்திற்கு தொழில்பிரிவினைகள் ஏற்பட்டு ஒவ்வொரு சிறுபகுதிப் படைப்புகளிலும் நிபுணத்துவமும் நறுக்குத் தன்மையும் ஏற்பட்டுவிட்டதால் எந்தப் பொருளுற்பத்தியுமே ஒரு தேசிய உற்பத்திமுறை ஒழிந்துவிட்டது. எந்தக் கலாச்சாரமும் பல்தேசியக் கலாச்சாரமாகி விட்டது. அநாகரிகர்கள் மாத்திரமே தனித்துவம் என்பது பற்றிச் சிந்திப்பார்கள்.
பண்டப் பரிவர்த்தனை என்ற பட்டுநூலால் பூகோளமானது கூட்டுப்புளுவைப் போல வினாடிக்குப் பில்லியன் முறை சுற்றப் படுகிறது. பங்குச் சந்தையானது செக்கனுக்குச் செக்கன் வோல்ஸ்றீரிலிருந்து ரோக்கியோவுக்கும் ரோக்கியோவிலிருந்து ஹொங்கொங்கிற்கும் ஹொங்கிலிருந்து லண்டனுக்கும் இலத்திரன் வேகத்தில் ஓடித்திரிகிறது. டொலரும் ஈரோவும் யென்னும் இலத்திரன் காசுகளாகமாறி சர்வதேச வலைத்தளங்களால் பாய்ந்து விளையாடுகின்றன. விஞ்ஞானத்தினதும் தொழில் நுட்பத்தினதும் வளர்ச்சியானது எந்த மனிதனையும் உலகமனிதனாக்கி விடுகிறது.ஒவ்வொரு மனிதனும் ஓர் உலகக் குடும்ப அங்கத்தவனாகிவிட்டான்.

இந்த உலகம் பரந்த சிந்தனைக்குள் தமிழ்மக்கள் புகுவதைத் தவிர வேறு ஒன்றும் விடுதலை என்பதை அர்த்தப்படுத்தாது. உலக பொருளாதாரமானது உலகமேடையில் உலகமனிதனால் மாத்திரம் அணிவகுக்கப்படும். தேசிய மனிதனுக்கும் தேசப்பற்றாளனுக்கும் அங்கே வேலையில்லை. எப்படி அறுபது எழுபதுகளில் ஒரு நடுத்தரவர்க்கம் இலங்கையில் ஊதிப் பருத்ததோ அதேபோலவே இன்று இந்தியாவில் ஒரு நடுத்தரவர்க்கம் ஊதிப் பெருக்கிறது. ஒருபக்கத்தால் பணக்காரர்களும் மறுபக்கத்தில் மில்லியன் கணக்கான ஏழைகளும் கூடிக்கொண்டே போகிறார்கள். பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கையும் பலமடங்காற் கூடிக்கொண்டே போகிறது. இந்த எண்ணிக்கை மாற்றம் குணாம்ச மாற்றத்தை ஏற்படுத்துவது இயங்கியல் விதியாகும். அங்கே பல ஆயிரமாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலப்பிரபுத்துவப் பிற்போக்கு உறவுகள் நொருக்கப்படவில்லை. இந்தியா ஒரு வெகுசன எழுச்சியின் விளிம்பில் நிற்கிறது என்பதே உண்மை. ஒரு சில தடவை அந்த எழுச்சிகள் தற்காலிகமாக நசுக்கப்பட்டாலும் அது மீண்டும் மீண்டும் எழுச்சி கொள்ளுவது வரலாற்று நியதியாகும்.
உலக அரசியலை உலகச் சந்தையே நிர்ணயிப்பதால் வரப்போகும் நெருக்கடியில் இந்திய முதலாளித்துவம் வாங்கிக்கட்டாமல் விடாது.

இலங்கையிலே நாம் பிறந்த நாள் தொடக்கம் எம்மை அமைதியாக இருக்க வரலாறு விட்டதில்லை.1953 கர்த்தால் 1958 இனக்கலவரம் 1964 பொது வேலை றிறுத்தம், 1971 ஜே.வி.பி கிளர்ச்சியும் மாணவர் பேராட்டமும், 1977,1983 இனக் கலவரம், 1986 புலியின் சகோதரக் கொலையும் 1987ல் இந்திய ஆக்கிரமிப்பென்றும் எமது வரலாற்றில் சமூக அமைதி நிலவியதே கிடையாது. மிகக் கேடுகெட்ட சர்வாதிகாரமான புலியை முப்பது வருடங்கள் மௌனமாகத் தாங்கிய குற்றத்தைச் செய்த சமூகமென்றமுறையில் அது வரலாற்றால் கேவலப்படுத்தப்படுவது தவிர்க்கமுடியாதது.

முப்பது வருட புலிச் சர்வாதிகாரமும் இனவாத அரசாங்கத்தின் குண்டு வீச்சும் செல்லடியும் இன்னும் முடிந்தபாடில்லை.
இன்று இலங்கைத் தமிழ் மக்கள் புலிச் சர்வாதிகாரத்தை மேலும் சகிக்க முடியாத மட்டத்திற்கு வந்து விட்டார்கள். எந்தவித முன்திட்டமும் இல்லாமல் ஒருநாள் அவர்கள் பொழுதுபட்டு விடிவதற்குள் புலியைத் தொலைத்துக் கட்டுவார்கள். ஆயிரக்கணக்கான வன்னிவாழ் தமிழர்களைப் புலி சுட்டுப் பொசுக்கும் செய்தியை வெளிநாடுகளில் வாழும் புலிப்பினாமிகள் கேள்விப்படுவார்கள். அன்று அவர்கள் புலியை இவ்வளவு காலமும் காப்பாற்றியதன் மூலம் தமிழ் மக்களுக்குச் செய்த மாபெரும் துரோகத்தை ஒத்துக் கொள்வார்கள். கிழக்கு மாகாணத்தவர்கள் அதை இன்று ஒத்துக் கொண்டுள்ளார்கள். இன்று கிழக்கிலே புலி படுதோல்வியடைவதைக் கண்ட TBC ஆய்வாளர்களும் ராமராஜனும் ENDLFம் இவர்களுக்கு முண்டுகொடுத்த ஊடகங்களும் பத்திரிகைகளும் தமிழீழக் கனவு கண்ணுக்கு முன்னாலே பகற்கனவாகிக் கொண்டிருப்பதைச் சகிக்காமல் அந்தப் பயத்தால் இந்திய ஆக்கிரமிப்பு படையைக் கொண்டுவர முயற்சிக்கும் அடுத்த துரோகத்தைச் செய்கிறார்கள். சூனியத்திலிருந்து சூனியத்தினூடாக சூனியத்தை வந்தடைந்த கைவிரல் எண்ணிக்கையளவு கூட அங்கத்தவர்களை கொண்டிராத இந்த ENDLF கும்பலின் அரசியல் இந்தியப்படைகளை ஆக்கிரமிக்கும்படி கூறுகிறது. தன்னோடு TBCயில் சேர்ந்து வேலைசெய்பவர்களுக்கு இதனால் ஏற்படும் பிரச்சனைகளைப் குறித்துக் கூட ஒருதடவை யோசிக்கத் தெரிய மனிதனொருவன் தமிழ் மக்களின் பிரச்சனையைப் பற்றி யோசிக்கப் போகும் இந்தப் பகிடியைப் போல் உலகத்தில் எது உள்ளது!

தொன் கணக்கில் ஜனநாயகம் பேசியவர்களெல்லாம் ஆக்கிரமிக்கும்படி ஆணையிடுகிறார்கள். தமிழ்ச் சனம் ஒருமுறை பட்டபாடு போதாதோ? ராமராஜனின் மாபெரும் காட்டிக் கொடுப்பை எதிர்த்து இன்றுவரை TBCயின் எந்த ஜனநாயகவாதியும் மறுப்பறிக்கை விடவில்லை. தமிழ் மக்களது போராட்டமானது இலங்கை வரலாற்றில் சோஷலிசப் புரட்சியைத் தடுப்பதற்காக செயற்கையாக உருவாக்கப் பட்டது. இவ்வளவு சகோதரக் கொலைகளுக்கு வழிவகுத்த புலிப் பாசிசத்தின் அரசியல் இராணுவத் தோல்வியோடு தமிழ் சிங்கள முஸ்லீம் தொழிலாளர்கள் மிக அன்னியோன்னியமாக ஐக்கியப் படுவார்கள். கிழக்குமாகாணத்திலே அது ஏற்கனவே நடைபெறத் தொடங்கிவிட்டது. சோஷலிசப் புரட்சியால் ஏற்படும் ஆட்சி ஒன்றுதான் தமிழர்கள் கேட்ட உரிமைகளிலும் கூடவே கொடுக்கும் என்பதை நாம் நன்றாகவே நம்பியிருக்கலாம். அந்த மட்டத்திற்கு சிங்களத்தொழிலாளர்கள் உணர்மையடைந்து பக்குவப்படவில்லையெனில் தொடர்ந்து இலங்கையில் அழிவு ஏற்படுவதைத் தடுக்க முடியாது.

**புகைப்படக் குறிப்பு: Naked women protestors shout slogans against the alleged rape, torture and murder of Thangjam Manorama by paramilitary soldiers in Imphal, capital of northeastern Indian state of Manipur, Thursday, July 15, 2004. In a highly unusual protest, some 40 women stripped naked and staged an angry demonstration outside the Assam Rifles base to protest the death in custody of 32-year old Manorama.

16 thoughts on “இந்திய ஆக்கிரமிப்பிற்கு ENDLF அழைப்பு

  1. சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றும் களிறு அதி:60 குறள்:597

    உறுதியாளர் அழிவிலும் ஊக்கம் தளரார்: அம்புகள் தைத்தாலும் யானை வலிபொறுக்கும்.

  2. புலியோடு போடப்பட்ட டீலின்படியே ரிபிசி நிறுத்தப்பட்டதாக மக்கள் பரவலாக பேசிக் கொள்கிறார்கள்.றேடியோவை நிறுத்தினால் வழக்கை விடுவதாக.

  3. தமிழ்தேசியக்கூட்டமைப்புமூலமாக புலிகளும் இந்தியாவைத் தலையிடத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
    இனி ஏதும் செய்யமுடியாதென்ற நிலையில் கால அவகாசத்திற்காக
    வும் தற்காலிக யுத்தநிறுத்தம் ஒன்று புலிகளுக்கு தேவையாக இருக்கிறது. பாலசிங்கம் முதல் பத்மினி சிதம்பரநாதன்வரை டெல்லிக்கு ஓடித்தான் பார்க்கிறார்கள் .இந்தியா உப்பிடி எத்தனை புலிகளைப் பார்ர்த்தது. புலி வன்னியில் இருக்கும்வரை இந்தியராணுவம் வராது. புலி இருக்கும்வரைதான் மாற்று இயக்கங்கலின் இருப்பும். எல்லா இயக்கங்களையும் அழித்த இந்தியா .தனது நேரடியான இராணுவ தலையிடாக் கொள்கை மூலம் புலிகளை அழிக்கிறது. கருணா அம்மானின் நிலைப்பாடுதான் இப்போது சரியாகத்தெரிகிறது. ஜனனாயக வழிக்குத் திரும்புதல். கட்சியை பதிவுசெய்தல். தன்னைத் தற்காத்துக் கொள்ளுதல். வாழ்க! தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள்.

  4. //..கொலைக்களத்தின் மூலைகளில் நின்று பங்கெடுத்த பெரும் பழியைச் சுமப்பவராகும்…//

    இது சித்தார்த்தனுக்கும் பொருந்துமோ அல்லது அவர் லண்ட்னில் இருந்ததனால் மன்னிப்போ

    //..மக்கள் சேவை புரிந்தமைக்கான ஆவணங்கள் இன்னமும் சரியாகத்திரட்டப்படாமல் மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிவாகி ஜனநாயகச் சூழல்வரும்வரை காத்திருக்கின்றன…//

    ஏன் புலிப்பாசிச வன்னியில் இருப்பவர்கள்கூட ஈ.என்.டி.எல்.எஃ வன்னிக்கு வந்திடுமெண்டு பயப்படுகிறார்களோ?

    //…இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு எது எனத் தெரியாத, சர்வதேச அரசியல் போக்குகளின் மப்பு மந்தாரங்களை விளங்காத…///

    விளங்கின நீங்கள் எழுதின இந்தக்கட்டுரையை வாசிப்பவர்கள் ‘மப்பு மந்தாரம்’ வந்து விழப்போகினம்!!!

    //… இலங்கையின் உள்ளுரிலேயே அனாமதேயமாக இருக்கும் ENDLF இலங்கையில் அது மாபெரும் தமிழ் மக்கள் வெள்ளத்தைத் தனக்குப் பின்னே அணிகுவித்திருப்பதாயும் கொந்தளிக்கும் கடலை ஒத்த உறுப்பினர்களால் நிரம்பி வழிவதாயும் தோரணை காட்டுகிறது….//

    மொஸ்கோ, பீக்கிங் எல்லாம் அமெரிக்கா பின்னால் அணிவகுக்கும் போது மொஸ்கோ சார்பு, சீன சார்பு என்று கட்சி நடத்துவது போலத்தான் இதுவும்!!!

    ///….இந்திய உளவுத்துறை ஞானசேகரன்களை மட்டுமல்ல ஆனந்தசங்கரிகளையும் ஏனைய தமிழ் இயக்கங்களையும் படைத்து இயக்குவதுடன் நிதியும் வழங்குகின்றது….//

    என்ன இயக்கங்கள் என்று சொல்லுங்கோவன், சொல்லாமல் இருந்து பின்னர் விட்டு தமிழ்மக்களை எச்சரித்தேன் என்று சொல்லக்கூடடது

    //..ஒரே தேசத்தின் சகோதர மக்களான தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களின் ஐக்கியத்தைக் கோராதவர்கள், அதற்கான அரசியலுக்குப் போராடதவர்கள் தமிழ் சிங்கள மக்களின் உறவுகளை குற்றமாகக் கருதும் மனோநிலையை வந்தடைகிறார்கள். ///

    கோரவில்லை என இன்னும் தொண்டை கிழிய கத்துகிறீர்கள். எல்லா இயக்கங்களும் கத்திக்களைத்த வரலாறு அறியவில்லையோ???

    //… அதேபோல் துட்டகைமுனுவின் படையில் தமிழர்களும் சிங்களவர்களும் இருந்தனர். துட்டகைமுனுவின் படையில் கிழக்கைச் சேர்ந்த தமிழர்களும் சேர்ந்து போரிட்டனர் என்ற வரலாற்று ஆதாரம் ..///

    அமெரிக்க ஆக்கிரமிப்புப்படையில் ஈராக்கியரும் இஸ்ரேலியப்படையில் பாலஸ்தீன ‘ஒட்டுப்படை’ கூட்டமும் சேர்ந்து போரிடுகிறார்கள். இதையும் “இனஒற்றுமைக்கான” வரலாற்றுஆதாரம் என காட்டுங்கள். கருணா குழுவும் ஒரு நல்ல உதாரணம்!

    //…எல்லாளன் துட்டகைமுனு காலம் தமிழ் சிங்கள இனவாத உணர்வுகள் தோற்றம் பெற்றிராத இனக்குழுத் தன்மை வாய்ந்த சிறிய அரசியல் வடிவங்கள் நிலவிய காலமாகும். …//

    மகாவம்சம் வேறு மாதிரி அல்லவோ சொல்கிறது. “ஒருபக்கம் கடல் மறுபக்கம் தமிழர் எப்படி நீட்டி நிமிர்ந்து படுப்பதூ” என்று கைமுணு தாயைக் கேட்டதாக ஜே.வீ.பி யும் ஜே.எச்.யு வும் பிரச்சாரம் செய்கிறார்களே!!!

    //… துரும்பளவு தடயங்களைக் கண்டெடுத்துத் தூண் என்று வாதிடுகிறார்கள்…..//

    “அதேபோல் துட்டகைமுனுவின் படையில் தமிழர்களும் சிங்களவர்களும் இருந்தனர்” – இதையோ சொல்லுறியள்?

    //…ஒருபுறம் இலங்கை முஸ்லீங்களுக்கு ஆதரவு எனச் சொல்லிக்கொண்டே மறுபுறத்தில் உலக முஸ்லீம் அமைப்புகளுக்குப் பயங்கரவாதப் பட்டத்தையும் அது வழங்கி வந்தது. ..////

    இதையே தான் ‘மாற்றுக்கருத்து” மாணிக்கங்களும் புலிக்களுக்கு செய்கிறார்கள். தமிழருக்கு ஆதரவு, எங்கேயோ இருக்கிற பாலஸ்தீனருக்கு ஆதரவு, ஏன் சதாமுக்கு தூக்கு விழுந்தபோது புலி ஏன் கேள்வி கேட்கவில்லை எண்டெல்லாம் கதை.

    //…. …….. யுத்தத்தால் அளவுக்கு மீறிக் களைத்துப் போன இலங்கையிலுள்ள தமிழர்களது அவலவாழ்வு புகலிடத்தில் புலி எதிர்ப்பாகப் பிரதிபலித்தது. ..////

    இலங்கையிலுள்ள தமிழர்களது அவலவாழ்வு புகலிடத்தில் இருப்பவர்களுக்கு தெரியாது. அவர்கள் தமது இருப்பை தக்கவைக்க புலிக்கு காசு கொடுக்கிறார்கள் என்று ‘மாற்றுக்கருத்தாளர்” கள் சொல்கிறார்கள். நீங்கள் தலைகீழாக சொல்கிறீர்கள்!!!!

    //…. நோர்வேதான் ஈராக் ஆக்கிரமிப்பை ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் அடுத்ததாக ஆதரித்த நாடாகும்…//

    அதெப்படி ‘அடுத்ததாக ‘ என்று கூறுகிறீர்கள்.. வரிசையிலா வாக்களிக்கிறார்கள். அல்லது போட்டி போட்டா வாக்களிக்கிறார்கள் அங்கே. இதில் ஜேர்மனி, பிரான்ஸ்,சுவிஸ், கனடா, ரஷ்யா, சீனா எவ்விடத்தில் வருகிறார்கள்

    //…. இலங்கை மக்களின் புரட்சிகர நீதிமன்றம் முன்பு பிரபாகரனைப் பகிரங்கமாக விசாரிக்க வேண்டுமென்று கூற இந்த ஆய்வாளர்கள் ஒருவராலும் முடியவில்லை. ..///

    ஜே.வி.பி யை, சிங்கள இளைஞர்களை கொன்று குவித்த ஸ்ரீலங்கா அரசை விசாரிக்க முடியவில்லை என்ற ஞானோதயமாக இருக்கலாம். அல்லது கொலை செய்தது சோசலிச ‘கொள்கை’ கொண்ட சிறீமா அம்மையார் கட்சி தானே என்ற பட்டறிவாகவும் இருக்கலாம். சிறீமாவுக்கு சப்போட் பண்ணிய ரஷ்ய, சீன அரசுகளில் உள்ளதும் ‘புரட்சிகர நீதிமன்றம்’ தானே எனவும் நினைத்திருக்கலாம்!!!

    //….. இலங்கையிற் புலி இராணுவரீதியிலும் அரசியல்ரீதியிலும் தகர்த்தெறியப்பட்டு வருவதால் TBC யின் பிரச்சாரரீதியான தேவை சுருங்கி வருகிறது. புலி எதிர்ப்புக்கப்பால் முன்பின்னான அரசியல் இல்லாத TBCக்கள் ராமராஜன்கள் இல்லாதொழிவது அரசியற் கட்டாயமாகும். …///

    இது தான் எல்லாத்தமிழ் கட்சிகளுக்கும் நடக்கும். புலத்திலுள்ள ‘மாற்றுக்கருத்து’ மாணிக்கங்கள், டக்ளஸ், சித்தாத்தர், சங்கரி, முஸ்லிம்கள் உட்பட!!!

    //… ஏன் இந்தியா இரணடு யுத்தக் கப்பல்களை இலங்கைக்கு வழங்கியதுபற்றி, இந்தியக் கடற்படைக் கப்பல்கள் இலங்கை அரசுக்கு ஆதரவாகக் கடற் கங்காணிப்பில் ஈடுபடுவது பற்றி, ..////

    இது மட்டுமல்ல , அமெரிக்கா யுத்த கப்பல் கொடுத்த போது பல்லை இளித்து வாங்கிய புரட்சிக்காரர் ஜே.வி.பி , சோசலிசக்காரர் என பலர் அடக்கம்

    //… பாளியும் பவுத்தமும் தமிழை ஒப்புவமை இல்லாத மட்டத்திற்கு வளர்த்தது போன்று பாளியும் பவுத்தமும் சிங்களத்தையும் வளர்த்தது…///

    ஒப்புவமை இல்லாத மட்டத்துக்கு??? இது கொஞம்….ஓவர் பாருங்கோ.. 🙂 🙂 🙂 🙂

    ////….இதைப் பலதடவைகள் மார்க்ஸியவாதிகள் இந்த இளைஞர்களுக்கு எச்சரித்த போதும் அவர்களது அனுபவக் குறைவாலும் அவர்களது குட்டி முதலாளித்துவ வர்க்கக் குணாம்சத்தாலும் அதை அவர்கள் அப்பொழுது நம்பவில்லை….//

    புளொட் அப்போது ‘வங்கம் தந்த பாடம்’ என புத்தகம் அடித்து 5ரூபாவுக்கு வித்தார்கள். நான் அறிய எந்த மாக்சியவாதியும் எச்சரிக்கவில்லை. அவர்கள் ‘மாபெரும் அக்டோபர் புரட்சி’ பற்ரி யாழ் றிம்மர் மண்டபத்தில் வருடத்தில் ஒருநாள் கூட்டம் கூடி பேசியதோடு சரி!!

    //..இலங்கையின் ரெயில்வே, மின்சக்தி, வைத்தியசாலை, தொலைதொடர்பு, போக்குவரத்து, நகரசுத்தித் தொழிலாளர்கள் சில பத்தாயிரம்பேர் தொடர்ந்து சிலகிழமைகள் வேலை நிறுத்தம் செய்வதால் ஏற்படும் தாக்கத்தை தமிழ் மக்கள் அத்தனைபேரும் கனரக ஆயுதம் ஏந்தி வருடக்கணக்காகப் போராடினாலும் ஏற்படுத்த முடியாதென்பதே உண்மையாகும். ..///

    புளொட் காரர்கள் ஜே.வி.பி யுடன் கூட்டாக இருந்த போது தமிழருக்காக ‘சிலகிழமைகள்’ வேலை நிற்றுத்தம் செய்திருக்கலாமே? மாறாக 1983 இல் தமிழனை அடிக்க முன்னுக்கு நின்ற கூட்டத்தில் கலந்தார்கள் எனபதே உண்மை! அதுமட்டுமல்ல அண்மையில் வீரவன்சா சொன்னது, பயங்கரவாதிகளை ( தமிழரை ) அழிக்க சட்டத்தில் இடமில்லாது விட்டால் சட்டத்துக்குப்புறம்பான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று. நல்ல சோசலிசம், நல்ல ஜனநாயகம், எல்லோரும் சேர்ந்து போராடுவோம்!!!!!

    …இந்த ஒரே காரணத்தால் மாத்திரம்தான் புலிகள் வேறு எந்தவித அற்ப காரணங்கூட இல்லாமல் தொழிலாளர் தலைவர்களான அண்ணாமலையையும் விஜயானந்தனையும் கொன்றார்கள்…///

    style=”color:#ff0000;”>அடடா…அடடா!!!!!

    //…ஏதோ ஆயுதம் தான் அரசியல் அதிகாரத்தை தரவல்லது என்ற கோமாளிகளின் கற்றுக்குட்டித்தனத்தால் …///

    “துப்பாக்கி முனையில் அதிகாரம் பிறக்கிறது” என்று பூபாலசிங்கம் புத்தக சாலையில வாங்கின சோசலிசப்புத்தகத்தில படிச்ச ஞாபகமெல்லோ வருகுது??? நீங்கள் என்னவோ கோமாளி , கற்றுக்குட்டி என்கிறீர்கள்!!!!!

    //…ஞானசேகரனுக்கோ ராமராஜனுக்கோ யூகோஸ்லாவியாவினதோ பால்கன் பல்லினத் தேசங்களினதோ அடிநுனி தெரியாது….//

    ஞானசெகரனுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் மார்ஷல் டிடோ ப்லாத்காரமாக இனங்களை ஒன்றிணைத்ததனால் வந்த வினை என்று எல்லா யூகோஸ்லாவியாக்காரனும் சொல்லுறான். அது மட்டுமல்ல ரஷ்யாவிலும் அதே நிலை தான் என்றதால் தான் ரஷ்யாவும் பால்கன் பிரதேசமாக உடைந்தது. எல்லாவற்றுக்கும் அமெரிக்காவை குற்றம் சொல்லுறது இலகு!!!

    ///முதலாவதாக யூகோஸ்லாவியா என்ற பல்லின தேசத்தில் மக்கள் சேர்ந்து நாசிகளுக்கு எதிராகப் போராடி இரணடாம் உலகயுத்தத்தின் முடிவில் சோஷலிசப் புரட்சி மூலம் நிர்மாணித்த அந்த சோஷலிச நாட்டை…//

    ஒன்றாகப் போராடினால் ஒன்றாக இருந்தே ஆகவேண்டும் என கட்டாயமா? இதையே புலி கிழக்குமக்களிடம் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா??

    ///.. சர்வதே சமூகமும் நேட்டோ யுத்தப் பயங்கரவாதிகளும் ஐ.நா தீர்மானம் இல்லாமலேயே ஆக்கிரமித்தார்கள். ஐ.நாவின் அங்கத்துவ நாட்டை அத்துமீறி ஆக்கிரமித்ததன் மூலம் ஐ.நாவின் கபடத்தனமும் அம்பலமானது…//

    அப்போ ஈராக் மீதான பொருளாதாரத்தடையும், அமெரிக்கா ஈராக்கை ஐ.நா தீர்மானத்துடன் ஆக்கிரமித்தது சரியா?? அல்லது ஈரானின் அணுஆராச்சியை ஐ.நா அங்கத்துவநாடுகள் தடை செய்ய அனுமதிப்பது சரியா?அத்துடன் ஐ.நா அங்கட்த்துவ நாடாயிருந்தால் மனித உரிமை மீறலாமா?உங்களின் கருத்துகள் அவ்வாறான எண்ணத்தையே தர தலைப்படுகின்றன.ஆக்கிரமிப்பென்பதே அத்துமீறுவதால் வருவது, இதில் ‘அத்துமீறி ஆக்கிரமிப்பு’ என்று என்ன புதிதாக?

    //…யூகோஸ்லாவிய சிறுபான்மை இனங்களுக்கு ஆயுதங்களை வழங்கிக் கைக்கூலிகளைப் படைத்து செயற்கையாக இனவாத உள்நாட்டுக் கலவரங்களை ஏகாதிபத்தியங்கள் மூட்டி விட்டன. இதையே ஏகாதிபத்தியங்கள் இலங்கையிலும் பிற மூன்றாமுலக நாடுகளிலும் செய்துவருகின்றன. …///

    முதலாம் உலகப்போர் தோன்றியதே யூகோஸ்லாவியாவில் தான். இதில் எகாதிபத்தியம் அது இது எண்டு!!!இலங்கையில் யார் நீங்கள் குறிப்பிடும் கைக்கூலிகள் எந்த நாடு இவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கின எனக்கூற முடியுமா? அறிய ஆவல்.சிறுபான்மை இனங்களுக்கு ஆயுதம் கொடுப்பது பற்றி குற்றம் கூறுகிறீர்கள், பெரும்பான்மைக்கு கொடுப்பது தர்மமோ???இந்த யூகோஸ்லாவியா உலகத்தில் எத்தனை சிறுபான்மை இனங்களுக்கு ஆயுதம் தந்ததை ‘மக்கள் போராட்ட, தொழிலாளர் வர்க்க போராட்ட, அடக்கப்பட்ட இனங்களின் போராட்ட ஆதரவாக’ படம் காட்டினார்கள் !!!!

    //..உள்நாட்டு யுத்தங்களும் பிரிவினைவாதங்களும் இல்லாத ஒரு முதலாளித்துவ வழியிலான ஒன்றிணைப்பு முயற்சிகள் நடக்கின்றன….///

    நீங்களும் அவ்வாறான , உள்நாட்டு யுத்தங்களும் பிரிவினைவாதங்களும் இலாத இலங்கை (ஸ்ரீலங்கா) யை விரும்புகிறீர்கள் எனத்தான் நினைக்கிறேன். பின்னர் அதை ஏன் குறை கூறுகிறீர்கள்???

    ///.. பாகிஸ்தான் அமெரிக்காவை விரோதிக்கத் துணிந்த காலமிது. …//

    முஷரஃப் எழுதிய புத்தகம் வாசிக்கவில்லையோ? அதில் ஒரு கீழ்நிலை அதிகாரி தன்னை பயமுறுத்தி (பாகிஸ்தானை குண்டுவீசி கற்காலத்துக்கு கொண்டுபோவோமென) பணிய வைத்தார் என அழுதிருக்கிறார்!

    ///… ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவாகப் புலிகள் இலங்கை முஸ்லீங்களைத் தாக்கும் போது பாகிஸ்தான் அதைப் பிரதிபலிக்காமல் இராது. ..///

    கூட்டணிக்காரர், அஷ்ரஃப் போல ஏன் முஸ்லிம்களை ஏமாத்திறியள்?ஏதோ முஸ்லிம் நாடுகளெல்லாம் இலங்கை முஸ்லிம்களுக்காக வரிந்துகட்டிக்கொண்டு வந்திடும் எண்டு. முதலில அவையளை பாலஸ்தீன பிரச்சினைக்காக ஏதாவது செய்யச்சொல்லுங்கோ. எந்த முஸ்லிம் நாடு (ஈராக், ஈரான் தவிர) அமெரிக்காவோட படுக்கயில்லை?பாகிஸ்தான் தானே முன்னர் ‘சோசலிச’ ஆப்கானிஸ்தானை வீழ்த்த அமெரிக்காவுக்கு பின் தளம் அமைத்துக்கொடுத்தது? இது நாம் அறியாததல்ல.இதில் ஏகாதிபத்திய எதிர்ப்பாம், அதாம் இதாம். யாரைச் சுத்திறியள்?

    //…ஆசியப் பொருளாதார இராணுவ அவசியங்கள் புலிகளைக் கட்டுக்குள் கொண்டுவரும்….///

    எப்படியாயினும் சோசலிசம், முதலாளித்துவம், பொருளாதார அவசியம் என்று ஏதாவது புலிகளை கட்டுக்குள் கொண்டுவந்தால் சரி. ரி.பி.சி, ராமராஜன், ஜே.வி.பி, அழகலிங்கம் ….இதில் எந்த வித்தியாசமுமில்லை!!!

    //… இப்படி ஆக்கிரமிப்புக்கு அழைப்பு விடுபவர்கள் இந்தியக் கைக்கூலிகள் என்று நாம் தமிழ் மக்களுக்கு உரத்துக் கூறவேண்டும். …///

    கவலை வேண்டாம் அவர்களுக்குத் ( தமிழ் மக்களுக்கு) ஏலவே தெரியும்!

    //..தமிழ் மக்களின் முன்னேறிய பகுதியினரின் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்திருப்பார்கள்…///

    யாரிந்த முன்னேறிய பகுதியினர்? இதையே புலி சொன்னால் ஐயையோ வர்க்கப்பிரிவினை, வகுப்புவாதம் என்பார்கள்!!!

    //..1971ல் இந்தியப் படைகள் முதலில் ஜேவிபியை ஒழிக்கவென்று இலங்கையுள் புகுந்தார்கள். கூர்க்கா படைகளே சர்வதேச விமானப் படைத்தளத்தைத் பாதுகாத்தார்கள். ஜேவிபி உறுப்பினர்கள் பதுங்கியிருந்த மலையை உலங்கு வானுர்தியிலிருந்து பெற்றோலை ஊற்றிக் கொழுத்தி உயிரோடு நெருப்பு வைத்தார்கள். ….///

    அப்போது சோஸலிச ஊற்றுக்கண்கள் , ரஸ்யா, சீனா கொடுத்த வட்டியில்லா கடன், முன்நிபந்தனையற்ற ஆயுத உதவி, மற்றும் சோசலிச பால்குடிக்கார இந்தியா எல்லோரும் ஒன்றாக நின்றவர்கள்தானே. ஏன் தனியே இந்தியா மீது பழி!!!!

    //…1987ல் இலட்சம் படையினரோடு அமைதிப் படையாக இலங்கையுள் புகுந்த இந்திய இராணுவம் பிரபாகரனைப் பிடிக்காமலும் புலிகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட யுத்தத்தைச் செய்துகொண்டும் தமிழ் மக்களை வகைதொகையில்லாமற் கொன்று புலிகளைத் தனிப் பெரும் பாசிசமாக வளர விட்டார்கள். ..//

    தமிழ்ப்படம் தோத்துப்போகும்!!!!

    //…நாளைய, மக்கள் சோஸலிச நீதிமன்றங்களின் முன் அவர்கள் சாட்சிகளாக மாறுவர். ..//

    1981 இல் இருந்து இதே சோஸலிச புரட்சி நீதிமன்ற கதையை விட்டுக்கொண்டிருக்கிறீர்களே! உலகத்தில் அப்படி ஏதாவது ஒன்று இருந்தால் காட்டுங்கள்!

    //…தமிழ் மக்களுக்குச் சிங்களப் பகுதியில் குடியேறவுள்ள அதே உரிமை வடக்குக் கிழக்குப் பகுதிகளில் சிங்கள மக்களுக்கும் வேண்டாமா?..//

    நிச்சயமாக இருக்கிறது, ஆனால் ஆக்கிரமித்தல் , அரச பணத்தில் அல்ல! சிங்களப்பகுதியில் எங்கே அரச செலவில் தமிழர்களையோ அல்லது தமிழ் குற்றவாளிகளையோ குடியேற்றினார்கள்? கொழும்பில் உள்ள தொடர்மாடிவீடுகளும் நவீன குடியிருப்புகளும் அவரவர் சொந்த பணத்திலேதான் வாங்கப்பட்டது. அவ்வளவுதூரம் ஏன், ஸ்ரீலங்காவின் அன்னியச்செலாவணியை சம்பாதிக்கும் தோட்டத்தொழிலாளருக்கு இன்றுவரை ஒழுங்கான வீடு உண்டா? சோஸலிசக்காரர் எங்கே போனார்கள்???

    //.. உலகமயமாகும் நிகழ்வுப் போக்கில் இன்னும் எத்தனை நாளைக்குத் தேசிய இனங்களின் பாரம்பரியப் பிரதேசம் என்று பேசிக் கொண்டிருப்பது. ..//

    உலகமயமாக்கலை ஆதரிக்கிறீர்களா இல்லையா? தெளிவாக சொல்லுங்களேன்! மாத்தி மாத்தி குழப்புகிறீர்களே!!!!

    //…. ENDLFபின் சர்வதேசப் பிரதிநிதிகள் தாம் வாழும் புகலிட நாடுகளில் பல்தேசிய இன மக்களுடன் வாழ்வதற்குப் பாக்கியம் பெற்றவர்கள். ஆனால் இலங்கையில் மாத்திரம் தமிழர்களையும் சிங்களவர்களையும் பிரித்துவை! நாட்டைக் குறுக்கறுத்து வெட்டு! என அறிக்கை தருகிறார்கள். ….///

    பிரான்சிலும், ஜேர்மனியிலும், கனடாவிலும் முதலாளித்துவ கலாச்சாரத்தில் வாழ்ந்துகொண்டும் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் (ஜோன்ஸ் ஹொப்கின்ஸ்) பிள்ளைகளை சேர்க்க அலைந்துகொண்டும் இருப்பவர்கள் புரட்சி நீதிமன்றம், சோசலிசம் அது இது என்று அறிக்கையும் வியாக்கியானமும் தருவது போல்தான் இதுவும்!!!

    //…. 1989 ஜே.விபி எழுச்சியின் போது பாசிசப் புலிகள் பிரேமதாஸாவின் கூலிப் படையாக மாறி இலங்கை இராணுவத்துடன் சேர்ர்ந்து ஜேவிபி இளைஞர்களைக் கொல்லவில்லையா? ..////

    தயவு செய்து ஆவணப்படுத்துங்கள்.

    //….1971ல் ஜேவிபி கலகஞ் செய்த காலத்தில் இலங்கை இராணுவம் தமிழ் இளைஞர்கள் என்றால் உடனே போக விட்டுவிடுவார்கள். சிங்கள இளைஞர்கள் அடி உதையோடு உடன் கைது செய்யப் படுவார்கள். சிங்கள இராணுவமே சிங்கள இளைஞர்களைப் பிடித்து உயிரோடு கழுத்தில் டயர்களைப் போட்டுக் காலை முதல் மாலைவரை இழுத்துத் திரிந்து தெருவில் நாய்களைப்போல சுட்டுக் கொன்றது. ………மனம்பெரி சாகும் தறுவாயில் புதைகுழியில் இருந்தபடி தன்காதில் இருந்த தோடுகளைக் கழற்றித் தன் தாயிடம் கொடுக்கும்படி கூறிச் செத்தாளே. அதையறிந்து தமிழ் சிங்கள முஸ்லீம் என்ற பேதம் இல்லாமல் எல்லா மனிதர்களும் கண்ணீர் விட்டு அழுதார்கள். இது எதைக்காட்டுகிறது? சிங்கள அரசு தமிழனைமட்டும் கொல்லும் என்பதையா? ….///

    என்ன சொல்கிறீர்கள்? சிங்கள அரசு தமிழனை மட்டும் கொல்லவில்லை, தமிழனையும் சிங்களவனையும் சமமாக கொல்கிறது ஆதலால் இது ஒரு பெரிய விடயமல்ல என காட்டுகிறது என்கிறீர்களா? விரும்பினால் சிங்களவர்கள் போராடட்டும். ஜே.வி.பி க்கு பயிற்சி கொடுத்த புளொட் காரர்கள் டயான் ஜெயதிலகா போன்றவர்களால் ஏமாற்றப்பட்ட கதை தெரியாதென்றால் கேளுங்கள் சொல்வார்கள். ஏன் டயானிடமே கேளுங்கள் அவர்தானே ஐ.நா வின் (ஜெனீவா) புதிய வதிவிட பிரதிநிதியாமே????சோசலிசம் கொடிகட்டிப்பறக்கிற அமெரிக்க ஜோன்ஸ் ஹொப்கின்ஸில் படித்து பணியாற்றியவர்!!!!!!

    //…சிங்களப் பகுதிகளில் தொழிற்சாலைகள் ஊருக்குப் பத்தாகவா இருக்கின்றன? …///

    அவர்கள் ஊரை அவர்கள் கொள்ளை அடித்தால் அது அவர்களின் பிரச்சினை அல்லவா?

    //..இலங்கையில் நிலப்பிரபுத்துவ பழைய குப்பை கூழங்களை அகற்ற வேண்டிய ஜனநாயகப் புரட்சி நடைபெறவேண்டும். ..///

    அப்ப சோஸலிசப்புரட்சி இல்லையா???

    //…முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியைச் செய்ய லாயக்கில்லாத முதலாளிவர்க்கம்,…////

    “முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி” குழப்புறியளே!

    ////. இலங்கையிலே இதுதான் பிரச்சனை. ….//

    அங்கை சுத்தி இஞ்சை சுத்தி கடைசியா ஒண்டில வந்து நிக்கிறியள், நிம்மதி!!!

    ///…. எந்தத் தீய செயல்களும் சில நல்ல செயல்களுக்கு வழி திறந்து விடுகின்றன. முப்பது வருட உள்நாட்டு யுத்தம் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய போதும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கியபடவேண்டிய அவசியத்தை நன்றாகவே விளக்கிச் சென்றதோடு அதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தியும் விட்டுள்ளது. ….///

    ????????

    //…..இன்று ஐந்து இலட்சம் சிங்களத் தொழிலாளர்கள் மத்திய கிழக்கில் அடிமை ஊழியம் செய்கிறார்கள். இவர்களில் 80 வீதமானவர்கள் பெண்கள். இவர்களில் 35000 பேர் சவூதி அரேபியாவில் மட்டும் வேலை செய்கிறார்கள்….//

    இதுக்கும் தமிழனே பொறுப்பு. ஏன் அந்தக்காசில் தானே குண்டு வாங்கி தமிழன் தலையில் போடுகிறான். இது சிங்கள பாட்டாளி மக்களின் பிழை என்று வாதிடலாம் தானே? மாட்டீர்கள், தமிழன் அனுப்புகிற காசு சிங்கள பாட்டாளிகளை சுட்டெரிக்கிறது என்று மட்டும் குளறுவீர்கள்!!!

    //…. அண்மையில் இவர்களில் ஐந்து பேருக்குச் பகிரங்க இடத்தில் வைத்து சிரச்சேதங்கள் செய்யப்படன. ….///

    ஏன் என்று ச்வூதிக்காரன் சொல்லி இருக்கிறானே. அதை ஏன் மறைக்கிறியள். அதுமட்டுமல்ல முஸ்லிமல்லாத இனத்தவரை அவமதிப்பதை “ஒஃபிஷலாக்வே” செய்வதை கொஞ்சம் சொல்லலாமே???

    //…புலி விழும் தறுவாயில் கிழக்கிலே ‘தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்’ அமைப்புப் போல், வன்னியில் புலி விழும்பொழுது வடக்கில் ஓர் ஆளுமையுள்ள அரசியல் அமைப்பைத் தோற்றுவிக்க முடியவில்லை…///

    வாழ்க ‘தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்” !!!!!!!!

    //…… முழு இலங்கை தழுவிய தேசியக் கட்சியே உருவாகும். தமிழ் மக்கள் இனவாத யூஎன்பியையோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியையோ மன்னிக்கப் போவதில்லை. …///

    நல்ல கனவு. இந்த மாதிரி கதைகளை வருடாவருடம் பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு காலங்களில் எல்லா அரசியல் வாதிகளும் விடுவார்கள். ஒரு வித்தியாசம், அவர்களுக்கேற்ப சின்ன திரிபுகள் இருக்கும்!!!

    //….இலங்கையில் ஒரு முதலாளித்துவ ஜனநாயக அபிவிருத்தியாவது சரியாக நடைபெற்று இருக்குமானால் தொழிற்சாலைகள் பரவலாகப் பிறந்திருக்கும், உற்பத்தி பெருகி மக்களுக்கு வேலையும் வாங்கும் சக்தியும் உயர்ந்திருக்கும்…///

    என்னதான் சொல்ல வாறியள். முதலாளித்துவம், ஜனநாயகம், உலகமயமாக்கல், சுவிட்சலாந்து…. குழப்பிறியள்!!!!! அல்லது நீங்களே குழம்பிறியளே??

    //…தொழிற்சாலைகள் கண்ட நின்ற இடத்தில் அமைக்கப் படுவதில்லை. மூலப் பொருள் சந்தை வசதி போக்குவரத்து வசதி நீர்வளங்கள் உபரித்தொழிலாளர்கள், தொழிலாளர்களது இயங்திரங்களை இயக்கவல்ல கலாச்சார வளர்ச்சி போன்ற வசதிகள் உள்ள இடத்தில்தான் அமைக்கப்படும். அப்படி அமைத்தாலும் அது ஈட்டும் நிகரலாபம் அதன் உற்பத்தித்திறன் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட்டே அது நீடிக்கும்…..///

    இதற்குப்பெயரே முதலாளித்துவம் !!!!!

    //…… காங்கேசன்துறைத் சீமெந்துத் தொழிற்சாலைக்கான மூலப் பொருட்களின் ஒருபகுதி புத்தளம் மற்றும் காலிபோன்ற இடங்களில் இருந்து வந்ததினால் சீமெந்தின் உற்பத்திச் செலவு அதிகமாக இருந்தது. ..//

    காலியில் இருந்து என்ன வந்தது? ஏன் கிளிங்கரை ரயிலில் காலிக்கு கொண்டு போய அரைத்தவர்கள்? ஏன் காங்கேசனில் அரைக்க முடியதா?அது மட்டுமல்ல காங்கேசன் சீமெந்தை கொழும்பிலும் தெற்கிலும் இருந்ந்து வரும் ஓடர்களுக்கு 5ரூபா குறைத்தே விற்றார்கள். ஏனென்றால் அந்த 5 ரூபா அவர்களின் போக்குவரத்து செலவை ஈடுகட்டவாம்! இதே ‘விளையாட்டை’ கொழும்பிலிருந்து வரும் பொருட்களுக்குசெய்தார்களா? இல்லை , உதாரணமாக சோடா ஒன்றின் விலை யாழில் 10 சதம் திகம் (1975-77களில்) ஏனென்றால் போக்குவரத்துச் செலவு. ஆனால் சிமெந்து 5 ரூபா குறைவு! சிங்களவன் பறிச்சானோ இல்லையோ ஆனால் ஏனிந்த பாரபட்சம்.இதெல்லாம் எமக்கு தெரியாது என நினைக்கிறீர்களா????

    //….ENDLF பேய்தத்தனமாக தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு தமிழ் மக்களின் வளங்களைச் சிங்களவன் அள்ளிச் செல்கிறான் என்ற பாங்கில் பேசுகிறது. சிங்களவனுக்கு என்ன இனாமாகவா வழங்கப்பட்டது? …//

    மேலே உள்ள கருத்தை மீண்டும் வாசிக்கவும். இது ஒரு உதாரணம் தான்

    /// …சந்தை நிலமைகளே அரசியலை நிர்ணயிப்பனவே ஒழிய தமிழ்தேசிய வாதிகளின் பகற் கனவுகளல்ல….//

    சோசலிசமோ புரட்சிநீதிமன்றங்களோ அல்ல என்பதை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி!!!

    //….தமிழ் மக்களின் வடக்குக் கிழக்குப் பகுதிகளை விட தென்னிலங்கைச் சிங்களப் பகுதிகளின் பிரதேசங்கள் இயற்கை வளமும் விவசாய உற்பத்தியும் பலபத்துமடங்கு அதிகமானவை. வாசனைத் திரவியங்கள் உட்பட மாணிக்கக் கல், இரும்புத்தாது, எப்பாவெலை பொஸ்பேற், தெங்குப் பொருட்கள், தேயிலை, ரப்பர், கொக்கோ என்னும் பொருந்தொகை ஏற்றுமதிப் பொருட்கள் அங்கே விளைகின்றன.//

    ஆனாலும் இலங்கை பிச்சை எடுக்குது!6ம் வகுப்பு சமூகக்கல்வி பாடத்துக்கு பாடமாக்கினது மறக்காமல் ஞாபகம் வச்சிருக்கிறியள்!!!!

    //…யாழ் குடாநாடு ஆறுகளோ குளங்களோ இல்லாத வரண்ட வடலி, நாயுண்ணி, காண்டை, நாகாதாளி, தாழை, கள்ளி, காரை தப்பிப்பிழைக்கும் காடுகளாகும்….//

    சொந்த மண்ணையே எள்ளி நகையாடுபவர்களால் தான் யாழில் சோஸலிசம் கால்பதிக்க முடியவில்லை என்பதற்கு இது நல்ல உதாரணம். எப்போ பார்த்தாலும் எங்கேயொ இருக்கும் ரஷ்ய, சீன மண்ணை முத்தமிடுவார்கள். 1980இல் இலங்கை அரசால் வெளியிடப்பட்ட விவசாய உற்பத்தித்திறன் அறிக்கையில் யாழ் குடாவே அதி உயர் விளைதிறன் கொண்டதென்று இருந்தது!

    //… இலங்கையின் வீறார்ந்த சோஸலிச இயக்கமானது இந்த இனவாத் யுத்தத்தில் அமிலப்பாரிசோதனை செய்யப்பட்ட அனுபவச் செழுமையோடு புலிஅழிவின் சாம்பலில் இருந்து உதிக்கும்.///

    ஆஹா…ஆஹா!!!!

    //…சோஸலிசம் மட்டுமே இலங்கை மக்களின் இனவாதக் காயங்களை ஆற்றிச் சமூகப் பொருளாதார வாழ்வின் தேவைகளை நிறைவேற்றி இனக்கலப்பென்ற ஒரே ஒருவழிப்பாதையால் ஒட்டுமொத்த இலங்கை நாகரீகத்தை முன்னேற்றும்…///

    முன்னர் சந்தைதான் தீர்மானிக்கும் என்றீர்களே? (சந்தைப்பொருளாதாரம் = முதலாளித்துவம்)

    //… புலிப் பாசிசத்தின் வீழ்ச்சியின் பின்பு தமிழ் மக்கள் சிங்கள முஸ்லிம் மக்களோடு ஒன்று சேர்ந்து இலங்கை தழுவிய அரசியலுக்குச் செல்வார்கள். எவரெவர் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களின் ஐக்கியத்திற்காக கடந்த முப்பது வருட இடர்காலத்தில் எந்தவித ஊசலாட்டமும் இல்லாமல் போராடினார்களோ அவர்களையே வரலாறு தேடும். …///

    கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் இதைத்தான்1982 இலிருந்து கேட்கிறோம்!!!

    //… . உரிமையில் எள்ளவையும் எடுத்துவிட முடியவில்லை காரணம் என்ன? சோஷலிசம் வராத காரணத்தால் மத்த்திரம்தான் விடுதலை வரவில்லை. …///

    இவ்வளவு ஈஸியான விளக்கம் இருக்குதா?எந்த சோசலிசம் மொஸ்கோ சார்பா, சீனச்சார்பா, அல்லது ஜே.வீ.பி மாதிரியா?

    //…இலங்கையிலும் மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணை வளங்கள் ..//

    நான் அறிஞ்சு ஏ.ஈ.மனோகரனின் ‘இலங்கை என்பது நம்தாய்திருநாடு’ பொப்பாடலில்தான் எண்ணை வளம் இருந்தது

    //… 1979ல் இயற்கை அழிவை அடுத்தே ஈரானிய மக்கள் சர்வாதிகாரி ஷாவைத் தூக்கியெறிந்தார்கள். ..//

    ஷாவின் அமெரிக்க சார்பு நிலையே அதைச் செய்ய தம்மைத்தூண்டியதாக ஈரானிய நண்பர்கள் சொன்னார்கள். எவருமே இயற்கை அழிவு பற்றி கூறவே இல்லையே. ஒருவேளை உங்களுக்கு விசேடமாகத் தெரிந்துள்ளதோ? அவ்வாறாயின் 2000களில் மிகப் பெரிய இயற்கை அழிவு ஒன்று வந்ததே. உங்கள் லொஜிக் படி அரசைத்தூக்கி எறிந்திருக்க வேண்டுமே?

    //…. அதன்பிறகு விடுதலை அடைந்த தேசங்கள் சோஷலிசப் பாதையில் மாத்திரம்தான் விடுதலை அடைந்தன. ..//

    எங்கே அந்த நாடுகள்? இன்று அவை எந்த பாதையில் போகின்றன? ஏன் அவ்வாறு பாதை மாறின?

    //..பண்டப் பரிவர்த்தனை என்ற பட்டுநூலால் பூகோளமானது கூட்டுப்புளுவைப் போல வினாடிக்குப் பில்லியன் முறை சுற்றப் படுகிறது. பங்குச் சந்தையானது செக்கனுக்குச் செக்கன் வோல்ஸ்றீரிலிருந்து ரோக்கியோவுக்கும் ரோக்கியோவிலிருந்து ஹொங்கொங்கிற்கும் ஹொங்கிலிருந்து லண்டனுக்கும் இலத்திரன் வேகத்தில் ஓடித்திரிகிறது. ..//

    இதில சோசலிசம் எங்கினேக்க வருகுது

    //…இந்த உலகம் பரந்த சிந்தனைக்குள் தமிழ்மக்கள் புகுவதைத் தவிர வேறு ஒன்றும் விடுதலை என்பதை அர்த்தப்படுத்தாது. உலக பொருளாதாரமானது உலகமேடையில் உலகமனிதனால் மாத்திரம் அணிவகுக்கப்படும். தேசிய மனிதனுக்கும் தேசப்பற்றாளனுக்கும் அங்கே வேலையில்லை. ..///

    என்னதான் சொல்லுறியள்? சோசலிசமா, சந்தையா, உலகமயமாதலா……

    //…. அந்த மட்டத்திற்கு சிங்களத்தொழிலாளர்கள் உணர்மையடைந்து பக்குவப்படவில்லையெனில் தொடர்ந்து இலங்கையில் அழிவு ஏற்படுவதைத் தடுக்க முடியாது. …//

    இதைத்தானே விடிய விடிய சொல்லுறாங்கள்.என்னதான் சோசலிசம்ம், மக்கள் போராட்டம் அது இது என்று கதை அளந்தாலும் கடைசியில சரியான இடத்தில வந்து நிக்க்கிறியள்.உதை முதலிலேயே ஒருவசனத்தில சொல்லி இடத்தையும் எங்கட நேரத்தையும் மிச்சப்படுத்டி இருக்கலாம்…..

    //..கொலைக்களத்தின் மூலைகளில் நின்று பங்கெடுத்த பெரும் பழியைச் சுமப்பவராகும்…//

    இது சித்தார்த்தனுக்கும் பொருந்துமோ அல்லது அவர் லண்ட்னில் இருந்ததனால் மன்னிப்போ?

    //..மக்கள் சேவை புரிந்தமைக்கான ஆவணங்கள் இன்னமும் சரியாகத்திரட்டப்படாமல் மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிவாகி ஜனநாயகச் சூழல்வரும்வரை காத்திருக்கின்றன…//

    ஏன் புலிப்பாசிச வன்னியில் இருப்பவர்கள்கூட ஈ.என்.டி.எல்.எஃ வன்னிக்கு வந்திடுமெண்டு பயப்படுகிறார்களோ?

    //…இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு எது எனத் தெரியாத, சர்வதேச அரசியல் போக்குகளின் மப்பு மந்தாரங்களை விளங்காத…///

    விளங்கின நீங்கள் எழுதின இந்தக்கட்டுரையை வாசிப்பவர்கள் ‘மப்பு மந்தாரம்’ வந்து விழப்போகினம்!!!

    //… இலங்கையின் உள்ளுரிலேயே அனாமதேயமாக இருக்கும் ENDLF இலங்கையில் அது மாபெரும் தமிழ் மக்கள் வெள்ளத்தைத் தனக்குப் பின்னே அணிகுவித்திருப்பதாயும் கொந்தளிக்கும் கடலை ஒத்த உறுப்பினர்களால் நிரம்பி வழிவதாயும் தோரணை காட்டுகிறது….//

    மொஸ்கோ, பீக்கிங் எல்லாம் அமெரிக்கா பின்னால் அணிவகுக்கும் போது மொஸ்கோ சார்பு, சீன சார்பு என்று கட்சி நடத்துவது போலத்தான் இதுவும்!!!

    ///….இந்திய உளவுத்துறை ஞானசேகரன்களை மட்டுமல்ல ஆனந்தசங்கரிகளையும் ஏனைய தமிழ் இயக்கங்களையும் படைத்து இயக்குவதுடன் நிதியும் வழங்குகின்றது….//

    என்ன இயக்கங்கள் என்று சொல்லுங்கோவன், சொல்லாமல் இருந்து பின்னர் விட்டு தமிழ்மக்களை எச்சரித்தேன் என்று சொல்லக்கூடடது

    //..ஒரே தேசத்தின் சகோதர மக்களான தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களின் ஐக்கியத்தைக் கோராதவர்கள், அதற்கான அரசியலுக்குப் போராடதவர்கள் தமிழ் சிங்கள மக்களின் உறவுகளை குற்றமாகக் கருதும் மனோநிலையை வந்தடைகிறார்கள். ///

    கோரவில்லை என இன்னும் தொண்டை கிழிய கத்துகிறீர்கள். எல்லா இயக்கங்களும் கத்திக்களைத்த வரலாறு அறியவில்லையோ???

    //… அதேபோல் துட்டகைமுனுவின் படையில் தமிழர்களும் சிங்களவர்களும் இருந்தனர். துட்டகைமுனுவின் படையில் கிழக்கைச் சேர்ந்த தமிழர்களும் சேர்ந்து போரிட்டனர் என்ற வரலாற்று ஆதாரம் ..///

    அமெரிக்க ஆக்கிரமிப்புப்படையில் ஈராக்கியரும் இஸ்ரேலியப்படையில் பாலஸ்தீன ‘ஒட்டுப்படை’ கூட்டமும் சேர்ந்து போரிடுகிறார்கள். இதையும் “இனஒற்றுமைக்கான” வரலாற்றுஆதாரம் என காட்டுங்கள். கருணா குழுவும் ஒரு நல்ல உதாரணம்!

    //…எல்லாளன் துட்டகைமுனு காலம் தமிழ் சிங்கள இனவாத உணர்வுகள் தோற்றம் பெற்றிராத இனக்குழுத் தன்மை வாய்ந்த சிறிய அரசியல் வடிவங்கள் நிலவிய காலமாகும

  5. ஆஹா. அருமையான தெளிவு. 80க்களில் ஓரளவேனும் ஜனநாயக சூழல் இயக்கங்களின் மத்தியில் இருந்தது உண்மை தானே. அந்தக் காலங்களில் இந்த வ.அழகலிங்கமும் அவரின்ட கருத்துகளும் எங்க போயிருந்தது? ஏன் இவரால் இந்த கருத்துக்களால் மக்களை வெல்ல முடியவில்லை? ஒருவேளை இந்த பிரச்சனைகளை பாவித்து எப்பிடி ஐரோப்பிய நாட்டில் தஞ்சம் கேட்டு ஓடித்தப்பி வளம் சேர்க்கலாமென்று தனது சிந்தனைகளை குறுக்கியிருந்தாரோ…? போராட்டம் விடுதலை என்று தங்கள் உயிரை மாய்த்த 1000 கணக்கானவர்களின் தற்கொலைகளை தவிர்க்க நாட்டிலிருந்து முயற்சிக்காமல் இப்ப இந்த வேதாந்தங்களை குளிர் உறையும் நாடொன்றில் இனஓடுக்கலில் பாதிக்கப்பட்டதாக கூறிப் பெறும் பிச்சைப்பணத்தில் வாழ்ந்துகொண்டு தான் சொல்லிப் பிழைக்க வேண்டுமா….? நண்பரே உங்கள் கருத்துக்களில் பொதிந்துள்ள உண்மைகளை மறுதலிக்க வரவில்லை. இந்திய இராணுவத்தின் கொடுமைகளின் அனுபவம் இன்னமும் பசுமையாகவே இருகின்கிறது. சோசலிஸம் சொன்ன ஈ.பி.ஆர்.எல்.எவ்.> வங்கம் தந்த பாடம் வெளியிட்ட புளொட்> இனமானம் சொன்ன டெலோ> ஈழவர் தத்துவம் ஈந்த ஈரோஸ்> எல்லாவற்றையும் புலிகள் தாகம் காவுகொள்ளும்போது எங்கள் சமூகம் விலகிநின்று வேடிக்கை பார்த்தது. இதில் நீங்கள் ஐரோப்பாவில் நின்று மெளனம் காத்தீர்கள். விடுதலையை வீரமறவர்கள் பெற்றுத்தருவார்கள் என்று> நான் உட்பட> இறுமாந்திருந்தோம். விடுதலையின் பெயரால் நடாத்தப்பட்ட அத்தனை கொலைகளையும் மரணதண்டனைகளாக அங்கீகரித்தோம். தவறிவிட்டோம். இன்னமும் காலம் கடந்துவிடவில்லை.இன்னும் சில ஆயிரம் உயிர்களாவது காப்பாற்றப்பட வேண்டும். வாருங்கள் தோழரே போராடுவோம். முகமூடித்திருடர்களை அம்பலப்படுத்துவோம். 150கோடி ரூபாய்களுக்கு தமிழர்களின் அடிப்படை உரிமைகளை மஹிந்தவுக்கு விற்ற புலிகள்> ஒரு மந்திரி பதவிக்கு அப்பாவி உயிர்களை பணயம் வைக்கும் ஈ.பி.டி.பி.> வுவுனியாவில் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட புளொட்> கிழக்கு மாகாண முதலமைச்சராக கருணா குழு….இதுபோதாதென்று மண்ணில் கால்வைத்து நிற்கமுடியாமல் இந்தியாவிற்கு சாமரம் வீசும் கத்துக்குட்டி பரந்தன் ராசன்… எல்லோரையும் துகிலுரிவோம். மக்கள் தான் மகத்தான சக்தி என நிறுவுவோம்… புரட்சி தவறல்ல.. புரட்சிக்காக கூறப்படும் காரணங்கள் பொய்யாகும்போது தான் புரட்சி ஓருபொழுதில் எதிர்ப்புரட்சிக்கு வழிவகுத்து நிற்கிறது என்பதை நிறுவுவோம்….

  6. தமிழரசன் அன்ட் அழகலிங்கம் ஐயா!
    வேஸ்ற்.
    ஒரு உப்புச்ப்பிலாத இயக்கத்துக்கும்> ஆக்களக்கும் உத்தினபக்க விமா;சனம் தேவையா? குழந்தைப்பிள்ளயள்மாதிரி மல்லுக்க நிக்கிறியள்.
    வங்கம் தந்த பாடம் மாதிரி இன்னொண்ட திரம்பத்திரும்ப எழுதுங்கோ பரவாயில்லை. ராமராயன்> ஞானசேகரன் போன்றவா;களுக்கு ஏன் உவவளவு பொpய விம்பம் குடுக்கிறியள்.
    இப்ப உங்கள் சந்தேகம் வருகுது…

  7. வணக்கம்

    திரு அழகலிங்கம் அவர்களின் பதிவு காலத்தின் கட்டாய தேவை.புலம்பெயர் மண்ணில் மானுட விடியலை தேடும் ஒரு சில அப்பாவிகளை ஏமாற்றி தனது இயக்கத்திற்கும் தனது எஜமானர்களுக்கும் ஆதரவாக வானொலி நடத்தும் ஒருவரை அம்பல்ப்படுத்துவது காலத்தின் தேவை .தம்மை ஜனநாயகவாதிகளாக அறிவித்துக் கொள்ளும் இந்த புண்ணியவான்களால் ஏழைத் தமிழர்களிடம் இருந்து சுருட்டப்பட்ட பணத்தை பற்றி எவராவது கேட்டால் என்ன ? ஜனநாயகம் பற்றி அடிக்கடி அறிக்கை வெளியிடும் ஜெமினி அன்ட் கோவின் தேனி ராமராசனிடம் பணத்தை பறிகொடுத்து விட்டு இன்று வரை அதனை பெறமுடியாமல் தவிக்கும் அப்பாவிகளுக்காக ஒரு கட்டுரையாவது வெளியிடுமா ? மனித உரிமைகள் குறித்து பக்கம் பக்கமாக கட்டுரை எழுதும் சிவலிங்கம் எல்லாம் அறிந்தும் அவை பற்றி கதைக்க மறுப்பது தான் அவரின் மனித உரிமை போலும்.தமக்கேற்றாற் போல் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ள தெரிந்தவன் தான் ஜனநாயவாதி என்ற புதிய தத்துவத்தை ரிபிசியும் அதன் ஆய்வாளர்களும் புலம்பெயரந்து வாழும் எங்கள் மீது திணிக்க முற்படுகின்றார்களா ?இவை பற்றியும் ரிபிசியின் ஜனநாயக மறுப்பு மற்றும் அதன் மறு பக்கம் குறித்தும் விரிவான ஆராய்வுகள் தேவை.இல்லாவிட்டால் இலங்கையில் புலிகள் போல் அய்ரோப்பாவில் தமிழர்களை விழுங்கி ஏப்பம் விடும் வெளிநாட்டு புலிகளாக இந்த கூட்டம் வளாச்சி பெற்றுவிடும்.

  8. பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். அதி:60 குறள்:599

    பருமனும் கூரிய கொம்பும் இருந்தும் புலி தாக்கினால் யானையும் அஞ்சுமே.

  9. ரி.பி.சி மீது தவறு இல்லை என்று கூற முடியாது
    அல்லது ஈ.என்.டி.எல்.எவ் தவறு இல்லை என்று கூற முடியாது
    அவர்கள் இந்தியாவை அழைத்ததும் தவறு இல்லை என்று கூற முடியாது!
    இதை எல்லாம் தவறு என்று கூறுபவர்கள்
    சரியானதையும் கூற வேண்டும்! கூறினால் அவர்கள் கூறும் தவறுகள் குறித்து ஆராயலாம்

  10. TBC- இராமராஐன். ENDLF போல ஐரோப்பாவில் இலக்கியபேச்சுக்காறர் தன்னார்வக்குழுக்காரர்கள் பற்றியும் எழுதபட கட்டாயம் இருக்குது இலக்கியச்சந்திப்பின் சில நைநாமாரும் சத்தியக்கடதாசியில் தெரியாதபடிக்கு எழுதுகினம். குயிலை காகம் என்று விளப்பம் தரிகினமாக்கும் ஊர்குருவியின் பருந்துபோல எட்டஉயரம் பறக்கபாக்கினம். பேசுபொருளைபேசாமல் எழுதியவரை ஆக்கினை பண்ணுகினம் இவை ஒண்டையும் ஒப்பேற்றமாட்டினம் கண்டியலோ. கற்கண்டன்.

  11. ஐயோ தமிழரசனும் அழகலிங்கமும் ரகு எண்ட பொடியனையும் போட்டு குழப்பு குழப்பெண்டு குழப்பிப்போட்டாங்கள். மஞ்சள் சிவப்பு எண்டு மாறிமாறிமாறி போட்டாலும் கடைசீரல ஆர்தான் என்னத்த சொல்லிறாங்கள் எண்டு ஒண்டும் விளங்குதில்ல

  12. கலர் கலராய் கலக்குறீங்களே ரகு!
    பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்களுமுண்டு
    குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவர்களுமுண்டு
    இதில் நீங்கள் எந்த இனமென்று உங்களுக்கே தெரியும்!

  13. உங்கட விளக்கங்களும் வியாக்கியானங்களும் பொழுதுபோகாதவைக்கு சுவாரசியம் தரலாம். இங்க கேட்கிற செல் சத்தம் உங்களுக்கு கேட்க எந்த ஞாயமுமில்லை. உண்மை.. இப்ப கூட இணையத்திற்கு வந்து கருத்து சொல்ல இங்கயிருந்து முடியுதேயெண்டு ஒரு சின்ன மனநிறைவு. அழகலஜங்கம் ஐயா> உங்கட கம்பர்மலை சனம் படும்பாடு(அதுக்கு மேலாக சொன்னால் உங்க இனத்தை சேர்ந்த நாங்க) உங்களுக்கு விளங்க வேணும் ஐயா. ரி.பி.சி. யில தேனியில உங்களை கழற்றி போட்டாங்கள். சோபாசக்தி இடம் தாறாரார். உங்கட பண்டித்துவத்தை விளாசுங்க.. ஞானி பெயர் மாறி தமிழரசன் ஆகிட்டார். வாழ்க இணைய தளங்கள். தயவுசெய்து ஒன்றை மட்டும் நம்புங்கள். களத்திலிருந்து மட்டுமே வரலாறுகளை திசைப்படுத்தலாம். இங்க கருத்த சொல்லுற இரையாகரன் முதல் இரகு வரை எல்லாரும் மக்களிடமிருந்து விலகி விட்டினம் எண்ட கவலை எனக்குள் இருக்கு. என்.எல.எவ்.ரி. கருத்தியல் சரியாக இருக்கலாம் நண்பர் இரையாகரன். நடைமுறையில் வாழ்வியலை மறுதலிக்கும் எந்த கருத்தியலும் ஏட்டுக்கு மட்டுமே. இன்னமும் மக்கள் பற்றிய சிந்தனையிலிருந்து மாறாமல் முயல்கிறீர்கள் என்பது மட்டுமே தொடரவேண்டும் என்ற தூண்டுதலை தருகிறது. எங்கிருந்தாலும் பரவாயில்லை. நியாயங்கள் பிறக்க போராடுங்கள். சில கசப்புக்கள் தரலாம். சில தெளிவுகளை தேடலாம். நியாயங்களை தேடுவோம். ஓயாமல் போராடுவோம். நியாயங்கள் பிறக்கட்டும். தவறுகள் உணரப்படட்டும்.

  14. //…இதில் நீங்கள் எந்த இனமென்று உங்களுக்கே தெரியும்!…///

    முகுந்தன்,

    நிச்சயமாகத் தெரியும்!

    எவ்வாறு என்கிறீர்களா?

    1)காலை எழுந்தவுடன் நேற்றுப்பகலோ இரவோ புலி செய்தவற்றை எவ்வாறு பிழை கூறி இன்றைய பொழுதை கழிக்கலாம்
    2) அப்படி ‘தேடிய’ பிழைகளை எவ்வாறு தமக்கு சார்பாக ‘பாசறை’ , ‘அரசியல் வகுப்பு’ நடாத்தி ஆட்களைச் சேர்க்கலாம்
    3) ஆனால் அப் ‘பிழை’ களை தாமே செய்யவேண்டி வரும்போது எவ்வாறு ரஷ்ய, சீன (மொஸ்கோ சார்பு, சீனசார்பு சோசலிசம்!!) பிரச்சார ஏடுகள், பிரச்சார இலக்கியங்களில் காரணம் தேடி ‘நியாய’ ப்படுத்தலாம்
    (உ:ம் – புலி வங்கியை கொள்ளை அடித்தால் அது மக்கள் பணம் ஆனால் ‘பின் தளத்தில்’ இருந்து பணம் வராது போனதும் வேறு வழி இலாமல் சங்கக்கடை, தபால் கந்தோரை கொள்ளை அடித்துவிட்டு கிறிஸ்துவுக்கு முன் 1843 இல் ரஷ்ய சோஸலிசவாதி நிக்கலோயோவ் அதை நியாயப்படுதுகிறார் என்று கதை விடுவது)
    4) அல்லது புலி செய்யும் போது மக்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை என்றும் தாம் செய்யும்போது போராட்டம் முதிர்வடைந்துவிட்டது, மக்கள் மயப்படுத்தப்பட்டு விட்டது என்றோ மக்கள் அரசியல் ஞானம் பெற்று விட்டனர் என்றோ புலுடா விடுவது
    5) ‘பின் தளத்தில்’ நடக்கும் உட்சதி களுக்கெல்லாம் ‘ஏகாதிபத்தியம்’ ,’சியோனிஸம்’ காரணம் என்பது

    என நீளும் லிஸ்ற்றுடன் நாட்களைக் கடத்திய கூட்டத்துடன் திரிந்தவன் நான்.
    அதனால் எனக்கும் அவ்வாறான ‘குணம்’ இருப்பது இயல்புதானே?
    என்ன செய்வது முகுந்தன், ஐந்தில் வளைந்து விட்டேன் இப்போ ஐம்பதில் நேராக கடினமாகத்தான் இருக்கிறது.
    எனினும் முயற்சிக்கிறேன்!!
    நன்றி !!!

  15. யாருக்கோ அடிச்சுப்போட்டுது.சத்தியக்கடதாசியில் இருந்து ஓடிவிடுவதே வழி.ஆளை விடுங்கோ.

  16. “கல்த் தூண் பிளந்திடுவதல்லால் வளைந்து நெளியுமோ தான்”. கொண்ட கொள்கையில் தெளிவிருந்தால் யாருக்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும் வளையவோ குனியவோ தேவையில்லை. 5 லயே வளைஞ்சு போட்டமெண்டு 50 திலும் வளையதானே வேணும் எண்டா சுருட்டி கட்டிக் கொண்டு குப்புற படுக்கிறது தான் முதலுக்கு நஸ்டம் தேடாம இருக்க வழி. வளைஞ்சாலும் குனிஞ்சாலும் வாய்ப்பை தேடுவோம். மாறிப்பிடிக்க சந்தர்ப்பம் நிச்சயமா இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *