நியோகா: ஏப்ரல் 2-ம் தேதி

 நியோகா என்பது பண்டைய இந்துச் சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஓர் உறவுமுறை. இந்து தர்மமான மனுஸ்மிருதியில் இம்முறை குறித்துச் சட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. குழந்தை பெற முடியாத கணவனைக் கொண்ட அல்லது கணவனை இழந்த பெண்ணொருத்தி வேறொரு ஆடவனோடு கூடிக் குழந்தையைப் பெற்றுக்கொள்ளலே இம்முறை. மகாபாரதத்திலே திருதிராட்டினன், பாண்டு, கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் எல்லோருமே இம்முறையிலேயே பிறக்கிறார்கள். இந்த நியோகா முறையின் முக்கிய நிபந்தனைகள் எதுவெனில் பெண் மூன்று தடவைகள் மட்டுமே அந்த ஆடவனோடு கூட முடியும். நான்காவது முறை உறவுகொள்வது […]

Continue Reading

அஞ்சலி: மங்கையற்கரசி அமிர்தலிங்கம்

ஈழத் தமிழ்த் தேசிய அரசியலில் உரத்து எழுந்த முதலாவது பெண்குரல் மங்கையற்கரசி அவர்களுடையது.  சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம், காலிமுகத்  திடல் போராட்டம் தொடங்கித் தமிழரசுக் கட்சி நடத்திய அத்தனை போராட்டங்களிலும் முன்னணியில் நின்றவரவர்.  அவரது கையால் அன்னமிடப்படாத  போராளிக் குழுக்களின் தலைவர்களோ ஆரம்பகாலப் போராளிகளோ அநேகமாக எவருமிலர் என்பது வரலாறு. தனது கணவர் அ. அமிர்தலிங்கத்தை அரசியலில் நிழலாகத் தொடர்ந்தவர். துணைவரோடு இணைந்து சிறைக்கும் சென்றவர்.  அமிர்தலிங்கம் புலிகளால் கொலை செய்யப்பட்ட அன்றே மங்கையற்கரசியும் உளவியல்ரீதியாகக் […]

Continue Reading

தோழமையுடன் இலண்டன் இலக்கியச் சந்திப்புக் குழுவினருக்கு..

வணக்கம். 40வது இலக்கியச் சந்திப்புக் குறித்து நமக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை முடித்துக்கொண்டு நாமொரு பொது உடன்பாட்டை எட்டுவதற்காக இந்த வேண்டுகோளைப் பொதுவில் வைக்க விரும்புகின்றோம். 40வது இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்துவதற்கு நாம் விரும்புவதையும், இலங்கைக்கு சந்திப்புத் தொடர் எடுத்துச் செல்லப்பட வேண்டியதன் அரசியல் முக்கியத்துவத்தையும் நாங்கள் பாரிஸ் – 38வது இலக்கியச் சந்திப்பிலேயே வெளிப்படுத்தியிருந்தோம் என்பது அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட நீங்கள்அறிந்ததே. எனினும் அது குறித்த முடிவை கனடா – 39வது சந்திப்பில் எடுப்பதாகத் […]

Continue Reading

எனது புதிய தொகுப்புகள்

வ.ஐ.ச. ஜெயபாலன், புஸ்பராணி, தீபச்செல்வன், மாலதி மைத்ரி, ம. நவீன், அ.தேவதாசன், லெ.முருகபூபதி ஆகிய ஏழு ஆளுமைகளை நான் நேர்காணல் செய்து ‘லும்பினி’, ‘சத்தியக் கடதாசி’, ‘எதுவரை’ஆகியவற்றில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பு: தீராநதி, அம்ருதா, எதுவரை, புதுவிசை, மாத்யமம், ஆனந்த விகடன்,  புத்தகம் பேசுது, புதிய கோடாங்கி,  குமுதம், இனிய உதயம் ஆகிய இதழ்களிற்கு கடந்த பத்தாண்டுகளில் நான் வழங்கிய நேர்காணல்களின் தொகுப்பு: பிரதிகளிற்கு: கருப்புப் பிரதிகள் பேச: 00 91 9444272500 மின்னஞ்சல்: [email protected]

Continue Reading