எண்பத்தெட்டும் எழுபத்தாறும் எண்பதும்

கட்டுரைகள்

-சுகன்
கடந்த ஞாயிறு சபாலிங்கம் மண்டபத்தில் நிகழ்ந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் தோழர் எம்.சி. ரவூப் ஆற்றிய உரை புகலிட அரசியல் இலக்கிய நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானது.சொற்ப நேரத்திலேயே கனகச்சிதமாக தமிழ் அரசியலின் இரண்டக நிலையையையும் அது கட்டமைத்த வரலாற்றுப் புனைவையும் கட்டுடைத்த தோழர் ரவூப் இனவாரித் தரப்படுத்தலின் தோற்றுவாய் யாழ்ப்பாண வெள்ளாளப் பின்னணியே என காட்சிப்படுத்தினார்.

88 புள்ளிகள் எடுத்த முஸ்லிம் மாணவனுக்கு யாழ்ப்பாண இந்துக்கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டு 76 புள்ளிகள் எடுத்த இந்து மாணவன் அனுமதி பெற்றதை ரவூப் சுவாரசியமாகச் சொன்னாலும் ஏமாற்றத்தினதும் வேதனையினதும் வெறுப்பினதும் உச்சக்கட்டப் பதிவாகவே இதனை நோக்குதல் தகும். வெள்ளாளர்கள் எப்போதும் நாசூக்கானவர்களும் அற்பத்தனமானவர்களும். யாழ் பல்கலைக்கழகமே சாதியின் அடித்தளத்தில் இயங்கும்போது மற்றவற்றின் கொடூரம் சொல்லிப்புரியவேண்டியதில்லை.

புத்தூர் சோமாஸ்கந்தாவில் அனைவருக்குமான இலவசக்கல்வியை அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்து 14 ஆண்டுகளின் பின்னரே ஒரு தலித்துக்கு அங்கு அனுமதி கிடைத்ததிலிருந்து இதைப்புரிந்துகொள்ளமுடியும் . ஓரிரு தலித் மாணவர்களுக்கு அனுமதி கிடைத்ததென்பது வெள்ளாளர்களின் கருணையினாலல்ல.வெள்ளைக்காற அரசாங்கம் பாடசாலைகளுக்கு கொடுக்கும் உதவியை நிறுத்திவிடுவோம் என்று மிரட்டியதாலேயே ஓரிரண்டு மாணவர்களுக்கு அனுமதி கிடைத்தது.அப்போது ‘வெள்ளைக்காறன்’ இப்போது ‘சிங்களவன்’ இல்லை என்றால் தலித்துகள் இப்போதும் யாழ்ப்பாணத்தில் பீ அள்ளிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.

88 சிலவேளைகளில் 76இலும் கூடுதலென கணக்கிடப்படுவதுண்டு. அந்தக் கூட்டத்தில் தொடர்ந்து கருத்துரைத்த தோழர்.கீரன் “தற்போது எண்பது வீதமான தலித்துகள் விகிதாசார அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் சனநாயகத் தேர்தல் முகாந்திரத்திரத்தில் தலித் பிரதிநிதிகள் பெரும்பான்மையாக வரமுடியும்” எனவும் அதற்கு தலித்துகளின் அரசியல் அணிதிரட்டல் அவசியம் எனவும் கருத்துப்பட பேசினார்.

வெள்ளாளர்கள் அவ்வளவு கேணையர்கள் அல்ல.தமிழீழம், தமிழர் தாயகம் என்று துவக்கெடுத்த மாபெரும் விடுதலைப் போராளிகளாக அறீயப்பட்ட வெள்ளாளப் பிரபலங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் காப்பாற்றுவதன் பின்னணி இங்கு ஈண்டு நோக்குதல் தகும்.

தலித் சமூகத்திலிருந்து முப்பது வருடத்தின் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவனேஸ்வரன் எம்.பி ‘ஆழ ஊடுருவும் படை’யினரால் கொல்லப்பட்ட பின் அவ்விடத்திற்கு ஒரு முஸ்லிம் அன்பரை அவசரமாக த.தே.கூ.நியமித்ததன் சாதிய அடிப்படையை எல்லோரும் அறிவர்.அவ்விடத்திற்கு ஒரு தலித்தை நியமிக்கக் கூடாதென்பதில் த. தே. கூ மிகவும் கவனமாக இருந்தது.ஒரு வெள்ளாள எம்பி தனது பதவியை துறந்து அம்முஸ்லிம் அன்பருக்கு இடம் விட்டிருக்கலாம். ஆக எண்பதாயிருந்தாலென்ன நூறாயிருந்தாலென்ன தலித்துகளுக்கான இடம் பள்ளிக்கூடமுமல்ல, பல்கலைக்கழகமுமல்ல, பாராளுமன்றமுமல்ல.அனைத்துத் தொகுதியிலும் தலித்துகள் மட்டுமே வரமுடியும் என்ற நிலை யாழ் சாதிக் கட்டமைப்பை அசைக்கலாம்

“ஒரு தோற்கடிக்கப்பட்டவனின்
நிழலைக் கடன் வாங்கிக் கடக்கும் இறைவனை
நாம்
இப்போது மதிய வெயிலில் கண்கூசக் காண்கிறோம்
ஒளிவட்டம் நம் அனைவரின் தலையிலும் தகிக்கமிக நிதானமாய் புன்னகைக்கிறார் கடவுள்
துரோகம் தன் கால்களை சரி செய்து
நம் நினைவில் வெகு சாதுவாய் அமர்கிறது”
-வசுமித்ர-

யாழ் முஸ்லிம்கள் வெள்ளாள நிலத்திலிருந்து துரத்தப்பட்டதற்கு யாழ் இந்துக் கல்லூரி தரப்படுதல் அரசியல் அடிதளத்தளத்தை வழங்குகிறது.

20 thoughts on “எண்பத்தெட்டும் எழுபத்தாறும் எண்பதும்

  1. /வெள்ளாளர்கள் எப்போதும் நாசூக்கானவர்களும் அற்பத்தனமானவர்களும்/
    பிறப்பால் வெள்ளாளனா? அல்லது வெள்ளாளக் குணம் பொருந்தியவனா? பிறப்பால் தலித்தாக இருந்தும் வெள்ளாளக் குணம் கொண்டவர்களும் இருக்கிறார்களா?

    /முஸ்லிம் அன்பரை அவசரமாக த.தே.கூ.நியமித்ததன் சாதிய அடிப்படையை எல்லோரும் அறிவர்./ எல்லோரும் என்றால் யார்? நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்….

  2. //….அப்போது ‘வெள்ளைக்காறன்’ இப்போது ‘சிங்களவன்’ இல்லை என்றால் தலித்துகள் இப்போதும் யாழ்ப்பாணத்தில் பீ அள்ளிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்….//

    உண்மைதான்! நல்லகாலம் !!!இல்லை எண்டால்
    இப்ப சாமத்தியச்சடங்கில காலில விழக்கூடியதா இருக்குமோ!!!

  3. இனிய ரகு!
    புகலிடத்திலும் சரி, இலங்கையிலும் சரி ஐயரின் காலில் எவரும் விழுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?
    இந்துசமய அனுட்டானங்களிலோ கோவில்களிலோ ஐயரின் காலில் எவரும் விழுவதுமில்லை, அப்படி விழச்சொல்லி அய்யர்மாரும் கேட்டதாக நானும் நாங்களும் அறீயவில்லை.
    ஆரும் ஐயர்மார் உங்களுக்குத் தெரிந்தால் அப்படி ஒரு சடங்கு முறையில் இருக்கிறதா இல்லையா என கேட்டு அறீயத்தரவும்.
    மேலும் இன்னொருவருடைய சாமத்தியச் சடங்கில் நான் ஏன் ஐயரின் காலில் விழவேண்டும்! உங்களுக்கு மூளை இருக்கிறது.ஆனால் அதனால் பகுத்துணர முடியாமல் இருக்கிறது.
    மனோ முன்னர் ஒரு நாடகம் போட்டார். ஒரு ஆணுக்கு சாமத்தியச்சடங்கு செய்வதாக.அது ஒரு நல்ல எதிர்க்கலாச்சார நாடகம். அந்த நாடகம் பற்றி யாரும் பேசுவது இல்லை. அந்தநாடகத்தில் கூட யாரும் யாருடைய காலிலும் விழுந்ததாக நான் அறியவில்லை.
    இனிய ரகு! கேள்விச்செவியன் ஊரைக்கெடுத்ததுதெரியுமா?
    ஒரு தகவலுக்காகச் சொல்கிறேன், ஆரும் பெண்குழந்தை சாமத்தியப் பட்டால் அந்தக்குழந்தையின் வீட்டுக்காரர் ஐயரைக் கூப்பிட்டு வீட்டோடு துடக்குக் கழிப்பினம்,ஐயரும் தனக்கு வேண்டியதை கேட்டு வாங்கிப்போவார்.
    பின்னர் ஊருக்கு சொந்தங்களுக்கு நண்பர்களுக்கு எல்லாம் சொல்லி
    சாப்பாடுகள் எல்லாம் செய்து கொண்டாடுவார்கள்.
    அது சாமத்தியச்சடங்கு. அதுக்கு ஐயர் வருவது இல்லை.
    துடக்கு, ஐயர், தமிழ்ச்சமூகம் இவை பற்றி உங்ளுக்கு எதுவும் தெரியாது போலை. தெரியாதது தப்பில்லை.தெரிஞ்சுகொண்டா எல்லாருக்கும் நல்லதுதானே!

  4. இனிய ரகு! தனிமனித அவதூறுகள் குறீத்து மிகவும் அவதானமாகவும் விழிப்போடும் இருங்கள்.
    பத்திரிகையாளன் லட்சுமிகாந்தன் படுகொலையை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.தியாகராஜ பாகவதர் செய்தது. லட்சுமிகாந்தன் கிசுகிசுக்களையே ஆதாரமாகக் கொண்டு பத்திரிகை நடத்தி அதனால் பாகவதர் பாதிக்கப்பட்டு கொலை நடந்தது.
    இப்ப தேசம் அதைச் செய்யுது. தனிமனித அவதூறுகள் கடைசியில் லட்சுமிகாந்தன் கொலையிற்தான் முடியமுடியும் என்பதற்கு நல்ல உதாரணம். தேசமும் ஜெயபாலனும் புரிந்துகொண்டால் சரி!

  5. மேலும் ரகு!
    நெடுங்குருதி நிகழ்விற்கு சுவிஸ்ஸிலிருந்து தோழர் திலக் வந்திருந்தார் . திலக்கை அப்பதான் முதலில் பார்க்கிறேன்,முதல் அறிமுகம், ஆனால் திலக் என்பற்றிய கேள்வி அறீமுகந்தான் .
    எப்படி? நீங்கள் ஐயற்றை காலிலை விழுந்தனிங்களாம்!
    இல்லையே! நான் ஆற்றை காலிலையும் விழமாட்டேனே!
    உங்களுக்கு யார் சொன்னது?
    சுவிஸ் ரவிதான் சொன்னார் .
    ரவி !!!!!ரவி!!

  6. மற்றவர் ஜமுனா மாமா;
    தன்னுடைய சொந்தப்பெயரிலேயே சாமத்தியச்சடங்கும் காலிலை விழுகிறதும் என்ற பொய்யை தேசத்தில் நிலைநாட்டியவர்.
    அவருக்கு மூளையில்லை.ஆதலால் அவரிடம் அத்தகைய பொய் அவதூறைத்தான் எதிர்பார்க்கலாம்.
    கொஞ்சமாவது மூளையிருந்தா நான் ஏன் சாமத்தியச் சடங்கு செய்யவேணும், எனக்கும் ஐயருக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பதற்கு வழி இருந்திருக்கும்.

  7. இனிய ரகு!
    உங்களிடம் கேள்வி
    1 ; சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் வரும் பாடல் வரியிலேயே கேட்கிறேன்: எந்த ஊரோ இருப்ப தேது பேர் யார் தந்தை?

  8. வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே நிறுத்தப்படவேண்டும்

    நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் ஒரு மாற்றுக் கருத்துக்களுக்கான உரையாடல் நிகழ்வு (21-09-08) ஒன்றில் பாரிஸில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அடிக்கடி கூட்டங்களுக்கு சென்றுவந்தாலும் எங்கு சென்றாலும் தமிழ்இ தமிழர்இ தமிழ்பேசும் மக்கள் தமிழ் தேசியம்இ தமிழர் தாயகம்இ வடகிழக்கு இணைப்புஇ நிரந்தரத் தீர்வு என்று புளித்துப்போன சொல்லாடல்களின் ஆக்கிரமிப்புக்கள் இன்றி அண்மையில் நடந்து முடிந்த தலித் நூல்களின் வெளியீட்டுஇ விமர்சன விழா காத்திரமானதொன்றாக நடந்தேறியது. இந்நிகழ்வில் வெளியிடப்பட்ட நூல்களில் ஒன்றான இலங்கை சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் என்னும் நூலினை வி.ரி இளங்கோவன்இ மற்றும் இசிதோ பெர்னாண்டோ அவர்கள் விமர்சனம் செய்தார்கள். மற்றைய நூலான எம்.சி ஒரு சமூகவிடுதலைப் போராளி என்னும் நூலினை ஹாசிம் அவர்களும் தோழர் யோகரெட்ணம் அவர்களும் விமர்ச்சித்து உரையாற்றினர். நூல்களின் முதற் பிரதிகளை வெகுஜனப் போராட்ட இயக்க போராளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த நாட்டுக்கூத்து கலைசூர் இம்மானுவேல் அவர்களும் திரு புஸ்பாகரன் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.

    வெளியீட்டு விமர்சன உரைகளைத் தொடர்ந்து நல்லதொரு கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலை நெறிப்படுத்திய கவிஞர் சுகன் ஒரு முக்கியமான வரலாற்றுப்புள்ளியில் நாம் இங்கு நிற்கின்றோமென்று குறிப்பிட்டு தமிழ் பாஸிஸம் தோல்வியடைந்து வருகின்ற இந்த நிலையில் வடமாகாண சபை குறித்து தலித் பார்வையிலான கேள்விகள் எழுப்பப்படவேண்டும் என்ற தொடக்கத்துடன் உரையாடலை ஆரம்பித்து வைத்தார். அதைத் தொடர்ந்து தலித் மேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசன் முஸ்லிம்கள்மீது இனச்சுத்திகரிப்பை ஏற்படுத்திய தமிழ் தேசியம் தலித்துகள்மீதும் கட்புலனாகாத இனச்சுத்திகரிப்பு ஒன்றினை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஒரு மாதகாலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் கொலைகளில் எட்டுப்பேர் (8) சாதிய அடிப்படையில் பழிவாங்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்தார். இதில் கட்சிவாதஇ குழுவாத இயக்க அரசியல் நிகழச்சி நிரல்கள் வெளிப்படையாக தெரிந்தாலும் அடிப்படையில் ஒரு சாதிய தெரிவுகள் இதில் இடம்பெறுவதே உண்மையென்றார்.

    கடந்தகால நிகழ்வுகளிலிருந்து நாம் இவரது கருத்தினைப் பார்க்கின்றபோது செல்லன் கந்தையனும்இ ராஜதுரை அதிபரும் புலிகளால் வஞ்சிக்கப்பட்ட விதமும். டொமினி ஜீவாவை யாழ்ப்பாண மேட்டுக் குடிகளின் மையமான யாழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க மறுத்து அவமானப்படுத்தியபொழுது புலிகள் அதைக்கண்டும் காணாமலிருந்த விதமும் தேவதாஸ் அவர்களின் கருத்துக்கு அர்த்தம் சேர்க்கின்றன. என்பது உண்மைதான்.

    இதைத் தொடர்ந்து உரையாற்றிய லண்டனிலிருந்து கலந்துகொண்ட ராகவன் தமிழ் அரசியல் வரலாறுகளாக நிறுவப்பட்ட வரலாற்றிற்கு எதிரான மாற்று வரலாறுகள் தமிழ் சமூகத்தில் இருக்கின்றன என்பதனை இக்கூட்டம் மீண்டுமொரு முறை ஞாபகப்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டார். ராகவன் தொட்டுக்காட்டிய இந்த அம்சந்தான் இக்கூட்டத்தினை மாற்றுக்கருத்துக்களுக்கான ஒரு உரையாடல் நிகழ்வு என கருதுவதற்கும் வாய்ப்பளித்துள்ளது. அதாவது 1970 ம் ஆண்டுகளிலிருந்துதான் தமிழ் தேசியம் என்னும் குரல்கள் தீவிரவாதம் நோக்கிய அரச எதிர்ப்புப் போராட்டங்களாக மாறத் தொடங்கியது. தமிழீழமே தனித் தீர்வு என்றும் வடக்கு கிழக்கு எங்கும் எல்லோரும் ஆணையிட்டு விட்டதாக கூட்டணியினரும்இ சிங்களவருடனோஇ சிங்கள அரசாங்கங்களுடனோ இனி சேர்ந்த வாழவே முடியாது என்று தீவிரவாத இளைஞர்களும்இ ஓரணியில் திரண்டு நின்றனர். தமிழர்கள் அனைவரினதும் பிரச்சினை சிங்களவர்களினால்தான் என்கின்ற வரலாறுதான் வடக்கு கிழக்கு வாழ் அனைத்துத் தமிழர்களினதும் வரலாறு என்று தட்டையாக நிறுவப்பட்டிருக்கின்ற நிலையில் அந்த நிறுவப்பட்ட வரலாற்றினை கேள்விக்குள்ளாக்கி அன்றைய சமூகத்தில் இருந்த பன்மைத்துவப் போக்கினை விளங்கிக்கொள்ள இக்கூட்ட நிகழ்வுகள் பார்வையாளர்களை உந்தித் தள்ளியது.

    எந்த அரசாங்கம் தமிழர்களின் எதிரியென்று கற்பிதம் செய்யப்பட்டதோ அதே அரசிடம்தான் யாழ்ப்பாணத்து தாழ்த்தப்பட்ட மக்கள் தஞ்சமடையவேண்டியிருந்தது. 1970 ம் ஆண்டுகாலவரையில் எந்தவொரு தாழ்த்தப்பட்ட மகனுக்கும் எம்.பி பதவி என்பது கானல்நீராக இருந்த யாழ்ப்பாணத்துச் சூழலில் எம்.சி சுப்பிரமணியம் அவர்களை நியமன எம்.பியாக்கி வரலாற்றுப் புகழ் சேர்த்துக்கொண்டது சிங்களப் பெண்மணி திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள்தான். தமது சக பிரஜைகளினாலேயே சாதியின் பெயரால் மறுக்கப்பட்டிருந்த பல சமூகநலத் திட்டங்களை சிங்கள அரசாங்கத்தின் உதவியுடன்தான் தலித் மக்கள் பெற்றுக்கொள்ள முடிந்தது. சாதிய ஆசாரங்களால் மறுக்கப்பட்டிருந்த கல்விஇ பொருளாதாரஇ கலாச்சார மற்றும் போக்குவரத்து துறைகள் அனைத்திலும் தலித் மக்கள் பங்குகொள்ள வாய்ப்பளித்தது சிறீலங்கா சதந்திரக் கட்சி அறிமுகப்படுத்திய தேசிய மயமாக்கல் கொள்கைகள்தான். இந்தநிலையில் வடக்கிலிருந்த ஒருபகுதி மக்கள் மேற்கைநோக்கி தமது நம்பிக்கையினை வெளிப்படுத்திய கால கட்டமாக அது இருந்தது என்றவாறாக பல வரலாற்று உண்மைகளை மீள அசைபோட வகைசெய்தது இந்த நிகழ்வு.

    நோர்வேயிலிருந்து இக்கருத்தரங்கிற்காக விசேடமாக வருகைதந்திருந்த ரவூப் ஹாசிம் அவர்களின் உரை மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. அதாவது 1970 களில் அரசியல்வானில் முக்கியத்துவம் பெற்றிருந்த பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றிருந்தவர் அவர். அமைச்சராக இருந்த பதியுதீன் முஹமூத் அலர்கள் மற்றும் எம..சி சப்பிரமணியம் போன்றவர்களும் இதில் அடங்குவர். ஹாசிம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் அவர்களுடன் பழகிய முக்கியத்துவம்வாய்ந்த சில நிகழ்வுகளை நினைவுகூர்ந்ததுடன் இனப்பிரச்சினைத் தீர்வுபற்றி பலரும் தட்டிக்கழிக்கின்ற ஒரு விடயத்தினை. சுட்டிக்காட்டினார். அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது பல்வேறுபட்ட உள்ளக முரண்பாடுகளையும் தீர்த்துக்கொள்ளும் வாய்ப்புக்களையும் வழங்கவேண்டுமெனத் தெரிவித்தார். ஏகப் பிரதிநிதித்துவங்களிலும் ஏனைய தமிழ் தேசியவாத அமைப்புக்களிலும் கண்டும் காணாமல் விடப்படுகின்ற உள்ளக முரண்பாடுகள் ஒரு தலித் அரசியலில் முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினை ஹாசிம் அவர்களுடைய கருத்துக்கள் வலியுறுத்தின. அதேபோன்று இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு ஏனைய சமூகங்களினதும்இ இனங்களினதும் முற்போக்கு அணிகளுடன் எமது வேலைத் திட்டங்களை பரவலாக்கவேண்டுமென அவர் தெரிவித்தார்.. அதாவது தமிழ் தேசியம் என்னும் பெயரிலுள்ள ஆதிக்க சக்திகள் ஒருபோதும் தலித் அரசியலை ஏற்றுக்கொள்ளப்போவதில்லைஇ ஒடுக்கபபட்ட மக்களின் ஒருமித்த கைகோர்ப்பே பரந்துபட்ட மக்களின் விடியலைநோக்கி நம் எல்லோரையும் நகர்த்துமென்பது அவரது பார்வை மட்டுமல்ல அதுவே உண்மையும்கூட. இன்று தமிழ் தேசியத்தால் ஓரங்கட்டப்பட்ட முஸ்லிம்கள் தமது சமூகத்தின் உள்கட்டுமானங்களை இழந்துவிடாமல் தனிவழியே செல்கின்றார்கள். தமிழ் தேசியத்தினை மறுத்து வெளியேறிய கிழக்கு தமிழர்கள் இன்று பல்லாயிரம் இளம் உயிர்களை பலிகொடுக்காமல் பாதுகாத்திருக்கின்றார்கள். இதுபோன்ற நேசசக்திகளுடன் கொள்கின்ற உறவுகளும்இ உரையாடல்களும் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமூகங்கள் என்னும் வகையில் யாழ்ப்பாணத்து தலித் மக்களுக்கும் அவர்களது போராட்டங்களுக்கும் வலுச்சேர்க்கும் என்னும் அடிப்படையில் நிகழ்வில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தலித்சமூக மேம்பாட்டு முன்னணியினரின் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை.

    உரையாடலில் பங்குகொண்ட கீரன் அவர்கள் தலித் சமூகமேம்பாட்டு முன்னணியினரின் வேலைத் திட்டங்கள் விரிவுபடுத்தப்படவேண்டியதன் அவசியத்தினை சுட்டிக்காட்டினார். லண்டனில் கலாநிதி திஸ்ஸ விதாரண அவர்களை சந்தித்து தலித் அறிக்கையினை கையளிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் தீர்வுத் திட்டத்திற்கான ஆலோசனைக் குழுக்களிலும் சர்வகட்சி மகாநாடுகளிலும் தலித் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கெடுக்கவேண்டும். எதிர்வருகின்ற வடமானகாண சபைத் தேர்தலில் தலித் அமைப்புக்கள் நேரடியாக களமிறங்கவேண்டும்இ யாழ்ப்பாணத்து மேட்டுக் குடிகள் எல்லாம் வெளிநாடுகளுக்கு ஒடிவந்துவிட்ட நிலையில் இன்று யாழ் குடாவில் வாழ்கின்ற 80 வீதமான மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களே! இன்று இருக்கின்ற 22 கூட்டமைப்பு எம்.பிக்களில் ஒருவர்கூட இந்த மக்களின் பிரதிநிதிகளாக இல்லை எனவேதான் தலித் தனித்துவம்பற்றி நாம் கவனம்கொள்ளவேண்டும். இடதுசாரி வேலைத் திட்டங்களுடன் இணைந்து தலித் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணலாமென்பதுபோன்ற கருத்துக்கள் அபத்தமானவை என்கின்ற பல்வேறுபட்ட கருத்துக்களை கீரன் முன்வைத்தார். இறுதியாக உரையாடலில் பங்குகொண்ட பிரபல நாவலாசிரியர் சோபா சக்தி அவர்கள் சாதி எதிர்ப்புப் போராட்டங்கள்பற்றிய நூலில் பல வரலாற்ற குறிப்புகள் அடங்கியிருக்கின்றன என்ற வகையில் அது மிகவும் முக்கியமானதொரு நூல் என்றும் ஆனாலும் அந்நூலின் எழுத்தாளர்கள் புதிய ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் என்ற வகையில் அந்நூலானது இடதுசாரிப் பார்வையினூடே தலித் அரசியலை அணுகுகின்றது என்பதனை நாம் மிக அவதானமாக நோக்கவேண்டுமெனத் தெரிவித்தார்.

    மேற்படி நிகழ்வானது லழமையான இலக்கிய அரசியல் முகங்களுடன் மட்டுப்படாது சமூகவிடுதலையில் அக்கறைகொண்ட மேலும் பல புதியவர்கள் கலந்துகொண்டதனூடாக சிறப்பு பெற்றது. தலித் விடுதலைபற்றிய புரிதல்கள்இ இலக்கிய வட்டங்களைத் தாண்டி சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்து வருவதன் அடையாளமாகும். நிகழ்ச்சிகளை கவிஞர் அருந்ததி அவர்கள் தலைமைதாங்கி நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

    நன்றியுடன் –எம்.ஆர் ஸ்ராலின்

  9. //….உண்மைதான்! நல்லகாலம் !!!இல்லை எண்டால்
    இப்ப சாமத்தியச்சடங்கில காலில விழக்கூடியதா இருக்குமோ!!!…//

    மிக..மிக இனிய சுகன்,
    என்ர கருத்தை ஒருக்கா திருப்பி..திருப்பி வாசியப்பன்!!
    சும்மா கவிதை எழுதிறன் எண்டு இல்லாத சொல்லை கற்பனையில கொண்டு வந்து கதை விடாதை மோனை!!
    (இலங்கையிலும் சரி ஐயரின் காலில் எவரும் விழுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா)
    நான் எங்கையடாப்பா ‘ஐயர்’ எண்ட சொல்லை பாவிச்சனான்? நீயே கற்பனையில கேள்விக்கு மேல கேள்வி கேட்டு இமோசனலாகிறாய்?
    நான் சொன்னது சாமத்தியச்சடங்கு…காலில விளுறது…உதுக்கு நீயேன்ரா ஐயர் எண்டு இழுபடுறாய்? அதுசரி நீங்கள் ‘கவிதைக்காறர்’ தானே? கவிதைக்கு பொய் அழகு தானே?

  10. //…தனிமனித அவதூறுகள் குறீத்து மிகவும் அவதானமாகவும் விழிப்போடும் இருங்கள்….///

    //..கேள்விச்செவியன் ஊரைக்கெடுத்ததுதெரியுமா?..//

    ஐயர் எண்டு நான் சொல்லேல்ல. அதோட நீங்கள் காலில விழுந்ததெண்டும் சொல்லேல்லை. நீங்களே ஊகிச்சுப்போட்டு ‘கேள்விச்செவியன்’ ‘ஊரைக்கெடுத்தது’ ‘அவதூறுகள்’ ‘லட்சுமிகாந்தன்’ அது இது எண்டு கதை விடுறியள்!!! கேள்விச்செவியன் ஊரைமட்டும்தான் கெடுத்தான்! கண்ணிருந்த்தும் ஒழுங்கா வாசிக்கத்தெரியாமல் கதை விடுறவன் நிலை? ஒருவேளை உங்கட ஞானக்கண்ணுக்கு நான் எழுத்தாததெல்லாம் தெரிஞ்சுதோ?

  11. ஜமுனா மாமாவுக்கு மூளையில்லை என்பதற்கு ஒரு திருத்தம் வேண்டுகிறேன். முன்னர் அவர்பற்றிய என் பதிவு ஒன்றில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் செத்த மூளை என்று குறிப்பிட்டதாக நினைவு. அதற்கும் ஒரு திருத்தம்,
    அவருக்கு மூளை இருக்கிறது,அது இன்மையில் இருக்கிறது.

  12. இனியரகு!!
    சரி,காலிலை விழுகிறது எண்டு குறிப்பிட்டீர்கள்;
    அது ஆருடைய கால் என்று அறிய ஆவல்!

  13. ரகு !
    உங்களுக்கு ஒரு பால்போச்சியை வாங்கித் தருவதைவிட என்னால் வேறொன்றும் செய்ய முடியாது.

  14. சாதிய போராட்டம்> தேசிய விடுதலைப்போராட்டம் என்ற எதுவுமே சாதியத்தை இங்கு தகர்த்துவிடவில்லை. தலித் போராட்டம் கூட இங்கு சாத்திய படாத ஒன்று தான். எழுத்தும் வாசிப்பும் மட்டுமே மனச்சாட்சியை உலுப்பக் கூடியவை. வன்முறைகள் விகாரத்தை மட்டுமே வளர்த்துவிடும் என்பது அனுபவ உண்மை. இன்றைய யதார்த்தத்தில் தலித்துக்கள் தான் வடக்கில் பெரும்பான்மை என்பது உண்மையாக இருக்கலாம். ஆளால் அவர்களின் பிரச்சனை வேறு. வாழ்வாதாரம் திருப்தியாக இருக்கும்போது மட்டுமே அதிகாரங்களை பற்றி யோசிக்க முடியும். மறுதலையாக> அதிகாரங்கள் இருக்கும்போது தான் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்த முடியுமென கூறலாமாயினும் இன்றைய தேசிய இன பிரச்சனை என்ற பொய்முகம் தரித்த யுத்தம் ஓய்வுக்கு வரும்வரை நியாயமான புரட்சி ஒன்றுக்கான சாத்தியங்கள் அரிதானது.

  15. பின்னூட்டங்கள் பெரும்பாலானவை பொறுப்பற்று தனிதமனித தாக்கதல்களில் இறங்குபவை. மனஉளைச்சல் ஏறபடுகிறதோ இல்லையோ ரவி …நீங்களுமா?

  16. தோழர் சுகனிடம் பலர் கேட்ட கேள்விகள் சாமத்தியச்சடங்கு பற்றியது. யார் இவ்வதந்தியைப் பரப்பியது?ஆனால் நல்ல பதில்.நான் அறிந்தவரை எம்ஊர்களில்அச்சடங்கில் சலவைத்தொழிலாளி(கட்டாடியார்)தான் பால்வைக்கும் நேரம் உட்பட மாற்றுத்துணி வெள்ளை கட்டல் என பிரதான பாத்திரம் வகிப்பார்.தோழர் சுகன் அவரது கால்களில் விழுந்திருப்பார் என யாரும் சொன்னால் நம்பலாம். சுகனின் பின்னூட்டங்களின் இடைவெளிகளைப்பார்க்கும் போது அவருக்கு இவ்வாறான அவதூறுகள் மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட காரணமாகியுள்ளன என்பதுதெளிவாகிறது.

  17. //…ரகு !
    உங்களுக்கு ஒரு பால்போச்சியை வாங்கித் தருவதைவிட என்னால் வேறொன்றும் செய்ய முடியாது….//

    நீங்கள் விமானப்பணிப்பெண்ணிட்ட முலையில பால் கேட்கலாம் எனக்கு மட்டும் ஏன் பால்போச்சி? ஏன் சுகன் இந்தப் பாரபட்சம்?

    இது இந்தியா அணுகுண்டு செய்து கொண்டு ஈழத்துக்கு அஹிம்சை போதிக்கிறது மாதிரியும் சாயிபாபா ஏழையளுக்கு விபூதியும் பணக்காறருக்கு தங்க மோதிரமும் கொடுக்கிற மாதிரியெல்லோ இருக்கு!

    மற்றது சுகன் கனபேர் கனகாலம் மாற்றுக்கருத்து, ஜனநாயகம் எண்டு பல பாலுகளை ‘போச்சியில’ குடுத்து இப்ப தங்கட முலைகள் கூட போலியானது எண்டு ‘கையெழுத்து’ போட்ட விசயத்தால பிடிபட்டு நிக்கினம்!!!!

  18. சுகன் -அந்த விமானப் பணிப்பெண் கவிதையை ஒருமுறை மீள்பிரசுரம் செய்யுங்கள்..
    மறு வாசிப்புக்காக…ப்ளீஸ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *