செங்கரா: மறுக்கப்பட்ட நிலத்திற்காக மற்றுமொரு போராட்டம்

கட்டுரைகள்

-மோனிகா

பிரான்சிலுள்ள ‘சயன்ஸ்போ'(science po) என்ற நிறுவனத்தைச் சார்ந்த ஆய்வாளர் கிரிஸ்டோஃபே ஜெபஃர்லோ(Christophe Jaffrelot:Hindu Nationalism-A Reader) தனது ஆய்வில் இந்தியாவிலேயே தொடர்ந்து பார்ப்பனர்கள் அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற பதவி வகிப்பது கேரளாவிலும், மேற்கு வங்காளத்திலும்தான் என்கிறார்.

மார்க்ஸியத்தின் மாபெரும் விசுவாசிகளெனப் பறை சாற்றும் கேரள மக்களின் மண்ணில் கடந்த பல மாதங்களாக தலித்துகளும் ஆதிவாசிகளும் ‘செங்கரா’வில் தமது நிலங்களை இழந்து பல்வகை கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இது பற்றி அவ்வப்போது ஆங்கிலப் பத்திரிக்கைகள் வெளியிட்டபோதும் பல தன்னார்வக் குழுக்கள் தலையிட்டபோதும் நிலைமை இன்னமும் மாறாதபடியே உள்ளது. ஆர்.பி. கோயங்காவிற்கு சொந்தமான ‘ஹாரிஸன் மலையாளம் எஸ்டேட்’ எனும் ரப்பர் கம்பெனி 5000 குடும்பங்களின் விளைநிலத்தைக் கைப்பற்றிய வணிகச் சதியால் கடந்த 170 நாட்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும் நிலங்களையும் இழந்த நிலையில் கம்பெனியின் ரப்பர் தோட்டங்களின் நடுவே அமர்ந்த வண்ணம் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

 

புகைப்படக் கலைஞரிடம் சிறிது அரிசி கேட்டு நின்ற தாயார்(நன்றி: அஜிலால்)

இந்தியாவில் பெருமளவு சீர்திருத்தங்கள் நிகழ்த்தப்பட்டுவிட்டன என அதன் நடுத்தர மக்களும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல்கிப் பெருகும் கணிணித்துறை பெரு வணிகமும், துணை நகரங்களும், பொருளாதாரச் சிறப்பு நகரத் திட்டங்களும் மார்தட்டிக் கொண்டிருக்கின்றன. அதே நேரம் தொடர்ந்து நிலவி வரும் சாதிப் பிரச்சினைகளால் தலித்துகள் மற்றும் ஆதிவாசி மக்கள் தங்கள் உடமைகளையும் உரிமைகளையும் இழந்து வரும் கொடுமைகள் நடந்தவண்ணமே உள்ளன. நில உச்சவரம்பு சட்டங்கள்(land ceiling acts) பெருந்தோட்டங்களின் மீது அமல்படுத்தப்படமாலிருப்பது இதற்கான முக்கிய காரணம் என்று கூறலாம்.

பிரித்தானியரின் வருகைக்கு முன் சுயதேவைகளுக்காக விளிம்பு நிலையினர் விவசாயத்திற்குப் பயன்படுத்திய காடுகளை சந்தைக்குத் தேவையான
பணப்பயிர்களான தேயிலை, ரப்பர் போன்றவைகளின் விளைநிலங்களாக மாற்றிது காலனிய அரசு. இந்தோனேசியா மற்றும் லத்தீன் அமெரிக்க காலனிகளில் ஐரோப்பியர் இவ்வாறே கரும்புப் பயிரிடலை மேற்கொண்டனர். காலனியாதிக்கத்திற்குப் பிறகு இந்நிலங்கள் பெருமுதலாளிகளின் கைக்கு மாற்றப்பட்டன. இன்றுவரை இப்பெருந்தோட்ட முதலாளிகள் தம் நில வரம்புகளை அதிகரித்து வருவதுடன் அங்கு வாழ்ந்துவரும் விளிம்புநிலை மக்களின் ‘புறம்போக்கு’ நிலங்களை அரசின் உதவியோடு ஆக்கிரமிப்பும் செய்து வருகின்றன.

‘மார்க்ஸிய’ அரசின் மாநிலங்களான கேரளாவும், மேற்கு வங்கமும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இதனைக் கவனத்திலெடுத்து பெரும்பாலான மாநிலங்களில் உழுபவர்களுக்கே நிலங்கள் சொந்தம் என்று அறிவிக்கப்பட்டது. அதை மாநில அரசுகள் எவ்வாறு கையாண்டன என்பது வேறொரு கதை. 1967ம் ஆண்டு பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்த தலித் மக்களுக்கு அறிஞர் அண்ணாவால் வழங்கப்பட்ட நிலங்களை அப்போதைய ஆட்சிக்கு சம்பந்தப்பட்டவர்கள் அபகரித்து சொகுசு பங்களா கட்டியபோது தலித் மக்கள் அந்நிலங்களுக்குள் புகுந்து போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையில் 2006 ஜூலை 27 அன்று தமிழக அரசு விசாரணைக் கமிஷன் அமைத்தது. இவ்வழக்கு இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திரும்பவும் 2006ம் ஆண்டு பிரித்தானியரால் தலித் மக்களுக்கென்று வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களைத் திருப்பித் தருமாறு கேட்டு போராட்டங்கள் தொடங்கின.

தலித்துக்களுக்கு நில உரிமை அளிப்பதில் உள்ள பிரச்சினை என்ன? தனது ‘தகப்பன் கொடி’ நாவலில் பஞ்சமி நிலப் பிரச்சினையை முன் வைத்து எழுதிய அழகிய பெரியவன் கூறுகிறார், “தலித்துகள் இம்மண்ணின் தொல்குடிகள். அவர்கள் இந்நிலத்தின் தொன்ம உரிமையாளர்கள். அவர்களை நிலமற்றவர்களாகவும், எப்போதும் கூலிக்காக கையேந்தும் உழைப்பாளிகளாகவும் ஆக்கியவர்கள் சாதி இந்துக்கள். அவர்களால் ஏற்படுத்தப்படும் அரசுகள் இதில் அக்கறை செலுத்துவதில்லை”( தலித் முரசு, பிப்ரவரி15, 2007) .

இச்சாதி இந்துக்கள் பார்ப்பனர்களானாலும் ஆதிக்கசாதி இந்துக்களானாலும் அவர்களால் தொடர்ந்து நடத்தப்படும் அரசாங்கங்களில் இம்மக்களுக்கு அளிக்கப்படும் அநீதி தொடர்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரள மாநிலத்தில் தலித்துகளின் குரலாக ஒலித்தவரும் புரட்சிகர மாற்றங்களை செய்து காட்டியவருமான அய்யங்காளி உருவாக்கிச் சென்ற ‘சாது ஜன சம்யுக்த வேதி'(SJVSV) என்ற அமைப்பின் வாயிலாக அவர் கற்றுத்தந்த நில உரிமைப் போராட்டத்தைக் கடைபிடித்து வருகிறார்கள் செங்கராவினர். 1930களில் தலித் பெண்கள் இடுப்புக்கு மேல் உடையணியக் கூடாது என்பதை எதிர்த்து வெற்றி கண்டவர் அய்யங்காளி. தலித்துக்களிடையே நில உரிமை, கல்வியுரிமை பற்றிய விளிப்புணர்வை ஏற்படுத்திய அவரது மண்ணில் இடது சாரிகளின் ஆட்சியால் தலித்துகளுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுவிட்டதாக கூறப்படுவதை பொய்ப்பிக்கிறது இப்போராட்டம்.

1996ம் ஆண்டிலேயே ஒப்பந்த முடிவு பெற்றுவிட்ட நிலத்தை ஆக்கிரமிப்பதுடன் பட்டா இல்லாத 1048 ஏக்கர் நிலங்களையும் சுற்றி வளைத்துள்ளது ‘ஹாரிஸன் மலையாளம் கம்பனி’. அவர்களது ஆக்கிரமிப்பு கிட்டத்தட்ட 6000 ஹெக்டேக்கர்களைத் தாண்டிவிட்டது என்றும் தரப்புக்கள் கூற ப்படுகிறது.

SJVSVயின் தகவலின்படி கேரளத்தில் நிலமில்லாதவர்களில் 85% த்தினர் பல தலைமுறைகளாகப் பொருளாதாரம், அதிகாரம், சொத்துரிமை மறுப்புகளுக்கு ஆளான தலித்துக்களும் ஆதிவாசிகளுமாவர். கிட்டத்தட்ட 12,500 தலித் காலனிகளாகவும் 4083 ஆதிவாசிக் காலனிகளாகவும் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகள் மறுப்பிற்கு நடுவே இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1970 ஆண்டு கொண்டு வரப்பட்ட நில சீர்திருத்தச் சட்டம் குத்தகைதாரர்களுக்கே நிலம் சொந்தம் என்று அறிவித்திருந்தபோதும் தாழ்த்தப்பட்ட சாதியினர் நிலத்தைக் குத்தகைக்கு எடுப்பது சாத்தியமில்லாத காரணத்தால் அடிநிலை தொழில்களுக்கு ஆட்படுத்தப்பட்ட இவர்கள் மீண்டும் நில உரிமையை இழக்க நேரிட்டது.

தற்போதைய சூழலில் பொதுமக்களின் நலனுக்காக அவர்களின் வேலை வாய்ப்புக்காகவும் நல் வாழ்வுக்காகவும் என்று சொல்லிக் கொண்டு அரசாங்கங்கள் மேற்கொள்ளும் மோசடி நடவடிக்கைகளில் ஒன்று நில ஆக்கிரமிப்பு. 1966ம் ஆண்டு 10இலட்சம் ஏக்கர் பட்டுவாடாவில் இருக்கிறதென்று கேரள அரசின் தகவல்கள் கூறுகையில் மூன்று அல்லது நான்கு இலட்சம் ஏக்கர்கள் மட்டுமே மக்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டது. இந்த நிலைமையில் ‘டாடா’வின் கம்பெனிக்கு கேரள அரசு 1,43,000 ஏக்கரை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. தலித்துக்களுக்கு தரப்பட வேண்டிய குறைந்த அளவு கவுரவமும் மறுக்கப்பட்டு 1990 ஆண்டு அவர்கள் தங்கள் சமூகத்தில் இறந்தவர்களின் சடலத்தை தாங்களே தங்கள் வீட்டுக்குள் புதைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நில உரிமைக்கான போராட்ட்த்தின் முதல் கட்டம் இங்கு தொடங்கியது. இக்குரல்களை அடக்குவதற்காக அவர்களது பெயர்களில் நிலங்கள் வழங்கப்பட்டதாக போலி ஆவணங்களைத் தயார் செய்தது கேரள அரசாங்கம் (ஆதாரம்:http://www.thesouthasian.org/archives/2007/chengara_land_struggle_in_kera.html).
கடந்த ஆகஸ்டு ஏழாம் தேதி முதல் பாதிக்கப்பட்ட 5000 குடும்பங்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறைந்தது 24,000 பேர் பல்வேறு இடங்களிலிருந்து வந்து டெண்டு கொட்டகைகளிலும் பிளாஸ்டிக் தாள்களிலும் உறங்கி எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரம் “உபயோகப்படுத்தப்படாத ரப்பர் தோட்டத்தை ஆக்கிரமிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற இம்மக்களால் கம்பெனியின் ரப்பர் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுவிட்டது, இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நக்ஸல்பாரிகள்” என்றெல்லாம் பல்வேறு வதந்திகளைப் பத்திரிக்கைகள் பரப்பிவருகின்றன. இம்மக்கள் பல்வேறு ‘மார்க்ஸிய’ அமைப்புகளால் தொல்லைக்கும் மிரட்டலுக்கும் ஆளாகி வருகின்றனர். போராடும் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். (http://www.youtube.com/watch?v=NvI_JUCwttw)
11 வயது சிறுமி ஒருத்தி போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகே நான் பள்ளிக்குத் திரும்புவேன் என்று கூறியிருக்கிறாள்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் சி.பி.எம் தலைவரான பிரகாஷ் காரத்திடம் உதவி கேட்டுள்ளனர். திருவனந்தபுரத்திலுள்ள சி.பி.எம் அலுவலகம் முன் இவர்கள் உண்ணாவிரதம் இருந்து சென்ற பிறகு அந்த இடத்தை அலுவலகத்தினர் தண்ணீரிட்டு சுத்தம் செய்ததாக எழும் தகவல்கள் நம் மனதை நோகடிக்கச் செய்கின்றன. இத்தனைக்குப் பிறகும் இந்திய அரசாங்கத்திடம் இதுபற்றி முறையிட்டுள்ள SJVSV இது கத்தியின்றி ரத்தமின்றி நடக்கப்படவேண்டிய போராட்டம் இதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம் இவர்களுக்கு உரிய நிலங்களைப் பெற்றுத் தாருங்கள் என்று அரசிடம் கோரிக்கைவிடுத்துள்ளது.

1946ம் ஆண்டு நவம்பர் இருபத்தியிரண்டாம் தேதி கேரளத்தின் கரிவல்லூர் கிராமத்தில் விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரிக்க முயன்ற அரசரை எதிர்த்த கம்யூனிஸ்டு போராளிகளைப் பிரித்தானிய அரசாங்கம் தனது துப்பாக்கிகளால் வீழ்த்தியதாகச் சொல்கிறது சரித்திரம். இன்று அதே கம்யூனிஸ்டு அரசாங்கத்திடம் செங்கல் சூளைகளால் தமது விளைநிலத்திற்கு ஆபத்து விளைவதால் அவர்களை விலகிப்போகச் சொல்லி போராடி வருகிறது எரையாம்குடி விவசாயச் சமூகம். சட்டத்துக்குப் புறம்பான பாக்ஸைட்டு சுரங்கத்திற்கெதிரான போராட்டம் காஸர்கோட்டில் இன்னும் நடந்து வருகிறது.

பிளாச்சிமடாவில் கோகோ-கோலாவிற்கு எதிரான போராட்டத்திற்குப் பிறகு மாம்பழச் சாற்றினை புட்டிகளிலடைக்கும் இடமாக இது மாறியுள்ளது. காஸர்கோட்டில் எண்டோசல்பான் என்னும் பூச்சிக்கொல்லி மருந்திற்கு எதிராக நடத்திய போராட்டத்தின் பிறகு அந்த நிறுவனம் தடை செய்யப்பட்டுவிட்டது. செங்கரா போராட்டத்திற்கும் ஒரு நல்ல முடிவு வருமானால் சிவப்பு மாநிலம் தனது கெளரவத்தைத் தக்கவைத்துக் கொள்ள ஒரு வாய்ப்புண்டு.

இப்போராட்டத்திற்கு ஆதரவாக கையெழுத்திட விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட தளத்திற்குச் சென்று கையெழுத்திடலாம்.

http://www.petitiononline.com/chengara/petition.html

9 thoughts on “செங்கரா: மறுக்கப்பட்ட நிலத்திற்காக மற்றுமொரு போராட்டம்

  1. 1967ம் ஆண்டு பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்த தலித் மக்களுக்கு அறிஞர் அண்ணாவால் வழங்கப்பட்ட நிலங்களை அப்போதைய ஆட்சிக்கு சம்பந்தப்பட்டவர்கள் அபகரித்து சொகுசு பங்களா கட்டியபோது தலித் மக்கள் அந்நிலங்களுக்குள் புகுந்து போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையில் 2006 ஜூலை 27 அன்று தமிழக அரசு விசாரணைக் கமிஷன் அமைத்தது. இவ்வழக்கு இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திரும்பவும் 2006ம் ஆண்டு பிரித்தானியரால் தலித் மக்களுக்கென்று வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களைத் திருப்பித் தருமாறு கேட்டு போராட்டங்கள் தொடங்கின.

    ஐயா சத்திய கடதாசி உங்கள் பதிவில் உண்மை மறைப்பு வெகுவாக உள்ளது. குறிப்பாக மேற்கண்ட தலித் மக்களுக்கான போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வருவது சி.பி.ஐ.(எம்)தான் என்ற உண்மையை திட்டமிட்டு மறைத்துள்ளீர்கள். சிறுதாவூரில் தலித் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைய எதிர்த்து போராட்டத்தையும், சட்டப்பூர்வமான வழிமுறைகளிலும் களத்தில் இறங்கி போராடுவது சி.பி.ஐ.(எம்) மட்டுமே. ஏன் இதை மறைத்துள்ளீர்கள். மேலும் மேற்கண்ட உங்களது பதிவு சி.பி.ஐ.(எம்)-யை அவதூறு செய்ய வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே வெட்ட வெளிச்சமாகிறது.

  2. CPM கட்சியை குறித்து ஒட்டுமொத்தமாக எந்த அவதூறும் செய்வது எனது நோக்கமல்ல. கேரள அரசியல் வேறு, தமிழக அரசியல் வேறு என்ற அடிப்படையிலேயே CPM இயங்கி வருவது அனைவரும் அறிந்ததே. செங்காரா பிரச்சினையில் CPM நிலைபாடு என்ன என்பதுதான் இப்பதிவை பொறுத்தவரை முக்கியம். எந்த கட்சி ஆண்டாலும் தலித்துகளுக்கான உரிமை மறுப்பு தொடர்வதால்தான் தலித் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

  3. அடிப்படை மனித உரிமை பேணுவதையும்
    உழுபவனுக்கே நிலம் என்ற கோஷதையும்
    சாதிப்பிரிவினை மாற்றம் அடையக்கூடாது என்ற வாதங்களையும்
    முன்வைத்தே தொடங்கப்பட்டது தான் தலித்என்ற இயக்கம்
    இதற்கு சத்தியக்கடதாசி முழுஅர்பணிப்பையும் செய்கிறது

    வேறு என்ன? எதிர் பார்கிறீர்கள் செல்லப்பெருமாள்
    சமத்துவம்- பொதுஉடமைபற்றியா?

  4. மோனிகா போன்றவர்கள் பெரியார் பழங்குடி மக்களுக்காக ஏதாவது போராட்டம் நடத்தினார், தலித்களுக்கு நிலம் ஒதுக்கக் கோரி போராட்டம் நடத்தினாரா, தமிழ்நாட்டில் பஞ்சமி நில மீட்பு போராட்டம் யாருக்கு எதிராக உள்ளது என்பதையும் விளக்குவார்களா?. பழங்குடி மக்கள் உரிமைக்காக திராவிட இயக்கங்கள் என்ன செய்துள்ளன.தமிழ்நாட்டில் பழங்குடி மக்கள் இல்லையா. இல்லை இங்கு காடுகள் அழிக்கப்பட்டு தேயிலை,காப்பித் தோட்டங்கள் உருவாக்கப்படவில்லையா, அவை தனியார் கம்பெனிகள் வசம் இல்லையா. மாஞ்சோலை தொழிலாளர்
    போராட்டத்தின் போது முதல்வராக இருந்தவர் மு.கருணாநிதி.
    அவர் அப்போது மாவட்ட ஆட்சியரை மாற்ற மாட்டேன் என்பதற்காக சொன்ன காரணம்
    என்ன என்பதை மோனிகா கூகுளில் தேடிக் கண்டுபிடிக்கலாம்.

    சிபிஎம் தமிழ்நாட்டில் சிறுதாவூர் பிரச்சினையை கையிலெடுத்த
    போது ஜெ.விற்கு நற்சான்றிதழ் வழங்கியவர் திருமாவளவன்.
    அகில இந்திய அளவில் பழங்குடி மக்களின் உரிமையை அங்கீகரிக்கும் சட்டத்தை அமுல்படுத்த கோருவது சி.பி.எம்.
    அவர்கள் ஆளும் மாநிலத்தில் வேறு விதமாக நடந்து கொள்வதும்
    சிபிஎம். இந்த முரணை அறியாமல் மோனிகா போன்றவர்கள்
    எழுதுவது வேடிக்கை.

  5. “பிரான்சிலுள்ள ‘சயன்ஸ்போ’(science po) என்ற நிறுவனத்தைச் சார்ந்த ஆய்வாளர் கிரிஸ்டோஃபே ஜெபஃர்லோ(Christophe Jaffrelot:Hindu Nationalism-A Reader) தனது ஆய்வில்
    இந்தியாவிலேயே தொடர்ந்து பார்ப்பனர்கள் அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற பதவி வகிப்பது கேரளாவிலும், மேற்கு வங்காளத்திலும்தான் என்கிறார்.”

    முதல் பாரா (மேலே தரப்பட்டுள்ளது) இந்தக் கட்டுரையில் எதற்காக இடம் பெற்றது.அதற்கும் கட்டுரையில் பேசப்படும் பொருளுக்கும் என்ன தொடர்பு.தமிழ்நாட்டில் சட்டசபையில் பார்ப்பனர்கள் எத்தனை பேர்.மிக மிக குறைவாக
    பார்பனர்கள் சட்டசபையில் இருந்தும் 1967 துவங்கி இன்று வரை
    திராவிடக் கட்சிகள் ஆண்டும் இன்று தமிழ் நாட்டில் தலித்கள்,
    பழங்குடியினர் நிலை ஏன் இப்படி இருக்கிறது.நிலச் சீர்திருத்தம்
    கேரளா,மே.வங்கத்தில் நிறைவேற்றப்பட்ட அளவிற்குக் கூட
    தமிழ் நாட்டில் நிறைவேற்றப்படவில்லை. கட்டுரையாளர்
    பழங்குடிகளின் நிலப் போராட்டம், தலித்களின் நிலப்போராட்டம்,
    வாழ்வுரிமைப் போராட்டம் இரண்டும் வேறுபடும் புள்ளிகளையும்
    அறிந்து கொண்டு எழுதட்டும்.

  6. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரள மாநிலத்தில் தலித்துகளின் குரலாக ஒலித்தவரும் புரட்சிகர மாற்றங்களை செய்து காட்டியவருமான அய்யங்காளி

    please get your history right.He was born in 1863 and died in 1941

  7. //இந்தியாவில் பெருமளவு சீர்திருத்தங்கள் நிகழ்த்தப்பட்டுவிட்டன என அதன் நடுத்தர மக்களும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல்கிப் பெருகும் கணிணித்துறை பெரு வணிகமும், துணை நகரங்களும், பொருளாதாரச் சிறப்பு நகரத் திட்டங்களும் மார்தட்டிக் கொண்டிருக்கின்றன. அதே நேரம் தொடர்ந்து நிலவி வரும் சாதிப் பிரச்சினைகளால் தலித்துகள் மற்றும் ஆதிவாசி மக்கள் தங்கள் உடமைகளையும் உரிமைகளையும் இழந்து வரும் கொடுமைகள் நடந்தவண்ணமே உள்ளன. // உண்மை மொனிக்கா , இந்த நூற்றாண்டிலும் மனித இனமே வெட்க்கப்படவேண்டிய வேதனைதரும் நிகழ்வுகள் .இதில் மார்க்சியவதிகளோ அல்லது அவர்களால் உருவாகிய அரசுகள் மட்டும் என்ன விதிவிலக்கில்லை என்பதை ஒவ்வொரு நிகழ்வுகளும் தெரியப்படுத்துகிறது ,பெண்களின் பிரச்ச்சனைபோலவும்தான் அதைவிட மோசமானதாக .
    றஞ்சினி

  8. ஒரு திருத்தம்:
    “பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரள மாநிலத்தில் தலித்துகளின் குரலாக ஒலித்தவரும்” என்பதை “இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரள மாநிலத்தில் தலித்துகளின் குரலாக ஒலித்தவரும்” என்று மாற்றிக் கொள்ளவும்.

  9. தலித்,ஆதிவாசிகள் பெயரில் அன்னிய நாட்டு நிறுவனங்களின்
    பண உதவியுடன் ‘போராட்டம்’ நடத்தப்படுவதை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை.

    http://pd.cpim.org/2008/1005_pd/10052008_19.htm
    People’s Democracy
    (Weekly Organ of the Communist Party of India (Marxist)

    ——————————————————————————–
    Vol. XXXII
    No. 39

    October 05, 2008

    CHENGARA LAND STRUGGLE

    A Conspiracy That Apparently Precedes Another Nandigram

    Jiju Alex

    A GRAND conspiracy is being contemplated by certain elements owing allegiance to religious forces along with Naxal-Maoist groups in Kerala to thwart the historic efforts of the ruling LDF government to provide the downtrodden sections with land and houses, on a massive scale. That it is a conspiracy has become clearer of late with several reports on the real endowments of the so-called landless activists of the Chengara strike coming out. There are telling evidences to substantiate that these unlawful act of encroachment is aided and abetted by imperialist forces in collusion with the anti left forces mentioned above. However, in elite media and among the liberal intellectual circles, it is being deliberately portrayed as a landmark struggle for land reforms, redistribution of excess land and ever so many other radical transformations in Kerala. This section of the media leaves no opportunity to celebrate this incident as an indication of some grave crises in the agrarian sector in Kerala and that it is going to be a harbinger of greater changes in agrarian relations, something that a CPI (M) refuses to implement. They try to accuse the CPI (M) of anti peasant and anti working class attitudes by citing Chengara strike as a symbol of its subjugation to the rich and influential sections of the society. This is evidently a distorted version of the affair that deserves to be refuted. It is nothing but a premeditated attempt to tarnish the face of the LDF government and the CPI(M).

    The Chengara agitation was started on August 3, 2007, by two organisations that claim to be of dalits and adivasis under the common banner of Chengara bhoosamara aikyavedi samathi, for grabbing and distributing the land of Harrison plantation, Chengara, Pathanamthitta district. Now, almost about a year since then, the agitators have literally seized the area rendering hundreds of plantation workers jobless. The agitation was initiated under the guise of an innocent demand for land for the landless dalits. The occasion of launching the struggle is particularly significant since it was the time when the LDF government had emphasised its resolve to grab all the unlawful possessions of the land mafia across the state. It is widely known that the LDF government is seriously pursuing this with a view to create a land bank, which could be duly distributed to dalits, adivasis and other landless people. As we understand it clearly now, the agitation has other intentions, much greater and far-reaching than what they say. They intend to divert the attention of the public from the visionary steps taken by the government and attract a section of apolitical intellectuals towards a non-issue to create chaos and unrest in the state. The initial steps of the struggle somehow or the other resemble the covert sprout of a Nandigram model debacle.

    One of the startling observations regarding this struggle is that these organizations receive substantial monetary assistance from several domestic and foreign agencies such as the Ford foundation, USA. This struggle would have been justifiable if the LDF government had shown an iota of aversion to the cause of landless dalits and adivasis in the state. In fact, the LDF government has already announced its commitment to the concerns of the poor and initiated many a landmark decision to safeguard the interests of the landless. One major step towards this direction has been the unprecedented resolve to find out all illegal possessions of the land mafia as stated earlier. This has been widely acclaimed as the most daring step a government could ever take. No UDF government has attempted it before. The LDF government has been largely successful in cracking down the land mafia and grabbing unlawful possessions, without letting these steps go into irresolvable legal complexities.

    When a government, which is unambiguously committed to such serious concerns rules the state, why should someone come out with a struggle on such a non-issue?

    It is in this context, we doubt the intentions of the Chengara struggle, which is sponsored by forces of dubious backgrounds with the support of Naxals and Maoists. Though there had been constant attempts to provoke the police and create untoward incidents, which could flare up, the government has maintained exemplary restraint and foiled the efforts of the samara samithi. The agitating groups now show signs of disintegration as evinced by the several voices of dissent from within the group. Initially, followers were enticed by assuring that each one would get five acres of land if they contributed Rs 1500-3000 to the organisers of the struggle. Many people, even from neighbouring districts had ventured to participate in the struggle in response to this promise. Interestingly, almost every one of them has own land and home. Now, with the realization that it is a dream quite unlikely to be materialised, most of them have lost faith in the intentions of the leadership and the agitation is gradua lly subsiding.

    The socio economic profile of the participants of the struggle is testimony to the wicked intentions of its sponsors. While the struggle proclaims to be a genuine response of the landless poor to get endowments for minimum subsistence, most of the participants own assets worth more than minimal. For instance, Thankamma, an active participant of the struggle owns a house in her 20 cents of land as a beneficiary of the housing project of the Grama Panchayat. Nany, another participant has 10 cents and a house. Recently she has bought five more cents. Karunakaran owns 40 cents and is well off. Thankappan has sent her wife to the gulf and lives comfortably in his own house. While Ammini, unit president of the samara samithi has her own house, Valia Karuppel Sasi, unit secretary of the samara vedi has two houses in his possession. Kunju Pillai, another ardent participant has 1.5 acre, adjacent to Chengara estate. His two sons have also their own houses. Soman reached the agitation camp leaving his house locked. He has built this house with the financial assistance from a housing project of the Block Panchayat. He had motivated people in his neighborhood to join the struggle by promising each one five acres of land. His children now stay with his brother. Soman who is a rubber tapper left his job in anticipation of getting five-acre land and Rs 50000, as reported by him. Konthanalil Sasi who has motivated many people to participate in the struggle is the beneficiary of Janakeeyasoothranam, the people’s plan programme that provided him with a house. He is alleged to have collected money from these people. Similarly, several participants are beneficiaries of some or the other developmental projects of the government or the local body. Poovallimuruppel Bose, who owns 30 cents haS built his house with the help of SC Development Corporation, also participates in the struggle for more land and money. Kallungal Kunjukunju is a beneficiary of SC Corporation and he owns two houses and 35 cents of land. About two dozen people of Chittar in Ranni assembly constituency also camp at Chengara to participate in this struggle. This list is not complete.

    However, it would be queer to look at the case of the agitation’s most vigorous leader Laha Gopalan, who spearheads the movement. Gopalan, a retired employee of the KSEB has one acre and nine cents at Aruvappulam Panchayat (survey No.540/1/1/328, 540/11/328/130). He says that he bought it with the money he got in connection with his superannuation in the KSEB, which amounted to Rs 4 lakhs. When the credentials of the leaders were exposed, one of the women leaders Thattail Saraswathy resigned from the organisation. She also owns 1.5 acre arable land which she bought by taking loan from SC Corporation. Paradoxically, while 90 per cent of the agitators have either home or land, 70 per cent of the plantation workers, who have lost job since the agitation, have neither home nor land. Recent interpretations of the ultra left groups and left liberal intellectuals argue that the plantation workers should also join the strike and grab the land. The participants of the agitation unscrupulously tap the rubber trees and sell out latex worth thousands of rupees to meet their huge expenses. Moreover, fearing a setback, the organisers of the agitation forcibly prevents the participants who have decided to dissociate with the struggle from going out of the camp in the estate. Those who fall sick are also not allowed to leave the place and be treated. The organisers fear that if people were allowed to leave, they would leave the agitation altogether, and forever.

    However, the forces that have fuelled this spiteful campaign have not conceded defeat. Bolstered by rich funding sources, there are all-out efforts to rekindle the lost vigour and revive the struggle. A section of the media is still creating confusion among the public through contorted interpretations. They try to establish that the government of Kerala is not responsive to the clamour of poor dalits. Moreover, several questions as to whether the CPI (M) has departed from its inherent ideological positions have also been raised. On the contrary, they have neither bothered to acknowledge the foreign aid that the agitation receives nor tried to condemn the impropriety of such an action against a government with favourable attitude to their demands.

    That the agitation has foreign connection became evident when the Israeli youth spotted at Chengara revealed on interrogation by police that he works for the Israeli peace movement tiblin, which is now under the surveillance of RAW and he is an activist of Global Democracy, a World Bank organisation. Deshabhimani, the CPI(M) daily, unearthed the foreign connection in the agitation. In fact, the sadhu jana vimochana samyuktha vedi leads the struggle at the behest of two organizations, one based at Delhi and the other at Thiruvalla, Kerala. These organizations have been at the forefront of the issue right from the beginning. They purposely internationalized the agitation to spread canards against the LDF Govt across the world. They are eager to blow the issue out of proportion and ascribe ideological and human rights dimensions to the incident. They also spread pre-mediated stories on ‘’atrocities’’ against dalit women by the local trade union activists and estate workers, which is a damn lie. Solidarity- an organisation that supports the agitation- in its publication viz. “update collective” made an appeal to the funding agencies to provide financial aid to a great social movement involving 45,000 poor families who are desperately struggling to get land and house in Kerala. They had also furnished addresses and phone numbers to send money. A website of the Dalit Foundation says that in Kerala, they give donations to Navachethana. New York based Ford Foundation is one of the international agencies that finance Chengara agitation. Human Rights Foundation, another organisation that help the struggle receives money from several European agencies and the World Christian Council. Delhi based Dalit Forum have openly admitted that they have close liaison with Dynamic Action, the agency which spearheads the agitation against the LDF government Kerala Home minister Kodiyeri Balakrishnan has expressed the doubt that Chengara agitation is thriving on money from abroad, considering the methods of the struggle.

    It is noteworthy that unlike what had happened at Muthanga during the UDF regime, the government of Kerala exercises exemplary restraint in handling the agitation. It has never tried to forcibly remove the protestors from the estate. The LDF, led by the CPI (M) seeks to deal with the issue pragmatically by offering land to all the landless and the poor in the state as a matter of its committed policy. LDF convener Vaikkom viswan observes that the sole aim of Chengara agitation is to defeat the efforts of LDF govt. to distribute land to dalits and adivasis. The chief minister has reiterated his commitment to grab unlawful possessions from the land mafia as early as possible and distribute them to the poor. In spite of all these promises, proven repeatedly through daring steps, the Chengara struggle is still on, to malign a progressive and pro poor government. Its intentions are dubious and do not have any justification, ideologically. Rather, it marks a political maneuver that apparently precedes another Nandigram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *