பா.செயப்பிரகாசத்துக்கு மறுப்பு
1980களில் ஈழப்போராளிகள் தமிழகத்தை ‘பின்தளம்’ என்றே குறிப்பிடுவார்கள். ஈழப்போராட்டத்தில் தமிழக மக்களுடைய வகிபாகம் அளப்பெரிது. தமிழகத்துக் கட்சித் தலைவர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், இயக்கப் போராளிகள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், வெகுசனங்கள் எனப் பல தளங்களிலிருந்தும் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவு கிடைத்தது. ஈழப்போராட்டத்தில் அடுத்தடுத்து கசப்பான சம்பவங்களும் வரலாற்றுத் தவறுகளும் இழைக்கப்பட்டபோதும் இன்றுவரை ஈழத் தமிழ் மக்களுக்காகத் தமிழகம் வலுவான குரலை ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஈழப்பிரச்சினையை மிகவும் பொறுப்புடனும் உணர்வுபூர்வமாகவும் தியாகங்களுடனும் அணுகுபவர்களைப் போலவே ஈழப்போராட்டத்தையும் ஈழத்தமிழர்களின் இன்னலையும் பிழைப்புவாதமாகவும் மலிவான அரசியல் […]
Continue Reading