மரண தண்டனை ஒழிப்பு

ராஜன் குறையின் ‘சமயோசித’ அணுகல் முறையும் ஷோபா சக்தியின் ‘மூர்க்கமான’பேச்சுக்களும் அ.மார்க்ஸ் மரண தண்டனை ஒழிப்பு குறித்து ஷோபா சக்தி எழுதிய கட்டுரைகள் இரண்டையும் (‘விருமாண்டியிசம்’), ராஜன் குறை எழுதிய இரு கட்டுரைகளையும் அவரவர் முகநூல் பக்கங்களில் படித்தேன். ராஜனின் இரண்டாவது கட்டுரை ஷோபாவின் இரு கட்டுரைகளுக்கும் பதிலாக எழுதப்பட்டது. பின்னூட்டங்களில் நண்பர்கள் சொல்லியிருப்பதுபோல ராஜனுக்கே உரித்தான பதமையோடும், பண்போடும், ஆழத்தொடும், நிரம்ப சுய எள்ளலோடும்  எழுதப்பட்டுள்ளது அக்கட்டுரை. அந்தச் சுய எள்ளல்களில் ஒன்றில்தான் தன்னுடையதை “சமயோசித […]

Continue Reading

அரசு, இறையாண்மை, ஆயுதப் போராட்டங்கள்

அ. மார்க்ஸ் ஈழப் போராட்டப் பின்னணியில் இறையாண்மை (sovereignty) குறித்த பேச்சுக்கள் இன்று தமிழ்ச் சூழலில் தலைகாட்டியுள்ளன. 1970களில், வங்கப் பிரச்சினையில் (முன்னாள் கிழக்கு பாகிஸ்தான்) இந்தியா தலையிட்டு ‘வங்கதேசம்’ உருவாவதற்கு வழி வகுத்ததுபோல புலிகளுக்கு எதிரான ராஜபக்சே அரசின் வெறித்தனமான தாக்குதலில் தலையிட்டு (புலிகளின் தலைமையில்) தனி ஈழம் பெற்றுத் தரவேண்டும் என்கிற கோரிக்கையை இங்கேயுள்ள புலி ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்தபோது அரசு தரப்பில் இறையாண்மை குறித்த கதையாடல் முன் வைக்கப்பட்டது. மற்றொரு நாட்டின் இறையாண்மையில் […]

Continue Reading

ஈழப் போராட்டமும் தமிழக ஆதரவாளர்களும்

– அ.மார்க்ஸ் தமிழ் அறிவுஜீவிகள் மத்தியில் ஒரு மரண அமைதி நிலவுவதாக சில நாட்களுக்கு முன் எழுத்தாள நண்பர் ஒருவர் கவலையோடு குறிப்பிட்டார். ஒரு சிலர் மத்தியில் ஒருவகை கையறு நிலையும் வேதனையும் நிலவுவது உண்மைதான். மே 18லிருந்து கிட்டத்தட்ட அடுத்த ஒரு வாரம் முழுவதும், வழக்கமாக என்னிடம் பேசுகிற பழக்கமில்லாத சில எழுத்தாள நண்பர்களும் கூட என்னைத் தொடர்பு கொண்டு “கேள்விப்படுவது உண்மைதானா?” என விசாரித்த வண்ணம் இருந்தனர். தொலைக் காட்சியில் காட்டப்படும் உடல் அவருடையது […]

Continue Reading