முதலாண்டு நினைவஞ்சலி

அறிவித்தல்கள்

மூத்த தொழிற்சங்கவாதியும் புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தின் தூண்களில் ஒருவரும் எழுத்தாளரும் விமர்சகரும் மறுத்தோடியுமான

தோழர் குமாரசாமி பரராசசிங்கம்
16.12.1935 – 16.12 .2007

மாலை நேர வெள்ளி முகில்கள்
பொன்னாய் எரிந்து அவிந்து அடங்கி
மேலை வானம் மெலிதாய்ச் சிவக்கும்
கிழக்கின் மலையிலும் செம்மை தெறிக்கும்
சாயும் சூரியன் மெல்ல இறங்கும்
சாகும் சூரியன் சிவந்து விரிந்து
சாவிற் கூட அழகுடன் மிளிரும்
மூளிவானம் மேலும் சிவந்து மூன்று நாழிகைக் கிரவை மறுக்கும்
வானில் மெல்லவொரு வெள்ளியும்
என் நெஞ்சில்
போராளித் தோழர்களின் நினைவும்
எழும்.

(பேரா.சி.சிவசேகரத்தின் ‘வடலி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

2 thoughts on “முதலாண்டு நினைவஞ்சலி

  1. சிந்தனை பரா என்று எம்மால் அன்போடு அழைக்கப்பட்ட பரா மாஸ்டருக்கு என் இதய அஞ்சலிகள்

  2. வரண்ட பாலையிலும் இருட்டு வெளியிலும்
    பயணம் செய்து கொண்டிருக்கின்றோம்
    இன்னமும் எஞ்சியுள்ள சிறுசிறு நம்பிக்கைகளோடு.
    நம்மோடு கூடவே கைகோர்த்து நடந்து வந்த
    தோழமை மனிதர்களின்
    திடீர் இழப்புக்கள் சம்மட்டி கொண்டு தாக்குகின்றன.
    தோழமைகளின் இழப்புக்கள் என்பது
    துன்பமும் வலியும் அதிகமானவைதான்.
    ஆயினும்
    எமது காயங்களுக்கு நாமே மருந்திட்டுக்கொண்டு
    பயணத்தைத் தொடர்வோம்
    வெல்வோமெனும் நம்பிகையோடும்
    தோழமை மனிதரின் நினைவுகளையும் சுமந்துகொண்டு.

    -பானுபாரதியும் தமயந்தியும்-
    (உயிர்மெய்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *