புலிகளின் தொடர்ச்சியாக இருப்பதற்கு நீங்கள் புலிகளாக இருக்க வேண்டும்!

முள்ளிவாய்க்காலில் புலிகள் இயக்கம் அழிக்கப்படுவதற்குப் பதினைந்து வருடங்கள் முன்னதாகவே புலம் பெயர் நாடுகளில் வலுவாக இருந்த புலிகளின் கிளைகளைச் சிறுகச் சிறுக அழிக்க, மேற்குநாடுகள் நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியிருந்தன. புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாகக் மதிப்பிடப்பட்டு தடைவிதிக்கப்பட்டது. புலிகளின் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு அய்ரோப்பிய – அமெரிக்கச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு குறைந்தபட்சத் தீர்வுக்குப் புலிகள் சம்மதிக்க வேண்டும், புலிகளிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பதே மேற்கு நாடுகளின் உறுதியான நிலைப்பாடாக இருந்தது. இந்த […]

Continue Reading

உடனடித் தேவை தத்துவ ஆசிரியரல்ல, தமிழ் ஆசிரியரே!

நேற்று முன்தினம் விகடன் தடம் இதழில் வெளியாகிய என்னுடைய கட்டுரையில் இப்படியொரு பந்தி வரும்: “புலிகள் விட்டுச் சென்ற அரசியல் வெற்றிடத்தை நிரப்ப அல்லது புலிகளின் தொடர்ச்சியாகக் காட்டிக்கொள்ள, புகலிட நாடுகளில் பல முயற்சிகள் நடந்தன. நாடு கடந்த அரசு, பிளவுண்ட புலிகளின் சிறு சிறு குழுக்கள் என்பன ஒரு பக்கமும், அதுவரை இறுக்கமான இடதுசாரித் தத்துவங்களை உதிர்த்துக்கொண்டிருந்த குழுக்கள் ‘சமவுரிமை இயக்கம்’, ‘மே 18 இயக்கம்’, ‘தமிழ் சொலிடாரிட்டி’ என்ற பெயரிலெல்லாம் மறுபக்கத்திலும் குத்துக்கரணங்கள் போட்டுப் […]

Continue Reading

ஈஸ்டர் கொலைகள்

இந்த தேவாலயத்தை நிர்மூலமாக்கினாலும், மூன்றே நாட்களில் கட்டியெழுப்புவேன் -இயேசுக் கிறிஸ்து நேற்று இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளால் நிகழ்ந்த புகை அடங்க முதலே, இஸ்லாமியர்கள் மீதான பழிப்பும், வன்மம் மிக்க நினைவுகூறல்களும் சமூக வலைத்தளங்களில் புகையத் தொடங்கிவிட்டன. இலங்கையில் அமைதியே இருக்கக்கூடாது, இரத்தமும் குண்டும் கொலையும் பழிவாங்கல்களும் தொடர்ந்துகொண்டேயிருக்க வேண்டும் என்ற இரத்த வேட்கை, புலம் பெயர்ந்த எளிய தமிழ்ப் பிள்ளைகளின் முகப்புத்தகங்களில் வழிந்துகொண்டேயிருக்கிறது. இதுவரை கிடைத்த ஊடகச் செய்திகளின்படி, இந்தக் குண்டுவெடிப்புகளை சர்வதேச வலைப்பின்னலிலுள்ள இலங்கையர்களான […]

Continue Reading

லஷ்மி மணிவண்ணனுக்கு ஷோபா..

‘ஷோபாசக்திக்கு லஷ்மி மணிவண்ணன்’ என மணிவண்ணனுடைய ஒரு முகப்புத்தகப் பதிவை ஜெயமோகன் தனது தளத்தில் பதிவேற்றியுள்ளார். முகப்புத்தகத்தில் மணிவண்ணனின் பதிவுக்கு உடனடியாகவே பதில் அளித்திருந்தேன். அதையும் சேர்த்து ஜெயமோகன் பதிவேற்றியிருந்தாரெனில் முழுமையாக இருந்திருக்கும். என்னிடம் மட்டும் வலைத்தளம் இல்லையா என்ன..என்னுடைய பதிலை நான் இங்கு மறுபதிவு செய்துவிடுகிறேன்: இலக்கியத்தில் மதிப்பீடுகளின் அவசியத்தை ஓர் எழுத்தாளர் உணராமல் இருக்கமுடியாது. ஆனால் நிர்ப்பந்திக்கப்படும் விதிகளும் சட்டகங்களும் தடைக்கற்கள். அந்த விதிகள் மார்க்ஸியம் சார்ந்து வைக்கப்பட்டாலென்ன தேசியம் சார்ந்து வைக்கப்பட்டாலென்ன அழகியல் […]

Continue Reading

இப்ப இல்லாட்டி எப்ப!

இன்று தொடங்கியிருக்கும் யாழ் சர்வதேசத் திரைப்பட விழாவில், வரும் 5ம் தேதி மாலை 6.45 மணிக்கு திரையிடப்படுவதாக விழாக் குழுவினரால் அறிவிக்கப்பட்டு உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலிலும் சேர்க்கப்பட்டிருந்த ஜூட் ரட்ணத்தின் ஆவணப்படமான ‘Demons in Paradise’ இப்போது நிகழ்ச்சி நிரலிலிருந்து நீக்கப்பட்டிருப்பது வருத்தத்திற்கும் கண்டனத்திற்குமுரியது. இதையொத்த சம்பவமொன்று எங்களது ‘செங்கடல்’ திரைப்படத்திற்கும் நிகழ்ந்திருந்தது. செங்கடல் தயாரிப்பில் இருக்கும்போதே அது புலிகளிற்கு எதிரான படம் – இலங்கை அரசிற்கு எதிரான படம் என்றெல்லாம் ஊகங்கள் ஊடகங்களில் வெளியாகின. 2010 […]

Continue Reading

ஈழமும் கலைஞரும் – ஆனந்த விகடன்

“அப்போது தூய தேசியவாத சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம். தமிழ் பிரச்னைகள் பற்றிப் பேசுபவர்கள் அண்ணாத்துரை, கருணாநிதி, தமிழரசுக்கட்சி என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை’’ – இவ்வாறு தொடங்கித் தனது சுயசரிதையை எழுதியிருப்பவர் புலிகள் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும் புலிகளின் முதலாவது மத்தியக்குழு உறுப்பினருமான கணேசன். ஈழத்தில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பரந்துபட்ட இளைஞர்களிடையே முதன்மையான தமிழ் உணர்வுப் படிமம் கலைஞர் மு.கருணாநிதி. இன உணர்வு, மொழிப்பற்று, கடவுள் மறுப்பு, கலையை சமூக நீதிக்காகவும் அரசியலுக்காகவும் லாகவமாகப் பயன்படுத்திக்கொள்வது போன்றவற்றில் அவர் […]

Continue Reading

என் ஆசான் கலைஞர் – Indian Express

மூன்று ஆண்டுகளிற்கு முன்பு வெளியான எனது ‘கண்டிவீரன்’ சிறுகதைத் தொகுப்பை நான் கலைஞர் மு.கருணாநிதிக்கு சமர்ப்பித்திருந்தேன். அந்தச் சமர்ப்பணக் குறிப்பில் அவரை திரைப்பட வசனங்கள் ஊடாக எனக்குத் தமிழைக் கற்றுக்கொடுத்த ஆசான் எனப் பதிவு செய்திருந்தேன். தமிழக அரசியலிலும் தமிழ் சினிமாவிலும் கலைஞரின் வீறுகொண்ட எழுச்சி 1940-களின் இறுதியில் ஆரம்பிக்கிறது. அதே வேளையிலேயே தி.மு.க.வின் தாக்கமும் கலைஞரின் திரைப்படங்களும் அவரது எழுத்துகளும் கடல் கடந்து இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இலங்கைத் தமிழர்களின் வீடுகளிலே அறிஞர் அண்ணாத்துரையின் படமும் […]

Continue Reading