கிழக்கிலங்கைத் தேர்தல்

கட்டுரைகள்

– இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.

வெளிநாடுகளிலிருந்து கொண்டு அறிக்கைவிடும் போலிப் புரட்சிவாதிகள், கிழக்கு மக்களில் எந்தக் கரிசனமும் அற்றவர்கள். தங்கள் அமைப்புக்களில் கிழக்கு மக்களைத் ‘தீண்டாச்சாதியாக’ நடத்துபவர்கள். இவர்கள் பார்வையில் கிழக்கு மக்கள் ‘மோர்தின்னி முட்டாள்க’ளாகும். இந்தக் கேவலங்களின் குரலைக் கேட்காமல் கிழக்கிலங்கை மக்கள் தங்கள் பிரச்சினையைத் தங்கள் கையில் எடுத்துத் தங்கள் தலைமையைத் தேடவேண்டும்.

திர்வரும் 10.05.08ல் நடக்கவிருக்கும் கிழக்கலங்கைத்தேர்தல், இலங்கையில் இதுவரை நடந்த தேர்தல்களைவிட மிகவும் முக்கிய தேர்தலாக அமையவிருக்கிறது. ஜனநாயக சமுதாய அமைப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்று வாக்குரிமையளிக்கும் உரிமையாகும். இன்று பல நாடுகளில், ஏழைகளின் வாக்குகளுக்காகப் பல தந்திர வித்தைகளை அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படியான சில ஜால விளையாட்டுக்கள், விரைவில் கிழக்கில் நடக்கவிருக்கும் பாராளுமனறத் தேர்தலிலும் நடந்துதுகொண்டிருன்றன.

கிழக்குமாகாண மக்களின் எதிர்காலத் தலைவிதியைத் தாங்களால்தான் நிர்ணயிக்க முடியும் எனச் சில வித்தகர்கள் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம், இதுவரையும் கிழக்கிலங்கை மக்கள், தங்களைவிடக் கூடப்படித்தவர்கள் என்று சிலரை நம்பியதாகும். இப்போது, இலங்கையின் பல பகுதிகளிலுமிருந்து பல அரசியற் தலைவர்கள் கிழக்கிலங்கையின் பதவிப் போட்டிக்கு ஆலாய்ப் பறக்கிறார்கள்.

கிழக்கு மாகாண மக்கள் பொருளாதார ரீதியில் மற்றைய பகுதி மக்களை விடப் பாரிய விதத்தில் பின் தங்கியிருப்பவர்கள். பெரும்பாலானவர்கள் மண்ணை நம்பி வாழும் விவசாயிகள். இலங்கை அரசியலில் பெரும் தாக்கங்களையுண்டாக்கும் தகைமையற்றவர்கள் என்ற நிலைப்பாட்டடைக் கொண்டவர்கள். தமிழ், சிங்கள, முஸ்லிம் என்று மூன்று இன மக்களும், தங்களுடன் வாழும் மற்றச் சாதியினருடன் ஒற்றுமையாக வாழ்பவர்கள். வியாபாரம், விவசாயம், என்பது போன்ற பல விதங்களில் ஒரு சமூகத்துடன் மற்றச் சமூகம் தங்கியிருக்கும் வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள்.

1956ம் ஆண்டு வடக்கிலிருந்து வந்த தமிழ்த் தலைவர்கள், தங்கள் தலைமையைக் காத்துக் கொள்ளவும் பாராளுமன்றத்தில் பதவி வகிக்கவும் தமிழ்மொழி, தமிழினம்,தமிழ் உணர்வு என்று பல பிரசாரங்களை முன்வைத்து அப்பாவித்தமிழ் மக்களின் மனதில் பிரிவினை வாதங்களை விதைத்தார்கள். நுற்றுக்கணக்கான வருடங்களாகச் சகோதரத்துடன் வாழ்ந்த தமிழ்பேசும் மக்களிடையே பிரிவினைகளை வளர்த்தார்கள்.ஆண்டாண்டு காலமாக அன்னியோன்னியமாகவிருந்த சமுதாயங்கள் ஒருத்தரை ஒருத்தர் சந்தேகித்துப் பகைமை கொள்ளத் தமிழ் தேசியக் கோடபாடுகள் விஷவித்துக்களை விதைத்தன. அரசியற் பாகுபாடுகளால் பின்னிலைப்பட்ட கிழக்கு மக்களை 1977ம் ஆண்டில் நடந்த சூறாவளியும், 2004ம் ஆண்டு வந்த சுனாமியும் கொடுமையாகத் தாக்கியது. சூறாவளியில் பல்லாயிரம் கோடி பெறுமதியான வயற்செய்கை,தென்னை மரங்கள், வீடுகள் கிழக்கு மண்ணில் அழிக்கப்பட்டன. சுனாமியனர்த்தம் அடிக்குமேல் மேலடியாய்க கிழக்கு மக்களை வருத்தின.

சுனாமியின்போது, இலங்கையிலேயே கூடுதலான உயிர் இழப்புக்களைக் கண்ட பிரதேசங்கள், காரைதீவு,சாய்ந்தமருது, திருக்கோயில்,கோமாரி போன்ற பிரதேசங்களென அறிக்கைகள் கூறின. ஆனால் இந்த மக்களின் இழப்புக்களை நிவர்த்தி செய்து அவர்களுக்கு உதவி செய்யும் ஸ்தாபனங்கள் அதிகமில்லை. இவர்களுக்கு உதவி செய்யப் பெரிய அளவில் வெளிநாட்டு உறவினர்களுமற்ற அனாதைத் தமிழர்கள் கிழக்குவாழ் தமிழ் பேசும் மக்கள்.

இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இதுவரை ஏதோ வித்தில் துயர் படும் கிழக்குத தமிழர்களை இலங்கையின் ‘ தமிழத் தேசிய’(?) போராட்டம் மிகவும் கோரமாக வதைத்தது.அன்றிலிருந்து இன்றுவரை இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாகத் தொடரும் அரசியற் பிரச்சினைகளால் அதிகப்படியான உயிரிழப்பைக் கண்டவர்கள் இந்தக் குரலற்ற ஏழைகள். படிக்கச்சென்ற தன் பாலகன் வீடு திரும்பி வராமல் போக்களத்தில் மடிந்ததைத் தாங்க முடியாது கதறியழும் தாய்களைப் பெரும்பாலாகக் கொண்டவிடம் கிழக்கிலங்கை. வாழும்வயதில்,பலவந்தப்போருக்கு இழுக்கப்பட்ட இளைஞர்கள் ஆயிரம் ஆயிரம். இன்பமாக, அமைதியாக, வாழ வேண்டும் என்ற பல கிழக்கிலங்கைப் பெண்களின் ஏதிர்காலக்கனவை இருட்டடிப்பாக்கியது ஈழக்கனவு.

பிரபாகரனின் கூட்டம் இன்னொருதரம் கிழக்கில் நுழைய முனைகிறது. போர்ப்புலத்தில் தோல்வியைத் தழுவிக்கொண்டிருக்கும் புலிகளுக்குப் போக்களத்தில் பலியாகப் படை தேவைப் படுகிறது. அதற்கு, இளைஞர்களைத் தேடிக் கிழக்கைச் சுற்றி வளைக்கத் திட்டம் போடுகிறார்கள். இதுவரை எத்தனையோ கொடுமைகளைக் கண்ட கிழக்கு இன்று நிமிர்ந்து நிற்கப்போவதை பாசிசப் புலிகள் எரிச்சலுடன் நோக்குகிறார்கள். இன்னொரு தரம் கிழக்கையழிக்கத் தேர்தலைப் பயன்படுத்துப்போகிறார்கள்

-1986ல் புலிபாசிசத்தலைவர்களில் ஒருத்தரான கிட்டுவால் நுர்ற்றுக்கணக்கான கிழக்கின் உயிர்கள் யாழ் ஆரியகுளம் சந்தியில் உயிருடன் கொழுத்தப் பட்டார்கள். தமிழுக்காகப் போராட யாழ் சென்ற கிழக்கு வீரரர்கள் வடக்குத் தமிழர்களாற் கொழுத்துப் பட்டார்கள்.

-1991ம் ஆண்டு, 72.000 முஸ்லிம்கள் யாப்பாணத்திலிருந்து துரத்தப்பட்ட அதே தினம் புலிகளுடன் சேர்நதிருந்து சிங்கள பேரினவாதத்திற்கு எதிராகப் போராடிய முஸ்லிம் இளைஞர்கள இரவிரவாகப் புலிகளால் கொலை செய்யப்பட்டார்கள்.

-பிரபாகரனின் கருத்துக்குளிலிருந்து பிரிந்து போன கிழக்கின் 175 இளம் உயிர்கள் 2004ம் ஆண்டு, ஆடிமாதம் 4ம் திகதி வாகரையில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார்கள். பல கிழக்குப்பெண்கள் கொடூரமான பாலியல் வன்முறைக்கு உ ட்படுத்துப்பட்டார்கள்.

-2006ம் ஆண்டு மூதுரிலிருந்து முஸ்லிம் மக்கள் புலிகளால் துரத்தப்பட்டார்கள், பல முஸ்லிம் இளைஞர்கள் ‘ஜிகாத்’ என்ற பெயரில் கொலை செய்யப்பட்டார்கள்.

இன்றும், பழையபடி, தமிழத் தேசியச்சாயம் பூசிக்கொண்டு கிழக்கைப் பலி கொள்ள நினைப்பதை கிழக்கு மக்கள் எதிர்க்கவேண்டும்.போரின் பெயரைச் சொல்லிக் கொண்டு வெளிநாடு சென்று ஆடம்பரமாக வாழந்து கொண்டு, கிழக்கு மக்களின் எதிர்காலத்தையோ நிர்ணயிக்கவோ அல்லது அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொலவதற்கோ வெளியில் வாழும் புண்ணியவான்களுக்கும் புண்ணியவதிகளுக்கும் எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது. அடிபட்டு, உதைபட்டு, வாடி வதங்கிச் சோர்ந்து போன கிழக்கிலங்கை மக்கள் தங்கள் பாட்டில நிமிர்ந்து நிற்க விரும்புகிறார்கள். அவர்கள் எப்படி நிமிர்ந்து நிற்கவேண்டும் என்று விஞ்ஞான வித்தைகள் யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டாம். தங்கள் நிலத்தின் மண்ணின் மைந்தர்களைத் தங்கள் பாராளுமன்றப்பிரதிநிதிகளாக்க அவர்கள் விரும்பினால், அதைத்தட்டிக்கேட்க யாருக்கும் உரிமை கிடையாது.

பிரபாகரனின் பாசிசக் கொள்கைகளால் அதிகம் பாதிக்கப்பட்டக் கிழக்கிலங்கை மக்களை, இன்று, ‘புத்திஜீவிகள்’ என்ற பெயரில் புதிய முகமூடி போட்ட பழைய புலிகள் குழப்பப்பார்க்கிறார்கள். வெளிநாடுகளின் அமைப்புக்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு நாட்டைக் குழப்பத் திட்டம்போடும் இந்த வேடதாரிகளைக் கிழக்கு மக்கள் அடையாளம் காணுதல் மிகவும் அவசரமான காரியமாகும்.

கிழக்கில் நடக்கவிருக்கும் இந்தத்தேர்தலில் அரசியல்வாதிகளாற் மேற் கொள்ளப் படும் பிரச்சாரங்களை உற்று நோக்கினால், அந்தப் பிரசாரங்களில் மக்களுக்கான நன்மைகள், சமுதாயத்திற்கான முன்னேற்றத் திட்டங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தங்ளின் பதவிக்கும் புகழுக்கும். பணவருவாய்க்கும் கிழக்கிலங்கை மக்களைப் பணயம் வைக்கிறார்கள் என்பது அப்படமாகத் தெரிகிறது.

கிழக்கிலங்கையில் முஸ்லிம் – தமிழ் மக்களை ஒற்றுமையாக வாழவிடாமல், பிரித்து வைக்கும் சதிகளைச் செய்து, அதானால இலாபம் அடைய நினைக்கிறார்கள் ‘வந்தான் வரத்தான்’ எனற சந்தர்ப்பவாதிகள். இவர்கள் வடக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் கிழக்குக்குப் படையெடுத்திருக்கிறார்கள். தங்களின் வெற்றிக்காக எந்த விதமான விஷக் கருத்துக்களையும் பிரசாரமாகப் பாவித்து மக்களைக் குழப்பத் தயாராகவிருக்கிறார்கள்.

இதுவரை காலமும் தமிழருக்குத துரோகம் செய்யும் கட்சிகள், இன்று வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொணடு போட்டியில் ஈடுபடுகிறார்கள். கிழக்கையும் வடக்கையும் சேர்தது ‘ஈழம்’ எடுத்துத் தருவதாகப் பிரசாரம் செய்கிறார்கள். இந்தக் கற்பனையில் ஆயிரமாயிரம் உயிர்களைப் பணயம் கொடுத்த கிழக்கு மக்கள் ‘பிச்சை வேண்டாம் நாயைப்பிடி’ என்ற மனப்பானமையிற்தான் இன்று செயற்படுகிறார்கள். இன்னொருதரம் புலிகளைக் கிழக்குக்குக் கொண்டுவந்து, மிஞசியிருக்கும தமிழ் இளைஞர்களையும் பலி கொடுக்கும் திட்டம் தீட்டப்படுவதைத் தமிழ் மக்கள் மிகக் கவனமாகப் பார்க்கவேண்டும். அந்தக் கொடிய நிலையைத் தவிர்ப்பதற்குத் தங்கள் வாக்குகளைக் கவனமாகப் பாவிக்கவேண்டும். இன்று, வெளியிலிருந்து, கிழக்கு மாகாணத்திற்கு வாக்குக் கேட்டு வந்திருக்கும் குள்ள நரிகளை நம்பாமலிருப்பது. கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் தலையாய கடைமையாகும்.

வெளிநாடுகளிலிருந்து கொண்டு அறிக்கைவிடும் போலிப் புரட்சிவாதிகள், கிழக்கு மக்களில் எந்தக் கரிசனமும் அற்றவர்கள். தங்கள் அமைப்புக்களில் கிழக்கு மக்களைத் தீண்டாச்சாதியாக நடத்துபவர்கள் இவர்கள் பார்வையில் கிழக்கு மக்கள் ‘மோர்தின்னி முட்டாள்க’ளாகும். இந்த மாதிரிப் போலிக் கூட்டங்கள் உலகில் பல பகுதிகளிலுமிருக்கிறார்கள். மற்றவர்கள் உழைப்பிலும, ஏழைகளின் பெயர்களைப் பாவித்துக்கொணடும பம்மாத்துப்போடும் இந்தக கேவலங்களின் குரலைக் கேடகாமல் கிழக்கிலங்கை மக்கள் தங்கள் பிரச்சினையைத் தங்கள் கையில் எடுத்துத் தங்கள் தலைமையைத் தேடவேண்டும்.

உடைந்த கட்டிடங்கள் மீண்டும் கட்டப்படவேண்டும். இருள் படர்ந்த பகுதிகளில் வெளிச்சம் பரவவேண்டும். யாரும் வந்து போருக்குக் கடத்திக் கொண்டுபோவார்களோ என்ற பயமின்றி, மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடரவேண்டும. உலகப் பேரறிஞர் விபுலானந்தரைத் தந்த மண்ணிலிருந்து; வித்தகர்கள் பிறக்க வேண்டும். கிழக்கிலுள்ள தமிழ் குழுக்கள் ஆங்கிலம் தெரியாத தலைவர்களைக்கொண்ட அரசியலமைப்புக்கள் என்று பலர் கிண்டடிக்கிறார்கள். மாசேதுங, கஸ்ட்ரோ போன்ற பல தலைவர்கள் ஆங்கிலம் படிக்காதவர்கள். ஆரம்பத்தில், நடக்கத் தொடங்கும் குழந்தை தடக்கி விழுந்தால் அதற்காக் குழந்தையை முடமான குழந்தையென எறிவதில்லை. பொறுமை பூமி தாங்கும். முஸ்லிம் சமயத் தலைவர்களும், தமிழ்ப்பகுதியின் சமூகத் தலைவர்களும் கிழக்கின் எதிர்காலப் பாதுகாவலாளர்கச் செயற்பட்டு எதிர்வரும் தேர்தலில் கிழக்கின் ஒற்றுமையைப் பறைசாற்ற வேண்டும். பொய்ப் பிரசாரங்கள், போலிவாக்குறுதிகளுக்கு அப்பாவி மக்கள் பலியாகாமற் பார்த்து, எதிர்வரும் தேர்தலை கிழக்கின் எதிர்கால முன்னேற்றத்தின் ஏறுபடியாகப் பாவிப்பார்கள் என்பது ஜனநாயகவாதிகளின் நம்பிக்கையாகும்!

நன்றி: தேனி இணையத்தளம்

8 thoughts on “கிழக்கிலங்கைத் தேர்தல்

  1. நல்லது ராஜேஸ் அக்கா.

    போரின் பெயரைச் சொல்லிக் கொண்டு வெளிநாடு சென்று ஆடம்பரமாக வாழந்து கொண்டுஇ மக்களின் எதிர்காலத்தையோ நிர்ணயிக்கவோ அல்லது அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொலவதற்கோ வெளியில் வாழும் புண்ணியவான்களுக்கும் புண்ணியவதிகளுக்கும் எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது. அடிபட்டுஇ உதைபட்டுஇ வாடி வதங்கிச் சோர்ந்து போன மக்கள் தங்கள் பாட்டில நிமிர்ந்து நிற்க விரும்புகிறார்கள். அவர்கள் எப்படி நிமிர்ந்து நிற்கவேண்டும் என்று விஞ்ஞான வித்தைகள் யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டாம். தங்கள் நிலத்தின் மண்ணின் மைந்தர்களைத் தங்கள் பாராளுமன்றப்பிரதிநிதிகளாக்க அவர்கள் விரும்பினால்இ அதைத்தட்டிக்கேட்க யாருக்கும் உரிமை கிடையாது.
    அதனால் அந்த மக்கள் வடக்கிலும் வன்னியிலும் தமிழரசுக்கட்சியைத் தெரிவுசெய்திருக்கிறார்கள்.

    வடக்கைப்போல கிழக்கையும் அந்தமக்களே தீர்மானிக்வேண்டும் என்ற உங்கள் குரல் புரிகிறது. என்ன செய்வது.

  2. அக்கா அப்பிடிப் போடுங்க அரிவாள!

  3. பிள்ளையானோ ஞானமோ பிரபாகரனோ சங்கரியாரோ எண்டு சனம் பத்தாம் திகதி முடிவெடுக்கும். அப்ப தெரியும் உந்த யாழ்ப்பாணத்து புத்திஜீவியளின்ர வண்டவாளம். சனத்தை முட்டாள்கள் எண்டு மட்டும் ஒருத்தரும் தயவுசெய்து நினைக்கக் கூடாது. பாரிசிலும் லண்டனிலும் இருக்கிற அரசியல் வித்தகர்களை விட சனம் தெளிவானது. அது புத்தகத்தால் அரசியல் படிக்கவில்லை. யுத்தத்தால் அரசியல் படிச்சது. யாழ்பாண நயினார்களே உங்களுக்கு பத்தாம் திகதி இருக்கு ஆப்பு.

  4. இஞ்ச பாருங்கோ வடக்கில எப்பிடி ஏமாத்துமாய்மாலக்காரர் இருக்கினமோ அப்பிடி கிழக்கிலயும் இருக்கத்தான் செய்யினம்.
    ஏதோ சில கவரக்கூடிய கோசங்களை வைச்சாப்போல வைக்கிறஆக்கள் சரியெண்டில்ல. அவயும் வடக்குத் தலையள்போல பிணந்தின்னத்தான் காத்துக்கிடக்கிடக்கினம்.

  5. ஐயா தமிழன்
    பெண்களிலும் கொடுமைக்காரியள் இருக்கிறார்கள் தலித்துகளிலும் முதலாளிகள் இருக்கிறார்கள் என்ற வரிசையில் கிழக்கிலும் ஏமாத்துக்காரர் இருக்கினம் எண்டொரு புதுக் கண்டுபிடிப்பையும் சேர்த்திருக்கிறீயள். உங்கிட யாழ்ப்பாணச் சுத்தமாத்துப் புத்தியை வைச்சு நீங்கள் என்னத்தை புதுசு புதுசா கண்டுபிடிச்சாலும் இனியும் கிழக்கு மக்கள் ஏமாறத் தயாரில்லை. நாளைக்குத் தேர்தலில சனத்தின்ர தீர்ப்பு வரும். முதலில சனத்தின்ர கருத்துக்கு மதிப்புக் கொடுக்கப் பாருங்கள். சனத்த உருட்டுற வெருட்டுற வேலையை எல்லாம் வெருகலுக்கு அந்தப் பக்கத்தில வைச்சுக்கொள்ளவும்.

  6. வடக்கு கிழக்கு பிரிப்பு தவிர்க்கமுடியாது. ராஜேஸ்வரி சொல்வது போல அதை அந்தமக்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

  7. ராஜேஸ்வரி அக்கா நீங்கள் கதையள் எழுதிற முயற்சியிலேயே தொடர்ந்து நின்றிருக்கலாம். எல்லாராலையும் கதை எழுதேலாது. அதைப்போலைதான் அரசியல் ஆய்வு எண்டு எல்லாராலையும் எழுதேலாது. ஏன் வீணா முயற்சி பண்ணுறீங்க?

  8. you guys nothing.
    you guys only talk about war.
    but we live in war.
    we know what to do.
    you guys do not need to say anything. Don’t advice us.
    thank you.
    St/Micheal’s College Student Batticaloa.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *