நெடுங்குருதி: உரையாடல் தொடர்கிறது!

கட்டுரைகள்

-சுகன்

27. 07. 2008ல் பிரான்சில், 1983 யூலைப் படுகொலைகளை நினைவு கூர்ந்த “நெடுங்குருதி” நிகழ்வு மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகியது. ராகவனின் நெறிப்படுத்தலில் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாகவும், அரசியற் பிரக்ஞையுடனும், பொறுப்புணர்வோடும் நடைபெற்றது.

நெடுங்குருதி

வெலிகடையிலும் யூலை வன்செயல்களில் தொடரும் யுத்தத்திலும் மரணித்தவர்களுக்கான அஞ்சலியுடன் தொடங்கிய நிகழ்வில் ராகவன் இந்த நிகழ்வின் முக்கியத்துவம், இரட்டை அதிகார சக்திகளான அரசு- புலிகள் இடையில் சிக்குண்டு அல்லல்படும் தமிழ் மக்களின் கையறுநிலை, நெடுங்குருதிஈழப் போராட்டம் கடந்து வந்த பாதை இவை குறித்துக் கச்சிதமாகத் தனது ஆரம்ப உரையை நிகழ்த்தினார் என்பதைவிட ஈழப்போராட்டத்தில் வாழும் சாட்சியமாயிருக்கும் ஒரு போராளி என்ற நிலையில் வார்த்தைப் பாசாங்கற்று உணர்வும் பேச்சும் ஒன்றித்துப் பேசி, ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் வெலிகடைப் படுகொலைகளை எதிர்கொண்டு தப்பியவர்களில் ஒருவருமான அழகிரி அந்தோனிப்பிள்ளையைப் பேச அழைத்தார். தோழர் அழகிரி போன்றவர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பும் சிந்தனைப்பாங்கும் இயக்கமும் ராகவனின் அவரைப்பற்றிய தொடக்க அறிமுகமாகயிருந்தன.

தோழர் சபாலிங்கத்தின் படுகொலையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கண்டனக்கூட்டத்தில் அழகிரி நிகழ்த்திய உரைக்குப் பின்னாக இந்நிகழ்விலேயே அவரது உரை பெரும் கனதியாகவும் கேட்டோர் உரையில் ஒன்றிக்கும் வண்ணமுமாக அமைந்தது.

நெடுங்குருதி

இலங்கையின் பல பாகங்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியற் கைதிகளை வெலிகடையை நோக்கிக் கட்டம் கட்டமாக அனுப்பி அவர்களைக் கூண்டோடு கொன்றழிக்கத் திட்டமிட்ட இலங்கை அரசின் பயங்கரவாதத்தைத் தோலுரித்த அழகிரி சிறைப் படுகொலைகளை விவரித்தபோது கேட்டோர் கனத்த மவுனத்தை வழங்கி அவரது உணர்வுகளைக் பகிர்ந்துகொண்டனர்.
நெடுங்குருதி

அடுத்ததாக உரையாற்றிய நாவலாசிரியரும், பெண்நிலையாளருமான ராஜேஸ் பாலா ஈழத்தில் யுத்தத்தால் சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கும் தமிழ் – முஸ்லிம் மக்களைத் தான் சந்தித்து வந்த கதைகளையும் யுத்தத்தின் வடுக்களையும் விவரித்துப் பேசினார். புகலிடத்திலிருக்கும் யுத்த விசுவாசிகளைக் கடுமையாகக் கண்டித்தப் பேசிய அவர் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகப் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தமது மொத்த சக்தியையும் செலவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நெடுங்குருதிதனது பிரசன்னத்தால் புகலிட அரசியல் சூழலிற்குள் முஸ்லிம் அரசியல் குறித்து ஆழமான பிரக்ஞையை ஏற்படுத்திய எம். எஸ். எம் பஷீர் இனங்களுக்கிடையேயான அய்க்கியத்தில் கிழக்கிலங்கையின் பாத்திரம் குறித்தும் முஸ்லிம் மக்களின் சமகால அரசியல் குறித்தம் உரை நிகழ்தினார். தேசத்தில் ஓடும் நெடுங்குருதி தொடர்கதையாகமல் அதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி அவர் தனது உரையை முடித்தார்.

நெடுங்குருதிஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணியின் அமைப்பாளர் எம்.ஆர். ஸ்டாலின் அடுத்ததாக உரை நிகழ்த்தினார். இலங்கை முஸ்லிம் மக்கள் மற்றும் தமிழ்த் தேசியம் குறித்த ஆய்வுகளில் ஆழமான அவதானங்களை கொண்டவர் என்ற முறையிலும் கிழக்கிலங்கை அரசியலில் நேரடிக் களச் செயற்பாட்டாளர் என்ற முறையிலும் அவரது உரை அரங்கில் பெருத்த ஆர்வத்துடன் எதிர்கொள்ளப்பட்டது.

மட்டுமல்லாமல் நாடு முழவதும் சமாதானத்திற்கான தேவை, பாஸிச சக்திகளை ஒடுக்குவதன் முக்கியம், கிழக்கிலங்கையில் இயங்கும் அரசியல் மற்றும் மக்கள் அமைப்புகளின் அய்க்கியம், இனங்களுக்கிடையிலான உடனடி அய்க்கியத்தின் தேவைப்பாடு இவைகளை விபரித்த ஸ்டாலின் தமிழ்த் தேசிய அரசிலில் மேட்டுக்குடிகளின் இயங்குதளத்தின் தொடர்ச்சி, தமிழ்த் தேசிய அரசியலில் இராமநாதன், அருணாசலம் வகையறாக்ளின் பாத்திரம் தலித்துகள், முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ்த் தேசியத்தின் நிலைப்பாடு இவை குறித்தும் விரிவாகப் பேசினார்.

“வெலிகடைப் படுகொலைகளை நினைவு கூரும் நாம் வெருகல் படுகொலைகளையும் பேசியே ஆகவேண்டும்” எனவும் வலியுறுத்தினார். இனி இலங்கை அரசியலில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற நிலைப்பாடே புதிய ஜனநாயத்திற்கான பாதையாக அமையுமென்றார் ஸ்டாலின்.

நெடுங்குருதிஅடுத்ததாக SLDFஅமைப்பின் இயக்குனர்களில் முக்கியமானவரும், தனது வாசிப்பு, செயற்பாடுகள் இவற்றால் தமிழ்ச் சூழலில் பெண்ணிய அரசியற் கோட்பாடுகளில் சிந்தனைத் தூண்டல்களையும் விவாதங்களையும் நீண்டகாலமாக நிகழ்துபவரும் வெலிகடைப் படுகொலைகளிலிருந்து தப்பியவர்களில் ஒருவருமான நிர்மலா ராஜசிங்கம் உரை நிகழ்த்தினார்.

சிறையில் தனது பட்டனுபவங்கள், அங்கு தொழிற்பட்ட சிங்கள மேலாதிக்க இனவாத அணுகுமுறைகள், கைதிகள் – காவலர்களுக்கு இடையேயான உறவுகள், ஒரு சிங்கள பாலியல் தொழிலாழி தன்மீது பொழிந்த கருணை, ஆதரவு, என்பவற்றைத் தொட்டு அவர் பேசியபோது நிர்மலாவின் உடல்மொழியும் அரங்க ஆளுமையும் கேட்போரைக் கட்டிப்போட்டிருந்தது.

மகிந்த ராஜபக்ஷவின் அரசையும் விடுதலைப் புலிகளையும் கடுமையாகச் சாடிப் பேசிய அவர் தேசியவாத அரசியலை தமிழர்களும் சிங்களவர்களும் விட்டுத் தள்ளுவதே உருப்படுவதற்கான வழி என்றார்.

நெடுங்குருதிமதிய உணவு இடைவேளையைத் தொடர்ந்து சுவிஸிலிருந்து கலந்துகொண்ட திலக் தனது உரையை கட்டுரை வடிவத்தில் வாசித்தார். சகோதரப் படுகொலைகளில் தொடங்கிய போராட்டத்தின் அபத்தம் குறித்தும் சனநாயக அரசியலுக்கான வெளிகளை நோக்கி நாம் நகர வேண்டியதின் அவசியத்தையும் மையப்படுத்தி அவரின் கட்டுரை அமைந்திருந்தது.

அடுத்தாக “21ம் நூற்றாண்டில் தேசிய இனப் போராட்ங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்திய பேராசிரியர் அ.மார்க்ஸ், ஈழப் போரட்டத்தின் தொடக்க காலங்களில் ஈழப்போராட்டத்தை ஆதரித்து நின்றதற்காகத் தான் கம்யூனிஸ்ட கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது, அக்காலத்தில் தமிழகச் சூழலில் ஏற்பட்டிருந்த ஈழ ஆதரவுப் போக்கு ஆகியவற்றைக் குறிப்பிட்டுத் தனது உரையைத் தொடக்கினார். ஈழப் பிரச்சினையில் இன்று ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, சிக்கல் ஆகியவற்றிற்கான காரணங்களை உலகளாவிய பின்னணியிலிருந்து ஆராய வேண்டும் என்றார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் “போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்”, “போரும் சமாதானமும்”, “சமாதானத்ததுக்கான போர்” என்றெல்லாம் முழங்கி ஜே.ஆர்.ஜெயவர்தன, பிரேமதாசா, சந்திரிகா பண்டாரநாயக்க, போன்றோர் மேற்கொண்ட அணுகல் முறைக்கும் இன்றைய ராஜபக்ஷவின் அணுகல் முறைக்குமுள்ள வேறுபாட்டையும் மாறுதல்களையும் உலகச் சூழலிலிருந்து காண வேண்டும் என்றார்.

நெடுங்குருதி‘செப்டம்பர் 11’, ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ ஆகியவற்றுக்குப் பிந்திய காலம் இது. இன்றைய இலங்கை அரசு ஈழப்பிரச்சினையை ஒரு இனப் பிரச்சினையாகப் பாரக்கவில்லை. மாறாக இதையொரு ‘பிரிவினைவாத’ மற்றும் ‘பயங்கரவாதப்’ பிரச்சினையாகப் பார்க்கிறது. பயங்கரவாதம் என்கிற சொல்லாடல் மூலம் அரசு எடுக்க விரும்பும் போர்கள் யாவும் அரசியல் நீக்கம் செய்யப்படுகின்றன. இந்தத் தர்க்கத்தின் அடுத்த கட்டம் அரசியல் தீர்வு இனிச் சாத்தியமல்லை, போரும் வெற்றியும் மட்டுமே இறுதி நோக்கம் என்பதாக இன்றைய அணுகல் முறை உள்ளது. இதற்கு உலக ஆதரவும் உள்ளது.

அடுத்த நிலையில் இன்று வடக்குக் கிழக்கு பிரிவினை என்பது முழுமையாக்கப்பட்டு விட்டது. வடக்கு – கிழக்கு பிரிவினை இன்று அரச மட்டத்தில் மட்டுமின்றி மக்களளவிலும் உறுதியாகிவிட்டது. சோவியத்திற்குப் பிந்திய உலகில் பலதரப்பட்ட இதுகாறும் அடையாளம் மறுக்கப்பட்ட பலரும் தங்கள் அடையாளத்தை உறுதி செய்யும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத எந்த இயக்கமும் இனி முன்னேற வாய்ப்பில்லை. தேசியம் அல்லது வர்க்கப் புரட்சி என்கிற பெருங்கதையாடல்களை முன்வைத்து தனித்துவமான அடையாளங்களை நிராகரிக்கும் எந்த இயக்கமும் இனி முன்னேற முடியாது. இந்த வகையில் நமது போராட்ட இயக்கங்கள் நேபாள மாவோயிஸ்டுகளிடமிருந்து பாடம் கற்க வேண்டியிருக்கிறது என்று கூறிய அ.மார்க்ஸ் நேபாள மாவோயிஸ்டுகளின் போராட்ட நெறிகள் குறித்தும் அவற்றின் வெற்றிகள் குறித்தும் விவரித்தார்.

நெடுங்குருதி

தனது பேச்சின் இறுதியில் அ.மார்க்ஸ் “தமிழ் பேசும் மக்கள் என்கிற பெயரில் இதுகாறும் விளிக்கப்பட்ட மக்கள் திரளினர் இன்று முஸ்லிம்கள், தலித்துகள் கிழக்கு மக்கள் என்றெல்லாம் தனித்தனியாக தம் தனித்துவத்தை வலியுறுத்துவதைக் காண மறுப்பதும் இவற்றுக்கு முகங் கொடுக்க மறுப்பதும் நீதியாகாது. சமூகம் சமாதானத்தையும் அமைதியையும் நோக்கித் திரும்ப வழி வகுக்காது” எனச் சொல்லித் தனது உரையை நிறைவு செய்தார்.
தொடர்ந்து ‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணியை’ச் சேர்ந்த தேவதாசனின் தலைமையில் “தமிழ்த் தேசியம்: எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற தலைப்பில் நீண்டதொரு கலந்துரையாடல் நிகழ்ந்தது. மாலை 06 மணிக்கு அன்றைய நெடுங்குருதி நிகழ்வு முற்றுப்பெற்றது.

நெடுங்குருதி

நெடுங்குருதி: உரையாடல் தொடர்கிறது!

18 thoughts on “நெடுங்குருதி: உரையாடல் தொடர்கிறது!

  1. குறிப்பாக மாலை நாலுமணிக்கு அருகில் உள்ள மண்டபத்தில் புலிகளின் கறுப்பு ஜூலை நிகழ்வில் கலந்துகொள்ள தனது குடும்பத்தினருடன் வந்திருந்த தமிழ் அன்பர் அரங்குமாறி நமது அரங்கிற்கு வந்திருந்தார். அவரையும் அவர்தம் குடும்பத்தினரையும்
    மிகவும் மரியாதையுடனும் பொறுப்போடும் புலிகளின் அரங்கிற்கு உடனேயே அனுப்பிவைத்தோம்.

  2. சுகன் அவர்களே!
    நீங்கள் அடித்த குத்துக்கரணங்களும் கோமாளித்தனமான கூத்துகளும்
    தெரியாதல்ல.
    வழி தவறி வந்தவர்களை வழிஅனுப்பிவைப்பதுதான் எமது தர்மம்
    இனிவரும் வரும் காலங்கலளிலும் இந்த தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டுகிறேன்.
    பேரினவாதம் பயங்கரவாதம் என்ற தீமைஆற்றுக்களை கடக்க வேண்டிய கடமைபாடுகள் நமக்கு உள்ளன.
    உங்கள் இலட்சியமும் வேட்கையும் ஈடேறியே தீரும்
    அதுவரை உங்கள் வாலை சுறுட்டிக்கொண்டு அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.

  3. //…குறிப்பாக மாலை நாலுமணிக்கு அருகில் உள்ள மண்டபத்தில் ….//

    ம்…நடந்த கூட்டத்தில குறிப்பாய்ச் சொல்ல இது ஒண்டு தான் மிச்சம். அவ்வளவு பம்மாத்து எண்டு தேசத்தில போட்டிருக்கிறாங்கள்!!!

  4. குகன் மட்டும் உள்ளுக்கு போகாமல் இருந்திருந்திருந்தால்…
    கூட்டத்தில் கலந்துகொண்டவா;களின் தொகை இரட்டிப்பாக இருந்திருந்திருக்கும்.
    சபாலிங்கத்தின் படுகொலையை தொடர்ந்து வெருண்டுபோயிருந்த பிரான்சு மாற்றுக்கருத்தாளர்களுக்கு தைரியத்தைக்கொடுத்தது புஸ்பராஜாவின் இலக்கியவருகைதான். இல்லாவிடின் எல்லாம் எப்போதோ அடங்கியிருக்கும். மாற்றக்கருத்தாளா;களுக்கும் ஒரு எல்லைக்குட்பட்ட தாதாத்தனம் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. புஸ்பராஜாவின் இடைவெளியைத்தொடர்ந்து அதை நிரப்பியவர் திரு. குகன் தான். ஈழப்போராட்ட முன்னோடி தேசபிதா என்றெல்லாம் வருணிக்கப்படும் ரட்ணா மற்றம் சங்கர் ராஜி இவா;களெல்லாம் குகனிலாவிட்டால் அணாதையாகவே மரணித்திருப்பர். எண்பதுகளில் ஈரோசில் இயங்கி பின்னர் குலைந்து தெருச்சணடைகளில் அலைக்களிந்து உள்போய் வெளிவ்ந்து தானும் தன்பாடுபாடுஆமாய் இருந்த குகன் சங்கா; ராஜியின் மரணத்தின் பின் தோழமையுடனும் விசுவாசத்தடனும் அவருக்கான அஞ்சலியுடன் வெளியில் வந்தார். இவரது பழைய வன்முறையை கவனங்கொண்ட மாற்றுக்கருத்தாளர் தமது அரசியலாளா;களின் பாதுகாப்புகளுக்கு தாரளமாக குகனை பயன்படுத்தினர். குகன் வன்முறை கைவிடமுடியாதபடி நெருக்டிக்கடிக்குள் தள்ளப்பட்டார்.
    அவர் நடத்திய கூட்டங்களில் அவருக்குப்பின்னால் அணிதிரண்டவர்கள் அவரது நட்பைவேண்டி நின்றவர்கள் இன்று குகனை வன்முயைளான் தாதா என்று பட்டம் சுமத்திவிட்டு தப்பித்துநிற்றல் எதுவிதத்திலும் முறையல்ல. குகனின் வன்முறை ஏற்புடையதல்ல. ஆனால் அதற்கு நாமும் பொறுப்பு.
    குற்றமற்றவர் முதற்கல்லை எடுத்து வீசுங்கள் பார்க்கலாம்..

  5. பேரன்புடன் ரகு!
    நான் குறிப்பால் உணர்த்தவந்த விடயம் என்னவெனில் , பிரான்ஸ் முழுவதும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் நெடுங்குருதி நிகழ்ந்த கார்ஜ்_சார்சல் நகரத்திற்கென்று வித்தியாசமான சனநாயகப்பாரம்பரியம் உண்டு. சபாலிங்கம், புஸ்பராஜா, உமாகாந்தன் ,யோகராஜா ,முத்துக்குமார் ,,,,,,போன்ற மாற்றுக்கருத்தாளர்கள் ,சனநாயகத்திற்கான முன்மாதிரிகள் வாழ்ந்த, வாழும் ஓரளவு விடுவிக்கப்பட்ட பிரதேசம் அது. சுதந்திரமாக கருத்துப்பரிமாறலாம் என மாற்றுக்கருத்தாளர்கள் அச்சமின்றி வரும் இடமது. எவ்வளவோ இடங்கள் இருக்க நமது இடத்தினருகில் தானா புலிகளும் ஜூலைப்படுகொலையை நினைவு கூரவேண்டும். முன் கூட்டியே கூட்டம் வன்முறையில் நடக்குமென்ற அச்ச உணர்வு எல்லாமட்டங்களிலும் பரப்பப்பட்டிருந்தது. வழமைபோலவே நாம் உப்பு விக்கப்போனா மழை வரும் மா விக்கப்போனா காத்தடிக்கும். தேசம் . மாவீரம் போகுதெண்டு விதைகொண்டோட ….என்ற கவிதை உங்களுக்கு இவ்விடத்தில் யாபகம் வரவேண்டும். இன்னும் குறிப்பாக சபாலிங்கம் படுகொலை நினைவுக்கூட்டம் நிகழ்ந்த போதிருந்த அதே அச்ச உணர்வு அன்றும் இருந்தது.

  6. ஒரே ஒரு கேள்வியில்
    _____________________
    பேரா. அ.மர்க்ஸ் அவர்களிடம்..
    தமிழ் நாட்டிற்குப் போனவுடன் உடனே என்ன வேலயில் ஈடுபடுவீர்கள்?

    வேலைகளுக்கா பன்சம், மாத இதழ்களிற்குக் கட்டுரைகள் எழுதவேண்டும் . அண்ணா நூற்றாண்டையொட்டி 8 ஆண்டுகள் முடிந்த ஆயுட் கைதிகளைவிடுதலை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.ஆனால் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு அது பொருந்தாது என்றும் ஒரு ஆணை இடப்பட்டுள்ளது .இதனால் கடந்த பல ஆண்டுகளாக சிறையிலிருக்கும் 72 முஸ்லிம் கைதிகள் மற்றும் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்ட நால்வர் விடுதலை மறுக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து சென்ற மாதத்தில் ஒரு மாநாடொன்றை நடாத்தினோம். இந்தப் பிரச்சனையை தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டுசென்றோம் .
    உடனடியாக தமிழக பொலிஸ் விழித்துக்கொண்டது.ஆகஸ்ட் 15ல்
    நாடு முழுவதும் வெடிகுண்டு வைக்கப்போவதாகச் சொல்லி முஸ்லிம்கள் பலரை அரசு கைது செய்துள்ளது.

  7. உரிய ஆதாரங்கள் இருந்து கைதுசெய்யப்படுவது பிரச்சனையில்லை.
    ஆனால் இந்தச் சதித்திட்டம் புழல் சிறையிலிருந்து உருவாக்கப்பட்டதென்று போலிஸ் கூறியுள்ளது .
    இது சிறையிலிருக்கும் முஸ்லிம் கைதிகளை விடுதலைசெய்யவேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிரான திட்டமிடப்பட்ட ஒரு பொய்ப்பிரச்சாரம் .இதற்கே வாய்ப்பு அதிகம்.
    இது குறித்து ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் கலந்து ஆலோசிக்கவேண்டும்.

  8. சுகன், தற்போது சில நண்பர்களுடன் நேர்ந்த உரையாடலில் எழுப்பப்பட்ட ஐயம் – 1991 ல் காத்தான்குடி முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம், கொக்கட்டிச் சோலை, பிந்துநுவேவ, வெறுகல், கந்தன் கருணை என பலகோர நிகழ்வுளுக்கிடையே வெலிக்கடாவை நீங்கள் முக்கியமாகக் கருதி நினைவுகூறக் காரணம் என்ன? விளக்கம் தாருங்கள் please.

  9. ஆம் மோனிகா
    இப்படி ஆயிரம் கோரநிகழ்வுகள் இலங்கையில் நடந்து கொண்டுதானிருக்கு. அப்படியிருக்கயில் சிலா;மட்டும் தாம் பாதிப்புற்ற நிகழ்வுகளை நினைவுகூருவர். எம்மால் தனித்து ஏதும் செய்யமுடியாவிட்டால் செய்பவருக்கு ஒத்துழைப்பு வழங்கதலில் தப்பேதும் இல்லையே!
    நெடுங்குருதி தோழர். குகனால் ஒழுங்கு செய்யப்படட்ட நிகழ்வே.
    அதற்கு சில்ர் சுட்டியதுபோல வெலிக்கடையில் இருந்து தப்பிய தோழர் அழகிரிக்கு மகுடம் சூட்டவாக இருக்கலாம் அல்லது ஈரோசுக்கு தளம் உருவாக்கவாக இருக்கலாம். எதுவாயினும் இருக்கட்டும். இது போன்ற கோரநிகழ்வுகளுக்கு தனித்தோ ஒருமித்தோ அதரவுவழங்குவது முறை. ஆனால் தோழர் குகன் துப்பாக்கி தூக்காதவரைக்கும்.

  10. மோனிகாவின் கேள்விக்கானது இப்பதில்.
    ______________________________________
    பேரன்பு மோனிகா ! எனது பதிலைவிட உங்கள் கேள்வி மிகவும் உயிர்ப்பானது.படுகொலைகளில் முக்கியமானதுஇ முக்கியத்துவங்குறைந்தது என்று எதுவுமில்லை .
    வெலிக்கடைப்படுகொலையிலும் விட நீங்கள் குறிப்பிடுகின்ற படுகொலைகள் எவ்விதத்திலும் அரசியல் முக்கியத்துவம் குறைந்தவையல்ல. வெருகல் ஈறான படுகொலைகளின் தொடக்கமான வெலிக்கடைப்படுகொலை யிலிருந்து ஒருஅரசியல் அரங்க்கிற்கு வருகிறது.அதற்குள் 25வருடங்கள் இஅவரசியல் குறித்து மீளாய்வு தேவைப்படுகிறது.ஒவ்வொரு நாளுமே படுகொலைகளின் நாள்தான்.வெலிக்கடப்படுகொலையை நினைவுகூர்வோர் ஏனைய படுகொலைகளையும் நினைவு கூர்ந்தாற்தான் யோக்கியமானது என்ற தொனியில் எழுப்பப்படும் கேள்விகள் ஒருவகயில் அபத்தமானது. துரையப்பா படுகொலை. கார்த்திகேசு சின்னர் படுகொலை இப்படியாக அரசியற்படுகொலைகளையும் நினைவுகூரல்களையும் அகலித்துக்கொண்டேபோகலாம். மலையக மக்களின் பிரசாஉரிமை பறிக்கப்பட்ட நாடற்றவர் நாள் இ அக்டோபர் எழுச்சியின் நாற்பதாண்டுகள்.இப்படியாக அரசியல் அகலம் கொள்ளும். ஆயினும் தமிழ்த்தேசியவாதத்திற்கான ஒரு நியாயப்பாட்டை வழங்கியதென்ற வகையில் வெலிக்கடைப்படுகொலை எல்லா முக்கியத்துவங்களையும் போலவே அரசியல் முக்கியத்துவமானது.

    இலக்கிய ரீதியாகப் பார்த்தால் மு.தளையசிங்கம் அவர்களின் இரத்தம் சிறுகதை இதைஇன்னும் துலக்கமாக்கும்.ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளது. இந்திய உதாரணமாகக் காட்டுவதெனின் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு ஓரளவு ஒப்பிடலாம். ஒரு கொலையை இன்னொரு கொலையுடன் ஒப்பிடுவதின் அபத்தத்தை தவிர்த்துவிட்டுப்பார்த்தால்.

  11. அதென்ன பாலியல் தொழிலாழி? விடுதலய் போராளி,கரும் புலி,மாற்றுக்கருத்தாளி வருசய்யில் ஒன்றோ!

    ஒருவன்

  12. அரசு ஆணையினால் முஸ்லீம் கைதிகள் மட்டும்தான் பாதிக்கப்படுவார்களா.அது அனைவருக்கும் பொதுவான ஆணை.
    அப்படியிருக்க அதிலிருந்து ஒரு மதத்தினைச் சேர்ந்தவர்களுக்கு
    எப்படி விலக்கு அளிக்க இயலும்.ஆணை சட்டரீதியாக குறைபாடு
    உள்ளதென்றால் நீதிமன்றத்தையல்லவா நாட வேண்டும்.
    ஆர்.எஸ்.எஸ் அலுவலக தாக்குதல் உட்பட பல வழக்குகளில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் தண்டனை பெற்று சிறையில் இருக்கின்றனர். இதில் தமுமுக
    வின் பொறுப்பாளர்களில் ஒருவரும் அடக்கம்.ஆகவேதான் அ.மார்க்ஸ் இதில் அத்தனை ஈடுபாடு காட்டுகிறார்.

  13. சுகன், உங்கள் பதிலுக்கும் விளக்கத்திற்கும் எனது நன்றி.

  14. மண்டபம் நிறைந்த பார்வையாளர்களையும் மேடை நிறைந்த அறிவாளிகளையும் பார்த்து வியக்கிறேன்…

  15. Talking about past never going to change anything……….
    Talking about future never going to give you anything……
    Anybody please talk about the present………………….

  16. விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் அவலமான பக்கங்களில் ஒன்று நிகழ்ந்த வரலாறுகளை பொய்யாகவும் புனைவுகளாகவும் கட்டமைத்து பதிவு செய்வது எனும் கொடுமை. சோபாசக்தியின் சத்தியக் கடதாசியில் நெடுங்குருதி நிகழ்ச்சி பற்றி நமது சுகன் எழுதியிருப்பதை போய்ப் பாருங்கள் – தோழர் அசோக்

  17. சபாஷ் தோழர் அசோக். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்ளையும் சிண்டுமுடியும் வேலைகளையும் மட்டுமே நீங்கள் செய்துதிரிவதாக பரவலான ஒரு கதை. உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம். நீங்கள் நெடுங்குருதி நிகழ்வுக்கும் வரவில்லை. சுகன் நெடுங்குருதி பொய்யாக புனைந்துள்ளார் என்று பல முட்டாள்களை நம்பவும் வைத்துள்ளீர்கள். இப்போ சுகன் என்ன என்ன விடயங்களை பொய்யாக புனைந்துள்ளார் என்பதை எழுதி உங்கள் நேர்மையை நீங்கள் வெளிப்படுத்தவேண்டும். சத்தியக்கடதாசியில் வேண்டாம். இனியொருவிலாவது எழுதுங்கள்.

  18. தோழமையோடு தவராஜா அவர்கட் கு!
    தோழர் .அசோக் அவர்களின் நெடுங்குருதி நிகழ்வு பற்றிய பதிவை எனது கவனத்திற்குக் கொண்டுவந்ததற்கும் நெடுங்குருதியில் நடந்ததென்ன என்பதை அறிவதில் உங்களுடைய ஆர்வத்திற்கும் முதலில் தலை வணங்குகிறேன்.
    நீங்கள் அந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தால் எனது உரையாடல் தொடர்கிறது பதிவிற்கும் தூ இணையத்தில் வந்த பதிவிற்கும் உங்கள் அவதானத்திற்கும் மாற்று அபிப்பிராயம் கொள்வதற்கு வாய்ப்பேயில்லை.
    கெள்விச்செவியன் ஊரைக்கெடுத்த வழக்கு சலித்துப்போனதுதானென்றாலும் அதற்கு எப்போதும் முக்கியத்துவமுண்டு.நாங்கள் நமது இலக்கியப் பிரதிகளில் நிறுவப்பட்ட வரலாறு , உண்மைகள் இவற்றை கவிழ்த்துப்போடுவதற்கும் கேள்விக்குட்படுதுவதன் பாகமாக புனைவுகளையும் புனனைவுகளிற்கப்பாலும் இடையீடுகளை நிகழ்த்துவதுண்டு. நெடுங்குருதி நிகழ்வு நிகழ்ந்து 20 நாட் கள் தானாகிறது.
    அங்கு பேசப்பட்டதென்ன என்பதை அமுக்குவதற்கு நமக்கு எந்த முகாந்திரமுமில்லை.
    களப்பிரர் காலம் இருண்டகாலமா பொற்காலமா என்று விவாதத்தில் ஈடுபடும் பலநூற்றாண்டு முந்திய விடயமுமல்ல.
    25 வருட காலமுதல் நிகழ்ந்த துயரத்தைப்பேசுவதற்கும் நினைப்பதற்கும் ஆன ஒருநாள்.
    அந்நிகழ்வில் நீங்கள் கலந்துகொண்டிருந்தால் உங்கள் பார்வையில் அதைப்பதிவது உங்கள் சுதர்மம் சார்ந்தது.சூழ்நிலை சார்ந்தது.
    நீங்கள் கலந்துகொண்டீர்களோ தெரியாது ஆனால் தோழர் .அசோக் கலந்துகொள்ளவில்லை.
    மூன்றாம் கையால் கேள்விப்பட்டோ ஜேர்னலிஸ்டுக்களை அனுப்பியோ உண்மையை நிலைநாட்டுவது நல்லதுதான்.
    ஆனால் கெடுவாய்ப்பாக எவரும் ஜேர்ணலிஸ்டுகளாக அங்கு இருக்கவில்லை.
    தோழர் அசோக் என்று அன்பாக அழைக்கப்படும் அப்துல் அலீம் தான் பொய்யையும் புனைசுறுட்டையும் விலத்தி உண்மையை எழுதவேண்டும்.
    விடுதலைப்போராட்ட வரலாற்றீல் அவர் பலதடவை உண்மைகளை நிறூவியிருக்கிறார்.
    தோழர் .புஸ்பராஜாவின் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் புத்தகத்தை கி.பி.அரவிந்தன் , மாணீ.நாகேஸ், தராகி சிவராம் ஆகிய பெரும் புலிகளை வைத்து லா போர்சில் விமர்சனக்கூட்டம் வைத்து உண்மையை நிலைநாட்டியவர்.
    தனது சினேகிதனுடன் நிகழ்ந்த வாய்த்தர்க்கத்தில் தள்ளுப்பட்டதால்
    துவக்குடனும் வாகனத்துடனும் தன்னைக்கடத்தவந்ததாக சுபாஸ், வாசுதேவன், நாகேஸ் போன்ற புலிகளை அழைத்து கண்டனப்பொதுக்கூட்டம் வைத்து உண்மையை நிலைநாட்டியவர்.
    இப்போதும் தமிழ்நதி, தமிழச்சி போன்ற புலிஆதரவாளர்களீன் பலத்தில் உண்மையை நிலைநாட்ட வேண்டியதுதானே.
    தோழர் தவராஜா!
    உங்களுக்கு பிரயோசனமாக நெடுங்குருதிநிகழ்வில் பேசப்பட்ட பேராசான் அ.மார்க்ஸ் அவர்களின் எழுத்துவடிவக் கட்டுரைக்கு மாற்றுக்கருத்துகளிருந்தால் பதிவிலிடுங்கள்.
    அந்நிகழ்வில் இன்னொரு பேசுபொருளான தமிழ்த்தேசிய வாதம் எழுச்சியும் வீழ்ச்சியும் உரையாடலில் என்னால் முன்மொழியப்பட்ட “வெள்ளாள அதிகாரமற்ற வடமாகாண சபைக்கான ” விரிவான எழுத்து வடிவத்தை சிலநாட் களில் தருகிறேன். தயவுசெய்து நீங்கள் அவ்விவாதத்தில் கலந்துகொண்டு உண்மையை நிலைநாட்டவேண்டும்.
    மிகவும் நன்றி தோழர் தவராஜா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *