நோயா துன்பம்? மருந்தா துன்பம்? – வ.அழகலிங்கம்

சிங்களவன் தமிழனுக்கும் கட்டாயக் கல்வியையும் கட்டாய நோய்தடுப்பையும் திணித்தான். தமிழனோ கட்டாயப் பிள்ளைபிடியைப் பரிசளித்தான், இதுதான் எங்களது சரித்திரம்! வ.அழகலிங்கம் இலங்கை முதலாளித்துவ இராஜபக்க்ஷ அரசாங்கம் தொப்பிக்கலை வெற்றியைச் சொன்ன மறுகணமே திருகோணமலையில் 1600 ஏக்கர் நிலத்தை அரச மற்றும் தனியார் பொருளாதார நிறுவனங்களுக்கு வழங்கி ஒரு பொருளாதார வலயத்தை உண்டுபண்ணப் போவதாக சன்டேஒவ்சேவர் (15.07.2007) செய்திவெளியிட்டுள்ளது. இந்தக் கூற்றை (BOI) முதலீட்டுத் திணைக்களப் பொது முகாமையாளர் எல். டிக்மன் கூறியுள்ளார். அங்கே 15 மில்லியன் ரூபா […]

Continue Reading

Islamophobia – சேனன்

ஹிஜாப் (Hijab) தடையும் இஸ்லாமிய எதிர்ப்பும் -சேனன் உலகெங்கும் வலதுசாரி அரசுகளும் ஊடகங்களும் ஆசிய, ஆபிரிக்க மக்களின் குறிப்பாக முஸ்லீம் மக்களின் மீதான தாக்குதலை ஓங்கி நடத்துகின்றன. “எங்களது கலாச்சாரத்துக்கு உட்பட்டு நடவுங்கள். அப்படி முடியாதென்றால் இங்கு வர வேண்டாம்” என்று ஏதோ தகப்பன் தனக்கு எழுதி வைத்த காணித்துண்டு போல் இங்கிலாந்து பற்றி பிரதமர் அண்மையில் கூறியது அனைவரும் அறிந்ததே. ஈராக்கில் அநாவசியமாக மில்லியனுக்கும் மேலான அப்பாவி மக்களின் சாவுக்கு நேரடிக்காரணமான இந்த நாய் அமெரிக்க […]

Continue Reading

G-8: – வ.அழகலிங்கம் – தமிழரசன்

அடுத்த G-8 மகாநாடு அந்நியக் கிரகத்தில் வ.அழகலிங்கம் தமிழரசன் G-8 மகாநாட்டில் ஓர் அரசுத் தலைவர் இரண்டு நிமிடங்கள் உரையாற்றுவதற்கிடையில் நாற்பது குழந்தைகள் பசியால் இறந்துவிடுகின்றனர். G-8 மகாநாட்டில் உலகின் மக்கள் தொகையின் பன்னிரெண்டு சதவீதத்தையுடைய 8 நாடுகளைச் சேர்ந்த அரசுத் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஒன்றுகூடிய இந்த ஏகாதிபத்தியவாதிகள் உலக மக்களைப் பற்றிப் பேசினார்கள். அவர்களை அரசியல் – பொருளாதார- இராணுவரீதியில் கையாள்வது பற்றித் திட்டமிட்டார்கள். இன்றைய நவீனத் தொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டு, இந்த உற்பத்தி […]

Continue Reading

இன்மை

கலை இலக்கியத்தை புரிதலுக்காக வகைப்படுத்தும் வரலாறு மனித நாகரிக வளர்ச்சியின் ஒரு பகுதி. தேர்வு – வகைப்படுத்தல் என்பன தவிர்க்க முடியாத இயங்கியல். சுதந்திரம் என்பது தனித்தியங்குதலாக பரவலாக அறியப்பட்டு விளங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆழமான பார்வையில் – அறிதலில் அனைத்து நுணுக்கங்களையும் இணைத்துத் தெரிவை ஏற்படுத்துவது எல்லா நேரமும் சாத்தியமில்லை. இவ்வகை அறிதலின் சிக்கல் இயலாமையின் காரணமாக பெரிதுபடுகிறது என்ற மேலோட்டமான பார்வை தவறு. நுணுக்கமான வெவ்வேறு உண்மைகளின் தனிப்பட்ட பண்புகள் தலைதூக்கி நிற்கும் கட்டுமானத்தை அப்படியே […]

Continue Reading

பரபாஸ் – ஷோபாசக்தி

“பொந்தியோ பிலாத்து அவர்களை நோக்கி; எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாஸையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ என்று கேட்டான்” (மத்தேயு 27:18)  நீங்கள் சந்தியாப்புலத்திற்குப் போயிருக்கமாட்டீர்கள்! இப்போது சந்தியாப்புலத்தில் கடற்படையினர் மட்டுமேயிருக்கிறார்கள். உருக்கெட்டுக் கிடக்கும் சந்தியோகுமையர் தேவாலய மண்டபத்தில்தான் படையினரின் தலைமையகம் இயங்குகின்றது. சந்தியாப்புலத்தின் மணலில் மனிதர்களின் வெற்றுப் பாதங்கள் பதிந்து இருபத்தொரு வருடங்களாகின்றன. படையினரின் பூட்ஸ் தடயங்கள் மட்டுமே இப்போது அந்தக் கிராமத்தில் பதிந்திருக்கின்றன. கால்களால் நடந்து செல்லும் மிருகங்கள்கூட சந்தியாப்புலத்தில் கிடையாது. வயிற்றினால் […]

Continue Reading

நேர்காணல்: ஷோபாசக்தி

மே 2007, புதுவிசை இதழில் வெளியான நேர்காணல். உரையாடல்: நீலகண்டன், சிராஜுதீன் Rogue படைப்பாளி எனத் தமிழ்ச் சூழலில் உங்களைப் பற்றிய விம்பம் குறித்து? அப்படியா சொல்கிறார்கள்? சமூக ஒழுக்கங்கள் எனச் சொல்லப்படுபவற்றை நான் கடை பிடிக்காததினாலும் சொந்த வாழ்விலும் எழுத்திலும் காதல், சேர்ந்து வாழ்வது, குடும்பம், குழந்தைகள் போன்றவற்றை நான் மறுத்து வருவதாலும் வேலை, தொழில் போன்றவற்றில் அக்கறையற்றிருப்பதாலும் எனது போதைப் பழக்கத்தாலும் என் குறித்து இப்படியொரு விம்பம் ஏற்பட்டிருக்கலாம்.ஆனாலும் கட்டாய உழைப்பை வலியுறுத்தும், மனிதர்களைத் […]

Continue Reading

சுகனின் கவிதைகள்

    எண்ணைக் கப்பல் உடைந்து தன் உடல் முழுதும் மசகெண்ணையைப் பூசியபடி கரையொதுங்கும் ஒரு கடற்பறவையைக் கழுவி உயிர் பிழைக்க வைக்கிறார் ஒருவர். *** பல்கேரியாவின் எல்லைவழியே டேன்யூப் ஆற்றைக் கடந்தவர்கள் கருங்கடலில் மூழ்கிக் கலந்து போனார்கள். *** நாட்சம்பளத்திற்குக் கோப்பை கழுவப்போகும் விசாவற்ற பிரபாகரன் இன்றும் இனியும் உனக்கு வேலையில்லையெனச் சொன்ன முதலாளி மொழி கேட்டு ரெஸ்ரோரண்ட் வாசலில் திகைத்துப்போய் நிற்கிறான். அத்துடன் அவன் காணாமற் போகிறான்.     ஒருமுறை காட்டில் வேட்டைக்குப் […]

Continue Reading