‘ஜேர்னலிஸ்டு’ லட்சுமிகாந்தன் கவனத்திற்கு!

கட்டுரைகள்

-சுகன்
முப்பதாண்டு காலத்திற்கு மேலாகவே ஈழ ,புகலிட அரசியல் -இலக்கிய ஊடகத்தளங்களில், கருத்து, பேச்சு, எழுத்து, சனநாயகத்திற்கான போராட்டம், மாற்றுக் கருத்து இவற்றின் தளத்தில் இயங்குபவர்களில் பலர் மிகவும் பொறுப்போடு கையெழுத்திட்டு அறிவுறுத்திய “அவதூறுகளிற்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல” என்ற கூட்டறிக்கையை எவ்வித கவனத்திற்கும் எடுக்காது அவர்களை எள்ளி நகையாடி ,நான் நினைத்ததைத்தான் செய்வேன் என திமிர்த்தனத்தோடு ‘தேசம் நெற்’றும் ஜெயபாலனும் நின்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்.

முதலில் நீங்கள் ஒன்றை விளங்கிக்கொள்ளவேண்டும், முந்தநாள் மழைக்கு நேற்று முளைத்த ‘ஜேர்னலிஸ்டு’களல்ல நாங்கள்.இன்னும் சரியாகச் சொல்லப்போனால் எம்மை ‘ஜேர்னலிஸ்டு’களாக நிறுவ நாம் எப்போதும் பிரயத்தனம் எடுத்துக்கொண்டதில்லை. மிக நீண்ட போராட்ட வரலாறும் எழுத்து வரலாறும் எமக்கு உண்டு. நிறையவே பத்திரிகைகளையும் ஊடகங்களையும் உருவாக்கியவர்கள்.சனநாயக மறுப்பு, பாசிச ஊடகங்களைத் தவிர மற்றெல்லாவகை வெளியீடுகளிலும் நமது உழைப்பு உண்டு. பத்துப்பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் இப்பிடித்தான் என முக்கிக் காட்டினாளாம் என ஊடக தர்மத்தைப் பற்றி நமக்கு ஏடு துவக்கவேண்டாம்.

போன கிழமையளவில் மிக நீண்டகாலமாகவே மாற்றுத்தளத்தில் இயங்கிவரும் நமது தோழர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். தோழர் இரண்டு மாதமாக பாரிசில் இல்லை,நாட்டு நடப்பு என்ன, மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?என அவர் வினவ அமில மழை பொழிகிறது தேசத்தில் என நமது கையெழுத்து அறிக்கையை அவருக்கு விளக்கமளித்தபோது அவர் சொன்னார், “என்ரை பேரையும் சேர்த்திருக்கலாமே!” என. அவருக்கு வயது அறுபத்தைந்து. எனக்கு வயது நாற்பத்தி ஆறு.நாங்கள் யாரும் சிறுபிள்ளைத்தனமாக எதையும் செய்ய வாய்ப்பில்லை.

சமூகப்பொறுப்போடுதான் எல்லோரும் இயங்குகிறார்கள் உங்களைத்தவிர, என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.மாற்றுத்தளங்களில் இயங்குகிற தோழர்களை அவதூறு படுத்தி, கொச்சைப்படுத்தி அவர்களை ‘கரக்ரர் அசாசினேசன்’ செய்து அதற்குவேறு நியாயம் வேறு கற்பித்து அவர்களின் சொந்த பொதுவாழ்வில் சங்கடங்களை உருவாக்கி… இதற்குப்பேரா ஊடக தர்மம்.இவ்வளவு பேர் எடுத்துச்சொல்லியும் உங்களுக்குப் புரிகிற மாதிரித்தெரியயில்லையே!

சில நாட்களுக்கு முன்னர் ஒரு பின்னூட்டம் வந்தது தேசத்தில்,எப்படி? “தலித் முன்னணித் தோழர் தேவதாசன் கனடாவில் கற்சுறாவின் வீட்டில் பாத்திரங்களோடு பாத்திரங்களாக குசினிக்குள் தன் நோக்கத்தை நிரைவேற்றினார்.” இதற்கு என்ன அர்த்தம் தோழரே! ஜெயபாலன் வீட்டுக் குசினிக்குள் பாத்திரங்களோடு பாத்திரமாக சேனன் தன் நோக்கத்தை நிறைவேற்றினார் என்று எவராவது எழுதினால் நீர் போடுவீரோ! எவ்வளவு கேவலமான சிந்தனையும் எழுத்தும். இதற்குப் பெயரா ஜேர்னலிசம்! இதற்குப் பெயரா ஊடகம் ! இதுவா கருத்துச் சுதந்திரம்? உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

தோழர் சபாலிங்கம் படுகொலை தொடர்பாக ஒரு பின்னூட்டம் வருகிறது, “சபாலிங்கம் தன்னிடம் அகதி விண்ணப்பம் எழுத வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததால் அவர் அண்ணன் அதனால் ஆத்திரமடைந்து கொலைசெய்ததாக” ஒரு இணையம் எழுத அதற்கு எந்த சங்கடமுமின்றி இணைப்புக் தேசம் இணைப்புக் கொடுக்கிறது. கருத்துச் சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் வேறு எவராவது இந்த வேலையைச் செய்வார்களா உங்களைத் தவிர? இது கிசு கிசுகளையும் பரபரப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு பத்திரிகை நடத்திய ‘இந்து நேசன்’ லட்சுமி காந்தன் வழியும் நெறியும் அன்றி வேறென்னவாம்! எனக்கு லட்சுமி காந்தனையும் அவர் கொலையையும் நினைவிற்குக் கொண்டுவந்ததற்கு தேசம் தான் காரணமேயன்றி கொலைக் கலாச்சாரம் காரணமல்ல. அடேயப்பா! நான் கொலை மிரட்டல் விடுகிறேனாமே!அதுவும் சின்னப்பிள்ளைத் தனமாக !இதுதான் சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது.

பகுத்தறிவு இருந்தால் தேசத்துடன் லட்சுமிகாந்தனையும் தியாகராஜா பாகவதரையும் ஏனொருவர் நினைவுபடுத்தி யோசிக்கவேண்டும், அது எதனால் விளைந்தது?இதைத் தவிர்க்கவே முடியாதா? ஊடகத்தைக் கையில் வைத்துக்கொண்டு கிசுகிசுக்களை எழுதி மாறுதளங்களில் இயங்குகின்ற தோழர்களையும் அவர்கள் அமைப்புகளையும் சேறடிக்கிறோம் என்று வரும் விமர்சனங்களுக்கு பொறுப்பு யார்? இப்படி யோசிக்க முடிந்திருக்கும். ஆரம்பத்தில் நம்மோடு இயங்கிய நமக்கு ஆதரவளித்த நண்பர்கள் இப்போது நம்மை விட்டு விலகியது ஏன்? நம்மைக் கண்டிப்பது ஏன்?இப்படியெல்லாம் சிந்திக்க வழி பிறந்திருக்கும். ஒருமுறை மாத்தயா ஏ.ஜே. கனகரட்னாவிடம் சொன்னாராம், “ஆரம்பத்தில் நம்மை ஆதரித்த நல்ல சக்திகள், அறிஞர்கள் ஆதரவு இப்போது எங்களுக்கு இல்லை..”என. அதற்கு ஏ.ஜே. சொன்னாராம், “இப்போது உங்களுக்கு விளங்கவேணும் நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என.”

சும்மா சுகன் கொலைமிரட்டல் விடுகிறார் என யேர்னலிஸ்டுகள் என உங்களுக்கு நீங்களே ஏற்படுத்திக்கொள்ளும் பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ‘பில்டப்’ கொடுக்கவேண்டாம். உங்களுக்கு கொலைமிரட்டல் விட்டது என நீங்கள் ஓலமிடுவது சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது. லட்சுமிகாந்தன் உதாரணம் உங்களுக்கு கொலைமிரட்டலுக்கான உதாரணமல்ல,உங்கள் பத்திரிகை வழிக்கான உதாரணம்.கேட்கக் கசப்பாகத்தான் இருக்கும்.

உங்கள் அண்ணன் தனபாலனின் மிகவும் நேசத்திற்குரிய தோழன் என்ற அடிப்படையிலும் உங்கள் வீட்டிற்கு அண்ணன் தொடர்பில் வந்து போனவன் உங்கள் தாய் தந்தையரை சகோதரிகளை நேசத்துடன் மதித்தவன் என்ற உரிமையோடு உங்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லலாம். கசப்பை விரும்பியே வாழ்க!.இது நான் ஏற்படுத்திய பழமொழியல்ல,எனது விலங்கியல் ஆசிரியர் சிவபாதம் எனக்கு எழுதித்தந்தது.

தேசம் நெற்றில் ஒரு பின்னூட்டத்தில் தோழர் ஆரூரன் இப்படியாகச் சொல்லியிருந்தார்: “ஒரு தனிநபரிற்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் அவ் விமர்சனங்களுக்கு ஆதாரங்களை முன்வைத்தல் வேண்டும். அல்லது அவ் விமர்சனங்கள் ஆதாரபூர்வமானவை என்பது உங்களுக்குத் தெரிந்திருத்தல் வேண்டும்.”

செத்துப்போன யோகர் சுவாமிகளின் கருத்துகளை கவனத்திலெடுக்கும் நீங்கள் உயிரோடிருக்கும் ஆருரனின் கருத்தையும் கொஞ்சம் கவனத்தில் எடுக்க வேண்டும். “உண்மையை எழுதுங்கள், உண்மையாக இருங்கள் அல்லது ஏசுவார்கள்! எரிப்பார்கள்!!” என்று முன்பொருமுறை ஜோர்ஜ் குருஷேவ் தாயகத்தில் எழுதியதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக 74 பேர் சேர்ந்து அறிக்கை வெளியிட்டார்கள் என்று கொக்கரிக்கிறீர்களே இதைவிட ஒரு மெகா அவதூறு உண்டா? வடிகட்டிய பொய்யுண்டா? அண்டப் புழுகுண்டா? அற்பத்தனமுண்டா? நாங்கள் அந்த அறிக்கையில் இரண்டு விடயங்களைத் தெளிவாக வலியுறுத்தியிருந்தோம்:

1. கடந்த காலங்களில் தேசம் இணையத்தளத்தில் ஆதாரங்களில்லாமல் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களைத் தேசம் ஆசிரியர் குழுவினர் வெளியிட வேண்டும். ஆதாரங்களை வெளியிட முடியாத பட்சத்தில் தேசம் இணையத்தளம் ஊடக நெறிகளின்படி வருத்தம் தெரிவித்தாக வேண்டும்.

2. செய்திகள், கட்டுரைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல் (அவை தனிநபர்களையோ அமைப்புகளையோ நேரடியாகவோ மறைமுகமாகவோ அவதூறு செய்யும் நோக்கில் எழுதப்பட்டிருப்பின்) பிரசுரிப்பதை நிறுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளுக்குக் கருத்துச் சுதந்திரத்துக்கு மறுப்பென்றா பெயர்? நாங்கள் உங்களைத் தேசத்தை நிறுத்தவா சொன்னோம்? அவதூறுகளைத்தானே நிறுத்தச் சொன்னோம். அவதூறுகளுக்குத் தடையென்பதை கருத்துச் சுதந்திரத்திரற்குத் தடையென நீங்கள் புரிந்துகொண்டதிலும் ஒரு கேவலமான ‘லொஜிக்’ இல்லாமல் இல்லை. நண்பா லட்சுமிகாந்தா! அவதூறுகளே கருத்துகள்தான் என்பதுதானே உங்கள் நிலைப்பாடு.

‘நானும் இன்னுஞ் சிலரும் ‘செற்’பண்ணி அசோக்குக்கு அடித்துவிட்டோம்’ என்று இன்றுகூட ஒரு கலப்பிடமில்லாத அவதூறு தேசத்தில் வெளியாகியிருக்கிறது. கிட்டத்தட்ட இந்த வதந்தி தேசத்தில் ஐம்பது தடவைகள் அச்சேறியிருக்கிறது. இதற்கு ஏதாவது ஆதாரமுண்டா? வழக்குண்டா? வகையுண்டா? எதுவுமே கிடையாது. “இந்தத் தாக்குதல் சம்பவத்தை பாரிஸில் எல்லோரும் அறிவார்கள்” என்று ஒரு பின்னூட்டம்வேறு வெளியாகியிருந்தது. அதுவும் தவறான செய்தியே. ஏனென்றால் “நாங்கள் அசோக்கிற்கு அடித்தோம்” என்ற செய்தி எங்களுக்கே தேசம் நெற்றைப் பார்த்துத்தான் தெரிய வருகிறது என்றால் பாரிஸ் மகாஜனங்கள் எங்களுக்கு முன்பு எவ்வாறு இந்தச் செய்தியை அறிந்திருக்க முடியும். இந்த ஆதாரமற்ற கற்பனைச் செய்தியை வெளியிட்டதால் உங்களுடைய இணையம் சூடு பிடிக்கும். ஆனால் இந்த அவதூறால் பாதிக்கப்படப்போகும் எங்களைப் பற்றி இதைப் பிரசுரிப்பதற்கு முன்பு நீங்கள் ஒருகணம் யோசித்தீர்களா? இந்தச் செய்தியை நீங்களோ அல்லது வதந்தியைப் பரப்பி அனுதாப அரசியல் செய்யும் நபரோ நிரூபிக்கும் பட்சத்தில் நான் எழுதுவதையே நிறுத்தத் தயார்! நீங்கள் நிரூபிக்கத் தயாரா? நிரூபிக்க முடியாத பட்சத்தில் பகிரங்க வருத்தம் தெரிவிக்குமளவிற்கு உங்களிற்கு யோக்கியமுண்டா?

அசோக் மீதான தாக்குதல், வானொலி நிலையக் கொள்ளை என நீங்கள் எல்லாவற்றையும் அம்பலப்படுத்தலாம். அது உங்களின் உரிமை. அது உங்களைப் போன்ற சிறப்புப் புலனாய்வு ‘ஜேர்லனிஸ்டு’களின் கடமை. ஆனால் நீங்கள் ஆதாரத்தோடு இந்தச் செய்திகளை நிரூபிக்க வேண்டும். அதற்கு வக்கில்லாத பட்சத்தில் தவறான செய்திகளையோ பின்னூட்டங்களையோ வெளியிட்டதற்கு நீங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதைத்தானே அந்தக் கூட்டறிக்கையில் கோரினோம். நீங்கள் இதைச் செய்யாதவரைக்கும் தேசம் ஒரு கிசுகிசு டொட் கொம்தான். ஜெயபாலனின் ஜேர்னலிசம் லட்சுமி காந்தனின் ஜெர்னலிசம்தான்.

நமது ‘கொரில்லா’ நாவலில் ஒருவரி வரும்; “உங்கண்டை மனிசிக்கு எனக்கு ஓக்க ஆசையா இருக்கெண்டு நான் சொன்னா அது கருத்தோ?” …என்று. அதிகாரபூர்வமான கருத்திற்கும் மாற்றுக்கருத்திற்கும் உரையாடலிற்கும் அபத்தத்திற்கும் வித்தியாசம் தெரியவேணும். இல்லை ஒண்டையும் கண்டுக்கமாட்டோம் எண்டால் மற்றவர்கள் ஒண்டும் செய்ய முடியாது,நீங்கள் கண்ணுக்குள் எண்ணை விடுவீங்களோ,தலையிலை மண் அள்ளிப்போடுவீங்களோ உங்கள் தெரிவு,உரிமை; ஆனால் அடுத்தவர்களை அவமானப்படுத்த உங்களுக்கு உரிமையில்லை.தேசத்திற்கு கிசு கிசு இனைப்புக் கொடுக்க உங்களுக்கு பொத்துக்கொண்டு வருகிறது,இதே மனோபாவத்தையும் தர்மத்தையும் நீங்கள் மற்றவர்களிடமும் கடைபிடிக்கவேண்டுமென உங்களிடம் எதிர்பார்ப்பது அதிகமா? பல இணையத்தளங்கள் உங்களுக்கான இணைப்பையே அகற்றிவிட்டார்கள் என்பது தெரியுமா, சாது மிரண்டால் காடு கொள்ளாது தெரியுமா?

பெருந்தலைவர் எம்.சி.யின் மேற்கோளோடு இதை முடிக்கலாம்.”அறம்தான் ஆயுதங்களிலே கூர்மையானது,ஆனால் அது நேர்மையானது;அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு அது யாரையும் தாக்காது;தாக்க ஆரம்பித்தால் அது தோற்காது.”

பிற்குறிப்புகள்:

1: நீங்கள் என்னைப் பிள்ளையானிஸ்டு எனச்சொன்னால் அதை எனக்கான கெளரவமாகவே கொள்வேன்.அதற்காக உங்களுக்கு நன்றி!ஆனால் உங்கள் நோக்கம் வேறு.

2: தனிமனித தாக்குதலும் அவதூறும் பற்றிய உரையாடலில் அப்போது எழுத்தாளர் எஸ்.அகஸ்த்தியர் நமக்குச் சுட்டிக் காட்டிய உதாரணந்தான் லட்சுமிகாந்தன் கொலை.அதைக் குறிப்பிடாமல் இருப்பது இருட்டடிப்பாகக் கொள்ளப்படலாம்.அகஸ்தியருக்கு எப்போதும்போலவே எனது மரியாதையும் நன்றியும்.

3. ஆசிரியர் சிவபாதத்தைப் பற்றிய சிறுகுறிப்பொன்று :வாசகர்களுக்கும் உங்களுக்கும்!!அவர் விலங்கியல் ஆசிரியர் அல்லவா!அவரிற்கு உடலம், எலும்புக்கூடுகள் இவற்றின் பெறுமதி தெரியும். ஒருமுறை புலிகள் கொன்றுபோட்ட TELO தோழர் ஒருவரின் சிதைந்த உடலை அவர் கண்டார். புலிகள் அவ்வுடலினை எடுக்க விடவில்லை,அங்கு காவலிற்கு நின்ற (காவலுக்கு என எழுதாமல் காவலிற்கென எழுதுவதன் காரணம் என்னவோ? வேறென்ன நாங்களும் தமிழ் ஜேர்னலிஸ்டுகள் தான்) புலியை ஏதோமாதிரி சமாளித்து விளங்கப்படுத்தி,நன்றாகக் குடித்துவிட்டு அவ்வுடலைப் பெற்றுக்கொண்டு சதைகளை எல்லாம் பிய்த்து அடக்கம் செய்துவிட்டு எலும்புக்கூட்டை எடுத்துப்போக ரெலோத் தோழரின் உறவினருக்கும் அவரிற்கும் பிரச்சனையாகிவிட்டதாகவும் அவரின் அச்செயல் காட்டுமிராண்டித்தனமானதெனவும் வடமராட்சித் தோழர் ஒருவர் சொல்லக் கேட்டேன்.

40 thoughts on “‘ஜேர்னலிஸ்டு’ லட்சுமிகாந்தன் கவனத்திற்கு!

  1. சுகன் அவர்களே,தேசத்தை நீங்கள் திருத்தமுடியாது. சாம் தனது பினோட்டத்தில் தெரிவித்தது போல நாய் வாலை நிமிர்த முடியாது. வேண்டுமென்றால் அதனை ஒட்ட நறுக்காலாம் என நான் நினைக்கின்றேன்.

  2. சுகன் இப்போதுதான் நீங்கள் புரியும்படி எழுதக்கற்றுக்கொண்டீர்கள். ஜெயபாலனுக்கு நன்றி.

  3. சுகனாரே,நான் தேசத்தில் பலகாலமாக பின்னோட்டம் விடுபவன்.பல தனிநபர் தாக்குதல்களையும் மேற்க்கொண்டேன். அவைகள் யாவும் ஆதாரத்துடன் என்னால் நிரூபிக்கக்கூடியனவையே. அவற்றில் பலவற்றை தேசம் தணிக்கை செய்துவிட்டது.ஆனால் பின்னர்தான் தெரியவந்தது தேசம் தனக்கும் தனக்கு சார்பானவர்களையும் பற்றி வரும் பின்னோட்டங்களை அது உண்மையோ,பொய்யோ,அல்லது அவர் சார்ந்த அமைப்பில் அவர் செய்த தப்போ எதுவாகினும் அதனை மட்டுமே தணிக்கை செய்ததை என்னால் அறியக்கூடியதாகவிருந்தது.

    அதற்க்கு இலகுவான ஓர் உதாரணம் ஜெயபாலன் பற்றி கீரன் என்பவர் சில கேள்விகளைக்கேட்டார்.பொது மகனிலிருந்து பிரதமர் வரை அவர்களின் வண்டவாளத்தை தேசத்தின் தண்டவாளத்தில் ஏற்றுவதுதான் தன்நோக்கம் என்று கூறிக்கொண்டும், பின்னோட்டத்தில் வரும் கருத்துக்களுக்கும், விமர்சனங்களுக்கும் தாம் பொறுப்பல்ல என்று விதண்டாவாதம் விட்டுக்கொண்டிருக்கும் தேசம் ஜெயபாலன் அதனை பிரசுரிக்கவில்லை..கீரன் தனது விமர்சனங்களைப் பிரசுரிக்காவிட்டால் மின்னசல் மூலம் வெளியிடுவேன் என்று மிரட்டி அதனைப் பலருக்கும் அனுப்பியதைப் பார்த்துவிட்டு அச்சம் கொண்டு குமாரியின் துணையுடன் ஜெயபாலன் அதனை அவசர அவசரமாக தேசத்தின் தண்டவாளத்தில் ஏற்றினார்.

    என்ன நடந்தது? ஜனனாயகம்,கருத்துச்சுதந்திரம் பற்றிப்பேசும் தேசம் ஏன் இதனை உடனடியாகப் பிரசுரிக்கவில்லை?தணிக்கை செய்ததன் மர்மம் என்ன? என்ற விவாதம் தான் உண்மையில் நடந்திருக்கவேண்டும் ஆனால்,அதனை மொட்டைக்கடதாசி என்றும் போய் பாக்கிற வேலையை பாருங்கோ வேலை இல்லாத எவனோ எதையோ புடிச்சு எதையோ செஞ்சான்.
    கீரனுக்கு வேற வேலையே இல்லையா? இதெல்லாம் ஒரு விடயமெண்டு என்ன தேவை கருதி ஏன் அனுப்புகிறார் ???..இப்படியெல்லாம் விதண்டாவாதப் பின்னோட்டங்கள் வேறை.மொட்டைக்கடதாசி என்றால் அதன் வரைவிலக்கணம் என்னவென்று தெரியாதவர்களெல்லாம் பத்திரிகை ஆசிரியர்கள்.ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூச்சக்கரை தான் தேசம்நெற்றும். அதனாலை அதன் ஜனனாயகம் கருத்துச்சுதந்திரம் பற்றிச் சொல்லத் தேவையில்லை. “ஊருக்கு உபதேசம் உனக்கில்லடி” இதுதான் அவையின்ரை கொள்கை.
    நீங்கள் தான் தேவையில்லாமல் அவர்களை பெரியமனுசரா ஆக்க அடிகோலுறியள்.

  4. நாக்குப்பிடுங்கிற மாதிரி நாலு கேள்விகள் என்று இதைத் தான் சொல்வதா?

  5. சுகன் எச்சரிக்கையாக இருங்கள்! நீங்கள் ஜெயபாலனை எச்சரித்ததை என்வாய் ப்ளேய் பண்ணுகிறார்கள். தேசம் நெற்றில் சுகன் சோபாசக்தி ராகவன் ஆகிய மூவருக்கும் மரணதண்டனைக்கும் அப்பால் தீர்ப்பிடப்பட்டிருக்கிறது. அத்தனைசமூக சீர்கேடுகளுக்கும் இவர்களே முக்கிய காரணம். இவ்ரகள் கொல்ப்படுவதில் எந்தவித தயக்கமும் காட்டத்தெவையில்லை என்ற மறைபொருள் தொனி தேசம் நெற்றுக்கூடாக பரவவிடப்பட்டிருக்கிறது. ஆக தேசம் நெற் வாசகர்கள் உங்கள் மரணத்திற்காக காத்திருக்கிறார்கள் தங்கள் சந்தேசத்தை கொண்டாடுவதற்கு. உங்களுக்காக கையெழுத்திட்ட 71பேரும் அறிவுஜீவிகளாக இருக்கலாம். ஆனால் கொசு அடிக்கக்கூட லாயக் இல்லாதவர்கள். ஆனால் தேசம் நெற் வாசகர் அப்படியல்ல. பெண்ணியம் பற்றியும் அதிரடி கூட்டுக்கலவி இன் பிற நுண்தளங்கள் பற்றி தோழர் சேனன் பக்கம் பக்கமாக வகுப்பெடுத்தும் ஜெயபாலனுக்கே மண்டைக்குள் மில்லி மில்லிமீற்றர்கூட நகரவில்லை. பிறகு வாசகர்கள் எம்மாத்திரம்?
    உங்களால் தங்களுக்கு ஆபத்தில்லை என்பதை தெரிந்துகொண்டே அவர்கள் விளையாடுகிறார்கள். எச்சரிக்கையாயிருங்கள்.

  6. எம்மை ‘ஜேர்னலிஸ்டு’களாக நிறுவ நாம் எப்போதும் பிரயத்தனம் எடுத்துக்கொண்டதில்லை. மிக நீண்ட போராட்ட வரலாறும் எழுத்து வரலாறும் எமக்கு உண்டு. நிறையவே பத்திரிகைகளையும் ஊடகங்களையும் உருவாக்கியவர்கள்.சனநாயக மறுப்புஇ பாசிச ஊடகங்களைத் தவிர மற்றெல்லாவகை வெளியீடுகளிலும் நமது உழைப்பு உண்டு. – சுகன்

    sugan, I am proud of u.

  7. “பாட்டும் நானே பாபமும் நானே” என்பது போல கட்டுரையும் நாமே புனைபெயரில் பின்னோட்டமும் நாமே என்று தேசம் ஆசிரியர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பாட்டுப்பாடினால் நன்றாகவிருக்கும் .

    அவர்களுக்கு எமது சமுதாயம் மீது எள்ளளவும் அக்கறை இல்லை என்பது தேசத்தின் பின்னோட்டங்களிலிருந்து புரிகின்றது. அவர்கள் அக்கறை கொள்வது பின்னோட்டத்தின் தொகையை ஒவ்வொரு மாதமும் எப்படியாவது அதிகரிப்பது என்பதுதான் அதற்காக அவர்கள் எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள்.

  8. “தம்பி சுகன்!
    நீரெல்லாம் நியாய தர்மம் கதைக்க புறப்பட்டதை நினைக்க…….
    நீரெல்லாம் குடும்பம் -உறவுகள் பண்பு என கதைக்க புறப்பட்டதை நினைக்க……….
    நீரெல்லாம் கற்சுரா வீட்டு பாத்திரங்களோடு..என்ற ஒழுக்கம் பற்றி கதைக்க புறப்பட்டதை நினைக்க….
    நீரெல்லாம் ஜேர்னலீஸ்ட் சாதனையாளரென உமக்கு நீரெ பட்டம் சூட்டுவதை நினைக்க….
    ஐயையோ!!!
    சாத்தானெல்லாம் வேதம் ஓதுகின்றதா?
    பெண்ணியம் கதைத்துக்கொண்டு …. கொடுமை செய்த பாவத்தை நினைத்துக் கொள்ளும்….
    உதாரணத்திற்கும் அடுத்தவன்…… நினைக்கும் உமது அயோக்கியதனத்தை நினைத்து கொள்ளும்……
    கூட்டுக்கலவிக்கு பெருமை சேர்க்கும் உமது உயர்பண்பை நினைத்துக்கொள்ளும்…….
    மொத்தத்தில் பிள்ளையானிஸடிற்கே வக்காலத்து வாங்கும் உமது மூளையைத்தான்- அதன் கேவலத்தைதான் நினைத்து எல்லாவற்றிற்கும் மொத்தமாக உமக்கெதிரே ஒரு கண்ணாடியை வைத்து உமக்கே….. அதுதான் உமக்கு சாpயாக இருக்கும்”

    பாருங்கள்! இதெல்லாம் ஒரு கருத்து???? இதில் உருப்படியான விசயம் ஏதாவது இருக்கா? இந்த பின்னூட்டக்குஞ்சு யாரை சொறியுது?

    இப்படியான குஞ்சுகளைதான் தேசம் வளர்த்துவிடுகிறது.
    ஏதாவது ஒன்றிரெண்டை படிக்கவேணும். அது பற்றி கதைக்கவேணும். அதில்லை. வெற்றுவேட்டுகளுக்கு தேசம் களம்.

  9. //மொட்டைக்கடதாசி என்றால் அதன் வரைவிலக்கணம் என்னவென்று தெரியாதவர்களெல்லாம் பத்திரிகை ஆசிரியர்கள்.ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூச்சக்கரை தான் தேசம்நெற்றும். அதனாலை அதன் ஜனனாயகம் கருத்துச்சுதந்திரம் பற்றிச் சொல்லத் தேவையில்லை. “ஊருக்கு உபதேசம் உனக்கில்லடி” இதுதான் அவையின்ரை கொள்கை.
    //சாம்

    மின்னஞ்சலுக்கு முகவரி மின்னஞ்சல் முகவரிதானே! அதிலென்ன சந்தேகம்!! கீரன் தன் சொந்த மின்னஞ்சல் முகவரி மூலம்தானே எல்லோருக்கும் அனுப்பியிருந்தார்.எனக்கும் அந்த விபரங்கள் வந்திருந்தன.அப்பாவித்தமிழன் என்று அவர் தன் பெயரைப் போட்டது தப்பல்ல. ஏனெனில் எனக்கு கீரன் என்பவர் யாரென்று தெரியாது. என்னைப்போல் பலருக்கும் அவரைத்தெரியாது என்றுதான் நினைக்கின்றேன்.யார் இவர் கீரன் என்று குழம்புதைத் தவிர்க்க பகுத்தறிவை உபயோகித்து அப்பாவித்தமிழன் என்று பெயர் போட்டு தனக்குத் தெரியாதவர்கட்கு அனுப்பியது பாராட்டக்கூடியதொன்றாகவே கருதவேண்டும்.

    மொட்டைக்கடிதம் என்றால் பெயர் இருக்காது.
    பெயர்; கீரன்

    மொட்டைக்கடிதம் என்றால் விலாசம் இருக்காது.
    மின்னஞ்சல் முகவரி;[email protected]

    தேசமே மொட்டைக்கடிதம் என்றால் என்ன என்று எனக்குக் கொஞ்சம் கூறுவாயா?

  10. நாய் வாலை நிமிர்த்தினாலும் ஜெயபாலனை திருத்தமுடியாது.புலத்தில் இதுவரை எந்தப் பத்திரிகைக்கும் எதிராக 72பேர் கையெழுத்து போட்டு அறிக்கை வெளியிடவில்லை.வேறுயாராக இருந்தாலும் உடனே எழுதுவதையே நிறுத்தியிருப்பர்.ஆனால் ஜெயபாலன் இன்னும் கொஞ்சம் கூடப்பேர் கையொப்பம் இட்டிருந்தால் தனக்கு நல்ல விளம்பரம் கிடைத்திருக்கும் என்று கூறினானாம்.இப்படிப்பட்டவனுக்கு எப்படி எழுதினாலும் உறைக்காது.

  11. ஆச்சரியம்.ஆனால் உண்மை.நம்புங்கள் வாசகர்களே.நேற்றைய ஜனநாயக ஒன்றிய கூட்டத்தில் எமது தேசம் ஆசிரியர் ஜெயபாலனும் அவருடைய சகாக்கள் சேனன் சோதி போன்றோரும் கலந்து கொண்டனர்.”எஸ்.எல.டி.எவ் பணம் வாங்குகிறது.எஸ்.எல.டி.எவ் ரேடியோவில் களவெடுத்தது.இதை எல்லாம் ஆதாரத்துடன் முன்வைப்போம்” என இக் கும்பல் இதுவரை தேசத்தில் முழங்கி வந்ததால் இன்று அந்த ஆதாரத்துடன்தான் வந்துவிட்டார்கள் என்று உங்களைப்போல் நானும் நினைத்தேன்.ஆனால் என்ன ஆச்சரியம்.!!!அப்படி ஒரு விடயமே தங்களுக்கு தெரியாதபோல் மிகவும் பவ்யமாக இருந்து பேச்சைக் கேட்டுவிட்டு அமைதியாக சென்றுவிட்டனர்.உண்மையில் இவர்கள் எழுதியதை நம்பியவர்கள்தான் மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள்.

  12. இயேசு சீக்கிரம் வருகிறார்
    ஓருவேளை இயேசு வந்தாலும்
    தேசம் அறிக்கை ஒருபோதும் வராது !!!

    நேற்று ஜயர் வரதர் மாலி ரயாகரன்
    இன்று கீரன் ராகவன் சுகன் சோபா
    நானள யார் யாரோ…..???

    இந்த மாபியா மீடியாவுக்கு
    மணி கட்டும் பணியை
    யார் செய்வார் ??????

  13. ராயாகரன் எந்தப் பணத்தில் வெளிநாடு வந்தார் என்று நான் கேட்பேன்.ஆனால் உடனே “நீ எந்தப் பணத்தில் வெளிநாடு வந்தாய் ?” என்று நீங்கள் என்னைக் கேட்கக்கூடாது.ஏனென்றால் நான் ஒரு ஊடகவியலாளன்!!!!
    ஞானம் எப்படி வீடு வாங்கினான் என்று நான்கேட்பேன்.உடனே “நீ எப்படி இரண்டு வீடு ஒரு கடை ஒரு சொலிசிஸ்ரர் கம்பனி எல்லாம் வாங்கினாய்?”என்று நீங்கள் என்னைக் கேட்கக்கூடாது.ஏனென்றால் நான் ஒரு ஊடகவியலாளன்.!!!!
    வரதர் தனது தொண்டு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை நான் கேட்பேன்.உடனே “நீ போலுடன் சேர்ந்து எடுத்த காசுக்கு கணக்கு காட்டு ” என்று நீங்கள் என்னைக் கேட்கக்கூடாது.ஏனென்றால் நான் ஒரு ஊடகவியலாளன்.!!!!!!
    ஜயநாயக ஒன்றியத்தை காசு வாங்குது. ரேடியோவில் களவெடுத்தது என்று நான் எழுதுவேன்.உடனே “அதற்குரிய ஆதாரத்தைக் காட்டு” என்று நீங்கள் என்னைக் கேட்கக்கூடாது.ஏனென்றால் நான் ஒரு ஊடகவியலாளன்.!!!!
    அப்படியென்றால் “ராயாகரன் ஞானம் கீரன் சுகன் சோபாசக்தி போன்றவர்களும் ஊடகவியலாளர்தானே.அவர்களை எப்படி நான் கேள்வி கேட்க முடியும்” என்று நீங்கள் நினைக்கக்கூடும்.அப்படி நீங்கள் நினைக்க கூடாது .ஏனென்றால் நான் ஒரு ஊடகவியலாளன்.!!!!!!
    ஏன் தலையைப் பிய்த்துக் கொண்டு ஆளை விட்டால் காணும் சாமி என்று ஓடுகிறீர்கள்.நில்லுங்கள்.ஏனென்றால் நான் ஒரு ஊடக…….
    இப்படிக்கு
    தேசம் ஆசிரியரின் மனசாட்சி(?)

  14. //..இதுவரை எந்தப் பத்திரிகைக்கும் எதிராக 72பேர் கையெழுத்து போட்டு அறிக்கை வெளியிடவில்லை.வேறுயாராக இருந்தாலும் உடனே எழுதுவதையே நிறுத்தியிருப்பர்…//

    72 பேர் கையெழுத்துப்போட்ட உடனே நிப்பாட்டவேணும். ஆனால் 16, 22, 25 , 36 பேர் சேர்ந்து கடந்த 20 வருசமா ‘சந்திப்புகள்’ நடத்தினம் அதையும் விட 200, 300 வாக்குகள் எடுத்து பாலிமன்ற் போயினம்!!!!!!!!!!!!!!!

  15. //72 பேர் கையெழுத்துப்போட்ட உடனே நிப்பாட்டவேணும். ஆனால் 16, 22, 25 , 36 பேர் சேர்ந்து கடந்த 20 வருசமா ‘சந்திப்புகள்’ நடத்தினம் அதையும் விட 200, 300 வாக்குகள் எடுத்து பாலிமன்ற் போயினம்!!!!!!!!!!!!!!!//

    ரகு “சந்திப்பு” என்றால் பத்து இருபது பேர்தான் கலந்து கொள்ளும் நிகழ்வு என்று நான் நினைக்கின்றேன்.

    பொங்கு தமிழ் நிகழ்வுகளிலும்,பொதுத்தேர்தல்கூட்டங்களிலும் தான் நீங்கள் நினக்குமாப்போல பெருந்திரளானோர் கலந்து கொள்வது.

    இருபது முப்பது வாக்குகளோடு பாராளமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதாக தகவல்கள் இருக்கின்றன.

    சரி அப்ப சாமாதான ஒப்பந்த சந்திப்புகளிலும்……………….சந்திப்புகளிலும் புலிகளின் தரப்பிலிருந்து எத்தனை ஆயிரம்பேர் கலந்து கொண்டவை ?

    நீங்கள் தானோ தேசத்தில் பின்னோட்டம் விடும் ரகு.அப்படியென்றால் அங்கு உங்களைக் கனகாலமாகக் காணமுடியவில்லை காரணம் என்ன?

  16. ”அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல” எனும் தலைப்பில் தேசம்நெற்ரின் தான்தோன்றித்தனமான சமகால போக்கு குறித்து தமது கண்டனத்தை ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டுநின்று முகம் தெரிந்த 74 பேர் கூட்டறிகை ஒன்றை வெளியிட்டனர்.

    அந்த அறிக்கையை ஏதோ பத்திரிக்கை சுதந்திரத்துக்கு ஆப்பு வைப்பதாக அழுது குழறிய தேசம்நெற் பொறுப்பற்றவிதமாக தனிநபர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசி வருகிறது.

  17. Hi Friends!

    “Self conscience is the Best Law” As an interesting reader I am asking all of you spend your valuable time and effort to bring out best things to enrich the human life. Please write sound articles and critizie the writings not writers.
    Please be open for the discussions without any preconceived ideas. –

    Thanks

  18. //யார் இவர் கீரன் என்று குழம்புதைத் தவிர்க்க பகுத்தறிவை உபயோகித்து அப்பாவித்தமிழன் என்று பெயர் போட்டு தனக்குத் தெரியாதவர்கட்கு அனுப்பியது பாராட்டக்கூடியதொன்றாகவே கருதவேண்டும்.//

    அப்ப தேசம் ஆசிரியர் ஜெயபாலனும் ,கொன்ஸ்ரன்ரைனும் பகுத்தறிவில்லாதவர்கள் என்றா சொல்ல வருகிறீர்கள்?

    சரி ஜெயபாலன் இனியாவது விதண்டாவாதத்தை விட்டு தப்பைத் தப்பென்று ஒத்துக்கொண்டால் எல்லோருகுக்கும் நல்லதே.

    அப்ப எப்ப சமாதான் ஒப்பந்தம்!நாளொன்றைத் தெரிவியுங்கோ!! நானும் வருகின்றேன். அல்லது ஜெயபாலன் இப்படியே ஒரு சில தப்பை நியாயப்படுத்த பல தப்பைச் செய்து கொண்டிருக்கவேண்டிவரும். எதுக்கும் ஜெயபாலன் நன்றாக சிந்தித்து நல்ல முடிவெடுத்தால் நல்லது.

  19. /“உங்கண்டை மனிசிக்கு எனக்கு ஓக்க ஆசையா இருக்கெண்டு /
    இதைவிடப் பச்சையாக யார் கேட்கமுடியும்?ஆனால் இதைக் கூட சிரித்துக் கொண்டு படிக்கும் ஒரு ஜென்மத்திடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கமுடியும்?
    தனக்கு ஒரு கொள்கையும் கோதாரியும் கிடையாது.யார் பணம் தந்தாலும் வாங்குவேன் என்று பகிரங்கமாகக் கூறிய ஒருவரை, ஆசிரியர் என்றும் புலனாய்வு ஊடகவியலாளன் என்றும் வக்காலத்து வாங்கும் கும்பல்களை என்னவென்று அழைப்பது?.

  20. யார் யார் எக்குழுபால் ஈர்க்கப்படுகிறராரோ – அவர்
    மற்றக் குழுவால் துரத்தித்துரத்தி அடிக்கப்படுவர்.

    பாவம்! சர்வானந்தன்

  21. //….சரி அப்ப சாமாதான ஒப்பந்த சந்திப்புகளிலும்……………….சந்திப்புகளிலும் புலிகளின் தரப்பிலிருந்து எத்தனை ஆயிரம்பேர் கலந்து கொண்டவை ?….//

    அண்ணை சாம், சந்திப்புகளை அப்ப ஏனண்ணை அட்வடைஸ் பண்ணி ‘அழைப்பு ‘ விடுறியள். உங்கட 20 பேருக்கு கூட உங்களால ஒரு கடிதம் போட்டுக்கூப்பிடேலாதோ. இல்லாட்டி வெறும் ஈ-மெயில் எண்டாலும் அனுப்பலாம் தானே? பிறகேன் நோட்டீஸ் விடுறியள். கன பேரை எதிர்பார்த்து நப்பாசை தானே?
    நீங்கள் மணியான கதை விடுவியள். ‘சந்திப்புகளையும்’ புலியின்ர சமாதான ஒப்பந்தத்தையும் கிடைச்ச ஓட்டையில விட்டு ஈக்குவேற் பண்ணி விளையாடிறியள்!!! அது உங்களுக்கு கைவந்த கலை தானே????கடிதம், ஈமெயில் எண்டத்தான் ஞாபகம் வருது. கிட்டடியில 72 பேர் கையெழுத்து (ஆனால் அங்க கையெளுத்தை காணேல்ல வெறும் பேர் தான் இருந்திச்சுது) போட்டு அனுப்பின் ஈ-மெயில் மாதிரி அனுப்பி கூப்பிட்டிருக்கலாம் தானே.
    நீங்கள் நினைக்கிறதும் சரிதான், போட்ட ‘கையெளுத்தில’ கனபேருகள் தாங்கள் போடேல்ல எண்டு சொல்லினம். உந்த லட்சணத்தில கடிதம் எழுதப்போக வாற 22 பேரும் வராமல் விட்டுடுவாங்கள். உதால தான் ‘சந்திப்பு’ காரற்ற ‘அறைகூவல்களை’ வெறும் 22 பேர் கேட்டு வருகினம் போல!
    அண்ணை சாம் அண்ணை புலியின்ர சமாதான ஒப்பந்த நோட்டீஸ் இருந்தால் ஒருக்கா எடுத்து சத்தியக்கடதாசியில போடுங்கோ அண்ணை! அதில நாங்கள் நோர்வே போறம் அனைவரும் அழைக்கப்படுகிறார்கள், சபாலிங்கம் அரங்கம், புஷ்பராஜா அரங்கம், சிற்றுண்டி , மதிய உணவு, எந்த ரெயின் பிடிச்சு எந்த பஸ்பிடிச்சு வாறது எண்டெல்லாம் போட்டிருக்கும் அண்ணை!!!!

    //….நீங்கள் தானோ தேசத்தில் பின்னோட்டம் விடும் ரகு./////

    ஓம் அண்ணை! சரியாச்சொன்னியள்!! இதில என்ன ஆச்சரியம் இருக்குது? நான் இன்னும் சொந்தப்பெயரில தானே எல்லா சிங்கள/ ஆங்கில , தமிழ் விவாதக்களத்திலயும் எழுதிறன். மற்றவை மாதிரி செக்கனுக்கு ஒரு பெயரும் (மகாபாரத கதாபாத்திரங்கள் வரை ) நேரத்துக்கு ஒரு ஈ-மெயிலுமே பாவிக்கிறன்?

    //….அப்படியென்றால் அங்கு உங்களைக் கனகாலமாகக் காணமுடியவில்லை காரணம் என்ன?….//

    எல்லாத்துக்கும் உந்த ‘ஜனநாயகக்காரர்’ கள் தான் காரணம். நீங்கள் கேள்விப்படேல்லையோ அண்ணை? தேசம் ‘வேற தொழில் இல்லாதவன்’ ரகு எண்டவனின்ர கருத்துகளை விடுது. உவன் ஜெயபாலனும் ரகுவும் ஒண்டுதான் எண்டெல்லாம் கருத்துச் சுதந்திரக்காரர் ‘கருத்து’ சொல்லி இப்ப என்னை அங்க ‘தணிக்கை’ செய்யுறாங்கள் அண்ணை. அதால நான் அந்தப்பக்கம் போறது விட்டிட்டன். இடைக்கிட என்ர கூட்டாளியள் அங்க நல்ல ‘தும்பு’ கள் இருக்கு ‘தும்புத்தடி’ செய்து மணியா வேற பேரில ‘கூட்டலாம்’ எண்டு ஆசை வார்த்தை விடுறாங்கள் ஆனாலும் ஒரு தீர்மானத்தோட வேண்டாம் எண்டு இருக்கிறன்!

  22. ஆனந்தசங்கரியாரை அரசியலில் இருந்து ஒதுங்கும்படி கடிதம் எழுதி புகழ்பெற்ற எமது “புலிக்குட்டி”ஆசிரியர் தற்போது பங்குச் சந்தை பிரச்சனை குறித்து அமெரிக்க ஜனாதிபதி புஸ் க்கு கடிதம் எழுதுவதில் மும்முரமாக இருக்கிறாராம்.அதனால் இப்போதைக்கு ரேடியோ களவு ஆதாரம் 72பேரின் அறிக்கைக்கு பதில் என்பன வைக்கமுடியாதாம்.

  23. சத்தியக்கடதாசி தேசத்தை பின்பற்றுகிறது..
    வேண்டாம். தயவுசெய்து..

  24. //அண்ணை சாம், சந்திப்புகளை அப்ப ஏனண்ணை அட்வடைஸ் பண்ணி ‘அழைப்பு ‘ விடுறியள். ?//

    தம்பி ரகு, தற்போது நான் ஒரு அமைப்பையோ அல்லது இயக்கத்தையோ சார்ந்தவன் அல்ல.என்னை நீங்கள் “இவர்களில் “ஒருவராக நினைப்பது எனக்குப் புரியாத புதிராகவுள்ளது.

    ///உங்கட 20 பேருக்கு கூட உங்களால ஒரு கடிதம் போட்டுக்கூப்பிடேலாதோ. இல்லாட்டி வெறும் ஈ-மெயில் எண்டாலும் அனுப்பலாம் தானே? பிறகேன் நோட்டீஸ் விடுறியள். கன பேரை எதிர்பார்த்து நப்பாசை தானே?///

    ரகு உங்களைப்போல புத்திஜீவிகள் கலந்துகொள்வார்கள் என்ற நப்பாசை “அவர்களுக்கு” என நினைக்கின்றேன்.

    ///அண்ணை சாம் அண்ணை புலியின்ர சமாதான ஒப்பந்த நோட்டீஸ் இருந்தால் ஒருக்கா எடுத்து சத்தியக்கடதாசியில போடுங்கோ அண்ணை! அதில நாங்கள் நோர்வே போறம் அனைவரும் அழைக்கப்படுகிறார்கள், சபாலிங்கம் அரங்கம், புஷ்பராஜா அரங்கம், சிற்றுண்டி , மதிய உணவு, எந்த ரெயின் பிடிச்சு எந்த பஸ்பிடிச்சு வாறது எண்டெல்லாம் போட்டிருக்கும் அண்ணை!!!!///

    என்னப்போல விபரம் தெரியாதவர்கள் கலந்துகொள்ள வாய்ப்பிருக்கின்றது. அதனால் விபரம் போடுவதில் தப்பில்லை.

    வடை கடையும்”, கொத்து ரொட்டிக் கடையும், “சீட்டுக் குலுக்களில்” கார்பரிசும் இருக்கிறதென்றால், எல்லா இடங்களிளும் இருபதாயிரத்திற்கு மேல் கூடிவிடுவார்கள், தேசியமாவது வெங்காயமாவது .என்று உலகத்தமிழன் என்ற புனை பெயரில் ஜ..ரா பொங்கு தமிழ் நிகழ்வை பற்றிச் சொன்னதுபோலுள்ளது உங்களின் கருத்தும்

    //// உவன் ஜெயபாலனும் ரகுவும் ஒண்டுதான் எண்டெல்லாம் கருத்துச் சுதந்திரக்காரர் ‘கருத்து’ சொல்லி இப்ப என்னை அங்க ‘தணிக்கை’ செய்யுறாங்கள் அண்ணை///

    ஜெயபாலனும் ரகுவும் ஒண்டுதான் எண்டதாலை உங்களை அங்கு தணிக்கை செய்தது வேடிக்கையாயிருக்கின்றது.கருத்துச் சுதந்திர மறுப்பிற்க்கு எதிராக ……………நானும் வாறேன்.

    “இவர்களின்” சந்திப்புகளையும் புலியின்ர சமாதான ஒப்பந்தத்தையும் ஈக்குவேற் பண்ண முடியாதுதான்!!!!!

  25. ஆதாரமற்ற பொருளாதாரம் பற்றி ஒரு வெறும் கதையாடல் என்று திரும்பவும் ஜெயபாலன் எஸ். எல்.டி.எவ் ஐ தூற்றுவதற்க்காகவே தயாரிக்கப்பட்ட ஆதாரமற்ற விமர்சனம் ஒன்று தேசத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அத்துடன் மீண்டும் ராகவனையும்,கீரனையும் தாக்கி பின்னோட்டத்தைக் கூட்டும் உத்தியையும் கடைப்பிடித்துள்ளார்கள். ஆனால் இத்தடவை கொன்ஸ்ரன்ரைன் எஸ். எல்.டி.எவ் ஐ தாக்கியதையும்,தனிமனிதர்களைத்தாக்கியதையும், இப்படியான கருத்தரங்குகளை ஊக்குவிக்காமல் தேடிப்பிடித்து தூற்றுவதையும் பற்றி சாடியுள்ளார் .அத்துடன் புதியவன் என்பவர் ஜெயபாலனை விமர்சித்ததையும், கருத்தரங்கில் உண்மையில் நடந்தைவைகளை கூறியதையும் தணிக்கை செய்யாமல் பிரசுரிதிருக்கிறார்கள். தேசம் திருந்திவிட்டதா? . பல கீரன்கள் உருவாகிவிடுவார்கள் என்ற பயமா?அல்லது இதுவும் தேசத்தின் ஒரு உக்தியா ?

  26. தோழர்களே!
    நமக்கென்று ஒரு ஆரோக்கியமான விமர்சன மரபு இருக்கிறது,
    தமிழியலில் தளையசிங்கம்,கைலாசபதி,எஸ்.பொ,சிவத்தம்பி,கனக செந்திநாதன்,ஏ.ஜே.கனகரட்னா,நித்தி,சிவசேகரம்…இப்படியாக பெரும் ஆழுமைகள் சேர்ந்து உருவாக்கிய விமர்சனமரபு நமது.
    நாம் அம்மரபைத் தொடர்வோம்.
    கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வோம்.
    2:நமக்கான சுயமரியாதையைப் பேணுமுகமாக இயன்றவரை நமது சொந்தப்பெயரிலேயே எழுதுவோம்.
    சொந்தப்பெயர் அல்லது அறியப்பட்ட பெயரில் நமது கெளரவத்தைப்பேணிக்கொண்டு இனந்தெரியாத,அனாமதேயமான பெயர்களில் அவதூறு,கிசுகிசு,அவமரியாதை செய்வதை ஊக்குவிக்கவும் துணைபோகவும் மறுப்போம்.

  27. சுகன்…..
    தயவு செய்து தேசம் பற்றி எழுதுவதை நிறுத்தவும்.
    கவிதை எழுதுவதில் அதிக கவனம் செலுத்து. நமக்கு மிகப் பொpய பொறுப்பும் கடமையும் இருக்கிறது என்பதை அவ்வப்போது மறந்துவிட்டு பீயிற்குள் கல்லுப் பொறுக்கிக் கொண்டிருக்கிறோம். நமக்கு அதுவல்ல வேலை. அவதூறு செய்பவா;கள் எப்போதும் இருந்து கொண்டேயிருப்பார்கள். நேற்று நண்பா;களாக இருந்தவா;கள் இன்று எதிரிகளாகி விடுவது நாம் தொடா;ந்து அனுபவிப்பது. இங்கு சேனனை மட்டும் குறை சொல்லிப் புண்ணியமில்லை. இது வழமை. நாம் தொடா;ந்து தீவிரமாகப் பணியாற்றுவதே அத்தனைக்கும் வழி. அவா;களுடைய அவதூறுபற்றி ஒரு எதிர்வினை தொpவித்தாயிற்று. அது போதும். அதற்குரிய பதிலை அவா;கள் தந்தாலென்ன தராவிட்டாலென்ன நாம் என்ன செய்ய முடியும்? இன்றைய ஈழத்து அரசியல் சூழலில் அனைத்துத் தரப்பிடமும் அறத்தை நாம் எதிர் பார்க்க முடியாது என நமக்குத் தொpயாதா? ஆகவே விட்டுவிடு. வீணாக நேரம் விரையம் செய்ய வேண்டாம். கவிதைகளை எழுது.

  28. தோழமையுடன் சுகனுக்கு ; சொந்தப்பெயர் உபயோகிப்பதனால் சொல்லும் கருத்துகள் பார்க்கப்படாமல் சுற்றம் நண்பர்கள் முன்விரோதம் படிப்பு பட்டம் சாதி பாலினம் சகலமும் நோக்கப்பட அங்கு சொல்ல வந்தது வேறாகி வினையாகும்.

  29. கனேஸ்,
    நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கை நெருக்கடியிலும் படுக்கை அறையிலும் நுழைந்து நம்மைச் சதா கண்காணீத்துக் கொண்டிருக்கும் பாஸிஸ்டுகளை விட்டுவிடச் சொல்கிறாயா?
    யார் கொடுத்தார் இவர்களுக்கு இந்த அதிகாரம்?
    எதன்பேரால் எடுத்துக்கொன்டார்கள் இந்த அதிகாரத்தை?
    சொல்லு கணேஸ்?

  30. திண்டிவனம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த கால் ஊனமுற்ற பழனிஇ சத்யா தம்பதியினரின் மூன்று வயதுகூட நிரம்பாத மகள் லாவண்யா. மாலை நேரத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த லாவண்யாவை தாயார் அழைக்க பதிலில்லை. மின் தடையால் எங்கும் இருட்டு. பதட்டத்தில் தேடியபோது அருகாமைப் புதரில் பிறப்புறுப்பில் இரத்தம் வடியக் கிடந்த மகளைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர். போலீசு விசாரணையில் எதிர் வீட்டில் உள்ள பாண்டியன் எனும் 25 வயது இளைஞன் மனைவியைப் பிரிந்து வாழ்பவன் அந்தப் பிஞ்சுக் குழந்தையை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது தெரியவந்தது.

    · தூக்கத்தில் திடீர் திடீரென்று விழித்துக்கொள்ளும் ஆறு வயதான நதியா வழக்கத்துக்கு மாறாக இரவில் சிறுநீர் கழிக்கத் தொடங்கினாள். அவளைக் குளிப்பாட்டும் போதுதான் பிறப்புறுப்பில் நகக்கீறல்கள் இருப்பதைக் கவனித்தாள் அவளது தாய். குழந்தையிடம் பேச்சுக்கொடுக்கும் போதுதான் எதிர் வீட்டிலிருக்கும் இளைஞன் சாக்லெட் கொடுத்து தன்னை ஏதோ செய்ததாகக் குழந்தை சொல்லித் தெரிய வந்தது.

    · போலியோவால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுச் சிறுமியின் முகம் திடீரென்று வீங்கி உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிகிச்சை அளித்த டாக்டர் அச்சிறுமியிடம் மெதுவாகப் பேச்சுக்கொடுத்தபோது பக்கத்து வீட்டு இளைஞன் அச்சிறுமியைத் தவறாகப் பயன்படுத்தி வந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.

    · தெருவில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது ரம்யாவை பலவந்தமாகத் தூக்கிச் சென்ற எதிர்வீட்டின் 45 வயதான சீனிவாசன் பலாத்காரம் செய்யும்போது கையும் களவுமாகப் பிடிபட்டான்.

    · கேக் தயாரிக்கும் பேக்கரி ஒன்றில் பயிற்சிக்காக வந்த கேட்டரிங் படிக்கும் கல்லூரி மாணவர்கள் ஆறு பேர்இ அங்கு விளையாட வரும் ஐந்து வயதுச் சிறுமியை தங்களது இச்சைக்குப் பல நாட்களாகப் பயன்படுத்திய விவரம் தெரியவந்தபோது அதிர்ச்சியில் உறைந்தது அச்சிறுமியின் குடும்பம்.

    · சென்னை மெட்ரிகுலேசன் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் ஒன்பது வயது மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கழிப்பறையில் வைத்து ஓராண்டாகப் பாலியல் வன்முறை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதே ஆசிரியரால் குதறப்பட்ட வேறு இரண்டு மாணவிகளும் புகார் கொடுத்தனர்.

    · நாகையில் அரசு உதவிபெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை 45 வயது ஆசிரியர் ஆய்வகத்தில் வைத்து பாலியல் வன்முறை செய்ததில் அம்மாணவி கருத்தரித்தாள்.

    · மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்கு மாணவிகளை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்முறை செய்தது பொதுமக்களின் போராட்டத்திற்கு பின் தெரியவந்தது. இதற்குத் தண்டனையாக அவ்வாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
    · ஈரோடு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஏழு வயது மாணவியைத் தவறாகப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. கோவை பள்ளியில் இதே போன்று வன்கொடுமைக்கு ஆளான மாணவி ஒருத்தி தற்கொலை செய்து கொண்டாள்.

    ···

    முதல் சம்பவம் சென்ற மாதத்தில் நடந்தது. பின்னையவை சமீப காலங்களில் நடந்து பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. சிறார்களைப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கும் இத்தகைய சம்பவங்கள் எங்கோ மேலை நாடுகளில் மட்டும் நடக்கும் வக்கிரம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களின் மதிப்பீட்டை இவை மறுதலிக்கின்றன. பல்வேறு ஆய்வுகளும் புள்ளி விவரங்களும் இதையே வழிமொழிகின்றன.

    பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறார்களின் உலகத் தொகையில் 19மூ பேர் இந்தியாவில் இருக்கின்றனர். இந்திய மக்கள் தொகையில் இவர்கள் மூன்றிலொரு பங்கு இருக்கின்றனர். 2007 ஆம் ஆண்டு இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறையானது குழந்தைகள் மீதான பல்வேறு வன்முறை குறித்து விரிவான கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. பதின்மூன்று மாநிலங்களில் 12இ447 குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வில் 53மூ குழந்தைகள் ஏதோ ஒரு பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும்இ 21.9மூ குழந்தைகள் மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதில் இருபாலரும் ஏறக்குறைய சரிசமமாக உள்ளனர்.

    இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 7 இலட்சம் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றார்கள். விலைமாதர்களில் 15மூ பேர் பதினைந்து வயதுக்குட்பட்டவராவர். 2006இல் துளிர் எனும் அமைப்பு 2211 சென்னைக் குழந்தைகளிடம் ஆய்வு செய்ததில் 42மூ பேர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் சாக்ஷி எனும் தொண்டு நிறுவனம் செய்த ஆய்வில் 350 குழந்தைகளில் 63மூ பேர் குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்முறைக்குப் பலியானது தெரிய வந்தது.

    இறைந்து கிடக்கும் இந்தப் புள்ளிவிவரங்கள் இந்திய சமூகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பது தவிர்க்க முடியாத அங்கமாகியிருப்பதை ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றன. குடும்ப அமைப்பு சிதைந்துவரும் மேலைநாடுகள் போலல்லாமல் இந்தியப் பண்பாட்டிற்கு அச்சாணியாகக் குடும்பங்கள் வலுவாக இருப்பதாக நம்பும் பழமைவிரும்பிகள் கூட இந்த உண்மையை அங்கீகரித்துதான் ஆக வேண்டும்.

    செல்பேசிகளும்இ இருசக்கர வாகனங்களும்இ தொலைக்காட்சிகளும் மட்டுமே நாம் காணும் மாற்றங்கள் அல்ல. பண்பாடும் கூட மாறித்தான் வருகின்றது. பொருளாதாரத்தில் நாட்டின் முன்னேற்றமும்இ விவசாயிகளின் தற்கொலையும் ஒருங்கே நிகழ்வது போல பண்பாட்டில்இ குறிப்பாக பாலுறவில் காதலும் கலவியும் எதிரெதிர்த் துருவங்களாக மாறி வருகின்றன.

    பத்திரிக்கைகளின் அரைநிர்வாணப் படங்களும்இ மழையில் நனைந்து அங்கங்களைக் காண்பிக்கும் “மானாட மயிலாட’ நடனமும் இன்று அதிர்ச்சியை ஏற்படுத்துவதில்லை. நேற்று குடும்பத்துடன் பார்க்கத் தகுதியற்றவையாகக் கருதப்பட்ட திரைப்படங்களெல்லாம் இன்று குடும்பத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டன. நேற்று ஆபாசமென ஒதுக்கப்பட்டவை இன்று கலாச்சாரத்தின் அங்கமாக மாறி விட்டன. பத்திரிக்கைகளில் மட்டுமே வந்த கள்ளஉறவுச் செய்திகள்இ இன்று இல்லத்தரசிகளின் மனதைக் கவரும் “தொடர்’களாகி விட்டன. தனது இன்பத்திற்காக எதையும் செய்யலாம் என்ற வக்கிரம் சமூக வாழ்வின் அனைத்து விழுமியங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றது.

    பார்த்து இரசிக்க வேண்டிய குழந்தைகளைப் பிய்த்துக் குதறும் காமவெறி இன்றைக்குத்தான் தோன்றியது என்று கூற முடியாது. இதன் அடிவேர் பார்ப்பனியத்தின் மூடுண்ட சமூகத்தில் இருக்கின்றது. சாதியத்தைத் தனது ஆன்மாவாக வரித்திருக்கும் சமூகம்இ ஆண் பெண் உறவையும் சீனப் பெருஞ்சுவரால் பிரித்திருக்கின்றது. சக மனிதனுடனேயே சாதிபார்த்து பழகும்போது காமத்திற்கு வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு பற்றிச் சொல்லத் தேவையில்லை. தேவதாசிகளையும்இ கோபுரங்களில் விதவிதமான கலவிச் சிற்பங்களையும் பார்வைக்கு வைத்திருக்கும் பண்டைய பாரதம்இ காமசூத்ராவை உலகிற்கு அளித்த பார்ப்பனியம்இ மேட்டுக்குடியினர் பாலியல் ருசிகளை அனுபவிப்பதற்கு மட்டும் வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

    இந்திய மக்களுக்கு பார்ப்பனியத்தின் சாபத்தால் காதலே மறுக்கப்பட்டிருப்பதால்இ பாலியல் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. பாலுணர்வு எனும் இயற்கையான உணர்வு திருட்டுத்தனமான விசயமாகப் பார்க்கப்படுகின்றது. நடுத்தர வயதை எட்டிவிட்டால்இ காமத்தைக் குற்றமாகக் கருதி மறைத்துக் கொள்ளும் போலித்தனமும்இ காதலில் சுதந்திரமாக இணைவதற்கு சாத்தியங்கள் மறுக்கப்படுவதும் குறுக்கு வழிகளை நோக்கி மனத்தைத் தூண்டுகின்றன.

    மணவாழ்க்கையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் கணவன் மனைவிக்கிடையிலான நேசம் பல காரணங்களால் குறையத் தொடங்கும்போதுஇ சலிக்கத் தொடங்கும்போதுஇ அவற்றுக்கான காரணங்களை ஆராய்ந்து யாரும் சீர்செய்து கொள்வதில்லை. பிரிவு என்பது அவ்வளவு சுலபமான ஒன்றாக இல்லை.
    இதுதான் வாழ்க்கை என்று விதிக்கப்பட்டிருந்தாலும் மணவாழ்வில் கிடைக்காத இன்பத்தைஇ குறிப்பாக ஆண்கள் (சில சமயங்களில் பெண்களும்) மணவாழ்விற்கு வெளியே தேடுகின்றார்கள். இவையெதுவும் தற்செயலாக நிகழ்வதில்லை. ஆழ்மனத்தில் கனன்று கொண்டிருக்கும் ஆசை நிறைவேறுவதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. சந்தர்ப்பங்கள் அதற்கு உதவுகின்றன. கள்ள உறவின் தோற்றுவாய் இப்படித்தான் இருக்கின்றது.

    இத்தகைய சூழ்நிலைக்கு ஆட்படுவோர் திருட்டுத்தனத்தில் மட்டுமே சுதந்திரத்தைக் காண்கிறார்கள். இவர்களுடைய வாழ்வின் மற்ற வேலைகளை முதலில் மெதுவாகவும்இ பின்னர் வெகுவேகமாகவும் அரிக்கும் கரையானாகக் காமம் மாறிவிடுகின்றது. சிந்தனையின் மையத்தையே கைப்பற்றிவிடும் இந்த வெறி மற்றெல்லாச் சிந்தனைகளையும் தடுமாற வைக்கின்றது. சமூக வாழ்க்கையில் ஊக்கத்துடன் ஈடுபட வேண்டிய மனிதனை நைந்துபோக வைக்கின்றது. காதலைத் துறந்து காமத்தை மட்டும் ஒரு விலங்குணர்ச்சி போல துய்ப்பதற்கு வாய்ப்பளிக்கும் விபச்சாரமும் கூட இத்தகைய நபர்களின் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதில்லை.

    அதனால்தான் கலவியில் புதிது என்ன? என்ற கேள்வி அடுத்து வருகின்றது. அந்தக்கால மன்னர்களும்இ ஜமீன்தார்களும்இ இந்தக்கால பணக்காரர்களும்இ முதலாளிகளும் எல்லையற்ற காமத்தில் திளைத்தாலும் திருப்தி கொள்வதில்லை. பாலுறவுச் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கும் மேலை நாடுகளிலிருந்து கோவாவின் கடற்கரைக்கும்இ இலங்கைக் கடற்கரைக்கும் இளஞ்சிறுவர்களைத் தேடி வெள்ளையர்கள் வருகிறார்கள்.

    விபச்சாரமே குலத்தொழில் என்று விதிக்கப்பட்ட சில ஆந்திரக் கிராமங்களில் புதிதாகப் பருவமெய்தும் சிறுமிகளுக்குப் பொட்டுக்கட்டும் சடங்கும் அவர்களை ஏலமெடுக்கும் முறையும் இன்றும் தொடர்ந்து நடந்து வருகின்றன. மேட்டுக்குடி வர்க்கத்தின் காமக்களியாட்டம் ஆண்களுக்கு மட்டுமே உரியது என்ற காலமும் மாறி வருகின்றது.

    உலகமயமாக்கத்தால் பெருகியிருக்கும் பணக்கொழுப்பும்இ இணையத்தால் திறந்துவிடப்பட்டிருக்கும் இன்பவாயில்களும் இன்று பணக்காரப் பெண்களையும் வாடிக்கையாளர்களாக்கி விட்டன. இவர்களுக்குச் சேவை புரியும் ஆண் விபச்சாரிகளும் மாநகரங்களில் பெருத்து வருகின்றார்கள். மொத்தத்தில் உயர் வர்க்கத்தினர் இதற்கேற்ற மனநிலையையும்இ பணநிலையையும் ஒருங்கே பெற்றிருக்கின்றனர்.

    இந்த வசதி இல்லாதவர்களுக்கு விரலுக்கேற்ற விபச்சாரம் இருக்கின்றது. என்றாலும் அதனைத் தேடிப்போவது அத்தனை சுலபமாய் நடப்பதில்லை. இரகசியம் காக்க முடியாத கள்ள உறவுகளோ கொலையில் முடிகின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான் ஒழுக்கக்கேடுகளை நியாயப்படுத்தும் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.

    இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இந்திய ஆண்களும் பெண்களும் கட்டுப்பெட்டித்தனத்தைக் கைவிட்டு பாலியல் சுதந்திரம் பெற்று வருவதைக் கொண்டாடுகின்றன. கள்ள உறவுகளும்இ திருமணத்துக்கு முந்தைய உறவுகளும் பெருத்து வருவதாக அவர்கள் வெளியிடும் புள்ளி விவரங்கள்இ “இவையெல்லாம் சகஜம்தான் போலும்’ என்ற கருத்தை வாசகர்கள் மனதில் எளிதில் உருவாக்குகின்றன.

    செல்போனில் புழங்கும் நீலப்படங்கள்இ பாலியல் குற்றங்களையே கவர்ச்சிகரமான அட்டைப்படக் கட்டுரைகளாக்கும் பத்திரிக்கைகள்இ அவற்றையே தமது கதைக்கருவாகக் கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகிய அனைத்தும்இ எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுகின்றன. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர்இ தான் இழந்து விட்ட இன்பம் குறித்து உள்ளுக்குள் புழுங்கத் தொடங்குகின்றனர். புதிய அதிருப்தியாளர்கள் உருவாக்கப் படுகின்றனர்.

    தனிநபரின் காமம் புடைப்பதற்கேற்ற கலாச்சாரச் சூழலும் மறுபுறம் அதைத் தடை செய்யும் சமூகக் கட்டுப்பாடுகளும் கோலோச்சும் வாழ்க்கையில்இ என்னதான் இருந்தாலும் எல்லோரும் எல்லை மீறி விடுவதில்லை. அல்லது மனத்தளவில் எல்லை மீறினாலும் செயலில் மீறாத வண்ணம் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றார்கள். சமூக விழுமியங்களின் அடிப்படையில் தனது சொந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பலரும் போராடினாலும் இந்தப் போராட்டத்தில் தோல்வியுறுபவர்களும் இருக்கின்றார்கள்.

    கீழே கிடக்கும் பணத்தை உரியவரிடம் சேர்ப்பதாஇ யாரும் பார்க்கவில்லை என்பதால் சட்டைப்பையில் வைத்துக் கொள்வதா என்று முடிவு செய்ய வேண்டிய தருணம் பலருக்கும் வருகின்றது. ஒருமுறை எல்லை மீறிவிட்டால்இ பிறகு வக்கிரம் இயல்பாக மாறிவிடுகின்றது. கடுகளவு குற்ற உணர்வுகூட இல்லாமல் அடக்கப்பட்ட காமத்தை இவர்கள் வெறியுடன் தீர்த்துக் கொள்கிறார்கள். இவர்களுக்குப் பிரச்சினையில்லாத தொல்லையில்லாத இலக்கு குழந்தைகள். வயதுவந்த பெண்ணை வல்லுறவுக்கு ஆளாக்குவதும்இ ஒரு சிறுமியை வல்லுறவு செய்வதும் ஒன்றல்ல. பிந்தையதைச் செய்வதற்கு மிகுந்த வன்மம் வேண்டும்.

    பெண்களே வல்லுறவைத் தடுக்க முடியாமல் பலியாகிவிடும் நிலையில்இ குழந்தைகளோ அதைப்பற்றிய சுவடு கூடத் தெரியாமல்இ என்ன ஏது என்று அறியாமல் பலியாகிறார்கள். விபச்சாரமும்இ கள்ள உறவும் வாய்க்காத தருணங்களில் அண்டை வீடுகளில் இருக்கும் பெண் குழந்தையே ஒரு காமுகனுக்கு வெறியூட்டப் போதுமானதாக இருக்கின்றது. பொதுப்பால் என்று போற்றப்படும் ஒரு குழந்தையை இத்தகைய கயவர்கள் வளர்ந்த பெண்ணாக உருவகித்துக் கொள்கின்றார்கள். ஒரு இனிப்பு வாங்கிக் கொடுத்து விட்டு மறைவிடத்தில் வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்கின்றார்கள். சற்றே அறியும் பருவமென்றால் மிரட்டிப் பணிய வைக்கிறார்கள்.

    பள்ளிகளில் ஆதிக்கம் செய்யும் ஆசிரியர்கள் இப்படித்தான் மாணவிகளை வேட்டையாடுகின்றனர். பெயிலாக்கி விடுவேன்இ கொன்று விடுவேன் என்று அந்த மாணவி மிரளும் வண்ணம் மான் வேட்டை நடைபெறுகின்றது. கற்பின் புனிதம் குறித்த கருத்து ஆதிக்கம் செய்யும் சமூகத்தில் ஒரு மாணவி தனக்கு நேர்ந்ததை வெளியிலோ வீட்டிலோ அவ்வளவு எளிதாகச் சொல்லுவதில்லை. விதி விலக்காய் வெளியே தெரியும் சம்பவங்களிலிருந்துதான் இந்த வக்கிரத்தை அறிய வருகின்றோம். முனைவர் படிப்புக்காக கைடு உதவியுடன் ஆய்வு செய்யும் கல்லூரிப் பெண்கள் கூட இந்தக் கயவர்களின் மிரட்டலுக்கு அடிபணிய நேரிடுகின்றது.

    சிறுவர்களும்இ சிறுமிகளும் வயது வந்த எதிர்பாலினத்தவருடன் உறவு கொள்ளும் நீலப்படங்கள்தான் இன்றைய சிறப்பாம். இதைப் பார்த்துத்தான் பணக்காரத் தம்பதியினர் கிளர்ச்சி அடைகிறார்களாம். சிறார்களை வல்லுறவுக்கு ஆட்படுத்தும் போக்கு உழைக்கும் மக்களிடத்தில் இருப்பதை விட மேல்தட்டு நடுத்தர வர்க்கத்திடம்தான் அதிகம் நிலவுகிறதென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களிடம் குடும்ப உறவு பண உறவாகவும்இ பண்ட உறவாகவும் போலித்தனம் நிரம்பியதாகவும் இருப்பதால் இத்தகைய சீரழிவுகள் அதிகம் நடக்கின்றன.

    குழந்தைகளை வல்லுறவு கொள்ளும் மனிதர்கள் எவரும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கேடிகளல்ல. அந்தக் குழந்தையின் உறவினராகவோஇ அண்டை வீட்டாராகவோ பொதுவாக நன்னடத்தையுடன் வாழ்பவர்கள்தான். இவர்கள்தான் இன்னொருபுறம் தமது கைகளுக்கு அருகாமையில் இருக்கும் பச்சிளம் குழந்தைகளை அவை அறியாவண்ணம் குதறுகின்றவர்களாகவும் இருக்கிறார்கள். தனது நன்னடத்தையைக் காப்பாற்றிவரும் அதே வேளையில் காம வக்கிரத்தைத் தீர்ப்பதற்கு இரகசியமான கருவிகளாகக் குழந்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள்.

    ஒரு குழந்தையின் குழந்தைத் தன்மையை இரக்கமின்றி நசுக்கும் இந்தக் கயவர்கள் எவரும் மனநோயாளிகள் அல்ல. பிடிபடாத வரை இந்த வக்கிரத்தைத் தொடரலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தக் காரியத்தில் இறங்குகின்றார்கள். குழந்தைகளை வல்லுறவு செய்தல் ஒரு விபத்து போலவும் நடப்பதில்லை. அனைத்தும் திட்டமிட்டுதான் நடக்கின்றன.

    ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு குழந்தை முழுமையான வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட வேண்டும் என்பதில்லை. பாலியல் வெறியுடன் ஒரு குழந்தையின் மீது கைகள் படரும் ஒவ்வொரு நிகழ்வும் வல்லுறவுதான். அந்த வகையில் பெரும்பான்மையான குழந்தைகள் இந்த அபாயத்தை சந்திக்கும் நிலையில்தான் இருக்கின்றார்கள். பருவம் வராத குழந்தைகளின் உணர்ச்சியைத் தூண்டி விடுதல்இ நீலப்படங்களைக் காண்பித்து உணர்வூட்டுதல் போன்றவற்றையும் இந்தக் கயவர்கள் செய்கின்றார்கள். உடலும்இ வயதும் முதிர்ந்த பின்னர் அறிய வேண்டிய பாலுறவை முன்பே அறிந்து கொண்டு அதற்கு பலியாகின்றார்கள் இந்தக் குழந்தைகள்.

    விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் சிறார்களுக்கு இது வன்முறையாக நடக்கின்றது. பெற்றோர் அக்கறையோ கண்காணிப்போ இல்லாமல் இணையத்தில் மூழ்கும் மாணவர்களோ பிஞ்சிலே வெம்பி விடுகின்றார்கள். தொலைக்காட்சியின் அத்தனை நிகழ்ச்சிகளும்இ விளம்பரங்களும் சிறுவர்களைப் பாலியலுக்கு அறிமுகம் செய்கின்றன.

    பள்ளி ஆண்டுவிழாவில் குத்தாட்டங்களுக்கு நடனம் ஆடும் சிறுமிஇ தான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு வயதான பெண்ணின் விரகதாபத்தை அபிநயம் பிடித்துக் காட்டுகின்றாள்; அகமகிழ்கின்றார்கள் பெற்றோர்கள். அபிநயத்தில் ஆரம்பித்து அது அடுத்த கட்டத்திற்கு போவது இயல்பாக நடக்கின்றது.

    பாலியல் கொடுமைகளுக்குள்ளாக்கப்படும் குழந்தைகள் அதைப் புரிந்து கொள்ளும் அறிவு வளர்ச்சியைப் பெறும்போது பெரும் மனவியல் சித்திரவதைகளுக்கு ஆளாகின்றார்கள். தனக்கு மிகப்பெரிய கொடுமை நடந்து விட்டதாகவும்இ தனது புனிதம் கெட்டுப்போனதாகவும்இ தான் கோழையென்றும்இ இன்னும் பலவிதமாகவும் அவர்கள் கருதிக் கொள்வதால்இ இத்தகைய குழந்தைகளை சிகிச்சை அளித்து மீளப்பெறுவது என்பது மிகவும் சிரமமானதாகி விடுகின்றது.

    ஆசிரியர்கள் இழைக்கும் கொடுமைகளால் மாணவிகள் அடையும் மனச்சிதைவுக்கு எல்லையில்லை. எதிர்கால வாழ்வை விருப்பத்துடனும்இ நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளும் மனத் துணிவை இவர்கள் இழக்கிறார்கள். விசயம் வெளியே தெரியக்கூடாது என்று மறைக்கப்படுவதால் அது உள்ளுக்குள்ளேயே மனதை ரணமாக்குகின்றது.

    பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்கு பல ஆலோசனைகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் முன்வைக்கப் படுகின்றன. குழந்தைகளின் மறைவுறுப்புக்களை யாரும் தொட அனுமதியாத வண்ணம் கற்றுக் கொடுப்பதுஇ குழந்தைகளுடன் தேவையானவற்றை வெளிப்படையாகப் பேசுவதுஇ அவர்களையும் அப்படிப் பேசவைப்பதுஇ விடலைப் பருவத்தினருக்கு செக்ஸ் கல்விஇ விளையாடும் குழந்தைகளை ஆசிரியர்களும் குடும்பத்தினரும் கண்காணிப்பதுஇ மாணவிகள் படிக்கும் பள்ளிகளுக்கு பெண்களை மட்டும் ஆசிரியர்களாக நியமித்தல் என்று பல ஆலோசனைகள் பேசப்படுகின்றன.

    இவற்றையெல்லாம் செய்யலாம்தான். இவை தடுப்பு மருந்து மட்டுமே. நோயின் மூலத்தை அறிந்து அழிக்கும் சக்தி இந்த மருந்திடம் இல்லை. ஆம்இ குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கும் கயவர்களைத் திருத்துவதற்கு எந்த மருந்தும் அரசிடமும்இ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமும் இல்லை. சொல்லப்போனால் இந்த நோயை முற்றச்செய்யும் வேலையைத்தான் உலகமயமாக்கத்தின் பண்பாடு செய்து வருகின்றது. இயற்கையான காமம் செயற்கையாக உப்பவைக்கப்படும் இன்றைய சூழலில் இவை ஒவ்வொன்றையும் எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினமான காரியம்.

    முக்கியமாக இந்த மனவிகாரம் உள்ளவர்கள் என எல்லோரையும் சொல்ல முடியாதுதான். அதே சமயம் இந்தக் கொடுமையைச் செய்யப் போகிறவர்கள் யார் என்பதையும் கண்டு பிடிக்க முடியாது. அது அந்தக் குழந்தையின் மாமாவாகவோஇ சித்தப்பாவாகவோஇ ஆசிரியனாகவோஇ அண்டை வீட்டு இளைஞனாகவோ இருக்கலாம்.

    நான்கு சுவர்களுக்குள் நமது குடும்பத்தின் நலனை மட்டும் பேணிக் கொள்ளலாம் என்றுதான் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால்இ தெருவில் இறங்காமலா இருந்துவிட முடியும்? ஒழுக்கக் கேட்டையும் வக்கிரத்தையும் தோற்றுவிக்கும் சமூகச் சூழலுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் மட்டும்தான் அவற்றை எதிர்த்து நிற்க முடியும். அந்தக் கிருமிகளிடமிருந்து நம்மையே தற்காத்துக் கொள்ளவும் முடியும்.

    · இளநம்பி – புதியகலாச்சாரம்

  31. ஐயா சத்தியக்கடதாசிஇ

    சாம் அண்ணையின்ர வடைஇ கொத்து ரொட்டி வியாக்கியானத்துக்கு நான் எழுதின பதிலை ஏன் வெளியிடாமல் தணிக்கை செய்தனியள் எண்டு அறியலாமோ? அவ்வளவு மோசமாயோ எழுதிப்போட்டன்? அட்லீஸ்ற் ‘பின்நவீனத்துவ’ கருத்தா ஆவது போட்டிருக்கலாமே!

  32. //….படுக்கை அறையிலும் நுழைந்து நம்மைச் சதா கண்காணீத்துக் கொண்டிருக்கும் பாஸிஸ்டுகளை …../

    படுக்கையறை விசயங்களை கவிதையாய் வடித்த கவிஞரே …..பின்நவீனத்துவம் என்ற பெயரில் கதையாய் வ்ரைந்த கதாசிரியரே, பாசிஸ்டுகள் என்று யாரைச் சொல்கிறீர்கள்! வாழ்க உங்கள் தொண்டு!!

  33. இனிய ரகு!
    பாரிசைச் சுற்றி 14,432 உயர் கமராக்கள் சதா நம்மைக் கண்காணீத்து வருகின்றனவென்றாலும் அதனது கண்காணிப்பு ஒரு எல்லைக்குட்பட்டது. நமது பாஸிஸ்டுகள்போல ஒவ்வொருவரது அந்தரங்க வாழ்க்கைக்குள்ளூம் அவை நுழைவதில்லை,தம்மை நுழைப்பதில்லை,கண்காணீப்பதில்லை, தீர்ப்புச்சொல்வதில்லை, நீதிபதிகளாக அமர்வதில்லை.
    இவ்விடயங்களீல் கருத்துச்சொல்வதுகூட சொந்தப்பெயரில் இருந்தால் தன்மதிப்பு அதிகமாக இருக்கும்,உங்கள் மீதான மதிப்பும் எனக்கு அதிகமாக இருந்திருக்கும்,
    ஆயினும் எனது எழுத்துகளீன் வாசகராக இருக்கும் உங்கள் மீதான வாஞ்சை அதற்காகக் குறைவுபடப்போவதில்லை.
    போன ஜென்மத்தில் நீங்கள் எவராக இருந்திருப்பீர்கள் என யோசித்தபோது ஒரு ஒற்றர் படைத்தலைவனாக இருந்ததற்கான வாய்ப்பே மிஞ்சியிருக்கிறது.
    ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் எஸ்.பொ, மு.தளைய சிங்கம், டானியல்,பவானி ஆழ்வாப்பிள்ளை ஆகியோரின் எழுத்துக்குக் கிட்ட நம்மால் நிக்க முடியுமா?
    இதில் பின்நவீனத்துவம் என்ன? நவீனத்துவம் என்ன?
    பின்நவீனத்துவ நாடோடிகளான ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை இன்று ஒரு சான்விச் கொம்ளே இற்கு ஒப்பிட்டால் அதில் ஆடும்,வாத்தும் கலந்து தணல் அடுப்பில் சுற்றிக்கொண்டிருக்கும் இறைச்சி,பாண்,சலாட்,தொமாத்,ஒனியோன்,சொஸ்_அரிசா_இப்படியாக எல்லாமே கலந்து இருக்கும்.பன்மைத்துவம் என்று இதை அழைப்போம்.

  34. அடேய் அன்பான சுகனும் கற்சுறாவும் உங்களுக்காகத்தான் இங்கே நான் எழுதுகிறேன். இது செஞ்சோற்றுக் கடனல்லாமல் வேறல்ல.

    புராணங்களை நீங்கள் நம்பினாhல் அது என் பிழையல்ல

    இவையனைத்திலுமிருந்து ‘அவன்” தப்பிவிடுவானெ;னபது என் கணிப்பிலிருந்து தவறவுமில்லை.

    கற்சுறா:
    சுகன் வேண்டாம் விட்டு விடு விட்டு விட்டு கவிதை எழுது. கவிதை எழுது.
    சுகன்:
    கற்சுறா அல்லது கணேஸ்,
    எதை விடச் சொல்கிறாய்
    அவங்களை விடச்சொல் நான் விடுகிறேன்
    அவங்களை விடச்சொல்

    (எங்கள் மூத்த மாமனார் மணிரத்தினம் அய்யங்கார் வசனத்தின்படி வாசிக்கவேண்டியது)

    இது நான்: சுகன் நீங்க நல்லவரா கெட்டவரா?

  35. ஏறத்தாழ முப்பது வருடங்களாக யுத்தத்தில் இறங்கியிருக்கும் அரசையும் ஆயுதம் தாங்கியவர்களையும் உடன்பாட்டிற்கு வரச்சொல்கிறீர்கள் பேசச்சொல்கிறீர்கள் அமைதிபேணலாம் என்கிறீர்கள்.ஒருமித்த கருத்துடன் பழகிய தோழர்கள் வெறும் வார்த்தைகளுக்காகவும் எழுத்துகளுக்காகவும் பரமவைரிகளாகக்கருதி பகையை வளர்த்துக்கொண்டே போவது தான் முறையோ?இவ்வாறு வருடக்கணக்காக பழைய பகைகளைச் சொல்லிச் சொல்லி ஒன்றுபட்ட கருத்துள்ளவர்கள் கட்சி பிரிந்தது தானே தொடரும் எம் வரலாறாக உள்ளது.இனியும் இவை தொடர்வது நல்லதா?

  36. பின்நவீனத்துவ நாடோடியும் தன்பால் நாட்டமுள்ளவருமான எனது நெதர்லாந்து நண்பர் வான் டெய்க் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
    ஒருமுறை சொன்னார்:தாங்களாக தமது தனிப்பட்ட வாழ்க்கையைச் சொல்லாதவரைக்கும் நாங்கள் மற்றவர்களைக் கேட் கக் கூடாது, சரிதானே!

    நீங்கள் வாசிப்பதால் பரபரப்பு அடைபவராக இருந்தால் தமிழிலும் பிரெஞ்சிலும் உங்களுக்கு நிறையவே கலகப்பிரதிகளை என்னால் பரிந்துரைக்கவும் உங்களூக்குப் பெற்று அனுப்பவும் முடியும்.
    நீங்கள் யாழ்ப்பாணத் தமிழராக இல்லாவிடில் இதுபற்றி மேலும் மேலும் உரையாடலாம்.

    சரி,,…இதைக் கதையாகவே வைத்துக்கொள்ளுங்கள்இபரபரப்போ ரென்சனோ அடையக்கூடாது, சரிதானே!
    போனகிழமை துமணி எனும் ஆபிரிக்க இசைகலைஞரின் கொன்சேர்ட்டிற்குப் போய்க்கொன்டிருந்தேன்,
    இத்துணைப்பேரழிகியா என்னும் வியப்பில் நான் அவுட்.
    பார்வையை அங்காலும் இங்காலும் எடுக்கமுடியவில்லை.
    என்னே!ஆச்சரியம் அவளும் ஒருமுறை பார்த்தாள்.இப்படியே பார்த்துக்கொண்டு போய்க்கொண்டு இருக்கிறோம்.
    கடைசித்தடவை இந்தியா போனபோது நண்பர் ஒரு பேரழகியைக் காட்டினார்.
    என்னடா இதைப் பேரழகி என் கிறாய் என்றேன்!
    நீங்கள் பரிசில் இருக்கிறீங்க !நிறையப் பாத்திருப்பீங்க!
    எங்களுக்கு இதுதான் பேரழகு!
    இது நண்பர்!
    ஆனால் இதுவேற!
    மெய்மறத்தல்.
    ரொம்பவும் வயதான வைத்தியர் ஒருவர் ஒருகுறீப்பிட்ட நோய்க்கு மருந்து தேடி தன்வாழ்நாளீல் இறுதிப்பகுதிவரை வந்துவிட்டார்.
    தன்வயதொத்த இன்னொருவரிடம் தன் வேணவாவை தெரிவித்தார்.
    அவரது வாழ்வின் இலட்சியமே அந்த மருந்தைக் கண்டுபிடிப்பதுதான் ! அந்த லட்சியத்தை மற்றவரிடம் சொன்னார்இ
    மற்றவர் சொன்னார்;
    இப்படியே பத்து வருட யோசனையளவு தூரம் நடந்தால் மலை வரும் இஏறிபோகக் குகை வரும்இ குகை வாசலில் ஒருவர் வருவார்!
    அவரிடம் ஒரேஒரு கேள்வியைத்தான் நீங்கள் கேட் கலாம்.கட்டாயம் உங்களுக்குப் பதில் கிடைக்கும் என்றார் மற்றவர்.

    ஆனால் நீங்கள் அவர் எப்போது வருவாரோ தெரியாது வரும்வரை காத்திருக்கவேணும் , குகை வாசலில் என்றார் மேலும்.
    பெரியவரும் நம்பிக்கை தளர்ந்துபோனாலும் மனித குலத்தின் மீது வைத்த அன்பின் நிமித்தம் கல்லும் முள்ளும் காட்டுவிலங்குகளுமாகக் கடந்து குகை வாசலில் அவர் வரும்வரை நாட் களாக மாதங்களாக வருடமாக காத்திருக்கிறார்.
    ஒருநாள் மனிதகுலம் என்றுமே பார்த்திராத பேரழகி அவர் முன் வந்தாள்,
    அவ்ர் கேட்டார் ; உங்களுக்குக் கலியாணமாகி விட்டதா?
    இல்லை,என்று விட்டு அவள் குகைக்குள் மீண்டும் போய்விட்டாள்.
    (பின்னர் தொடர்வேன்)

    இப்படியே இருவரும் பார்த்தபடியே போய்க்கொண்டிருக்கிறோம், மெற்றோ போய்க்கொன்டிருப்பதான ஒரு விழிப்புத் தட்டுப்படவே நான் பதற்றமடையத்தொடங்கினேன்.
    உங்களூக்குக் கலியாணமாகிவிட்டதா? மற்றும் என் பதற்றம் இவற்றை அவள் புரிந்துகொண்டதாக அப்போது அவள் பார்வை இருந்தது.
    ஒரு நாகரீகம் கருதியாவது அவள்மீதான பார்வையை என்னால் விலக்கமுடியாமலிருந்தது,
    அவள் கண்ணிமைகளை மெதுவாக மூடி ஒரு மெலிதான முறுவலைப் பதிலாகத் தந்தாள்.
    ஆகா!! ஆகா!
    பின்னர் தன் வலக்கையை உயர்த்தி பெருவிரலையும் சுட்டிவிரலையும் லேசாக உரசிக்காட்டினாள். என்னால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அடுத்த தரிப்பில் இறங்கப்போவதான சமிக்ஞையை கண்களால் தெரிவித்தாள்.
    நான் இறங்கி அவளையே தொடந்து பார்த்தபடி இருந்தேன். ஏதும் பேசத்தோன்றவில்லை அப்போது.

    நீங்கள் இந்தியாவா? எனக்கேட்டாள்.நான் ஆமென்றேன்!
    ஆண்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாள்!
    நான் ஆமென்றேன்!
    ஐம்பது ஈரோ என்றாள்!
    நான் ஆமென்றேன்!
    ரகு! என்ன அழகு அவள்! அப்படி ஒருத்தியை நீங்கள் பிரபஞ்சங்களின் முடிவிலும் தேடமுடியாது.
    அவள் பேசினாள். ஆம் அவள்தான் பேசினாள்.
    Je ne suis pas une femme !
    I m not a girl!
    பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலுமாக பேசினாள்.
    இவள் என்ன!
    தான் பெண்ணீல்லை என்கிறாளா!
    யாரும் பெண்ணாகப் பிறப்பதில்லை! ஆக்கப்படுகிறார்கள்!என சிமொன் து போவுவார் ஆகப் பேசுகிறாளா!
    ஏன் பெண்ணென்று பிறந்தாய்!இஎன்னைப் பெண்ணாக்கி நீதந்த இன்பங்கள்…..இப்படியான பாடல்களின் தொடர் தான் எனச் சொல்லவருகிறாளா!
    என்ன இவள்!

    எனது குழப்பத்தை அவள் புரிந்து கொண்டாள்.
    தரவஸ்த்தி என்றாள்!
    ட்ரான்ஸ் செக்சுவல் என்றாள்.
    இனிய ரகு ! இப்படியான தனிப்பட்ட கதைகளை நாங்கள் சொல்லவேண்டுமே தவிர மற்றவர்கள் கண்காணீத்துச் சொல்லக்கூடாது!
    அது பாஸிஸம்!

  37. என்ன கொடுமை ரஃபேல்!
    இதை என்ன கொடுமை சரவணா! மாதிரிப் படிக்கவும்!
    கடன்,கிறெடிட்,வட்டி,சீட்டுக்காசு,ஆட்டுப்பங்கு,இவைகளுக்காக எழுத வேண்டியாகிவிட்டதே!
    எப்பிடி இருந்த நீங்கள் இப்படிஆகிவிட்டீங்களே!
    இதை விவேக் பாணியில்
    எப்பிடி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேனே!மாதிரிப் படிக்கவும்

  38. மெல்ல மெல்ல சுகனை புரிவதுபோல உணர்வு. சுகன் தொடரந்து எழுதுங்கள். நீங்கள் வாசகரை புரிய வாசகரும் உங்களைப் புரிவர்.

    தர்மினி டோன்ற் வொறி. கருத்தாடல் பல இடங்களில் வன்மமாகவும் இருக்கும். ஆனால் அது கருத்தாடல்தான். தனிமனித பலவீனங்கள் சில இடங்களில் எட்டிப்பாத்தலை தவிர்க்கமுடியாது. ஏனெனில் மனித பலவீனமும் இயற்கையானதே!

  39. //…பாரிசைச் சுற்றி 14,432 உயர் கமராக்கள் ….. நமது பாஸிஸ்டுகள்போல ஒவ்வொருவரது அந்தரங்க வாழ்க்கைக்குள்ளூம் அவை நுழைவதில்லை,தம்மை நுழைப்பதில்லை,கண்காணீப்பதில்லை, தீர்ப்புச்சொல்வதில்லை, நீதிபதிகளாக அமர்வதில்லை….///

    சுகன்,

    நான் கேட்ட கேள்விக்குப்ப் அதிலளிக்காமல் பரிஸ் கமராக்கள் பற்றி இழுத்து கதை விடுகிறீர்கள். நான் சொல்ல வந்தது உங்கள் ‘பின்நவீனத்துவ கவிதைக்’ கமரா, அதை வைத்து நீங்கள் படுக்கை அறைக்குள்ளும் விமானப்பணிப்பெண்ணின் மார்புக்கச்சைக்குள்ளும் நுளையவில்லையா? ஒப்பிடும்போது இலத்திரனியற் கமரா எவ்வளவோ மேல். இதில் ‘பாசிச’ பம்மாத்து வேறு !!!!

    //…இவ்விடயங்களீல் கருத்துச்சொல்வதுகூட சொந்தப்பெயரில் இருந்தால் தன்மதிப்பு அதிகமாக இருக்கும்,உங்கள் மீதான மதிப்பும் எனக்கு அதிகமாக இருந்திருக்கும்..//
    நான் எனது சொந்தப்பெயரில் எழுதவில்லை என்று உங்களுக்கு யார் சொன்னது?உங்களின் ‘கற்பனைக்’ கமராவில் தெரிந்ததோ? கவிஞரே உலகில் நீங்கள் மட்டுமே சொந்தப்பெயரில் வருகிறீர்கள் என நினைக்கும் உங்கள் கற்பனை வாழ்க! அத்துடன் உங்கள் சொந்தப்பெயரில் நீங்கள் எழுதினாலும் இல்லை என்றாலும் உங்கள் கருத்துக்கே பதில் அளிப்பேன்.

    //…
    போன ஜென்மத்தில் நீங்கள் எவராக இருந்திருப்பீர்கள் என யோசித்தபோது ஒரு ஒற்றர் படைத்தலைவனாக இருந்ததற்கான வாய்ப்பே மிஞ்சியிருக்கிறது….//

    பொய் பேசும் கவிஞனாகவோ, அன்றி மார்புக்கச்சைக்குள் மனக்கண்ணை விட்டு நோண்டிக் கவிதைபாடும் கவிஞனாகவோ இல்லை என நினைத்து சந்தோசமே!

  40. பிரிய சுகன்

    நல்லாய்த்தான் நொந்திருக்கிறியள் போல கிடக்கு.
    ஆனாலும் நான் கேட்டதற்கு பதில் இல்லை.

    நான் எதை எழுதினாலும் அதைப்படிக்க ஆக்கள் இருக்கிற படியால்தானே எழுதிறேன்.
    எத்தினைபேர் என்னத்தையெல்லாமோ சத்தியாய் எடுக்கிறாங்கள். குhசும் வாங்கிறாங்கள். சொந்தமா எழுதினா படிக்கேக்க கயிடடமாத்தான் இருக்கும்.

    எப்பிடி இருந்தனான் என்று உங்களுக்கு தெரிதென்பதால் சந்தோசம்.

    கால் சிலம்பைக் கையில் வைத்துகு;கொண்டு ஒரு பிள்ளை பரிசுத் தெருவிலை அலையுதாம். தலித் பிள்ளையளுக்கு வாழ்வு குடுக்க வெளிக்கிட்டுக் கதைச்சமாதிரி இருந்திச்சு.. என்ன நடந்தது.

    இது எப்பிடி இருக்கு?

    (இப்படி எழுதவும் அடியெடுத்துக் கொடுக்கவேண்டியிருக்கு. இதை எப்பிடி வாசிக்க வேண்டும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.)

    நிற்க சுகன் அவசரத்தில மறந்தி;ட்டியள் போல.
    அட..கடனும் கிரடிட்டும் ஒண்டுதான்.
    (ஆனா இதை கண்டிப்பாய் சத்தியராசு பாணியில் வாசிக்கவும்.)

    உன்னிப்பாக பார்க்கவும்.

    நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பது பல உங்களுக்குத் தெரியாமலே போயிருக்கலாம்.
    உங்கள் பணிகள் பல கண்கட்டப்பட்டு முடங்கியிருப்பதால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *