காணவில்லை!

அறிவித்தல்கள்

பிரித்தானியாவில் Watford நகரத்தில் 108, Liar Road என்ற முகவரியில் வசித்து வந்த படத்திலிருக்கும் யமுனா ராஜேந்திரனைக் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் காணவில்லை.

மார்ச் மாதம் 11ம் தேதி ‘தேசம்’ இணையத்தளத்தில் “ஷோபா சக்திக்கும் சுகனுக்கும் பத்து நாளில் பதிலோடு வருகிறேன்” என்று சூளுரைத்துவிட்டுச் சென்றவரை நாற்பது நாட்களாகியும் காணவில்லை. கடைசியாக இவர் நடிகர் ரகுவரனின் செத்தவீட்டில் கண்ணைக் கசக்கிக்கொண்டு திரிந்ததாகவும் தகவல்கள் உள்ளன.

இவர் ஒளிந்திருக்கும் இடமோ அல்லது இவர் பற்றிய தகவல்களோ தெரிந்தவர்கள் ‘தேசம்’ இணையத்தளம் அல்லது ‘சத்தியக் கடதாசி’ இணையத்தளத்திற்கு அறிவிக்கவும். இரகசியங்கள் பாதுகாக்கப்படுவதோடு சன்மானங்களும் வழங்கப்படும்.

நன்றி

19 thoughts on “காணவில்லை!

  1. மிகவும் சிறந்த எழுத்தாளர். அவர் காணாமல்போன செய்தி மிகவும் வருத்தத்துக்குரியது.

  2. இது ஒரு நாகாPகமான செயலாக தொpயவில்லை.ஒடுக்கப்பட்ட
    மக்களுக்காக குரல் கொடுப்பதில் முன்ணணி பாத்திரம் வகிப்பவரென
    நினைத்தேன். பின்ணணியென நிரூபித்திருக்கியள்.

  3. சோபாசக்தி வேண்டாம் விட்டுடுங்க

  4. ஒரு ஆக்கமுள்ள விடயமில்லை. வெற்றிடங்களை நிரப்ப எத்தனையோ விடயங்கள் இருக்கிறது.

  5. இன உறவு தொப்பில் கொடி உறவு என்றெல்லாம் ஒரு மாய சிந்தனைக்கு அப்பால் யதார்த்ததில் தனி மனித சுய இன்பம் கருதி இலங்கை தமிழ்ச்சமூகத்திற்குள் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்த புலிகள்> அதன் தலைவன் இனி எங்கே பூந்து செயற்படப்போகிறார்.

    ஜனநாயக அரசியல் நடத்தும் குழுக்கள்> மற்றும் ஆயதங்களை விட்டு ஜனநாயகத்திற்குள் வரும் குழுக்களின் ஐக்கியம் பற்றிய அழுத்தம்> அவா;களின் எதிர்காலப் பாதகாப்பு> இனப்பிரச்சினை தொடர்பில் அவர்களின் வெளிப்படையான கொள்கை வெளிப்பாடு> சிங்கள் மக்கள்> முஸ்லீம் மக்களின் உடனான நல்லுறவைப்பேணும் வழிமுறைகள் மற்றும் அதனைக்கட்டியமைக்கும் செயல்முறைகள் பற்றிய அழுத்தம்> சா;வதேச மட்டத்திலான மனித உரிமை பாதுகாப்பு மற்றம் மனித நேய செயற்பாடுகள் போன்றவை அடிப்படையில் நாம் கலந்துயைாடலக்களை அழுத்தக்கோரிக்கைகளை இனியாவது முன்வைத்து பேச ஆரம்பித்தோம் என்hல் ஆக்கமுள்ளதாக இருக்கும்.

    மூன்றாவது தரத்தில்> மூன்றாவது மனிதாக> பார்வையாளனாக நின்று கருத்துச் செல்லும் ஆட்களை சாpயான முறையில் புரிந்து உள்வாங்கி மேற்குறிப்பிட் செயல்பாடுகளில் இணைத்துகொள்வோமானால் முன்னோக்கிய பாதையில் செல்ல முடியும் என கநினைக்கிறேன்.

  6. சோபாசத்தியின் எழுத்து நடையால் ஆகாசிக்கப்பட்டவனில்
    நானும் ஒருவன் இப்பதான்தொpகிறது அபினை சாப்பிட்டுவிட்டேன்
    என்று.
    உங்களுக்கு உரியது வாள் கத்தி சோடாப் போத்தல் சைக்கில்செயின்

    யமுனா எங்கே? நீங்கள் எங்கே?

    நன்றி. சத்தியெடுத்தகடுதாசி.

  7. ரகுவரனின் மரணத்தின் பின்னர் நாலைந்து குளிசைப் போத்தில்களுடன் இவர் மனம்சோர்ந்து திரிந்ததாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது லேய்ட்டன்ஸ்டோன் என்னும் இடத்தில் ஒழிந்திருப்பதாக கேள்வி.

    சன்மானம் எவ்வளவு என்று தெரிவித்தால் அவர் ஒழிந்திருக்கும் சரியான முகவரியை கண்டுபிடித்து தரலாம்.

  8. உந்தக் குசும்புதானே வேண்டாமென்றது. லண்டனை விட்டிட்டுப்போறதுக்கு அவர் ஒண்டும் விசரனில்லை. உங்கை எங்கையாலும் குண்டி தட்டிச் சிரிச்சுக்கொண்டு திரிவார்.

  9. இனி கோடம்பாக்கத்தில் யாராவது மண்டையப்போட்டால் அன்னார் சில நேரம் வெளியில் தலைகாட்டக்கூடும்…..

  10. வட்போட் பார்க் ஒண்டிலை பின்நவீனத்துவமும் ஜ.பி.சி. வானொலியும் எண்டொரு புத்தகத்தை தலைகீழாகப் பிடிச்சு யோசிச்சுக் கொண்டிருந்ததை போன சனிக்கிழமை ஆக்கள் கண்டிருக்கினம். ஏதாவது புதுப் புத்தகம் எழுதிறாரோ தெரியாது.

    உங்கள் ரெண்டு பேருக்கும் பதில் எழுதிறதுக்கு காசு குடுப்பியள் எண்டால் எழுதுவாராம்.

  11. எப்போ கல்வெட்டு அடிக்கப்போறியள்?

  12. கற்பூர வாசனையை கழுதையறிமா?
    நிச்சியமாக கற்பூரம் யமுனா ராயேந்திரன்தான்.

  13. தமிழ் விமர்சர்களில் பிணங்களின் மீது ஏறி நின்று சிறுநீர்கழிக்க இருவரால் மட்டும்தான் முடியும் ஒருவர் இராயாகரன் மற்றய பாவி சிறீரங்கன் இன்னும் தமிழில் உயிருள்ள மனிதர்களின் மீதும் உயிரற்ற மனிதர்களின் மீதும் மூத்திரம் பெய்ய இருவரால் மட்டுமே முடியும் ஒருவர் சோபாசக்தி மற்றய பாவி சுகன்

  14. // கற்பூர வாசனையை கழுதையறியுமா ?
    நிச்சயமாக கற்பூரம் யமுனா ராயேந்திரன்தான் – சந்திரன் ராஜா //

    ஜமுனா ராஜேந்திரன் இருக்கும் இடத்தை நீங்கள் எப்படி அறிய முடியும் என்பதை வெகு அழகாக சொல்லியிருக்கிறீர்கள். அற்புதம். நன்றி.

  15. // எப்போ கல்வெட்டு அடிக்கப்போறியள் ? – ரகு //

    இப்ப கல்வெட்டு அடிக்கிறேலை. இன்னும் 10 நாள் விட்டுப்பாப்பம். அதுக்குப் பிறகு ஒரு அஞ்சலி உரை விடுவம்.

  16. யமுனா ராயேந்திரன் கண்டுபிடிக்கப்பட்டதும் தலித்தியத்திற்காண
    இலக்கியபணியில் அரைவாசி பூர்த்தியடைகிறது.மிகுதிஅரைவாசி
    எது எப்படி யார் என்பதை அறியத்தரவும்.

    சும்மா சொல்லக்கூடாது இலக்கியபணி சூப்பர்!!!
    வெளுத்து வாங்கிறீங்க ஐயா.

  17. யமுனா ராஜேந்திரன் இன்னமும் இருக்கிறார். தேசம்.நெட். இல் பின்னூட்டம் செய்துள்ளார். பதில் எழுதினால் வேறு சில விசயங்களும் வெளிவருமென பயப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *