தலித் மாநாடு : கேள்விகள் எழுப்பும் அதிர்வலைகள்

கட்டுரைகள்

-புதியமாதவி

ரோப்பாவில் பாரீஸ் மாநகரில் அக்டோபர் மாதம் 20, 21 (2007)களில் நடந்த தலித் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. இதுவரை திறக்கப்படாமலிருந்த பல கதவுகள் தானே திறந்து கொண்டன. 3000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருக்கும் மக்கள் விரக்தியில் சில கேள்விகளை முன்வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர முடிந்தது.

தமிழினம், தமிழ்த் தேசியம், தமிழன்… இதெல்லாம் எங்களுக்காக என்ன செய்துவிட்டது? நாங்களும் தமிழர்கள் தான் என்றால் எங்களை நாயை விட கீழாக நீங்கள் நடத்தியது/நடத்துவது ஏன்? தமிழ் தமிழ் என்று கதைக்கும் நீங்கள் எங்களைத் தமிழ் படிக்க விட்டீர்களா? உங்கள் தமிழ்த் தேசியத்தில் எங்களுக்கான இடம் எங்கே இருக்கிறது?இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் வெறும் அரசியல் சட்டங்களினாலும் சட்டமனற மசோதாக்களாலும் நிறைவேற்றப்பட்டு ஏட்டில் இருக்க வேண்டியவை மட்டுமல்ல. சமூக விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் அரசியல் விடுதலையே விடுதலைக்கான பாதையாக இருக்க முடியும் என்பதை சற்று உரத்தக் குரலில் பதிவு செய்த மாநாடு இது.

இந்த மாநாட்டிற்கு போகும் முன்பே சூலை 2007, தலித் முரசு இதழில் சி. ஜெய்சங்கர் அவர்களின் நேர்க்காணல் வாசித்திருந்தேன். அதில் ஈழத்தில் நிலவும் சாதியம் பற்றிய நிலவரத்தை ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. (மூன்றாவது கண், தேர்ட் அய் என்று தமிழ், ஆங்கில இதழ்கள் நடத்துபவர். தோழமை ஓவியர் வாசுகியின் கணவர்) போர்ச்சுழல் காரணமாக சாதிய வன்கொடுமைகள் குறைந்திருக்கிறது என்று வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் ஜாதி ஒழிந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. மறைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். உதாரணமாக ராணுவம் குண்டு வீசப் போகிறதென்றால் மக்கள் முதலில் போய் தஞ்சமடையும் இடம் அருகிலிருக்கிற கோயில்தான். உயிர் பிழைக்க ஒடிக் கோயிலில் தஞ்சம் புகும்போது கூட சாதிப்படிநிலை வெளிப்படும். பார்ப்பனர்கள் கோயிலின் கர்ப்பகிரகத்திலும் ஊரில் முன்னேறிய சாதியினர் அதற்கடுத்த பிரகாரத்திலும் இருப்பார்கள். கோயிலின் வெளியே உள்ள மரத்தடிக் கடைகள் நிறுத்துகின்ற கொட்டகைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தஞ்சமடைவார்கள்” என்று சொல்லியிருந்தார்.இந்தளவு புரிதல்களுடன் தலித் மாநாட்டில் கலந்து கொண்டேன்.

எழுத்தாளர் அருந்ததி அவர்கள் ‘புத்தூரில் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் புத்தகத்தைப் பறித்துக் கிழித்தார்கள், அதுவும் இதுவும் ஒன்றுதான்’ என்று யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது டானியல் சொன்னதை மேற்கோளாக சொன்னார். இந்த மாதிரியான எதிர்மறுப்பு எதில் கொண்டு போய் முடியும்? இரண்டுமே வரலாற்றின் கறைகள். கறைகளை கறைகளால் மட்டுமே கழுவ முடியும் என்பது எந்தக் கறைகளையும் நீக்குவதற்கான தீர்வாகிவிட முடியாது என்று எண்ணிக் கொண்டேன்.

இசுலாமியர்களிடம் சாதியம் இருப்பதை எழுத்தாளர் ஹெச்.ஜி.ரசூல் தன் எழுத்துகளில் பதிவு செய்திருப்பதையும் அதற்காக தக்கலை ஜமாத் ஹெச்.ஜி.ரசூலை எதிரியாக்கி தீர்ப்புரைத்திருப்பதையும் என்னுரையில் குறிப்பிட்டேன். தமிழகத்தில் ஜமாத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பல எழுத்தாளர்கள் குரல் கொடுத்திருப்பதைச் சொல்ல வரும் நோக்கத்தில் அப்போது நினைவில் வந்த “ரசூலில் தலையை வெட்டிவிடலாம். ஆனால் அவர் எழுப்பியிருக்கும் கேள்விகளை என்ன செய்யப்போகிறீர்கள்?” என்ற கவிஞர் இன்குலாப்பின் கூற்றை எடுத்துரைத்தேன்.இலண்டனிலிருந்து வந்திருந்த வழக்கறிஞர் பசீர் அவர்கள் கலந்துரையாடலில் சொன்ன மறுமொழியில் ‘இன்குலாப் புலி ஆதரவாளர்..’ என்றார். பசீரின் இந்த மாதிரியான மறுமொழி என்னைக் கொஞ்சம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது உண்மை. இன்குலாப் புலி ஆதரவாளாரா.. இல்லையா ? என்பதல்ல இங்கே கேள்வி. அவர் சொன்ன கருத்து மட்டுமே. இன்குலாப் புலி ஆதரவாளராக இருப்பதால் மட்டுமே அவர் சொல்வதை நம்பகத்தன்மையுடன் ஏற்க மறுப்பது என்ன மாதிரியான புரிதல்?

ரயாகரன் குறுக்கிட்டு இசுலாமியர்களிடமும் சாதியம் இருப்பதைத் தன்னால் நிரூபிக்க முடியும் என்றும் என்னுடைய கூற்றை பசீர் ஓர் இசுலாமியராக மட்டுமே தன் வட்டத்துக்குள் நின்று கொண்டு மட்டுமே பார்ப்பதையும் சுட்டிக் காட்டினார். தமிழ் முஸ்லீம் சமூகத்தில் சாதிப் பிரிவினைகள் நிலவுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. நாவிதர், மரைக்காயர், வெள்ளாட்டிகள் என்ற பிரிவுகளில் நாவிதர்கள் மற்றவர்களால் இழிவாகவே நடத்தப்படுகிறார்கள். மரைக்காயர் போன்ற உயர் பிரிவினர் திருமண உறவுகளை நெருங்கிய சொந்தத்திற்குள்ளேயே வைத்துக் கொள்கின்றனர்.தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தமடை முஸ்லீம்களுக்கும் மேலப்பாளையம் முஸ்லீம்களுக்கும் இடையே திருமண உறவுகள் கிடையாது என்பதை நானறிவேன். அதுமட்டுமல்ல, புதிதாக இசுலாத்திற்கு மதமாறி வரும் தலித்துகளை இவர்கள் சரிசமமாக நடத்துகிறார்களா என்றால் சில ஊர்களில் புதிதாக மதம் மாறியவர்கள் எதையாவது முறையிடும்போது ‘அட..மொறையப் பத்தி எல்லாம் பறையங்க கிட்டேப் பேசணுமோ?” என்று பெரியதனக்காரர்கள் சொல்லியும் இருக்கிறார்கள். இத்துடன் இன்னொரு செய்தியையும் சேர்த்தே சொல்லியாக வேண்டும். ‘மனுசங்க’ இதழின் ஆசிரியர் குழுவிலிருந்த இராசேந்திரன் என்ற இளந்துறவி இசுலாத்தைத் தழுவிய பின் கும்பகோணம் அருகிலுள்ள தன் கிராமத்தில் இசுலாமியத் தெருவிலேயே குடியிருக்கிறார். அங்குள்ள ஜமாத்திற்கு அவரைத் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார்கள். எனவே ஒப்பீட்டளவில் பார்க்கும்போது சாதியை வென்ற மதமாக இசுலாம் மட்டுமே உள்ளது.

கக்கூசு இல்லாத கலாச்சாரம் உள்ளவன் தமிழன்! இவன் பெருமைப் பேசிக் கொள்ள என்ன இருக்கிறது? என்ற கேள்வியை முன்வைத்து கரவொலியை எழுப்பினார் கீரன். அந்த நேரத்தில் அவர் கேள்விக்கு ஓங்கி கரவொலி எழுப்பியது நானும் தான். நேரம் போகப் போக இந்தக் கேள்வி பல்வேறு தளங்களுக்கு இட்டுச் சென்றது.கக்கூசு கட்டிய பிறகுதானே அதைச் சுத்தம் செய்ய ஒருவன் இந்த சமூகத்திற்கு தேவைப்பட்டான்? மனிதர் கழிவை மனிதர் அள்ளும் கொடுமைக்கு இந்தக் கலாச்சாரம் தானே வித்திட்டது? தமிழன் இந்த அடிமைத்தனத்தை மனிதச் சாதியில் ஏற்படுத்தவில்லை, தமிழ்நாட்டில், தமிழ்ச் சமூகத்தில் இந்த இழிநிலை இருந்ததில்லை என்பதற்காக உண்மையில் பெருமைப்பட வேண்டும்!தமிழர்கள் வாழ்விடங்கள் (இன்றைய அகதிகளான புலம்பெயர்வு அல்ல) பெரும்பாலும் சூடான வெட்ட நிலை பிரதேசங்களாகவே உள்ளன. எனவே காடு கரையில் வெளியில் ஒதுங்குவது இயல்பாக இருந்தது. பேச்சு வழக்கில் இதை “வெளியில் போய்ட்டு வருவதாகவே இன்றும் சொல்வதைக் கேட்கலாம். வெட்பநிலையில் கழிவு காய்ந்து மண்ணுடன் மண்ணாக விரைவில் கலந்து விடுவதால் இது மிகப்பெரிய சூழலியல் விசயமாக தமிழர் மண்ணில் இருந்திருக்கும் வாய்ப்புகளில்லை.தமிழர் வரலாற்றில் விஜயநகரப் பேரரசு காலத்தில் தான் கழிவறைகளை (வெறும் நான்குச் சுவர்கள் கொண்ட மறைவிடம்) சுத்தம் செய்வதற்கு சிலரைக் குடியேற்றம் செய்ததாக அறிகிறோம். ஐரோப்பா போன்ற குளிர்ப்பிரதேசங்களிலும், மத்திய ஆசியாவிலும் கழிவுகள் மிகப் பெரிய பிரச்சனையாகத் தான் அந்தச் சமூகங்களுக்கு இருந்திருக்க வேண்டும்.

தலித்துகள் அல்லாதவர்களும் கலந்து கொண்டு நம்மிடம் இப்போது சாதியம் இருக்கிறதா என்று அசட்டுத்தனமாக கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதை விமர்சித்த எழுத்தாளர் ஷோபாசக்தி ‘அடுத்த மாநாட்டில் தலித்துகள் மட்டுமே அழைக்கப்பட வேண்டும், தலித்துகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்’ என்று கொஞ்சம் சூடாகக் கலந்துரையாடலில் சொன்னதும் ‘நானும் தலித் தான்’ என்று பசீர் சொன்னதும் ஈழ தமிழ்த் தேசியத்தில் இசுலாமியர்களுக்கான இடம் குறித்த அச்சத்தில் பசீர் போன்றவர்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள வைத்தது.

அசுரா சிந்துவெளி நாகரிகத்தைச் சுற்றி தன் கட்டுரையை நகர்த்திச் சென்றார். நான்கு வேதங்களும் பல நூறாண்டுகள் வாய்மொழியாக வந்து அதன் பிந்தான் எழுத்துரு பெற்றன சிந்து வெளி நாகரிகத்தை ஆய்ந்து அவர்கள் திராவிடர்கள் என்றும் அவர்களின் மொழி திராவிட மொழியான தமிழ் மொழியின் ஆதிவடிவம் என்பதையும் பல்வேறு அறிஞர்கள் ஆராய்ந்து முடிவு செய்துள்ளார்கள். குறிப்பாக டாக்டர் நா.மகாலிங்கம், முனைவர் மதிவாணன் போன்ற அகழ்வாய்வு அறிஞர்களின் கருத்துகளைச் சொல்லலாம்.சிந்துவெளி நாகரிகத்தை ஒத்த தடயங்களும் முத்திரைகளும் எழுத்துருவங்களும் இலங்கையில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு அருகில் நடந்த அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவரும் வந்தேறிகள் அல்லர், அவர்களில் பலர் காலம் காலமாய் இலங்கை மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதை மிகவும் வலுவாக முன்வைக்கும் அகழ்வாய்வு கண்டுபிடிப்பு இது.சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்பது குறித்து பல்வேறு வரலாற்று பார்வைகள் உண்டு. அசுராவின் கட்டுரை இவைகளுக்குள் புகவில்லை எனினும் ஓர் ஆய்வு மனப்பான்மையுடன் வித்தியாசமான பார்வையில் அமைந்திருந்தது.

சாதிகள் இடையில் வந்தவை தான், சாதிகளில்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றால் 3000 ஆண்டுகளுக்கு மேலாக சாதிக் காப்பாற்றிக்கொண்டு வரும் சமுதாயத்தை எப்படி மாற்றப் போகிறோம்? என்ற கேள்விக்கு காலம் எழுதும் எல்லா பதில்களும் குறைபாடுகள் கொண்டதாகவே உள்ளன. அதுவும் இந்திய-இலங்கை மண்ணில் சாதியம், சாதி அடுக்குமானங்கள், சாதிகளுக்குள் நிலவும் உட்சாதிகள், எல்லா சாதிகளுக்கும் தன்தன் வக்கிரத்தைக் காட்ட அவனை விட கீழ்ப்படிநிலையில் ஒருவன் என்ற படிநிலை அமைப்பு- ஏன் தலித்துகளுக்குள்ளும் வாழும் தலித்துகள்… நினைத்துப் பார்த்தால் இப்படியான ஒரு படிநிலை சமுதாய அமைப்பு முறை உலகில் வேறு எங்குமிருக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

டொமினிக் ஜீவாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க மறுத்த பல்கலைக் கழகம் பின்னர் எம்.ஏ- முதுகலை பட்டம் கொடுக்க முடிவெடுத்த கேலிக்கூத்து, புதிதாக கட்டப்பட்ட நூல் நிலையத்தை செல்லன் கந்தையா திறந்து வைக்கக்கூடாது என்று சொன்ன ஆதிக்கச் சாதி மனோபாவம், ஆரம்பக்கல்வியைத் தமிழர்களுக்கு மறுத்த தமிழர்களை அடையாளம் காட்டிய தோழர் ஸ்டாலின் அவர்களின் கட்டுரை அதிர்வலைகளை உருவாக்கியது. இதைப்பற்றி எல்லாம் சகோதரர் தொல்.திருமாவளவன் போன்றவர்கள் ஏன் எதுவும் சொல்வதில்லை? என்ற கேள்வி விசவரூபமெடுத்தது.

சிவகுருநாதன் சில சட்ட ஆலோசனைகளை முன்வைத்தார். அவர் வைத்த சட்ட ஆலோசனைகள் 99.9% இந்திய சட்டத்தில் வெறும் எழுத்துகளில் மட்டுமே வாசிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை மாநாட்டில் சொன்னேன். தலித் அரசியல் அதிகாரத்திற்கு பாபாசாகிப் அம்பேத்கர் வைத்த “இரட்டை வாக்குரிமை” என்ற தீர்வை சிவகுருநாதன் பெயருக்கு கூட குறிப்பிடவில்லை. அதுகுறித்து யாரும் கதைக்கவும் இல்லை.

இந்தியாவில் அயோத்திதாசர் பண்டிதரும், தந்தை பெரியாரும், பாபாசாகிப் அம்பேத்கரும் இந்திய விடுதலைக்கான அன்றைய தேசிய நீரோடையில் கலந்தவர்களில்லை. காந்தியடிகளின் தென்னாப்பிரிக்கா சத்தியாகிரகத்தைப் பற்றி “இந்தியாவில் தீண்டாமைப் பரப்பும் இவர்கள் ஜோன்ஸ்பர்க்கில் நியாயம் தீர்க்கப் போகிறார்களா?” என்றும் “ஆறுகோடி மக்களையும் நாசம் செய்திவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு மேலுக்கு நேஷனல் காங்கிரஸ் என்னும் பெயரை வைத்துக் கொண்டு பெரிய வேஷக் காங்கிரஸாகவே நடத்தி வருகிறார்கள்” என்று எழுதியவர் அயோத்திதாசப் பண்டிதர்.இந்திய விடுதலையை துக்க தினமாகவே அறிவித்தவர் தந்தை பெரியார்.1947ல் இந்திய பெற்ற சுதந்திரத்தை “அதிகார மாற்றம்” என்றும் “பெறப்பட்ட ஒப்பீட்டளவு சுதந்திரம் ஆதிக்க சாதியினருக்கானதே” என்றும் சொன்னவர் பாபாசாகிப் அம்பேத்கர்.இவர்களை இந்திய தேசியவாதிகள் “தேசத்துரோகிகள்” என்றே வசை பாடினார்கள். எனினும் அயோத்திதாசப் பண்டிதர் தீண்டப்படாத மக்களை தென்னாட்டின் பூர்வீகத் தமிழ் குடிமக்கள் என்று நிறுவினார்- சாதி பேதமற்ற திராவிடர்கள் (non-caste dravidians) என்றழைத்தார். ‘தமிழன்” என்று தன் இதழுக்கு பெயர் வைத்து தன்னைத் தமிழன் என்ற அடையாளத்துடனேயே முன்னிறுத்தினார்.திராவிடம் பேசிக்கொண்டிருந்த தந்தை பெரியார் தன் இறுதி நாட்களில் “தமிழ் தேசியம்” பேசினார். இந்திய விடுதலையை எல்லா தளங்களிலும் விமர்சித்த பாபாசாகிப் அம்பேத்கர்தான் சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தை எழுதினார்.தலித் மாநாட்டில் கலகக்குரலை முன்வைத்தவர்கள் இந்த வரலாறுகளையும் புரட்டிப் பார்க்க வேண்டும். தரவுகள், களப்பணி, குழு மனப்பான்மையை விட்டொழித்தல், தலித் அரசியலை வென்றெடுக்க தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளல்… என்று ஒரு நீண்ட பயணத்திற்கு இந்த மாநாடு குளிர்ப்பிரதேசத்தில் ஓர் அக்னிக்குஞ்சாய் அவர்களை அடையாளம் காட்டி இருக்கிறது.

அவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். 

நன்றி: கீற்று இணையம்

21 thoughts on “தலித் மாநாடு : கேள்விகள் எழுப்பும் அதிர்வலைகள்

  1. நல்ல பதிவு.
    சரியான கேள்விகள்.

    திறங்கெட்ட தலைவர்களை இதுவரை நம்பியது போதும். காலம் மாறிவிட்டது. உலகம் மாறிக்கொண்டே போகிறது. இனியும் இவர்கள் தயவு ஏதும் தேவையில்லை. புதிய சக்திகள் உருவாகி வருகின்றன. இதை யாராலும் தடுக்க முடியாது. இது நம் வாழ்க்கை. நம் உலகம். எவனை போலவும் நமக்கும் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க அனைத்து திறன்களும் உரிமைகளும் உண்டு. நம் வாழ்க்கை பாதையை நாம்தான் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். மற்றவன் நம் இரத்தத்தை உறிந்து வாழ்ந்து நம் முதுகில் இலவசமாக சவாரி செய்தது முடிவுக்கு வந்துவிட்டது. இதை ஆதிக்க(?) முட்டாள்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். இனியும் யாரும் எவர் பேச்சையும் கேட்டு பொம்மைகள் போல் தலையாட்ட தேவையில்லை.

    இலங்கையில் தலித்துக்கள் இருக்கிறார்கள், அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்டு, பசியில், பட்டினியில், சாவின் பிடியில் பரிதாபகர மண்புழு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று அவர்களே சுயநினைவுடன், ஆதாரங்களுடன் வெளி உலகுக்கு மேடை போட்டு கூறுவதை, ஆதிக்க முட்டாள் கயவாளிகள் அனைத்தையும் பொய் என எதிர்வாதம் செய்கிறார்கள். யார் இவர்களுக்கு இந்த உரிமையை கொடுத்தது.

    அவனவன் முதுகை அவனவன் சொறிந்து கொண்டு போனால் போதும்.

    அடுத்தவன் வாழ்க்கைக்கு இவன் உதரவாதம் கொடுப்பது இன்னும் இவர்களின் ஆதிக்க திமிரைத்தான் காட்டுகிறது. என்ன பெரிய கடவுள் என நினைப்போ?

    முடிந்தது இவர்களின் கொட்டம்.

    இலங்கை தலித்துக்கள் எந்த சலசலப்பையும் கண்டு அஞ்சாமல் தாங்கள் எடுத்த காரியங்களை துணிந்து திறம்பட செயல்படுத்த வாழ்த்துகிறேன்.

    இனி எவன் தயவும் தேவையில்லை. ஆதிக்கன் என்று எப்போதும் எவனும் இருந்ததும் இல்லை. எல்லாம் வெறும் மாயையே! ஊரை ஏமாற்றும் பொய் பித்தலாட்டங்களே!!!

  2. /தமிழினம்இ தமிழ்த் தேசியம்- தமிழன்… இதெல்லாம் எங்களுக்காக என்ன செய்துவிட்டது? நாங்களும் தமிழர்கள் தான் என்றால் எங்களை நாயை விட கீழாக நீங்கள் நடத்தியது/நடத்துவது ஏன்? தமிழ் தமிழ் என்று கதைக்கும் நீங்கள் எங்களைத் தமிழ் படிக்க விட்டீர்களா? உங்கள் தமிழ்த் தேசியத்தில் எங்களுக்கான இடம் எங்கே இருக்கிறது?//

    அட்றா சக்கை!
    கேள்வின்னா இதுதான்யா கேள்வி.
    தூத்தேறிஇ நாக்கை புடுங்கினு சாகபோறானுங்கஇ சாதிக்கார பொறம்போக்குங்க.

    இனிமேஇ அவனவன் பிரச்சினையை அவனவந்தான் எடுத்து கையாள வேண்டும். எவனுடைய தயவும் தேவையில்லை ஆயிடுச்சி. அதான்இ இம்மாம் காலம் பாத்தோட்டோம்ல?

    திறம் கெட்டவனுங்குடைய தலைமை இனியும் தேவையில்லை. சாயம் நல்லாவே வெளுத்துப்போச்சு.

    -ஆயிரங்கண்ணுடையான

  3. இஸ்லாத்தில் மனுவாதிகள்
    (பதிப்புரை)

    இஸ்லாத்தின் சமூக சமத்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் நேரெதிரான வகையில், இந்திய முஸ்லிம்களிடையே சாதிய வேற்றுமையும் பாரபட்சமும் புரையோடிப் போய் கிடக்கிறது. இது, பார்ப்பன இந்து மதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டது மட்டுமல்ல; பல இஸ்லாமிய மன்னர்களும் உலேமாக்களும் இச்சாதிய பாரபட்சத்தை நியாயப்படுத்தி கட்டிக் காத்து வந்துள்ளனர். இந்த உண்மையையும், மனுவாத அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கம் எவ்வாறு இந்தியாவில் உருத்திரிக்கப்பட்டுள்ளது என்பதையும் வரலாற்றுப் பின்னணியுடன் வெளிக்கொணர்கிறார், இஸ்லாமிய இளைஞரான மசூத் ஆலம் ஃபலாஹி.

    தற்போது டெல்லி நேரு பல்கலைக்கழகத்தின் அரபுமொழித் துறையில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மாணவராக உள்ள இவர், ஜாமியா உல்ஃபலா மதரசாவில் இஸ்லாமிய மார்க்கக் கல்வியைப் படித்து முடித்தவர். இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி மற்றும் சாதி அடிப்படையிலான இழிவுபடுத்தல்கள் பற்றி இவர் விரிவாக ஆய்ந்தெழுதியுள்ளார். கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் “”ஃபிராண்டியர்” (பிப்ரவரி 511, 2006) என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர், இவை குறித்து அலசுகிறார். புறக்கணிக்கப்படும் பிரச்சினை குறித்த இச்சிறுவெளியீடு இந்துமதத்தின் கொடுமைகளை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திலும் மனு”தர்ம’ அடிகொடுக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சாதியத்திற்கு எதிராகவும் விடாப்பிடியாகப் போராட விரிந்த பார்வையை அளிக்குமென்று நம்புகிறோம்.

    இஸ்லாத்தில் மனுவாதிகள்

    (இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி தீண்டாமை குறித்து ஆய்வு செய்து, மசூத் ஆலம் ஃபலாஹி அளித்த நேர்காணல்)

    கேள்வி: இந்திய முஸ்லீம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையை ஆய்வு செய்வதில் நீங்கள் எவ்வாறு அக்கறை காட்டத் தொடங்கினீர்கள்?

    பதில்: பீகார் மாநிலத்திலுள்ள சீத்தாமரி என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். கிழக்கு உத்திரப்பிரதேசத்திலுள்ள மவுனத் பான்ஜன் என்ற ஊரில் எனது பள்ளிப் படிப்பை நான் முடித்தேன். பின்னர், இஸ்லாமிய உயர் கல்வி பெறுவதற்காக, ஆஜம்கார் மாவட்டத்தின் பிலாரியாகன்ஜ் எனும் ஊரிலுள்ள ஜாமியா உல்ஃபலா மதரசாவுக்குச் சென்றேன். 1999ஆம் ஆண்டில் ஃபசிலத் கல்வியை முடித்த நான், இளங்கலை பட்டப்படிப்புக்காக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அதன்பின்னர், புதுடெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலைப் பட்டம் பெற்றேன்.

    1996ஆம் ஆண்டில், ஜாமியா உல்ஃபலாவில் நான் மாணவனாக இருந்தபோது, “”குரானைப் பற்றிய ஓர் அறிமுகம்” என்ற ஒரு வார கால நிகழ்ச்சியை ஜமாத்இஇஸ்லாமிஹிந்த் என்ற அமைப்பு உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்திருந்தது. இதன் ஒரு பகுதியாக, முஸ்லிம்கள் அல்லாதோர் வாழும் பகுதிகளில் இஸ்லாமிய மதம் பற்றி விளக்குவதற்காக ஜமாத் தலைவர்கள் சென்றனர். குறிப்பாக, தலித்துகள் வாழும் பகுதிகளில் அவர்கள் கவனம் செலுத்தினர். இஸ்லாத்தின் பொதுக்கருத்தான சமூக ரீதியிலான சமத்துவம் பற்றி தலித்துகளிடம் அவர்கள் பேசினர்.

    ஹக்கிம் அப்துர்ரவூஃப் என்ற மூத்த ஜமாத் தலைவர், பிலாரியாகன்ஜ்இல் உள்ள தலித்துகள் வாழும் சேரிப் பகுதிக்கு வந்தார். நான் படித்துக் கொண்டிருந்த மதரசாவும் இந்த ஊரில்தான் இருந்தது. இஸ்லாம் சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்றும் சாதி, தீண்டாமை ஆகிய இழிவுகளுக்கு ஒரே தீர்வு இஸ்லாம்தான் என்றும் தலித்துகளிடம் அவர் கூறினார். தலித்துகள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டு மதம் மாறுவார்களானால், முஸ்லிம்கள் அவர்களைக் கட்டித் தழுவி வரவேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.

    அவ்வாறு அவர் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு தலித் இளைஞர் எழுந்து நின்று, அவரை நோக்கி, “”இஸ்லாம் என்பது சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், உங்களுடைய முஸ்லிம் சமுதாயம் சாதிகள் மலிந்ததாகவே இருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தமது சாதிக்கு வெளியில் திருமணம் செய்து கொள்வதில்லை; மற்ற பகுதிகளிலும் அநேகமாக இதே நிலைமைதான். இந்நிலையில், தலித்துகளாகிய நாங்கள் முஸ்லிம்களாக மதம் மாறினால், எங்களுடன் யார் மணஉறவு வைத்துக் கொள்வார்கள்? எங்களுடன் சமமாக அமர்ந்து யார் உணவருந்துவார்கள்?” என்று கேட்டார்.

    அந்த இளைஞரின் வாதம், எனது நெற்றிப் பொட்டில் தாக்கியதைப் போலிருந்தது; என்னைச் சிந்திக்கத் தூண்டியது. அவர் கூறியது பெருமளவு உண்மை என்பது எனக்குத் தெரியும். அது முதற்கொண்டு, சாதிய அமைப்பின் வரலாறு பற்றிய பல்வேறு நூல்களை நான் படிக்கத் தொடங்கினேன். பல்வேறு இந்திய உலேமாக்களின் நூல்களையும் நான் ஆழ்ந்து படித்தேன். இந்த உலேமாக்கள், அவர்களது சீடர்கள் பலராலும் மிகச் சிறந்த அறிஞர்கள் என்று பெரிதும் மதிக்கப்பட்டவர்கள். மௌலவி அகமத் ரசாகான் பரேல்வி, மௌலவி அஷ்ரப் அலி பரூக்கி தான்வி முதலான இத்தகைய அறிஞர்களின் நூல்களையும் நான் படித்தேன்.

    இந்த உலேமாக்களில் பலரும், பிறப்பு அடிப்படையிலான சாதிய மேன்மையை நடைமுறையில் ஆதரித்து வாதிடுவோராக இருப்பதைக் கண்டேன். இந்தச் சாதியக் கருத்தாக்கத்தின் அடிப்படையில், குரானுக்கு முற்றிலும் எதிரான வகையில் இவர்கள் ஃபத்வா வழங்கியுள்ளதை கண்டறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியடைந்தேன். அரபு மொழியில் காஃபா என்றழைக்கப்படுவதன் கருத்தாக்கத்தைத் துணையாதாரமாகக் கொண்டு, சாதியப் படிநிலை வரிசைப்படி, குழுக்களுக்கிடையே சாத்தியப்படும் மணஉறவுகளைப் பற்றிய விதிகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

    இதன்படி, அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்த முஸ்லீம்கள் (சையத்துக்கள், ஷேக்குகள்), அரபுத் தோற்றுவாய் அல்லாதவர்களைவிட அதாவது அஜாமி முஸ்லிம்களைவிட உயர்வானவர்கள். அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்தவர் என உரிமை பாராட்டும் ஒரு ஆண், அஜாமி முஸ்லிம் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால் அஜாமி முஸ்லிமாக உள்ள ஒரு ஆண், அரபு வழித்தோன்றலான ஒரு முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. இது போலவே பத்தான் முஸ்லிம் ஆணொருவன், ஜுலாஹா (அன்சாரி), மன்சூரி (துனியா), ராயின் (குன்ஞ்ரா), குரைஷி (காஸி) இனப் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால், அன்சாரி, ராயின், மன்சூரி, குøரஷி ஆகிய இனக்குழுவைச் சேர்ந்த எந்தவொரு முஸ்லிம் ஆணும், பத்தான் முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. ஏனென்றால் இந்தச் சாதிகள் அனைத்தும் பத்தான்களுக்குக் கீழானவை — இவ்வாறாக இந்த உலேமாக்கள் வாதிட்டனர். ஒருவர் தமது சொந்தச் சாதியிலேயே திருமணம் செய்து கொள்வதுதான் சாலச் சிறந்தது என்று உலேமாக்களில் பலரும் நம்பினர்.

    இஸ்லாமைப் பற்றிய எனது புரிதலுக்கு முற்றிலும் நேரெதிரானதாக அவர்களுடைய கருத்துக்கள் இருந்தன. அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்ள, அவர்களுடைய நூல்கள் எனக்குப் பெரிதும் உதவின. இந்தியாவில் உள்ள பல உலேமாக்கள் சாதிய அமைப்புக்குத் தவறாக இஸ்லாமியத் தன்மை வழங்குவதன் மூலம் அல்லது மதரீதியில் இசைவாணை வழங்குவதன் மூலம் சாதியத்தை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். இதை அறிந்த போது நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். இந்து மதத்தில் இன்னமும் நீடித்து வரும் சாதிய நடைமுறையிலிருந்து இது வேறுபட்டதல்ல. ஏனென்றால், இந்துமதம்தான் சாதிய வேறுபாட்டுக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் மதரீதியாக இசைவாணை வழங்குகிறது.

    சாதியம் பற்றிய எண்ணற்ற இந்திய உலேமாக்களின் நூல்களைப் படித்த பிறகு, ஜமாத்இஇஸ்லாமி தலைவரிடம் அந்த தலித் இளைஞர் முன்வைத்த கேள்வி கிட்டத்தட்ட முழுமையாக சரியானதுதான் என்பதை நான் புரிந்து கொண்டேன். சாதிய அமைப்பை நியாயப்படுத்துவதற்கு இத்தகைய உலேமாக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை இப்படித் தவறாக வியாக்கியானம் செய்வார்களானால், இஸ்லாம் மதத்துக்கு மாறுவது பற்றி எந்த தலித் அக்கறையோடு பரிசீலிப்பார்? இந்த மௌலவிகளால் திரித்து முன்வைக்கப்படும் இஸ்லாமிய மார்க்கத்தை எந்த தலித் ஏற்றுக் கொள்வார்?

    இந்திய முஸ்லிம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையானது, ஏதோ இந்து மதத்தின் தாக்கத்தினால் மட்டும் ஏற்பட்டதல்ல; சாதிய அமைப்பை இஸ்லாமிய சட்டம் அல்லது ஷரீஅத் இன் ஓர் அங்கம் எனத் தவறாகக் கருதும் பெரும்பாலான இந்திய உலேமாக்களின் செல்வாக்கும் இதற்குக் காரணமாகும். இஸ்லாமிய மார்க்கத்தை முற்றிலும் தவறாக வியாக்கியானம் செய்வதன் மூலம் இந்த மௌலவிகள் இஸ்லாத்துக்கு எவ்வளவு பெரிய இழுக்கைக் கொண்டு வந்துள்ளனர் என்பதை உணர்ந்தபோது, நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

    கேள்வி: முஸ்லிம்களிடையே சாதிய பாரபட்சம் என்ற பிரச்சினையைப் பற்றி நீங்கள் எவ்வாறு எழுதத் தொடங்கினீர்கள்?

    பதில்: சாதியையும் சாதிய பாரபட்சம் இழிவுபடுத்தலையும், அப்பட்டமாக நியாயப்படுத்தி, மதரீதியில் சட்டபூர்வமாக்குவதற்கு இந்த உலேமாக்கள் முயற்சித்ததை அறிந்தபோது, இதைப் பற்றி எழுதுவது முக்கியத்துவம் வாய்ந்ததென நான் உணர்ந்தேன். இந்தப் பிரச்சினையைப் பற்றி எழுத முற்பட்டபோது, ஜாமியா உல்ஃபலாவில் பணியாற்றிய மௌலவி அனீஸ் அகமது சித்திகி ஃபலாஹி மதானி என்ற எனது மதிப்புக்குரிய ஆசிரியர், எனது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருந்தார். அவர் எங்களுக்கு மதங்கள் குறித்த ஒப்பீடு என்ற பாடத்தைக் கற்பிப்பவராக இருந்தார். படிநிலையாக உள்ள சாதிய அமைப்பு முறையை இந்திய முஸ்லீம்கள் எவ்வாறு இஸ்லாத்தின் உள்ளார்ந்த ஆன்மீகமாக மாற்றிவிட்டார்கள் என்பதையும், இந்து மதத்தின் தாக்கம் இதற்கு ஓரளவுக்குக் காரணமாக இருந்தது என்பதையும் அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.

    இருப்பினும், முஸ்லிம் பத்திரிகைகளில் இந்தச் சாதியப் பிரச்சினை பற்றி அபூர்வமாகவே விவாதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையைப் பற்றி அவை முற்றாக மௌனம் சாதிக்கின்றன. இந்தியாவிலுள்ள பெரும்பாலான முஸ்லிம் பத்திரிகைகள் சுயநலவாதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன; வெளியிடப்படுகின்றன. மதரசாக்களில் அளிக்கப்படும் குறுகிய கண்ணோட்டமுடைய பயிற்சியின் காரணமாக, உண்மையிலேயே அவர்கள் விரும்பினாலும் கூட, இத்தகைய பிரச்சினைகளைப் பற்றி எழுத இயலாத நிலையிலேயே உலேமாக்கள் உள்ளனர்.

    மேலும், இந்திய உலேமாக்கள் பெரும்பாலும் ஹனாஃபி மரபில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். சாதி அடிப்படையிலான பாரபட்சம் காட்டுவதற்கு இந்த ஹனாஃபி மரபானது, மதரீதியில் புனித இசைவைத் தவறாகக் கற்பித்து வருகிறது. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இது நடந்து வருகிறது. ஹனாஃபி மரபுவழி சார்ந்த அறிஞர்களின் படைப்புகளைப் பரிசீலித்தால் இது தெளிவாகத் தெரியும்.

    இதனால்தான், மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டும் மிகப் பெருமளவுக்கு விவாதத்திற்குரியதுமான இச்சாதியப் பிரச்சினையைப் பற்றி எழுதும் தார்மீகக் கடமை எனக்கிருப்பதாக நான் உணர்ந்தேன். எனவே “”இந்தியாவில் முஸ்லிம்களும் தீண்டாமையும்” என்ற தலைப்பில் பல கட்டுரைகளை நான் தொடர்ச்சியாக எழுதினேன். அலிகாரைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரும் ஜமாத்இஇஸ்லாமியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் ஃபரிடி என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் “”ஜிந்தகிஇநவ்” என்ற பத்திரிகையில் இவை வெளியாயின. பேரன்பு கொண்ட டாக்டர் ஃபரிடி இவற்றை வெளியிட்டு உதவினார். சாதிய பாரபட்சம்இழிவுபடுத்தலுக்கு மதரீதியில் இசைவாணை வழங்கும் உலேமாக்களைக் கடுமையாக விமர்சிப்பவையாக எனது சில கட்டுரைகள் இருந்தன.

    கேள்வி: இந்தக் கட்டுரைகளின் மூலம் நீங்கள் வாதிட்டு நிலைநாட்ட முயற்சித்தது என்ன?

    பதில்: இந்திய முஸ்லிம்களிடையே சாதி மற்றும் சாதிய அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதற்கான வரலாற்றுக் கண்ணோட்டத்தை அளிக்க நான் முயற்சித்தேன். இந்தியாவில் சாதிகளின் தோற்றம், சாதியை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பன மதத்தின் வளர்ச்சி; பவுத்தம், சீக்கியம், பக்தி இயக்கம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சாதிய எதிர்ப்பு இயக்கங்களின் பாத்திரம்; இந்தியாவில் இஸ்லாமிய மதம் பரவுதல்; குறிப்பாக, இஸ்லாத்தின் சமூக சமத்துவம் காரணமாக, அதன்பால் ஈர்க்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளிடையே இஸ்லாமிய பரவுதல் ஆகிய இவை பற்றி நான் ஆய்வு செய்தேன்.

    மறுபுறம், இந்திய வரலாற்றில் “இஸ்லாமிய ஆட்சி’ என்று சொல்லப்படும் காலத்தில் எழுதப்பட்டு வெளியான நூல்களிலிருந்து பல்வேறு மேற்கோள்களை முன்வைத்து, முஸ்லிம் மன்னர்களும் பொதுவில் இஸ்லாமிய மேட்டுக்குடி ஆளும் கும்பல்களும் சாதிய அமைப்பை எவ்வாறு கட்டிக் காத்தனர் என்பதை நான் விளக்க முயற்சித்தேன். இந்துக்களில் “உயர்சாதியினர்’ என்று சொல்லப்படுபவர்களுடன் கள்ளக்கூட்டு சேர்ந்து, இந்து மற்றும் முஸ்லிம் மக்களில் “கீழ் சாதியினர்’ என்று சொல்லப்பட்டவர்களை எவ்வாறு ஒடுக்கினர் என்பதையும் நான் எடுத்துக் காட்ட முயற்சித்தேன்.

    இந்த முஸ்லிம் மன்னர்களும் மேட்டுக்குடி ஆளுங்கும்பலும் கீழ்ச் சாதியினர் அல்லது ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுவர்களை அவர்கள் இந்துக்களானாலும், முஸ்லிம்களானாலும் கல்வி கற்க அனுமதித்ததில்லை; தங்களது அரசவைகளில் நுழையக்கூட அனுமதித்ததில்லை. இவை இந்து மற்றும் முஸ்லிம்களில் உயர்சாதியினருக்கு மட்டுமே என்று ஏகபோக உரிமை கொண்டாடினர். இந்த உண்மைகளை, முல்லா அப்துல் காதிர் பாவாயுனிஇன் “”முன்டாகாப் அல்தாவாரிக்”, மௌலவி சய்யத் ஜியாவுதீன் பார்னிஇன் “”தாரிக்இஃபிரோஸ் ஷாஹி”, குன்வர் மொகம்மத் அஷ்ரப்இன் “”இந்துஸ்தானி மாஷ்ரா அக்த்இஉஸ்தா மெய்ன்” ஆகிய நூல்கள் மிகத் தெளிவாகவே நிரூபித்துக் காட்டுகின்றன. இந்த மன்னர்களுக்கும் மேட்டுக்குடி ஆளுங்கும்பல்களுக்கும் இஸ்லாத்தைப் பற்றி முழுநிறைவாகத் தெரியாது. இஸ்லாமிய மார்க்கம் போதிக்கும் சமத்துவத்துக்கு அவர்கள் செவி சாய்த்ததுமில்லை.

    இல்டுமிஷ், பால்பன் ஆகியோர் துருக்கிய அடிமை வம்சத்திலிருந்து வந்த சுல்தான்களாவர். அவர்களாவது சாதிய விவகாரங்களில் வேறுபட்டு நடந்திருக்க வேண்டுமென நாம் கருதலாம். ஆனால், அவர்களும்கூட கீழ்சாதியினர் என்றழைக்கப்பட்ட முஸ்லிம்களை அரசாங்கப் பணிகளில் அனுமதிக்க மறுத்தனர்.

    இஸ்லாமிய அரசுகள் என்று சொல்லப்பட்ட அரசவைகளில் இருந்த எண்ணற்ற அறிஞர்களும் உலேமாக்களும் பராணி, ஃபரிஷ்டா இன்னும் இவர்களைப் போன்றவர்களும் “கீழ்’ சாதி அல்லது ரஸில் சாதி முஸ்லிம்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கு மத ரீதியாக இசைவாணை வழங்கவே முயற்சித்தனர். ரஸில் (கீழ்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள், அஷ்ரஃப் (மேல்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்வதற்கென்றே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்றுகூட பராணி வாதிட்டுள்ளார். கீழ் சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்றழைக்கப்பட்டவர்களின் குழந்தைகள் தமது முன்னோர்களின் பரம்பரைத் தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கு மாறாக, தமது குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க எவராவது துணிந்து செயல்பட்டால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    “”குரான், தொழுகை, நோன்பு ஆகியவற்றுக்கு அப்பால், மேலான அறிவை ரஸில் என்றழைக்கப்படும் கீழ் சாதியினருக்கு அளிக்கக் கூடாது; இவ்வாறு செய்வது நாய்கள், பன்றிகளின் முன்பு விலையுயர்ந்த முத்துக்களைப் பரப்பி வைப்பதைப் போன்றதாகும்!” இவ்வாறு மக்தும் ஜஹானியான்இஜஹாங்கஷ்ட் என்றழைக்கப்பட்ட சையத் ஜலாலுதீன் புகாரி என்ற பிரபலமான சூஃபி அறிஞர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதைப் பற்றி காஸி சஜ்ஜத் ஹுசைன் தனது “”சிராஜுல் ஹேதயா” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மது அருந்துபவர்கள், கந்து வட்டிக்காரர்கள் மட்டுமின்றி, நாவிதர்கள், பிணம் கழுவுபவர்கள், சாயத் தொழிலில் ஈடுபடுபவர்கள், தோல் பதனிடுபவர்கள், செருப்பு தைப்பவர்கள், வில் செய்பவர்கள், சலவைத் தொழிலாளிகள் முதலானோருடன் சேர்ந்து மேல்சாதி முஸ்லிம்கள் உணவருந்தக்கூடாது என்று இந்த பிரபலமான சூஃபி அறிஞர் வலியுறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. இவர் தமது வாதத்துக்கு வலுவூட்டுவதற்காக, இறைத்தூதர் முகமது நபிகளார் கூறியதாக ஒரு போலியான மரபை சான்றாதாரமாகக் கற்பிதம் செய்துக் காட்டியுள்ளார்.

    மேல் சாதியினர் என்று கூறப்படுபவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்வதற்காகவே கீழ் சாதியினர் கடவுளால் படைக்கப்பட்டுள்ளனர் என்ற பார்ப்பனக் கோட்பாட்டைப் போன்றதுதான் இந்தக் கருத்து. பார்ப்பனர்களின் வேத நூலான மனுதர்மத்தின் நேரடி நகலைப் போன்றதுதான் இது! இதனால்தான் சாதிய பாரபட்சத்தை உயர்த்திப் பிடிக்கும் இத்தகைய உலேமாக்களை “”மனுவாதிகள்” என்று நான் அழைக்கிறேன். ஒடுக்கப்பட்ட சாதிகளிடம் பார்ப்பனர்கள் எத்தகைய மனப்பான்மையைக் கடைபிடிக்கிறார்களோ, அதிலிருந்து இந்த உலேமாக்களின் மனப்பான்மையை வேறுபடுத்திப் பார்க்கவே முடியாது.

    “மாபெரும்’ மொகலாயப் பேரரசரான அக்பர், ரஸில் சாதியினர் என்றழைக்கப்படுவோருக்குக் கல்வி அளிக்கப்பட்டால், பேரரசின் அடித்தளமே ஆட்டங்கண்டுவிடும் என்று பிரகடனப்படுத்தியுள்ளதாக அப்துல் காதிர் படாயுனி தனது “”முன்டகாப்அல்தாவாரிஹ்” நூலில் குறிப்பிட்டுள்ளார். பேரரசர் ஒளரங்கசீப்இன் ஆணைப்படி தொகுக்கப்பட்ட “”ஃபடாவாஇஆலம்கிரி” என்ற ஹனாஃபி சட்டவியல் கருத்துரைத் தொகுதியில் “கீழ்’ சாதியினர் பற்றி இதேபோன்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. கடைசி மொகலாயப் பேரரசரான பகதூர்ஷா ஜாஃபரும் இவற்றிலிருந்து வேறுபட்டவராக இல்லை.

    பல நூல்களைத் தேடிப்படிக்கும்போது, 24.5.1857 நாளிட்ட “”டெல்லி உருது அக்பர்”இல் ஒரு செய்தி அறிக்கையைக் கண்டேன். அது பின்வருமாறு கூறுகிறது: பிரிட்டிஷாருக்கு எதிரான எழுச்சியைத் தொடர்ந்து 500 பேர் கொண்ட படையொன்றைக் கட்டியமைக்க தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு மாமன்னர் பகதூர்ஷா ஆணையிட்டார்; ஆனால், அந்தப் படையினர் அஷ்ரஃப் (மேல்) சாதியினராக இருக்க வேண்டும்; “கீழ்’ சாதியினர் எவரும் அதில் இருக்கக் கூடாது என்று குறிப்பாக உத்தரவிட்டார். —இதிலிருந்து தெரிவது என்ன? இந்தியாவில் “இஸ்லாமிய’ ஆட்சிக் காலத்தின் “பொற்காலம்’ என்று மிகப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் எழுத்தாளர்கள் சளைக்காமல் ஏற்றிப் போற்றிய காலத்தின் நிலைமையே இதுதான். சாராம்சத்தில் இப்”பொற்கால’ ஆட்சிகள், மனுவாத முஸ்லிம்கள் மற்றும் இந்து மேட்டுக்குடியினரின் ஆட்சிகளாகவே இருந்தன. இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் இருந்த “கீழ்’ சாதியினர் என்று சொல்லப்படும் மக்களை, இந்த மேட்டுக்குடி கும்பல் ஆதிக்கம் செலுத்தி ஒடுக்கினர் என்பதே உண்மை.

    பல மன்னர்களும், உலேமாக்களும் சாதிய அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்த போதிலும், அவர்களில் சிலர் இதற்கு எதிராகவும் இருந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, சுல்தான் முகமது காஸ்நவி தமது அடிமையான அயாஸ் என்பவரை பஞ்சாபின் ஆளுநராக நியமித்தார். ஹஜ்ஜம் எனப்படும் நாவிதர் சாதியைச் சேர்ந்த இந்துவான திலக் என்பவரைத் தமது தலைமைத் தளபதியாக நியமித்ததுடன் “”ராஜா” என்ற பட்டத்தையும் அவர் வழங்கினார். சுல்தான் சகாபுதீன் கோரி, தமது அடிமையான குத்புதீன் ஐபக் என்பவரை இந்தியாவில் தனது ஆளுநராக நியமித்தார். ஐபக், தனது அடிமையான சம்சுதீன் அல்டுமிஷ் என்பவரை குவாலியர், புலந்த்சாகர், படாயுன் ஆகிய பகுதிகளுக்கான ஆளுநராக நியமித்தார்.

    சுல்தான் அலாவுதீன் கில்ஜி, பல உயர் பதவிகளில் சையதுகள் மற்றும் அஷ்ரஃப் என்றழைக்கப்பட்ட “மேல்’ சாதியினரை அமர்த்திய போதிலும், தனது வேலையாளான மாலிக் உத்துஜ்ஜார் ஹமீதுத்தீன் முல்பானி என்பவரைத் தலைமை நீதிபதியாக (காஸி உல் காஸட்) நியமித்தார். குஜராத்தின் புர்வா எனப்படும் சாமர் சாதியைச் சேர்ந்தவரும் இஸ்லாமிய மதத்துக்கு மாறியவருமான மாலிக் காபூர் என்பவரைத் தனது தலைமை அமைச்சராகவும் அவர் நியமித்தார். சுல்தான் முகமது பின் துக்ளக், சுல்தானா ரஸியா, சுல்தான் குத்புதீன் முபாரக் ஷா கில்ஜி ஆகியோரும் “கீழ்’ சாதியினர் என்று கூறப்படுபவர்களை உயர் பதவிகளில் அமர்த்தினர்.

    கேள்வி: இந்திய வரலாற்றின் இடைக்காலத்தைச் சேர்ந்த “”மனுவாதி உலேமாக்கள்” என்று உங்களால் அழைக்கப்படுபவர்கள், பார்ப்பனர்களைப் போலவே சாதிய பாரபட்சத்தை ஈவிரக்கமின்றி உறுதியாக உயர்த்திப் பிடித்த போதிலும், கீழ் சாதியினர் என்று கூறப்படும் கோடிக்கணக்கான இந்துக்கள் இஸ்லாமிய மதத்தை எப்படி ஏற்றுக் கொண்டனர்?

    பதில்: இதற்கான காரணம், சாதிய பாரபட்சம் இந்துக்களிடம் இருப்பதைவிட, முஸ்லிம்களிடம் எப்போதும் கடுமை குறைவாக இருப்பதேயாகும். மேலும், இஸ்லாமிய மார்க்கத்தில் சாதிக்கு மதரீதியில் எப்போதுமே இசைவாணை கிடையாது என்பது இன்னொரு காரணமாகும். இந்திய முஸ்லிம்கள் மத்தியில் சாதி வேறுபாடுகள் பலமாக நீடித்து வந்துள்ள போதிலும், தீண்டாமை என்பது நடைமுறையில் அவர்கள் அறியாத விசயம்தான். இருப்பினும், மத்திய காலத்தைச் சேர்ந்த பல இஸ்லாமிய மன்னர்கள் கீழ்வர்க்கத்தினரை தமது அரசவைகளில் அடியெடுத்து வைக்க அனுமதித்ததில்லை; அல்லது, அப்படி ஒரு சிலர் அனுமதித்தாலும், அவர்கள் வாய்திறந்து பேசுவதற்கு அனுமதித்ததில்லை. ஏனெனில், அவர்கள் “புனித’ மற்றவர்களாக “அசுத்த’மானவர்களாகக் கருதப்பட்டனர் என்று பிரபல வரலாற்று ஆசிரியரான கன்வர் மொகம்மத் அஷ்ரஃப், தனது “”இந்துஸ்தானி மாஷ்ரா அக்த்இஉஸ்தா மெய்ன்” நூலில் குறிப்பிடுகிறார்.

    கேள்வி: “இஸ்லாமிய’ ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த “மேல்’ சாதி முஸ்லிம் எழுத்தாளர்களும் உலேமாக்களும் சாதிய அமைப்புக்கு மதரீதியாக இசைவாணை வழங்க முயற்சித்திருக்கலாம். ஆனால், அதற்குப் பிந்தைய காலத்தில் இந்த நிலையிலிருந்து நிச்சயம் சில மாறுதல்கள் ஏற்பட்டிருக்க வேண்டுமே?

    பதில்: இப்போது அந்த விசயத்துக்கு நான் வருகிறேன். “”ஜிந்தகிஇநவ்” இதழுக்கு நான் எழுதிய சில கட்டுரைகளில், காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்த பிரபலமான உலேமாக்கள் பற்றியும், இப்போதைய சமகால இந்தியாவிலுள்ள உலேமாக்கள் மற்றும் உலேமாக்களின் அமைப்புகள் பற்றியும் நான் பரிசீலித்தேன். பாரெல்விஸ், தியோபண்டிஸ், ஹல்இஹதித், ஜமாத்இஇஸ்லாமி, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் போன்ற அமைப்புகளைப் பரிசீலித்தேன். குறிப்பாக, திருமண உறவு பற்றிய விசயங்களில், இவர்கள் சமூக சமத்துவம் அல்லது காஃபா பற்றிய கருத்தாக்கத்தை எப்படிக் கையாண்டனர் என்பதைப் பரிசீலிப்பதில் நான் கவனத்தைக் குவித்தபோது, அவர்களுக்கிடையில் வியப்பிற்குரியதொரு கருத்தொற்றுமை நிலவுவதைக் கண்டேன்.

    சாதியைச் சட்ட சம்மதம் கொண்டதாக்குவதற்கு காஃபா பற்றிய கருத்தாக்கத்தைத் தமது ஹனாஃபி மரபில் பாரெல்விஸ் மற் றும் தியோபண்டிஸ் அமைப்பினர் பயன்படுத்துகின்றனர். அஷ்ரப் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் மேன்மையையும் ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் தாழ்நிலையையும் இவர்கள் சட்ட மரபாக்குகின்றனர். சமூகத் தகுதி பற்றிய விசயத்தில் ஹனாஃபி மரபினர் மிகவும் கறாராக இருக்கின்றனர். எனவே, காஃபா பற்றிய விசயத்தில் பிறப்பு அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாக்குகின்றனர். ஹனாஃபி சிந்தனை மரபு உருவான ஈராக்கைச் சேர்ந்த குஃபாவில் சமூக ஏற்றத்தாழ்வுகள் மலிந்திருந்ததும், அவற்றை அது நியாயப்படுத்த முனைந்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். சன்னி சட்டப்பள்ளியைப் பின்பற்றுகின்ற அராபிய மையத்துக்கு வெளியில் உருவாகி வளர்ந்த ஷஃபி, ஹன்பாலி போன்ற மரபுகளும் இதே கருத்தைத்தான் கொண்டுள்ளன.

    ஆனால், இமாம் ஷஃபி, இமாம் அகமது பின் ஹன்பால் ஆகிய இருவரும் பிறப்பு அடிப்படையிலான காஃபாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிறப்பு அல்லது குடும்பத்தை அடிப்படையாக்குவதற்கு நேர்மாறாக, மாலிகி சிந்தனைப் பிரிவு விதிவிலக்காக நிமிர்ந்து நிற்கின்றது. காஃபாவைத் தீர்மானிப்பதில் பிறப்பை ஒரு காரணியாகக் கொள்ளாமல், கடவுட்பற்றையே அடிப்படைக் காரணியாக மாலிகி சிந்தனைப் பிரிவு கருதுகிறது. இதுதான் உண்மையான இஸ்லாமிய அளவுகோலாகும். மாலிகி சிந்தனைப் பிரிவைத் தோற்றுவித்தவரான இமாம் மாலிக் உண்மையான இஸ்லாமிய போதனையின் மையமான மெதினாவில் வாழ்ந்தது ஒருவேளை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

    ஹனாஃபி மரபினர் தமது பெரும்பாலான மதரசாக்களில் பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற மடமையை இன்னமும் போதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நான் பயின்ற மதரசாவில் சாதி என்பது இஸ்லாமியத் தன்மையற்றது என்றும், அதை நாம் தகர்க்க வேண்டும் என்றும் நாங்கள் போதிக்கப்பட்டோம். ஆனால் தியோபண்டி மரபு மதரசாக்களில், பிறப்பை அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாகக் கொண்ட காஃபா என்ற பொருளில், “”சாதி என்பது இஸ்லாமியத் தன்மையுடையது” என்று கற்பிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், இந்தியாவிலுள்ள மிக அதிக எண்ணிக்கையிலான பாரம்பரிய மதரசாக்கள், இந்த விசயத்தில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு உண்மையானவையாக இல்லாமல், ஹனாஃபி சட்டவியல் விதிகளின் அடிப்படையில் போதிப்பவையாக இருப்பதுதான். இதற்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது.

    18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷா வலியுல்லா, இந்தியாவின் பிரபலமான முன்னணி இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவர்; சன்னி பிரிவைச் சேர்ந்த சிந்தனை மரபினர் பலர், இவரைப் பெரிதும் மதித்தனர்; இவர் பிறப்பு அடிப்படையிலான காஃபாவை உறுதியாக ஆதரித்து உயர்த்திப் பிடித்தவராவார். காஃபா என்பது ஒருவரின் இயற்கையிலேயே உள்ளார்ந்து உறைந்திருப்பது என்றும், தமது சொந்த காஃபாவுக்கு வெளியில் மணஉறவு கொள்வதானது, கொலை செய்வதை விடவும் அபாயகரமானது என்றும் அவர் தனது “”ஹுஜ்ஜாத்துல்லா அல் பாலிகா”, “”ஃபிக்இஉமர்” ஆகிய நூல்களில் குறிப்பிட்டுள்ளார். இறை தூதருடன் இருந்த அவரது சகாக்களில் பலர் அடிமைப் பெண்களை மணந்த பல நிகழ்வுகள் இஸ்லாமிய வரலாற்றில் காணப்பட்ட போதிலும், இந்த அறிஞர் அதைப் பொருட்படுத்தவில்லை. இறைதூதர் நபிகளார், தமது அத்தை மகளான ஜைனப் பிந்த்இஜஹாஷ் க்கு விடுவிக்கப்பட்ட தனது அடிமையான சையத்ஐ மணமுடித்து வைத்தார். தனது மாமன் மகளான ஜுபா ஏ பிந்த்இஜுபைர்க்கு நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த மிக்தாத் என்பவரை மணமுடித்துள்ளார்.

    தீவிர ஹனாஃபி ஆதரவாளர்களான தியோபண்டி மரபினர், பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற கருத்தாக்கத்தைத் தீவிரமாக ஆதரித்துச் செயல்படுத்துவோராக உள்ளனர். “”தியோபண்ட் இயக்கமும் சஹரான்பூர் முஸ்லிம்களும்” என்ற நூலின் பாகிஸ்தானிய ஆசிரியரான குலாம் முஸ்தஃபா, அதில் பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்லியுள்ளார். தியோபண்ட் மதரசாவை நிறுவியவர்களில் ஒருவரும், ஷேக் சாதியைச் சேர்ந்தவருமான மௌலவி காசிம் நானோத்வி, நான்கு சாதியினரை மட்டுமே இறைவன் தமது மதத்துக்குச் சேவை செய்யப் படைத்துள்ளார் என்று அறிவித்துள்ளாராம்; சையத், ஷேக், மொகல், பத்தான் ஆகியவையே இந்நான்கு சாதிகளாம்!

    தியோபண்டி மரபைச் சேர்ந்த மற்றொரு நூலாசிரியரும், தியோபண்ட் மதரசாவின் முதல் முஃப்தியுமான மௌலானா அஸிசுர் ரஹ்மான் உஸ்மானி, பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்கிறார். அஷ்ரஃப் சாதியைச் சேர்ந்த ஒரு பெண், தனது தந்தை, பாட்டன் போன்ற தனது ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதியின்றி, ரஸில் சாதியைச் சேர்ந்த ஒரு ஆண்மகனைத் திருமணம் செய்வாரானால், அந்தத் திருமணம் உண்மையிலேயே நடந்ததாகக் கருத முடியாது; எனவே, அந்தத் திருமணத்தை முறிப்பது (ஃபஸ்க்இநிக்காஹ்) என்ற பிரச்சினைக்கே இடமில்லை என்று அவர் அறிவிக்கிறார். தியோபண்ட் மதரசாவால் வெளியிடப்பட்ட “”ஃபடாவா இ தார்உல்உலும் தியோபண்ட்” என்ற தியோபண்டி ஆணைகளின் (ஃபத்வா) தொகுப்பில் இந்த விசயம் கூறப்பட்டுள்ளது.

    அவர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அவருடைய வாதத்திலிருந்து தெரிவது என்னவென்றால், இத்தகைய மண உறவுகளில் பிறக்கும் குழந்தைகள் முறைகேடாகப் பிறந்தவர்கள்; இத்தம்பதியினரும் ஒழுக்கக் கேடானவர்கள்; இவர்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி, நூறு கசையடி தரப்பட வேண்டும்! இருப்பினும், ஒரு “கீழ்’ சாதிப்பெண் தனது நெருங்கிய ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதி இல்லாமலேயே “மேல்’ சாதி ஆண்மகனைத் திருமணம் செய்து கொள்ள இந்த உஸ்மானி அனுமதித்திருப்பார் என்பதை நாம் துணிந்து கூற முடியும். உண்மையில், இது பார்ப்பனிய மனோபாவத்தையும் அதேபோல முஸ்லிம்களிடம் உள்ளார்ந்து ஆழப்பதிந்துள்ள மூத்த குல ஆணாதிக்கத்தையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

    தியோபண்டி மரபைச் சேர்ந்த இன்னுமொரு இஸ்லாமிய அறிஞரான மௌலவி முகம்மது சகாரியா சித்திகி என்பவர், இன்றைய உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய இயக்கமான தப்லிஹி ஜமாத் இன் தலைமைச் சித்தாந்தவாதியாவார். “”மெய்யான சமயப் பணிகளின் நற்பேறுகள்” என்ற தமது நூலில் அவர், “”முஸ்லிம்களின் ஒரு குழு, மெக்காவுக்குப் புனிதப் பயணம் (ஹஜ்) அல்லது வேறிடத்துக்குப் பயணம் மேற்கொள்ளுமானால், அவர்கள் தம்மில் ஒருவரைத் தலைவராக (அமிர்) நியமிக்க வேண்டும்; இந்தக் குழுவில் குரைஷி (சைய்யத் அல்லது ஷேக்) சாதியைச் சேர்ந்தவர் எவராவது இருப்பின், அவரையே தலைவராக நியமிப்பது சிறந்தது” என்று கூறுகிறார். அவர் முஸ்லிம்களை அஷ்ரஃப் (“மேல்’ சாதி) என்றும் அர்ஸல் (“கீழ்’ சாதி) என்றும் வகைப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முதலாவது அரசாங்க முஃப்தியாக (முஃப்திஇஆஜம்) பின்னாளில் அமர்த்தப்பட்ட தியோபண்டி முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி எழுதிய, “”நிஹாயத் அல்அராப் ஃபிகாயத் அல்நஸ்ப்” என்ற சர்ச்சைக்குரிய சாதி பற்றிய நூலையும் இவர் ஆதரித்தார். தியோபண்டி உலேமாக்கள் பலராலும் ஆதரிக்கப்பட்ட இந்த நூலில், அஷ்ரஃப் சாதிகள் என்றழைக்கப்பட்ட நான்கு வகை சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் தனிச்சிறப்பாகக் கருணை காட்டுவார் என்று இந்த உஸ்மானி கூறியிருக்கிறார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி தமது இந்த நூலில், சக தியோபண்டி அறிஞரான அகமத் உஸ்மானி என்பவரின் ஒரு கட்டுரையும் இடம்பெறச் செய்திருந்தார். அந்தக் கட்டுரையில், “கீழ்’ சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள் கல்வி

  4. //உதாரணமாக ராணுவம் குண்டு வீசப் போகிறதென்றால் மக்கள் முதலில் போய் தஞ்சமடையும் இடம் அருகிலிருக்கிற கோயில்தான். உயிர் பிழைக்க ஒடிக் கோயிலில் தஞ்சம் புகும்போது கூட சாதிப்படிநிலை வெளிப்படும். பார்ப்பனர்கள் கோயிலின் கர்ப்பகிரகத்திலும் ஊரில் முன்னேறிய சாதியினர் அதற்கடுத்த பிரகாரத்திலும் இருப்பார்கள். கோயிலின் வெளியே உள்ள மரத்தடிக் கடைகள் நிறுத்துகின்ற கொட்டகைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தஞ்சமடைவார்கள்” என்று சொல்லியிருந்தார்.//

    என்ன சொல்வது என்றே தெரியவில்லை…

  5. உத்தரப் பிரதேசத்தில் பார்ப்பனர்களுடன் கூட்டணி கட்டிக் கொண்டு மாயாவதி ஆட்சியைப் பிடித்து சிறிது காலம்தான் ஆகியுள்ளது. அதற்குள்ளாகவே இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியின் சாயம் வெளுக்கத் தொடங்கி விட்டது. தலித் ஒருவர் ஆளுவதனாலேயே தலித் மக்கள் வாழ்வில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு விடும் என்ற பிரச்சாரம் பொய்த்துப் போயுள்ளதோடு, தலித் இளைஞர் ஒருவரை அடித்துக் கொன்ற பார்ப்பன சாதி வெறியர்களைச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவிக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியே துணைபோகும் கொடுமையும் அங்கு நடந்தேறியுள்ளது.-
    gjpa adehafk;

  6. எனினும் அயோத்திதாசப் பண்டிதர் தீண்டப்படாத மக்களை தென்னாட்டின் பூர்வீகத் தமிழ் குடிமக்கள் என்று நிறுவினார்- சாதி பேதமற்ற திராவிடர்கள் (னொந்சச்டெ ட்ரவிடிஅன்ச்) என்றழைத்தார். ‘தமிழன்” என்று தன் இதழுக்கு பெயர் வைத்து தன்னைத் தமிழன் என்ற அடையாளத்துடனேயே முன்னிறுத்தினார்.திராவிடம் பேசிக்கொண்டிருந்த தந்தை பெரியார் தன் இறுதி நாட்களில் “தமிழ் தேசியம்” பேசினார். இந்திய விடுதலையை எல்லா தளங்களிலும் விமர்சித்த பாபாசாகிப் அம்பேத்கர்தான் சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தை எழுதினார்.தலித் மாநாட்டில் கலகக்குரலை முன்வைத்தவர்கள் இந்த வரலாறுகளையும் புரட்டிப் பார்க்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் ஆதிக்க சாதியினரான பார்ப்பனரின் ஆதிக்கத்திற்கெதிராகவே திராவிடநாடு தமிழ்நாடு என்ற கோசத்தை முன்வைத்தனர். இதனை இலங்கை அரசியலுடன் முழுமையாக ஒப்பிட முடியாது. இட ஒதுக்கீட்டை எதிர்த்து உயர் சாதியினர் எவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்தனரோ அவ்வாறே தரப்படுத்தலையும் பின்னர் மாவட்ட ரீதியான கோட்டாவையும் எதிர்த்து உயர் சாதி வெள்ளாளர் போர் கொடி உயர்த்தினர். காலங்காலமாக காலனித்துவ சலுகைகளால் முன்னுக்கு வந்த இந்த உயர் சாதிகள் கல்வியால் வரும் பலாபலஙளை தங்களிடம் தக்க வைக்கவே முயன்றனர். எனவே இலங்கையில் தமிழ் ‘ தேசிய’ போராட்டமானது அடிப்படையில் மேலாதிக்க சாதிகளின் அபிலாசைகளை பிரதிபலிப்பதாகவே இருந்தது. யாழ்ப்பாண பல்கலை கழகத்துக்கு அனுமதி பெற்ற மலையக தமிழரை தோட்டக்காட்டான் என சொல்லி ரோட்டு ரோட்டாக அடித்த யாழ்ப்பாண சாதி வெறி சமூகத்தின் போராட்டமே இந்த தேசிய வாத போராட்டம். தமிழ் கட்சிகள் எதுவும் சாதிக்கெதிரான சமூக போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. ஏனெனில் அவர்களது அரசியல் தளம் உயர் சாதியினரை வைத்தே கட்டப்பட்டிருந்தது. மாவட்ட ரீதியான ஒதுக்கீடு வந்த போது எவரும் அதனை ஆதரிக்கவில்லை. எனவே தலித்திய சிந்தனை முறை கோட்பாடு பர்றிய விடயங்களைநாம் இந்தியாவிடமிருந்து கற்று கொள்ளவேண்டும்.நடை முறை அந்த சமூக சூழலை ஒட்டியதாகவே இருக்க வேண்டும்.

  7. //..யாழ்ப்பாண பல்கலை கழகத்துக்கு அனுமதி பெற்ற மலையக தமிழரை தோட்டக்காட்டான் என சொல்லி ரோட்டு ரோட்டாக அடித்த யாழ்ப்பாண சாதி வெறி சமூகத்தின் போராட்டமே இந்த தேசிய வாத போராட்டம்…//

    ராகவன்,

    இது பல்கலைக்கழகத்தில் நடந்ததா இல்லை அதன்சுற்றுப்புறங்களான கொக்குவில், திருநெல்வேலி , கந்தர்மடத்தில் நடந்தடா? ஆதாரங்கள் தரமுடியுமா? இல்லை இது வெறும் புனைவா?

  8. //..யாழ்ப்பாண பல்கலை கழகத்துக்கு அனுமதி பெற்ற மலையக தமிழரை தோட்டக்காட்டான் என சொல்லி ரோட்டு ரோட்டாக அடித்த யாழ்ப்பாண சாதி வெறி சமூகத்தின் போராட்டமே இந்த தேசிய வாத போராட்டம்…//

    மேலும் நீங்கள் அப்போது எந்த இயக்கத்தில் இருந்தீர்கள்? அவ்வியக்கம் சாதிவெறிச்சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்ததா? இருந்திருந்தால் நீங்கள் அதை மாற்ற எடுத்த முயற்சிகள் என்ன? மாற்ற முயன்றதற்கு என்ன சாட்சிகள் வைத்திருக்கிறீர்கள்? அத்துடன் இவ்வளவுகாலமும் மெளனம் காத்ததற்கு என்ன காரணம்? மற்றும் அக்காலத்தில் இருந்த மற்றைய இயக்கங்கள், இன்று அரசுடன் கைகோர்த்து ‘தலித்தியம்’ பேசும் ‘முற்போக்கு’ இயக்கங்கள் உள்ளிட்ட பலர் என்ன நடவடிக்கை எடுத்தனர் போன்ற செய்திகள் உங்களிடம் உண்டா?

  9. இது புனைவில்லை நண்பரே. 70 களில்நிகழ்ந்த உண்மை சம்பவம். விரைவில் ஆதாரஙகள் தருகிறேன். உண்மைகள் சில சமயம் உறைப்பாகத்கான் இருக்கும்.

  10. இது 76 அல்லது 77 இல்நிகழ்ந்தது. யாழ் பல்கலைகழக மாணவர் சஙக தலைவர்களுக்கான போட்டியில் தமிழர் கூட்டணி தமிழ் ஈழ அரசியல் சார்ந்த ஒரு பிரதினிதியும் இடது சாரி பிரதினிதியும் போட்டியிட்டனர். அம்முறை தான் பமலையகத்திலிருந்து பலர் யாழ் பல்கலை கழகத்துக்கு அனுமதிக்கபட்டிருந்தனர். சிங்கள் மாணவர்களும். சிங்கள மாணவர்களும் மலையலக மாணவர்களும் இடது சாரி பிரதிநிதிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். ஒருநாள் மூக்கையா , கமலநாதன் , தேவராசா பால சுப்பிரமணியம் தேவதாஸ் ஆகிய மலையக் மாணவர்கள் தமிழ் சாதி வெறி தேசிய வாதிகளால் பரமேஸ்வரா ஒழுங்கையிலிருந்து பல்கலை கழகம் வரை முழங்காலில்நடத்தப்பட்டு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு அடிக்க பட்டனர். பின்னர் அவர்களை ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். இன்னிகழ்வின் போது தோட்டகாட்டான் போன்ற இழி சொல்கள் தாராளமாக பயன்படுத்த பட்டன. இவை பத்திரிகைகளில் பிரசுரமாயின.
    இந்த மாணவர்களில் ஒருவர் இன்று வீரகேசரியில் வேலை செய்கிறார்.

  11. குறிப்பு : இந்த வன்செயலில் பங்கு பற்றியவர்கள் தமிழ் தேசிய வாதத்தை ஆதரித்த பல்கலைகழக மாணவர்களில் ஒரு பகுதியினர்.

  12. நன்றி ராகவன்,

    ஆகவே நீங்கள் 1977 அல்லது 1978 இல் இருந்து தமிழ்தேசியம் என்பது யாழ் சாதிய ‘கற்பிதம்’ என்று அறிந்திருந்தீர்கள். அன்றிலிருந்து மனதாலும் தமிழ்தேசியத்தை நீங்கள் ஆதரிக்கவில்லை என்றறிந்து மகிழ்வுறுகிறேன்!!!!
    மற்றும் இதை வெளிப்படையாகவே பேசியும் வந்துள்ளீர்கள் என்றும் பல இயக்க ‘படிப்பு’ களூக்கு சென்று உங்கள் கருத்தை நியாயப்படுத்தியும் வந்துள்ளீர்கள்!!!!
    நன்றி!

  13. //..குறிப்பு : இந்த வன்செயலில் பங்கு பற்றியவர்கள் தமிழ் தேசிய வாதத்தை ஆதரித்த பல்கலைகழக மாணவர்களில் ஒரு பகுதியினர்….//

    ஒருபகுதியினர் எனச்சொல்லி தப்பும் நீங்கள் ஒட்டுமொத்த தமிழரையும் ‘கற்பிதக்காரர்’ என முடிசூட்டுகிறீர்கள். இந்த ஒருபகுதியினர் (விரல் விட்டு எண்ணக்கூடிய) செய்த செயலுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குற்றம் கூறுவது சரியா என யோசிக்கவும்.

  14. அடிவாங்கிய மாணவர்களை பெயரிட்ட நீங்கள் நியாயமாகப்பார்த்தால் அடித்தவர்களின் பெயரையும் வெளியிடுங்களேன். நீங்கள் சொன்னால் அந்த ‘வீரகேசரியையும் ‘ கேட்கலாம்! அத்துடன் ஆனந்தசங்கரியின் வாழ்த்தை வரவேற்கும் நீங்கள் அவரும் அதன் பின்னணியில் இருந்தாரா எனவும் தெரியப்படுத்தவும்.

  15. ரூபன்நீங்கள் இந்த விடயங்களை சீரணிக்க முடியாமல் ஆனந்த சங்கரியை இழுப்பதுநாகரீகமல்ல. ஆதாரமில்லாமல்நான் ஆனந்த சங்கரியின் வாழத்தை வரவேற்றேன் என்பதுநியாமமற்றது. ஆனந்த சங்கரியுட்பட அனைத்து தமிழ் கட்சிகளும் தேசிய வாத சிந்தனை முறைக்கு ஆட்பட்டவர்கள் தான் என்பது எனது பார்வை. ஒரு பகுதியினர் என்றுநான் குறிப்பிட்டது தமிழ் தேசிய வாதத்தை பல்கலை கழகத்தில் பிரதினிதித்துவ படுத்தியவர்களை தான். இந்த மாணவர்களை ரோட்டில் அடித்து கொண்டு போகும் போது அனைவரும் பேசாமல் தான் இருந்தனர். நித்தியானந்தன் போன்றவர்கள் தான் இதற்காக களத்தில் இறங்கியவர்கள்.

  16. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் செய்தவைகைளை ஒட்டுமொத்த சமூகம் அல்லது மிகப்பெரும்பான்மை வலு மெளனமாக அமைதிகாக்கும்போது அது அங்கீகாரம்தான். ஒட்டுமொத்த சமூகத்தையும் அத போய்ச்சேரும்தான் என்பதில் என்ன சந்தேகம் வேண்டிக்கிடக்கிறது?

  17. ஆதாரமில்லாம நான் இழுக்கவில்லை, தலித் மாநாடு பற்றிய ஷோபாவின் பதிவில் உள்ளது பார்க்கவும். அது வேறு ராகவன் என்றால் தவறு தான்.

    பாருங்கள் ராகவன் உங்களின் “ஒட்டுமொத்த” தமிழ்த்தேசியம் , “ஒருபகுதி” யாகி “பல்கலைக்கழக”மாகி இன்று பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தேசியத்தை “பிரதிநிதிப்படுத்துவோர்”ஆகியிருக்கிறது!!!!!!

    நித்தியானந்தன் களத்தில் இறங்கியவர் என்கிறீர்கள். அவர் பின்னர் என்ன செய்தார், எங்கு சென்றார், அவர் சார்ந்த இயக்கம் எது, அது எந்த கொள்கையை முன்வைத்தது, அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்களேன்.

    நான் அரசியல் தொடர்புகள் அற்றிருந்த காலமது. நித்தியானந்தன் மட்டுமல்ல நிர்மலா, ஜெயதிலகராஜா, ஜெயகுலராஜா, சிங்கராயர்…என்று ஒரு பட்டியலே இருந்தது! அவர்கள் எல்லாம் யாழில் தலித் எதி போர் நடத்தியதாகவோ அன்றி மலையகத்தமிழருக்கு ஆதரவாக போராடியதாகவோ கேள்வியுறவில்லை. மாறாக புலிப்புண்ணுக்கு மருந்து போட்டு சிறை சென்ற செம்மல்கள்! மட்டக்களப்பு சிறையுடைப்பின் பின்னர் இந்தியா சென்று அன்றை ‘வீர தீர’, இன்றைய ‘பாசிச’ புலிகள் பற்றி படம் காட்டினார் நிர்மலா! வல்வெட்டித்துறையார் கடத்திவந்த தமிழ்நாட்டு தினசரிகளில் வாசித்து வாசித்து ……அடடா நிர்மலா ரீச்சர் என்ன சும்மாவா?
    ரெயில்வே கடவையில் சீலையை தூக்கி செருகிக்கொண்டு சைக்கிளை தூக்கி கடக்கிறவ ,ஜெயில் பிரேக்கில் தப்பி இந்தியா போனவ இப்ப மகளிர்பிரிவு தலைவி!!!!
    தலித் மக்களும் மலையக மக்களும் ஏமாற்றப்பட்டார்கள் என்கிறார் எனது வேம்படி மகளிர் கல்லூரித்தோழி!!!!!
    இன்னும் இருக்கு கேக்கிறீங்களா?? தேவையில்லாமல் நான் நித்தியான்ந்தன்களை இழுக்கவில்லை ராகவன்.

    எந்த தேசிய இனமும், தேசியமும் இவ்வாறான சமூக இடர்பாடுகளுக்குள்ளால் தான் நகர்கிறது. இதற்கு எந் நாடும் விலக்கல்ல. ஏனென்றால் பழங்கால வழக்கங்கள் பல தேசியப்போராட்டங்கள் மூலமும் சந்ததி மாற்றத்தின் பின்னரும் வழக்கொழிந்து போவது சாதாரணம். அவ்வாறிருக்க பழைய பிரச்சினைகளையே இழுத்து இன்றைய வழிகள் பிழை என்று சொல்வது தவறென நினைக்கிறேன்.
    ஒரு ஜோர்தானிய (பாலஸ்தீன அகதி)நண்பனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவன் சொன்னான் 2000 வருடங்களுக்குமுன் யூதர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை தாம் கேட்கவில்லை அதைக் காரணம் காட்டி இஸ்ரேல் அமைத்தது விட்டனர், யூதர்களை ரோட்டுரோட்டாக அடித்தார்கள் எனறு! எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாமெல்லாம் பாலஸ்தீனர் மீது கரிசனையுடன் இருக்கிறோம் இவன் என்னடா இப்படிசொல்கிறான் என்று! உங்கள் பார்வையில் நியாயமாக தெரியும் என நினைக்கிறேன்!!!

    நான் ஒன்றும் சீரணிக்க முடியாமல் சொல்லவில்லை, மாறாக ஈழத்தமிழரின் ச்மூக சீர்கேடுகள் பற்றி அறிந்தவன் தான். ஆனால் அன்று இவைஎல்லாவற்றுக்கும் மேலாக வாதம் செய்தவர்கள் இன்று மற்றவர்கள் பாதை பிழை என சொல்வதற்கு தாம் விட்ட பிழைகளையே தூசிதட்டி எடுத்து மற்றவர் மீது சுமத்துவதுதான் சீரணிக்க முடியவில்லை!

    இப்படித்தான் பேராசிரியர் திரு.ஹூல் அவர்கள் அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம் வெள்ளாளரின் சங்கம் என இன்று அழுதிருப்பதும். இதே ஹூல் தான் எப்படி அச்சங்கத்திற்கு இரவுபகலாக ‘பேஸ்மென்ற்’ ஒன்றில் பத்திரிக அடித்தேன் என்று சொன்னதை எவ்வளவு இலகுவில் மறந்துவிட்டார் என நினைக்கெறேன்!!!!
    ஆனந்தசங்கரி பேக்கரி மாமாவுக்காக அழுகிறார், மங்கையற்கரசி எதற்காகவோ அழுகிறார்…ஆனால் இதே பேக்கரிமாமாவுக்கெதிராக சங்கரி என்ன சொன்னார் எனவும், சிங்களவனின் தோலில் செருப்புத்தைக்கவேண்டும் என மங்கையற்கரசி சொன்னதாக வந்த செய்தியையும் நினைத்துப்பார்க்கிறேன்!!!!
    பிரச்சனை எனது சீரணிப்பல்ல, பலரின் சீரணிக்கமுடியாத ,சீ..சீ..இந்தப்பழம் புளிக்கும் ஏவறை!!!!!

  18. //..விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் செய்தவைகைளை ஒட்டுமொத்த சமூகம் அல்லது மிகப்பெரும்பான்மை வலு மெளனமாக அமைதிகாக்கும்போது அது அங்கீகாரம்தான். ஒட்டுமொத்த சமூகத்தையும் அத போய்ச்சேரும்தான் என்பதில் என்ன சந்தேகம் வேண்டிக்கிடக்கிறது?…//

    சந்தேகம் உடைந்து உண்மை தெரிகிறது. நன்றி சிவராஜன்!

    பாலஸ்தீனர்களின் மீதான அடக்குமுறை, இஸ்ரேலின் அடாவடி, அதற்கான அமெரிக்காவின் வெளிப்படையான ஆதரவு, ஐரோப்பிய கள்ள ஆதரவு, மற்றைய நாடுகளின் மெளனம், ஒட்டுமொத்த முஸ்லீம்களின் மீதான அவநம்பிக்கை, மூன்று சந்ததிகளாக அகதிமுகாம்களில் வாழும் பாலஸ்தீனியர்களின் அவல வாழ்வு, எண்ணெய்வள நாடுகளின் இரட்டை வேடம், யாசிர் அரஃபாத்துக்கு நோபல் பரிசு பம்மாத்து, இப்படியான அநீதிகளை நினைத்து வேதனையும் அறச்சீற்றமும் அம்மக்களுக்கு தர்மீக பொருளாதார ஆதரவு வழங்குவதா அன்றி நான் வாழும் மேற்கு நாட்டுக்கு விசுவாசமாக இருப்பதா என்ற மனக்குழப்பமும் கொண்டிருந்தேன்.
    இதெல்லாவற்றுக்கும் யூதர்களுக்கு இழைக்கப்பட்ட 2000 வருட அநீதியும் ஒட்டுமொத்த சமூகத்தையும் போய்ச்சேரும்தான் என்பதில் என்ன சந்தேகம் வேண்டிக்கிடக்கிறது என்று கேள்வி எழுப்பி
    குருஷேத்திர அருச்சுனனுக்கு தெளிவை ஏற்படுத்திய பார்த்தசாரதிபோல் வந்து என்னை மனக்குழப்பங்களில் இருந்து தெளிவு படுத்தி விடுவித்த சிவராஜனே நன்றி!!!!!

  19. “இப்படியான அநீதிகளை நினைத்து வேதனையும் அறச்சீற்றமும் அம்மக்களுக்கு தர்மீக பொருளாதார ஆதரவு வழங்குவதா அன்றி நான் வாழும் மேற்கு நாட்டுக்கு விசுவாசமாக இருப்பதா என்ற மனக்குழப்பமும் கொண்டிருந்தேன்.”

    என்…னா புலுடா…
    சரி எப்படியோ ஒருத்ததனையாவது தெளியவைத்த திருப்தி எனக்கு.

  20. ரூபன் நான் இது வரைக்கும் உங்களுக்கான பதிலகளை கொடுத்ததுநீங்கள் குறைந்த பட்சம் சில விடையங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் எனநான் தப்பு கணக்கு போட்டதனால். மலையக தமிழர் யாழ்ப்பாணத்து உயர் சாதி யினரால் எவ்வாறுநடத்தப்பட்டனர் என்பதற்கு இதனை விட ஆயிரக்கணக்கான சம்பவங்கள் கூறலாம். இதனை ஒரு ஆரோக்கியமான விவாதமாக இட்டு செல்லாமல் உங்களை ஒரு புனிதராக கருதி தனிநபர் சேறு பூசலில் உங்கள் காழ்ப்புணர்வுகளை கொண்டுவந்து உங்களை அடையாளப்படுத்தியதற்குநன்றி. நித்திநிர்மலா வின் அரசியல் புலியிலிருந்து தொடங்குகிறது என்ற உங்களது அறியாமை அல்லது அறிந்து கொண்டு சொல்வது மிகவும் கீழ்த்தரமான அரசியல். நித்தியும்நிர்மலாவும் தமிழ் தேசிய அரசியலில் பங்கு பற்றியது அவர்களது அரசியல் வாழ்க்கையில் ஒரு சொற்ப காலமே. புலிகளுக்கு அவர்கள் ஆதரவு கொடுக்கு முன் பல்வேறு அரசியல் சமூக இலக்கிய நாடக வேலைகளில் ஈடுபட்டிருந்ததை யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல தென்னிலங்கையிலும் பலர் அறிவர். . நித்திநிர்மலா இருவரும் பலர் இயக்கங்கள் என்றால் பொலிசுக்கு பயந்து குலைநடுங்கிய காலகட்டத்தில் தங்கள் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் துணிந்து நின்றவர்கள். அக்கால கட்டத்தில் இவர்கள் உட்பட பல இடது சாரிகள் தமிழ் தேசிய வாதம் முற்போக்கு அம்சம் கொண்டிருக்கிறது எனநம்பி ஆதரித்தனர்.

    இவர்கள் மட்டுமல்ல பல்வேறு இயக்கங்களில் இருந்த பல்வேறு மனிதர்கள் தேசிய விடுதலை என்ற பேரில்நிகழ்ந்த ஜனனாய க மறுப்பு பாசிச் சிந்தனை உட் கொலைகள் ஆகியவற்றால் அமைப்புகளை விட்டு வெளியேறி தங்களது பழையநிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்து கொண்டனர்.

    சிலர் விரக்தியில் அரசியலில் இருந்து ஒதுங்கினர். சிலர் தொடர்ந்தும் செயல் படுகிறனர். தங்களின் இருப்பைநிலைநாடுவதற்காக இவர்கள் தாங்கள் இருந்த இயக்கங்களின் மாபெரும் தவறுகளை விமர்சனத்துக்கு ஆளாக்காமல் இருக்கவில்லை.

    உங்கள் போல் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் மனிதர்களுக்கு பதில் எழுதியதற்காகநான் என்னை மீண்டுமொருமுறை செருப்பால் அடித்து இத்துடன் உங்களுடன் கருத்து பரிமாறல் செய்வதை தவிர்த்து கொள்கிறேன். அதுவே உங்களின்நோக்கமாயிருக்கும். எனவே தாராளமாக சந்தோசப்படுங்கள்.

  21. ராகவன்,
    உங்களின் வேதனை மிகுந்த பதில் கண்டேன்.
    நீங்களாகவ்வே என்னைப்பற்றி ஏற்படுத்திக் கொண்ட கற்பிதத்துக்கு நான் பொறுப்பல்ல.
    மலையகத்தமிழரின் சாபக்கேட்டு வாழ்க்கைக்கு ஈழத்தமிழரின் பொறுப்பு மலையிலும் பெரியது என நீங்கள் சொல்லி தெரிய வேண்டிய நிலையில் நான் இல்லை. ஜீ.ஜீ.பொன்னம்பலம் பற்றிய எனது அறிதலே அவர்தலைமையில் மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. அதுவே அந்நாட்களில் கூட்டணிக்கும் பின்நாட்களில் புலிகள் தவிர்ந்த இயக்கங்களுக்குமான எனது ஆதரவுக்கும் காரணமானதும் கூட. ஆனால் அப்போதைய காலங்களில் புலிகளின் ‘ஜேம்ஸ் பொண்ட்’ தனத்துக்கு குடை பிடித்தவர்கள் இன்று கதை சொல்வதும் எமக்கு புலியை அடையாளம் காட்டுகிறேன் என்று படம்காட்டுவடும் தான் எரிச்சலை வரவழைக்கிறது. இதற்கு நல்ல உதாரணம் சங்கரி!!!!
    வேறும் பல ‘உதாரண புருஷர்கள் ‘ இன்று நாளொன்றுக்கு டசின் கணக்கில் தொன்றுகிறார்கள்!!!
    எல்லோரையும் ஏத்தி விட்டு இன்று யூனிசெஃப் விருது வாங்குகிறார் சங்கரி. இலங்கைத் தமிழ்சங்கத்துக்காக இரவிரவாக பத்திரிகை ‘எடிட்’ செய்த ஹூல் இப்ப்போது அது வெறும் ‘வெள்ளாள சங்கம்’ என்கிறார்!!!
    ஐ.பி.கே.எஃப் இன் ஹெலியிலும் ஜீப்பிலும் வலம்வந்த புஷ்பராஜா தான் எப்போது மயிலிட்டியில் கள்ளுக்குடிப்பேன் என ஏங்கி ஈழப்போராட்டத்துக்கு சாட்சியம் கூறி ஆனந்தவிகடன், குமுதம் புகழுடன் இறந்துவிட்டார்
    இந்தப்பட்டியல் நீண்டு கொண்டுதான் போகிறது.
    நிர்மலா ரீச்சரின் முன்னை நாள் செயற்பாடுகள் நான் அறிந்தவனல்ல. அவரது போராளி அறிமுகம் ‘புலிப்புண்’ணுக்கு மருந்து போட்டு மாட்டுப்பட்டதில் இருந்து தான் ஆரம்பம். அதற்கு முன்னால் ரெயில்ரோட் குறொஸிங்கில் சைக்கிள் தூக்கி கடக்கும் துணிச்சலுள்ள ரீச்சர் என்றுதான் தெரியும். பின்னர் மட்டக்களப்பு ஜெயில் பிரேக் ‘வீர தீர’ பேட்டி!!!எனது பிழையான அறிதலுக்கு யார் பொறுப்பு? அவர் பங்கும் உண்டல்லவா? அவர்பற்றிய மாயையை அவர் என்றும் கிழிக்க முயலவில்லையே? இன்றுவரை அதே நிலை தானே?
    No More Tears Sister படத்தில் (Docu-drama) அவரை சாதாரண யாழ் நடுத்தர வார்க்க பெண்மணி எனக்கூறி அவரும் அவரது சகோதரிகளும் மேற்கத்தைய பாணியில் பியானோ வாசிக்கும் காட்சியையே காட்டினார்கள். என்னுடன் படம் பார்த்தவர்களில் ஒருவர் அவரின் குடும்ப சினேகிதர். அவர் படம் முடிவுற்றவுடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ஏன் நிர்மலா அவ்வாறான விம்பத்தை அனுமதித்தவர்? படத்தின் இயக்குனரிடம் சொல்லியிருக்கலாமல்லவா? நிர்மலாவை அறியாதோர் (1985 இன் பின்னர் பிறந்தோர்) பியானோ வாசிக்கும் மேற்கத்தைய நாகரிக குடும்பமாக அவர்களை கருத இடமுண்டு தானே? அத்துடன் அவ்வாறுதான் யாழ் நடுத்தர குடும்பங்கள் இருந்தன எனவும் நினைக்க இடமுண்டல்லவா?
    இந்த காட்சிக்கு காரணம் நாமறிவோம்!!!!!
    மேற்குலக பார்வையாளனுடன் அடையாளப்படுத்துவதே!
    அடடா…ஒரு அமைதி தவழும் ‘குருவிக்கூட்டு’ குடும்பத்தை ‘பாசிசப்புலி’ கலைத்து விட்டது என்ற பார்வையைக் கொடுக்கத்தானே?
    சொல்ல மாட்டீர்கள் ! ஏனென்றால் pre-emtive strike ஆக ‘கருத்து பரிமாறல் செய்வதை தவிர்த்து கொள்கிறேன்’ எனக்கூறி விட்டீர்கள்!
    நீங்கள் இன்றுதான் செருப்பால் அடிக்கிறீர்கள். நாம் என்றோ எம்மை அடித்து விட்டோம்! ஏன் என விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *