மேடை: சுகன்

கட்டுரைகள்

சமூகப் படுகொலைக்கு எதிரான அஞ்சலி:

உயர்திரு. சிவசுப்பிரமணியம் அவர்கள்
நாங்கள் அழைக்கப்படவுமில்லை

நாங்கள் மேடைக்குப் போகவுமில்லை

உட்காருவதற்கு

எங்களுக்கான இடங்கள் காட்டப்பட்டன

ஆனால் அவர்கள் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள்

எங்கள் துயரங்களைப் பற்றி

எங்களுக்குச் சொல்கிறார்கள்

எங்கள் துயரங்கள் எங்களுடையதாகவே இருந்தன

அவை அவர்களுடையதாய் மாறவேயில்லை

…………………………………………

……………………………………………..

………………………………………………

வகாரு சோனாவனே

வெள்ளாளர்களுக்கு அரசியல் சமூக அதிகாரங்களையும், தலித்துக்களுக்கு பனையையும் காட்டிவிட்டுப் போகின்ற விற்பன்னர்கள் நிறைந்த காலமிது.

தாழ்த்தப்பட்டோரின் எதிர்காலம் இருள், அப்பாலிற்கும் அப்பால் இருள். இருள் வெளியாக இருக்கிறது எப்போதும்.

யாழ்ப்பாணம் சிகையலங்கரிப்பாளர் சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியம் (வயது 40) 13 நவம்பர் 2006ல் மாலை 4.30 மணியளவில் யாழ் கஸ்தூரியார் வீதியில் வைத்து இனந் தெரிந்தோரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது இந்த மேற்சாதிய சமூக அமைப்பில் எந்த அரசியல் முக்கியத்துவமும் இல்லாத அற்பச் செய்தியாக எல்லோருக்கும் போய்விட்டது. ஆனந்த சங்கரியோ பிரபாகரனோ டக்ளஸ் தேவானந்தாவோ சுட்டுக்கொல்லப்பட்டால் இந்தத் தமிழ்கூறு நல்லுலகு எப்படி எதிர்வினையாற்றியிருக்கும்? நிமலராஜனோ தராகி சிவராமோ ரவிராஜோ சுட்டுக் கொல்லப் பட்ட போது எப்படி பதறித் துடித்து எதிர்வினையாற்றியிருந்தது? சிவசுப்பிரமணியம் அவர்களின் படுகொலையை ஒரு செய்தியாக கூட இந்தச் சமூகம் எடுத்துக்கொள்ளவில்லையே! எல்லோருக்கும் சாதியத் தோல் தடித்துப் போய்விட்டது, மரத்துப்போய் விட்டது.

இம்மரணம் தலித்துக்களின் எதிர்காலம் இனி எப்படியிருக்கும் என எச்சரித்துவிட்டுப் போயிருக்கிறது. அரசியற் தீர்விற்கோ சமாதானத்திற்கோ இனி வாய்ப்பில்லை எனும் போது தலித்துக்களுக்கு மட்டும் விடிவு எப்படி வந்துவிடப் போகின்றதென நீங்கள் கேட்கலாம். அதற்காக யாழ் மத்திய கல்லூரி அதிபர் கணபதி இராசதுரை அவர்களுக்கு கொடுத்தது போன்று சிகையலங்காரிப்பாளர் சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு கொடுத்ததைப் போன்று மரணத்தை மட்டுமே தீர்வாகக் கொடுக்க வேண்டியதில்லை.

வெள்ளாளர்கள் மிகவும் நாசூக்கானவர்களும் அற்பத்தனமானவர்களும்!

அவர்கள் ஐக்கிய இலங்கைக்குள்ளும் அதிகாரத்தைப் பேணுகிறார்கள். தமிழ்த் தேசியம் சமஷ்டி மாகாண அமைப்பிற்குள்ளும் அதிகாரத்தைப் பேணுகிறார்கள். யாழ்ப்பாணத்திலும் அதிகாரத்தைப் பேணுகிறார்கள். ஓடி வந்த இடத்தில் ஸ்ருட்காட்டிலும் அதிகாரத்தைப் பேணுகிறார்கள்.

காலனித்துவ காலத்தில் தலித்துக்களுக்குக் கிடைத்த கல்வி வேலை வாய்ப்பு ஆகிய சலுகைகளை இடைமறித்துப் பறித்தெடுத்துக்கொண்டார்கள். மதம் ஒரு தடையாக இருந்தால் மதம் மாறி அதிகாரங்களையும் – அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டார்கள். ஆனால் சாதிய அதிகாரத்தைக் கைவிட்டார்களில்லை. நானூறு வருட காலனித்துவ ஆட்சி அழிக்க முடியாத சாதியத்தை முப்பது வருட காலப் போர் எப்படி அழித்துவிட முடியும்? அடிப்படையில் தமிழ் அரசியல் என்பது வெள்ளாள அரசியலாகவும் ஜனநாயகம் என்பது வெள்ளாள ஜனநாயகமாகவும் இறுகிப் போய்விட்டது.

“தூக்கி எறியப்பட முடியாத கேள்வியாய்…” என்று சிவரமணியின் கவிதை வரியொன்று சொல்கிறது. இக் கேள்வி அப்படியொன்றும் தூக்கி எறியப்பட முடியாத கேள்வியல்ல. மிகவும் சாதாரண கேள்விதான். எந்த எதிர்கால முக்கியத்துவமுமில்லாத கேள்விதான். போராட்டத்தில் பல்வேறு கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. ஆனால் ஓரேயொரு கேள்வியை மட்டும் மிகவும் கவனமாகத் தவிர்க்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

புலிகளுக்குள்ளும் புலிகளுக்கு மாற்றாகவும் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றப் போவது யார்? வெள்ளாளர்களா? சிகையலங்கரிப்பாளர் சங்கத் தலைவர் உயர்திரு சிவசுப்பிரமணியம் அவர்களின் கொலையில் இதற்கான பதில் இருக்கிறது.

இப்படுகொலையின் பின்னணியிலும் சமூகப் பின்னணியிலும் 02.09.1945ல் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் மூன்றாவது மாநாட்டில் வழக்கறிஞர் டி.ஜே. ஆசீர்வாதம் அவர்கள் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் நான்கு அம்சக் கோரிக்கைகளும் அரசியற் தீர்விலிருந்தும் அரசியலிலிருந்தும் ஓரங்கட்டப்படும் தலித் சமூகத்திற்கு இன்றும் பொருத்தமானதாகவே இருக்கின்றன. எல்லாவற்றையும் விவாதத்திற்கும் ஆய்வுக்கும் உட்படுத்தும் வெள்ளாள சமூகவியலாளர்கள், வெள்ளாளக் கலை இலக்கியவாதிகள், வெள்ளாள மனித உரிமையியலாளர்கள் இக்கோரிக்கையின் அரசியலைக் கவனத்தில் எடுக்க மறுப்பது யோக்கியமற்றது. அவர்களின் அரசியல் நேர்மையைச் சாதியம் வென்றுவிடும் தருணம் இதுதான்.

டி.ஜே.ஆசீர்வாதம் தீர்வுத் திட்டம் – 02.09..1945ல் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் மூன்றாவது மாநாட்டில் நிறைவேற்றியபடி:
1. தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று விஷேட பிரதிநிதித்துவம்.
2. பொருளாதார மீள் நிர்மாணம், மாற்றுத் திட்டங்கள் இவைகளுக்கான தனிச் சிறப்பு ஆணைக்குழு.
3.சகல ஸ்தல ஸ்தாபனச் சபைகளிலும் நிர்வாக அலகுகளிலும் பிரதிநிதித்துவம் கிடைக்கக் கூடிய வகையில் வட்டாரங்கள் தேர்தற் தொகுதிகள் பிரிக்கப்படவும் மறுசீரமைக்கப்படவும் வேண்டும்.
4. கல்விப் பிரச்சனையில் முஸ்லீம் மக்களுக்க அளித்த விசேட சலுகையை – உரிமையை தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வழங்க வேண்டும்

24 thoughts on “மேடை: சுகன்

  1. சுகன்!…
    நீங்கள் அழைக்கப்பட்டிருந்தீர்கள்!
    தலைகளின் எண்ணிக்கை
    இத்தனை என்று கணக்குச்சொல்ல…
    முகத்தில் அறைந்தது போல்
    அழையா விருந்தாளிகள் என
    அவர்கள் சொன்னார்கள்!
    உங்கள் பிரச்சினைகளை
    அவர்கள் பேசினார்கள்!
    நீங்கள் பார்வையாளர்கள் மட்டும்தான்!
    உங்கள் கருத்து முடமாக்கப்பட்து!
    ஆனாலும் உங்கள் தலைகளின்
    எண்ணிக்கையின் அங்கீகாரத்தில்
    அவர்கள் தீர்மானம் எடுத்தனர்!

    அது இருக்கட்டும்!…..

    சிகையலங்காரிகள் சங்கத்தலைவர் அமரர் சும்பிரமணியம் அவர்களுக்கு அஞ்சலி! ஆனாலும் இந்த படு கொலையை தமிழர்கள் மீதான தமிழர்களின் படுகொலையாக மட்டும் பார்ப்பதா?… அல்லது ஒரு தலித் மீதான சாதிய மேலாதிக்க வரக்கத்தின் கொலையாக பார்ப்தா என்றுதான் என்னால் சிந்திக்க முடிகின்றது! சுப்பிரமணியம் அவர்களை சுட்டுக்கொன்றவனும் ஒரு தலித்தாக இருப்பான்… அவனுக்கு உத்தரவிட்டவன் நிச்சயமாக தலித்துக்களாக இருந்து விட முடியாது!… ஆனாலும் தமது அரசியல் அராஐகத்திற்காகவே சுடுமாறு கட்டளையிட்டிருக்கின்றார்கள்!… இவ்வாறான படு கொலைகள் மேலாதிக்க சாதியமைப்பினர் மீதும் நடத்தப்படுகின்றது! அதை எவ்வாறு நோக்குவது?…. இதை தலித்துக்கள் மீதான ஒடுக்குமுறையாக பாரப்பதா?… அல்லது தமிழ் இனத்தின் மீதான படுகொலையாக பாரப்பதா?…. எது என்பதை உங்கள் கருத்தியலில் தாருங்கள்!

  2. சுகன் நன்றாகச் சொன்னீர்கள். ஆனந்தசங்கரிக்கோ பிரபாகரனுக்கோ இது நடந்திருந்தால் பதறியடித்திருப்பார்கள் என்பது அழுத்தமானதுதான். வெள்ளாள அதிகாரம் வெள்ளாள சூழ்ச்சி இதிலெல்லாம் உங்கள் கருத்தில் கேள்வியெதுவும் இல்லை. சிவசுப்பிரமணியத்தின் கொலை எந்தக் காரணப் பலகையில் அறையப்பட்டது என்று தெரியவில்லை. தலித்துகள் கொல்லப்பட்டால் தலித் என்பதனால் என்பதும் முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டால் முஸ்லிம் என்பதால் என்பதும் கிழக்கிலங்கை கொலைக்கு யாழ் மேலாதிக்கக் கொலை என்பதும் என்றெல்லாம் சொல்வது எல்லாச் சந்தர்ப்பத்திலும் சர்வநிவாரணி ஆகிவிடுமா? இந்த வாதத்தை வைப்பதற்கே முத்திரைப் பயம் கொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வளவு உரப்பு எமது நண்பர்களிடமிருந்தே வருவது பயமுறுத்துகிறது.

    கொலை… கொலை… கொலை… கேட்டுக் கேட்டு பயங்கரத்தையே பழக்கப்படுத்திவிட்டது எமது விடுதலைப் போராட்டம். சென்ற கிழமை 14 வயது சிறுவனொருவன் உச்சந் தலையில் ஆணியடித்து கொலைசெய்யப்பட்டு வீதியில் வீசப்பட்டுக் கிடந்ததை பார்த்த உங்கள் உறவினர் நண்பர் யாருடனாவது நீங்கள் பேசியதுண்டா. ஊனுருக இன்னொரு இளைஞன் தனது வாயால் அந்தக் காட்சியை விபரித்ததை நான் கேட்டேன். ஈபிடிபியினரால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாக -இயக்கப் பக்கமே போகாத- அந்த இளைஞன் சொன்னான். எங்காவது இந்த சேதியை நீங்கள் பார்த்ததுண்டா? இவன் தலித்தா முஸ்லிமா கிழக்கிலங்கையா? ஏன் இந்தச் செய்தி வராமல் விட்டது?

    நான்குமாத காலமாக பொருளாதாரத் தடையில் வடபகுதி மக்கள் பட்டினியோடு போராடுவதற்கு புலியைக் குற்றஞ் சுமத்துவதற்கு அப்பால் போகும் மனிதாபிமானத்தை எந்த மாற்றுக்குரலில் நாம் கேட்டோம்? குழந்தைகள் பால்மாவுக்கு அழுவது புதையல் கேட்டு அழும் குரல்போல ஒரு தாய்க்குக் கேட்கிறது. கடலால் சூழப்பட்ட அந்த மண்ணில் மீனின் விலை ஆயிரம் ரூபாயைத் தாண்டி நிற்கிறது. கத்தரிக்காய் 250 ரூபா சீனி 500 ரூபா. எண்ணை ஆயிரம் ரூபாயைத் தாண்டியும் தேடித்திரிய வேண்டிய அவலம். புலிகளின் வரிக்காக அழுத குரலையும் தாண்டி பொருட்களின் விலை வரிக்குமேல் வரிவரியாக சுமத்தினாலும் எட்டமுடியாத உயரத்தில் இருப்பது பற்றிய பொருளாராத மாற்றுவிளக்கம்தான் என்ன?. புலிகளின் வரிவசூலிப்பு புலியெதிர்ப்புக்குப் பயன்பட்டபோது அந்த மக்களுக்காக அழுதவர்கள் பலர் அரசின் பொருளாதாரத் தடையால் பேரழிவை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் காணாமல் போயினர். அரசுக்கு வக்காலத்து வாங்குவதுவரைதான் ஆய்வுகள் வரண்டுபோய் இருக்கிறது. வடக்கில் குவிந்திருக்கும் அறுபதினாயிரம் இராணுத்தினருக்கும் ஈபிடிபியினருக்கும் சாப்பாடு போட கப்பல்வழிப்பாதை முக்கிமுனகுகிறது. மக்கள் வேறு புலிகள் வேறு என்று விளக்கம் சொன்ன அரசியலுக்கு ஏ9 பாதை மக்களைவிட புலிகளின் சொத்தாய்த் தெரிகிறது. சோற்றுக்கும் உறைப்பறியா பருப்புக்கறிக்கும் தொடுசல் செய்து சாப்பிட அவதியுறுகிறது சனம். கிண்டலும் காரமும் எழுத்தில் சேர்த்தால் வந்துவிடுவதில்லை சமூக விஞ்ஞானம். மாமனிதர் பட்டங்களும் ஆனந்தசங்கரி போன்றோருக்கான சமாதான விருதுகளும் நாளுக்கு நான்கு கொலைகளும் மலிந்த தேசத்தின் ஆன்மாவிற்கு விருப்புவெறுப்பு அரசியல் ஆய்வுகள் எதைத்தான் தந்துவிடப்போகிறது? புலியெதிர்ப்புக்குப் பயன்பட்டால் சிவசுப்பிரமணியத்தின் கொலை முன்னுக்கு வரும். உடல் புலிகளுக்கு மட்டும் விதையாவதில்லை. புலியெதிர்ப்பாளர்களுக்கும் விதைதான். நீங்கள் கூறியிருப்பதுபோல இவ்வாறான செய்திகளை வெள்ளாள மேலாதிக்கம் அசண்டைசெய்யும் போக்கு மறுதலிப்பதற்கில்லை.

  3. சுகன்
    உப்படி நீங்கள் கண்ணைமூடிக்கொண்டு அலம்புவதால் மட்டும் தலித்துகளின் தலைவா; ஆகிவிட முடியாது.
    ஏன் உங்கள் பட்டியலவில் சுப. தமிழ்ச்செல்வன் அவா;களைத் தவிர்க்கிறீர்கள். சுப்பிரமணியம் அவா;கள் மட்டுமல்ல இன்னும் எவ்வளவோ போ; இப்படித்தான் அநாதையாய் மாண்டுபோய் இருக்கிறார்கள். சுப்பிரமணியம் அவா;களை கனம் பண்ண விரும்பினால் சுகன் நீங்கள் வேறுவழிகளைக் காணுங்கள்.
    சுப்பிமணியம் என்பவா; யார்? அவருடையமுக்கியத்துவம் என்ன? அவா; சுடப்படவேண்டிய காரணம் என்ன என்ற தகவல்களையாவது தேடித் தந்திருக்கலாம்..

  4. பிரபாகரன் தமிழ்செல்வன் இவாகள் தலித்துக்கள்தான்.இவர்களால் நாங்கள் நாய்படாப்பாடு படுகின்றம்.இது உங்களுக்கு விளங்கமாட்டாதா?

  5. சுகன் போன்றவர்களை எதிர்காலத்தில் தலைவர்களாக்கி தலித் மக்களின் தலைவிதியை அவர்கள் கையில் ஒப்படைத்தால் மட்டுமே தலித்துகளுக்கு விடிவு கிடைக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

    வாழ்த்துகள் சுகன்.

  6. நான்குமாத காலமாக பொருளாதாரத் தடையில் வடபகுதி மக்கள் பட்டினியோடு போராடுவதற்கு புலியைக் குற்றஞ் சுமத்துவதற்கு அப்பால் போகும் மனிதாபிமானத்தை எந்த மாற்றுக்குரலில் நாம் கேட்டோம்? குழந்தைகள் பால்மாவுக்கு அழுவது புதையல் கேட்டு அழும் குரல்போல ஒரு தாய்க்குக் கேட்கிறது. கடலால் சூழப்பட்ட அந்த மண்ணில் மீனின் விலை ஆயிரம் ரூபாயைத் தாண்டி நிற்கிறது. கத்தரிக்காய் 250 ரூபா சீனி 500 ரூபா. எண்ணை ஆயிரம் ரூபாயைத் தாண்டியும் தேடித்திரிய வேண்டிய அவலம். புலிகளின் வரிக்காக அழுத குரலையும் தாண்டி பொருட்களின் விலை வரிக்குமேல் வரிவரியாக சுமத்தினாலும் எட்டமுடியாத உயரத்தில் இருப்பது பற்றிய பொருளாராத மாற்றுவிளக்கம்தான் என்ன-(யாழ் வர்த்தக நிலையங்களில் தீடிர் பரிசோதனை! உச்சவிலையில் உள்ளி விற்ற வர்த்தக நிலையம்!
    யாழ் மைய்யப் பகுதியில் அமைந்திருக்கும் வர்த்தக நிலையங்களில் நேற்றையதினம் அதிகாரிகள் திடீர் பரிசோதனை நடாத்தினர். யாழ் அரச அதிபரினால் அறிவிக்கப்பட்டுள்ள நியாயவிலையை விட அதிகவேலைக்கு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த புகாரை தொடர்ந்து அதிகாரிகள் வர்த்தக நிலையங்களை பரிசோதனை மேற்கொண்டனர். இதன்போது உள்ளியை அதிக விலைக்கு விற்ற வர்த்தக நிலையமொன்று கண்டுபிடிக்கப்பட்டது. கூடுதல் விலைக்கு விற்கப்பட்ட உள்ளி (வெள்ளைப்ப+டு) யை கைப்பற்றிய அதிகாரிகள் அதனை நியாயவிலைக்கு விற்றபனை செய்ததுடன் அதன் பணத்தை மீண்டும் வர்த்தகருக்கு வழங்கினர். இவ்வாறு யாழ் நகரை அண்டிய சில்லறை வர்த்தக நிலையங்களிலும் விற்பனை செய்யப்படுவதுடன். போதியளவு பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் தட்டுப்பாட்டை தெரிவித்து கொள்ளை இலாபம் அடிக்கும் நடவடிக்கையிலும் சில வர்த்தகர்கள் ஈடுபட்டுவருகின்றனர். ஆகவே இவை தொடர்பாகவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலமே மக்கள் நியாயவிலையில் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என யாழ் வாசியொருவர் தெரிவித்துள்ளதாக எமது யாழ் செய்தியாளர் அறியத்தந்துள்ளார்)netuppu.com.

  7. பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும்போதே இப்படியான பதுக்கல் வேலைகள் நடைபெறுவது சாத்தியம். போதியளவு பொருட்கள் கிடைக்கும்போது இந்த பதுக்கல் முறை அர்த்தமற்றதாயிருக்கும்;?. (அதாவது வியாபரிகளுக்கு எதுவும் நன்மையில்லை.) பால்மா எண்ணை மருந்து போன்ற பொருட்களிற்கு தட்டுப்பாடு என்ற நிலையையும் தாண்டி அவை கிடைக்காத பொருட்களாக இருப்பதாக அங்குள்ளவர்களுடன் பேசும்போது அறியக் கிடைக்கிறது. மனிதாபிமானத்தின் பெறுமதியையும் தாண்டி இலாபநோக்கை கொண்ட „வியாபார நெறிமுறை“ பெட்டிக்கடையிலிருந்து ஆயுதவிபாரம் வரை நிலவுவதுதான். இதுவரை அது இலங்கையில் நிலவாததுமல்ல. இந்தப் போர் பல வியாரிக்கு குதூகலமாகவே அமைகிறது என்பதும் உண்மைதான். அங்குள்ள வாழ்க்கைத்தரம் குறைந்த மக்கள் மேலும் அவதிப்படுவர் என்பது உண்மை. இந்த கேடுகெட்ட வியாபார தர்மத்தை நாம் ஏற்றுக்கொள்ளவுமில்லை. ஆனால் இதனை பொருள் தட்டுப்பாட்டுக்கான மாற்று விளக்கமாகக் கொள்வது பகுதி விளக்கத்தையே தரும். பொருட்கள் போதியளவு கிடைக்கும்போது இந்த குறுக்குவழி வியாபாரம் அர்த்தமிழக்கும். சொந்த மக்களின் மீதான -நான்குமாத காலமாகத் தொடரும்- பொருளாதாரத் தடையை அரசு சூழ்ச்சிப்படுத்தியிருப்பதை மறுப்பது அல்லது கண்டுகொள்ளாமல் விடுவது வியாரிகளின் மனிதாபிமானத்தைப் பற்றிப் பேசும் அருகதையை இல்லாமலாக்கிவிடும். அரசின் ஒட்டுமொத்த பொருளாதாரத் தடை என்னும் பூதத்தினை காண மறுப்பது அரசியல் நோக்கம் சார்ந்ததாகவே இருக்க முடியும். நெருப்பு.கொம் இன் அரசியலுக்கு இந்த பதுக்கல் விளக்கம் பொருந்திப் போகலாம். அதை எழுதுவது அவர்கள் சுதந்திரம். இதை ஏற்றுக்கொள்வது என்பதும் அவரவர் அறிவு சார்ந்ததும் அரசியல் விருப்புவெறுப்புகள் சார்ந்ததுமாகும். புலிகள் இந்த பொருளாதாரத் தடையால் பாதிக்கப்படப் போவதில்லை. மக்கள்தான் நேரடி பாதிப்புக்கு உட்படுவர். இது மேலும் புலிகளின் பக்கம் மக்களை தள்ளிவிடுவதையே செய்யப் போகிறது. அதைத்தான் புலிகளும் விரும்புகின்றனர்.

  8. புலிக்காக அரசும் அரசுக்காகப் புலியும் ஒருவருக்கு ஓருவர் உதவுகின்ற அரசியல்தான் அங்கு நடக்கின்றது.( புலிகள் இந்த பொருளாதாரத் தடையால் பாதிக்கப்படப் போவதில்லை. மக்கள்தான் நேரடி பாதிப்புக்கு உட்படுவர். இது மேலும் புலிகளின் பக்கம் மக்களை தள்ளிவிடுவதையே செய்யப் போகிறது. அதைத்தான் புலிகளும் விரும்புகின்றனர்)

  9. யாழில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவுது உண்மை! சனங்கள் அவலவாழ்வு வாழ்வதும் உண்மை! ஆனாலும் ஒரு விடயம் யார் முயற்சி எடுத்தாலும் அது சாத்தியப்படுத்துவது சுலபமான காரியமல்ல. தனியார் வர்த்தகர்கள் விற்பனைகளில் ஈடுபடக்கூடாது என்றும் சுட்டுறவு முகாமையாளர்கள் பொருட்களை ஒழுங்காக வினியோகிக்க கூடாது என்றும் பொருட்களை பதுக்க வேண்டும் என்றும் புலிகள் எச்சரிக்கை விடுத்து வருவது வெட்டை வெளிச்சமாகிவிட்டது. இந்நிலையில் மக்களது தேவையை எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும்?..ஒரு பாசிச கட்டமைப்பு இலங்கை எங்கும் தனது அடக்குமறையை பரவி வைத்துள்ளது. மக்கள் துன்பங்களை சந்திக்க வேண்டும் என்பதும் அதற்கு ஊடாக தாம் அரசியல் நடத்த வேண்டும் என்பதும்தான் புலிகளது வக்கிர அரசியலாக இருந்து வருகின்றது. இந்த சூழலுக்கு ஊடாகத்தான் எதையும் செய்ய முடியும்! புலிகள் விதித்து வரும் தடைகள் குறித்த நாம் செவிவழியாகவே அறிகின்றோம் ஆனால் புலிகளின் தடைகளையும் மீறி சனங்களுக்க உணவு போக வேண்டும் என எடுக்கப்பட்ட முயற்சிகளை யாரும் கொச்சைப்படுத்திவிட முடியாது! ஒருவரது முயற்சிகளை தட்டிக்கொடுத்து ஊக்குவித்தால் மட்டும்தான் அவர்கள் தொடர்ந்து முன்னேறவும் முயற்சி செய்யவும் முடியும்! கொச்சைப்படுத்துவது சமூகப்பார்வையாகிவிடாது. இன்று யாழப்பாணத்தில் சனம் அவலங்களுக்கு மத்தியிலம் ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் ஏதோ முடிந்தளவு முன்னெடுப்புத்தான். ஆமிக்கும் ஈ.பி.டி.பி க்கும் உணவு போகின்றது சனங்களுக்கு போகவில்லை என்ற கூற்றில் உண்மை இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம் புலிகளின் தொல்லையால் சனம் பட்டினி கிடக்கது என்பதற்காக ஈ.பி.டி.பி யும் எங்களுக்கு சாப்பாடு வேண்டாம் என்ற உண்ணாவிலதம் இருப்பது ஐதார்த்தமான ஒரு விடயமாக இருக்க முடியாது! ஈ.பி.டி.பி எதுவம் செய்யவில்லை என்றால் பரவாயில்லை! 22 எம்பி மார்கள் இருந்தும் டக்ளஸ் மட்டும்தான் அங்கு நேரடியாக சென்று அரசாங்க அதிபர்கள் கூட்டுறவு துறையினரோடு கதைத்து படிப்படியான ஒரு சீர் நிவலக்கு வருவது குறித்து முயற்சி எடுத்திருக்கின்றார். இதை ஈ.பி.டி.பி யின் அரசியல் தவறுகளுக்கு அப்பால் ஏற்றுக்கொள்ளாத மனோநிலை அரசியல் விமர்சனம் ஆகிவிடமுடியாது! மாற்றுக்குரலில் ஒலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பகள் சரியான விடயமல்ல. ஒலிக்கின்ற குரல்களையே நசுக்கிப்போடும் ஊடகங்களின் வரிசையில் அனேகமாக எல்லாமே அடங்குகின்றது. குரல்கள் ஒலிக்க வேண்டும் என்பதற்கு அப்பால் செயற்பாடுகள் இருக்க வேண்டும் என்பதே சரியான கருத்தாகும் . குரல்கள் ஒலிக்க வேண்டம் என யாரும் கருதினால் மக்களின் மனிதாபிமாப்பிரச்சினை என்று வரிக்கு வரி பிரச்சாரம் செய்து கொண்டு அதே மக்களின் உணவுக்கம் மருந்தக்கும் தடையாக இருக்கம் புலிகளின் குரலை ஏற்க முயுமா?… பேரினவாத் எந்தளவிற்கு மக்களை ஒடுக்கிவருகின்றதோ அந்தளவிற்கு மேலாக பலமடங்க அதிகமாக பாசிசம் செயலாற்றி வருகின்றது. ஆணி அறைந்து ஈ.பி.டி.பி சித்திரவதை செய்து கொன்றதாக சொல்லப்படுகின்றது. இது குறித்த நம்பகத்தன்மை என்பது எவ்வளவு என பாரக்க வேண்டும்! யாழில் நடக்கும் கொலைகள் அகனத்தும் படையும் ஈ.பி.டி.பி யும் என்றுதான் புலிகள் பரப்பரை செய்து வருகின்றனர். இந்த பரப்பரைகளில் இதுவும் ஒன்றாக இருக்கவும் சாத்தியம் உண்டு! சத்தியக்கடதாசியை படித்து விட்டு சம்பநடதப்பட்டவர்களோடு நான் பேசியதில் ஈ.பி.டி.பி க்கும் அதற்கும் சம்பந்தம் இருப்பதாக என் மனதிற்கு தோன்றவில்லை. யாரோ சொல்லி நான் கேட்டு அதை எழுத்தில் விமர்சனமாக கொண்டுவர முடியாது. கொலைகளை யார் செய்தாலு
    ம் நியாயப்படுத்தி விட முடியாது. செய்கின்ற கொலைகளை விடவும் செய்யாத ஒரு கொலைப்பழியை இன்னொருவன் மீது சுமத்துவது வக்கிரமான ஒரு விடயம்! கொலை புரிவதற்கான சாத்த்தியங்கள் எல்லாத்தரப்பிடமும் இருக்கின்றது. அந்த சாத்தியங்களை வைத்துக்கொண்டு தவறான தகவலை வெளிப்படுத்தி விடவும் முடியாது. பேரின வாதத்திற்கு தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்க நியாயமில்லை. இருக்க வேண்டியது தமிழர் தரப்பிற்கு மட்டும்தான். இதில் புலிகளை தவிரத்து பாரப்பதே பொருத்தமானது. பேரின வாதம் கூட இன்ற சர்வதேசத்திற்க பயந்து தமிழ் மக்களின் விடயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி வருவதாக தெரிகின்றது. ஆனால் புலிகளோ ஒருதருக்கம் கட்டுப்படாத தறூலைக்கூட்டமாக நின்று ஆட்டம் போடுகின்றது. புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறை வேற்றப்பட்டு புலிகள் செய்தது என்ன?.. ஏ. 9 இல் நின்று கொள்ளை அடித்தது… தனது பெற்றொரை தமிழ் நாட்டில் இருந்து தனக்க பக்கத்தில் வரவழைத்தது… தனது பிள்ளைகளை வெளிநாட்டப்படிப்பிற்க அனுப்பி வைத்துத… நோர்வே அரசிடம் சினிமாஸ்கோப் ரீ வி வாங்கியது…..இதுதான் புலிகள் செய்த காரியம். பெரும் பொராளிகளான றொபேர்ட்… சின்னபாலா… என நுhற்றக்கணக்கான போராளிகளை கொன்று குவித்தது>…மனோ மாஸ்டர்…பாறூக் போன்ற உன்னத போராளிகளை கடத்தியது என்று பலவற்றை கூறிவிடலாம். ஈ.பி.டி.பி யிடம் ஒரு மூதாட்டி கேட்டாளாம் ஏனடா உங்களிட்டை துவக்கு இல்லையே அவங்களை சட்டுத்ததள்ள…. ஒரு செத்த வீட்டில் வைத்து பகிரங்கமாக அந்த மனிசி கேட்டிருந்ததாக காரைநகர் வாசி ஒருவர் அந்த செத்த வீட்டில் கலந்து கொண்டவர் சொன்னார். பூச்சி பூரானை கொல்லவே தயங்கும் தமிழ் சமூகம் ஈ.பி.டி.பி யை பார்த்து அவ்வாறு கேட்டது சரியான விடயமல்ல. ஆனாலும் அந்தளவிற்கு அகோரமான கொலை வெறித்தனத்தில் பாதிக்கபட்டுப்போன சனங்களே ஒரு ஆக்ரோசத்தில் அவ்லாறு கருதியது. இது குறித்து சனங்கள் சநதித்திருந்த வேதனைகளை விமர்சனமாக வடிக்கத்தெரியாத விமர்சகர்கள் இன்று எமது சமூகத்தில் பலர் உண்டு! ஈ.பி.டி.பி யோ புளொட் அமைப்போ அல்லது ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்போ கொண்டிருக்கம் இளைஙர்களும் மனிதர்களே. அவர்களும் தமிழர்களே. அவர்கள் என்ன அனாதைகளா? அவர்களுக்கம் பெற்றோர்கள் உண்டு> இன்று பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு சமூகமாகி விட்டது. இவர்களுக்கு நிங்கள் கூறும் நியாம்தான் என்ன?எப்படி இதை தீர்க்கலாம். பேரினவாதத்தின் பிடியில் இருந்து எப்படி மாற்றக்கட்சிகளை வெளியே கொண்டு வரலாம்?..எப்படி இந்த மாற்றக்குரல்களை ஒலிக்க வைக்கலாம். இயங்க வைக்கலாம்?…சனங்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம். இது குறித்து சிந்திக்க வேண்டிய பொறப்பு அனைவருக்கும் உண்டு! கட்சிகளுக்க மட்டமல்ல தனிநபர்களுக்கும் உண்டு. சிந்தியுங்கள்.

  10. //ஈ.பி.டி.பி யிடம் ஒரு மூதாட்டி கேட்டாளாம் ஏனடா உங்களிட்டை துவக்கு இல்லையே அவங்களை சட்டுத்ததள்ள…. ஒரு செத்த வீட்டில் வைத்து பகிரங்கமாக அந்த மனிசி கேட்டிருந்ததாக காரைநகர் வாசி ஒருவர் அந்த செத்த வீட்டில் கலந்து கொண்டவர் சொன்னார்.//

    பரன்/ண் சொன்னதில என்னதான முடிவு?? எந்த திசையில “சிந்திக்க” வேண்டும்??
    அப்ப டக்ளஸ்தானா எங்களது மாற்றுத் தலைவர்/தலைமை???

    சிந்தனை செய்வாய் மனமே என்று பாடினாலும் ஒரு எழவும் புரியல சாமீமாரே

  11. பரன் உங்களது ஆதங்கத்தை நான் புரிந்துகொள்கிறேன். புலிகளின் அட்டகாசங்களை அதன் பாதிப்புகள் வடிய எழுதிய உங்கள் வரிகளையும் புரிந்து கொள்கிறேன். உங்கள் எழுத்தின் ஜனநாயகத்தன்மையே பதில் எழுதவேண்டும் எனத் தூண்டியது. கொலைகளின் விளைச்சலில் அதன் சூத்திரதாரிகளின் சம்பந்தப்பாடு தெரியவராமல் போகும் நிலைதான் இன்று தொடர்கிறது. உண்மை. இந்த நிலையில் பழிபோடுவது என்ற சொல் எந்தளவுக்கு அர்த்தம் கொண்டு இயங்கமுடியும் என எனக்குப் புரியவில்லை. பேரினவாதத்திற்கு தமிழர் தரப்பில் அக்கறை இருக்க நியாயமில்லை, இருக்கவேண்டியது தமிழர் தரப்பிற்கு மட்டும்தான் என்றால் இந்தப் பேரினவாதத்தோடு தமிழர் தரப்பிற்கு என்ன அரசியல் கூட்டு வேண்டிக் கிடக்கிறது என்ற கேள்வியை எப்படித் தவிர்ப்பது? இந்த அரசியலை புலிகளும்தான் சொல்கிறார்கள். அப்படியாயின் பேச்சுவார்த்தையை நாம் மறுதலிக்க வேண்டுமா? புலிகள் அதைக் குழப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் ஏன் எழவேண்டும்? இப்படி வெட்டொன்று துண்டு இரண்டு என்ற அரசியல் தமிழீழத்துக்கான நியாயப்பாட்டை கேள்விகேட்பவர்களை சங்கடமாக்குகிறது. பேச்சுவார்த்தையைக் கோருபவர்களை சங்கடமாக்குகிறது. புலிகள் உன்னதமான போராளிகளைக் கொன்றார்கள். நூற்றுக் கணக்கான போராளிகளை கொன்று குவித்தார்கள். அந்த வலி பரனின் எழுத்தில் தெரிகிறது. அதை நான் புரிந்து கொள்கிறேன். இந்தக் கொலைகளைச் செய்தவர்களோ அல்லது அதைக் கண்டுகொள்ளாமல் அமைப்புக்கு சேவகம் செய்தவர்களோ அந்த அமைப்பிலிருந்து விலகிவிட்டால் மட்டும் பாவமன்னிப்புப் பெற்றவர்களல்ல. இந்த மாற்றுக் குரலில் எதைத் தேடுவது? நூற்றுக் கணக்கான போராளிகளை உட்கொலை செய்த அமைப்புகளுக்கு வக்காலத்து வாங்கும் மாற்றுக் குரலில் எதைத் தேடுவது? அந்த அமைப்புகளின் உளவுப்படைகளில் இருந்த அல்லது அதனுடன் கூடிக்குலாவியவர்களின் இன்றைய மாற்றுக் குரலில் எதைத் தேடுவது? பிசாசுடன் கூட்டுச் சேர்ந்தாவது புலிகளின் அழிவுக்கு வகைசெய்வோம் என்ற பழிவாங்கும் அரசியல் தரும் மாற்றுக் குரலில் எதைத் தேடுவது?. மாற்றுக் குரல்கள் (சுயவிமர்சனம் உட்பட) அதன் ஜனநாயகத்தன்மையோடு ஒலிக்கும்போதே அதற்கு வலிமையுண்டு. எனது முன்னைய பதிவு இந்த மாற்றுக் குரலைத்தான் சாடியது. (சுகன் மன்னிக்க வேண்டும். எங்கோ தொடங்கி எங்கோ வந்து நிற்கிறோம் போல் தெரிகிறது)

  12. பேரினவாதத்திற்கு தமிழ் பேசும் மக்களிடம் அக்கறை இருக்க நியாயம் இல்லை! இதை அறிந்திருந்தும் தமிழர் தரப்பு அரசியல் தலமைகள் அனைத்தும் அதே பேரினவாதத்துடன் கூட்டுக்கு போயிருக்கின்றது. ஆயுதப்போராட்டத்திற்க முந்திய காலம் அதற்க பிந்திய காலம் என்று வகைப்படுத்திப்பார்க்கவும் வேண்டும்! ஆயுதப்போராட்டத்திற்கு பிந்திய வரலாற்றில் முதன் முதலில் பேரினவாதத்தோடு கூட்டுச்சேர்ந்தது புலிகள்! சேர்ந்து என்ன செய்தார்கள்?…. தமிழ் நாடே உதவி செய்! இந்தியாவே உதவி செய் என இன்று புது டில்லி வரைக்கும் போய் தவமிருந்து எந்த இந்திய அரசுத்தலைவர்களை சந்திக்க முடியாமல் திரும்பி வந்தனரோ அதே இந்திய அரசின் உதவிகளை ஒட்டறுத்த எறிந்தத முதல் நடவடிக்கை! தமிழர் களுக்க என்ற இருந்த மாகாணசகப அரசை கலைத்ததும் இதனோடு சம்பந்தமான புலிகளின் இன்னொரு நடவடிக்கை! ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை பேரினவாத பிரேமதாசாவுடன் சேர்ந்து பிடித்துச்சென்று சிறையில் அடைத்தது அடுத்த நடவடிக்கை! இதன் தொடர்ச்சியாக இன்று இருக்கின்ற எல்லா தரப்புமே பேரிகவாத்தின் அனுசரணையோடு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது! இன்று இரக்கின்ற அரசியல் சூழ்நிலையில் புலிகளின் பக்கம் சார்ந்திருக்க வேண்டும்! இல்லையேல் அரசு பக்கம் சார்ந்திருக்க வேண்டும்! இரண்டும் பிழை என்ற உண்மையை தெரிந்து கொண்டு செயற்பட முனைந்த சோசலிச சமத்துவக்கட்சி போன்றவற்றிற்கு என்ன நடந்தது?.. அப்படி யாராவது நாட்டில் நின்று செயற்பட முடியும் என்றால் அதை நாம் பின் பற்ற முடியும். ஏற்கவும் முடியும்! ஆனால் அதற்கான வழி இல்லையே! ஆகவே ஏதோ ஒரு பக்கம் சார்ந்திருந்து செயலாற்றுவதே தவிர்க்கமுடியாத ஒன்றென ஒரு கருத்தியல் வளர்ந்தி ருக்கின்றது. இதை தவிர்பது எந்தளவிற்கு சரியானது?… புலிகளளை தேசிய சக்திகள் என்று பச்சைக்கொடி காட்டிய என்.எல்./எவ்.ரி அமைப்பு புலிகளாலேயே கருவறுக்கப்பட்ட கதை தெரியும்! மட்டக்களப்பில் பேச்ச வார்ததைக்கொன்று அழைத்து புளொட் அமைப்பை சுட்டுக்கொன்ற கதை தெரியும். அமிர்தலிங்கத்தோடு பேச என்ற சென்று அவரையே சுட்டுக்டெிகான்ற கதை தெரியும். இப்போது கூட புலிகள் சில கட்சிகளை அரவணைப்பது போல் அணைத்து வைத்திருப்பது ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளை அரசியல் ரீதியாக எதிரப்பதற்கு மட்டும்தான். அந்த தேவை முடிந்ததும் புலிகளோடு சேர்ந்திருக்கம் கூட்டுக்குழுக்களின் கதையும் முடிந்த கதைதான்.
    இப்போதே தம்மடன் கூட்டுச்சேர்ந்த கட்சிகளை உடைத்து உலர்த்தி தலைவர்களை மட்டும் தனிமைப்படுத்தி தங்களோடு வைத்திருக்கின்றனர் புலிகள். இந்த நிலையில் புலிகளோடு கூட்டுச்சேர்வது தவிரக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்ற கருத்தியிலும் பலமாக இன்று உண்டு! இதை தவிர்த்துப்பார்க்கலாமா?… மறு புறத்தில் பேரின வாதம். அது தங்களோடு தமிழ் கட்சிகளும் நிற்கின்றன என்பதை வெளியில் காட்ட வேண்டும் என் தேவை அதற்க உண்டு> அதை விட புலிகளுக்க எதிராக இன்னொரு தமிழ் அணியை அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் பயன்படுத்தத வேண்டும் என்ற தேவையும் பேரினவாதத்திற்கு உண்டு! ஆகவே இருபக்கமும் சாரா நிலயிலும் புலி பக்கம் சாரா நிலையிலும் செயற்பட முடியாத தமிழ் கட்சிகளுக்கு பேரின வாத அரசின் அனுசரணையோடு செய்படவது மட்டும்தான் பொருந்தி வருகிறதாக உள்ளது! பேரினவாதத்திற்கும் தேவை இருக்கின்றது தமிழ்க்கட்சிகளுக்கும் தேவை இருக்கின்றது. குறைந்த பட்சமேனும் ஒரு வரையறைக்குள் செயற்படுவதற்கேனும் பேரினவாதம் அனுமதிக்கின்ற நிலையில்…. புலிப்பாசிசத்தின் பக்கம் இது அற்ற நிலையில் இது நியாயம் என்ற கருத்தியல் தமிழ் கட்சிகளின் பக்கம் தோன்றியுள்ளது./ இதையும் தவிர்ப்பது நியாயமா?…
    இந்திய ஆக்கிரமிப்பை எதிரத்ததாக புலி பக்கம் ஒரு நியாயம் இருப்பதாக ஒரு கருத்தியலும் உண்டு. இந்திய ஆக்கிரமிப்பை துரத்திவிடட்டு புலிப்பாசியம் ஆக்கிரமித்து நிற்பதாகவும் பேரினவாத ஆக்கிரமிப்பை இது வரை புலிகளால் துரத்த முடியாதிருக்கின்றது என்ற கருத்தியலும் இருக்கின்றது. இவைகளை சீர்தூக்கி பார்த்துத்தான் ஒரு திர்மானத்திற்கு வரமுடிகிறது. பேரின வாதத்துடன் சேர்ந்திருப்பதாக கூறுப்படும் கட்சிகள் தமிழர்களுக்கு உரிமை வேண்டாம் என்று சர்வதேசத்திற்கு கூறியிரக்கின்றதா? இல்லையே… அவர்களும் சுயாட்சி என்கிறார்கள்> சமஷ்டி என்கிறார்கள். அதை விட ஏதோ சனங்களின் நடைமுறைப்பிரச்சழனைகளையாவது அவர்களால் ஓரளவிற்கு செய்து முடிக்க முடிந்திருக்கின்றது. புலிப்பக்கம் நிற்பவர்களால் எதை சாதிக்க முடிந்திருக்கின்றது. என்ன செய்ய முடியும். அப்பால் நகரமுடியாமல் எல்லா தரப்பும் திண்டாடுகின்றது. இதுதான் தமிழர்களின் இன்றைய நிலை. அமரர் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கான சுகனின் கண்டனம் இந்த அரசியல் வாதப்பிரதி வாதங்களுக்குள் மூழ்கி இருப்பது போல் தேசிய விடுதலை என்ற மாயைக்கள் தலித் மக்களின் பிரச்சினைகள் மூழ்கியிரப்பது போல் புலிகளின் ஏகபிரநித்துவக்கோட்பாட்டிற்குள் பல நியாயங்கள் மூழ்கிப்போய் புதிய நியாயங்கள் மேலெழுந்துள்ளன. மற்றப்படி ரவியின் கேள்விகள் மீது யாரும் பாயவும் முடியாது. அது அவரது கருத்து. இப்படியும் ஒரு கருத்து உண்டு. பேரின வாதத்தின் அனுசரணையோடு இருக்கம் தமிழ் கட்சிகளுக்கு நிறைய கடமைகள் உண்டு! முக்கியமானது ஒரு அரசியல் தீர்வை அரசு முன்வைக்க வேண்டும். இதை அவர்களது பாணியில் முயற்சிக்க வேண்டும்! இதுவும் புலிகளை வெற்றி கொள்ளும் ஒரு திட்டம் உன்பதை அந்த தமிழ் கட்சிகள் முன்வைக்க வேண்டும். அதில் ஒர அரசியல் தீர்வை நாம் ஈட்ட முடியும் என்பதே எமது பிரதான எண்ணமாக இரக்க வேண்டும்!

  13. இதையும் கேளுங்கோ ஈ.பி.டி.பி கொலைகள் செய்வதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டிஇருப்பதை நீங்கள் அறிவீர்கள்.அவ்வாறு தகவல் வழங்குவது மற்றைய அமைப்புக்களாம் (கவனிக்கவும் புலி அல்ல.)தவிர ரி.என்.ஏ தொடங்கப்பட்டது புலிக்கெதிராக அல்லவாம் ஈபிடிபியை ஒழிப்பதற்காகத்தானாம் என அறிய முடிகின்றது.இதன் உண்மை பொய் சாத்திய அசாத்தியங்களை காலம்தான் உறுதிசெய்யும்.மேலும் தமிழர்களின் மாற்றுத்தலமை என்பது முட்டையில் மயிர் பிடுங்குபவர்களாலோ அன்றி ஆகாயத்தில் புரட்சிக் கோட்டை கட்டுபவா;களாலோ வரப்போவது இல்லை.தரையில் நிற்பவர்களாலேயே அது சாத்தியமாகும்.

  14. விமலா!…

    உங்கள் கருத்தில் உண்மையும் உண்டு. அனாலும் சில விடயங்களை உணரவேண்டும். மனித உரிமை மீறல்களில் காலத்திற்கு காலம் பலரும் ஈடுபட்டு வருகின்றார்கள். மற்றவர்களது மனித உரிமை மீறல்களை கண்டிப்பதால் மட்டும் தாங்கள் திருந்தி விட்டதாகவோ அன்றி தாம் மனித உரிமைகளை மதிப்பவர்களாகவோ தங்களை யாரும் அடையாளப்படுத்தி விட முடியாது. விமர்சனம் என்பதற்கு அப்பால் தங்களை சுயவிமர்சனம் செய்து கொள்ள தவறும் ஐனநாயக வாதிகளே இன்று தங்களை மனித நேயவாதிகளாக காட்டி வருகின்றார்கள். அது சரி…. மனித உரிமை அமைப்புகள் என்று நீங்கள் யாரை குறிப்பிடுகின்றீர்கள்?…. அந்த பெயரில் இருப்பவர்கள் சரியான தகவல்களைத்தான் வெளியிடுகின்றார்களா என்பதையும் நாம் கவனம் எடுக்க வேண்டும்! யார் பிழை செய்தாலும் அவர்களை நியாயப்படுத்த நான் தாயரில்லை. அனாலும் மனச்சாட்சிக்கு விரோதமாக எதையும் நினைப்பது கூட தவறு. திருமலை நகர சபை தலைவர் சூரிய மூர்த்தி> மற்றும் மட்டக்களப்பில் உணவருந்தும் போது சுட்டுக்கொல்லப்பட்ட டக்ளஸின் அமைச்சு அதிகாரி கையிலைநாதன் ஆகியோரை ஈ.பி.டி.பி தான் சுட்டுக்கொன்றதாக யு.ரி.எச்.ஆர் தனது அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது. உண்மையில் இந்த இருவரையும் சுட்டுக்கொன்றவர்கள் புலிகள் என்றுதான் உண்மையாக நம்பப்படுகின்றது. சூரியமூரத்தி சங்கரியின் ஆள்! சங்கரி கூட புலிகள்தான் சூரியமூர்த்தியை கொன்றார்கள் என்று கூறியிருக்கின்றார். கையிலை நாதன் புலிகளால்தான் சட்டுக்கொல்லப்பட்டதாக புலிகளே தங்களது செய்திகளில் சூசகமாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் யு.ரி.ஏச்.ஆர் இன் அறிக்கையை எப்படி நம்புவது?… இந்த ஒன்றே போதும் அதன் நம்hகத்தன்மைக்கு… அரச படைகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து அடக்கி வாசிப்பது யு.ரி.எச்.ஆர் இன் இன்னொரு தவறு. ஆகவே நீங்கள் சொன்னது போல் மற்றைய கட்சிகள்தான் ஈ.பி.டி.பி மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக தகவல்களை கொடுத்து வருகின்றன என்பதில் உண்மை இருப்பதாகவே தெரிகின்றது. இது போன்ற தப்புலித்தனங்கள் அம்பலத்திற்கு வரவேண்டும். அதே வேளை ஈ.பி.டி.பி உட்பட எந்த தரப்பினாலம் சரி மனித உரிமைகள் மீறப்படுமேயானால் அவைகள் பாரபட்சமின்றி வெளிக்கொணரப்பட வேண்டும். தமிழர்களின் மாற்றுத்தலமை என்பது முட்டையில் மயிர் பிடுங்குபவர்களாலோ அன்றி ஆகாயத்தில் புரட்சிக் கோட்டை கட்டுபவா;களாலோ வரப்போவது இல்லை.தரையில் நிற்பவர்களாலேயே அது சாத்தியமாகும். என்ற உங்களது கூற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனாலும்… அவ்வாறானவர்களால் சில விடயங்கள் முடியாத காரியமாகவும் இருக்கலாம். அவர்களால் கருத்துக்களை மட்டும் கூற முடிந்ததாக இருக்கலாம். அந்த கருத்துக்களும் சரியானதாக இருந்தால் அதையும் ஏற்றுத்தான் மாற்றுத்தலமை எனப்படுபவர்கள் செயலாற்ற முடியும்……….

    இந்த ஆரோக்கியமான விவாதத்தை தொடர்வதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஒருவன் தனது ஆதங்கத்தை எழுதிவிட்டு காத்திருக்கின்றார். அது சுகன்…. தயவு செய்து அந்த திசைக்கு இதை இப்போது நகர்த்தினால் என்ன?….

    சுகன் உங்கள் பதிவு குறித்து உங்கள் கருத்தை கூறலாமே!….

  15. போதும் உங்கள் வாதப்பிரதிவாதங்கள். ஆகாயத்தில் புரட்சிக்கோட்டை கட்டும் பூச்சாண்டிகள் என்று யாரை குறித்து விமலா பதிவு செய்தாரோ தெரியாது. ஆனால் அது உண்மை! அறிக்கை எழுதி அதில் அரசியல் நடத்த மட்டும் சிலருக்கு முடிகின்ற காரியம். கூரை ஏறிக்கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்படுவது வெட்கம் கெட்ட செயல். ஏதாவது செயலில் காட்டுங்கள். அல்லது ஒதுங்கியிருங்கள்.

  16. சுகனின் பதிலை ஆவலோடு எதிர்பாக்கின்றோம்.மீண்டும் தொடருவோம்.

  17. நன்றி மதி மகாராசா /மகாராணி. வருக! ஒதுங்கிப் போய்விடுகிறோம் அரசே/ராணியே. உங்கள் முடியைத்தான் எம்மால் காணமுடியவில்லை. கோடிப்புறத்தையாவது காட்டுங்கள். ஒளிந்துகொள்வது பற்றி யோசிக்கக் கடவோம். கோழி, வைகுண்டம், ஆகாயக்கோட்டை, மணல்கயிறு… என்றெல்லாம் கவிபாடி மகிழவைக்க முடியுமா என்று நாம் பார்க்கக் கடவோம். கருத்துச் சொல்பவர்கள் வெட்கங்கெட்டவர்கள் என்ற உங்கள் உறுமல் நீடுழி வாழ்க!

  18. சத்தியக்கடதாசி ஆசிரியருக்கு>
    மேலுள்ள அலட்டல்கள் எல்லாம் உங்களுக்கு ஆரோக்கியமான
    விவாதமாகப் படுகிறது.
    வாழ்க உங்கள் ஜனநாயகம்!

  19. அரசியலில் இருந்தும் அரசியலுக்கான தளத்தில் இருந்தும் நாம் இன்னும் ஒதுங்கவில்லை என்று சொல்லிக்கொண்டு நடைமுறையில் ஒன்றும் செய்யாமல் மணி கிலுக்கும் சில தமிழ் கட்சிக்காரர்களையே கூரயேறி கோழி பிடிக்க……. என்று எழுதினேன். இது ரவிக்கல்ல.

  20. பிரச்சனையை தொடக்கி விட்டு எம்மை காக்க வைப்பது not nice Sugan.

  21. பெருமதிப்பிற்குரிய விமலா அவர்கட்கு, எனதும் எமதும் நத்தார்- புதுவருட வாழ்த்துக்கள். எனது மேற்குறித்த சிவசுப்பிரமணியம் அவர்களிற்கான அஞ்சலிக் கட்டுரையில் படுகொலை, யுத்தம், ஜனநாயக மறுப்பு, பாசிசம் இவற்றிற்கான ஆணிவேரும் அடித்தளமும் வெள்ளாளா அரசியலிலிருந்து வருபவை எனக் குறிப்பிட்டிருந்தேன்.வெள்ளாள உலகம் பரந்து விரிந்தது. அது சல்பீனியாக்கொடிபோல் எல்லாவற்றையும் மறைத்துப் பரந்திருக்கும்.ஊடகமுட்பட. டார்த்தீனியம் செடிபோல் விசம், காற்றிலும் விசம் . கவனமாக வாரிக் கொழுத்தவேண்டும். எல்லோருக்கும் அழிவு. தமிழ் அரசியலென்ற வெள்ளாள அரசியல் தலித்துகளிற்கு எதிரானது. பாசிசத்திற்கெதிரான மாற்று தாழ்த்தப்பட்டோர் அரசியல் என்ற தலித் அரசியல். எனது மேற்குறித்த கட்டுரையில் ஆசீர்வாதம் தீர்வை வலியுறுத்தினேன். வெள்ளாள அரசியல் அதைக் கவனமாகத் தவிர்ப்பதிலிருந்தே அதன் சாதிய முக மும் நுட்பமும் தெரியும்.மேலும் 1972ல் எம். சி. சுப்பிரமணியம் அவர்கள் அன்றைய அரசியலமைப்புச் சட்ட விவாதத்தில் தலித்துக்கள் தனித் தேசிய இனமென்ற வரையறையை அன்றைய வெள்ளாள கொம்யூனிஸ்டுகள் உட்பட கவனமாகத் தவிர்த்துக் கொண்டார்கள். அவர் அதற்காகவே உதயவட்டம் என்ற பத்திரிகையை நடாத்தினார். இந்த முக்கியமான விவாதக் களங்கள் வெள்ளாள அரசியல் கவனமாகத் தவிர்த்துக் கொள்பவை. அதைத் தவிர்ப்பதின் தொடர்ச்சியே இன்றைய சமூகப் படுகொலைகள் யுத்தம், பாஸிசம் இவையெல்லாம். இவற்றுக்கான மாற்று தலித் அரசியல்! தலித் அரசியல்!! வெள்ளாளர்களால் இது சாத்தியமில்லை
    – சுகன்

  22. சுகன் கிட்டத்தட்ட புலிகளின் துரோகிகள் நிலைப்பாடும் உங்களின் வெள்ளாளத்தின் மீதான வாஞ்சையும் ஒரே அடிநாதமாய் இருக்கின்றது.சாதிய ஒடுக்குமுறைக்கு சமுதாய மாற்றம் தான் தேவை.ஓகே.வெள்ளாளரும் தலித்துகளும் ஒருவரை ஒருவர் அழிக்கும் காலம் இதோ கனிகிறது.காத்திருப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *