சர்வதேச சமூகமும் புகலிட..

கட்டுரைகள்

சர்வதேச சமூகமும் புகலிட ஜனநாயகச் சக்திகளும்

தமிழரசன்

*மேற்குலக நாடுகளும் இந்தியாவும் உலக ஜனநாயகத்தின் தலைமைச் செயலகங்களாகத் தமிழ் மக்களிடம் TBCயால் வலியுறுத்தப்படுகின்றன.இந்தியாவைத் திரும்பத் திரும்பத் தமிழ் மக்களைக் காக்கும் மகாசக்தி என்று கட்டமைப்பதும் இந்தியா மீண்டும் இலங்கையில் தலையிட வேண்டும் என்ற கருத்துக்களை மறு உருவாக்கம் செய்வதும் இலங்கைத் தமிழ் மக்கள் இந்திய இராணுவத்திடம் பட்ட அனுபவத்தை அவமானப்படுத்துவதாகும்…  *ஆனந்தசங்கரி புலிகளை விமர்சிப்பது தகர்ந்துவரும் புலிகளை மேன்மேலும் சிதறடிக்கிறது என்பது உண்மையே. ஆனால் இந்த ஒரு விடயம் மட்டும் ஆனந்தசங்கரி போன்ற தமிழ் வலதுசாரி அரசியல்வாதியை ஆதரிக்கப் போதுமானதல்ல…. *ஜெயதேவனை ஒத்த சைவ சமயப் பிரச்சாரகர்கள் கோவில் தர்மகர்த்தாக்கள் தமிழ் ஜனநாயகப் போக்குக்குள் செல்வாக்குப் பெறுவது முன்னேற்றமான அரசியலா….? *புலி ஆதரவாளர்கள் X தனிப் புலி எதிர்ப்பாளர்கள் இருபகுதிகளிலும் மார்க்ஸிய எதிரிகள் நிரம்பி நிற்கின்றார்கள்….. 

*புலிகள் அமைப்பு பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட பின்னர்தான் புலிக் காடையர்கள் TBC வானொலியைத் தாக்கினார்கள். அவர்கள் கைதுசெய்யப்பட்ட சில மணித்தியாலங்களிலோ அடுத்த நாளோ வெளியே வந்து விட்டார்கள். லண்டன் BBC யை முஸ்லிங்கள் தாக்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்? சும்மா ஒரு கல் எறிந்தாலே என்ன ஆகி இருக்கும்?  *ராஜீவ் காந்தியைப் புலிகள் கொன்ற காரணத்தால் இந்தியா புலிகளுக்கு மன்னிப்பு கடைசிவரை தராது, பழிவாங்கவே முயலும் என்று கருதி வருகின்றனர். காந்தியைக் கொன்ற RSS இயக்கத்தின் தாயான BJP யே இந்தியாவை ஆளவில்லையா? *கொஞ்சம் இடதுசாரித் திசையிலே யோசிக்க வாய்ப்புக் கிடைத்தவர்கள் “புலிகளுக்கு எதிரான தமிழ் ஜனநாயக இயக்கங்களை இப்போது பகைக்கக் கூடாது, விமர்சனத்திற்குரிய தருணம் இதுவல்ல” என்று அபிப்பிராயம் கூறுகின்றனர். புலிகள் கூட “இப்போது விமர்சிக்கும் தருணம் அல்ல, தமிழீழம் கிடைத்த பின்பு எதையும் விமர்சிக்கலாம், பேசலாம்” என்று தான் கூறுகின்றனர். அதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை…  (1)  சர்வதேச சமூகம் என்ற சொல்லாடல் இன்று முதலாளித்துவ உலகின் அரசியல் நடத்தைக்கான சொல்லாகும். 1990 களில் சோசலிச சமூகம் இல்லாமற் போய் இனிச் சோஷலிசம், முதலாளியம் என்ற எதுவும் கிடையாது என்ற வர்க்கமற்ற கருத்தாக்கங்கள் செல்வாக்குப் பெற்றபோது மேற்குலக ஊடகங்களால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட சொல்லாகும். குளிர்கால யுத்த ஆபத்து ஒழிந்து உலகமெல்லாம் தடையற்ற மனித சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் தளைப்பதான முதலாளித்துவ அரசியற் கற்பனைகளுடன் ஒன்று சேரப் பிறந்ததாகும். மேற்குலக நாடுகளின் அரசியல் – இராணுவச் செயற்பாடுகட்கு ‘சர்வதேச சமூகம்’ என்ற அரசியற் கருத்து கவசமாக அமைந்தது. இவர்களே இதன் தொடர்ச்சியாக மனிதாபிமான யுத்தம், மனிதாபிமானத் தலையீடு, சர்வதேசப் பயங்கரவாதம் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புப் போர் ஆகிய கருத்தாக்கங்களையும் பிரச்சாரப்படுத்தினர். பழைய கொம்யூனிச எதிர்ப்பு, உலகப் பயங்கரவாத எதிர்ப்புப் போராக மாற்றம் பெற்றது. கார்ல் மார்க்ஸின் சர்வதேசியத்தை உலகார்ந்த மனித குலத்தின் ஒருமித்த வாழ்வை எதிர்த்தவர்களே இன்று ‘சர்வதேச சமூகம்’ என்ற உலகெல்லாம் பொருளாதாரச் சுரண்டலையும் இராணுவத் தாக்குதலையும் நடத்தவல்ல புதிய சொல்லைக் கண்டு பிடித்துள்ளனர். 400 வருடங்களாகக் கீழைத் தேசங்களை மண்கொள்ளை அடித்தவர்கள், ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் சர்வாதிகாரிகளையும் பயங்கரவாதிகளையும் சர்வதேச சமூகத்தின் பெயரால் தேடும் உரிமைகளைப் பெற்றுவிட்டனர். இன்றய உலகின் சிறந்த அரசியல்வாதியும் புரட்சியாளருமான பிடல் கஸ்ரோவை சர்வதேச சமூகத்தின் பெயரில் நிலையெடுத்துள்ள மேற்குலக ஏகாதிபத்தியங்கள் ஏன் இப்படி வெறுக்கின்றார்கள்? குடலில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வுபெற்று வரும் அவரை இறந்துவிட்டதாகவும் செத்துக்கொண்டிருப்பதாகவும் பிரச்சாரம் செய்கின்றனர். ஏன் இவர்கள் பிடல் கஸ்ரோ என்ற சிறந்த மனிதரின் இறந்த உடலைக் காண விரும்புகின்றனர்? 80 வயதாகிவிட்ட போதும் தளராவுறுதியோடு அவர் சர்வதேச சமூகமாக வேடமிட்டு நிற்கும் ஏகாதிபத்தியங்களை மனிதகுலத்தின் எதிரிகள் என்று பிரகடனப் படுத்துவதுதான் காரணம். உலகின் எந்த நாட்டையும் சுரண்டாமல் வாழும் கியூபாவை ஏன் இந்தச் சர்வதேச சமூகம் அங்கீகரிக்க மறுக்கின்றது?ஏன் பிடல்காஸ்ரோவை சர்வாதிகாரி! சர்வாதிகாரி!! என்று ஊடகப் பயங்கரவா
தம் புரிகின்றனர்? கியூப விமானத்திற்கு குண்டுவைத்து 73 பேரைக் கொன்றவனும் பல குண்டு வெடிப்புக் கொலைகளைக் கியூபாவுக்கு எதிராகப் புரிந்தவனுமான அமெரிக்காவில் குடிபெயர்ந்து வாழும் கியூபாப் பயங்கரவாதியான Luis Posada Carrilesஐ ஏன் சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்ப்பதாய் கூறும் அமெரிக்கா கியூபாவிடம் தர மறுக்கிறது? 

700 மில்லியன் மக்கள் கொண்ட ஆபிரிக்காவில் உள்ள மொத்த மருத்துவர் தொகை 50000 பேர்தான். ஆனால் 11.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கியூபாவில் 70000 மருத்துவர்கள் இந்த மக்களுக்குச் சேவை செய்வது சோஷலிசத்தின் அதிசயமில்லையா? கியூபாவின் 31000 மருத்தவர்கள் 71 ஏழை நாடுகளில் இலவசமாக மருத்துவச் சிகிச்சை செய்வதுதான் சோஷலிச சர்வதேச உணர்வின் அடையாளமாகும். இதே சமயம் மேற்கத்தைய சர்வதேச சமூகத்தின் 200000 ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் ஏழை நாடுகளில் வாழும் மக்களின் கடல், நிலம், வான்வெளிப் பரப்புகளை ஆக்கிரமிப்புச் செய்து மக்களைக் கொலை செய்கிறார்கள். உலகின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கான 1.5 பில்லியன் முஸ்லீம் மக்களுக்கு எதிராக இந்தக் கிறீஸ்தவ சர்வதேச சமூகம் உலகு தழுவிய யுத்தத்தைத் தொடுத்துள்ளது.

இந்தச் சர்வதேச சமூகம் என்ற சொற்பிரயோகம் முழுமையாக மேற்குலகத்திற்கு உரியதாகும். வெள்ளையினக் கிறீஸ்தவ உலகைச் சுட்டுவதாகும். இதற்குள் ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க, ஆசிய மக்களின் தேசங்கள் இடம்பெறுவதில்லை. மேலும் மேற்கு நாடுகளின் தொழிலாளர்கள் ஜனநாயக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஒரு போதும் சர்வதேச சமூகமாகக் கருதப்படுவதில்லை. மாறாக இவர்களை ஒடுக்கும் அரச இயந்திரங்களே, உயர்மட்ட அரசியல்வாதிகளே, மேற்கத்தைய ‘அரசு சாராத’ தன்னார்வ அமைப்புக்களே சர்வதேசமாக உச்சரிக்கப்படுகின்றன. உண்மையில் மேற்கத்தைய உலகின் போர்க் குற்றவாளிகளே தம்மைச் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் என்று அழைத்துக் கொள்கின்றனர். இத்தகைய சர்வதேச சமூகத்தின் அரசியலை, நீதியை நம்பித்தான் புலிகள் மட்டுமல்ல புலிகளை விமர்சிப்பவர்களும் நிரைக்கு நிற்கிறார்கள். இவர்கள் மேற்கத்தைய உலகின் போர்க் குற்றவாளிகளையே சிறந்த மத்தியஸ்தர்களாகவும் சமாதானத்தைக் கொண்டு வருபவர்களாகவும் கருதுகின்றனர். இவர்கள் ஏகாதிபத்தியத்தின் ‘சர்வதேச பயங்கரவாதத்திற்கு’ எதிரான குரலை இரவல் பெற்றுள்ளதுடன் புலிகளை மட்டும் நினைத்துக்கொண்டு பயங்கரவாத ஒழிப்பை ஆதரிக்கும் நிலைக்கு வருகின்றனர். இதனை நாம் ஒப்புக்கொண்டால் சுரண்டலை, இராணுவ ஒடுக்கு முறைகளை, ஆக்கிரமிப்புகளை எதிர்க்கும் சகல மனித எழுச்சிகளையும் சுலபமாகப் பயங்கரவாதமாக்கி விடலாம். இதன்படி இந்திய பகத்சிங், இன்றைய வெனிசுலாவின் சாவெஸ்வரை பயங்கரவாதிகளாகி விடுவர். லெனின், ட்ரொட்ஸ்கி முதல் பிடல் காஸ்ரோ முதல் ஏன் நெல்சன் மண்டேலா வரை பயங்கரவாதிகளாய்த் தான் தென்படத் தொடங்குவர். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நேபாளத்திலும் போராடுபவர்களைப் பயங்கரவாதிகள் என்று புனைய முயலும் TBC வானொலி போன்ற ஏகாதிபத்திய ஊடகங்களைப் பின் தொடரும் சக்திகளை நாம் மன்னிக்கக் கூடாது. புலிகளை எதிர்ப்பதால் மட்டும் அந்தத் தகுதியை மட்டும் வைத்து ஏகாதிபத்தியங்களை ஆதரிப்பவர்கள் அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுவிட முடியாது.

(2) புகலிட நாடுகளில் TBC :  புகலிட நாடுகளில் TBC, இதயவீணை போன்ற வானொலிகளும் புலி விமர்சன இணையத் தளங்களும் புலிகள் மீதான விமர்சனமுடைய ஊடகங்களும் உள்ளன. இவர்கள் பெரும் பகுதியாய் தமிழ் தேசியவாதத்தைச் சூழ அரசியல் புரிபவர்களாகவும் தனி புலி எதிர்ப்புக்கப்பால் அரசியலில் நகர முடியாதவர்களுமாய் இருந்தனர். இவர்களின் இயக்கக் கடந்த காலம், யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தின் அரசியற் சுற்று வட்டம் இவைகளோடுள்ள தொடர்புகளை இவர்களால் அறுத்துக்கொண்டு தமிழ் மக்களின் அரசியலை அகலப் படுத்த முடியவில்லை. இந்த ஊடகங்கள் ஜனநாயகம், மாற்றுக் கருத்துக்கான சுதந்திரம் இவற்றுக்காகப் போராடி வந்தன என்ற போதும் அது அவர்களது வலது சாரி அரசியல் புரிதலுக்கு ஆட்பட்டே இருந்தது. ரிபிசி தீவிரமான யுத்த எதிர்ப்பை வெளியிட்டது. ஆனால் யுத்தம் என்பது தற்செயலாக நிகழும் சம்பவமல்ல. மனிதாபிமானம், சமாதானம், நீதி என்பவற்றை உபதேசித்து இதை நிறுத்திவிட முடியாது. இது முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத விதியாகும். இவர்கள் முதலாளிய ஜனநாயகத்தை எல்லையற்றதாகவும் ஒருதலையாகவும் புரிந்துகொண்டவர்களாகக் காணப் பட்டனர். மாக்சியம், சோஷலிசம் பற்றிய புரிதல் இன்மையாலும் யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்துள் வட்டமடித்துத் திரிந்தமையாலும் மக்கள் சார்ந்த அரசியல் மயப்படுத்தலுக்கு இவர்களால் செல்ல முடியவில்லை. இவர்கள் புலிகளை ஆபத்தாகப் புரிந்துகொண்டார்களே தவிர புலிகளைத் திரைமறைவில் வழிநடத்தும் மேற்குலக நாடுகளைத் தமக்குச் சாதகமானவர்களாகவே கருதினர். புலிகளை மேற்கு நாடுகள் கண்டிக்கும் கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை மட்டுமே இவர்கள் மேற்குலக நாடுகளை ஆதரிக்கக் காரணமாக இருந்தது. அமெரிக்காவோ ஜேர்மனியோ பிரித்தானியாவோ ஈராக்கிலே ஆப்கானிஸ்தானிலே என்ன செய்கின்றன. வியட்னாமிலோ சோமாலியாவிலோ தென் ஆபிரிக்காவிலோ என்ன செய்தன என்பதெல்லாம் இவர்களுக்குக் கவலைக்கு உரியதாக இருக்கவில்லை. அந்த மட்டத்திற்குத் தமிழீழவாதிகள் வகுத்த தமிழ் அரசியலில் புலிப் பிரதேசத்தில் பட்டம் விட்டுத் திரிந்தார்கள். புலிகளை ஒடுக்குவார்கள் என்று இவர்கள் நம்பிய மேற்குலக ஏகாதிபத்தியங்கள் பலநூறு வருடங்களாக கீழைத் தேசங்களை வேட்டை ஆடியவர்கள் என்பதை இவர்களது வலதுசாரி அரசியல் ஞாபகத்திற்கு வர விடுவதில்லை. அது எப்போதோ நடந்த சம்பவம், இன்றய போக்குடன் தொடர்பற்ற பழங்கதை என்பதே இவர்களது மதிப்பாகும். மேற்குலக நாடுகள் புலிகளை ஜனநாயகத்திற்குக் கொண்டுவருவார்கள் அல்லது அழிப்பார்கள் என்பதே இவர்களின் அரசியல் மதிப்பீடாகும். புகலிடத் தமிழ் மக்கள் மத்தியில் புலிகளின் எதிர்நிற்க முடியாத ஊடகப் பலம் முன்பு மாற்றுக் கருத்துகட்கான தளமாக இவர்கள் கட்டாயமாக இருந்தார்கள் என்பது உண்மையே. புலிகளின் ஊடகப் பயங்கரவாதத்தின் முன்பு இவர்கள் சவாலாக இருந்தார்கள். இவர்கள் ஊடாக சிதறிக் கிடந்த தமிழ் ஜனநாயக சக்திகள் ஒன்று திரட்டப்பட்டார்கள். புலிகளின் சகிக்கமுடியாத வெறுப்பையும் தூஷணங்களையும் இவர்கள் சந்தித்தார்கள். ஆனால் புலிகளின் முதலாளித்துவ அரசியல் நினைப்புகளுக்கும் இவர்களுக்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லை. இருபகுதியும் முதலாளித்துவம் சர்வதேச சமூகம் பற்றி ஒரேவிதமான கருத்தையும் நடைமுறையையுமே கொண்டிருந்தனர். மிலோசோவிக்கைச் சர்வாதிகாரி எனவும் முஸ்லீங்களின் ஏகாபத்திய எதிர்ப்பு இயக்கங்களைப் பயங்கரவாதிகள் என்றும் இருபகுதியுமே கூறினார்கள். இலங்கையில் புலிகளுக்கு எதிராக முஸ்லீம் மக்களை ஆதரிக்கும் ரிபிசீ ஆப்கானிஸ்த ஏகாதிபத்த

17 thoughts on “சர்வதேச சமூகமும் புகலிட..

  1. தமழரசனின் மூன்றாம் நான்காம் குறிப்புக்கள் பல புதிய தகவல்களைத்தருகின்றன குறிப்பாக நோர்வே பற்றிய தகவல்கள் தமிழ்மக்கள் அனைவரையும் சேரவேண்டியது சேரக்கூடியதும் கூட

    மூன்றாம் நான்காம் குறிப்புக்கள் வேறுமொழிகளிலும் மொழிபெயர்த்து சர்வதேச சமாதானப்பிரியர்களிடம் சேர்ப்பிக்கப்படவேண்டும் இவ்வாறும் தமிழ்க்குரல்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ளன என்பது உண்மையான சமாதானத்தை விரும்பும் மேற்கு சாமானிய மனிதனுக்கு சாதாரண செய்தியல்ல.

    புலிகள் பற்றியும் தமிழ்மக்கள் பற்றியுமான தமிழரசனின் பார்வையை முழுமையாக ஏற்கமுடியாது. ஆனந்தசங்கரிகள் ஜெயதேவன்கள் மேற்கை விட இலங்கையிலுள்ள தமிழ்மக்களை நம்பவேண்டுமென்கிறார் ஓகே! நல்லவிடயம் இலங்கையிலுள்ள குறிப்பாக வடக்குகிழக்கிலுள்ள மக்கள் சக்திகளை தமிழரசனால் இனங்காட்டமுடீயுமா? அல்லது தமிழரசன்போன்றவர்களால் தன்னும் அங்கு சென்று மக்களை அணிதிரட்டமுடியுமா?
    இந்த நிலையில் ஜனநாயகப்பேரவைகளின் வருகைகளும் செயற்பாடுகளும் அவசியம்.

    “புலிகளுக்கு எதிரான தமிழ் ஜனநாயக இயக்கங்களை இப்போது பகைக்கக் கூடாது விமர்சனத்திற்குரிய தருணம் இதுவல்ல” என்று அபிப்பிராயம் கூறுகின்றனர். புலிகள் கூட “இப்போது விமர்சிக்கும் தருணம் அல்ல தமிழீழம் கிடைத்த பின்பு எதையும் விமர்சிக்கலாம் பேசலாம்” என்று தான் கூறுகின்றனர். அதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை…
    என்ற தமிழரசனின் கருத்து மிக அபத்தமானது…

    மற்றும் புலிகளைக் கொல்லக்கோரும் வேண்டுதல் அல்லது விருப்பு வெறித்தனமாயப்படுகிறது நல்ல கருத்தல்ல
    பிற பின்…. …..

  2. திரு.தமிழரசன்..அரசாங்கம் //புலிகளைக் கொல்வதை// நிபந்தனையுடனோ நிபந்தனையில்லாமலோ ஏற்றுக்கொள்வது உங்கள் ஸ்ராலினிச சாய்வையே காட்டுகிறது.தொழிலாளர்களும் மக்களும் இதர சிறுபான்மை இனங்களும் இந்த நிலைப்பாட்டை எப்படி எடுக்க முடியும்? அது மாக்சிய விரோதமாகாதா? ஸ்ராலினுடைய பாசிசத்திற்கு எதிரான தளம் வேறு. சிறிலங்கா அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமான தளம் வேறு. தேசிய வாத அரசியலிலிருந்து புலிகளின் நடைமுறகளை விளங்கிக்கொள்ள வேண்டும். கண்ணுக்கு கண் என்ற நிலைப்பாட்டை எடுத்தால் முழு உலகமே குருடாகிவிடும் என்றார் காந்தி. தமிழரசன், தமிழ்செல்வன், தமிழேந்தி, தமிழினி, டி.சே தமிழன், வீ.ரி. தமிழ்மாறன் என்ற ‘தமிழ் பெயர்’ வைத்தாலே துப்பாக்கி மேலே மோகம் வந்து விடுமா? தயவு செய்து வன்முறை உணர்வுகளைப் பரப்பாதீர்கள்.

  3. இலங்கையில் முதன்மைப் பிரச்சனை புலிப் பாசிசமா?

    பி.இரயாகரன்
    13.11.2006

    இதை சாரமாக கொண்டு, மற்றொரு புலியெதிர்ப்பு அணியும் குலைக்கின்றது. புலியெதிர்ப்பையே அரசியலாக கொண்டு, அதையும் மார்க்சியத்தின் பெயரில் திரித்து குலைக்கின்றது. இந்த புதிய அணி முதலாளித்துவம் என்ற சொற்களைக் கொண்டே மார்க்சியத்தை சாயம் அடித்தபடி தான், புலியெதிர்ப்பில் தன்னை வேறுபடுத்தி நிற்கின்றது. சொந்தப் பெயரிலும் புனைபெயரிலும் தேனீ மற்றும் ரீ.பீ.சீல் சிவப்பு கம்பளம் விரித்து, புலியெதிர்ப்பு அரசியலை விபச்சாரம் செய்தவர்கள் தான் இவர்கள். திடீரென்று அதில் இருந்து பிரிந்து, புதிய புலியெதிர்ப்பு அணியாகவே மறுபடியும் வந்துள்ளனர்.

    துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று விபச்சாரத்தை கைவிட்டு ஓடவெளிக்கிட்டவர்கள், கையில் கிடைத்த சிவப்பு துணியை போர்த்திய படி ஓடி வந்தனர். மறுபடியும் மிக மோசமான அப்பட்டமான பேரினவாதிகள் தான் நாங்கள், என்பதை அடித்துக் கூறுகின்றனர். இதை சோபாசக்தியின் சத்தியக்கடதாசியில் இந்த ஆபாசத்தை அரங்கேற்றியுள்ளனர். வெட்கக்கேடான ஆபாசமாக சிவப்பு சாயம் அடித்த இவர்களின் அரசியல் படி, தமிழ் மக்களுக்கு என்று தனித்துவமான அரசியல் பிரச்சனைகள் எதுவும் கிடையாது என்பதே இவர்களின் அரசியலாகும். பேரினவாதம் என்பது கற்பனையானது. அது தமிழ் பாசிட்டுகளினது, தமிழ் முதலாளிகளின் சொந்தக் கண்டுபிடிப்பு என்பதே, இவர்களின் அரசியல் முடிவு. அதை பேரினவாதத்துக்காக வாலாட்டி குலைக்கும் போது அதை உதிர்த்து விடுகின்றனர். ‘இலங்கை அரச இயந்திரம் பௌத்த சிங்கள இனவாதத்தாற் கட்டுப்படுத்தப்படுகிறது, … என்பது பெரும் பொய்யாகும்.” என்கின்றனர். தமிழ் பேசும் மக்களின் மீதான பேரினவாத இனவொடுக்குமுறை பற்றிய திரொக்சிய அரசியல் பார்வை இதுவாகும்.

    இதனால் இவர்கள் பேரினவாதிகள் போல், தமிழ் மக்களின் பிரச்சனைக்கு என்று எந்த தீர்வையும் ஏற்றுக்கொள்வது கிடையாது. அதேபோல் இவாகள் முன் வைப்பதும் கிடையாது. மக்களை அணிதிரட்ட எதுவுமிருப்பதில்லை. இவர்களின் இந்த பேரினவாத நிலையை, அவர்களின் சொந்த மார்க்சிய வார்த்தையில் சொன்னால் ‘சுயநிர்ணய உரிமை” அரசியலின் சகாப்தம் இன்று முடிவடைந்து விட்டது.” என்று ஒரே வார்த்தையில் அடித்துக் கூறி விடுகின்றனர். தமிழ் மக்களின் எதிரி கூட இப்படி கூறியது கிடையாது. இப்படிக் கூறி தமிழ் மக்களின் எதிரிகளுடன் கைகோர்த்து நிற்கின்றனர். இதே அரசியல் நிலையைத் தான் ஜே.வி.பியும் இனவாதமாக கொப்பளித்து அதை தமிழ் மக்களின் முகத்தில் காறி துப்புகின்றது.

    சுயநிர்ணயம் என்பது தமிழ் மக்களுக்கு கிடையாது என்பதால், பேரினவாதத்தை ஆதரிக்க கோருகின்றனர். அதை அவர்களின் சொந்த மார்க்சிய நடைமுறை சார்ந்த பேரினவாத அரசியலாகவே கூறுகின்றனர். ‘புலிகள் அரசுக்கிடையே இராணுவ மோதல் மூண்ட போது புலிப்பாசிசம் தோல்வியுறவேண்டும் என்ற தெளிவான அரசியல் நிலைக்கு” செல்வது தான் அவசியம் என்கின்றனர். இதைத்தான் அவர்கள் தமது சொந்த அரசியலாக நடைமுறையாக கொள்கின்றனர். இதைத்தான் இவர்கள் மக்களுக்கு மாற்றுவழியாக காட்டுகின்றனர். பாசிச ஒழிப்பு என்ற பெயரில், தம்மையொத்த ஒரு கைக்கூலிகளாக எப்படி இருத்தல் என்பதையே, சோபாசக்தியின் சத்தியக்கடதாசியில் முதலாளித்துவம் பற்றி பூசைகாட்டியபடி விளக்குகின்றனர். இந்த அரசியல் ஆபாசத்தைத் தான், அவர்கள் திரொஸ்கிய மார்க்சிய நிலை என்கின்றனர். இவர்கள் ஜே.வி.பியின் வலது பேரினவாத ‘இடது” நிலையைப் பின்பற்றும், வலது திரோஸ்கிய வாதமே பேரினவாதமாக கொப்பளிக்கின்றது.

    தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை ஏற்க மறுக்கும் இவர்கள், எல்லாவற்றையும் புலியாக, புலிப் பாசிசமாக காட்டியே புலியெதிர்ப்பு அரசியலை பிதற்றுகின்றனர். பேரினவாத பாசிட்டுகளுடன், கூடி நிற்க திரொஸ்கியத்தின் பெயரில் அழைக்கின்றனர். இந்த அழைப்பையே ‘இலங்கை அரசு புலிகளை இராணுவரீதியில் சாகடிக்கும் எனிற் கூட நாம் அதையும் நிபந்தனைகளோடு ஆதரிக்கலாம்.” என்கின்றனர். நல்ல நகைச் சுவையான வேடிக்கை தான், போங்கள். இதை மார்க்சியம் என்றால் கைகொட்டி சிரிப்பார்கள். ஏதோ நிபந்தனையுடனாம்! சரி அந்த நிபந்தனை தான் என்ன? புலிப் பாசிசத்தை அழித்த பின்பு திரோஸ்கிகளிடம் ஆட்சி தரவேண்டும் என்பதோ அந்த நிபந்தனை? ஐயோ பாவம் பரிதாபத்துக்குரியவர்கள்.

    இவர்கள் மனதில் நினைக்கும் நிபந்தனையுடன் ஆதரிக்கும் இலங்கை அரசைப் பற்றிக் கூறும் போது ‘இலங்கை நேரடியான ஆசியப் பிராந்தியத்தில் இந்திய, சீன, ஜப்பானிய, பாகிஸ்தான் அரசுகளின் பொருளாதார அரசியல் இராணுவ உதவிகட்கு கட்டுப்படும் சக்தியாகி விட்டது. அவைகளின் சொற்கேட்கும் சார்புநிலைச் சக்தியாகிவிட்டது.” என்று கூறுகின்றனர். அப்படி என்றால், சார்புநிலை சக்தியாக முன்னம் என்னவாக இருந்தனர்? அது எப்படி எப்போது இல்லாது போனது? உலகத்தை கொள்ளையடித்த களைப்பில், ஏகாதிபத்தியம் இலங்கை கடற்கரையில் பொழுதுபோக்குக்கு படுத்துக்கிடந்து மீன் பிடிக்கின்றனரோ!

    ஏகாதிபத்தியம் புலிகளை தடைசெய்த பின்பும், அவர்களை அழிக்காது, சும்மா விட்டிருக்கு என்ற கடுப்பே இப்படி புலம்ப வைக்கின்றது. புலியை அழிக்காது தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வைக்க ஏகாதிபத்தியம் கோருகின்றது என்ற கோபம், அரசின் மனித உரிமை மீறல் பற்றியும் ஏகாதிபத்தியம் முன்வைக்கின்றது என்ற ஆத்திரமே உளறவைக்கின்றது. (ஏகாதிபத்தியம் ஏன் இதை செய்கின்றது என்பது மற்றொரு விடையம்.) ஏகாதிபத்தியத்தை விடவும், இலங்கை அரசு உடனடியாக யுத்தம் மூலம் புலியை அழிப்பதால் நிபந்தனை என்று கூறியபடி ஆதரிப்பதே, இவர்களின் அரசியலாகின்றது. இங்கு என்ன நிபந்தனை என்று மட்டும் தயவு செய்து கேட்டுவிடாதீர்கள். நாங்கள் சொல்லுவோம், ஆனால் அது என்னவென்று இனிமேல் தான் கண்டுபிடிக்க வேண்டும்.

    இப்படி இலங்கையின் சார்புநிலை பற்றி கூறுபவர்கள் தான், இந்த சார்பு அரசு புலிகளை அழித்தால் ஆதரிக்க வேண்டும் என்கின்றனர். இங்கு அழிப்பது இந்தியா உள்ளிட்ட அன்னிய சக்திகள் அல்லவா? அப்படியாயின் உங்கள் நிபந்தனை இலங்கை அரசுக்கா? அல்லது அதை வழிநடத்தும் அன்னியருக்கா? இப்படி அன்னிய சக்திக்கு பாய்விரிப்பது திரோஸ்கிய விபச்சாரமில்லையோ? இங்கு ‘இந்திய, சீன, ஜப்பானிய, பாகிஸ்தான் அரசுகளின் பொருளாதார அரசியல் இராணுவ” உதவிக்கு இலங்கை கட்டுப்பட்டது என்பதே ஒரு திரிபாகும. இது இவர்களின் மற்றொரு அரசியல் திரிபு. உலகமயமாதலை பாதுகாக்க விடையத்தை மேலெழுந்தவாரியாக திரித்து, ஏகாதிபத்தியத்தை உள்ளடக்க ரீதியாக இலங்கையில் பாதுகாப்பதாகும். இப்படி பல. ஆனால் அவற்றை இக்கட்டுரை விவாதிக்க முற்படவில்லை.

    இவர்களும் ரீ.பீ.சீ மற்றும் தேனீக்கும் இடையில் என்ன வேறுபாட்டுடன் ஓடிவந்து, சோபாசக்தியின் சத்தியக்கடதாசியில் என்ன கூறுகின்றனர் என்பதை சுருக்கமாக பார்போம். இதன் மூலம் நுட்பமாக புலியெதிர்ப்பின் பன்மைப் போக்கை தெளிவுபடுத்த முடியும்.

    பேரினவாதத்துடன் கூட்டுச்சேர்ந்தே புலிகளை அழிக்கவும், அதை பகிரங்கமாக அங்கீகரிக்க மறுக்கும் ரீ.பீ.சீ மற்றும் தேனீ நிலைப்பாடு தான், இவர்களின் அடிப்படையான அரசியல் முரண்பாடு. இதற்கு முதலாளித்துவம் என்ற சொல்லை உச்சரித்து பசப்புகின்றனர். இந்த ரீ.பீ.சீ மற்றும் தேனீயுடான முரண்பாட்டை ‘புலிகள் அரசுக்கிடையே இராணுவ மோதல் மூண்ட போது புலிப்பாசிசம் தோல்வியுறவேண்டும் என்ற தெளிவான அரசியல் நிலைக்கு இவர்களால் போகமுடியவில்லை. இலங்கை அரசு புலிகள் இடையே நடுநிலமை உண்டெனக் கருதிக்கொண்டு இரு பகுதிகளையும் தாக்கத் தொடங்கினர். இலங்கை அரசு வெற்றிபெற வேண்டும் எனக் கூறினால் அது சிங்களத் தேசியவாதத்தை ஆதரிப்பதாய் கருதப்பட்டு விடும் என்று கருதியதால் வட துருவத்திற்கும் தென் துருவத்திற்கும் பாய்ந்தனர்.” இது தான் இந்த புலியெதிர்ப்பின் பின் பூத்துக் குலுங்கும் புதிய அவதாரம். இதற்கு சோபாசக்தியின் சத்தியக்கடதாசி, தனது முந்திய நிலைக்கு மாறாக துணைபோவது அறியாமையா? அல்லது ரீ.பீ.சீ மற்றும் தேனீ மீதான எதிர்ப்பா? இதை மறுபிரசுரம் செய்த தூண்டில் முன்னும் இக்கேள்வி பொருந்திநிற்கின்றது.

    ரீ.பீ.சீ மற்றும் தேனீயில் இருந்து பிரிந்தவர்களின் அரசியல, பேரினவாத அரசை நேரடியாக ஆதரிப்பது தான். அரச பயங்கரவாதத்தை புலிப் பாசிச அழிப்பில் அங்கீகரிக்க வேண்டும். இதைச் செய்ய மறுக்கும் மேற்கத்தைய நாடுகளை, இதன் அடிப்படையில் எதிர்க்க வேண்டும். புலியை ஏகாதிபத்தியம் அழித்தால், சூக்குமமான அந்த நிபந்தனையுடன் நாம் மறுபடியும் அரசியல் முலாம் பூசி ஆதரிக்க கோருவோம்.

    இதை விடுத்துவிட்டு தமிழ் மக்களுக்கு தீர்வு என்பதும், இதை அண்மைக்காலமாக ஏகாதிபத்திய வாலில் தொங்கியபடி முன்வைக்கும் ரீ.பீ.சீ மற்றும் தேனீயின் நிலையை பினாற்றல் என்பது இவர்களின் புலியெதிர்ப்பு நிலை. இதனால் தான் இவர்கள் ரீ.பீ.சீ மற்றும் தேனீயுடன் முரண்பட்டனர்.

    இந்த ஒட்டுமொத்த அரசியல் விபச்சாரத்தைத் தான் இவர்கள் ‘இலங்கை அரசு புலிகளை இராணுவரீதியில் சாகடிக்கும் எனிற்கூட நாம் அதையும் நிபந்தனைகளோடு ஆதரிக்கலாம். புலிப்பயங்கரவாதம் மேல் தாக்குதல் தொடுக்கப்பட்டால் ஐயோ இது சிங்கள அரசை ஆதரிப்பதாகிவிடும் என்று அரசியலில் களங்கப்படாத கற்புடன் இருப்பதாய் கருதும் சிலர் குரலிடுவார்கள்..” என்ற கூறி வாருங்கள் என்று அழைக்கும் திரொஸ்கிகள், தங்களுடன் சேர்ந்து கற்பழிக்க கோருகின்றனர்.

    தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு அவசியம் என்பதை ஏகாதிபத்தியத்தின் பின் நின்று வலியுறுத்தும், ரீ.பீ.சீ மற்றும் தேனீ புலியெதிர்ப்புக் கும்பலுடன் முரண்பட்டு நிற்கின்றனர். இதை மூடிமறைக்கவே, முதலாளித்துவம் என்ற அந்தச் சொல் மட்டும் உதவுகின்றது. புலியை அழிப்பதே இவர்களின் அரசியலாகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க மறுபவர்களுடனும், புலியை அழிக்கும் யாருடனும் கூட்டுச் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதே இவர்களின் அரசியலாகும். தேனீ மற்றும் ரீ.பீ.சீயில் இருந்து பிரிந்து வந்த இந்த புதிய கொண்டோடி புலியெதிர்ப்பு அணியில் தமிழரசன், மற்றும் அழகலிங்கமும் கொலுவேற்று இருக்கின்றனர். இதற்கு சோபாசக்தியும் அவரின் சத்தியக்கடதாசியும் எந்தவகையில், எதன் அடிப்படையில் துணைபோகின்றது என்பது மற்றொரு புதியதொரு விடையம்.

    மேலே எழுப்பிய கேள்விகளை விடவும், சோபாசக்தியின் முன்னைய திரொக்ஸ்கிய நிலையா இதற்கு மேலும் கூடுதலாக துணைபோகின்றது?. இந்த இருவரும் தமது திரொஸ்கிய அடுக்குமொழியுடன், முதலாளித்துவம் என்ற சொல்லைக்கொண்டு அரசியல் வித்தைகாட்ட முனைகின்றனர். இந்த அரசியல் வித்தை அப்பட்டமான ஆபாசமான பேரினவாதமாகவே வெளிப்படுகின்றது.

    நீங்கள் இந்த அரசியல் புலியெதிhப்பு ஆபாசத்தை புரிந்துகொள்ள ‘சர்வதேச சமூகமும் புகலிட ஜனநாயகச் சக்திகளும் என்ற கட்டுரையை

    ‘தேசிய நலன்கள் பாசிசத்தை அழிப்பதைவிட முக்கியமானவையா?” என்று பிதற்றுகின்றனர். தேசிய நலன்கள் என்ன? பாசிசத்தை எப்படி அழிப்பது? திரோஸ்கிய வாதிகளே! ஸ்ராலினிசம் அது இதுவென்று அலட்டாமல் பதிலை சொல்லுங்கள். தேசிய நலன்கள் என்ன? பாசிசத்தை எப்படி ஒழிப்பது?

    தேசியம் பாசிசத்துக்கு எதிராக இருப்பதையும், தேசியம் ஏகாதிபத்தியம் மற்றும் பேரினவாதத்துக்கு எதிராக இருப்பதையும், இவர்களால் ஒரு கணம் கூட ஜீரணிக்க முடிவதில்லை. புலிகளின் பெயரில், புலிப் பாசிசத்தின் பெயரில், தேசிய எதிர்ப்பு இவர்களின் செமியாக் குணமாகி வாந்தியாகின்றது. தேசியம் என்பது சாராம்சத்தில் உலகமயமாதல் எதிர்ப்பையும், அதையொட்டிய ஏகாதிபத்திய எதிர்ப்பையும் அடிப்படையாகக் கொண்டது. இதை மறுதலிக்கும் இவர்கள், அன்னிய சக்திகளையும் அரச இயந்திரத்தையும் நம்பி, மக்களை அவர்கள் பின் செல்லக் கோருகின்றனர். மக்களின் சொந்த அரசியல் வழியில் நம்பிக்கையற்ற, ஓட்டுண்ணிகளின் செயல்பாடாக இது வக்கரிக்கின்றது.

    இந்த நிலையில் பாசிசத்தை மக்கள் மட்டும் தான் ஒழிக்க முடியும். இதற்கு வெளியில் எதுவுமல்ல. இலங்கை மக்களும், சர்வதேச சமூகத்துக்குமே இந்தக் கடமையுள்ளது. அரசு, அன்னிய அரசுகள், கூலிக் குழுக்களால் பாசிசத்தை ஒழிக்கமுடியாது. அது மற்றொரு பாசிசத்தையே, மாற்றாக கொண்டு வரும். இதன் பின்னால் திரொஸ்கிகள் அன்னக்காவடி எடுத்து அரோகரா போட்டு ஆடலாம், ஆனால் மக்கள் ஆட முடியாது. அதாவது ஆட மாட்டார்கள்.

    தேசியத்தை விட பாசிசத்தை அழிப்பதே முதன்மையானது என்கின்றீர்களே? நல்ல பொருத்தப்பாடான புலியின் அதே அரசியல் புளுத்து வருகின்றது. புலிகள் கூறுகின்றனர் நாங்கள் நிரந்தர தீர்வைப் பற்றி பேசமாட்டோம், மனிதாபிமான பிரச்சனையை மட்டும் பேசுவோம் என்றனர். இரண்டையும் ஒன்றுக்குகொன்று எதிராக நிறுத்தி புலம்பியது போன்றதே, பாசிச ஒழிப்பும். பாசிசத்தை ஒழிப்பது மட்டும் தான் முதல் நிகழ்ச்சி நிரல், தேசிய நலன் நிகழ்ச்சி நிரலில் இருக்க முடியாது என்கின்றார்கள். புலிகளுடன் இணங்கிப் போகும் நல்ல வேடிக்கையான இலங்கை அரசியல்.

    தேசிய நலனை மறுக்கும் ஏகாதிபத்தியத்துடனும், அதையே அமுல்செய்யும் இலங்கை பேரினவாத அரசுடனும், கூட்டுச் சேர்ந்த புலியை அழிக்க தேசிய நலன்கள் தடையாக உள்ளது. இதனால் தேசிய நலனா! அதுவென்ன என்பதும்! அல்லது அதை பிறகு பார்ப்போம் என்பதும் இந்த புலியெதிர்பாளர்களின் அரசியலாகின்றது. பாசிசத்தை ஒழிக்க அன்னிய சக்திகளுடன் இணைய தடையாக உள்ள, தேசியத்தை இழிவாடி வம்பளக்கின்றனர். மக்கள் சார்ந்து பாசிச ஒழிப்பு பற்றி இவர்கள் கடுகளவு கூட எண்ணுவதில்லை. நாம் முன்பு சுட்டிகாட்டியது போல், முதலில் தமிழீழம் பின் ஜனநாயகம் என்று கூறும் புலிகளின் நிலைக்கும், இதே போல் முதலில் ஜனநாயகம் பிறகு சமூக முரண்பாடுகளை தீர்த்தல், என்ற ரீ.பீ.சீ மற்றும் தேனீ கும்பலின் புலியெதிர்ப்பு நிலைக்கும், முதலில் பாசிச ஒழிப்பு என்பது சமாந்தரமானது. முதலில் புலிப் பாசிச ஓழிப்பு, அதன் பின்பு தான் அனைத்தும் என்பது இந்த இடது வேடமிட்ட வலது புலியெதிர்பாளர்களின் அரசியல் நிலையாகும். மக்களைச் சார்ந்திருப்பதில் இருந்து எவ்வளவுக்கு எவ்வளவு அரசியல் ரீதியாக விலகுகின்றதோ, அந்தளவுக்கு இந்த மக்கள் விரோதப் போக்கு அரங்கேறுகின்றது. அது சொல்லும் விதம் மட்டும் நாசுக்காகவே மாறுபடுகின்றது.

    பாசிசம் தேசிய நலனை மறுதலிக்கின்றது என்ற அரசியல் உள்ளடக்கம், திரோஸ்கிய மலடுகளுக்கு புரிவதில்லை. மக்களின் நலன்கள் தான் தேசியம். மக்களின் நலன்களை ஏகாதிபத்தியம், பேரினவாதம், புலிகள் என யாருமே ஏற்றுக்கொள்வது கிடையாது. தேசியம் சமன் பாசிசம் என்ற திரொஸ்கிய மலட்டுத்தனம் ஆற்றலற்றது. சொந்த மக்களின் நம்பிக்கையற்றது. மக்களின் எதிரிகளுடன் சேர்ந்து நின்று முரண்பாடுகளை தீர்க்க கோருகின்றது.

    பாசிசத்தை ஒழிக்க வேண்டும் என்றால், தேசியத்தை மக்களின் தமது சொந்த நலனில் இருந்தே முன்னெடுக்க வேண்டும். அதையே வழிகாட்ட வேண்டும். அதற்கு துப்பில்லை. பாசிசத்தை ஒழிக்க ஏகாதிபத்தியத்தை சார்ந்து நிற்பவர்கள், அதே கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டவர்களின் செயல்பாடுகளின் கோட்பாடுகள், தேசியம் சார்ந்ததாக இருக்காது. இதனால் தான் தேசியத்தை மறுக்கின்றனர். தேசிய மறுப்பின் அனைத்து தளமும் இப்படி தான் எங்கும் உள்ளது.

    சாராம்சத்தில் தேசியம் என்பது என்ன? முதலில் அது பாசிசமல்ல. புலிகளின் போராட்டம் தேசிய போராட்டமல்ல. மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளே சாராம்சத்தில் தேசியமாகவுள்ளது. ஓரு தேசத்தில், ஒரு தேசியத்தில் வாழும் மக்கள், தமது சொந்த பொருளாதார தேசிய வாழ்வை பாதுகாப்பது தான் தேசியம். யாரிடமிருந்து பாதுகாப்பது. உலகமயமாதலாக ஒருங்கு திரண்டு வரும் ஏகாதிபத்தியத்திடம் இருந்து, அதையே ஆளும் கோட்பாடாக கொண்ட குறுகிய இனவாத மதவாத சக்திகளிடமிருந்து, மக்கள் தமது உழைப்பை, உழைப்பின் ஆதாரத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தையும் எதிரியையும் குறித்து நிற்கின்றது. இதனடிப்படையில் தேசிய பண்பாடு, தேசிய கலாச்சாரம், தேசிய மொழி என அனைத்தையும் சிதைக்கவும், சீரழிக்கவும் முயலும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தேசியம் போராடக் கோருகின்றது. புலிப் பாசிசம் தனித்துவமாக இந்த உலகயமாதலுக்கு வெளியில் அது செயல்படவில்லை என்பதுடன், அது சுயாதீனமாக செயல்படவே முடியாது.

    ஏகாதிபத்திய உலகமயமாதல் தேசியத்தின் சகல கூறுகளையும் அழிக்கும் போது, அதை எதிர்த்து நிற்பதன் சாரம்தான் தேசியம். புலிகள் கோருவது தேசியத்தையல்ல. புலிகளின் பாசிசம் தேசியமல்ல. எல்லா மக்கள் விரோதிகளும் விதிவிலக்கின்றி, பாசிசத்தை தேசியம் என்று கூறும் புலியின் நிலையை அங்கீகரித்து, அதற்கு சாதகமாக அல்லது எதிராக தமது மக்கள் விரோத போக்கை அரங்கேற்றுகின்றனர். புலிகளின் பாசிசம் தேசியமல்ல என்று கூறி யாரும் தேசியத்தை முன்வைப்பதில்லை. இதனால் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். மக்களின் தேசிய நலனில் நம்பிக்கையற்று, பாசிச ஒழிப்பில் அன்னிய சக்திகளின் கூலிப்பட்டாளமாகின்றனர்.

    பாசிச ஒழிப்பில் இவர்கள் ஆதரிக்கும் ஏகாதிபத்திய உலகமயமாதல், தேசியத்தையும் தேசிய பொருளாதாரத்தையும் அழிக்கின்றது. ஏகாதிபத்திய உலகமயமாதல் என்பது ஏகாதிபத்தியம் முதல் இலங்கை அரசுவரை உள்ளடங்கியது. இது திரோஸ்கிய மலட்டுத்தன அறிவுக்கும், குருட்டுப் பார்வைக்கும் தெரிவதில்லை. இதனால் புலி அழிப்பு முதல் அனைத்தும் மக்கள் விரோதமாகவே அவதரிக்கின்றது.

    இப்படி மக்களின் தேசிய பொருளாதாரத்தை அழிப்பவனுக்கு காவடியெடுப்பவர்கள் தான், ‘சுயநிர்ணய உரிமை அரசியலின் சகாப்தம் இன்று முடிவடைந்து விட்டது” என்கின்றனர். நல்ல நகைச்சுவை. ஏதோ புதிதாக சொல்வது போல் சொல்லிக் காட்டுகின்றனர் திரொஸ்கியின் பெயரில் திரொஸ்கிஸ்ட்டுகள். இதையே திரொஸ்கி சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் லெனினுக்கும் ஸ்ராலினுக்கும் எதிராக, அதாவது மக்களுக்கு எதிராகக் திரொஸ்கி கூறியது தான். அதே சரக்கு, இன்று சகாப்தம் முடிந்துவிட்டதாக கூறி தூசுதட்டி, அதே போட்டை புலிப் பாசிசத்தின் துணையுடன் திரும்ப ஊரறிய மாட்ட முனைகின்றனர்.

    தேசிய சுயநிர்ணய உரிமையை மறுத்தவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் தான் திரொஸ்கி. இது மட்டுமல்ல விவசாயிகளின் புரட்சிகர பாத்திரத்தையே மறுத்தவர் தான் இந்த திரோஸ்கி. இப்படி மக்களின் புரட்சிகர பாத்திரத்தையும், மக்களின் அடிப்படை உரிமையையும் எதிர்த்த திரொஸ்கியின் அரசியல் போக்குகளை எதிர்த்து தான், லெனினால் புரட்சியை நடத்த முடிந்தது. திரோஸ்கி லெனின் ஸ்ராலின் தலைமையில் நடைபெற்ற புரட்சியுடன் ஓட்டுண்ணியாக ஓட்டிக்கொண்ட போது, அவரின் தத்துவ ரீதியான எதிர்ப்புரட்சிகர போக்கும் ஓட்டிக்கொண்டது. நடந்த புரட்சியை குழிபறிக்க லெனினுடன் முரண்படாத காலம் எதுவும் திரோஸ்கிக்கு கிடையாது. புரட்சிக்கு பிந்திய லெனின் தத்துவார்த்த நீண்ட போராட்டங்களை, திரொஸ்கிக்கு எதிராகவே நடத்தவேண்டிய துரதிஸ்டம் லெனினுக்கு ஏற்பட்டது. பல்வேறு விடையங்களில் இந்த நிலை தொடர்ச்சியாக ஏற்பட்டது. புரட்சிக்கு பிந்திய விடையங்களில் லெனின் அவதானம் செலுத்த முடியாத அளவுக்கு, திரொஸ்கியின் எதிர்புரட்சிகர பாத்திரமே லெனின் நேரத்தையே மட்டுப்படுத்தியது. லெனின் மறைவின் பின் இதே நிலை ஸ்ராலினுக்கு ஏற்பட்டது.

    இன்று இதை மூடிமறைக்க ஸ்ராலினிசம் என்று கூறி கொச்சைப்படுத்த முனைவது லெனினிசத்தைத் தான். அதாவது மார்க்சியத்தைத் தான். இதனால் தான் சுயநிர்ணயத்தை மிக மோசமானதாக காட்டி, புலிப் பாசிச துணையுடன் இழிவாடுகின்றனர் திரொஸ்கிகள். இவர்கள் இப்படி என்றால் ரீ.பீ.சீ ஆய்வாளர் சிவலிங்கம் சுயநிர்ணயத்துக்கு தனது ஏகாதிபத்திய சார்புக்கு ஏற்ப புது விளக்கம் அளிக்கின்றார். 11.11.2006 ஜெர்மனி ஸ்ருட்கார்ட்டில் நடந்த புலியெதிர்ப்பு கூட்டம் ஓன்றில் ‘மாற்று அரசியலை நோக்கிய பார்வை” என்ற தலைப்பில் ‘சுயநிர்ணய உரிமை என்பது ஜனநாயக விழுமியங்களை உள்ளடக்கியதாகும். மக்கள் தமது சுயவிருப்பங்களை வெளிப்படுத்தும் வகையில் சுயமாகவும், சுதந்திரமாகவும், தமது வாக்குகளைப் பகிரங்கமாக தேர்தலில் இணைந்து வெளிப்படுத்துவதும் சுயநிர்ணய உரிமையாகும். மக்களின் விருப்பமும், அங்கீகாரமுமே அரசின் ஆட்சி அதிகாரத்திற்கான இருப்பாகும்.” என்கின்றார். மக்கள் வாக்கு போடுவது தான் மக்களின் சுயநிர்ணயம் என்கின்றார். அதை அவர் ‘மக்களின் இறைமை அதிகாரம் வாக்குச் சீட்டின் மூலம் பிரயோகிக்கப்படுகிறது” என்கின்றார். சுயநிர்ணயத்தை திரிப்பதில் புலிகளின் தம்பி தான் நாங்கள், ஆனால் ஜனநாயகவாதி என்கின்றனர். சுயநிர்ணயத்தை இப்படி தத்தம் நோக்குக்கு ஏற்ப திரிப்பது, மறுப்பது இவர்களின் கைக்கூலித்தனத்துக்கு ஏற்ப கைவந்த கலையாகின்றது. இதையே தான் மற்றொரு கடைக்கோடியில் நின்று திரொஸ்கிய புலியெதிர்ப்பு கும்பலும் செய்கின்றது.

    திரொஸ்கிய லெனினிய விரோத கருத்தை இன்று மறுபடியும் ஓப்புவிக்கின்றனர். சுயநிர்ணயம் என்ற லெனினிய சகாப்தம் முடிந்துவிட்டது என்றால், அதற்கு பதிலாக என்ன வந்துள்ளது. தேசங்களை, தேசியங்களை உலகமயமாதல் பொருளாதாரம் சூறையாடவில்லையா? புலிகள் முதல் இலங்கை அரசாங்கம் வரை தேசத்தை, தேசியத்தை மறுதலிக்கவில்லையா? மக்களுக்கு சுயநிர்ணயம் கிடையாது என்று சொல்வதில், புலிகள் முதல் திரொஸ்கிகள் வரை ஓரே கோட்பாட்டையே கொண்டுள்ளனர். இதையே ரீ.பீ.சீ ஆய்வாளர் சிவலிங்கம் மற்றொன்றாக திரித்து மறுக்கின்றார். இவற்றை எல்லாம் மறுத்தபடி மக்கள் தமது சொந்த வாழ்வு சார்ந்த, தன்னியல்பாகவே தாம் அறியாமால் இதைக் கோருகின்றனர். இதற்காக சூக்குமமாக தமது சொந்த வாழ்வின் ஊடாக போராடுகின்றனர். இது மிக நுட்பமானது ஆனால் உள்ளடக்க ரீதியானது.

    இந்த நிலையில் சுயநிர்ணயத்தைக் கோரும் பாட்டாளிவர்க்கம், தனது வர்க்க நிலை காரணமாக இதற்கு எதிரான அனைத்தையும் எதிர்த்து போராடுகின்றது. அதுவும் குறித்த தேசிய எல்லைக்குள் இது எதார்த்தத்தில் காணப்படுகின்றது. பாட்டாளி வர்க்க புரட்சிகள் சாராம்சத்தில் தேசியமாகவே உள்ளது. உலகில் ஓரே நாளில் ஒரே வினாடியில் உலகமயமாதலை எதிர்த்து புரட்சி வந்துவிடாது. இதை வரலாறு காட்டியுள்ளது. எதார்த்தம் இதை நிறுவுகின்றது.

    நாடுகளின் ஏற்றத் தாழ்வான பொருளாதாரம், சமூகங்களிடையே வேறுபட்ட முரண்பாடுகள், முரண்பாடுகளின் ஒரு சீரற்ற தன்மை, புரட்சிக்குரிய தயாரிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி, புரட்சிக்கு தலைமை தாங்கும் தலைமைகளின் சீரற்ற பார்வை, பாட்டாளி வர்க்க கோட்பாட்டு ரீதியான உள்வாங்கல்களிலும் அதை பிரயோகிப்பதிலும் உள்ள குறைபாடு, தலைமைகள் நாட்டின் எல்லைக்குள் இருப்பதும், நாடுகள் தனித்தனியாக பிரிந்து கிடப்பது போன்ற பல்வேறு காரணங்கள் தேசங்களின், தேசியத்தின் தனித்துவத்தை நிர்ணயம் செய்கின்றது. நாடுகளின் சுயநிர்ணயத்தை பாதுகாப்பதை, தற்பாதுகாப்பதை கோருகின்றது. பாட்டாளி வர்க்கம் சர்வதேசிய உணர்வு பெற்று இருப்பதை, அதை நடைமுறையில் செயல்படுத்துவதை இது மறுதலித்துவிடவில்லை. தேசங்கள், தேசியத்தின் உள்ளடக்கத்தை இதை முரணாக்கிவிடுவதில்லை.

    சர்வதேசியத்தை தேசியத்துக்கு எதிராக முன்னிறுத்துவது, தேசியத்தை சர்வதேசியத்துக்கு எதிராக முன்னிறுத்துவது முற்றிலும் தவறானதும் உள்நோக்கம் கொண்டதுமாகும். இதை தமிழ் மக்களின் எதிரிகள் அனைவரும் விதிவிலக்கின்றி செய்கின்றனர். தேசியம் இரு கூறுகளாகவே எதார்த்தத்தில் இருந்தது, இருக்கின்றது.

    1.பாட்டாளி வர்க்க சர்வதேசியக் கூறு

    2.முதலாளித்துவ தேசியக் கூறு.

    இரண்டுக்கும் தனித்தனி நோக்கம் உண்டு. புலிகள் பாட்டளிவர்க்க தேசியத்தையோ, முதலாளித்துவ தேசியத்தையோ முன்னெடுக்கவில்லை. அது தேசியத்தை மறுக்கும் ஓரு இராணுவ பாசிச மாபியாக் குழு. அது ஓரு இனத்தின் தேசியக் கூறை தான் கொண்டிருப்பதாக கூறிக் கொண்டு தான், தன்னைத் தான் நிலை நிறுத்த முடிகின்றது. இந்த உண்மையை இனம் கண்டு, தமிழ் மக்களின் தேசியக் கூறை (பாட்டாளி வர்க்க கூறு, முதலாளித்துவக் கூறு) வேறுபடுத்தி, அதைப் புலியில் இருந்து தனிமைப்படுத்தி போராடாத எமது வரலாறும் எமது கோட்பாடுகளும் தான் புலியின் அரசியல் இருப்பாகின்றது. புலியின் இருப்புக்கு யார் காரணம் என்றால், மக்கள் அல்ல. மாறாக தமிழ் மக்களின் தேசியக் கூறை புலியில் இருந்து பிரித்து, அதற்காக போராடாத பாட்டாளி வர்க்கம் மற்றும் தேசிய முதலாளித்துவ பிரிவுகளின் கோட்பாட்டு தெளிவுமின்மையும் நடைமுறையின்மையும் தான் இன்றுவரை காரணமாக உள்ளது. இதை மறுதலிக்கும் திரோஸ்கிய புலியெதிர்ப்பு, இலங்கை அரசின் பின் விசுவாசமாக கோட்பாட்டு ரீதியாகவே வாலாட்ட வைக்கின்றது.

    தேசியத்தில் உள்ள பாட்டாளி வர்க்க சர்வதேசிய கூறே இன்னமும், அடிப்படையான புரட்சியின் முக்கியமான உந்துவிசையாகவுள்ளது. முதலாளித்துவத்தின் தேசியக் கூறு, எதார்த்த்ததில் பலவீனமாகியுள்ளது. முதலாளித்துவ தேசியக் கூறை எந்த மூன்றாம் உலக நாட்டு (கியூபா உட்பட, ஆனால் வேறுபாடு உண்டு) அரசுகளும் பின்பற்றவில்லை. மாறாக அவ் அரசுகள் உலகமயமாதல் அமைப்பின் ஓரு அடியாட்படையாக கூலிக்கும்பலாகவே வீழ்ந்து கிடக்கின்றது. உள்ளுர் உற்பத்தி முறையில் உள்ள தேசிய முதலாளித்துவ கூறுகள், தமது உற்பத்தியில் உலகமயமாதல் உற்பத்திக்கு எதிராக தமது தற்காப்பை அடிப்படையாக கொண்டு போராட முனைகின்றது. ஒன்றில் மரணிக்கின்றது அல்லது ஏகாதிபத்திய உலகமயமாதல் பொருளாதாரத்துக்குள் உறுஞ்சப்படுகின்றது. இப்படி ஒவ்வொரு கணமும் தேசிய உற்பத்திகள் கடுமையான போராட்டத்தை சதா நடத்துகின்றது.

    இந்த நிலையில் தான் பாட்டாளி வர்க்க தேசியம் மிக முக்கியமான புரட்சிகர பாத்திரத்தை வகிக்கின்றது. தேசிய உற்பத்தியை பாதுகாக்க முனைப்பாக முனைகின்றது. தனது சொந்த வாழ்விற்கான சமூக ஆதாரத்தை அழிப்பதை அது மறுதலிக்கின்றது. தனது உழைப்பை பிடுங்கும், அதை மறுதலிக்கும் உலகமயமாதலை எதிர்த்து நிற்கின்றது. உலகமயமாதல் உற்பத்தி தேசிய உற்பத்தியை சுரண்டுவதை, அதை அழிப்பதை மறுதலிக்கின்றது. தனது வாழ்வு சார்ந்து, தேசிய மொழி பண்பாடு என அனைத்தையும் பாதுகாக்க முனைகின்றது. சுயநிர்ணயம் என்பது உலகமயமாதலை எதிர்ப்பதையே சாரமாக கொண்டது. அதாவது ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதையே சாரமாக கொண்டது. தனி மனிதன் தனது சுயநிர்ணயத்தை கோருவது எவ்வளவு முக்கியமோ, அதுவே தேசத்துக்கும் பொருந்தும். தனிமனித சுயநிர்ணயம் மற்றவர் சுயநிர்ணயத்தை மறுத்தல் அல்ல, மாறாக அங்கீகரித்தலாகும். இதுவே தேசியத்துக்கும் பொருந்துகின்றது. தனிமனிதன் தனது சுயநிர்ணயத்தைக் கோருகின்ற போது, அதை தேசத்துக்கு மறுப்பது அபத்தமாகும்.

    அபத்தமாகவே சிந்தித்து அலம்பும் தமிழரசன் ‘இன்று இலங்கையில் உள்ள முதன்மையான அபாயம் புலிப்பாசிசமாகும். புகலிட நாடுகளில் தம்மை இடதுசாரிகளென்று கருதிக்கொள்ளும் ஸ்டாலினிச பழந்தேம்பு புரட்டுபவர்கள் தமிழ் தேசிய விடுதலையின் பெயரால் புலிப் பாசிசத்தைக் கூட ஆதரிக்கத் தயாராக உள்ளனர்.” என்று எங்களையே குறிப்பிடுகின்றார். பாசிசத்தை எதிர்த்து தொடர்ச்சியாக நாங்கள் போராடி வருகின்ற எமது காலத்தில், இந்த திரொஸ்கிய குசும்புகள் எந்த உலகத்தில் இருந்தனர். எங்கே இந்த பாசிசத்தை எதிர்த்து நின்றனர் என்று தேடினாலும், எங்கும் கிடைக்குதில்லை. அண்மைக்காலமாக அன்னக்காவடியாட்டம் தேனீக்கு பின்னால் பிரதிட்டை செய்தவர்கள், இன்று ஆகாகா யுகப் புரட்சி என்கின்றனர். யாருடன் எப்படி என்றால் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து செய்யப்போவதாக பிதற்றுகின்றனர். ஆகவே ‘பழந்தோம்பு” என்று கிண்டல் அடிக்கின்றனர்.

    ‘தமிழ் தேசிய விடுதலையின் பெயரால் புலிப் பாசிசத்தைக் கூட ஆதரிக்கத் தயாராக உள்ளனர்” என்ற எதிர்வு கூறலை எம்மை நோக்கிக் கூறுகின்றனர். எப்படித்தான் இந்த எதிர்வு கூறலை கூற முடிகின்றது என்றால், எங்கள் கருத்துகளை விமர்சிக்க முடியாத மொத்த விளைவே எதிர்வு கூறலாகின்றது. இப்படித் தான் அரசியல் சேறடிக்க முடிகின்றது. பிரச்சனையை நேரடியாக விவாதிக்க துப்பேயில்லை. ‘தமிழ் தேசிய விடுதலையின் பெயரில்” என்கின்றனர். இது புலிகள் தமிழ் தேசிய விடுதலை நடத்துவதாக, திரொஸ்கிய மதிப்பீட்டின் முடிவில் இருந்து வெளிப்படுகின்றது. நாங்கள் அப்படி மதிப்பிடவில்லை. இது அவர்களுக்கும் எமக்குமான தெளிவான அரசியல் வேறுபாடு. இப்படித் தான் அனைத்து சர்வதேச நிலைபாட்டிலும் வேறுபாடு உண்டு. ‘தமிழ் தேசிய விடுதலையின் பெயரில்” என்று கூறுவதன் மூலம், திரோஸ்கிகள் உள்ளடக்கத்தில் ஆச்சரியப்படதக்க வகையில் புலிகளின் கோட்பாட்டு ரீதியான உடன்பாட்டுக்குள் புலிகளின் தேசிய ஆசான்களாகிவிடுகின்றனர். புலிகள் தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தவில்லை என்ற எமது அரசியல் நிலை மட்டும் தான், புலியை அரசியல் ரீதியாக விமர்சிக்கின்றது. மற்றவை எல்லாம் புலியெதிர்ப்பை அரசியலாக முன்வைக்கின்றது. ஆகவே மாற்று அரசியல் வழியற்று, அரசு மற்றும் ஏகாதிபத்திய நடவடிக்கைக்கு துணைபோவதையே அரசியலாக்கின்றது.

    நாங்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை உயர்த்துவதால் அதை ‘ஸ்டாலினிச பழந்தேம்பு புரட்டுபவர்கள்” என்கின்றனர். திடீரென பாசிசத்தை இலங்கை அரசுடன் சேர்ந்து புரட்ட வந்தவர்கள், இப்படி புலம்பவது நிகழ்வது உண்டு. சுயநிர்ணயத்தை உயர்த்துவதானது, பாசிசத்தை பாதுகாப்பது எனக்கூறி வட்டமடிக்கின்றனர். ஆனால் எதார்த்தம் சார்ந்த எமது போராட்ட வரலாறு, எமது கோட்பாட்டு தெளிவு இலங்கையில் மிகத் தனித்துவமானதும், தெளிவானதுமாகும். யாருக்கும் நாம் சோரம் போனது கிடையாது. கோட்பாட்டு ரீதியாக யாரும் செய்ய முடியாததை ‘பழந்தேம்பு”கள் ஆகிய நாம் நடைமுறையில் செய்துள்ளோம். இந்த போராட்டத்தில் நாம் கண்ட நெருக்கடிகள், அவதூறுகள், இழிவாடல்கள் எல்லையற்றது. நாம் அதை துணிச்சலாக எதிர்கொண்டு, மக்களின் விடுதலைக்காக தனிததுவமாகவே கோட்பாட்டு துறையில் நிமிர்ந்து நிற்கின்றோம்.

    ‘பழந்தேம்பு” என்று க

  4. மாற்றுச்சிந்தனைகள்,மாற்றுஅரசியல்,மார்க்ஸியவிவாதஙகள்,சர்வதேசிய அனுபவஙகள்,படிப்பினைகள்,அறிவியல்,இலக்கியம்,கவிதை,அழகியல் இவற்றிற்கான காலம் முடிந்துவிட்டது.கொல் அல்லது கொல்லப்படுவாய். வன்முறையை எதிர்கொள்வது எப்படி? எதிர்க்கப்போவதுயாரை? எதை அல்லது எவற்றை?,எப்படி? யாருடன்,மாற்றப்போவது எவற்றை? உதிர்க்கப்போவது எவற்றை? யாருடைய துப்பாக்கி ? யார்கையில்? யார் கொல்லப்படுவோர்?

  5. புலி எதிர்ப்பு என்பது காலத்தின் அவசியம்! ஏனெனில் காலச்சக்கரத்தின் இயங்கியல் சுழற்சியை தடுத்து நிறுத்தும் கைங்கரியத்தில் புலிகள் ஆரம்பம் முதலே ஈடு பட்டு வருகின்றார்கள்! ஆகவேதான் காத்தோடு புலிகள் முரண்பட்டு நிற்கின்றார்கள்! காலத்தை உணர்ந்து செயலாற்ற முன்வர மறுப்பவர்கள் தங்களுக்குரிய புதைகுழிகளை தாமே தோண்டிக்கொண்டிருப்பதாகவே அரத்தம்! புலியோடு பேசி புலிகளை எந்தவொரு உடன்பாட்டிற்கும் கொண்டு வரமுடியாது. கொலைகளை நிறுத்தவோ அன்றி குறைந்த பட்சம் மக்கள் மீதான கட்டாய வரி அறவீடுகளை தடுக்கவோ புலிகளுடன் பேசி பயனில்லை என்றாகி விட்டது. ஆகவே எதிரியின் எதிரி நண்பன் என்ற அடிப்படையில் தமிழர்களை தமிழர்களே கொல்லும் கொலைக்கலாச்சாரத்தை ஆரம்பித்து அதை கொண்டு நடத்திக்கொண்டு வரும் புலிகளை யார் அழிக்கின்றார்களோ அவர்கள் எதிரிகள் ஆயினும் நண்பர்களே! எதிரி அழிக்கப்படும் வரை அந்த நண்பனின் நடவடிக்கைகளை ஆதரிப்பது தவிரக்க முடியாத ஒள்று

  6. தேனியும் ஒரு கனவுலகப்புலி!

    ஒரே வட்டம்

    அடுத்த கட்டம் என்ன என்பதற்கு அவர்களிடம் தெளிவு கிடையாது

  7. தமிழரசனின் கட்டுரை சில குறைபாடுகள் இருப்பினும் இலங்கை இனப்பிரச்சினையை புதிய பார்வை கொண்டு ஆய்வு செய்துள்ளது. ரயாகரனின் விமர்சனம் விசமத்தனமானது மட்டுமல்ல விசர்தனமானதும் கூட. அது பற்றி விரிவான ஒரு விமர்சனத்தை தனி கட்டுரையாக அனுப்புகிறேன்.

  8. தமிழ்ச்செல்வனை விமர்சிப்பது தவறல்ல! அது தேவையான ஒன்று. கேவலம் கெட்ட வேலை என்னவெனில் மாற்றுக்கருத்து என்ற பெயரில் எதையோ செய்துகொண்டிருக்கும் தேனீ தமிழ்ச்வெல்வன் மீது சாதி ரீதியான தூற்றதலை நடத்தியதை ஏற்கமுடியுமா? சாதியின் பெயரால் தூற்றி விட்டு அதற்கு நியாயம் கற்பிக்கவும் தேனீ தயங்கவில்லை! இந்த நிலையில் தேனீயை எப்படி ஐனநாயக சகத்திகள் ஏற்க முடியும்? தமிழ்ச்செவன் குறித்த சாதித்திமிரை தேனீயிடம் கேட்க மறந்தவர்கள்தான் தலித்தியம் பற்றியும் புரட்சி பற்றியும் புலம்புகின்றார்கள். வெட்கம் கெட்டவர்கள் பகிரங்க விவாதத்திற்கு வரமுடியுமா? எந்த வகையில் நியாயப்படுத்தப்போகிறார்கள்! சத்தியக்கடதாசி மட்டும்தான் தேனீயின் சாதித்திமிரை அம்பலப்படுத்தியிருந்தது. புலியின் கையில் பீரங்கி தேனீயின் கையில் குண்டூசி இது மட்டும்தான் வித்தியாசம். தேனியிடம் ஆயுதம் இருந்தால் அவர்களும் இதையே செய்வார்கள்! வெறும் பிற்போக்கு கும்பல். உடகத்துறையில் அராஐகம் காட்டி வரும் தேனீ அது பொய் என்றால் தமிழ்ச்செல்வன் குறித்த சாதித்திமிரை பகிரங்கமாக சுயவிமர்சனம் செய்ய வேண்டும்! பாசிசம் பற்றி ஊளையிடும் தேனிக்கு தேசியம் தெரியுமா? சர்வதேசியம் தெரியுமா? வர்க்கம் தெரியுமா? புரட்சி தெரியுமா? அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்வுகூறல் தெரியுமா? வெறும் புலி எதிரப்பு மட்டம்தான். அதுவும் சாதித்திமிருடன்……

    ஆகவே தேனீ குறித்து சத்தியக்கடதாசியின் விமர்சனங்கள் நியாயமானது! மேலாதிக்கம் எந்த விடயத்தில் இருந்தாலும் அதை எதிர்ப்பது ஐனநாயகவாதிகளின் கடமை! சத்தியக்கடதாசிக்கு பாராட்டுக்கள்! சோபா சக்தியின் முயற்சி தொடர வாழ்த்துக்கள்!

  9. பொறுப்பில்லாமல் எழுதக்கூடாது. ரத்தத்துக்கு ரத்தம் என்பது நல்ல வழிமுறையல்ல. வேறு வழிமுறைகளைக் கண்டுபிடிக்க தெரியாது அல்ல சோம்பேறித்தனம் என்பதற்காக பிழையான வழிமுறையை கைக்கொள்ளத்தேவையில்லை. புலி எதிர்ப்பு என்பதனை வெறுமனே பெளதீக அழிப்பு என்று பாராமல் கருத்தாக எதிர்கொள்ளுங்கள். புலிக்கருத் தென்பது யாழ். மேட்டுக்குடி விருப்புநிலை. அப்படிப்பார்த்தால் கணிசமான மக்கள் தொகையை அழிக்கவேண்டும். ஆட்டம்போட்ட தமிழரசு கூட்டணியெல்லாம் இன்று குப்பைக்குள்தான் கிடக்கின்றன.
    புலியின் வளர்ச்சியென்பது புலி எதிர்நிலையாளர்களது பலவீனங்களே… என்ற ஒரு உண்மையையும் கருத்தில் கொள்ளுங்கள். வெறுமனே சுயதிருப்திக்காக புலிஎதிர்ப்பாளகள் தங்களுக்குள் அரட்டைஅடிப்பதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை

  10. புலி என்பது புலிகளின் தலமை மட்டம்தான்! புலிகளின் தலமை என்பது பிரபாகரனும் அவரை சற்றியள்ளவர்களும் மட்டும்தான்! பொல்போட் கிட்லர் முசொலினி போன்ற கொடுங்கோலர்களின் இழப்பில் மக்கள் மகிந்தார்களெயொழிய அவர்கள் அழியவில்லை! மக்களின் அழிவ தடுக்கப்பட்டமது. அது போலவே தமிழ் மக்களையும் காப்பாற்ற வேண்டுமேயானால் புலிகள் அழிக்கப்பட வேண்டும்!

  11. மேட்டுக்குடி மனோநிலையில் சாதித்திமிரில் இணையம் நடத்தும் தேனீ க்கு தம் சார்ந்த விமர்சனங்களுக்கு பதல் கூற வேண்டும் என்ற எண்ணம் இது வரை தோன்றவில்லை!
    மாற்று என்று கூறும் ஈ.பி.டி.பி புளொட் ஈ.பி.ஆர்.எல்.எவ் கூட்டணி ஈ.என்.டி.எல்.எவ் சிறீரெலோ போன்ற அணைத்து அமைப்பகளும் தேனீயிடம் கெள்வீ கேட்க வேண்டும். சத்தியக்கடதாசி போல் உண்மையை பேச வேண்டும். சத்தியக்கடதாசியம் எல்லா விடயங்களிலம் சரியான கருத்தென நான் கூறவில்லை. ஆயினும் பாராட்டுகின்றேன்!

  12. தேனீயைத் வலிந்து தாக்குவது அப்படியே தொpகிறது.

  13. தேனியை வலிந்து தாக்கவேண்டிய தேவை எனக்கில்லை.
    தமிழ்ச்செல்வன் குறித்த சாதி ரீதியான தேனீயின் கட்டுரை குறித்து யாரும் நியாயப்படுத்த முடியாது.

  14. தேனி இணையத்தளத்திற்கு விளம்பரம் செய்வதுதான் உங்களின் நோக்கமென்பது புரிந்தவர்களுக்குப் புரியும்.;

  15. பேரின்வாதம் இப்போ இல்லை அல்லது வலிமையற்றதகி விட்ட்து என்பதெல்லாம்
    இரு முக்கிய கட்சிகள் நாட்டின் இன்றைய பொருளாதர நிலைமையில் உல்க நிலமையில் சாத்தியம் குறைவாக இருப்பதனாலேயே. அந்த இடத்தை இன்று ஜேவிபி இட்டு நிரப்புகின்றது. சிறு கட்சிகளான சிங்கள உருமய, ஜாதிககெல உருமய போன்றன முயற்சிக்கின்றன. ஆனால் ஜேவிபியின் நீண்டவரலாறும், உலகமயமாதலினாலும் போரினாலும் பாதிக்கப்படுகின்ற சிங்கள மக்களின் குரலாகவும் ஒலிப்பதினால் அக்கட்சிக்கு ஆதரவு பெருகுகிறது.தமிழருக்கு இன்னும்கூட ஒரு தீHவை முன் வைக்காதவர்கள் புலிகளை அழிப்பதில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். விரும்புகிறோமோ இல்லையோ புலிகளின் இருப்பில் தமிழர்களின் இனப்பிரச்சனைத் தீர்வும் தங்கியுள்ளது. புலிகளின் ஜனனாயக விரோதச் செயற்பாடுகல்/ பயங்கரவாதமானது அரசபயங்கரவாதத்தைநியாயப்படுத்திவிடும் நிலைமைக்கு கொண்டு வந்து நிற்கிறது.இலங்கை அரசில் சிறுபான்மைய்ர்க்கான அதிகாரப் பகிர்வும் சுயநிர்ணய உரிமையும் கடந்த காலத்தைப் போன்று இன்னமும் அவர்களின் தேவையாகவும் உரிமையாகவும் உள்ளது. இதனை அன்று போலவே இன்றும் இலங்கை பெரும்பான்மையின அரசு மறுதலிப்பதாய் உள்ளது. புலிகளின் மனித விரோதச் செயற்பாடுகளையே தமது சிறுபான்மைவிரோத செயற்பாட்டை மறைப்பதற்கு போதுமானதாய் கருதுகின்றனர்.

    ஒரு நாட்டினுள் மேலிருந்து குண்டுகளை வீசுபவர்கள் அது பயங்கரவாதிகளின் இலக்குகள்மீது அச்சொட்டானவை என்று கதை சொல்ல முடியாது. இசுரேலின் லெபனான் மீதான தாக்குதல்களையும், அமரிக்காவின் ஈராக் ஆப்கானிஷ்தான் மீதான தாக்குதல்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டிவரும்

    இல்ங்கை தமிழ்மக்களிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் யாழ்ப்பண்ய சமூகத்தில் தாம் பிறந்தசமூகத்தில் தமது அரசியல் செயற்பாட்டுக்களை செய்யமுடியாதவர்கள் அல்லது தோல்வியுற்றவர்களும் சலிப்படைந்தவர்களும் சோசலிசம் பேசும் அரசாங்கத்தில் நம்பிக்கை வைப்பதுவும் ஏமாற்றமடைவதுவுமாக இருக்கின்றனர். சிங்கள மக்களின் எளிமை, கொழும்பு ம்ற்றும் புறநகரங்களின் தொழில்துறை வளர்ச்சியும் தொழிலாளர் வர்க்கமும், படித்த இளைனர்களின் மார்க்சிய ஈடுபாடு என்பவற்றை பார்த்தவர்க்கு யாழ்ப்பாண்த்து மத்திய்தர சாதிய ஆதிக்க சமுகத்தில் அரசியல்வேலை செய்வது அலுப்பூட்டுவதாகவே அமையும். ஆனால் இது யாருடைய பிரச்சனை> இது யாழ் சமுகத்தை அதன் உள்ளமைப்பை விளங்கிக் கொண்டதில் செயற்பட்டதிலும் கிழக்கு, வன்னிமக்களிடத்தே பெருமளவில் வேலை செய்யாததிலும் உள்ள பிரச்சனையே.

    தமிழீழ்த்தைக் கேட்ட புலிகள் இடைக்கால நிர்வாகத்தை கேட்டனர். சரிவராமல் சுனாமி மீள் கட்டுமானத்தில் பங்கு கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இவையெல்லாமே மறுக்கப் பட்டன. இவற்றையாவது கொடுப்பதன்மூலம் புலிகளுக்கு ஜனநாயக ஓட்டத்தில் செயற்பட வேண்டிய அழுத்தத்தை கால அவகாசத்தை வழ்ங்கி இருக்கலாம். இன்றைய உலக சூழ்நிலையானது புலிகள் அரசியல் அங்கிகாரத்துடன் கூடிய தமது நிருவாகப் பிரதேசத்தில் குறைந்தபட்ச ஜனநாயகமாதலுக்கு நிர்பந்தித்திருக்கும். புலிகளின் போராளிகள் பாத்திர மாற்றமானது மக்களிடத்தேயும் தமது உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை எற்படுத்தும்.

    புலிகளின் அரசசியலானது அமரிக்க ந்லன்களை எதிர்க்காத போதிலும்கூட, புலிகளின் அமெரிக்க்த்தடையானது அமரிக்க நலனோடு முரண்படா இலங்கைஅரசின் விசுவாசத்ததிற்கான பரிசெனவும் தற்கொலைத்தாக்குதல்முறைமீதான அமரிக்காவின் பயத்தையும் வெறுப்பையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.

  16. நண்பா; கரன் அவா;களே!
    தேனீயை வலிந்து தாக்குவது நீங்களல்ல.
    சத்தியக்கடதாசியே!

  17. யுவனின் பார்வை மிகவும் தெளிவானதும் ஆழமானதும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *