இரண்டாம் வருட நினைவஞ்சலி

அறிவித்தல்கள் கட்டுரைகள்

மிழ் இளைஞர் பேரவையின் முதலாவது தலைவரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (T.L.O) நிறுவனர்களில் ஒருவரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஃப்ரான்ஸ் பிரதிநிதியாக இயங்கியவரும், மக்கள் கலை இலக்கியவாதியுமான

தோழர். சி.புஸ்பராஜா

தோழர். சி.புஸ்பராஜா
(1951 – 2006)

“நான் எந்த விடயத்திலும் மௌனியாக இருக்க விரும்பவில்லை. மௌனியாக இருக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. நான் இவர்களுடன்தான் பேசுவேன், இவர்களுடன்தான் உறவு கொள்வேன் என்ற இறுமாப்பும் என்னிடமில்லை. துப்பாக்கி இல்லாத யாருடனும் நான் எப்போதும் பேசத் தயாராக உள்ளேன். நான் ஈழத்தை நேசிப்பவன். ஈழத்தை நேசிக்கும் மற்றொருவருக்கு, அல்லது பலருக்கு எனது கருத்தின்மீது நடைமுறையின்மீது உடன்பாடில்லாமல் இருக்கலாம், அதை நாங்கள் பேசித் தீர்க்கலாம். இடையில் துப்பாக்கிக்கு என்ன வேலை?” என்று தோழர். புஸ்பராஜா ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் நூலின் முன்னுரையில் எழுதினார்.

தோழர். சபாலிங்கத்தின் கொலையைத் தொடர்ந்து அச்சத்தில் மௌனித்துக் கிடந்த புலம்பெயர் இலக்கியச் சூழலையும், மாற்றுக் கருத்தாளர்களையும் மீட்டெடுத்து மாற்றுக் கருத்தாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மீண்டும் களங்களைத் திறந்து வைத்தவர்களில் முதன்மையானவர் சி.புஸ்பராஜா. தோழரின் அபரிதமான துணிச்சலும், ஆளுமையும், அராஜகத்துக்கு எதிரான அவரது விட்டுக்கொடுக்காத போராட்டமும், மக்கள் கலை – இலக்கியத்தின் மீதான அவரது நேசிப்பும் இதனைச் சாதித்துக் காட்டின.

இன்று தோழரின் ‘இன்மை’யை நாங்கள் தெளிவாகவே உணர்கிறோம். அவரின் இடத்தை நிரப்புவதற்கான ஒரு தோழமையும் ஆளுமையும் இன்னும் எம்மிடையே தோன்றவில்லை. இந்த இழப்பை ஓரளவுக்கேனும் ஈடுசெய்யும் முயற்சியில் அவரது சகோதரிகள் புஸ்பராணி அக்காவும், நவரத்தினராணியும் தொடர்ந்து புகலிட இலக்கியப் பரப்பில் அராஜகத்திற்கும் சாதியத்திற்கும் எதிராக உறுதியான குரல்களை ஒலித்துக்கொண்டிருப்பதும், தோழரின் எழுத்துகளைத் தொகுத்துத் தோழரின் துணையியார் மீரா புஸ்பராஜா வெளியிட்டிருப்பதும் நாங்கள் தோற்றுப்போக மாட்டோம் என்ற நம்பிக்கையை இன்னும் எங்களுக்கு அளித்துக்கொண்டிருக்கின்றன.

புஸ்பராஜா அண்ணனைச் ‘சத்தியக் கடதாசி’ தலைசாய்த்து அஞ்சலிக்கிறது!

தோழர். சி. புஸ்பராஜாவின் இரண்டாவது நினைவு பகிர்தலும் அவரின் படைப்புகளைத் தாங்கி வரும் ‘சி. புஸ்பராஜா படைப்புகள்’ நூலின் அறிமுகமும் 23 மார்ச் 2008 ஞாயிறு பிற்பகல் 3 மணிதொடக்கம் 8 மணிவரை சார்ஸலில் நடைபெறும்.

முகவரி :

Salle de Rencontre
Rue Jean François
95140 Garge Les Gonesse

தொடருந்து நிலையம்: Garges Sarcelles (RER D)
பேருந்து இலக்கம்: 133, தரிப்பு: Hotel de ville

தொடர்புகளுக்கு: 0664835300 – 0620211641 – 0612803551- 0661803690

5 thoughts on “இரண்டாம் வருட நினைவஞ்சலி

  1. பிரான்ஸ் இலக்கியச்சூழலுக்கு புஸ்பா அவா;களின் வரவு எதிர்பாரத ஒன்றுதான். அரசியலாளராக இருந்த புஸ்பா சபாலிங்கத்தின் கொலையுடன் மெளனித்துக்கிடந்த இலக்கியநண்பா;களுக்கு புத்துணர்வு ஊட்டினார் என்பது உண்மையே. அவரது மறைவுடன் மீண்டும் பிரான்ஸ் மாற்றுக்கருத்தாளா;கள் மறைந்துகொண்டனர்.
    நண்பன் புஸ்பாவுக்கான அஞ்சலி இலக்கியத்துக்கான அஞசலியாகிவிடாது மீணடும் புத்தெழுச்சியைக் கொடுப்பதாக அமையவேண்டும். அதுவே புஸ்பாவுக்கான எமது அஞ்சலி.

  2. ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் எனும் திரு புஸ்பராஐஆ அவர்களின் நூல் தமிழகத்தைச் சேர்ந்த ஈழ ஆதரவாளர்களின் உணர்வில் பெரும் அதிர்ச்சியை ஊட்டவல்லது. புலிகளின் பாமரத்தனமான ரசிகர்களாயிருந்த பலரிடம் மேற்படி நூலை நான் படிக்கத்தந்திருக்கிறேன். துரோகி என்ற சொல் எவ்வாறு வன்ம்ம் மிக்க சொல்லாக ஈழச்சூழலில் உருவாகியிருக்கிறது? என நூல் நமக்கு அதிர அதிரப் பாடம் கற்றுக்கொடுக்கிறது. தமிழகச் சூழலில் சாதியொழிப்பு பெண்ணிய விடுதலை போன்றவை குறித்தெல்லாம் பேசாது தேசியம் பேசுவது எந்த அளவுக்கு மக்கள் விரோதிகளாக நம்மைச்சீரழிக்கும் என உணர்வதற்கு பக்கத்துவீட்டு அனுபவமாக ஈழம் அமைகிறது. அதை உடைத்துப்போட்டு எழுதிய புஸபராசாவுக்கு நாங்கள் நன்றியுடையவர்களாக இருப்போம். ஈழ விடிவுக்கு தன்னால் ஆகச்சிறந்த ஆவணத்தை விட்டுச்சென்றுள்ளார். அவருக்கு தமிழகத்திலிருந்து என் அஞ்சலி.

  3. சபாலிங்கத்தின் மரணமண்டபத்தில் தான் அவரை முதல் முறையாக
    சந்திக்க நேர்ந்தது பின்பு தான் தொpந்தது அவர்தான் புஸ்பராh என்பது.மரணவீட்டிக்குகூட வர முடியவில்லை.அவர் வாழ்வும் மரணமும் எங்களுக்கு ஒரு பாடம்.அவர் கனவு நனவாகும் தூரம்
    வெகு தூரத்தில் இல்லை.அப்போது அவர் மணவியும் பிள்ளைகளும்
    கெளரவிக்கப்படுவார்கள் உரியஇடத்தில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்

    இந்த இரண்டான்டு நினைவஞ்சலியில் அமைதியுடன் நினைவுகூருகிறேன். ஒழுங்கு படுத்திய தோழர்களும் என் நன்றிகள்.

  4. புஸ்பராஜா அவர்கள் எழுதிய ஈழப்போரில் என் சாட்சியம் எனும் நூலை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன் அதை எங்கு வாங்கலாம் என்பதை யாராவது கொள்வீர்களா நன்றி

  5. அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட புத்தகம். சென்னையில் இலக்கியப் புத்தகக் கடைகளில் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *