கொக்கட்டிச்சோலை -சேனன்

தோழமைப் பிரதிகள்

கொக்கட்டிச் சோலை ஒரு பாலை – அங்கு நான்
கைககட்டிச் சீவித்த வேளை – ஒரு விடியாத காலை

மம்பெட்டி கொண்டாந்து தருவார் – மத்தியானம்
சோறு தண்ணி தந்து தோட்டப்பக்கம் கைகாட்டி விடுவார் – பேந்து
வெள்ளாட்டி வருவா தேத்தண்ணியோட – பேணி
இல்லாட்டி என்ன உந்தப் பிளாவப்பிடி என்பா

பிஞ்சுப்பனை செத்துப்போச்செண்டா கவலை
அஞ்சு செடி கருகிப்போச்செண்டா கவலை
மாய்ஞ்சு மாய்ஞ்சு நானுடையும் வேளை
கொஞ்சம்கூட மனக்கவலை இல்லை

அவவுக்கு புதுக்கவிதை போலவொரு பிள்ளை
தாயின் எடுப்புக்கும் சாய்ப்புக்கும் இணையாக
கடுப்பான உடம்போட – தோட்டத்தில்
கண்டபடி திரிஞ்சா

கள்ளடிச்சுப்போட்டு நானொருக்கா
கட்டிப் புடிச்சிட்டன்

பொல்லா வியாதி வந்தாப்போல் துடிச்சா – நான்
வெள்ளாச்சி தெரியுமோ வென்றழுதா

அவ வீட்டு மாட்டுக்கும் வெள்ளச்சி பேர்

பொல்லாப் பிழையடி பெட்ட
சொல்லாதே என்று சொன்னதில் விட்டிட்டா

பின்பிந்த
வெள்ளாளர் வந்தார்கள் வெளிநாடு
வெள்ளையர்கள் கறுப்பர்கள் என்று – மக்கள்
கலர்களராய் கலப்புக் கலியாணங்கள் செய்வாராம்

சிவப்புக் கொடியணிந்த தோழி அவவின்
ஆங்கிலப் படிப்புக்கு வழி சொன்னா
வெள்ளயனைப் பிடியடி தானா வரும் மொழி என்று

இன்னும்
வெள்ளையனோ கறுப்பனோ
வலையில் விழுந்த பாடில்லை
தங்கச்சி வாயில் இங்கிலீசு
தவண்டபாடுமில்லை

சிவப்புக் கொடியணிந்த தோழி
தமிழ் நாட்டில் தமிழ் கற்று
அகதிகள் புனர் வாழ்வில் கருத்தோடு இருந்தா

இந்த வெள்ளச்சியும் வெள்ளாச்சியும்
இணைபிரியா நன்பர்கள் என்று
வெளியில் கதை
ஊரில் கதை
உலகெல்லாம் கதை

வீட்டில் விசேசமென்றால்
வெள்ளச்சிக்கு சொல்லித்தான் மறுவேலை

எடுபிடிக்குப்போன நான்
எட்டி நின்று பார்த்தேன்

வந்து போகும் தமிழர்கள்
வெள்ளச்சியை வின்ணாணம் பார்க்க
சேர்ந்து பார்த்த நானும் – ஒருக்கா
பியர் அடிச்சுப்போட்டு
கட்டிப்பிடிச்சிட்டன்

தப்போ தவறோ என்று
எட்டி நடக்க இருந்த என்னை
எட்டி இழுத்து
பல்லும் பல்லும் இடிபட இட்டா ஒரு முத்தம்

பட்டென்று வந்ததொரு பொறாமை
ஊரில இவையோட பழகோம் – நீயோ
படுப்பதென்பது மேலும் கீழாமென்று எடுத்தோதி
ஆக்கினை வரிகளை அடுக்கியும்
வெள்ளச்சி என்னை விடாப்பிடியா காதலிச்சா

கள்ளியடி அவள்,
யாருக்கும் சொல்லாமல் ஒருநாள் இரவுக்கு காதலிச்சா
அதுபோதுமென்றில்லை ஆனாலும் காணும்!

என்னை நினைச்சு நினைச்சு வெள்ளாச்சி உருக
நான் வெள்ளச்சியோடிருப்பேன்

அவ வீட்டு மாட்டுக்கும் அதுதானே பேர்

இதுகள் மிருகங்கள்
ஆடு மாடு நாய் பூனை போல
கண்டபடி சேருதுகள் கண்டபடி பிரியுதுகள்
என்றவா தாய்க்கு கடிதம் போட்டா

படிச்ச வெள்ளாட்டி
ஏதோ புதினமென்று
விழுந்து விழுந்து சிரிச்சா.

3 thoughts on “கொக்கட்டிச்சோலை -சேனன்

  1. //கொக்கட்டிச் சோலை ஒரு பாலை – அங்கு நான்
    கைககட்டிச் சீவித்த வேளை – ஒரு விடியாத காலை

    மம்பெட்டி கொண்டாந்து தருவார் – மத்தியானம்
    சோறு தண்ணி தந்து தோட்டப்பக்கம் கைகாட்டி விடுவார் – பேந்து
    வெள்ளாட்டி வருவா தேத்தண்ணியோட – பேணி
    இல்லாட்டி என்ன உந்தப் பிளாவப்பிடி என்பா

    பிஞ்சுப்பனை செத்துப்போச்செண்டா கவலை
    அஞ்சு செடி கருகிப்போச்செண்டா கவலை
    மாய்ஞ்சு மாய்ஞ்சு நானுடையும் வேளை
    கொஞ்சம்கூட மனக்கவலை இல்லை//
    ஓசைநயமும் கவித்துவமும் கூடிவந்திருக்கிறது.. அதோட விளிம்புகளின் மொழி கவிதையில் சாத்தியமாக்கியும் இருக்கிறீர்கள்.
    மக்களையும் கவிதையையும் இணைத்துவிட முடியுமா?
    ஆம் என்றார் ழாக் ப்ரெவர்..
    இந்தக்கவிதையும் ஆமென்கிறது.. வாழ்த்துக்கள்.

    வெள்ளாடிச்சி என்று சொல்லி அவளை இகழ்வது/நக்கலடிப்பது சரியென்றால் மேல்சாதியினர் பள்ளன்/பறையன் என்று எழுதுவது சரி தானே?
    Privileged X Ignored பிரச்சனை இங்கே வந்து குழப்புதெண்டா சிங்களXதமிழ் முரணை ஏற்றுக்கொள்ள வேண்டுமே? சிக்கல் விளங்குதா தோழரே.. எந்த ஒன்றையும் சமன்பாடுகளாலும் துவித எதிர்மைகளாலும் கட்டமைத்து விட முடியாது…
    நீங்கள் இங்கே குறிப்பிடுகிற வெள்ளாடிச்சி உங்களைத் தள்ளியதற்குக் காரணம் தனியே சாதி மட்டுமில்லை என்பதை உணருங்கள்.. பொருளாதாரம்-அசுத்தம்-நிறம்-etc etc கனவுகள் எல்லாம் அங்கு வினையாற்றியிருக்கும்.. பணத்துக்காய் அந்தப்பெண் புகலிடத்தில் மாறியதை நீங்களே பதிவு செய்கிறீர்கள்… பிறகேன் சாதியென்று கத்துகிறீர்கள்.. சாதி ஒரு பிரச்ச்னை.. எரியும் பிரச்சனை- இல்லையென்றில்லை. ஆனால் அதை மாத்திரம் நீங்கள் அழுத்துகையில் சிக்கலாயிருக்கிறது..
    மூன்று வருடங்களுக்கு முன்பு உங்களுடைய குறியைப் பிடித்தபடி மார்த்தா ஸ்லோவஸ்கியைப் படித்தபோதும் சரி கறுப்பில் ‘பைத்தியம் செய்த சூனியத்தை’ படித்த போதும் சரி சாதி பற்றி நான் எவ்வித அருவருப்புகளையும் அடையவில்லை.. அத்தொகுப்பை படித்து விட்டு நூலகத்தை விட்டு வெளியில் வருகையில் நூலகத்தின் முகப்பு சரஸ்வதி தான் அந்நியமாய் தெரிந்தாள். (லென்டிங் செக்சனில் இரண்டு தொகுப்புகளும் இல்லை.. அவற்றை புலம்பெயர் தொகுப்புகள் என்ற பெயரில்.. குறைந்தளவிலானவர்கள் மாத்திரம் வாசிக்கும் படிக்காக தனிப்பட வைத்திருக்கிறார்கள்) ஆனால், திட்டிக்கு (கான் கழுவும் தொழிலாளிகள் வதியும் பகுதி) சென்ற போது அந்த மக்களின் வாழ்நிலைக்கு காரணமாயிருப்போரின் மீதான எரிச்சல் என்பthai மீறி அருவருப்பாக இருந்தது.. நான் அருவருப்படைந்தது தவறா சேனன்?
    இதற்கும் எனது சாதிக்கும் தொடர்புகளுண்டா?
    இது என்னுடைய சாதிப்புத்தியா?
    அப்படியெனின் வெள்ளாடிச்சிகளை ஓ** வேண்டும் என்று திரிவதை என்ன சொல்வது சேனன்?
    [‘**’ போடுவது கூட அறவுணர்வு சார்ந்த பிரச்ச்னையோ? 😉 ]

    _____________
    //கடுப்பான உடம்போட – தோட்டத்தில்
    கண்டபடி திரிஞ்சா

    கள்ளடிச்சுப்போட்டு நானொருக்கா
    கட்டிப் புடிச்சிட்டன்//
    //சேர்ந்து பார்த்த நானும் – ஒருக்கா
    பியர் அடிச்சுப்போட்டு
    கட்டிப்பிடிச்சிட்டன்//
    இப்படிச்செய்கிற போதும் சரி அதை எழுதும் போதும் சரி உங்களிடம் இல்லாமல் போயிருக்கிற பெமினிச, போமோ, ஒப்ரெஸ்ட் பிரக்ஞைகளைப் போலதான் அந்தப் பெண்ணிற்கும் குறித்த கணத்தில் சாதியம் பிரக்ஞை இல்லாமல் போயிட்டுது என்றும் வாசிக்கலாமே..

    உங்களுக்கு கள்ளடிச்சு கடுப்பெடுத்ததைப் போல, பியர் அடிச்சிட்டு பிசகானதைப் போல அவாவுக்கும் உயர்சாதி பெருமையென்ற பியர் அடிச்சு ‘பறையன்’ எண்டு politically incorrect ஆக சொல்லிப்பாக்கலாம் தானே..
    சத்தியக்கடதாசியின் முன் உண்மையைப் பேசுவோம் என்று இன்னொரு வலைப்பதிவு தொடங்கோணுமோ?
    உங்களுடைய குறியைப் பிடித்துக் கொண்டு மிக செக்ஸியான கட்டங்கள் வருமென்று சனதரும போதினியில் படிச்சதிலயிருந்து நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டேயிருக்கிறன். பலனேயில்லைப் போலயிருக்கு.
    ஷோபா+சுகன்+சேனன் எல்லாரட்ட இருந்தும் நிறைய எதிர்பார்த்த ரகு தான் ஏமாந்ததாய் முன்னைய பின்னூட்டமொன்றில் சொல்லுகிறார்.. எனக்கும் அப்படித்தான் 🙁

Comments are closed.