தூரப்பறக்கும் புறாவாரே!

கட்டுரைகள்

-சுகன்

பிள்ளையார், பிள்ளையினார், பிள்ளையான், விக்கினேஸ்வர பிள்ளையார் இப்படிப் பல பெயர்கள் தமிழில் பன்நெடுங்காலமுதல் புழக்கத்திலிருந்தாலும் ஒருவிதக் கொச்சைத்தனத்துடனும், வன்மத்துடனும், இழிவரவாகவுமே தமிழ் ஊடகங்களால் விளித்துரைக்கப்பட்டு வரும் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றதையொட்டி அரசியல் நாகரீகம் பற்றியும், ஜனநாயக அரசியல் பற்றியும் பெருமிதப்பட்டுக்கொள்ளும் அமைப்புகள் கூட மனமுவந்த வாழ்த்துத் தெரிவிக்க இப்போதும் தயக்கம் காட்டியே வருகின்றன.

1950 களில் துறைநீலாவணையில் பிள்ளையான் தம்பி என்றழைக்கப்படும் தமிழர் அப்போதைய நில ஆக்கிரமிப்பிற்கெதிராக ஆயுதப் போராட்டம் நடத்தியதை அமரர் தராகி சிவராம் தனது கவிதையொன்றில் (பொங்கும் தமிழமுது) அழகாகப் பாடியிருக்கிறார்.

கேணல் கருணாவிற்குப் பின்னான கிழக்கிலங்கை அரசியலில் பிள்ளையான் என்றழைக்கப்படும் ஆயுதப் போராளி முதலமைச்சராகின்ற நிலைமை எவ்வளவு அற்புதமானதும் உன்னதமானதுமாகும்!

முதலாளித்துவ உழைப்புச் சுரண்டலைவிடக் கொடூரமானது தமிழ் ஊடகங்களின் லாபநோக்கும் சமூக நோக்கும். தமது லாபத்திற்காக ஒரு பெரும் கொலைக்குழுவையே இயக்கிக்கொண்டிருப்பதான பொறிமுறைக்குள் அது இயங்குகிறது.

விலங்கு உயிரியலில் ஈரட்டில் உண்ணும் விலங்குப் பொறிமுறை வகைப்பாடு உண்டு. ஒன்றின் கழிவை மற்றது உண்டு உயிர்வாழும். தமிழ் ஊடகங்களும் கொலைக் குழுவும் அப்படியாகப்பட்ட உயிர் வாழ்தலையே நடத்துகின்றன.

சிறுவயதின் குழந்தைப் பாடல்கள் பல நம் எல்லோருக்கும் இன்றும் நன்றாகவே நினைவிலிருக்கின்றன:

சிங்கத்தின் தோட்டத்திலே சிக்கிவிட்டதெங்கள் பட்டம்
தொங்குமதை எடுத்துவரீர் தூரப்பறக்கும் புறாவாரே!

சிறகிரண்டும் சிக்குண்டார் சிநேகிதராம் குரங்காரே
மறைவாக எடுத்துவரமாட்டீரோ மரந்தாவி!

அரச பயங்கரவாதத்தின் இன அழிப்பிற்கான அய்ந்தாம் படையாக நடைமுறையில் இயங்கிக்கொண்டிருக்கும் கொலைக் குழுவிலிருந்து விலகி அரசியல், சமூகம், அபிவிருத்தி, சகோதரத்துவம் இப்படியாக இயங்குவது மிகவும் கடினமானதும் சிரமமானதுமாகும். அது மலையிலும் கடினமானதாகும்.

மயில் இறகைவிட இலகுவானதும் நம்பிக்கையானதும் துரையப்பா முதல் மகேஸ்வரி வேலாயுதம் தொடர்ச்சியாக துரோகியாக்கிச் சுடுவதும் சுட்டுப்போட்டுத் துரோகியாக்குவதும். நீரின்றி அமையாது உலகென்பது போல் தண்ணீரைப் போல வாழ்வாதாரமானது கொலை. அதின்றேல் ஒரு கணமேனும் உயிர் வாழ முடியாத சுவாசம் போன்றது கொலை.

‘எட்டுத் திக்கும் மதயானைகள்’ என்ற நாஞ்சில் நாடனின் படைப்பிலக்கியத்தின் தலைப்பு தற்போதைய கிழக்கிலங்கை அரசியலிற்கு முற்று முழுதாகவே பொருந்தும்.

ஜனநாயக வழி என்பது ஒரு பஸ்ஸிலிருந்து மறு பஸ்ஸைப் பிடிப்பது போலவோ, வாடகை மகிழுந்து எடுப்பது போலவோ இலகுவானதல்ல.பாஸிசத்திலிருந்து ஜனநாயக அரசியலிற்கு திரும்புதல் என்பதற்கான இந்த நூற்றாண்டின் ஓர் அற்புதமான உதாரணமும் உலகத்திற்கான முன் உதாரணமுமாக முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பணி அமைய வேண்டும். உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து சக பயணிகள் என்ற பெருமிதத்துடனும் மகிழ்ச்சியுடனும் மக்களுக்கான உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

உலகம் முழுவதும் முன்னாள் குழந்தைப் போராளிகள் மனநோயாளர்களாகவும் விரக்தியாளர்களாகவும் சீரழியும் காலத்தில் மாறாக ஒரு முன்னாள் குழந்தைப் போராளியை முதல்வராக்கிய கிழக்கு மண்ணிற்கு எங்கள் வணக்கங்கள்.

22 thoughts on “தூரப்பறக்கும் புறாவாரே!

  1. அவா; என்ன செய்யப்போகிறார் என்றுதான் நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்….

  2. சுகன் நீ கவிஞன்.
    நான் உன் ரசிகன்.

  3. தேர்தல் நடந்துகொன்டிருக்கும் போதே பிள்லையான் தம்பியின் சகாக்கள் தேவா தோழரின் ஆட் கலை செய்த அட் டூழியத்தை வாசிக்கவில்லை போலும் எழுதியவர்.இப்ப அதிகாரம் வேறூ அதிகம் சட்டம்,ஒழுங்கு எல்லாம் பிணம் தின்ன்னும் தம்பியிடம் தான் கொடுக்கப்பட்டிருக்கு,மனநோயிலிருந்து அவர் விடுபடமாட்டார் பாருங்கோ.இதே பத்தியில் புலிக்குணம் இன்னமும் விட்டுப்போகவில்லை எண்டு பிரபாகரனை திட்டி தீர்த்து எழுத வெகுகாலம் எடுக்காது சுகன்.சுபம்.

  4. நண்பர் “நெல்லை நடேஸ்” அவர்களைக் கொன்றதும் பிள்ளையான் தான். உங்கள் வாழ்த்துக்களால் பிள்ளையான் இனி வேறுவகைகளில் கொலைகளைப் புரியட்டும். கொலைவெறி பிடித்த வக்கிர மனங்களில் பிள்ளையான் வருகை அற்புதமும் அதியசயமும் முன்னுதாரணமும்தான்.

  5. ஞானத்திலே நட்டுவைத்த எங்கள் பட்டம்
    நாற்திசையும் பறக்குது பார் ஆ சோகக்கண்ணே
    தவிப்பு(தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்)இடம் தான் விடுதலை காண்
    தலித்துக்கு என்பதனால் ஓடிவந்து ஒட்டிக்கொண்டேன் ஆ சோகக் கண்ணே
    ஆனாமார்க்ஸ், அசுரா, அம்பேத்கார், அயோத்திதாசர்,
    இரட்டைமலை சீனிவாசன், பெரியார், கே.டானியல்,யோகரத்தினம்,தேவதாஸ்
    இவர்களை நீ படிக்கலையா ஆ சோகக் கண்ணே
    பத்திரிகைக்கிறுக்கன்களை, பல்(கலைக்)கழக (ரவீந்திர)நாத்துக்களை
    முளையிலேயே கிள்ளி விட்டோம் முன் நூறு பேரை போட்டுவிட்டோம்
    முதலமைச்சர் ஆகுதற்கு முஸ்லிகள் இனி எதற்கு
    சுறுக்கென நான் வந்து விட்டேன்,
    ஆலாத்தி எடுக்க வேண்டும் அவசரமாய் வந்திடுங்கோ!!!
    சிங்கத்தின் தோட்டத்திலே சிக்கவில்லைப் பிள்ளை அவன்
    கோத்தபாயக் காலடியில் கும்பிட்டு படுக்கவில்லை
    பசிலை வைத்து எதிரிக்கு பாடம் புகட்டவேண்டும்
    மகிந்த சிந்தனைய மாற்றிஸமாய் ஆகுது காண்
    ஓடிவந்து ஒட்டிக்கொள் ஒரு வழி பாத்திடலாம்.

  6. இலங்கை இனப் பிரச்சினையின் முழுப் பரிமாணத்தையும் கடந்த இருபது வருடங்களாக புலிகள் ஒன்றைப் பரிமாணமாக்க முன்னெடுத்த பாசிச அரசியல் இராணுவ நடவடிக்கைகளினால் தமிழ் பேசும் மக்கள் தத்தமது புவியியல் பிரதேசங்களுடன் இன்னும் இறுகப் பிணைந்துகொண்டார்கள். இதனால் இலங்கைத்தீவில் இன்று தமிழ் பேசும் மக்கள் நான்கு இனக்குழுமங்களாக தம்மை அடையாளப்படுத்துவதாகவே கருதவேண்டியிருக்கிறது. பூகோள ரீதியாக மூன்று வேறுபட்ட புலங்களில் வாழும் தமிழர்களும் அந்த மூன்று புலங்களில் வாழும் முஸ்லிங்களும் தனித்துவமானவர்கள். வடக்குப்புலத் தமிழர், கிழக்குப்புலத் தமிழர், மலையகப்புலத் தமிழர், முஸ்லிங்கள் எனத் தத்தமது தனித்துவமான அடையாளங்களை பிரதிபலிக்கும் இவர்கள் தமக்கிடையிலான சில பொதுப்பண்புகளையும் கொண்டிருக்கவில்லையெனக் கூறமுடியாது.

    இலங்கை சுதந்திரத்துக்கு சற்று முன் தொடங்கிய தமிழ் அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரதும் தலைமை ஆயுள்காலம் கைவிரல்களுக்குள் எண்ணக்கூடியது விதிவிலக்காக பிரபாகரனை தவிர. ஜீ ஜீ பொன்னம்பலம் கிட்டதட்ட ஆறு வருடங்களும் எஸ் ஜே வி செல்வநாயகம் சுமார் எட்டு வருடங்களும் அ. அமிர்தலிங்கம் தோராயமாக ஆறு வருடங்களும் தலைமை தாங்கியது மட்டும் அல்ல தமது தலைமைக்கு மாற்றாக புதிய தலைமை உருவாகக் கூடிய ஓரளவு உள்ளார்ந்த ஜனநாய சூழலை தமிழ் சமூகத்துக்குள் கடைப்பிடித்தனர். ஆனால் பாசிச அரசியலை வரித்துள்ள ஒரு மூர்க்கமான இராணுவத்தின் தலைமை தானே வகிக்கும் பிரபாகரன் கடந்த இருபது வருடங்களாக புதிய தலைமைகள் தோன்றுவதற்கான எல்லா அக புற சூழலையும் சிறு இடைவெளி இல்லாமல் மூடியுள்ளார்.

    கடந்த இருபது வருடங்களாக புலிகளால் நலமடிக்கப்பட்ட வடபுலத் தமிழர் அரசியலில் இருந்து புதிய தலைமை தோன்றாமையை இட்டு நிரவவும் தமது சொந்த கணக்கு வழக்கை தாமே பார்த்துக்கொள்ளவும் கிழக்குப்புலத் தமிழர்களும் முஸ்லிகளும் இணைந்து புதிய தலைமையை தோற்றிவிப்பதற்கான வரலாற்றுப் பணியொன்றை தொடங்கிவிட்டார்கள். நாம் அந்த வரலாற்றுக் கடமையை ஆதரிப்பதற்கான முன் நிபந்தனைகள் மூன்று மட்டுமே. 1. ஜனநாயகம் 2. ஜனநாயகம் 3. ஜனநாயகம். ஆம், விடுவிக்கப்பட்ட கிழக்குப் புலத்தில் அரசியல் நிர்வாகத்துக்கான தேர்தல் ஒன்றுதான் வடக்குப்புலத்தில் மட்டுமல்ல இலங்கைத் தீவு எங்கும் குறைந்த பட்சம் ஒரு முதலாளித்துவ ஜனநாயக சூழலையாவது ஏற்படுத்தும்.

  7. பாஸிசத்திலிருந்து ஜனநாயக அரசியலிற்கு திரும்புதல் என்பதற்கான இந்த நூற்றாண்டின் ஓர் அற்புதமான உதாரணமும் உலகத்திற்கான முன் உதாரணமுமாக முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பணி அமைய வேண்டும்.

    உங்களுடைய ஆசை கனவாகக்கூடாது என்று விரும்புகிறேன்.
    பிரபாகரனும் இப்படி ஒரு நிலை எடுத்தால் சுகன் வாழ்த்துவீர்களா? சந்தேகப்படுவீர்களா? பிரபாகரனும் மீசைவழிச்சு வேட்டிகட்டினவர்தானே! 1987 சுதுமலை மேடையை ஒருமுறை நினைத்துப்பாருங்கள்!

  8. தேர்தல் முடிவடைந்த பின்னரும் ஜனநாயகத்திற்கு விரோதமாக ரிஎம்விபி வன்முறைகளில் ஈடுபட்டு வருவது தொடர்ந்தவண்ணமே உள்ளது.//

    ஐயோ கொஞ்ச நாள் பொறுங்களேன் – முன்னாள் குழந்தை போராளி ஒருவர் – இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா ஜனநாயகத்துக்கு திரும்பி வாறார் – அவருக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்களேன். அவர் ஒரு அரசியல் நீரோட்டத்தில் இப்பதான் குதிச்சிருக்கிறார். அதில முழுக்க நனையும் வரையும் – கடத்தல்களையும் கொலைகளையும் – கப்பங்களையும் – மிரட்டல்களையும் கொஞ்சம் கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கோ – சுடுகுது மடியைப் பிடி என்றால் அவர் என்ன செய்வார் பாவம் – அதுவும் முன்னாள் குழந்தை

  9. ”The success of the Tamils will not contribute to the failure of the Sinhalese and the failure of the Tamils will not lead to
    the success of the Sinhalese.”

    கெளரவ முதலமைச்சர் பிள்ளையானின் தேர்தல் வெற்றி ஐக்கிய இலங்கைக்குள் மூவின மக்களுக்கான அதிகார பகிர்வுக்கு – இன்றைய சூழலில் – புதிய வழிமுறைகளை தேடும் அசாதாரண அரசியல் ஆகும்.

    கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஒரு வேளை ரிஎம்விபி தோற்றிருந்தால்கூட ஜனநாயக மாற்றத்தைக் கோரும் அனைத்துத் தரப்பினருக்கு வெற்றியே. திருமலை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களின் தேர்தலின் முடிவுகளுக்கு அக்குமார்க் முத்திரை குத்தும் அசல் ஜனநாயக நியமங்களாக்கியுள்ளது.

  10. நண்பர் சுகன் முக்கி முனகி மான்புமிகு முதலமைச்சர் பிள்ளையான் வல்லவர் ஆனாலும் நல்லவராக கொஞ்ச நாளாகும் காத்திருங்கள் என்று கூறுகிறார். அதுடன் பிள்ளையானை தெரிவு செய்த !? கிழக்குமாகண மக்களுக்கும் மக்கள் பணிதொடர
    முதலமைச்சர் பிள்ளையானுக்கு வாழ்த்தும் தெருவித்திருக்கிறார்.

    சுதன் என்ன சொல்லுகிறார் என அவருக்கும் ஏன் சொல்லுகிறார் என அவரை தெரிந்த எமக்கும் தெரியும்.
    சுதன் ம் ஆதரவு தெரிவித்துவிட்டார் என்பதனால் அங்கு ஒரு மசிர் மாற்றம் நிகழப்போவதில்லை. இதை தெரிந்தும் ஏன் எழுதுகிறார் என்ற கேள்வி எழுவது உங்களைப் பொறுத்தவரை நியாயமானதுதான் !
    யாழ்சைவகுலவேள்ளாள ஆசாமிகள் தமது பெயர்களுக்குப் முன்னால் ஆங்கில எழுத்துக்களை செருகி (பட்டம் பெறாதவர்கள் பெயர்களுக்கு பின்னால் ) தமக்கு ஒரு ஒளிவட்டத்தை உருவாக்கி கொள்வார்கள். அதே போல் இன்று புகலிடத்திலும் பலருக்கு ஒளி வட்டங்கள் தேவைப்படுகிறது !

    நான் பேசப்படும் பொருளாக வேண்டுமாயின் என்னை விளம்பரப்படுத்த வேண்டும். விளம்பரம் என்பது விகாரம்.இது ஓர் பரிமாண வளற்சி இல்லாதது !

    சரி இந்த செய்தியை பிரசுரித்த இணையத்தின் நோக்கம் ! கிழக்கு மாகாணத்தில் கந்தனும் சுப்பனும் பரிமளாவும் கூடத்தான் பிள்ளையானை ஆதரிக்கிறார்கள் அவர்களின் அதரவில் இருந்து சுதனின் ஆதரவு என்ன விதத்தில் வேறுபடுகிறது ! சுதனின் வாழ்த்து தமிழ் முஸ்லீம் முரண்பாட்டை தணித்துவிடுமா ? கொலைகளையும் கொள்ளைகளையும் நிறுத்திவிடுமா ? மக்கள் மீதான ஆயுத வன்முறை நிறுத்தப்படுமா ? அல்லது கிழக்குமாகாண புனர்நிர்மாண வேலைகளுக்கு சில இலட்சங்கள் கொடுக்கப்படுமா ?

    இந்த இணைய வலைகள் எல்லாம் நட்பு வலைகளின் இணைப்பு !

    மக்களின் குருதிகளை உங்கள் மீது புசி புரட்சிக்காரனாகிறீர்கள் !

    உள்கள் மீது வீசுவது இரத்தவாடை அல்ல துர்நாற்றம் !

  11. 19.05.2008

    வாழைச்சேனையில் தினமுரசு விற்பனை செய்த ஈபிடிபி உறுப்பினர்கள் ரிஎம்விபியினரால் தாக்கப்பட்டுள்ளனர்

    மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையில் தினமுரசு பத்திரிகை விற்பளையில் ஈடுபட்டிருந்த 4 ஈபிடிபி உறுப்பினர்கள் ரிஎம்விபியினரின் தாக்கதலுக்கு இலக்காகியுள்ளனர். இன்று நண்பல் இடம்பெற்ற இத்தாக்குதலில்; வாள் வெட்டுக்க இலக்காகி காயமடைந்த வானொலி மற்றும் தொலைக்காட்சி பேட்டிகளில் தமது கட்சி ஜனநாயக நடைமுறைகள் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்தனர். தேர்தல் முடிவடைந்த பின்னரும் ஜனநாயகத்திற்கு விரோதமாக ரிஎம்விபி வன்முறைகளில் ஈடுபட்டு வருவது தொடர்ந்தவண்ணமே உள்ளது.

  12. சுகன் நீண்ட காலத்திற்குப் பின் மெளனம் கலைத்திருக்கிறார். வடக்கிலிருந்து கிழக்கு பிரிந்து இன்று எவ்வளவு காலம் ஆகிவிட்டது. மார்ச பிளவு என்று நாம் குறிப்பிட்டுக் கொள்ளும் அந்தப் பொpய பிளவுக்குப்பின் கிழக்கு மக்கள் கொடுத்த உயிர்ப் பலி கொஞ்சமல்ல. வெருகல் படுகொலை என்பது கிழக்கு மக்கள் சென்மத்திலும் அழியா வடு. அதன்பின் சத்தியமூர்த்தி>தில்லைநாதன் என்று எத்தனை போ;கள்? இன்றுவரைக்கும் யூலைப்படுகொலை வெலிக்கடை; படுபொலை குமுதினிப் படுகொலை என்று நினைவு கூரும் யாழ்த் தமிழ் மனம் அல்லது தமிழ்ப் புத்திசீவி மனம் வெருகல் படுகொலையை ஒரு மயிரளவும் நினைப்பதில்லை. அதற்கு கிழக்கிலங்கை முன்னணிதான் செய்யோணும். அவா;கள் மட்டுமேதான் நினைவுகூர்ந்து வந்தார்கள். சுகனுக்கு இப்பவாவது கண்திறந்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.நமக்குக் கோபபம் என்னவென்றால் ஜோசப் பரராயசிங்த்தைச் சுட்டவுடன் வந்த கோபம் வெருகல் படுகொலைக்கு வரவில்லை என்பதுதான். கிழக்கு மக்கள் வாழ்வு என்பது இப்படி பலதரப்பட்ட புத்திசீவிகளால் மட்டுமல்ல ஆண்டாண்டுகாலம் பாலதரப்பட்ட இன்னல்களுடனேயே கடந்துகொண்டிருந்தது. ஒரு புள்ளி. பிள்ளையான். நல்லதோ கெட்டதோ? அவா;கள் இனித் தீர்மானிக்கட்டும். கிழக்கில் இனி ஒரு யுத்தம் ஆரம்பிக்கப்படக் கூடாது. போரின் மணம் காற்றில் பரவக்கூடாது என்று நினைத்துக்கொள்வோம். நீங்கள் எல்லோரும் சொல்வது பொல் பிள்ளையான் கெட்டவனாகவே யுத்தக்கறையுள்ளவனாகவே இருந்து விட்டுப் போகட்டும். இனி அந்த மக்கள் தமக்குரியரைத் தோ;ந்து கொள்ளட்டும். எல்லா இணையத்திலும் பகள்ளப்பெணாpல் எழுதும் நமது நண்பா;கள் எல்லோரிலும் எவ்வளவு இரத்தக் கறையும் கொலைக்ருவியும் இருக்கிறது என்று நமக்குத் தொpயும் தானே நண்பா;களே………..

    கற்சுறா

  13. முதல்வர் சந்திரகாந்தன் அவர்கள் தலதா மாளிகைக்குச்சென்று வழிபாடு நிகழ்த்தியது இன்னும் அதிமுக்கியமான நிகழ்வு. இந்தஒரு நிகழ்வு மட்டுமே போதும்.

  14. கற்சுறாவும் சுகனும் அற்புதமாக ஒரு தேவதூதரைப் பிள்ளையானிடம் கண்டிருக்கின்றார்கள்.
    வெருகல் படுகொலை என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. வன்னிப்புலிகள், கிழக்குத்தமிழர்கள் என்று ஸ்ரீலங்கா அரசின் ஆதரவுப்புலம்பெயர்தலித்+இன்னோரன்ன மாயப்பெயர்கண்டுபிடிப்பு ஆசாமிகள் எசமானருக்காகக் காவிச்சிந்தும் சொற்களை அறிந்தவர்களுக்கு இந்த விளையாட்டுகள் புதிதில்லை. அண்ணைமார் புலியளோடை பிரச்சனை எண்டால், புலியளோடை புடுங்குங்கோவன். எதுக்கு இதிலை கிழக்கு-வடக்கு வண்ணமடிப்பு? உந்த வெருகலுக்குப் பொறுப்பா அப்ப இருந்த சொர்ணம் என்ன வன்னிப்புலியோ?

    (முன்னாள்)குழந்தைப்போராளிகள் எண்ட பெயரை வைத்தே வாழ்க்கைக்குச் சம்பாத்தியம் பல வகையளிலையும் தேடலாம்… புத்தகம் எழுதி விக்கலாம்; மாகாணசபையிலையும் அமரலாம். ஆனால், உதெல்லாம் வடக்கு+கிழக்குச்சனத்துக்கு உதவுமோ எண்டால், உச் கேக்கப்படாது.

    யாழ்ப்பாணத்து வேளாளப்பெடியளே பாரிக்கும் அங்கையிருந்து ரொரண்டோவுக்கும் புலம்பெயர்ந்தோடணை, கிழக்குத்தலித்துகளாக யாழ்ப்பாணத்துவேளாளரைத் திட்ட உரிமம் எடுத்துக்கொள்வது அசல் கிழக்குத்தமிழருக்குத் தலையைச் சுத்துது. ராஜேஸ்வரி அக்கை, ஞானம், குமாரதுரையைக்கூடப் புரிஞ்சுகொள்ளக்கூடியதா இருக்கு. ஆனால், உந்த சுகப்பிரம்மரிஷி,கற்சுறா வகையைப் புரியக் கஷ்டமா இருக்கு

  15. நண்பர் கற்சுறா !

    உங்களுக்கு வெருகல் படுகொலையை தான் ஞாபகம் இருக்கு . தமிழ் தேசிய இராணுவத்திற்காக பிடிக்கப்பட்ட நுற்றுக்கணக்கான கிழக்குமாகாண இளைஞ்ஞர்களில் தப்பி போன சிலர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் விடுதலை புலிகளால் வீதி ஓரங்களில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது பிள்ளையானின் துப்பாக்கியும் தான் சேர்ந்து சுட்டது. வேருகல் படுகெலையுடன் அதற்கும் சேர்த்து கிழக்கிலங்கை முன்னணிதான் செய்யோணும். கொலைசெய்யப்பட்டவர்களின் விபரங்களை கூடுதலானவரை தர முயற்சிக்கின்றேன்

    பிள்ளையான். நல்லதோ கெட்டதோ? என்ற சந்தேகம் கூடவே கூடாது அவர் கெட்டவரேதான்.. இல்லாவிட்டால் நேற்று முன்தினம் இபிடிபி உறுப்பினர்கள் பத்திரிகை விற்றுக்கொண்டிருக்கும் போது ரிஎம்விபி யினரால் தாக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

    கிழக்கில் யுத்தம் மட்டுமல்ல. கடத்தலும் ..கப்பமும் ..துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தும் அராஐகமும் தான் தொடரக்கூடாது . அப்போதுதான் கிழக்கு மக்களின் மெளனம் கலையும் !. உமது கவலைஎல்லாம் சுதனின் மெளனத்தில்தானே.

  16. கணேஸ், எப்பிடிச் சுகம், வின்சன் சுகம் எப்படி?
    உன்னுடைய ரெஸ்ரோரன்டில் வேலைசெய்யும்போது உன்முகம் எரிந்து பெரும் துயரமடைந்ததாக அறிந்தேன். பார்க்க ஆசையாக இருக்கிறது. ஒருமுறை வந்துவிட்டுப்போ;

  17. வருத்தம்பாக்கப்போறத அறிஞ்சிருக்கிறம். கூப்பிட்டு வருத்தம்பாக்கிறத இஞ்சதான் அறியிறம்.
    நன்றி வணக்கம்

  18. நான் நலமாக இருக்கிறேன். இப்போது முகம் எல்லாம் சாpயாகிவிட்டது.
    கிழக்கின் அரசியல் குறித்து நீ நிறையவே எழுதவேண்டியுள்ளது. சிந்தி. நீண்ட காலம் யாரும் மெளனமாக இருக்க முடியாது.
    கற்சுறா

  19. சுகன் உங்கள் ஆதங்கம் புரிகிறது.பிள்ளையானே கிஸ்புலாவோ
    மானிடவரலாற்றையோ சமூகவிஞ்ஞானத்தையோ புரிந்துகொண்டுஅரசியலுக்கு வந்தவர்கள் அல்ல.ஒன்று வெறிகுணம்
    மற்றையது சுயநலம்.

    கஷ்ரமோ! நஷ்ரமோ!! அலுப்போ! சலிப்போ!!இடதுசாரிகளிடம்
    உங்கள் தேடலை நடத்துங்கள். பலன்உண்டு.

  20. மாகாணசபைக்கு அருகில் இருந்து இந்த மடலை அனுப்புகிறேன்
    இன்று மாகாணசபை கூட்டம் முடிவடைந்து விட்டது சுகண்ணா நீங்கள் திருகொணமலையில் இருந்து பார்க்கவேணும் சும்மா வாயக்கு வந்தபடி எல்லாம் கதைக்கக் கூடாது இங்கே யட்டியை கழட்டாத குறையாத தோண்டுறான்கள் மகாணசபை கூட்டம் நடந்தா அந்த றோட்டாலேயே உருத்தரும் போகேலாது இந்த லட்சணத்திணத்தில் எங்களுக்கு மகாணசபை இல்ல ஒரு மசிர் சபையும் வேண்டாம் பழையபடி நடமாடவிட்டாலே போதும் என்றிரக்கிறன் உங்கட எழுத்தில் உள்ள நியாயங்களை நான் ஏற்றுக்கொள்கிறன் அதற்காக சும்மா கதை கதைக்காதீங்க

  21. என்னுடைய கொமன்ற பொட்டதிற்கு நன்றி நேற்று பரிசொதனையாகத்தான் அதை அனுப்பிவைத்தனானன் ஏனெனில் எனக்கு அதிகம கணனி தெரியாது

    //உலகம் முழுவதும் முன்னாள் குழந்தைப் போராளிகள் மனநோயாளர்களாகவும் விரக்தியாளர்களாகவும் சீரழியும் காலத்தில் மாறாக ஒரு முன்னாள் குழந்தைப் போராளியை முதல்வராக்கிய கிழக்கு மண்ணிற்கு எங்கள் வணக்கங்கள்// உங்கள் வணக்கத்திற்குரிய மண்ணை சேர்ந்தவன் என்பதோடு மட்டுமல்ல நீங்கள் வணக்கங்செய்யும் காரியத்தில் நேரடியாக பங்கு கொண்டவன் என்ற வகையில் இந்தத்தகவல் கிழக்கிழங்கை மக்களிடம் தமிழ் முஸ்லிம் விரோதத்தை துண்டிவிடடு அந்தத்துவேசத்தின் மேல்த்தான் மட்டக்களப்பை குழந்தைப்போராளி மாண்புமிகு முதலமைச்சாஆனார் உங்கள் குழந்தைப்Nhபராளி மேலும் பல குழந்தைபோராளிகளை திருகோணமலையில் உருவாக்கி கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா. தோ;தல் காலத்திலேயே எனக்கு ஓட்டுப் போட்டால் காணமல் போன உங்கள் பிள்ளைகளை விட்டுறுவம் இல்லாட்டி இருப்பவருக்கும் பாதகாப்பில்லை என்று இங்கே வெளிப்படையாகவே மிரட்டினார்கள் அந்த பயத்தில் 70வயது மூதாட்டி தன் பேரணுக்காக வாக்களித்தார். ததகுழந்தைப்ரோளி தான் பெற்ற பயிற்சியை மறக்காமல் எல்லாத்திலையும் செய்யிறார் மகாணசபை கூட்டம்நடைபெறும் போதே இதே திருமலையில் எத்தனைபேர் கடத்தப்பட்டார்களோ தெரியாது நாம் தேர்வுசெய்த உறுப்பினர்களை நாம் தொலைக்காட்சியில் தவிர வேறுஎதிலையம் பார்க்கேலாது இந்த இலட்சணத்திலை நீங்க வாழ்த்த சொல்லுறீங்க சரி அதையும் விடுவம் பொம்மை இராஜக்களை வைத்து அந்தகாலத்தல் மந்திரிமார்கள் தளபதிமார்கள் ஆட்சிசெய்தது தெரியுமா {நேபாளத்தில் ராணாக்கள் ஆட்சி நடந்ததே அதுதான்அதுபோலத்தான்} இந்த முதலமைச்சர் பதவியும் பொம்மையை நாங்கள் ஏற்கமாட்டோம் அதற்கு வரும்வாழ்த்துக்களையும் சந்தேகப்படுகிறோம். இலங்கை அரசிடமிருந்து தமிழருக்கு நல்லவாழ்வல்ல போர்வாழ்வுகூட கிடைக்காது இலங்கை அரசின் பொம்மைக்கு வாழத்து சொல்வது காணல்நீரை நம்புவது போலத்தான்
    இன்குலாப்பின் வரிகளை ஞாபகம் கொள்ளுங்கள்

    ”காணலை நம்பவதைவிட பாலையை எற்றுக்கொள். தொண்டினால் சுனையாவது கிடைக்கும்” சுகண்ணா பாசிசத்திற்கு எதிராக ஒலிக்கும் உங்கள் குரல் இன்னொரு பாசிசத்தை வாழ்த்தவோ வரவேற்கவோ வேண்டாம் இதை கொழுப்பு மிகுதியால் சொல்லவில்லை பாதிக்கப்பட்டவா;களின் பாதிக்கப்படுபவர்களின் குரலாகவே சொல்கிறேன் மிக ஈனசரத்திலேயே என் குரல் ஒலிக்கமுடியும் ஆயினும் அது உங்கள் காதுகளை அடையம் என்பது என் நம்பிக்கை

  22. I don’t know how to type in Tamil but I know what is going on in Batticaloa because I am sending this feedback from Batticaloa. People here are not interested in this Eastern politician. They never even want to talk about him. They say HE SUCKS not publicly in their own minds. People here know who is the real leader very well and they want him back.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *