வேட்டையாடுதலும் வேசம்போடுதலும்

-சுகன் மார்க்ஸியத்தின் எதிரிகள் மார்க்ஸியத்துட்புகுந்து அதை நீர்த்துப்போகச்செய்யவும் அதன் சாரத்தை அதிலிருந்து பிய்த்தெறியவும் முயல்வது இப்போது புதிதாகத் தொடங்கிய ஒன்றல்ல. மார்க்ஸியம் எப்போதுமே அதனது உள்ளும் புறமுமான எதிரிகளின் சவால்களுக்கு முகங்கொடுத்து வந்திருக்கிறது. விமர்சனங்களிற்கு முகங்கொடுக்கவும் கால தேச வர்த்தமானங்களிற்கேற்பத் தன்னை அடையாளப்படுத்தவும் தனது போராட்டப்பாதையைத் தேர்ந்துகொள்ளவும் மக்களையும் மக்களின் எதிரிகளையும் இனங்கண்டு மக்களிலிருந்து கற்றுக்கொண்டும் கற்றுக்கொடுத்தும் வருகிறது. பாரில் கடையர், சமூகத்தில் ஒதுக்கப்பட்டோர் என தனது அடித்தளத்தில் நின்று அது ஒட்டுமொத்த மானுட மேன்மைக்காக இயங்குகிறது. […]

Continue Reading

பின்நவீனத்துவ நாடோடிகள் III

                  மற்றுமொரு நாளில் வடகிழக்கில் தென்கிழக்கில் மேற்கில் மூன்றுமுறை பல்லிசொல்ல உறவினர்கள் மரணம் எனவுரைக்கும் வருட பஞ்சாங்கம் வந்துபோனது   தொடுவானம் தெரியாத அடைத்த இருளில் திசையும் தெரியவில்லை துக்க வரவுரைக்கும் காகமும் இங்கில்லை மயில் வெள்ளையாடை தாமரைப்பூ நீரோற்பலம் கனவினிற்காண   புதிய பஞ்சாங்கம் வாங்கியாயிற்று கனவுவர மறுக்கிறது (தாயகம்)   1:உங்களுக்கு சுவிஸோ பரிஸோ பிடிச்சிருக்கு!: அது சொர்க்கமெல்லோ!  2:நீ கனோன் ரியாட்சியை நம்பாதே!அவள் உனக்கு விசா எடுத்துத் தரமாட்டாள்!அவள் உப்பிடி நிறைய சிறீலங்கனைச் சுத்தியிருக்கிறாள்!

Continue Reading