வேர்ச்சொல் – விடுதலை சிகப்பி – வெந்து தணிந்தது காடு

சென்னையில், கடந்த மாத இறுதியில் ‘நீலம் பண்பாட்டு மையம்’ ஒருங்கிணைத்த வேர்ச்சொல்- தலித் இலக்கியக் கூடுகை நிகழ்வில் ‘ஈழத் தலித் இலக்கியம்’ குறித்த அமர்வில் தோழர்கள் மு.நித்தியானந்தன், தொ. பத்திநாதன் ஆகியோரோடு நானும் உரையாற்றினேன். நேரப் பற்றாக்குறை காரணமாக, என்னுடைய உரை முழுமையுறவில்லை என்றே உணர்கிறேன். எனினும் கிடைத்த நேரத்திற்குள், ஈழத்தில் கடந்த அய்ம்பது வருடங்களில் சாதியம் எவ்வாறு தந்திரமாக – விடுதலைப் போராட்ட காலத்தையும் கடந்து – இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை விளக்க முற்பட்டேன். ஏனெனில், ஈழ […]

Continue Reading

கருங்குயில்

தன்னுடைய வீட்டின் மதிற்சுவரில், ஏன் சுற்றுலாப் பயணிகளான வெள்ளைக்காரிகள் விழுந்து புரண்டு முத்தமிடுகிறார்கள் என்பது ரவிசங்கருக்குப் புரியவேயில்லை. மூன்று மாதங்களுக்கு முன்புதான் புதிதாக வெள்ளையடிக்கப்பட்டிருந்த அந்த மதிற்சுவரில், இப்போது எண்ணிப் பார்த்தால் குறைந்தது நூறு லிப்ஸ்டிக் அடையாளங்களாவது இருக்கும். ஒரே நிறத்தில் அந்த அடையாளங்கள் பதிந்திருந்தால் கூட ஒருவேளை அதுவொரு அழகாக இருந்திருக்கக் கூடும். ஆனால், சிவப்பு, ஊதா, பச்சை, கருப்பு என எல்லா வண்ணங்களிலும் அந்தச் சுவரில் உதட்டு அடையாளங்கள் பதிந்து, குரங்கு அம்மைநோய் வந்தவனின் […]

Continue Reading

கதையின் மொழி இசை போன்றிருக்க வேண்டும்

இச்சா, BOX, கொரில்லா உள்ளிட்ட முக்கிய நாவல்களை எழுதிய எழுத்தாளர் ஷோபாசக்தியிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையத்தளத்திற்காக உரையாடினோம். அதிலிருந்து தொகுக்கப்பட்டது. உரையாடியவர்: வாசுகி ஜெயஶ்ரீ – இலங்கையில் உங்களது சொந்த ஊர் எது? இலங்கையின் வடதிசையில் ‘பாக்’ நீரிணையில் மிதக்கும் சின்னஞ்சிறிய தீவுகளில் ஒன்றான ‘லைடன்’ தீவில் அமைந்துள்ள ‘அல்லைப்பிட்டி’ கிராமம் ஒருகாலத்தில் என்னுடைய ஊராக இருந்தது. அங்கேதான் நான் பிறந்து வளர்ந்தேன். இப்போது என்னுடைய குடும்பத்தினர் யாரும் அங்கில்லை. எங்களுடைய குடிசை வீடும் இராணுவத்தால் […]

Continue Reading

ONE WAY

அய்ரோப்பாவில் வசிக்கும் ஓர் ஈழத் தமிழருக்கு இலங்கையிலிருந்து அதிகாலையில் தொலைபேசி அழைப்பு வந்தாலே, அது மரணச் செய்தியை மட்டுமே கொண்டுவரும் என்பது புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆழமான நம்பிக்கை. அதனாலேயே, நான் இரவில் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டுத்தான் தூங்குவேன். நம்முடைய அன்புக்குரியவர்களின் மரணங்களைத் தள்ளிப்போடுவதற்காக, நாம் கோயில்களில் அர்ச்சனை செய்வது போல, மாந்திரீகத்தின் மூலம் கழிப்புக் கழிப்பது போல, அலைபேசியை அணைத்து வைப்பதும் மரணத்தைத் தடுத்துவிடும் என்றொரு நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டுவிட்டது. ஒரு வருடத்திற்கு முன்பாக, ஒரேயொரு […]

Continue Reading

வர்ணகலா

இந்தச் சிறிய கதையின் முடிவு எப்படி அமையப்போகிறது என்பதைத் தேர்ந்த வாசகரான நீங்கள் இதற்கு அடுத்தடுத்த பத்திகளில் நிச்சயமாகவே ஊகித்துவிடுவீர்கள். அய்நூறுக்கும் அதிகமானவர்கள் உட்கார்ந்திருந்த அரங்கில், மிதுனா பாலப்பா இந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்ததுமே நானும் முடிவைச் சட்டென ஊகித்துவிட்டேன். ஆனால், அந்த முடிவை நோக்கி கதை எவ்வழியால் அசையப்போகிறது என்று எனக்குப் புரியவில்லை. எனவே நான் பொறுமையாக உட்கார்ந்திருந்து மிதுனா பாலப்பா சொன்ன கதையை முழுவதுமாகக் கேட்டேன். பாரிஸிலிருந்து முந்நூற்றைம்பது கிலோமீற்றர்கள் தொலைவிலிருந்த ‘ரென்’ பல்கலைக்கழக […]

Continue Reading

யுத்தம் கதைகளை உருவாக்கி இரகசியமாக வைத்திருக்கிறது

படைப்பு தகவு பிப்ரவரி -2023 இதழில் சுருக்கப்பட்டு வெளியாகியுள்ள நேர்காணலின் முழுமையான வடிவம் இங்கே. நேர்கண்டவர் :அம்மு ராகவ் -சினிமா, இலக்கியம், போராளி இவற்றில் எந்தவொன்றில் ஷோபாசக்தி நிறைவு பெறுகிறார்? முதலில், நான் போராளி இல்லை என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். என்னுடைய பதின்ம வயதுகளில் நான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆயுதப் பயிற்சி பெற்ற உறுப்பினனாக இருந்தேன். ஆனால், சனநாயக மத்தியத்துவமற்ற, இறுக்கமான அந்த அமைப்பில் தலைமையின் எண்ணங்களையும் கட்டளைகளையும் நிறைவேற்றும் ஆயிரக்கணக்கானோரில் நானும் […]

Continue Reading

மெய்யெழுத்து

2009 -வது வருடம், வைகாசி மாதத்தின் இறுதி நாளில்; ஓர் இளநிலை இராணுவ அதிகாரி “நாங்கள் திலீபனின் உடல் எச்சங்களைக் கைப்பற்றிவிட்டோம்” என்றொரு செய்தியை வவுனியா இராணுவ மையத்திற்கு அறிவித்தான். அப்போது மருத்துவர் ராகுலன் மனநிலை சரிந்தவர் போன்று, மணலை அள்ளித் தனது தலையில் போட்டுக்கொண்டு, குழறி அழுதவாறிருந்தார். 1977 -வது வருட இன வன்செயல்களின் பின்பாக, ராகுலனின் குடும்பம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்திருந்தது. யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் பத்தாவது வகுப்பில் சேரும்போது ராகுலனுக்கு வயது […]

Continue Reading