நெடுங்குருதி: Behind the scene

-ஷோபாசக்தி வெலிகடைப் படுகொலைகளின் நினைவுநாள் முடிந்து, கந்தன் கருணைப் படுகொலைகளின் நினைவு நாளும் வரப்போகிறது. ஆனால் வெலிகடைச் சிறைப் படுகொலைகளின் இருபத்தைந்தாவது வருடத்தை நினைவு கூர்ந்து நாங்கள் பிரான்ஸில் நடத்திய ‘நெடுங்குருதி’ நிகழ்வின் மீதான அவதூறுகளும் சேறடிப்புகளும் இன்னும்தான் ஓயவில்லை. இம்மாத ‘தீராநதி’ இதழின் எதிர்வினைப் பகுதியில் அசோக் ‘நெடுங்குருதி’ நிகழ்வு மீதான உச்சக்கட்ட அவதூறுகளையும் தோழர் அ. மார்க்ஸின் மீதான தனது நீண்டகாலக் காழ்ப்புணர்வையும் கொட்டித் தீர்த்திருக்கிறார். நெடுங்குருதி நிகழ்வு குறித்து அவதூறுகளும் தவறான செய்திகளும் […]

Continue Reading

இன்றெமக்கு வேண்டியது சமாதானமே

தீராநதி: ஒக்டோபர் – 2008 விமர்சனமற்ற முறையில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பது, அல்லது விடுதலைப் புலிகளை எதிர்ப்பது என்கிற வகையில் இலங்கை அரசையும்கூட ஆதரிக்கும் நிலையை எடுப்பது என்கிற இரு எதிரெதிர் நிலைப்பாடுகளுக்கிடையே ஈழப் பிரச்சினையில் நடுநிலையான ஒரு பார்வையைத் தொடர்ந்து பேணி வருபவர் எழுத்தாளர் ஷோபாசக்தி. சென்ற மாதத்தில் நான் பிரான்ஸ் சென்றிருந்தபோது ஈழப் போராட்டம் இன்றொரு தேக்கநிலையை எட்டியிருப்பது குறித்து அவரிடம் நானெடுத்த பேட்டி இது. இன்றைய தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியாகிய ஷோபாசக்தியின் […]

Continue Reading