தன்னைத் தானே தகனம் செய்யுமாறு கட்டளையிடுவது அநீதி – லெ.முருகபூபதி

இலங்கையில், நீர்கொழும்பு என்ற சிறுநகரத்தில் 1951ல் பிறந்த லெ.முருகபூபதி 1972ல் ‘மல்லிகை’ இதழில் வெளியான சிறுகதை மூலமாக இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். 1977ல் வீரகேசரிப் பத்திரிகையில் பணிபுரியத் தொடங்கிய முருகபூபதி, நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும், இ.மு.எ.சவின் கொழும்புக் கிளையின் செயலாளராகவும் செயற்பட்டவர். 1975ல் வெளியான ‘சுமையின் பங்காளிகள்’ என்ற இவரின் முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது. 2003ல் ‘பறவைகள்’ நாவலுக்காக முருகபூபதிக்கு […]

Continue Reading

ம.க.இ.க மருதையனுக்கு ஒரு மனு

பெறுநர்: மருதையன் அவர்கள் மாநிலப் பொதுச் செயலாளர் மக்கள் கலை இலக்கியக் கழகம் தமிழ்நாடு அனுப்புனர்: ஷோபாசக்தி 25, Rue D’ Enghien 93600 Aulnay Sous Bois பிரான்சு. அய்யா, தற்போது இணையத்தளங்களில் நிகழ்ந்துகொண்டிருக்கும் DAN தொலைக்காட்சி அதிபர் குகநாதன் x அருள் சகோதரர்கள் குறித்த விவாதங்களில் மக்கள் கலை இலக்கியக் கழகம் தலையீடு செய்து ஒரு பகிரங்க விசாரணையைக் கோரி ‘வினவு’ இணையத்தளத்தில் முன்வைத்த கருத்துகளில் நான்கு புள்ளிகள் மிகமிக முக்கியமானவை என்றே நான் […]

Continue Reading

புலி ஆதரவாளர்கள் தம்மை சுய பரிசோதனை செய்ய வேண்டும்

-ஆளூர் ஷாநவாஸ் அ.மார்க்ஸ், தமது இலங்கைப் பயண அனுபவங்களைப் பற்றி பேசுகின்ற போது, அங்கே தாம் கண்ட அவலங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தி வருகின்றார்.தமிழர்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாத அரசின் பயங்கரவாத செயல்களை அவர் அதிகம் அதிகம் பதிவு செய்துள்ளார். மலையகத் தமிழர்களின் நிலையைப் பற்றி பேசி உள்ளார் . தமிழ் முஸ்லிம்களின் அவலங்களைப் பதிவு செய்துள்ளார். ஒரு வரலாற்று ஆய்வாளர் என்ற முறையிலும்,அரசியல் விமர்சகர் என்ற வகையிலும் அங்கே தான் கண்ட அனைத்தையும் தன் பார்வையில் எடுத்துரைக்கிறார்.தமிழர்களின் […]

Continue Reading

இதற்கு மேல் பின்னொரு நாளில் பேசுவேன் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கடந்த நாற்பது வருடங்களிற்கு மேலாகத் தனது எழுத்துகளாலும் அரசியற் செயற்பாடுகளினாலும் ஈழச் சமூகத்திலும் அனைத்துலகத் தமிழ் இலக்கியப்பரப்பிலும் தனது குரலை ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு அறிமுகம் தேவையற்றது. எனினும் இளைய வாசகர்களிற்காகச் சில குறிப்புகள்: 1944ல் ஈழத்தின் உடுவில் கிராமத்தில் பிறந்தவர் ஜெயபாலன். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பல்வேறு துறைகளிலும் பங்களிப்புச் செய்தவர். மரபு அளித்த கொடையாக சந்தங்களாலும் ஓசைநயத்தாலும் நவீன கவிதையை எழுதிய ஈழத்தின் முதன்மையான கவிஞன். 1984ல் ‘ தேசிய இனப் பிரச்சினையும் […]

Continue Reading

ஈழத்து மக்களும் அவர்களது கனவுமே எனது ஆதர்சம் – தீபச்செல்வன்

கிளிநொச்சி, இரத்தினபுரத்தில் பிறந்த தீபச்செல்வன் கவிதை, பத்தி எழுத்து, ஆவணப்படம், திறனாய்வு, ஊடகவியல் எனப் பல்துறைகளில் இயங்கிக்கொண்டிருப்பவர். ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ (காலச்சுவடு 2008), ‘ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்’ (உயிர்மை 2009), ‘பாழ் நகரத்தின் பொழுது’ (காலச்சுவடு 2010) ஆகிய நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. போரைக் குறித்தும் போரின் வடுவைக் குறித்தும் அலைந்து திரியும் ஏதிலி வாழ்வு குறித்தும் தொடர்ச்சியாக எழுதிவரும் தீபச்செல்வன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டவர். ‘தீபம்’ என்ற […]

Continue Reading

இலக்கியவாதிக்கு கூர்மையான அரசியல் உணர்வு தேவை – ம. நவீன்

மலேசியத் தமிழ் இலக்கியப் பரப்பில் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் இளைஞர்களின் அடையாளம் ம. நவீன். கவிதை, சிறுகதை, நாவல், பத்தி எழுத்து என இடையறாது எழுதிக்கொண்டிருக்கும் நவீன் ‘வல்லினம்’ (vallinam.com.my) இணைய இதழின் ஆசிரியராகவும் ‘முக‌வ‌ரி’ எனும் மாத‌த்திற்கு இரு முறை வெளிவ‌ரும் இத‌ழின் ஆசிரியராகவுமிருக்கிறார். ‘வல்லினம்’ பதிப்பகத்தின்  மூலம் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த‌ ஆண்டுத் தொட‌க்க‌த்தில் சிலாங்கூர் மாநில‌ அர‌சால் வழங்கப்ப‌ட்ட‌ தமிழ் மொழிக்கான ‘இள‌ம் க‌விஞ‌ர் விருது’  நவீனுக்குக் கிடைத்த‌து. […]

Continue Reading