வம்பும் வரலாறும்

க.கைலாசபதியைக் குறித்த ஒரு சாதிய வம்புச் செய்தி ஏறக்குறைய அய்ம்பது வருடங்களுக்கு மேலாகவும் தமிழ் இலக்கிய உலகில் சோர்வில்லாமல் சுற்றிவருகிறது. என்.கே. ரகுநாதன் எழுதிய ‘நிலவிலே பேசுவோம்’ சிறுகதையை ஒட்டியே இந்த வம்பு எழுந்தது. ‘நிலவிலே பேசுவோம்’ கதையின் மைய இழை இதுதான்: சிவப்பிரகாசம் என்ற ஆதிக்க சாதியைச் சேர்ந்த பிரமுகர் தீண்டாமை ஒழிப்புக் குறித்துப் பொதுவெளியில் ஆவேசமாக உரை நிகழ்த்துகிறார். ஆனால், தனது வீட்டுக்கு வரும் தாழ்த்தப்பட்டவர்களை வீட்டுக்குள்ளே அனுமதியாமல் “நிலவிலே பேசுவோம் வாருங்கள்” என […]

Continue Reading

அம்மணப் பூங்கா

தவபாலன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த மனிதரின் முகத்தைப் பார்த்தபோது, எனது கண்கள் தாமாகவே திடுமென இறுக மூடிக்கொண்டன. ஏதோவொரு கிரேக்கப் புராணக் கதையில் வரும் உருவமொன்றுதான் என் ஞாபகத்தில் மின்னலாயிற்று. நான் அச்சத்துடனோ அல்லது தயக்கத்துடனோ கண்களைத் திறந்தபோது, தவபாலன் முன்போலவே தனது தலையையும் முகத்தையும் மறைத்திருந்தார். அவரது விழிகள் மட்டும் தணல் போலத் தகித்துக்கொண்டிருந்தன. அப்போது அந்தப் பூங்காவின் மேற்குப் பகுதியிலிருந்த இடிந்த கோபுரத்திலிருந்து மூன்று தடவைகள் மணியொலித்தது. எனக்கு இந்த நகரம் முற்றிலும் […]

Continue Reading

வாழ்தலுக்கான இச்சை

-ஸ்ரீநேசன் ஷோபாசக்தியின் “இச்சா” நாவலை எடுத்து மூன்று நாட்களில் படித்து முடித்தேன். ஏற்கனவே அவரது கொரில்லா, ம் -நாவல்களின் வாசிப்பு அனுபவமே இந்நாவலை வாசிக்கத் தூண்டியது. நண்பர் சீனிவாசன் நாவலை அன்பாகத் தந்து ஓராண்டை நெருங்குகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின்பான ஓய்வில் வாசிக்கப் பல நூல்களைத் தேர்ந்து கொண்டேன். அவற்றுள் இந்நாவலும் இருந்தது. சிகிச்சைக்குப் பின்பான இந்த அரை ஆண்டுக்காலத்தில் பல முக்கியமான நூல்களை வாசித்து முடித்திருக்கிறேன். ஆயிரம் பக்கத்தை நெருங்கிய ‘அசடன்’ நாவல் உட்பட. நினைக்க […]

Continue Reading

கற்பிதங்களின் கீழே

முன்னுரை: சுருக்கப்பட்ட நெடுங்கதைகள் / குமாரி / தமிழில் – ரிஷான் ஷெரிப் / வம்சி பதிப்பகம். சிங்களவரும் மனிதநேயப் பணியாளருமான குமாரி அவர்களின் இந்நூலை வாசிக்கப்போகும் தமிழ் வாசகர்களில் அநேகருக்கு ஈழப்போராட்டம், இயக்கத் தலைமைகள், போராளிகள் குறித்துப் புனிதமான கற்பிதங்கள் இருக்கக்கூடும். ஈழப் போராட்டம் ஒரு பொற்கால வரலாறாகவும், அதனுடைய தலைவர்கள் காவிய நாயகர்களாகவும் இவர்களின் மனதில் ஆழப் பதிந்துமிருக்கலாம். இந்தக் கற்பிதங்களைக் கொண்டாடும் இலக்கியவாதிகளும், ஆய்வாளர்களும், ஊடகவியலாளர்களும் தங்களது விசுவாசத்தை அழகிய எழுத்துகளாக உருமாற்றி, […]

Continue Reading

அகதிகளுக்கான பைபிளை எழுதுகிறேன்

வனம் (பெப்ரவரி 2021) இதழுக்காக நேர்காணல் செய்தவர்கள்: சாஜித் அஹமட் – ஷாதிர் யாசீன். இருபது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தும் எழுத்தில் இயங்கி வரும் நீங்கள்; தற்கால இலக்கியப் போக்குகளால் சலிப்படைகிறீர்களா? சலிப்பு என்பதற்கு என் வாழ்வின் எந்தக் கட்டத்திலும் இடமே கிடையாது. சலிப்பையோ, விரக்தியையோ, உளச் சோம்பலையோ ஒருபோதுமே நான் உணர்ந்ததில்லை. கற்பனைத் திறன் உள்ளவனுடைய வாழ்க்கை வேறு. உலகம் வேறு. அவனுக்கான ஒழுங்குகளும் பழக்கவழக்கங்களும் ஒழுக்கமும் வேறு. நான் அங்கேயேதான் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறேன். பலரால் மகிழ்ச்சியை […]

Continue Reading

முப்பது காசுப் புரட்சி

‘ஆடுதல், பாடுதல், சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர், பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவார்’ என்ற பாரதியின் வாக்கை மகுட வாக்கியமாகக்கொண்டு, 1966 ஓகஸ்ட் தொடங்கி அரை நூற்றாண்டு காலம் வெளிவந்த ‘மல்லிகை’ இதழின் தனி இயங்குசக்தியாக விளங்கியவர் மறைந்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா. அவர் ‘மல்லிகைப் பந்தல்’ என்ற பதிப்பகத்தையும் உண்டாக்கி, அய்ம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டார். கடுமையான யுத்தச் சூழலிலும், விமானக் குண்டு வீச்சுகளுக்குக் கீழேயும் மல்லிகை ஓயாமல் மலர்ந்தது. மொத்தமாக […]

Continue Reading

மூமின்

இன்று அதிகாலையில், முஹமெட் அஸ்லம் வீட்டிலிருந்து புறப்பட்டபோது, அவனது பெயர் நாகநாதன் முருகவேள் துலீப் என்றுதான் இருந்தது. ஒரு மணிநேரத்துக்கு முன்புதான் அவன் பெயரை மாற்றியிருந்தான். பள்ளிவாசலிலிருந்து அவன் வெளியே வந்தபோது, பள்ளிவாசலுக்கு எதிரே நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருக்கும் காவல்துறையினரின் இரண்டு வாகனங்களுக்குள்ளும், பொலிஸ்காரர்கள் கைகளில் நவீனரகத் துப்பாக்கிகளுடன் அமர்ந்திருந்தார்கள். அந்த சிறிய பள்ளிவாசல், பாரிஸின் புறநகரான ‘லு ரன்ஸி’யில் சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்தது. பள்ளிவாசலைச் சுற்றி அரைக் கிலோ மீட்டருக்கு வெறும் புற்தரைதான். பள்ளிவாசலை குடியிருப்போடு […]

Continue Reading