சிறுமி நேயா

  அப்பா நான் உங்களைக் கொலை செய்யப் போகிறேன் சரி மகளே முத்தம் தா இல்லையப்பா….. குருதி கசிய சரி மகளே முத்தம் தா அப்பா….. உங்கள் உடலைச் சிதைத்து சரி மகளே முத்தம் தா அப்பா…… அப்பா….. நிஜமாகவே சரி மகளே முத்தம் தா அப்பா இந்த விளையாட்டு பிடிக்கவில்லை வேறு விளையாட்டு சொல்லித்தாருங்கள் சரி மகளே முத்தம் தா……… சபிப்பது பற்றிய ஞானத்தைக் கற்றுக்கொள்கிறேனே அப்பா அடம் பிடிக்கிறாள் நேயா விழிகள் குமைய அனுப்பிவைத்தேன் […]

Continue Reading

வேலைக்காரிகளின் புத்தகம்

ரிஸ் மெத்ரோ நிலையமொன்றிற்தான் “Les Bonnes” நாடகத்திற்கான விளம்பரத்தை நான் பார்த்தேன். இந்த நாடகத்தைக் குறித்துப் பிரம்மராஐன் எழுதிய கட்டுரையொன்றை அப்போது நான் படித்திருந்தேன். நாடகப் பிரதியை எழுதிய Jean Genet குறித்துத் தமிழ்ச் சிறுபத்திரிகைகள் மூலம் சில குறிப்புகளையும் அறிந்திருந்தேன். அந்தத் தூய்மையற்ற சிறிய நாடக அரங்கு பாரிஸின் புறநகர்ப் பகுதியிற் தொழிலாளர் குடியிருப்புகளிடையேயுள்ள ஒரு சதுக்கத்திலிருந்தது. நாடகத்தின் இயக்குனர் அரங்க வாயிலில் நின்று நுழைவுச் சீட்டுக்களை விற்றுக்கொண்டிருந்தார். அந்த நாடக அரங்கில் முப்பதிற்கும் குறைவான […]

Continue Reading

ஆதரிப்பீர் செகோலென் ரோயாலை

” நாம் ஒருபோதும் பெயரளவிலான ஜனநாயகத்தை வழிபடுபவர்களாக இல்லை. இதன் பொருள் நாம் எப்போதும் முதலாளித்துவ ஜனநாயக அரசியல் வடிவிலிருந்து, சமூக உட்கருவைப் பிரித்துப் பார்த்திருக்கிறோம். பெயரளவில் சமத்துவம், சுதந்திரம் என்னும் இனிய மேற்பூச்சின் கீழ் உள்ள சுதந்திரமின்மை, சமத்துவமின்மை என்னும் கசப்பான பகுதியினை நாம் எப்போதும் வெளிப்படுத்தியது அந்த இனிய மேற்பூச்சினை புறக்கணிப்பதற்காகவல்ல. மாறாக மேற்பூச்சில் திருப்தி அடைந்துவிடாமல் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்துப் புதிய சமூக உள்ளடக்கங்களை நிரப்ப வேண்டுமென உழைக்கும் வர்க்கத்திற்கு உணர்த்துவதற்காகவே. ஆட்சியதிகாரத்தைக் […]

Continue Reading

கொக்கட்டிச்சோலை -சேனன்

கொக்கட்டிச் சோலை ஒரு பாலை – அங்கு நான் கைககட்டிச் சீவித்த வேளை – ஒரு விடியாத காலை மம்பெட்டி கொண்டாந்து தருவார் – மத்தியானம் சோறு தண்ணி தந்து தோட்டப்பக்கம் கைகாட்டி விடுவார் – பேந்து வெள்ளாட்டி வருவா தேத்தண்ணியோட – பேணி இல்லாட்டி என்ன உந்தப் பிளாவப்பிடி என்பா பிஞ்சுப்பனை செத்துப்போச்செண்டா கவலை அஞ்சு செடி கருகிப்போச்செண்டா கவலை மாய்ஞ்சு மாய்ஞ்சு நானுடையும் வேளை கொஞ்சம்கூட மனக்கவலை இல்லை அவவுக்கு புதுக்கவிதை போலவொரு பிள்ளை […]

Continue Reading

அன்னையரும் தலைவனும் -சுகன்

கங்காதேவி நான்காவது முறையாகவும் கருத்தரித்தாள். மூன்று மாவீரர்களைப் பெற்ற தாயென்று ஏற்கனவே அவள் அறியப்பட்டிருந்தாள். இம்முறை பணிமனையிலிருந்து சேவகர்கள் வந்து குழந்தை பிறந்தவுடன் வாங்கிப் போயினர். ஏனெனில் கங்காதேவி தானே குழந்தையைக் கொண்டுவந்து போராட்டத்திற்குத் தருவாள் என்று அவர்கள் நம்பத் தயாரில்லை. கங்கா தேவி ஐந்தாவது முறையாகவும் கருத்தரித்தாள். சூரியப் புதல்வனே ! சூரியப் புதல்வனே ! என கங்கா தேவி ஓலமிட்டாள் . இரணைக் குழந்தைகளைப் பெற்றாள் . இம்முறை தலைவரே வந்து கங்கா தேவியை […]

Continue Reading

ஓயாத அலைகள்

‘எழுதுவதால் கொல்லப்படக்கூடிய சூழலில் நாங்கள் வாழ்கிறோம்’ என்றொருமுறை ஷோபாசக்தி எழுதியபோது, புலிகள் ஆதரவு எழுத்தாளர்களும் புலி ரசிகர்களும் இது கற்பனை, தேவையில்லாத அச்சம் என்றெல்லாம் அறிவுரைகளை எழுதினார்கள். பாஸிசத்திற்கு எதிராகப் பேசுபவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் அவர்களைச் சூழவும் நுணுக்கமாக விரிக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு வலையையும் ஒரு பாஸிச எதிர்ப்பாளராக வாழ்வதால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அட வெட்கங்கெட்டவர்களா! உங்கள் சகோதரன் ஒருவன், உங்கள் சகோதரி ஒருத்தி தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக வைத்த ஒரேயொரு காரணத்துக்காகவே அச்சுறுத்தப்படும்போது, தாக்கப்படும்போது, […]

Continue Reading

மதிப்பு மறுப்பறிக்கை

“எனக்கு இப்போது ஐம்பத்தொரு வயது, என்றாலும் நான் தொடர்ந்தும் பாலியல் தொழிலாளியாகவே இருக்க விரும்புகிறேன்” என்பதுதான் அந்தச் சுயசரிதை நூலின் தொடக்க வரிகள். மலையாளத்தில் ஒரு ‘லைமீக தொழிலாளியினுட ஆத்ம கதா’ என்ற தலைப்பில் நளினி ஜமீலா எழுதி வெளியிட்ட சுயசரித நூலைத் தமிழில் குளச்சல் மு.யூசுப்பின் மொழிபெயர்ப்பில் ‘ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை’ என்ற பெயரில் காலச்சுவடு பதிப்பகம் ஜனவரி மாதம் வெளியிட்டுள்ளது. கடந்த முப்பது வருடங்களாகப் பாலியல் தொழில் செய்துவரும் நளினி ஜமீலா பாலியல் […]

Continue Reading